Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 34.4

 

நாம் 34(4)

 

    ” விடுங்க தனு. காலையிலேயே ஆரம்பிக்காதிங்க. “



Advertisement

    ” ம்.. நான் என்ன பண்ண?. காலையிலேயே அத்தம்மா தான் நீ ரொம்ப சோர்ந்துயிருக்கனு கவலைபட்டாங்க. அதான் என் எனர்ஜிய உனக்கு பாஸ் பண்ணிட்டு இருக்கேன். இனி நான் உனக்கு மூனுவேல கொடுத்து கொடுத்து சார்ஜ் ஏற்றுவேனா.. நீ எப்போதும் பிரஷ்ஷா இருந்து.. மாமாவிடம் இனி என் முயல்குட்டி பற்றி கம்ப்ளைன் வராம பார்த்துக் கொள்வியாம். ஓகேயா. ” கள்ளமும், குறும்பும் கலந்து கூற..

   அவனை முறைத்து.. ” .. உங்க அத்தம்மா சொன்னதால எனக்கு இப்ப முத்தம் கொடுத்தீங்க. ” ஆம் என புன்னகையுடன் தலையசைக்க..

   ” போடா எனக்கு ஒன்னும் உன் எனர்ஜி வேண்டாம். ” வேகமாக ஊஞ்சலில் இருந்து ஏழ.. அவனும் எழுந்து.. அவளின் கையை பிடித்து தன் நெஞ்சோடு சாய்த்துக்கொண்டு அவளின் கன்னத்தை ஏந்தி.. ” எனக்கு வேண்டும் முயல்குட்டி. ” அவன் தீவிரமாக அதே சமயம் காதலுடன் கேட்க..

Advertisement

   தனு.. ” அவளின் இதழை மெம்மையாக முத்தமிட்டு.. “தினமும் ஒருமுத்தம் வாங்கி ஆபிஸ் போகனும் நினைத்துயிருக்கேன். இப்பவும் நான் ஆபிஸ் வேலை பண்ணியிட்டுதானே இருக்கேன். கிடைக்கும்மா?. முயல்.. ” தன்னவனை இனி வருந்திக்கேட்க கூடாது என அவனின் செவ்விதழில் மென்முத்தமிட்டாள்

Advertisement

  அவளின் காதலில் இன்னும் கட்டுண்ட அவளவன்.. அவளின் நெற்றியில் முத்தமிட்டு..  பின் புன்னகையுடன் ஒரு அடி தள்ளி நின்று.. ” அரசிம்மா நான் நான் இன்னைக்கு ஆபிஸ் லீவ் போட்டுயிருக்கேன்..  சொல்ல மறந்துட்டேன். ”

   இதனை கேட்டவளோ ஒரு நொடி அதிர்ந்து.. ” பிராடு தனு. ” என அவனை கிள்ள போக.. அவளின் அறையின் வெளியேஎழில், மாமா.. ” என அழைக்கும் குரல்.

    அவனை கன்னம்பிடித்து கிள்ளிவிட்டு.. ” இதோ வரேன் ண்ணா. ” புன்னகையுடன் கதவை திறந்தாள்.

Advertisement

   அவளின் புன்னகையில் என்றும் போல் வாழ்த்தி.. ” எழில் மாமாவுக்கு கொரியர் வந்துயிருக்கு. ”

   கொரியர் என்றவுடன்.. எடுத்து வைத்துக் கொண்டுயிருந்த வேந்தன் அவர்களிடம் வந்தவன்.. ” அரசி கீழ போகலாம். ”

    எப்போதும் வருபவர் என்பதால் புன்னகையுடன் அதனை வாங்கி.. அவரை நலம் விசாரித்து.. அவர் சென்ற பிறகும் அங்கே நின்றியிருந்தார்கள்.

   புன்னகையுடன்.. ” தனுமாமா நம்முடைய எட்டாவது வாரத்திற்கான தொடக்கம். ” தன் கையில் இருந்த பூங்கொத்தை தன்னவனிடம் நீட்டினாள்.

   யோசனையுடன் நின்றுயிருந்தவன்.. அவளின் புன்னகையில் விழுந்து அனைத்தும் மறந்தான். தோள்வளையில் இறுக்கி.. ” லவ் யூ முயல்குட்டி!. ”

   அவள் நெளிந்து.. ” தனு இது வாசற்படி கையை எடுங்க. ”

    கள்ளப் புன்னகையுடன்.. ” அப்ப ரூம்மிற்கு போகலாமா என் அரசியே?. ”

   அவனை முறைத்து.. ” ஏன் காலையிலிருந்து கொடுத்து வாங்கியது.. பத்தலையா?. ” இல்லையே என தலையசைக்க..

    புன்னகையுடன் அவனை முழுவதும் பார்த்தவாறே .. ” வேண்ணா கடைக்கும் இன்னைக்கு லீவ்  போட்டு.. ”

   அவள் முடிப்பதற்குள்.. ” வேண்ணாடி உன் பார்வையே சரியில்ல. உள்ள வா முதலில். உன்கூட இனி தனியா இருக்கவே பயமா இருக்கு. ” வாய்கூறினாலும் அவளை கைபிடித்தபடி ஹாலிற்கு வந்தார்கள்.

    இறுதியாக சமையல்அறையில் பார்வையிட்டு வந்த இன்பா, கதிரவன், சந்துருவை அங்கு பார்த்தவள்..

   ” ஹாய் சந்துரு அண்ணா. வீடு எப்படியிருக்கு?. நான் கேட்டமாதிரி மாற்றமுடியுமா?. இரண்டு பேரும்  காலையிலேயே பார்க்க வருவீங்கனு எதிர்பார்க்கல. நேரம் ஆச்சு.. இல்ல நானே உங்களுக்கு வீட்டைசுற்றி காட்டியிருப்பேன்.  இருங்க எல்லோருக்கும் சாப்பாடு ரெடியானு பார்த்துட்டு வரேன். ” அவள் சமையல்அறை சொல்ல..

    மூவரும் புன்னகையுடன் அமர.. வேந்தனிடம் அருகில் உட்கார்ந்த சந்துரு.. ” இப்படி பதிலே சொல்ல விடாம கேள்வியா கேட்குறா.. எப்படி இவள சமாளிக்கிறிங்க மாமா.?. ” வேந்தன் பதில் கூறவர.. அதற்குள் அவனே.. ” அதான் கொஞ்சம் முன்ன சொன்னீங்க இல்ல. ” ஆம் எனதலையசைக்க..

   வேந்தனின் அருகில் இருந்ததை பார்த்தான். ‘ ஆரஞ்சு,வெள்ளை ரோஜாஅதில் இளம்,அடர்பச்சை வண்ணத்தில் ஆயுர்வேத இலைகள் அடங்கிய பூங்கொத்து. ‘

   மாமா இங்க பூங்கொத்தெல்லாம் வருமா?. எழிலிக்கு நீங்க வாங்கிங்களா?. ” கதிரவன் கூட அதனை பார்த்து அவ்வாறு கேட்க நினைத்தான்.

  வேந்தன் அதை கையில் எடுத்து.. ” அரசி எனக்காக அனுப்பியது. ” என்ன!. என பார்க்க..  அவர்களிடம் அவள் ஆரம்பத்தில் இருந்து அனுப்புவது பற்றி கூறினான்.

   ம்.. செம்ம ஜடியாவா இருக்கு. எழில் இங்கதான் இருந்தாங்க. ஆனா உங்க கூடவும் இருந்தாங்களா. எதையும் மிஸ் பண்ணமா எடுத்துட்டு போய்யிருப்பீங்க. வேலவேலைக்கு சாப்பிட்டு, தூங்கியிருப்பீங்களே. ”

   சந்துருவின் கேள்விக்கு புன்னகை மட்டுமே வேந்தனின் பதில். ஆனால் இன்பா அந்த புன்னகையில் இன்பம், கவலை, வருத்தம் இருப்பதை உணர்ந்தான்.

   மாமா இப்படி அமைதியா கூட இருப்பீங்களா?. ”

   இன்பா, கதிரவன்  சிரிக்க.. ஏன்டா?. என அவர்களை பார்க்க..

   ” டேய் இதே கேள்விய தான்.. நான் இரண்டுமாதம் கேட்டேன்டா. அந்த ஞாபகம். திலகா அண்ணாவிடம் நிறைய வீடியோ இருக்கு. நீ அதில்பாரு. ”

   அதன்பின் அவன் எழில் கேட்ட கேள்விக்கு.. யாரிடம் சொன்னாலும் ஒன்றுதான் என புரிந்து.. வேந்தனிடம் பதில் கூறிக்கொண்டுயிருந்தான்.

   தனு.. எல்லாம் சாப்பிட வாங்க. ” சத்தமாக அழைக்க..

   அவர்கள் அனைவரையும் அமர வைத்து எழில் பரிமாறினாள்.. என்னடா ஆச்சரியம் அரசியை விட்டு வேந்தன் மட்டும் சாப்பிடுவதை அனைவரும் பார்த்தனர். ஆனால் கேட்கவில்லை. வேந்தன் அளவாக சாப்பிட.. மற்றவர்கள் சரியாக சாப்பிட்டு எழுந்தனர்.

   கதிரவா நாங்க பிரகதாம்பாள் கோயில் போய்யிட்டு.. அப்புறம்தான் கடைக்கு வரனும். நீங்க முன்னாடி போய் பார்த்திட்டு இருங்க. இல்ல இன்பாவோட போய் சத்யா வீடு பக்கம்தான். அங்க பார்த்துட்டு வரீங்களா?. ” இருவரும் பார்த்தனர்.

   போகும் வழி என்பதால்.. ” நாங்க சத்யா வீட்டை பார்த்துட்டு கடைக்கு வறோம் அண்ணா. ”

   மாப்பிள்ள சத்யா வீட்டிற்கு போய்யும் ரொம்ப நாளாச்சு.  நான் அவங்ககூட போறேன். இன்பா மில்லிற்கு போகட்டும். ”

   இன்பாவை எதுவும் பேசாதே என்பது போல பார்த்தார். அவனும் ஏதோ புரிந்து.. ” சரி ம்மா. நான் சத்யாவிடம் கால் செய்து சொல்லுறேன். ” அவன் கூற செல்ல..

   எழில்.. பாட்டியும் என் கூடதான் வராங்க. நீ போய் கோயில் போவதற்கு ஏற்றார் போல மாற்றி கிளம்பு. ” வேந்தனை பார்த்தாள்..

   போ என தலையசைக்கஅதன்பின் அவள் மாடி செல்ல.. அவன் சமையல்அறை சென்றான். அவனை இருவர் புரியாமல் பார்க்க..

   கதிரவா.. வேந்தன் எழிலரசிக்கு தோசை ஊற்றப்போறான். ” மெல்லிய புன்னகையுடன் கூற..  .. மாமா எழிலுக்கு ஊட்டிவிட போறா?.. ‘ சந்துரு மனதில் நினைத்தான். அவனிடம் அனைவரும் கூறிக்கொண்டு கிளம்பவும்.. அரசி சிறிது நேரத்தில் அங்கு வந்தாள்.

    வேந்தன் அவளை மேடையில் அமரவைத்து ஊட்டிவிட.. ஒரு தோசை, சிறிதளவு ரவாகேசரி முடித்தநிலையில்.. ” தனு.. உங்களுக்கு வசு இல்ல அத்த.. இங்க கொரியரை அனுப்பியது பற்றி.. போன் இல்ல மெசேஜ் செய்து இருக்காங்களா?.. ” அவனிற்கு ஊட்டிய படியே கேட்க.

  இல்ல அரசி.. ஏன் பண்ணலனு தெரியல?. ” யோசனையுடனே அவளிற்கு அடுத்த தோசையை முடித்தான்.

   ” போதும் தனு. “  அவள் முகம் சோகமாக இருக்க.. ” ஏன் என் முயல்குட்டி இப்படியிருக்காங்க?. ” அவளின் நெற்றி முட்டி கேட்க..

   நான் உங்களுக்கு.. அங்கு அனுப்பியதை.. அவங்க எப்படி இங்க அனுப்பலாம்?. நீங்க இங்க இருப்பதால் உடனே இங்க அனுப்பி விடுவாங்களா?. உங்கிட்ட கேட்டுயிருக்கனும்.. இல்ல அனுப்பியிருக்குனு மெசேஜ் செய்துயிருக்கனும். என் சம்பந்தபட்ட உங்களோட முடிவ அவங்க இஷ்டத்திற்கு எடுத்து.. எந்த தகவலும் உங்களுக்கு கொடுக்காம இருப்பாங்களா?.

    இதே கமலேஷ் அண்ணா இரண்டுவாரம் உங்க வீட்டில் தங்கினா இப்படி தான் அவங்க வீட்டில் பண்ணுவாங்களா தனு?. ” அவள் பேச ஆரம்பித்தவுடனே.. அவன் கைகழுவி.. அவளின் வாய் துடைத்துவிட்டு.. எல்லாம் ஓரமாக எடுத்து வைத்திருந்தவன்.. அவள் இறுதியாக கூறிய வரி முடியும்முன்.. அவளின் இதழில் விரல்வைத்து போதும் என்றான்.

    முயல்குட்டி இனி நான் கல்யாணம் முடியும் வரை ஞாயிறு மாலை வந்து உன்கூட இங்குதான் இருப்பேன். நீ முகவரி மாற்றி கொடுத்துவிடு. சரியா. ” கண்கலங்கி இருந்தவள்.. என்ன கூற என்ற தெரியாத நிலையில் இருந்தாள்.

    அது தனு.. ”

     நெற்றியில் முத்தமிட்டு.. ” கொரியர் இங்கு வந்த அப்பவே எடுத்த முடிவுடி. இப்ப உன்ன பேசவிட்டதற்கு காரணம்.. நீ உன் மனசிலே நினைத்து வருந்தக்கூடாதுனு  தான். இதை பற்றி மேலும் நீ யோசிக்காத. வா கிளம்பலாம். ” அவளை இறக்கிவிட்டு.. அனைத்தும் செக் செய்து.. கதவை சாற்றலாம் என கதவில் கை வைத்த நேரம் தர்ஷினி உள்ளே வந்தாள்.

   அக்கா.. நீங்க கிளம்பி விடுவீங்களோனு அவசரமா வந்தேன். அது நீங்க கோயில் போகும்போது வீட்டை சாற்றி போகவேண்டானு என்னைய பெரியம்மா அனுப்பினாங்க. வர வழியில் தெரிந்த அக்கா பேசினாங்க வர லேட் ஆகிடுச்சு. ”

   அதை நீ போன்னில் சொல்ல வேண்டியது தானே. சரிசரி நீ போய் உள்ள பத்திரமா இரு. டீ இருக்கு. அதை சூடு பண்ணி குடி. நாங்க கோயில் கிளம்புறோம். ” சரி என தலையசைத்து.. மாமாவை பார்த்தாள். அமைதியாக போனில் ஏதோ செய்துக் கொண்டுயிருந்தார்.

   என்ன அக்கா மாமா வே.. ” அவளை வேண்டாம் என தலையசைக்க கூற.. சைகையில் பாய் கூறி வேந்தனை தோளில் தட்டி போகலாம் என காரில் சென்று அமர்ந்தார்கள்.

    புன்னகையுடன்.. ” அரசி தர்ஷினி கூட.. எல்லாம் நோட் பண்ணுறா. நானும் நீ சுடி போடவும் யோசிக்கல. கடைசி நிமிடத்தில் ஒன்னும் பண்ணமுடியல. புசுசா நிறைய வேஷ்டி வாங்கி வீட்டில் வைக்கனும்.”

    மெல்லிய புன்னகையுடன்.. ” ம்.. இந்தவாரத்தில் ஒருநாள் போய்வாங்கலாம். ”

     அவனும்சரிஎன்பதை அவளின் தலைதடவி கூறினான். கோயிலின் முன் இறங்கியவர்கள்.. சாமிக்கு பொருட்கள் வாங்கி.. அவளிற்கு பூவாங்கி வைத்துவிட்டு புன்னகையுடன் உள்ளே சென்றார்கள்.

     அவர்கள் இருவர் மட்டுமேயான உலகில் இருக்க.. அவர்கள் கண்ணிற்கு யாரும் தெரியவில்லை. ஆனால் அவர்களை வேந்தனின் அம்மா சித்ரா, தங்கை வசு,அண்ணி காவ்யா கண்டுக்கொண்டார்கள்.

 

    அம்மா நீங்கதான் அண்ணா.. நாம்ம ஒன்னும் கேட்காம அங்கு அனுப்பியதற்கு கோபப்படுவான். போன் பண்ணி கேட்பானு சொன்னீங்க. ஆனா அண்ணாவ பார்த்தா கோபபட்ட மாதிரியே தெரியல.. நல்லாதான் இருக்காரு. ”

   ம்.. ஆனாஅவரை பேசவிடமால்என்ன ஆனா?. அண்ணா இப்பபெல்லாம் நாம்ம நினைப்பதுபோல இல்ல. பாருங்க நம்மள அவர் கண்ணிற்கே தெரியல. சுற்றி எதையும் பார்க்கவே இல்ல. அப்படி என்னதான்?. பேசிட்டு போவாங்களோ தெரியல. ”

   வசு இப்படியெல்லாம் பேசாத. கல்யாணம் செய்து கொள்ளப்போறவங்க தங்களை பற்றி பேசிக் கொள்ளவே நிறைய இருக்கு. ”

   ஆமாம்.. ஆமாம் நிறைய இருக்குதான். ஆனா நேற்று நைட் காரில் ஏறும்போது பார்த்தவர்.. இப்ப வரைக்கும் நீங்க சொன்னமாதிரி.. கோபபட்டு கூட இன்னும் வீட்டில் இருப்பவர்களுக்கு கால் செய்யல. அந்த அளவிற்கு பேச இருக்கோ?.”

   இல்லதான். ஆனா அவன் பேசமா இருப்பது கூட கோபத்தின் வெளிப்பாடுதான். எனக்கு என்னமோ பயமாதான் இருக்கு. ஏதோ செய்யப்போறான். ”

   அப்படியா சொல்லுறீங்க. சரிமா அப்படி என்ன பண்ணுவாருனு அதை அப்புறம் பார்க்கலாம். இப்ப என்ன பண்ணுறானு பாருங்க. ” அடி பிரதஷ்ணம் செய்யும் தன்னவளுடன் வேந்தன் நடந்துசென்றான்.

   சரி அவங்க பண்ணட்டும்.. நாம்ம கிளம்பலாம். ” வசு தன் அண்ணியை பார்த்தாள்.

   ” அத்த நான் ஸ்கூலுக்கு கொஞ்சம் திங்கஸ் வாங்கிட்டு.. அப்படியே நம்ம ஹோட்டலுக்கு போகலாம் நினைச்சேன். நீங்க மட்டும் போங்க. வசு என் கூட வரட்டும். “

   நாம்ம இங்க பார்த்தபோதே.. அங்க போகனும் சொன்னதானே மறுத்துட்டேன். சரி உன்கூடவே வசுவும் வரட்டும். இன்னைகே அவ லீவ் போட்டுயிருக்க தேவையில்ல தான். வீட்டில் வந்து என்ன பண்ணப்போறா?. வசு அப்படியே கடை எந்த அளவிற்கு வந்துயிருக்கு பார்த்துட்டு.. போட்டோ எடுத்துட்டு வா. முன்னாடி மறைத்து இருப்பதால அன்னைக்கு பார்த்தபோது தெரியல. சரி நான்கிளம்புறேன். ”

   ம்.. சரிம்மா நாங்க பார்த்துக்கிறோம். ஹோட்டலிற்கு போகும் முன்ன.. நாங்க  வேற கடைக்கு  போவதால் அப்பாவிடம் ஒன்னும் சொல்ல வேண்டாம். 

   சரி என எழுந்தவர்.. பக்கத்தில் நிறுத்தி இருந்த கார் டிரைவர்.. வாசலில் இவரை பார்த்தும் வர.. வீட்டிற்கு கிளம்பிச் சென்றார்.

   வசு நாம்ம கிளம்பலாமா?. “  பின்னால் திருப்பி வேந்தன் வருகிறானா?. இல்லையா என்று?. பார்த்தாள்.

   ” ம்.. ” இருவரும் நடக்க ஆரம்பிக்க..

   ” வசுந்தராஅழைப்பு கேட்டு  திருப்பனர். அங்கு மேகா வேகமாக வந்தாள்..

   ” ஹேய் உங்கள இங்க எதிர்பார்க்கல!.. ”

   மெல்லிய புன்னகையுடன்.. ” ம்.. நானும்தான். ”

   கிளம்பிட்டீங்களா?. நேரா வீட்டிற்காக.. இல்ல எங்கையாவது போற பிளான் இருக்கா?. ”

    உங்களுக்கு இருக்கா?. ”

   இல்லங்க. ஆர்த்தி அண்ணி.. பெரியமாமா வீட்டிற்கு போயிருக்காங்க. அம்மா, சித்தி இன்னும் ஊரில் இருந்து வரல. நான்மட்டும் வீட்டில் இருக்கேன். அதனால தான் ரொம்ப நாள் ஆச்சேனு கோயிலுக்கு வந்தேன். வீட்டில்போய் தனியா இருக்கனுமேனு.. அதான் கேட்டேன் வசு. ” காவ்யா பார்த்தும் கூறினாள்.

    நாங்க.. எனக்கு ஸ்கூலில் ஒரு பங்ஷன் வருவது.. அது சம்பந்தமா பொருட்கள் வாங்கனும். அப்படியே எங்க ஹோட்டலுக்கு போகனும். உங்களுக்கு பிரச்சனையில்லைனா வாங்க. ”

    யோசித்தும்.. சரி அண்ணி. நானும் வரேன். நீங்க இருங்க. நான் கோயிலை ஒருசுற்று சுற்றி வந்துவிடுகிறேன். ” சரி என இருவரும் தலையசைக்க.. மெல்லிய புன்னகையுடன் மேகா சென்றாள்.

    அண்ணி வாங்க.. நாம்ம கொஞ்சம் தள்ளிபோய் நிக்கலாம். ” அவர்கள் ஓரமாக நின்றார்கள்.

   சிலநிமிடங்களில் எழிலரசி முறைக்க.. வேந்தன் சமதானம் செய்வது போல பேசியபடியே வெளியே செல்வதையும் பார்த்தார்கள்.

   முயல்குட்டி  இதுக்கெல்லாம் கோபப்படலாமா?. கல்யாணம் முடிந்த பின்னாடி நீ அடிப்பியாமா. ” ஏன்டா என்பது போல நின்று முறைக்க..

   ” ஏன்டி ஒன்னா, இரண்டா சொன்ன.. 30 சொன்ன. இப்பநான் உன்னைய தூக்கி பிடித்து.. நீ அடிச்சா.. நம்ம நிலைமை என்னாகும். முயல்குட்டி கல்யாணம் முடிந்த பின்னாடி நீ மொத்தமா எத்தனை சொன்னாலும் நான் ரெடி. அதுவரை நல்லா பெண்ணா கோபப்படாம இருப்பியாமா. நீ என்ன ஸ்விட் கேட்டாலும் நானே உனக்கு பண்ணி தரேன். ” அவளிற்கு கார் கதவை திறந்து அமரவைத்து.. பின் உள்ளே அமர்ந்தபின் டீலிங் பேச..

  ம்.. என்ன கேட்டாலும்?. ” புன்னகையுடன் ஆம் என தலையசைக்க..

  ” சரி யோசித்து சொல்றேன். ஆனா பிராடு தனு மாமா.. என்னைய எப்பதும் ஸ்விட் செய்து கொடுத்தே சமாதானம் பண்ணலாம் நினைக்கிற. ஒருநாள் இருக்கு உனக்கு. ”

   ஹேய் முயல்குட்டி.. இன்னொரு தடவை சொல்லேன்.. ” புரியாமல்.. ” எதை தனு?. ”

   ஆசையுடன்.. ” என்ன கேட்டாலும்?. சொன்னியே அதை. ” ஏன் என பார்க்க..

   ” ம்.. கோயில் என்னிடம் முதல் தடவை பேசியபோது.. நீ இதே மாதிரிதான் கேட்ட. இப்ப உன்ன அள்ளிமடியில் வைத்து கொஞ்சனும் போல இருக்குடி. ”

   அவனை முறைக்கவா?. வெக்கப்படவா என்ற தெரியாத  நிலையில்போடா.. ‘ என முகம்சிவந்து புன்னகையுடன் திருப்பிக் கொள்ள..

   அவனின் கை அவளின் சிவந்த கன்னத்தை மென்மையாக சில நொடிகள் தொட்டுதடவிபின் மனமே இன்றி எடுத்து.. அவளை ரசிப்புடன் அவ்வப்போது பார்த்துக்கொண்டே ஹோட்டலிற்கு காரை செலுத்தினான்.

 

   அவர்கள்  இறங்கும்போது அங்கே கதிரவனும், சந்துருவும் அளவு எடுக்கும் ஆட்களுடன் பேசிக்கொண்டுயிருக்க.. பின் அவர்களுடன் இருவரும் கடையின் உள்ளே சென்றார்கள். பாதி முடிந்த நிலையில் உள்ள கடையை முழுவதும் பார்வையிட.. சந்துரு தனக்கு தேவையான இடங்களை அளந்து பார்த்து.. குறிப்பு எடுத்துக்கொண்டான்.

    பூச்சு வேலை முடிந்து.. தற்போது பணி அங்கில்லை என்பதால் யாரும் இல்லாதததால்.. அங்கேயே சேர் போட்டு..  முன்பே வைத்துயிருந்த வடிவமைப்புகளை.. குறிப்புடன் ஒப்பிட்டு பார்த்து.. தேவையானவற்றை மாற்றியும்.. அதற்கு ஏற்ப எந்த வண்ணம் பூசலாம்?. என அதன் கலர் பேலட் பார்க்க.. புளோரிங் என ஓவ்வொன்றை பற்றியும், இரண்டு தளத்திலும் சரியான நாட்கள் விட்டு.. செய்து முடிக்க எத்தனை நாட்கள் எடுக்கும். இவற்றை விரைவில் முடிக்க என்ன செய்யவேண்டும் என பேசி முடிக்கவே இரண்டுமணி நேரம் கடந்துயிருந்தது.

   வேந்தன் அரசியை பார்க்க அவள் கதிரவனிடம் பேசியபடிதான் இருந்தாள். ஆனால் இடுப்பை அவ்வப்போது நீவி விட்டபடியிருக்க.. ” அரசிசி.. ” மூவரும் அவனை பார்க்க.. ” உங்க இரண்டு பேருக்கும் ஜூஸ் கொண்டுவர சொல்லட்டா?. ” தலையசைத்து தங்களுக்கு தேவையானதை கூற..

   ” இவங்களுக்கும், நமக்கும் ஜூஸ் சொல்லிட்டுநீ போய் உள்ளே இரு. நாங்க வரோம். ” மெல்லிய புன்னகையுடன் கூடிய தலையசைப்புடன் வெளிவந்து.. ஹோட்டலினுள் நுழைய..

   அங்கு வசு, காவ்யா, மேகா இருக்க.. ராஜன் அண்ணாவிடம் பேசக்கொண்டுயிருந்தாள் வசு. அவளிற்கு வேந்தனின் பொறுப்புகளை பார்த்துக் கொண்டுயிருந்ததால் அவரிடம் நன்றாக பழக்கம். எதையும் சாதாரணமாக கேட்பாள்.

   ” அண்ணிக்கு தேவையானதை அவங்க பார்த்துட்டு வரட்டும்.. அவங்க வரவரைக்கும் நாங்க இங்க உள்ளே இருக்கோம். ”

   வசுந்தரா நீங்க மாடிக்கு போங்க. அங்க தான் ஹோட்டல் சம்பந்தபட்டது எல்லாம் பேசுவாங்க. இங்க கதவு லாக் செய்துயிருக்கு. எழில் அவங்கதான் வரனும். ”

   ஏன் உங்ககிட்டயும் சாவி இருக்குமே?. ”

    இருக்கு.. ஆனா அவங்க இல்லாத போது ஏதாவது முக்கியமானது அவங்களே எடுக்க சொன்னா மட்டும் தான் நானே உள்ள போகனும் அண்ணா சொல்லியிருக்காங்க. அவங்க புது கடையின் உள்ளே தான் இருக்காங்க. நான் வேண்ணா போன் செய்யட்டா?. ” அவர் போன் எடுக்கும் வேலை..

   நுழையும் போது பார்த்தவள்.. அவர்களிடம் வர.. ” ராஜன் அண்ணா.. இரண்டு மாதுளை ஜூஸ், இரண்டு சாத்துக்குடி ஜூஸ் பத்துநிமிடம் கழித்து உள்ள கொண்டு வரச்சொல்லுங்க. ”

   வந்தவர்களிடம் மெல்லிய புன்னகை மட்டுமே செலுத்தி.. கதவை திறந்தநிலையில் இருக்கும் படியாக வைத்துவிட்டு.. உள்ளே நுழைந்தவள் ரெஸ்ட்ரூம் சென்றுவிட்டாள்.

   இதனை கடுப்புடன் பார்த்த வசு.. ” அண்ணா எங்களுக்கு ஆப்பிள், இரண்டு சப்போட்டா உடனே கொண்டு வரச்சொல்லுங்க. ” அவர் தலையசைப்புடன் செல்ல..

   அண்ணி ரொம்ப ஹீட்டா இருக்கு ஜூஸ் குடித்தபின் போங்க. உள்ள போவோம்.. ராஜன் அண்ணாவிடம்.. யாரிடம் கேட்க வேண்டுமோ.. அவங்களை வரச்சொல்லி கேட்கலாம். ”

   உள்ள போகனும்மா?. நாம்ம மாமாவிடமே.. “

    இல்ல அண்ணி.. நாமளே விசாரித்து ஆடர் கொடுக்கலாம். இந்த கடையில் நமக்கும் உரிமை இருக்கு. நல்லவேளை இவங்களே வந்து திறந்து வச்சுட்டும் போய்யிட்டாங்க. இல்ல செம்ம கோபம் வந்துயிருக்கும். வாங்க அண்ணி.வாங்க மேகா. ”

     காவ்யா கணவன் ஈஸ்வரிடம் எதுவும் கூறவில்லை. வேறு ஒருவர் செய்ய வேண்டிய வேலைகளை.. அவருக்கு செய்ய முடியாத சூழ்நிலையால்.. தானே அவரிடம் தான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று காலைதான் இருவரும் முடிவு எடுத்து செய்ய ஆரம்பித்தது.. ஏதாவது தவறு நேர்ந்தால் பள்ளியில் தன் பெயர் கெடுமே என யோசித்தாளும்.. தங்கள் கடையில் இது கூட தான் செய்யாவிட்டால் தன்மதிப்பு குறையும் எனசரிஎன தலையசைக்க..

   உள்ளே வந்தவர்கள் எங்கு அமரலாம் என பார்க்க.. ” வசு இந்த பக்கம் உட்காரலாம். அது எழிலரசி உட்காருவது. ‘ .. தனியா வேற இருக்கா. ‘ அறையை பார்வையிட்டவாறு மூவரும் அமர்ந்தார்கள்.

    சில நிமிடங்களில் முகத்தை துடைத்தபடி வந்த எழிலரசி.. அவர்களை கண்டுக்கொள்ளாமல்.. அவளிற்கு ஏற்றார் போல் செய்திருந்த சேரில் நன்றாக அமர்ந்து போனில் உள்ள குறிப்பை லாப்டாப்பில்  ஏற்றி.. பின் தன்கையில் எடுத்து செல்ல.. ராஜன் அண்ணாவிடம் கொடுக்க.. என தேவையான எண்ணிக்கையில் பிரிண்ட்அவுட் எடுத்து தனித்தனி பையில் வைத்துக் கொண்டாள்.

   அவள் பாட்டிற்கு வேலை செய்வதை தாங்கமுடியாமல்.. ” எழில் அண்ணி நாங்க இங்க இல்லாத மாதிரி.. நீங்க பாட்டிற்கு வேலை செய்துயிட்டு இருக்கீங்க. என்ன?. எதுக்காகனு வந்துயிருக்கோனு கேட்க மாட்டீங்களா?. ” தோரணையாக கேட்க..

    இவள் அதற்குமேல் அரசியின் தோரணையுடன்.. ” ஏன்?. நான் ஒன்னும் கேட்கலையானா.. நீங்க வந்த வேலைய செய்யமா.. அப்படியே வீட்டிற்கு போய் விடுவீங்களா?. மாட்டீங்க இல்ல. பின்ன நான் எதுக்கு கேட்கனும்.? ” நக்கலுடன் கேட்க.

       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!