Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தீரா உலா -அத்தியாயம் 1

அவ பேரு அக்னி பாக்க ரொம்ப அழகா இருப்பா அவளுடைய மஞ்சள் முகத்த கருங்கூந்தல் மறைக்குறப்ப மட்டும் அவ அழகு இன்னும் 100கிலோ கூடி போகுது.பேருக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் கோவக்காரிதான் .கோவம் இருந்தா என்ன ?பெண்களுக்கு கோவம் ஒரு ஆயுதம் மாதிரி .அக்னி கல்லூரி படிப்ப முடிச்சு இன்டர்வியூ காக பெங்களூரு போறா.இரவு நேர இரயில் பயணம் .ஐன்னல் ஓர சீட்+ஜல்லுனு காத்து+இசைஞானி பாட்டு .ஏதோ ஒரு தனி உலகத்துல இருக்குற மாதிரி மன அமைதி. திடீர்னு ஒரு குரல்… அவளுக்கு புடிச்ச பாட்டு ரொம்ப பக்கத்துல கேட்குது. அக்னி ஆவளா அவ சீட்கு  பின்னாடி திரும்பி பாக்குறா …hi I am Vickram னு அதே குரல் ல இருந்து கேக்க ,அவ அமைதியா திரும்பி பாக்றா.அவ சீட்கு முன்னாடி சீட் ல உட்கார்ந்தான் விக்ரம்.அக்னி மறுபடியும் headset போட்டு பாட்டு கேக்க ஆரம்பிச்சா..விக்ரம் அவ கிட்ட எங்க இருந்து வரிங்க ?இன்டர்வியூ கு போரிங்களா?னு கேக்றான் .அவ கண்டுக்காத மாதிரி திரும்பிட்டா. விக்ரம் கு புரிஞ்சுடுச்சு அவளுக்கு பேச விருப்பம் இல்லைனு .சரி நம்ம நம்ம வேலைய பாக்கலாம் னு ஒரு நோட் எடுத்து எழுத ஆரம்பிச்சான்.யோசிச்சுட்டே முன்னாடி பாக்றான். அக்னி தூக்கத்துல எதையோ நெனச்சு சிரிக்றா .அத பாத்த விக்ரம் “இரவில் புன்னகைக்கும் நிலவே உன் புன்னகையை சற்று நிறுத்து’ கால் கடுக்க காத்திருக்கிறது சூரியன் உன்னை கடக்க “அப்டினு சொல்றான் .அந்த நேரம் பார்த்து அக்னி திரும்பி படுக்றா.விக்ரம் கண் சிமிட்டியபடி என்னடா இவ கவிதைலாம் எழுத வைக்குறா.இவல பார்த்துட்டு இருந்தா நம்ம வேலைய பாக்க முடியாதுனு சொல்லிட்டு எழுத ஆரம்பிக்ரான் .கொஞ்ச நேரம் கழிச்சு அக்னி போன் ரிங் ஆகுது .எழுப்பலாமா வேண்டாமா னு யோசிக்றான் .போன் ரிங் ஆகிட்டே இருக்கு .சரி எழுப்பலாம் னு முடிவு பண்ணி excuse me ,hey  அப்படினு என்னன்னவோ சொல்றான். ஒரு வழியா அவ கண் முழிச்சா,ஆனா திட்ட ஆரம்பிச்சுட்டா என்ன தான் பிரச்சனை உங்களுக்கு ?வேற வேலை இல்லையா ?இதுக்குனே வர வேண்டியது.ஒரு நிமிஷம் அமைதியா இருங்க பிரச்சனை எனக்கில்லை உங்களுக்கு தான் .எவ்ளோ நேரமா போன் அடிக்குது உங்களுக்கு கேக்குதா இல்லையா? எனக்கு தல வலிக்குது .கொஞ்சம் சைலன்ட் ல போடுங்க னு விக்ரம் சொன்னான் .இத கேட்ட அக்னி அய்யய்யோ தெரியாம திட்டிட்டோமோ சரி எப்டி சமாளிக்றது ..சரி சிரிச்சு வைக்கலாம் னு சிரிக்றா .அப்றம் விக்ரமும் சிரிச்சான் .நா ஒன்னு கேக்கட்டாங்கனு  கேக்றான்.ம்ம்ம்….கேளுங்கனு அவ சொன்னா .விக்ரம் அவல பாத்து நீங்க அக்னியா? னு கேக்றான் .அவ விக்ரம பாத்து இப்போ என்ன கேட்டிங்கனு கேட்டா? உங்களுக்கு சரியா தான் கேட்டுச்சுனு விக்ரம் சொன்னான் .ஆமா நா “அக்னி” தான் னு அவ சொல்றா.உடனே விக்ரம் நா சும்மா தான் கேட்டேன் ஏன் கோவபட்றீங்க னு கேட்டான் .அதுக்கு அக்னி இல்லை இல்லை என் பேர் அது தான் உங்களுக்கு எப்டி தெரியும் னு கேட்டா.அதுக்கு விக்ரம் சிரிச்சுகிட்டே அதான் பார்த்தாலே தெரியுதே.ஆனா எப்டிங்க ?சின்ன வயசுலயும் நீங்க இப்டிதானா? உங்க வீட்ல கரெக்டா பேர் வெச்சுர்காங்கல்ல  …அப்டினு சொன்னான். அக்னி புருவத்தை தூக்கி மொறச்சு நக்கலா சிரிக்றா.ம்ம்ம் …..அப்றம் என்னலாம் கண்டுபுடிச்சிங்க னு கேக்றா .இப்பபோதைக்கு இதுமட்டும்  தான்னு விக்ரம் சொல்லிட்டு அப்றம் வேற எதாச்சும் சொல்லுங்க னு கேக்றான் .ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டு டீ குடிக்லாமானு ஒரே நேரத்தில கேக்றாங்க .அக்னி ஆச்சரியத்தோட விக்ரம பாத்து நீங்க என்னமோ பன்றிங்க ஆனா என்னனு தெரியலனு சொல்றா. விக்ரம் வெட்கப்பட்டு சிரிச்சுட்டே  நா ஏதாச்சும் பண்ணா நீங்க தான் எறிச்சுடுவிங்களே “அக்னி” னு சொல்றான்.சரி இரயில் நின்னுடுச்சு வாங்க டீ குடிக்கலாம் னு சொல்லிட்டு அக்னி கீழ இறங்குறா …

 

தொடரும் …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!