Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 37.4

 

நாம் 37(4)

 

      உன்னோட எந்த விளக்கமும் எனக்கு இனி தேவையில்லஎன்பது போல வேந்தனை பார்த்துபின் அனைவரையும் பார்த்தவர்..



Advertisement

 

   ” எனக்கும்  இவனோட குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்ல. என்னை இப்படி எல்லோர் முன்ன அவமான படுத்திய இவளுக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. ”

   நந்தினியை வெறுப்புடன் கோபமுமாக பார்த்து கூற.. ஏதோ அனைவரும் கூற வர.. ‘ இருங்கஎன கைகளால் சைகை செய்தவர்..

Advertisement

 

Advertisement

  எல்லோரிடமும் இன்னும் ஒன்றை சொல்லி முடித்துவிடுகிறேன். இவன் குடும்பத்திற்கும்.. எனக்கும் சம்பந்தம் இல்லாத போது.. இவன் தங்கை எனக்கு மருமகளா வேண்டாம். என் பையனுக்கும் திருமணம் செய்யலாம் என பேசி வைத்து இருந்தை முறித்துக் கொள்கிறேன்.

    என் பையனுக்கும், என் பொண்ணு சாருலதாவிற்கு ஓரே வீட்டல.. இல்ல வேற சொந்தகாரங்க பொண்ணு, பையனையும் நான் செய்து வைக்கப் போகிறேன். ”

   அதிராமல் பேசி வேந்தனின் குடும்பத்திற்கு அடுத்தடுத்து அதிர்ச்சியை கொடுத்தார்.

Advertisement

 

    இதை கேட்ட அனைவருமே அதிர்த்து, இடம் அமைதியானது  சில நொடிகள் இருந்தனர்.. அவர் மனதில் இருப்பதை கூறியதில்.. வேந்தன் வேண்டாம் என கூறியதில் சில நடைமுறை சிக்கலை சந்தித்ததினால்.. வேந்தனிடம் கேட்ட கேள்வியில் நியாயம் இருப்பதால் இதுவரை எதுவும் கூறமால்.. பேசி தீர்த்தால் பிரச்சனை தீரும் என எதுவும் கூறாமல் இருந்தவர்கள்.. ஆனால் கடைசியில் கூறியதை ஒத்துக் கொள்ள முடியவில்லை.

 

   முதலில் தெளிந்த வேந்தன்.. ” மாமா.. என் மேல குறை சொல்வதில் கூட சிறிது ஏற்றுக் கொள்ளக்கூடியது. ஆனால் இந்த பிரச்சனைக்கும்.. என் தங்கைக்கும் என்ன சம்பந்தம்?. ”

    என்ன சம்பந்தம்மா?. நீ என் மகளை வேண்டாம் என்று சொன்னதை வைத்தே.. நான் உன் தங்கைகாக உங்க வீட்டில் பேசிய போது.. வேண்டானு சொல்லியிருக்கனும். ஆனா என் தங்கைகாக.. சரினு சொல்லி சம்மதம் சொன்னேன். ஆனா இப்ப சாருலதாவிற்கு ஒரு பிரச்சனை வரும் என்றுயிருக்கும் போது நான் என்ன செய்ய முடியும்.?. 

   நீ வெளியிடத்தில் கல்யாணம் முடிப்ப. என் பையன் உன் தங்கச்சிய கல்யாணம் செய்துக்கொள்வான்.

   சாருலதா கல்யாண விஷயத்தில்.. ஏன் உங்க முத்த பொண்ணு.. வீட்டில் சொல்லாம கல்யாணம் செய்து போச்சு?. அந்த பொண்ணுமாதிரி இந்த பொண்ணும் ஏதாவது செய்துவிடுமானு?. இன்னும் பல கேள்வி கேட்டு மீண்டும் பிரச்சனை வரும்.

   என் பையனை உங்க பக்கத்தில் இழுத்துக் கொண்டு.. உங்க குடும்ப பிரச்சனையில் வந்தது.. நாங்க என்ன பண்ண முடியுமுனு நீ கேட்ப?. இல்ல உன் தங்கச்சி கேட்பா. அதுக்காக தான் இப்போதே இந்த முடிவு. ”

   பொறுமையாக கேட்டவன்.. ” கமலேஷ் இதுக்கு சம்மதிப்பானு நினைக்கிறீங்க?. ”

    அந்த கவலை உனக்கு வேண்டாம். அவனை சம்மதம் சொல்ல வைப்பது என் வேலை. அவனை என்ன உன்ன மாதிரினு நினைத்தியா?. இல்ல உன் அப்பா மாதிரி நானா? ”  என்று ரவிந்திரனை பார்த்தும் கேட்டார்.

 

    கணேஷ் கேட்க.. வேந்தன் பதில் கூற என.. அடுத்தடுத்து பேசி எவரையும் பேச இருவரும் இடம் கொடுக்காமல்.. வாக்குவாதம் செய்து பேச்சின் திசை மாறுவதை கேட்டு.. அனைவரும் பயந்துவிட்டார்கள்.

 

    இனி அமைதியாக இருந்தால் தன் மகளின் வாழ்க்கை?. என பயந்த சித்ரா..

   ” என்ன அண்ணா.. நந்தினிக்கு நடந்த கல்யாணத்தை பற்றி பேச வந்துட்டு.. வசு, கமலேஷ் பற்றி பேசிட்டு இருக்கீங்க. ”

   சில சம்பவங்களில் இதுபோலான பேச்சுவரும்.. உடனே போகும். ஒன்றில் தொடங்கி வேறு ஒன்றில் முடியும்.. அதனால சித்ரா வந்த காரணத்தைகூறி அதை மட்டும் பேசுங்கள் என கூற..

 

   நீ எதுவும் பேசாத சித்ரா. உனக்கு உன் பையன், உன் பொண்ணு வாழ்க்கை முக்கியம் என்றால்.. என் பிள்ளைகளின் வாழ்க்கை எனக்கு முக்கியம். உங்களால் என் முதல் பொண்ணின் வாழ்க்கைதான் நினைத்துபோல நடக்கல.

     உங்களால்.. உன் பையனின் மறுப்பினால்.. என் எண்ணம் வேறாகி இருப்பதால்.. எங்கே தான் விருப்பம் பையன சம்மதிக்க மாட்டேன் என்றும்.. அதே சமயம் இவன் கல்யாணத்திற்கு முன்ன நடந்தே ஆகவேண்டும் என்று நினைத்து.. தன்னுடைய திருமணம் முடிந்தால் நான் ஏற்றுக் கொள்வேன் என்று நினைச்சு… அவள் திருமணத்தை யாரும் இல்லாம முடித்துக்கொண்டா. ” தன் மகளை பார்த்துகூற..

 

   ஆம்என சிறு தலையாட்டல் மட்டும் கொடுத்தாள். அவர் கூறியதும் ஒருகாரணம்.. ஆனால் அவள் கணக்கே வேறாக இருப்பத்தை அவளை தவிர யாரும் அறிய வாய்ப்பில்லை. அதை யார் அறிவார்களோ?. ஆனால் அதில் வசுவை வேண்டாம் என்று கூறியது அவள் எதிர்பாராதது. இதற்கிடையில் தன் எதிரில் பதட்டத்துடன் வேந்தனை கையை பிடித்துயிருப்பவளை பார்த்து மகிழ்ச்சி கொள்ளவும் தவறவில்லை.

 

    அவ திருமணம் முடிந்தால்..  நான் ஏற்பேன் என நினைத்தா.. ஆனா கண்டிப்பா ஏற்றுக்கொள்ளமாட்டேன். நான் ஏன் செய்கிறேன்?  என்று அவளுக்கு தெரியும்.. அவ சம்மதத்துடன் தான் எல்லாம் செய்தேன். இப்ப அவ எனக்கு செய்தது நம்பிக்கை துரோகம்..

   என்னை இப்படி எல்லோர் முன்னிலையில் அவமானம் படுத்திட்டா. அதனால அவளையும், இந்த கல்யாணம், இந்த குடும்பம் என்று யாரையும் ஏற்கமாட்டான். இனி சம்பந்தமும் இல்ல.

    நான் அடுத்த மகளையாவது நான் நன்றாக பார்த்துக்கொள்கிறேன். அதற்கு என் பையன் என்கூட இருக்கவேண்டும். இதற்கு மேல் உங்களால் இனி எந்த பாதிப்பு, அவமானம் பட முடியாது. அதற்கு இனி உங்கள் குடும்பத்தின் எந்த புது உறவுவை என்னால ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால இந்த முடிவு. இதை நீ ஏற்றுதான் ஆகனும். “

 

   கண் கலங்கி.. ” முடியாது அண்ணா. நந்தினிக்கும், வேந்தனுக்கும் எந்த சம்பந்நம் இல்ல. ஆனா வசு,கமலேஷ் சம்பந்தம் இருக்கு. அது முன்னமே தீர்மானித்தது. அவங்க திருமணம் நடக்கும் வழிய மட்டும் சொல்லுங்க. “

 

   வசுந்தரா இவர்களின் பேச்சை இப்போதுதான் உணர்ந்து நேராக தன் மாமாவிடம் சென்றாள். அவள் போக காரணம்..  இவ்வளவு பேச்சிலும் கமலேஷ் எந்த கேள்விக்கும் விருப்பமோ?. மறுப்போ அவன் முகத்தில் கூட காட்டாமல் இருந்தான். 

 

   அவனிற்கோ.. ஒரு தங்கை  இவ்வாறு செய்திருக்க.. இன்னொரு தங்கை தனக்கு மனைவியாக எண்ணிய வசுந்தராவின் வயது தான். அவளை பற்றியும் நினைக்க வேண்டும். தான் எடுக்கும் எந்த முடிவுவானாலும்.. பாதிப்பு அதிகம் தான். என்ன முடிவு எடுப்பது?.  என தெரியாமல் நடக்கும் அத்தனைத்தையும் பார்த்துக்கொண்டு அமைதியாக நின்றான்.

 

   இதனை கேட்டுயிருந்தவர்கள் உடனடியாக எதற்கும் முடிவு கூறமுடியாமல் இருக்க.. ஒருசிலருக்கு தாங்கள் வாய் திறந்தால் மிகப்பெரிய பிரச்னை , பாதிப்பு வந்துவிடுமோ என அமைதியாக இருந்தார்கள்.

 

    தன் மாமாவிடம் வந்த வசுந்தரா.. ” எதுக்காக எனக்கும், மாமாவிற்கும் நடக்க கூடாது சொல்லுறீங்க?. மாமா. எக்காரணத்தை கொண்டும் எங்க கல்யாணம் நிக்க கூடாது. உங்களுக்கு என்ன வேண்டும் என்று என்னிடம் சொல்லுங்க?. அதை எனக்காக என் குடும்பத்தினர் செய்வாங்க. ”

   வசுவின் பேச்சை கேட்டு.. ‘ அய்யோஎன்ன இந்த பொண்ணு?. தேவையில்லாம இப்படி போய் கேட்குது. சிலர் நினைக்க..

    அரசியை இன்பாவின் அருகில் நிற்க வைத்துவிட்டு.. வசுவின் அருகில் சென்றவன்.. மெல்லியகுரலில்.. ” வசும்மா.. தேவையில்லாம இப்படியெல்லாம் சொல்லகூடாது. பிரச்சனை தான் பெருசாகும். அப்பாவும், நானும் பார்த்துக்கொள்வோம். உன் கல்யாணம் கமலேஷ் கூட நடத்திவைக்க வேண்டியது எங்க பொறுப்பு. நீ போய் உட்காரு. ” அமைதியாக கூறி..

    வேந்தன் தன் வீட்டினரை.. ‘ வாங்க வந்து பேசுங்கஎன பார்க்க..

 

   சித்ரா வசுவையும், அப்பா, பெரியப்பா, மாமா.. ஆரம்பம் தாங்கள் தான் என தலையில் கைவைத்தபடிஎன்ன பேச?. ‘  என தெரியாமல் இருந்தனர்.

 

   வசுந்தராவோ.. வேந்தன் அவனின் திருமணத்திற்காக ஆரம்பம் முதல் செய்தது.. அவனின் நடவடிக்கை, செயல், பிடிவாதம் அனைத்தும்  எண்ணி பார்த்தவள்.. அவனின் பேச்சை கேட்கவே கூடாது என முடிவு எடுத்து..

    அதிக குரலில் ஆரம்பித்தாள்.. ” நான் நான் ஏன் போய் உட்காரனும். அவர் வேண்டானு சொல்வது.. எனக்கும், மாமாவிற்கும் நடக்கும் கல்யாணத்தை பற்றி. நம்ம வீட்டால் தானே பிரச்சனை ஆரம்பம் என்று சொல்லுறாரு.

   அதனால அவருக்கு என்ன தேவை?. என்று சொல்ல சொல்லுங்க. அதை நீங்கயெல்லாம் நிறைவேற்றிவையுங்க. ”

   தன் மாமாவிடம் திரும்பியவள்.. “இப்ப சொல்லுங்க மாமா. அவங்க நீங்க சொல்வதை செய்வாங்க.. செய்யவில்லை என்றால்?… “

 

   சட்டென்று மேகாவின் வீட்டினுள் நுழைந்தவள்.. திரும்பி வரும்போது அனைவரும் பார்க்கும் விதமாகவே காய்கறி நறுக்கும் கத்தியை தன் கை நாடியில் வைத்தபடி வந்து.. யாரும் தன்னிடமிருந்து வாங்க முடியாதபடி சுவரை ஒட்டி நின்று கொண்டாள்.

   அனைவருமே பதறி.. ‘ வசு, வசும்மா, தாரா, என்ன பண்ணுற?. ‘ என்று பதறி கேட்க.. அவள் யாரையும் கண்டுக்கொள்ளவில்லை.

   கணேஷை மாமாவை பார்த்தபடி.. ” நீங்க சொல்வதை செய்யவில்லை என்றால் நான் கைய வெட்டிப்பேன். “

 

   கணேஷ் இப்போது தைரியம், நம்பிக்கையுடன் ஒரு முடிவை எடுத்துவிட்டு.. ” வேண்டாம் வசும்மா. நான் நினைப்பது நடக்கா.. ”

   அவரை பேசவிடாமல்.. ” மாமா இப்ப சொல்லப் போறீங்களா இல்லையா?. நடக்காதாதுனு இங்க பேச்சிற்கே இடம் இல்ல. நடக்கும். நடக்கனும். நடத்தி வைப்பாங்க. ” தன் வீட்டினரை பார்த்தே.. அதிலும் வேந்தனை பார்த்துக்கொண்டே கூறினாள்.

 

   வேந்தனிற்கு.. வசுந்ததரா ஏதோ மிகமிக பெரிய பிரச்சனையை கொண்டு வரப்போகிறாள் என நன்றாக தெரிந்துவிட்டது . தன்னவளின் அருகில் சென்று அவளின் கையை அழுத்த பற்றிக்கொண்டான்.

 

   அனைவரையும் பார்த்தபடியே.. ” வசும்மா நீ கத்திய கையில் இருந்து எடு. நான் சொல்வதை யாராலும் நிறைவேற்றி வைக்க முடியாது. ”  

 

   வசுந்தராவிற்கு பிடிவாதம் கூட்டிக்கொண்டே சென்றது. அவள் அடக்கும் வழி கல்யாணத்திற்கு சம்மதம் சொல்வது மட்டுமே.

  அவளின் கைநரம்பில் இருந்து.. சத்தமில்லாமல் ரத்தம் வெளியே வர..

  அதனை பார்த்த சித்ரா.. ” தயவுசெய்து  என்னவென்று சொல்லுங்க அண்ணா. ” பதறி கண்ணீர் உடன் கேட்க.

    வசுவை மற்றும் மற்றவர்களை பார்த்தப்படியே.. ” நான் நான் சொன்னேன் தானே எனக்கும் இந்த குடும்பத்திற்கும் சம்பந்தம் இருக்ககூடாது என்றதில் உங்களுக்கும் இருக்ககூடாது.

   அதாவது என் பையன், உன்னோட திருமணம் நடக்க வேண்டும் எனில்.. வேந்தன் எழிலரசி திருமணத்தை நிறுத்திவிட்டு.. வேந்தன்.. சாருலதாவை திருமணம் செய்துகொள்ள வேண்டும். ” 

   ” இதுக்கு சம்மதம் இல்லையெனில் என் பையனுக்கும், என் பொண்ணுக்கும் வேற உறவுமுறையில் உள்ளவர்களை.. உங்க அண்ணா கல்யாணம் நடக்கும் நாள் முன்பாகவே, கோயில் இல்ல ரிஜிஸ்டர் ஆபிஸ்சில் முடித்துவிடுவேன்.

   உங்க உறவே எனக்கு வேண்டாம். உங்க வீட்டிற்கு உறுதுணையா இருந்த என் அண்ணாவிடம் இருந்து என் சொத்தை பிரித்து நாங்க தனியா கடை வைத்துக்கொள்வோம். “

 

    அவர்கூற கூற.. வசுந்தரா கண்கள் மின்ன.. பலர் எழுந்தேவிட்டனர். 

   என்ன என்ன இவர் கூறுகிறார்?.  என ரவிந்திரனின் அருகில் பதறி எழுந்து வந்த அருணாச்சலம்.. அப்பா உடல்தளர்ந்து மாமாவிடம் வருவதை பார்த்த இன்பாவும் அங்கு வந்துவிட்டான்.

   ரவி உங்க மச்சான் என்ன சொல்லுறார்?. நீங்களும் உங்க அண்ணா.. வீட்டில் உள்ளவர்கள்.. எல்லாம் ஏன் இப்படி அமைதியா இருக்கீங்க.?.

   அவர் பொண்ணு கல்யாணம் பண்ணிட்டு வந்து.. அவள அடுத்தகட்டத்திற்கு போக பேச வந்தா. என் பொண்ணு கல்யாணத்தை நிறுத்த பேசிட்டு இருக்கீங்க. ” சம்மந்திகள் நண்பர்களாய் மாறி போனதால் அவர் மனதில் உள்ளதை தெளிவாக, உரிமையாக பதறி கேட்க..

 

     கணேஷ் தங்களை குற்றம் சொல்வது உண்மை தானே. நந்தினி தான் மருமகள் என்று எல்லோரும் கூறினோம். வேந்தன் வேண்டாம் என்றதும்.. கணேஷ் அவமானம் அடைந்தார் போலதானே இருந்தான். அவனை மாற்றவே ஒருவருடம் ஆனாது.

   அதன்பின் வேந்தனின் முன்னேற்றம் வரவர.. அவன் தன் பெண்ணிற்கு வரன் பார்க்கும் மாப்பிள்ளையையின் விருப்பமும் மாறியது.. அதன்கூட பிடிவாதமும் கூடியது. அதனால் தான் நந்தினியின் கல்யாணம் இன்றுவரை தள்ளிக்கொண்டே போனது. ‘

    அதனால் நடுவில் அவனின் மாற்றம் வேண்டிதானே.. மகன் தான் வேண்டாம் என்றான்.. எங்கள் மகளை உன் மருமகளாக ஏற்றுக்கொள் என தாங்கள் தானே அவனிடம் சென்றோம். வசு, கமலேஷ் வெளியே காண்பிக்காவிட்டாலும் அவர்களுக்குள் பிடித்தம் அதிகம் தானே. ‘

 

    வேந்தனிற்கு செய்யலாமா?. வேண்டாமா என்று அறைமனதுடன் இருக்கும் போது எழிலரசி வரன் வர.. அவனிடம் கேட்டுவிடலாம் என நினைக்க..

 

   இந்த மூன்று மாதங்களில் அவனின் அதிரடியான செயல்கள், எழிலரசி மீதான அன்பு அனைத்துமே யாரும் கனவில் கூட நினையாது. இப்போது திரும்ப ஆரம்பத்தில் வந்து நிற்கிறதே.

   அதுவும் தன் மகளின் திருமணமும் ஒன்றாக  என நினைத்து.. தன் புது நண்பன் அருணாவிற்கு.. ரவிந்திரன் என்ன பதில் கூற?. என தெரியாமல் நிமிராமல் தலைகுனிந்த படி அமைதியாக இருந்தார். ‘

 

    தன் அண்ணா அருணாச்சலம் .. ரவிந்திரனிடம் கெஞ்சுவதை போல பேசுவதை பார்த்த தேவதியும், ராதாவும் வேகமாக அவர்களின் அருகில் வர.. அனைவரின் பார்வை அங்கு திரும்பியது..

    ” என்ன அண்ணா அவரிடம் போய் கெஞ்சிட்டு இருக்க. அஸ்வினை கால் வெட்டியிருப்பேனும்.. நம்ம குடும்பத்தில் சொத்தே இல்லாத மாதிரி.. என் வீட்டுகாரரிடம் இவர் மச்சான் எப்படி பேசினார்? இவர் இப்படி அமைதியாக இருப்பதிலே தெரிய வேண்டாம்.. அவர் சொல்வது போல தான்.. ஆரம்பித்தில் இருந்தே இவங்க மேலதான் எல்லாம் தப்பு இருக்குனு.

    இப்ப தங்கை  கணவர் கூறியதற்கு முடியாது என்று இவர் சொல்லுவார் என்று நினைக்கிறீங்களா?. மாட்டார் அண்ணா. விடு நம்ம பொண்ணுக்கு. “அவர் திரும்பி எழிலரசி நின்றுயிருந்த இடத்தில் பார்க்க..

 

    வேந்தன், எழிலரசி இருவரும் அங்கு இல்லை.

   

  

   

    

    

  

    

   

    

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!