Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 38.4

 

நாம் 38(4)

 

    கருப்பு நிற லேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவி.  நல்ல நிறம், 6அடி உயரம், அதற்கு ஏற்ற எடை.. கேஷ்வல் உடையில்.. தங்கள் முகத்திற்கு ஏற்றவாறு படிய சீவியும்சீவாமல் இருப்பதினால் முடிகள் அலைபாய..  தங்களின் கூர்மையான பார்வையை கருப்பு நிற குளிர் கண்ணாடியினால் மறைத்து வைத்திருந்த மூவர்..



Advertisement

   அவர்களுடன் பாதுகாப்பா?. உதவியாளரா?. என்று கூறமுடியாத தோரணையில் இன்னும் மூன்று பேர்.. வேகநடையுடன் நகை கடையினுள் வந்தார்கள்.

 

   அவர்களை பார்த்த ஊழியர்கள் அனைவருமே.. இதுவரை வராதவர்கள் வந்ததில் ஆச்சரியம்!. கொண்டுயிருக்கையில்..  பின்னால் இருந்தவர்களின் கண்ணசைவில்.. அங்கு இருந்த அனைவரும்அடுத்த நொடி அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டனர். அதன்பின் அவர்களுக்கும் கடைக்கும்  விடுமுறை கொடுக்கப்பட்டது.

Advertisement

 

Advertisement

   தன்னவனின் தோள் சேரலாம் என போக நினைக்கையில்.. இடத்தின் முழுமையான அமைதி ஏன்டா?. என தன்னவனின் தோள் சாய்ந்தபடியே எழிலரசி திரும்ப..

   அழகான புன்னகையுடன் கையில் அடர்ரோஜா,மஞ்சள்,வெள்ளை நிற பூக்கள் அடங்கிய பூங்கொத்து, ஸ்விட்பாக்ஸ், கிப்ட்பாக்ஸ் என கையில் பிடித்தபடி வேந்தனின் மூன்று நண்பர்கள் ரோஹித், சந்தோஷ், ராக்கேஷ்.. எழிலரசி, வேந்தன்  பின்னால் நின்றுயிருந்தார்கள்.

 

Advertisement

   ஒருநொடி அதிர்ந்து.. பின்ஹாய் அண்.. “ணா.. முடிக்க முடியாமல்.. முறைத்து நிற்பவர்களிடம் பேசாமல் தனுவை பார்க்க..

   தன்னவள் யாரையோ மகிழ்வுடன் அழைக்கும் குரலில் திரும்பியவன்.. அவர்களின் முறைப்பு எதனால் என புரிந்து.. புன்னகையுடன் அவர்களின் பேச இருவருமாக எழுந்தார்கள்.

   அமைதியாக இருந்த அரசியை பார்த்துவிட்டு.. பின் அவர்களிடம்..” ரோஹித் அரசிக்கு அவ வயதைவிட அதிகம் இருப்பவர்களை.. உறவுமுறை சொல்லி கூப்பிடதான் பிடிக்கும் அதான். “

 

   அவளை தெரிந்தே.. ” .. அப்படினா எழிலரசி.. எங்களை மாமானு கூப்பிடே. ” இப்போது எழிலரசி அவர்ளை முறைத்து.. பின் தனுவை பார்க்க.. கூப்பிட மாட்டாள் என கர்வபுன்னகையுடன் அவர்களை பார்த்தான்.

   உங்களை அப்படியெல்லாம் கூப்பிட முடியாது. நீங்க அண்ணானு கூப்பிடுவதில் ரொம்ப வருத்தப்படுவதினால்.. தம்பி வேண்ணா கூப்பிடடா?. ” நால்வரும் இதை எதிர்பார்க்காததால் சிரிப்பும், அதிர்வுமாக பார்த்தனர்.

 

   ம்.. அண்ணாக்கு.. தம்பி பரவாயில்ல. எங்களுக்கு இவ்வளவு குட்டியான அக்கா கிடைத்தில் சந்தோஷம் தான். ”

     புன்னகையுடன் ராகேஷ்.. காலா ஜாமுன் ஸ்விட் பாக்ஸை திறந்து நீட்டிய படியே.. கண்ணால் வேந்தனை பார்த்தான். அவன் புரிந்து  ஒரு ஸ்விட் எடுத்து தன் முயல்குட்டிக்கு ஊட்ட.. அவள் பாதி கடிக்க.. புன்னகையுடன் மீதி பாதியை அவன் உண்டான். பின் இருவரும் பூங்கொத்து, பரிசை கொடுக்க.. இருவருமாக வாங்கிக் கொண்டனர்.

   எழிலரசி.. பரிசை பிரித்து பாருங்க. ” அரசி வேந்தனை பார்க்க.. அவன் சரி என கண்ணசைக்க.. அதை இருவருமே பார்த்தனர். என்ன!. என அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்.

 

   அவர்களில் ஒருவனின்  கையை வேகமாக பிடித்திழுத்து.. அதன்மேல் வைத்து.. ” எனக்கு இதெல்லாம் வேண்டாம். ” தன்னவனின் மிக அருகில் நின்றுக்கொண்டு..

   “தனு உனக்கு முன்னாடியே தெரியுமா?. ” தெரியாது என தலையசைக்க..

   அவர்களிடமே திரும்பி.. ” எங்களுக்கு தெரியாம எதுக்கு பண்ணீங்க?. ” அதிகாரமா?. கேள்வியா?. என கலந்த குரலில் கேட்க.

  புன்னகையுடன் சந்தோஷ்.. ” ப்பா.. உங்களுக்கு கோபமா கூட பேச தெரியுமா?. ” அவனை முறைத்து.. ” கேள்விக்கு பதில். ” அவளின் முகத்தில் விரும்பமின்மை இருந்தது.

   அவனும் புரிந்து.. சாதாரண குரலில்.. ” உங்களுக்காக எங்களோட திருமண பரிசு..இந்த நகைகடையோட பத்து சதவீத சேர். ” ஐவரை தவிர.. உடன் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

    ஆண்கள் தங்கள் துணைகளுக்கு வாங்கிய நகைகளை உடனே அவர்களிடம் கொடுக்க வேண்டும் என பில்பே செய்து வாங்கி வரும்போது.. பாதுகாவலரின் கண்ணசைவில் அனைவரும் வெளியே செல்ல.. இவர்களை தெரிந்ததால் அவர்களை உள்ளே அனுமதிக்க.. உள்ளே வந்தவர்கள் மூவரையும்இங்கு வருவார்கள் என அஸ்வின் முதற்கொண்டு யாரும் நினைத்து பார்க்கவில்லை.

    தங்கள் துணைகளிடம் வர.. அவர்கள் புதிகாக கொண்டு வரப்பட்ட நகைகளை கண்கள் பார்த்தும்.. ஐவரின் பேச்சை காதில் கேட்டபடி.. அவ்வப்போது பார்த்தும் இருந்தனர். ஆண்கள் முழுமையாகவே இவர்களின் பேச்சை ஆச்சிரியத்துடன் பார்த்திருந்தனர்.

 

   அஸ்வின்..  தான் வேலை செய்யும் ப்ராஜெக்ட் கம்பெனியின்.. மறைக்கபட்ட பல செயல்களை நினைத்து.. தூக்கம் வராமல், பார்த்திபனிடம் புலம்பி அவனை அறையில் இருந்து வெளியே அழைத்து வந்தால்..

   தான் வாங்கும் பல ஆயிரம் சம்பளத்தை கொடுக்கும்.. கம்பெனி உரிமையாளர் தரையில் அமர்ந்தும், உறங்கியும் இருப்பவர்களை எண்ணி கவலையும்.. ஆனால் அதில் இருக்கும் அழகான காதலையும் பார்த்தான். இப்போது இவர்களை பார்த்ததும், கூறியதை கேட்டு வியப்பும், அதிர்ந்த நிலையில் மற்றவர்களுடன் பார்த்துயிருந்தான்.

 

   ஏன்?.’ என வேந்தன், எழிலரசி இருவருமே..  மூவரையும் பார்த்தனர்..

 

   ” பெரிசா ஒன்னும் இல்ல வேந்தன். எங்க மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான். வேந்தன் உனக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். நேத்து நாங்க பார்த்தபோது எழிலரசி போட்டுயிருந்த நகை.. நீ இங்கதான் வாங்கின. ”

   மெல்லிய புன்னகையுடன்.. ” நான் அரசிக்கு வாங்கிய முதல் நகை. ஞாபகம் இல்லாம இருக்கும்மா. அரசிகிட்ட உள்ள நுழையும் போது கூட சொன்னேன். ”

   ம். இது உன் முதல் பரிசு மட்டும் இல்ல. என் மனைவி முதன்முதலில் டிசைன் செய்த.. எங்க மூனுபேரே மனைவிகள் காதலியாக இருந்தபோது.. அவர்கள் உழைப்பில் உருவான.. இந்த கடையில் முதலாவதாக விற்பனையான நகை.

   இந்த கடையை பற்றி உனக்கு தெரிந்துயிருக்கும். அவங்க கஷ்டப்பட்டு வரைந்த டிசைனை யாரும் யூஸ் செய்திட கூடாதுனு. ஒரு நகை டிசைன் ஒருதடவை தானும்.. மற்ற கடையில் இருந்து வேறுபடுத்தி.. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று தொடங்கியது.

 

   ஆரம்பத்தில் நம்ம டிசைன் பிடித்து.. நல்லா வருமா?. பயந்துதான் இந்த கடையை தொடங்கினாங்க. ஆனா அவங்க நினைத்தை விட..  இந்த கடை நல்ல பிரபலமாகி இந்த வருடம் பத்து வருடத்திற்கு அடியெடுத்து வைக்கப்போகுது.

    நகைகடை  மாதிரிதான் EV ப்ராடக்ட் கம்பெனியும். அவங்களால் நீ ஆரம்பித்த.. உன்னால நாங்க செயல்படுத்தினோம். அதுவும் இப்ப பத்தாவது வருடம் ஆரம்பிக்குது. “

 

   ராகேஷ்.. தயக்கம் மற்றும் மகிழ்வுடன்.. ” தப்பா நினைக்காத வேந்தன்.. எங்க ஆறு பேரோட லக்கிசாம்!. முதலில் எழிலரசி..  அடுத்து நீ. இரண்டு பேருக்கும் திருமணபரிசா கொடுக்கலானு ராகவி தான்.. இந்த ஜடியா கொடுத்தா. எங்களுக்கும் அதுசரினு தான் தோனுச்சு. ”

   எழிலரசி முறைத்துக் கொண்டே கேட்டுக்கொண்டுயிருக்க..

 

   எழிலரசி உங்க பார்வை புரியுது. எங்க உழைப்பில் தான் எல்லாம் நடந்துயிருக்கு. ஆனாலும் எல்லாம் நடக்க வேண்டும் எனில் அதிஷ்டம், நேரம், உழைப்பு.. எல்லாம் ஒன்னா சரியா அமையனும். இதில் எங்களுக்கு ரொம்பவே நம்பிக்கையிருக்கு. “

 

    ” நீங்க.. வேந்தனோட அம்மா தன் மகளுக்கு செய்வதற்காக சொல்லிக் கொடுத்தினால் தான்.. அவன் உங்களை பார்க்க, அந்த நேரத்தில் பாதுகாப்பா இருக்க காரணம்.. அதனால தான் அவன் உங்களிடம் பழகி, விரும்ப ஆரம்பிக்க சந்தர்ப்பமாக அமைந்த தருணம் என்று சொல்லுவீங்களாமேஅதுமாதிரி தான்.. எங்களுக்கு நீங்க இரண்டுபேரும். “

 

   தங்களின் விருப்பத்தை, எண்ணத்தை புரிய வைக்கிறேன் என உதாரணம் கூறப்போய்.. ‘ அய்யோ கடவுளே என அனைவரையும் நினைக்க வைக்கும் படி நிகழ்வு நடந்துவிட்டது.

 

   ராகேஷ்.. வேந்தனின் அம்மாவினால் தானே என கூறியதுமே.. எழிலரசிக்கு.. அன்று சித்ரா மறைமுகமாக தன் மகளுக்காக செய்ததில்.. அவர் எங்களை சேர்த்தார்..

 

   நேற்று தன் மகளுக்காக.. என்று கண்முன்னாடியே அவர் எங்களை பிரிக்க முடிவு செய்தார். அதை நினைத்தவுடன் அவள் கண்கள் கலங்கி வேந்தனை கட்டிக்கொண்டு முகத்தை மறைத்து.. ஐந்து நிமிடங்களாக மேலாக சத்தமில்லாமல் தேம்பி தேம்பி கண்ணீர் வடித்தாள்.

 

    சொந்தங்கள் அனைவருக்கும் ஏன் என புரிந்து அமைதியாக இருப்பதை தவிர வேறு வழிதெரியவில்லை.

 

    ஆனால் நண்பர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்களிடம் நடந்ததை  முழுவதும் கூறவில்லை. ‘ தீடிர் கல்யாணம் ஒன்று நடந்தது.. அதன் பிரச்சனையால் ஒருவாரத்தில் தங்கள் திருமணத்தை நடத்த வேண்டும்என அந்த நேரத்தில் என்ன தேவையோ அதை மட்டும் தான் வேந்தன் மெசேஜ் செய்து கூறச் சொல்ல.. திலகன் கூறி..  அதன்பின் நண்பனை புரிந்து அடுத்து அவர்களின் அதிவேக நடவடிக்கை. அதனால் எதையும்  தெரியாமல்.. உதாரணம் கூறிவிட்டார்கள்.

 

    வேந்தன் தன்னவளை ஒன்றும் கூறவில்லை. தடுக்கவும் இல்லை. அன்று அம்மா செய்த செயலை.. தன்னவள் எவ்வளவு உணர்வு பூர்வமாக நினைத்திருந்தால்.. எவ்வளவு கூறினாலும்.. தன்னை அந்த இடத்தில் மட்டும் இரண்டாவதாக வைத்துயிருந்தாள். 

 

    அவர்களே நேற்றுஅவளை அப்பாவிடம் விட்டுவிட்டு வா.. ‘ என்று கூறிவதை அவள் எப்படி தாங்கியிருப்பாள். அழட்டும் என அமைதியாக தோள் மட்டும் பிடித்துயிருந்தான்.

 

    நண்பர்களிடம் தான் தெளிவாக கூறாததினால்.. ” சாரி.. ” மூவரையும் பார்த்தபடியே கூற.. அவர்கள் அவனை முறைத்து.. எழிலரசியின் சத்தமில்லாத அழுகை கூட மனதை வருத்தியது..

   அவர்களில் ரோஹித்வேந்தன்.. நேற்று என்ன நடந்தது? எதனால உங்க கல்யாணம் சீக்கிரம் வைக்கனும் சொன்ன?. “

 

   ரோஹித் அதை கேட்டு அரசி இன்னும் அழுவா. அதைவிட மனசு வேதனை படும்படியா ஆரம்பித்து.. சந்தோஷ படும்படியா முடிந்துவிட்டது. சொல்லி ஒருபயனும் இல்ல. அதனால விடு. “

 

    மற்றவர்களை நகைகளை எடுங்க என பார்த்துவிட்டு.. நண்பர்களை அருகில் அழைத்து தயக்கத்துடன்.. ” அரசி நீங்க கொடுப்பதை கண்டிப்பா ஏத்துக்க மாட்டா. அவ இதை தான் கேட்ட வந்துயிருப்பா.. நீங்க நல்ல நிலையில் இருக்கீங்க சேர் கொடுக்கிறீங்க. இதுவே சரியாக போகலைனா அப்ப எங்களை திட்டி.. நாங்க வேதனை படும்படியா ஏதாவது செய்து இருப்பீங்களானு?. கேட்டு அதுக்கும் இந்நேரம் அழுதாலும் அழுயிருப்பா. ”

    இதற்கு என்ன கூற என மூவரும் ஒருவரை பார்க்க.. சந்தோஷ்.. ” டேய்.. இப்ப முடிவா என்ன சொல்லுற. எங்களுக்கு திருப்தியாகும் படியா ஒன்னு செய்யனும். “ 

    தாங்கள் வரும்போதே எடுத்துவந்த நகைகளையும்.. தங்களுடன் வந்த இருவர்.. ஷோகேஷில் இருக்கும் கேட்கும் நகைகளை எடுத்து தந்து.. அதை பார்த்துக் கொண்டுயிருக்கும் வேந்தனின் சொந்தங்களை மற்ற இருவரும் பார்க்க. சந்தோஷிற்கு ஒன்று பிடிப்பட்டது.

 

   வேந்தன் அப்படினா.. நீங்க ஷேர்  தவிர.. வேற எது செய்தாலும் ஒன்னும் சொல்ல மாட்டீங்கதானே. ”

   இதற்கு எழிலரசி திரும்புவாள் என எதிர்பார்த்தான்.. அதன்படியே திரும்பி தன்னவனைபார்த்து இல்லை என தலையசைக்க.. அவனும்இல்ல சந்தோஷ். ”

  ம்.. சரிமூவரும் பேசி ஒரு முடிவிற்கு வந்தார்கள். ரோஹித்.. வேந்தன் எழிலரசியை பார்த்து.. ” வேந்தன் இங்க வலதுபக்கத்தில் எங்களுக்கான அறை இருக்கு. எழிலரசியை கொஞ்சம் சமாதானம் செய்து கூப்பிட்டுவா. ” அடங்கப் புன்னகையுடன் கூற..

 

   வேந்தன் அவனின் வார்த்தையின் அர்த்தம் புரிந்து சிரிக்க.. அவனின் அரசி இன்னும் அவளின் உணர்வில் இருந்து வெளிவராமல் இருப்பதால்.. முகம் கழுவினால் நன்றாக இருக்கும் என நினைத்து.. சந்தோஷ் சொன்ன இடத்தை பார்க்க.. அவளின் நிலை புரிந்து நால்வரும் அமைதியாகி விட்டனர்.

 

   வேந்தன் அவளை அழைத்து செல்ல.. இவர்கள் மூவரும் நகை எடுத்துக் கொண்டு இருந்தவர்களிடம் முன்நின்று.. அவர்களை பதட்ட படவைத்து விட்டார்கள்.

    என்ன நகையெல்லாம் எடுத்தாச்சா?. ” ரோஹித் சிறிது கடுப்பை மறைத்து, நக்கலா? அக்கறையா? என குரலில் கேட்க.

   ஏனேனில் எழிலரசியின் வேதனைக்கு அவர்களின் பெரும்பான்மையானவர்கள் காரணம் அல்லவா. அருகில் அழைத்து அனைத்தும் கூறி.. திட்ட வந்தார்களோ என பதட்டம் வந்துவிட்டது.

 

   தர்ஷினி மற்றவர்களின் நிலை புரிந்து.. ” ம்.. எனக்கும், வசு அண்ணிக்கும் எடுத்தாச்சு. அக்கா, மாமா வந்து ஒருதடவை பார்த்துட்டா பில் போட வேண்டியது தான். மேகா அண்ணி, நந்தினி அக்கா இன்னும் கொஞ்சம் எடுக்கனும்.. பார்த்துட்டு இருக்காங்க. “

 

    எழிலரசியை போல நிறம், உடல். ஆனால் அவளை விட சற்று உயரம், சற்று ஒடுக்கிய கன்னம் என அவளிற்கு இவள் அக்கா, இல்லை சம வயது உடையவள் போல இருந்தாள். ஆனால் அவளை போல மற்றவர்களை பற்றி உடனே புரிந்து எல்லோருக்கும் சாதகமாக பேசிக்கூடியவள் என்று அவளின் பார்வை, பேச்சில் புரிந்தது.

 

   ம்.. அவங்க வர நேரம் ஆகும். அதனால நாங்களோ நீங்க செலக்ட் செய்யதை பார்த்து பில் போட்டுவிடலாம். ” புரியாமல் விழிக்க..

   சிரிப்புடன்.. ” உங்க மாமா.. உங்க அக்காவ சமாதானம் செய்ய கூட்டிட்டு போயிக்கான். ”

  அய்யோ அப்ப அக்காவ தூங்க வைச்சு, தூக்கிட்டு தானே வருவாங்க. எப்ப அடுத்த கடைக்குபோக?. ” அவள் அவர்களை தெரிந்ததால் உளற..

 

  என்ன தூங்க வைச்சுடுவானா?. ” ரோஹித் வேறு நினைத்து அதிர்ந்து கேட்க.

   பக்கத்தில் இருந்த சந்தோஷ்.. டேய் அவனை நீ நினைத்தியா?. அவன் நம்மளிடம் எழிலரசி பற்றி பேச ஆரம்பித்ததில் இருந்தே.. லிமிட்டோட தான் இருப்பானு அவன் முகத்தை பார்த்த தெரியல. ”

   ம்.. நான் எங்க அதெல்லாம் கண்டுபிடிக்க. என் கூட  லவ் பண்ணிட்டு இருந்தவன்.. எவனாவது வேந்தன் மாதிரி இருந்து இருந்தா.. கண்டுபிடித்து இருப்பேன். ” ரகசியமாக பேச..

   சரி சரி நம்ம அப்புறம் பேசலாம். சின்ன பொண்ணுங்க முன்னாடி மானத்தை வாங்காத. ”

   யாரு இவங்கயேல்லாம் சின்ன பெண்ணுங்க. அவன் ரூம்மில் போய் என்ன பண்ணுறானு தெரிந்து.. ” அவன் முடிக்கும் முன்..

 

   ஹலோ தம்பி ரோஹித்.. ரகசியம் பேசுறேனு சத்தமா பேசுறீங்க. நான் ஒன்னும் அவங்க ரூம்மில்.. என்ன பண்ணுவாங்கனு வச்சு பேசல.. மாமா அக்காவ ஹாலில் வைத்து.. எங்க முன்னாடி பார்த்துக்கொண்டதை வைத்து சொன்னேன். ” எழிலரசி போலவே முறைக்கவே..  அனைவருமே அடங்க பட்ட புன்னகையுடன் அவனை பார்க்க.

   அவனிற்கே வேந்தனின் செயல்கள், நடவடிக்கை, காதல், உரிமை உணர்வு எல்லாம் புதுவிதமாக இருந்தது.. ” சரி சரி நான் உன்னைய ஒன்னும் நினைக்கல. நீ ஏன் என்ன என்னை தம்பினு கூப்பிட்ட?. ”

  நீங்க என்னை எழில் அக்கா.. அக்கா மாதிரி இருக்கேன் தானே நினைத்தீங்க. அப்படினா எழில்அக்காக்கு நீங்க தம்பினா.. எனக்கும் தம்பிதானே?. ”

   இருவரையும் பார்த்து.. எல்லோரும்  கூறுவதை வைத்து ரோஹித் தன்னை தப்பாக நினைத்தற்காக… தம்பி என கூப்பிட்டு.. கேட்டவுடன் சமாளிக்க அதை பயன்படுத்தினாள்.

   என்னடா.. நாம்ம மனசில் நினைப்பதை நண்பர்களை தவிர யாரும் கண்டுபிடிக்காத அளவிற்கு வெளியில் முகம் இருக்குமே.. எப்படி?. என நண்பனை பற்றி  நண்பனிடம் பேசிய அந்த மனநிலையில்.. ” ஹேய் நான் நினைத்து உனக்கு எப்படி தெரியும்?. ” இப்போது வெளிப்படையாகவே சிரிக்க..

   ம்.. இப்ப நீங்க தான் சொன்னீங்க. ” சிரிப்புடன் கூற..

   ‘ எப்பஅவன் புரியாமல் பார்க்க.. பின் அவளின் எண்ணத்தை கூற.. ” ம்.. நீ எழிலரசிய விட வாய்யடியா தான் இருப்பபோல. ”

   நன்றி என பார்வை பார்த்து.. ” சரி நகைய பார்த்து சொல்ல போறீங்களா?. இல்லையா.?.”

  அவளை முறைத்து.. மூவரும் அவரவர் முடிவு செய்து எடுத்து வைத்துயிருக்கும் நகைகளை பார்த்தார்கள்.

    சில நொடிகளிலேயே.. ரோஹித்…” ம்.. இதில் மாற்ற எதுவும் இல்ல. எல்லாம் நல்லாயிருக்கு. அவ்வளவு தானா வேற ஏதாவது வேண்டுமா?. ”

  கோல்டு அவ்வளவுதான். வைரம் தான் கொஞ்சம் வாங்கனும். “பார்த்திபன் கூற..

   ஏன் இங்க இருப்பது பிடிக்கலையா?. ”

   அவரசமாக.. ” அப்படியெல்லாம் இல்ல அண்ணா. இங்க இருக்க வைரத்தோட விலை அதிகமாக இருக்கு. எங்களுக்கு நார்மலா.. புது டிசைனில் இருந்தா போதும். ஊரில் எல்லா பங்ஷனிற்கும் மாற்றி போட்டு போக அதான் வசதி, சேப் கூட. ”

   .. அப்படினா. நீங்க இங்க ரிசப்ஷனுக்கு போடுவது போல உங்களுக்கு எது பிடிக்குதோ எடுக்க. அதுக்குள்ள நீங்க கேட்டமாதிரி நான் கொண்டு வரச்சொல்லுறேன். ”

   தங்களுக்கு ஒன்றே விலை அதிகம் என கமலேஷ் தவிர மூவரும் வரதராஜனை பார்க்க..

   அவர்.. ” அது தம்பி.. ” முடிக்கும் முன்..

 

   நீங்க விலைய பற்றி கவலை படாதீங்க. நாங்க வேந்தன் எழிலரசியிடம் பேசியதை கேட்டுயிருப்பீங்க. அவங்க அதை வேண்டானு சொல்லிட்டு.. எங்க மனதிருப்திக்காக வேற ஏதாவது செய்யுங்கனு சொல்லிட்டாங்க. வேந்தன் எப்படியும் எழிலரசிக்கு எதுவும் செய்ய விடமாட்டான்.

   அதுக்கு பதில உங்களுக்கு செய்யலானா.. அதுவும் உங்களுக்கு மரியாதை கிடையாது. அதான் பாதிபாதியா.. இங்க வாங்குவதை பரிசா வைத்துக்கோங்க. கொண்டு வருவதில் உங்களுக்கு என்ன விருப்பமோ அதை வாங்கிக்கோங்க. ” அனைவரையும் பார்த்துக் கூறினான்

 

    பெண்களில் இதுநாள் வரை நடந்தவற்றை நினைத்து சரியென கூற தயங்க. தன் துணைகளின் எண்ணம் புரிந்து என்ன கூற?. என தடுமாற..

 

   நீங்க இத்தனை நாள் எழிலரசிக்கு பண்ணதை நினைத்து.. உண்மையா வருந்தினா. இனி இதுநாள் வரை நடந்து கொண்ட மாதிரி இல்லாம. இனி அவர்களின் எல்லா எண்ணத்தையும் புரிந்து.. நல்லவிதமா அவங்களிடம் இருங்க.

    எங்களுக்கு சம்மந்தபட்ட ஆட்கள் எப்போதும் எழிலரசி, வேந்தனிற்கு பாதுகாப்பா இதுநாள் வரை இருந்தாங்க. வீட்டிற்குள் எழிலரசி விழுந்ததால எங்களால தடுக்க முடியல. ஆனா இனி வீட்டிற்குள்ளவும் ஆட்கள் இருப்பாங்க. ” மறைமுகமாக மிரட்டலா.. வருத்தமா.. எச்சரிக்கையா என புரியாத வகையில் சாதாரணமாக கூறினான்.

 

   அவர்களும்.. இருவரிடமும்  இணக்கம் காண்பிக்காவிட்டாலும்.. பாதிப்பு ஏற்படுத்தகூடாது..  மனதை தெளிவாக்கி கொண்டு திருமணபரிசை ஏற்றுக்கொள்கிறோம் எனசரிஎன தலையசைக்க.

 

   ம் பாருங்க. ” நான்கு ஜோடிகள் பார்க்க.. எடுத்த நகைகளுக்காக பில் போட.. அதனை வரதராஜன் பார்க்க.. மூவரில் ஒருவர் கொண்டு வருவதற்கு கட்டளையிட்ட பிறகு தங்கள் போனிலேயே தங்கள் பிற வேலைகளை பற்றி வந்த மெயில், மெசேஜ் பதில் அனுப்பிக் கொண்டுயிருக்கும் போது .. எழிலரசி மட்டும் வந்தாள்.

 

   வேந்தன்.. எழிலரசியை அறையினுள் அழைத்துச் சென்று.. அவளின் தேவைகளை செய்து முடித்தபின்.. ஷோபாவில் உட்காரந்தவுடனே.. அவளவன் அவள் மடியில் படுத்து தன் அரசியின் இடையை என்றும் இல்லாத அளவிற்கு இறுக்கியும்.. வயிற்றை அழுத்தியும் படுத்துக்கொண்டான்.

   அரசிக்கோ அவளின் உடையை தாண்டியும் தன்னவனின் இதழ், சுவாச வெப்பத்தை உணர்ந்து.. இன்ப அவஸ்தையை கொடுத்து. சிலநொடிகள் அவனின் தலைகோதினாள். பின் அவனிடம் இருந்து சீரான முச்சுகாற்று மட்டுமே வந்தது.

 

   அவளிற்கு தெரியும்.. அவனின் தற்போதைய வேண்டுகோள் என்னவாக இருக்கும் என்று. தன்னவனின் மனம் தன்னைவிட சொல்முடியாத வலியை உணர்கிறது. ஆனால் அவ்வளவு விரைவில் அவன் வார்த்தைகளில் எதையும் கூறமாட்டான். தன்னை அணைப்பதில், இதழ் முத்தத்தில் அதனை வெளிப்படுத்தி.. தன்னை தெளிவாகிக் கொள்வான்.

   என்ன இப்போதும் அப்படியே கூறிவிட்டு.. பின் தெளித்து தங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சொல்லும் உணர்வையும் வெளிப்படுத்திவிட்டான். எங்கே எழுந்தால் தன்னவளை ஒருவழியாக்காமல் விடமாட்டேன் என்று உணர்ந்து.. அவளின் தலைகோதலை இதமாக அவளின் மடியில்  புதைத்து சுகமாக உணர்ந்து.. அதில் கண்கள் செருகி.. ‘ நேற்று நடந்ததை இருவரும் மறக்க வேண்டும்என அவளிடம் மானசீகமாக கூறிவிட்டு உறங்கிவிட்டான்.

   சிலநிமிடங்களில் வேந்தனே மெதுவாக கண்விழித்து.. தான் இருக்கும் இடத்தை உணர்ந்து.. ‘ அய்யோ முயல்குட்டிஎன செல்லம் கொஞ்சி.. அந்நிலையில் இருந்தே தன்னவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் புன்னகையுடன் அவனைஎன்னஎன புருவத்தை ஏற்றி இறக்கி கேட்க.. ‘ ஒன்றும் இல்லைஎன அவளின் வயிற்றின் மேல் முத்தம் பதித்துவிட்டு.. அவள் உணரும் முன் எழுந்து ரெஸ்ட்ரூமிற்கு ஓடியே விட்டான்.

  

 

    

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!