Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 40.2

 

நாம் 40(2)

 

    வசுந்தராவுடன் சென்ற மூன்று பெண்களும்.. ஆண்களுக்கு அனைத்தும் தயாராகி.. நலுங்கு முடிந்து..



Advertisement

   ஆண்களுக்கு அங்கேயே நீர் ஊற்றி என சடங்கு முடிந்த அந்த நேரத்தில்.. பெண்கள் விரைவில் குளித்து முடித்து சேலை அணிந்து இளமதி ரூம்மிற்குள் இருந்தனர்.

 

   வேந்தனின் அரசிக்கு.. இருநாட்கள் முன் தனுமாமாவிடம்..  தான் தூரத்தி காதலித்து இருப்பேன் என கூறினேன்அப்படி காதலித்து இருந்தால் இப்படிதானே தன்னவனை மறைந்து இருந்து பார்த்து ரசித்து இருப்பேன்!. என.. தன்னுடைய புது அனுபவத்தை எண்ணி சத்யாவுடன்  தன் அக்காவின் அறையில் புன்னகைமுகமாக நுழைந்தாள்.

Advertisement

 

Advertisement

   யார் தனக்கு செய்திருந்தாலும் என்ன பயன். வேந்தன் அண்ணா தனக்கு செய்யவில்லை.. ஆனால் எழிலரசிக்கு.. அவனை தவிர வேறு யாரையும் செய்யவிடவில்லை என்ற தன் கோபம் முழுவதும் குறைந்து..

   அப்போதுதான் சாதாரணமாக இருந்தவளின் முன் முகம்சிவந்து புன்னகைமுகமாக நுழைந்த.. எழிலரசியை பார்த்ததும் சென்ற கோபம் அனைத்தும் வந்துவிட்டது. 

 

Advertisement

   தன்னால் தான்அனைத்தும் நடந்தது என்று எதை பற்றியும் யோசிக்கும் நிலையில் இல்லாமல்..

   ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல?. ” மேக்அப் செய்யும் இருஆட்கள் இருப்பதை கூட மறந்து கோபமாக எழிலரசியை கேட்க. அவள் கோபம் முகம் கண்டு புரியாமல் என்னவென்று கேட்க வருகையில்.. வசுந்தராவே மீண்டும் ஆரம்பித்தாள்.

 

   உங்க கூட உறுதி அன்று பிரச்சனை வந்தபோது.. அன்றே உங்க வீட்டில் பேசி.. இந்த கல்யாணத்தை ஆரம்பத்திலே தடுத்துயிருக்கனும் என்று.. என் பிரண்டஸ் சொன்னாங்க.

    கூடவே அவங்க உங்க வீட்டில் எல்லோரும் சொந்தத்தில் தானே திருமணம் செய்தாங்க. ஏன் செய்தாங்க?. குடும்பம் ஒற்றுமையா இருக்கும். அக்கா, தங்கைகளுக்கு.. அண்ணா, தம்பிகள் அவர்களுக்கு செய்ய வேண்டியதை எந்தவித குறையும் இல்லாம செய்வாங்கனு சொன்னாங்க.

 

   வெளியில் இருந்து வந்தா கண்டிப்பா ஒற்றுமை இருக்காது.. வரவங்க எதையும் செய்ய விடமாட்டாங்கனு சொன்னாங்க. நான் அதை அப்ப நம்பல. ஆனா இப்ப நல்லா நம்புறேன்.

   நீங்க அண்ணா எங்களுக்கு செய்வதில் தலையிடமாட்டேன்.. மாட்டேன் சொல்லியே.. கல்யாணம் முன்பாகவே அண்ணாவை உங்க வீட்டில் வைத்துக்கொண்டு.. எங்க எல்லோரையும் வீட்டை வீட்டு போக வைத்து.. எனக்கு அங்க எதையும் செய்ய விடமா பண்ணீட்டிங்க.

 

   சரி இங்க வந்தா.. காலையில் நடந்த பிரச்சனையில் உங்க கூட உட்கார வேண்டானு

   சாரு இருக்கட்டும் சொல்லிட்டேன். அதுக்கு அண்ணா கமலேஷ் மாமா கூடவும் உட்காரமாட்டேன்.. எனக்கு அண்ணானா நலங்கும் செய்யமா.. என்னை எல்லோர் முன்னும் நல்லாவே அவமதிப்பு செய்து.. என்னைய அழவைத்துவிட்டுஉங்களுக்கு யாரையும் பண்ணவிடமா மதிப்பு வாங்கி கொடுத்து சந்தோஷத்தை கொடுத்துயிருக்கார்.

 

   நீங்க வரும்முன்னே இப்படி அழவைக்கீறீங்க. கல்யாணம் ஆகி வந்தா எங்க வீட்டில் என்னவெல்லாம் ஆகும் நினைத்தாலே பயமா இருக்கு. ” அங்கு ஒருத்தியை தவிர யாரையும் பதில் யோசிக்கும் நிலை இல்லாமல் அவள் பாட்டிற்கு பேசிக்கொண்டு இருக்க..

 

   அவள் முச்சுவிட்ட அந்த நிமிடத்தில்தான்.. அவள் கடைசியில் கூறியதில் அதிர்ந்து..

 

   தன்தோழிக்காக.. ” வசுந்தரா உனக்கு உங்க அண்ணா மேல கோபம் இருந்தா தைரியமா அவரிடம் போய் காண்பி. இப்படி சம்பந்தமே இல்லாத எழில் கிட்ட காண்பித்தாளாலும்.. வாய்க்கு வந்ததை பேசாத. “

 

   நானும் தப்பா சொல்லலையே. இவங்க வரும்முன்னே.. பெரிய வீட்டில் ஒன்னா இருந்தவங்கள.. தனியா கூப்பிட்டு போனார்.

   ஏதோ குடும்பத்திற்கு செய்யுறார்னு நினைத்தா.. இவங்களுக்காக தான்.. வீடே கட்டினாரா. இப்ப அதே இவங்களுக்காக அங்க வரமாட்டேனு சொன்னதால.. 

   நாங்க திருப்பி பாட்டி வீட்டில் போய் இருக்கோம். எங்கள பார்ப்பவர்கள் என்ன நினைப்பாங்க. முன்னாடி அண்ணா என்னை எப்படி பார்த்துக்கொண்டார். ஆனா இப்ப என்னைய பார்ப்பது.. எனக்கு செய்வதில் ஏதோ கடமைக்கு செய்யுறார். என்னைய என் பிரண்டஸ் எப்படியெல்லாம் நக்கலா பேசுறாங்க தெரியுமா. இதுகெல்லாம் யார் காரணம்?. 

 

   ம்.. எழிலரசியால் தான்.. நீ நினைத்தை உன் அண்ணாவிடம் வாங்கி ஆடம்பரமா இருந்து.. உன் பிரண்டஸ் முன்னாடி உயர்வா இருந்த. அவளதான் உன் பிரண்டஸ் இவ்வளவு பேசுற நிலைக்கு வந்துயிருக்க. அதனால நீ சொன்னதில் பிரண்டஸ் நக்கலா பேச கண்டிப்பா எழிலரசி தான் காரணம்.

 

    கடைசியா என்ன சொன்ன பயமா இருக்கா?.. ” தோழியை தோள்அணைத்து.. ” எங்க எழிலரசி உங்க அண்ணாவிற்கு மட்டும் அரசி கிடையாது. எங்க எல்லோருக்கும் அரசி தான். அவ கூடஇருப்பவர்களை சந்தோஷமாகவும்.. அவ இருக்கும் இடம் என்றும் செழிப்பா மட்டும்தான் இருக்கும். அதற்கு உதாரணமா சென்னையில் நீ பார்த்துயிருப்ப.

 

   நீ உங்க வீட்டில் இல்லாம இருப்பதற்கு காரணம் நீ மட்டும்தான். உன் அவசரத்தால நீ சுயநலமா யோசித்து.. உன் கல்யாணம் மட்டும் நடந்தா போதும் என்று சும்மா கத்திய வைத்து மிரட்டின.

   ஆனா அதுவே வேந்தன் அண்ணா.. எங்க எழிலரசி மீது வைத்திருக்கும் இருக்கும் காதல் தெரிய வாய்ப்பாஅமைந்து!. எல்லாம் தெரிந்துவிட்டது.

   உங்களை யாரும் தாத்தா, பாட்டி வீட்டிற்கு போக சொல்லவே இல்ல.. நீ தான் உங்க அப்பாகிட்ட சொல்லி அங்க இருக்க. உன்னால தான் உன் அவசரத்தால்தான் நீயே மற்றவங்க முன்னாடி அவமானம் அடையற.

 

   அதுகூட உன் பக்கத்தில் இருப்பவர்களோட குறுக்கு புத்தியால்.. இரண்டு குடும்பம் பிரிந்து.. வீட்டில் இருப்பவர்கள் யாரும் சந்தோஷம் இல்லாம இருக்கனும் என்று நினைத்தவங்க  பேச்சை கேட்டு.. அவங்க கூடவே சுத்து இன்னும் அவமானம்.. ” தன் தோழியின் கையை அழுத்தி வேண்டாம் என தலையசைத்துகுளியல் அறையில் புகுந்து கொண்டாள்.

 

   அவள் உள்ளே சென்றதும் தர்ஷினி நான் பார்த்துக்கொள்கிறேன் என சத்யாவை அனுப்பிவிட்டு.. பாத்ரூம் பக்கத்தில் நின்றாள். அவள் வெளியே வந்தபோது தான் திலகன் சத்யாவை பார்க்க.. அடுத்தடுத்து நடந்து.

 

   பாத்ரூம் உள்ளே இருந்தபோது தன்னவனின் அழைப்பில் கதவை திறக்க.. கண்கள் சிவந்து.. அதன் அடியில் வீங்கி.. ஷவர் நீர் வந்து கொண்டுயிருக்க.. ஆனால் உடையுடனே தண்ணீர் சொட்ட சொட்ட நின்றவளை பார்த்து அதிர்ந்து.. தண்ணீரை நிறுத்தி தன்னவள் முகத்தை மட்டும் பார்த்து அவள் உடைகளை களைய சென்ற நேரம் தான்.. அரசி அப்போதுதான் தான் இருக்கும் இடம்.. தன்முன் இருக்கும் தன்னவனை உணர்ந்து அவனை திரும்பி நிற்க வைத்து உடைமாற்றி.. அவனை திரும்பியவுடன் அவளை அழைத்து வெளிவர..

 

   இடைபட்ட சிறிது நேரத்தில்வசுந்தரா இருந்தாலும் உங்க அண்ணாவிற்கு தைரியம் ஜாஸ்திதான். நாம்ம எல்லாம் இருக்கும்போதே இப்படி சாதாரணமா பாத்ரூம் உள்ள போறாரு. எனக்கு என்னமோ இவங்க இன்னும் கணவன், மனைவி ஆகாகம… ” அடுத்த நொடி தர்ஷினி நந்தினியின் முன்யிருந்த கண்ணாடியில் தன் பக்கத்தில் மேப்கப் செய்வர்கள் வைத்திருந்த சீப்பை போட்டு அது சத்தத்துடன் கூடிய சிறிய விரிசல் விழ.. அனைவருமே அதிர்ந்து எழுந்து விட்டனர்.

 

   உன் முகத்தில் போட்டுயிருக்க வேண்டியதை அங்க போட்டு இருக்கேன். இனி என் அக்கா, மாமா பற்றி பேசின? ” அடுத்த பேசவரும் போது.. கதவு இறக்க..

 

   தன் அக்காவை கதவு திறக்கும்போது பார்த்த முகம்  ஞாபகம் வர.. தன்னவன் அறை என்றதும்..  அவனிடமே செல்வது போல நினைத்து வேகமாக செல்ல.. அவனை பார்த்ததும் அவனிடம் சென்று இந்நேரம் வரை தேக்கி வைத்திருந்த அழுகையை அழுது தீர்த்துவிட்டாள்.

   சாருலதா வசு இருந்த மனநிலையில் இருந்து கூற ஆரம்பித்து சத்யா தொடர்ந்து தர்ஷினி கூறி முடித்தாள்.

 

   கேட்ட, கூறிய அனைவருக்கும் மீண்டும் மீண்டும் வேந்தனின் எழிலரசி மீதான தனிபட்ட உரிமையில் செய்ததை.. வசுந்தரா சின்ன பெண் புரிந்துக்கொள்ளாமல் பேசுகிறாள் என சாதாரணமாக விடவும் முடியவில்லை.. இதில் வேந்தனின் மறைத்து வைத்திருந்ததில் இருந்தானே..  பல குற்றசாட்டுகளுக்கு ஆரம்பமாக உள்ளதால்.. கோபம் கொண்டு பேசவும் முடியவில்லை.

 

   வேந்தன், எழிலரசி உறைந்த நிலையில் இருக்க.. இப்போது எதுவும் பேசமாட்டார்கள் என உணர்ந்து.. தன் தோழனிற்காக.. ” சாரு தர்ஷினியை கூட்டிட்டு போ. கதிரவன் நீங்க இங்க வந்தவேலை முடித்து.. சீக்கிரம் அந்த வீட்டிற்கு போங்க. ”

   திலகன் கூறியதும் கதிரவன் தன்பிரியாவை.. பார்த்துகலாம் கவலைபடாதே என தலைதடவி சாரு உடன் அனுப்பி..

   வேந்தன் எழிலரசிக்கு செய்வதை பார்த்தவன்..  தன்னவளிற்கு வாங்கிய நகையை மாமா என்ற உரிமையில்..  இப்போது கொடுக்க போகும் தாய்மாமா சீர் தட்டியில் வைத்து கொடுக்கலாம் என எடுக்க வந்தான்.

   இங்கே நடந்த உரிமை பிரச்சனையில்.. மேகா தனக்கும் அண்ணா முறையில் தனியாக கேட்டால்?. என திறந்த பிரோ முன் கையில் நகையுடன் அப்படியே நின்றிருக்க..

    அவன் அருகில் வந்த திலகன்.. நகையை பார்த்ததும் புரிந்து..

   அவனை தட்டி.. ” டேய் இதை தர்ஷினிக்கு போய் கொடு. எனக்கு எங்கனு மேகா கேட்டா நாலு அறை கொடு. ” அவன்  அதிர்ந்துமுழிக்க..

   ” கதிரவன் சில விஷயங்களை ஆரம்பத்தில் தான் பொறுமையா சொல்ல முடியும். திருப்பதிருப்ப புரிந்துக்கொள்ளமா.. இல்ல வேண்டும் என்றே செய்தா., நாம்ம அவங்களை கண்டுகொள்ளமா போயிட்டே இருக்கனும். அந்த நிலையில் தான் வசுந்தரா, நந்தினி..  அதற்குபின் படியில்  மேகா இருக்காங்க. நாம்ம போலாம். எழிலரசி சேலை கட்டனும். “

 

   .. அதை மறந்துடேன்கதிரவன் நகை எடுத்துக்கொள்ள.. இருவரும் சத்யாவுடன் வெளியேசென்றார்கள்.

 

   வேந்தன் தன் அரசிக்கு கூந்தலை காய வைத்து அவளிற்கு பிடிக்கும் விதத்தில் தலைசீவி பின்னல் முடித்தான். சேலை எடுத்து முந்தானை மடிப்பு வைத்து அவளை பார்க்க..

   தன்னையே பார்த்துயிருப்பதை பெருமுச்சு விடுத்து.. அவளிற்கு நெற்றிமுத்தம் கொடுத்து.. ” முயல்குட்டி நாம்ம செய்வது ஒருந்தருக்கு முக்கியமா!. மற்றொருவருக்கு வேண்டாததா தெரியும். வசு உனக்கு பதில சாருவை சொன்னாமாதிரி..

   நான் செய்யாம.. ஈஸ்வர் அண்ணா செய்ததில் என்று.. எல்லோருக்கும் எது செய்தாலும் தனிதனி ரிசன் இருக்கும். எல்லோருரையும் நாம்ம திருப்திபடுத்த முடியாது. அதேமாதிரி ஒவ்வொன்றிக்கும் விளக்கம் கொடுக்க முடியாது. இது உனக்கும் சேர்த்துதான்டி. “

 

    அவளை இடைபிடித்து தூக்கி தனக்குள் இறுக்கி நீண்ட இதழ் முத்தம் கொடுத்தவன்.. அவள்காதில் மெல்லிய குரலில்..” நீண்ட நேரம் தண்ணீரில் இருந்ததில் ஜில்னு இருக்கடி. ”

   மிகமிக மெல்லிய குரலில்.. ” முயல்குட்டி என் முன்னாடி கண்ணாடி இருந்ததை நீ பார்க்கலையா?. ” முத்தத்தில் அனைத்தும் மறந்திருந்தவள்.. தன்னவன் கூறியதில் ஒருநொடி அதிர்ந்து..

    பின் புன்னகையுடன்.. அவனை போல அவன்காதில்.. ” தனுமாமாவிற்கு ஜாக்பாட் போல. அதான் பார்த்திட்டீங்கள.. எனக்கு சேலை நீங்களே கட்டிவிடுறீங்களா?. ” கண்ணாடியில் தன்னை தெரிந்ததும்.. கண்முடியிருப்பான். தன்னை மாற்ற வேண்டி கூறுகிறான் என தன்னவனை அறிந்துகேட்க..

   கண்டுபிடித்துட்டா.. ” ம்ஹூம்.. நான் பார்த்தற்கும் சேலை கட்டுவதற்கும் சம்பந்தம் இல்ல முயல்குட்டி.. அதனால நீயே கட்டு.. இல்ல சத்யா வெளியதான் இருப்பாங்க. உள்ள அனுப்புறேன். சீக்கிரம் வா. ” கழுத்தில் முத்தம் பதித்துவிட்டு.. ‘ கேடி முயல்குட்டிய அப்ப அப்ப மறந்துவிடுறேன்.புன்னகையுடன் வெளியே சென்றுவன்.. நினைத்ததுபோல திலகனுடன் நின்றுயிருந்த சத்யாவை உள்ளே அனுப்பிவிட்டு..

  திலகனுடன் வசுந்தரா அறைக்கு சென்றான்.

 

   தர்ஷினியால் கண்ணாடி உடையவும் மேகா ஒன்றும் கூறாமல் இளமதியை அழைத்திருக்க.. அவள் அழைத்தது தெரியாமல் சாருலதா வேந்தனிடம் வர.. பின் தர்ஷினியுடன் வர.. வசு, நந்தினிக்கு அப்போதே தெரிந்துவிட்டது.. வேந்தன் எப்போது வேண்டும் என்றாலும் வருவான் என்று.

 

   வேந்தன்சென்ற போது யோகா, காவ்யா, இளமதி, ஆர்த்தி, சுரபி பெண்களை அழைத்து சொல்ல வந்துயிருக்க.. வந்தபின் மேகா அருள்நிதிக்கு இதை பார்த்தால் வசு பேசியது தெரிந்துவிடும் என அதனை இளமதி சமாளிக்க வேண்டும் என அனைத்தும் கூறிவிட்டாள். அவள் ஆரம்பிக்கும் போதே முடிந்த நிலையில் இருந்த மேக்கப் போடுபவர்களை மண்டபத்திற்கு சொல்லும் படி கூறிவிட்டனர்.

 

   வேந்தனை பார்த்ததும்.. அறைக்குள் அழைத்து.. ஒரமாக நிற்கவைத்து.. ” தம்பி இப்ப எதுவும் பேசவேண்டாம் டா. அங்க எல்லோரும் காத்துயிருக்காங்க. சாமி கும்பிட்டு நல்ல நேரத்தில் இங்கயிருந்து கிளம்பனும். “

 

   அக்கா நான் பேச வேண்டிதை சத்யா பேசிட்டாங்க. அதனால அதுக்கு வரல. ” கூறிக்கொண்டே.. அவள் அருகில் சென்றவன்.. யாரும் உணரும் முன்.. தன் கோபத்தில் கால்பகுதியை மட்டும் கொண்டுவந்து.. கை ஒங்கி விட்டான்.

   ” வேந்தா, வேந்தன், மாமா, அண்ணாகுரல் அறைமுழுதும் ஒலிக்க..

    பயந்துபோய் வசுந்தரா, அவள் அருகில் நின்ற நந்தினியும்..  தங்கள் கை கண்ணத்தில் வைத்துயிருந்தபடிஎன்ன வலியில்ல?.நினைத்து கண் திறந்தார்கள்.

 

   கோபத்தில் உரிமையில் கொடுக்கும் அறை கூட தன்னவளிற்கு மட்டுமே என நீட்டிய கையை இறக்கிவிட்டான்.

 

   அவள் எதிரே சாதாரணமாகவே நின்று.. ” நீ உறுதி அன்று பேசிய போதே.. உன்னைய அடித்திருந்தா.. இன்னைக்கு இப்படி பேசியிருக்க மாட்ட. அன்னைக்கு பண்ணாதது எவ்வளவு தப்பு என்று.. இப்ப நல்லாவே புரியுது.

 

   உன் கல்யாணத்திற்கு பண்ண வேண்டிய எல்லாமே ஈஸ்வர் அண்ணாதான் பண்ணுவாங்க. அப்படி நான்தான் பண்ண வேண்டும் நினைத்தா அம்மா, அப்பாவிடம் நம்ம வீட்டில் இருப்பவர்களிடம்.. நான் அரசியுடன் சேர்ந்து பண்ண அனுமதி வாங்கி வை.

    எப்போதும் அண்ணாதான் தங்கைகள் விரும்பியதை செய்யனும் என்று இல்ல. நீ என் விருப்பத்தை நிறைவேற்றுகிறாயா என்று நானும் பார்க்கிறேன். “

 

   அருகில் இருந்த நந்தினியைநீ இதுநாள் வரை என் பார்வை வட்டத்தில் இருந்ததே இல்ல.. இதல உன்னைய பார்த்து நான் அடிக்க போறானா. “

 

   தன் அக்காவிடம்வருகிறேன்என்ற பார்வையுடன்..

   தன்னவள் இருக்கும் கதிரவன் அறைக்குசெல்ல.. மற்றவர்களில்..

   யோகா.. ” வசுந்தரா உனக்கு ஆசிர்வாதம் செய்யும் போது தம்பதியரா இருக்க அண்ணா, அண்ணி ஆசிர்வாதம் செய்தா இன்னும் நல்லாயிருக்கும், அதுகூட அரசிய விட்டு உனக்கு ஆசிர்வாதம் செய்ய அவன் செய்ய விரும்பல. அதான் இப்ப பண்ணாத ரீசன்.

   எல்லாமே உங்ககிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது. உனக்கு வேண்டியதை எல்லாம் அவனாவே செய்தவன்.. முக்கியமான இதை பண்ணல அப்படினா ஏதோ ரீசன் இருக்கு என்று.. நீயாதான் புரிந்து கொண்டுயிருக்கனும்.. அப்ப தேவையில்லாத நீ யோசித்து.. பேசி.. இப்ப வேந்தன் என்ன சொல்லிட்டு போறான் பாரு.

    எல்லோர் முன்னாடியும் விருப்பியதை சொல்லியும் செய்ய மாட்டிங்களா என்று பல தடவை.. நீ அவனிடம் உடை, நகை என்று கேட்டு.. அதை வாங்கி போட்டுயிருக்க.

    இப்ப அவன் தன்விருப்பத்தை உன் கல்யாணத்திற்காக நீ விரும்பியதை சொல்லி கேட்டான். நீ நிறைவேற்றுகிறாயா என்று நாங்களும் பார்க்கிறோம். ” அவளை அழைத்து சொல்லும் வழியில் பேசிய படியே அனைவரும்சென்றனர்.

 

   அவர்களின் பின்னால் கடல்வண்ண ஊதாவும் பச்சையும் கலந்த சேலை அதற்கு சிவப்பு வண்ணம் அதில் பச்சைகலரில் நூல்வேலைபாடு செய்யப்பட்ட பிளவுஸ், எப்போதும் போடு செயின், தங்கஆரம், தோடு, அளவான ஒப்பனை.. 

    தன்னவளிற்கு தான் இல்லாத அந்த ஒருமாதமாக பூகொண்டு வந்த மலர்விழி அம்மாவை கொண்டு வரக்கூறி.. அவர் கொடுத்து சென்ற மூன்றுசரம் பூ என..

   தன் இடதுபக்கம் சிவப்பு வண்ண சட்டை, வேஷ்டி கட்டிய தன்னவன், வலது பக்கம் தன்துணையுடன் வரும் தோழி என முன்னால் சென்ற மணப்பெண்களுக்கு ஈடாக எழிலரசி அரசியாக உடன்சென்றாள்.

 

   தனுமாமாவுடன் இணையும்.. தங்கள் இல்லற வாழ்க்கையில் வசுந்தராவை போல் பல உறவுமுறையினரின் பேச்சுக்கள், குறைகள், நிறைகள், குற்றங்கள் என பலவற்றை கேட்டு.. மனதளவில் அவற்றை சமாளித்த படியே.. தன்னவனுடன் அழகான வாழ்க்கை வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

    அதற்கு இப்போது நடந்தது சாம்பிள் மட்டுமே.. என தன் தோழியுடன் இணைத்து பேசி.. நடந்ததை மறந்து.. மனதை தன்னவனிடம் திருப்பிவிட்டாள்.

   அவன் வந்தபோது அவனவள் தன்னவனைபுன்னகைக்கும் கண்கள் அதில் ஒன்றில் கண்ணடித்து.. ‘ நான் தெளித்து என் மன்னவனை மட்டும் நினைத்துக் கொண்டுயிருக்கிறேன் என்பதனை கூறிவிட்டாள். அவனும்.. இதழ், கழுத்தில்பார்வை செலுத்தி தன் மகிழ்வை கொண்டாடி தன்னவளை அழைத்து வந்தான்.

 

    கல்யாண மாப்பிள்ளைகள், பெண்கள்.. அவர்களின் பெற்றோர்களுடன்.. தேவகி வீட்டினுள் இருக்கும் பூஜை அறையில் சாமி கும்பிட்டு முடித்தபின் வெளியில் அழைத்து வந்து.. மீண்டும் நால்வர் மேடையில் வசுந்தரா, நந்தினி., தர்ஷினி, மேகா பெண்களும்..

    கமலேஷ், அஸ்வின்., கதிரவன், பார்த்திபன் என அமர வைக்கப்பட்டு தாய்மாமா முறையினர் அவர்களுக்கு சிறியரோஜாவினால் கட்டிய பூமாலை அணிவித்து வசுந்தரா, நந்தினி என இருவர் இருவராக..  தாய்மாமா, அத்தைமுறையில் உறவினர்கள் அனைவரும் சீர்வைத்தனர்.

    அதில் வேந்தன், தனக்கும், எழிலரசிக்கு எதுவும் செய்யக்கூடாது என கூறிவிட்டதால்.. இருவருக்கும் சேர்த்து அனைவருக்கும் மிகசிறப்பாக கூடவே சிலர் வேந்தனை முறைத்து செய்தனர்.

 

   தனு ஏன் உன்னைய சுரபி அண்ணி, யோகா அண்ணி இப்படி ஒருசிலர் முறைக்கிறாங்க?. ”

   என் முயல்குட்டிக்கும் எனக்கும் யாரையும் எதுவும் செய்யகூடாதுனு சொல்லிட்டேன்ல. அதான் பாசமா பார்க்குறாங்க. ”

   .. ம்.. அப்ப தனுமாமாவிற்கு பண்ண எனக்காகவது அனுமதி உண்டா?. ” புருவம் உயர்த்திகேட்க..

    ” ஓய்.. நீ தானேடி எனக்கு தேவையான அனைத்தும் வாங்கி கொடுத்த. “  அனைத்தும் என்றதில் அழுத்தம் கொடுக்க..

   அவனை முறைத்து.. மெல்லிய குரலில்நீங்க வாங்கி கொடுத்திங்க.. அதனால நான் வாங்கி கொடுத்தேன். கணக்கு சரியா வரவேண்டாமா. ” மெல்லிய புன்னகையுடன் கூற..

 

   அடிபாவிஎன்ற லுக் அவள் முன்னால் அமர்ந்து இருந்த சத்யாவிடம் இருந்து வர.. அதனை பார்த்து.. புன்னகையுடன்.. ” தனு.. சத்யா என்னமோ நினைத்து முறைக்கிறா. நாம்ம இரண்டுபேரும் ரொம்ப நல்லபசங்கனு கூப்பிட்டு சொல்லவா?. “

 

  அதே புன்னகையுடன்நம்புவானு நினைக்கிற. ”

   அவன் முன்னால் இருந்த திலகன்.. ” இந்த விஷயத்தில் மட்டும் நீங்க சத்தியம் செய்தாகூட தியா நம்பமாட்டா. அதிலும் இவனை ம்ஹூம்.. இவன் முதலில் உன்னைய படியில் தூக்கிபோனதை பார்த்துட்டு.. பின் வெளிய வரும்வரை இரண்டு பாட்டில் தண்ணீர் குடித்தா. அவ்வளவு நேரம் உள்ள இருந்தீங்க. அப்ப இவன் சும்மா பேசிட்டு மட்டும் இருந்தானு மட்டும் சொல்லாதா. ”

  அன்று நடந்ததை எண்ணி.. புன்னகையுடன்.. ” டேய் அவ அண்ணா மாதிரி பேசுடா. ”

   ஆமாம் டா. அண்ணா முன்னாடி கதவை சாத்தினவன்டா நீ. ”

   சத்யா.. திலகனை அடித்து.. புன்னகையுடன்.. ” ம்.. அப்ப அண்ணா ரொம்ப நேரம் பேசிட்டு மட்டும் வந்ததாலதான்.. நீங்க என்கூட பேச வாய்ப்பு கிடைத்தது. அதனால அவங்க என்ன சொன்னாலும் நம்புங்க. ” நக்கலாக கூற..

   ம்.. தியா சொல்வதால போனாபோது என்று..  நீங்க சிலவிஷயத்தில் மட்டும் நல்ல பசங்கனு நம்புறோம். “

    நெஞ்சில் கைவைத்து நன்றி!. தெரிவித்து.. மீண்டும் தன்னவனைகேட்ட கேள்விக்குபதில்?. ‘ என பார்த்தாள்.

   ம்.. நான் உனக்கு என்ன பண்ணுவேனு சொல்லிட்டேன். எனக்கு எப்படி பண்ணவேண்டும் நீ நினைப்பதை பண்ணு. ” புன்னகையுடன் சரி என தலையசைக்க..

 

   அங்கு அனைவருக்கும் சீர்கொடுத்து முடித்து.. அவர்கள் எல்லோர் முன் விழுந்து எழுந்தார்கள். அதனை சிலர் மகிழ்வுடன் சிலர் புன்னகையுடன் ஆசிர்வதித்து பூ தூவ.. சிலர் இனி தன் மகன், மகள் என்ற உரிமை இல்லை மற்றொரு வீட்டின் மருமகன், மருமகளா இருக்குக போகிறார்கள்.. என்ற மகிழ்வும் தங்களின் உரிமை பாதி குறைந்துவிடும் என்ற வருத்தம் கலந்த புன்னகை பார்வையுடன் பூ தூவினர்.

 

   பின் நாலு ஜோடிகளுடன் நாலு பேர் மட்டும் சாப்பிட்டாமல் இருந்தனர். ஜோடிகளுக்கு மட்டும்தனியாக சமைத்து சாமிமுன் படைக்க பட்ட உணவை ஜோடிகளும் நால்வரும் சாப்பிட்டனர். கதிரவன் திலகன் அருகில் அமர்ந்திருந்தான்.

 

  தேங்கஸ் அண்ணா. ” திலகன் தர்ஷினி கழுத்தில் இருந்த ஆரத்தை பார்த்தான்.

  ” ம்.. என்னடா இப்பவே போட சொல்லிட்ட. ”

   புன்னகையுடன்.. ” வேந்தன் அண்ணாகிட்ட இருந்து கொஞ்சம் எனக்கும் ஒட்டிகிச்சு. பிரியா மண்டபத்திற்கு போகும்போது நான் வாங்கி கொடுத்த சேலை, நகை போட்டு போகனும் நினைத்து இப்பவே போடசொல்லிட்டேன். 

  புன்னகையுடன்.. ” .. இது தர்ஷினிக்கு தெரியுமா?. ”

  ‘ தெரியும்என புன்னகையுடன் தலையசைத்து.. இருவரும் சாப்பாட்டை தொடந்தனர்.

   மற்றவர்களில்.. அறையில் நடந்ததை கதிரவன் மற்ற மூவரிடமும் கூறியிருந்தான். கல்யாணத்தில் இதுபோலான விஷயங்கள் நடக்கும்.. ஆனால் இந்த கோபத்தை வேந்தனிடம் காட்டயிருக்க வேண்டும்.. எழிலரசியை  வேண்டும் என்றே திருப்ப திருப்ப குற்றசாட்டியதில் அஸ்வின்,பார்த்திபனிற்கு கோபம் வரதான் செய்தது.

   பின் சிலநிமிடத்தில் மனம்திறந்த புன்னகையுடன் வேந்தனிடம் பேசுவதை பார்த்ததும் உறவுகளை சமாளிக்கும் நிலைக்கு வந்துவிட்டாள் என புரிந்து நிம்மதி அடைந்தனர்.

   கமலேஷ் வசு தன்னிடம் வந்தால் பேசிக்கொள்ளலாம் என இதை பற்றி கேட்கவே இல்லை. சாதாரண புன்னகையுடன் பார்த்தான் அவ்வளவே. அதில் இருந்தே வசுவிற்கு புரிந்தது அவனுக்கு தெரியும் என்று. அவளும் பதில் புன்னகையுடன் முடித்துக் கொண்டாள்.

    முதலில் பெண்கள் செல்வதற்கான ஏற்பாடு செய்யபட்டு இருக்க.. நால்வரில் மூவர் ஏற்கனவே தங்கள் வீட்டில் கிளம்பும்போதே சற்று கலங்கி.. இப்போது சமநிலையில் இருப்பதால்.. மேகா மட்டும் கண்கலங்கினாள். அதுவும் நான்கு ஆண்களில் ஒரு பெண் என்பதால் சற்று கூறுதல் கண்ணீர். பின் அவளை ஆறுதல்படுத்த சற்று நேரம் எடுத்தது.

 

   பெண்கள் இருவர், இருவர்.. தன் பெற்றோர் மாமா, அத்தைகள்.. அடுத்த அரைமணி நேரத்தில் ஆண்களும் இருவர் இருவர் தன் உறவினர்களுடன் என அலங்காரம் செய்யப்பட்ட SUV காரில் சென்றனர். வீட்டில் இருவர் இருப்பதால் மீதம் இருப்போர் அனைவர், அனைவரின் உடைகள் என இரு வேனிலும் கிளம்பினர்.

 

   வேந்தன் , எழிலரசி, இன்பா, சத்யா, திலகன் எழிலரசி கால் அடிப்பட்ட ஒருமாதத்திற்கு மேலான நாட்களுக்கு பின்.. BMW காரை செலுத்தினாள். அதனால் அவர்களின் காரும் சிறிய வெள்ளை , சிவப்புநிற பூக்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. எழிலரசி தன்னவனின் செயலில் துள்ளலுடன் காரை மெதுவாக ஓட்டிச்சென்றாள்.

   அதனால் கடுப்பாகி பின்னால் அமர்ந்திருந்த திலகன்.. ” வேந்தா நானும் சத்யாவும் நடத்தே மண்டபம் வரலாம் நினைக்கிறோம். ” என எழிலரசி கடுப்பேற்றி.. வேந்தனை முறைத்து சற்று மட்டும் வேகமெத்து ஒட்டி.. காரைக்குடி போகும் வழியில் இருந்த மண்டபத்தை அடைத்தனர்.

 

     மாலை 6.30மணி..  நாலு ஜோடிகளின் நிச்சியம், ரிசெப்ஷன் என்பதால் மண்டபத்தின் வெளி அலங்காரமே உள்ளே எப்படி இருக்கும்?.!. என்ற ஆவலை!. கொடுக்கும் அளவிற்கு வண்ணமயமாய் இருந்தது.

   வாரநாள் மற்றும் முகூர்த்தநாள் கிடையாது என்பதால் தீடிர் கல்யாணத்திற்கு அவர்களுக்கு ஏற்றார் போலான பெரிய மண்டபம் கிடைக்க..

    நாலு ஜோடிகளுக்கும் அவர்களின் விருப்பத்திற்கும், உடைக்கு ஏற்றார் போல் நான்கு  மேடைகள் அமைத்து.. ஓவ்வொரு மேடைக்கு இடையில் மட்டும் திரையிருந்தது. இதனால் ஒருஜோடிக்கான மேடை போன்ற அமைப்பு. இதனை வேந்தன், எழிலரசி, இன்பா தவிர யாரும் எதிர்பார்க்கவில்லை.

 

   

  

  

   

  

   

  

   

   

   

    

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!