Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 40.4

 

நாம் 40(4)

 

   நேற்றே உடல் குளிர்ச்சியாக இருந்ததை உணர்ந்தவன்.. இரவு படுக்க வைக்கமுன் உடல்நிலையை மாற்றத்தை கவனிக்காமல் விட்ட தன் கவனகுறைவை நினைத்து வருந்துவான்என அவனை பற்றி அறிந்தவளுக்கு நொடியில் அது புரிந்தவுடன் தன்னவனிற்கு ஆழ்ந்தமுத்தம் கொடுக்க.. அவளின் தனுமாமா வெளிவந்து அவளை அந்நிலைக்கு ஏற்ற மென்மையான நீண்ட இதழ்முத்தம் கொடுக்க.. அது அவளின் உடலை என்னவோ செய்து அவனிடம் வேறு எதுவே வேண்ட.. அவளின் கைகள் அவன் கழுத்தையும் முதுகையும் அழுத்தியதில் அவன் அவள் வேண்டுதலை உணர்ந்தான். அடுத்த நொடி அவளை தன்னில் இருந்து மெதுவாக பிரித்தான்.



Advertisement

  முயல்குட்டி காவ்யா அண்ணி வந்தாங்க. நாம்ம கிளம்பிய பின் கால் செய்யுறேனு சொன்னேன். நீ போய் மேலுக்கு மட்டும் ஊற்றிவா. நான் தலைகுளித்து பொங்கல் வைக்கிறேன். ” அவளிற்கு வந்த உணர்வே தெரியதா அளவிற்கு.. அவன் வேகமாக கூறி முடிந்தான்.

   அவளும் அவன் எண்ணியது போலவே தன் காய்ச்சலை கூட மறந்து.. ” தனு புரிந்துதான் பேசுறீங்கறானு.. எல்லோர் முன்ன நீங்க செய்தா நம்ம வீட்டில் இருப்பவங்க சடங்கடபடுவாங்க. ” அவன் அவளை திட்டவர..

   ” தனு இந்த மாதிரி பங்ஷன் நேரத்தில் உடம்பு முடியாம போயி.. அதை நான் சமாளிக்க பழகிக்கிறேன். ”

Advertisement

    ஏன்டி.. அதற்கு என்ன அவசியம்?. ‘ என தன்னவளை முறைக்க..

Advertisement

   மெல்லிய புன்னகையுடன்.. ” ம்.. குழந்தைங்க வேண்டும் மட்டும் நினைத்து அதற்கு உண்டான ஏற்பாடு மட்டும் யோசித்து.. நடைமுறைபடுத்தினா பத்தாது தனுமாமா. அப்ப என் உடல்நிலையில் ஏற்படும் மாற்றத்தை இதேபோலான  ஏதாவது பங்ஷன் நேரத்தில் நான் சமாளித்து.. எல்லாவற்றையும்.. எல்லோர் கூடவும் ஒன்னா இருந்து எல்லாம் செய்ய வேண்டாமா?. “

 

  அவளின் நெற்றி முட்டி.. ” முயல்குட்டி இப்பவே இப்படி இருக்கவன்.. வந்த பின்னாடி?. ” அவன்கூற..

Advertisement

   அவனின் கைமேல் கண்ணீர் சொட்டு விழ.. பதறி அவளை நிமிர்த்தியவன்.. நேற்று குளியல் அறையில் பார்த்த அதே முகம்.. ” தனு நீங்க அதிக அக்கறை, உரிமை உணர்வு காட்ட காட்ட வசு மாதிரி சிலர் நேரடியா.. சிலர் மறைமுகமாக.. ” கூறமுடியாமல்.. ” மாதிரி இருக்கு தனு. நமக்கு ஆசிர்வாதம் இல்லாடியும் பரவாயில்ல. ஆனா.. ”

   தான் கூறிய வார்த்தை அரசிக்கு வசு கூறியதை நினைத்து தான் அந்நேரத்தில் வருந்தியதை கூறுகிறாள் என புரிய.. ‘

    அவளின் இதழ்மேல் விரல் வைத்து.. ” எனக்கு நீ வருத்தப்படுவது புரியுதுடி. சிலது சிலருக்கு என்ன விளக்கம் கொடுத்தாலும்.. அவங்களுக்கு மனசு!. அதை ஏற்க மறுக்கதான் செய்யும். அந்த மாதிரி இருப்பவர்களுக்காக நான் என்னைக்கும் என் முடிவ மாற்றிக்க மாட்டேன். ஆனா என் முயல்குட்டி ஆசைபட்டா எதையும் ஒருநொடியில் மாற்றிக்கொள்வேன். அவ இப்பவே பழக ஆசைபடுற. நானும் அவகூட இருந்து அதை பழகிறேன். ” முகத்திற்கு முத்தம் கொடுத்து கூறி..

   பொங்கல் வைப்பதால் நீ தலை குளிக்க வேண்டானுதான்.. நான் வைக்கிறேனு சொன்னேன். ஆனா முயல்குட்டி வைப்பேனு அடம்பிடிக்கிறா.. அதனால முதலில் உடம்பு குளித்து முடித்து.. கடைசியா தலைநனையும் படியா கையை வைத்து தண்ணீர் மட்டும் ஊற்றிகோ. சரியா. ” சரி என கன்னத்தில் இதழ்பதித்தாள்.

   சொல்லமுடியாத அந்த உணர்வை நினைத்து இருவருக்கும் சிரிப்புவர.. ” முயல்குட்டி ஏற்கனவே.. நான் குழந்தை விருப்பம் பற்றிகூறி  உன் கூட இருக்கும் போது என்னைய ஒருலுக்கா பார்ப்பாங்க. இது பற்றி சொன்னா?  ”

  புன்னகையுடன்.. ” நாம்ம நாம் ஆக மாற்றிடோனு முடிவு பண்ணிடுவாங்க. ” அவனை பார்க்க முடியாமல் கட்டிக்கொண்டு கூற..

   அவளை நிமிர்த்தி.. ” ம்.. நாம்ம உடலால் மட்டும்தான்டி மாறல. அப்படி மாறா சில நிமிடங்கள் போதும்டி. ஆனா மனதால் இணையதான் வருடங்கள் ஆகும். அப்படி பார்த்தா நாம்ம கணவன், மனைவியா நாம் ஆக மாறி பல வருடங்கள் ஆச்சு. ” இதழில் இதழ்பதித்து.. அவளை மெத்தையில் உட்கார வைத்தான்.

 

   அரசிக்கு தேவையானதை எடுத்து வைத்து.. அவனே கூந்தலை மடித்து கிளிப் போட்டுவிட்டு.. சுடுநீர் நிரப்பி.. மீண்டும் ஒருமுறை கூறி.. அவளை அனுப்பிவிட்டு.. சாருலதாவை அழைத்து உடன் இருக்க கூறி..  அவன் அவர்கள் இருந்த அறைக்கு சென்று வரும்போது அவள் புடவை உடுத்த ஆரம்பித்து இருக்க.. வெளியே காத்திருந்தவன் மண்டபத்தில் நடப்பவைகளை கவனித்துவிட்டு.. பெரியம்மாவிற்கு கால் செய்து வரும் நேரத்தை கேட்டு முடிக்க.. சாருலதா தன் அறைக்கு செல்வதை பார்த்தான்.

   உள்ளே வந்தவன் அரசி தான் எடுத்து வைத்த சாப்ட்சில்க் புடவை அணியாமல்.. இக்கல்யாணத்திற்கு என்று எடுத்த பட்டுபுடவை அணிந்துயிருப்பதை பார்த்து முறைக்க..

   புன்னகையுடன்.. ” டிரைனிங் தனுமாமா. ”

    கள்ளபுன்னகையுடன்.. ” .. அப்ப வேற ஒன்னுக்கு டிரைனிங் வைக்கலாம் போலவே. ” வேஷ்டியை மடித்து அவளை சுவரில் சாய்ந்து கூற.. ” ம்.. வைக்கலாம் தான் ஆனா நேரம் பத்தாதே. ” அவனின் துளைக்கும் பார்வையில் வந்த நாணத்தை மறைத்து.. பாவமாக கூற..

   கேடி முயல்குட்டி நீ நினைப்பதற்கு தான் நேரம் வேண்டும். நான் நினைப்பதற்கு நொடிபோதும்டி. ”

   அருகில் இருந்த சேரில் அவன் அமர்ந்து.. தன்முன் அவளை இடைபிடித்து நிற்கவைத்து.. அவளின் சேலையின் கடைசி ஒருமடிப்பின் மேலே  அவளின் வயிற்றில் குழந்தை இருப்பதுபோலான உணர்வில்.. ஆழ்ந்த இருமுத்தம் பதிக்க. அவனின் இதழ் வெப்பம் நேரடியாக கொடுத்த உணர்வை கொடுக்க.. அவளின் கைகள் தன்னவன் தலைபிடிக்க வரும்போது.. அவளவன் அதை உணர்ந்து தலையை நிமிர்த்திவிட்டான். இருவருக்கும் புதுஉணர்வு.

   அவளிற்கு நெற்றியில் மென்முத்தம் பதித்து.. ” இரண்டு இரவிற்கு பிறகே இதுக்கு மட்டும் டிரையல் பார்த்து இருக்கலாம் போலடி. ”

   தன்னவனின் சிவந்த கன்னத்தை பிடித்திழுத்து.. முத்தமிட்டு.. ” ம்.. ரொம்ப லேட்டா சொல்லுற தனுமாமா. ”

   அவளை செல்லமாக முறைத்து.. சாரு காயவைத்துயிருந்த கூந்தலை தளர்வாக பின்னல் போட்டு.. பூ வைத்து.. நகைகளை அணிவித்தான். அனைத்தும் முடித்து.. ‘ இருவரும் சரியாக இருக்கிறோம் மா?. ‘ என தங்களை மாறிமாறி பார்க்க ஆரம்பித்தனர்.

 

    பட்டு வேஷ்டி மற்றும் முழுங்கைவரை கைமடித்த சைஸ்காலர் வைத்த நாவல்பழம்நிற சட்டை, அளவான நகை என அவளின் தனுமாமாவும்.. அடர்ரோஜோ வண்ணம் உடல்முழுவதும் பொட்டுவைத்தார் போன்ற டிசைன். அதற்கு நாவல்பழநிறத்தில் பிளவுஸ். அதே வண்ணம்பாடர்அதில் தங்கநிறசரிகை.

   தங்கமும், எமராலட் கற்கள் பதித்த மார்புவரை மட்டும் இருக்ககூடியஅகலமான ஆரம், ஜிமிக்கி மற்றும் மாட்டல். தங்கம், கல்வளையல்களின் நடுவே கண்ணாடிவளையல். அளவான மேக்கப் என அவனின் அரசியும் இருந்தாள்.

   அவனவளின்  சேலை பாடர் பெரியதாக இருக்க.. பிளவுஸ் கையில் அதை மட்டும் வைத்து.. பின்பக்கத்திற்கு மட்டும் ஆரி வேலைபாடு செய்யப்பட்டுயிருந்தது. அன்று போல இன்றும் அவளின் நாட் லூசாக இருக்க.. அவள் கண்களை பார்த்துவிட்டு அவனின் மச்சத்தில் முத்தம் பதித்து அவளின் சிலிர்த்து எழுந்த பூனைமுடிகளை கண்களால் ரசித்த வண்ணம்.. முடிச்சை இறுக்க கட்டி கூந்தலை பின்பக்கம்  கொண்டுவந்தான். அவளிற்கு உடல்வெப்பநிலை பார்த்து பல அறிவுரை கூற.. அவளும் ஒவ்வொன்றிக்கும் முத்தங்களால் பதில் கொடுத்து இப்போது அவனை ஒருவழியாக்கி.. ‘ போடிஎன அவளை அமர வைத்துவிட்டான்.

   பின் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு.. இருவரும் கிளம்பியபிறகு அங்கு ஆரம்பிக்க போறாதா?. என கேட்டுவிட்டு மண்டபத்தின் ஒருபகுதியில் இதற்கு என்று அமைக்கபட்ட இடத்திற்கு வந்தனர். அங்கேயே முக்கிய உறவினர்கள் அனைவரும் இருந்தனர்.

 

   தனு எல்லாம் இருப்பாங்க போல.. ” ஆம் என தலையசைத்து அவர்களை பார்த்தான். பெரியவர்களில் ஒருசிலர் இங்கு இருக்க.. அனைவரும் ஒன்றுபோலான அடர்பச்சை அதன்மேல்உடல்முழுவதும் மஞ்சள் மற்றும் சில்வர்நிற கோடு டிசைன்.. பாடர் அடர்ரோஜா வண்ணம் தங்கநிறசரிகை. பிளவுஸ் அதே வண்ண சேலையும்.. 

   இளையவர்கள் சிவப்பு, மெரூன், பச்சை போன்று.. யோகாவை பார்த்து புரிந்ததில் அவர்களின் கல்யாண புடவையில் இருந்தனர். சாருலதா கிளிப்பச்சை நிறம்சேலை அதற்கு கத்தரிப்பூ பிளவுஸ் அணிந்து எல்லோருக்கும் ஜீஸ் கொடுத்து கொண்டுயிருந்தாள். இவர்களை பார்த்தும் புன்னகையுடன் அதை நீட்ட அவனிற்கு மட்டும் எடுத்தான்.

 

    அவள் சென்றதும்  எதுக்குடி கிள்ளுற ?. நீ அங்க தனியா போகவேண்டானு தான் நான் உன் கையை பிடித்துயிருக்கேன். ” கோபம் போல கூற.. அவனை முறைப்புடன் அழுத்த கிள்ளிவிட்டு இருவரும் காவ்யாவிடம் செல்ல..

   வந்தவர்களை பார்த்து.. ” எழிலரசி நான் பொங்கல் பானையில் போடுவதை போட்டுவிட்டேன். பசங்கள மாமா ரெடி செய்தாரனு பார்த்துட்டு அவங்களோட சாப்பிட போறேன். நீ அப்பப்ப பார்த்து கிளறிவிட்டு.. சரியா பார்த்து இறக்கி வைச்சுடு. ” அவள் சரி என தலையசைக்க..

   ” அண்ணி எவ்வளவுநேரம் ஆகும்?. ”

   அவனை முறைத்து.. ” அத அந்த அரிசிக்கிட்ட தான் கேட்கனும். ” புரியாமல் முழிக்க.. தன்தனுவை பார்த்து சிரித்துவிட்டு.. காவ்யாவை பார்த்தவள்.. ” நீ போங்க அக்கா. நாங்க பார்த்து  இறக்கிவச்சு விடுகிறோம். ”

   ம்.. எழில் மூனு வைப்பதற்கு பதில ஒன்னுதான் வைக்கிறோம். அதனால இங்கேயே இருந்து பார்த்துக்கோங்க. ” வேந்தன் ஏதோ கூற..

   ” அண்ணி பானைய அடுப்பில் வைத்துவிட்டீங்கள.. நீங்கபோங்க.. நாங்க பார்த்துக்கொள்கிறோம். “

 

  ‘ ம் ‘ என தலையசைத்து.. ‘ முடியல இன்னும் மூன்று நாட்கள் எப்பாடா முடியும்? ‘ என எண்ணி சென்றாள்.

    காவ்யாவின் தம்பி திருமணம் உறுதியாகி அதை நினைத்து சந்தோஷம் படக்கூட முடியாமல்.. உறுதி முடிந்ததில் இருந்து நந்தினி, அஸ்வின் கல்யாணம்.. 

   வேந்தனின் காதல், வேலை, கம்பெனி என அறிந்தது..

   ஐந்து கல்யாணம் உறுதியாகிய உடனே தன்னை இரண்டுவாரம் விடுப்பு எடு என.. ஈஸ்வர் அன்று தனக்கும், தம்பிக்கும் கட்டளை இட ஆரம்பித்தது. இப்போது வரை தொடர்கிறது.

   வேலை, வேலை.. வேந்தன் இல்லாத இத்தனை வருடத்திற்கும் சேர்த்து அவனிற்காக எல்லோரும் வேலை செய்கிறார்கள்.

   தூக்கம் என்பது ஐந்து மணிநேரம் தான். அதுவும் குழந்தைகள் இருப்பதால் தான். ஈஸ்வர் போல் இருப்பவர்களுக்கு கல்யாணம் வேலை, கடைவேலை என தூக்க நேரம் இன்னும் குறைவு.

   வேந்தனை கூறியது போல் ஆட்கள் பொறுப்பில் கொடுக்க மனசு ஒப்பவில்லை. அவன் ஆரம்பித்தில் இருந்தே அதற்கு பழகிவிட்டதால் அவர்கள் மூலமாக இரண்டு கடை பொறுப்பையும் வழிநடத்த.. ஒரு போன்கால்.. ஒருமுறை பார்ப்பதில் முடிகிறது.

   இவர்களுக்கு எழிலரசி போல.. உடன் இருந்து கண்களால் அனைத்தும் பார்த்து, கேட்டால் ஒழிய திருப்தி இல்லை. இதனால் காவ்யா ஈஸ்வர் பார்வை மட்டுமே. அதற்கும் சில நேரம் பஞ்சம்தான்.

   ஆனால் இந்நாட்களில் நல்லது ஒன்று நடந்தது.. கணவன் குடும்பத்தின் சொத்து பற்றி கேட்டது. நகை வாங்கி தருவதாக கூறியதில் அன்று கோபத்தில் இருந்ததாலும்..

    கணேஷ், நந்தினி ஒரு குடும்பத்தை, கல்யாணத்தை நிறுத்த நினைத்தவர்கள் முன்.. தான் தன் குடும்பத்துடன் ஒன்றாக இருக்க வேண்டும்.. தான் உயர்வாக இருக்க வேண்டும் என்பது சாதாரணமாக எல்லோருக்கும் இருக்கும் என்று.. அதை அப்படியே மறந்து.. சொன்ன நகையை வித்யாவிற்கு கொடுங்கள் என கூறி.. கல்யாணத்திற்கு பத்திரிக்கை வைக்க திருச்சி சென்றபோது அவனே நகைவாங்கி வந்தான்.

   வேந்தனை பற்றி தெரிந்ததில் ஆரம்பத்தில் இருந்து ஆச்சிரியம் தான். லைட்டா எழிலரசி மீது பொறாமையும் கூட. இப்போது காலைகூட அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை. அதிலும் அவன் கழுத்தில் இருந்த சிவப்பு பொட்டு.. ஒருநொடி அவளை ஆடவைத்தது. பின் நம்ம முன்னாடியே தைரியமா ரூம்மிற்கு தூக்கிட்டுபோவான். மூனுவாரம் ஒரே ரூம்மில் இருந்தாங்க. இங்க ஒரு நைடில் ஏதும் இருக்காது என எண்ணி.. வந்த விஷயம் கூறி சென்றுவிட..

   அங்கு சாந்தியும், சித்ராவும்  பொங்கல் வைக்க பல அறிவுரை கூறி அனுப்ப.. இப்போது எழிலரசி உடன் வந்து..  வேகும் நேரம் கேட்டதில் கடுப்பாகி எல்லோரையும் அரசிக்கு அரசிக்கு கடுப்போற்றினான். அரிசிக்கிட்ட போய் கேட்க கூறி புன்னகையும், எப்படா எல்லோர் கல்யாணம் முடியும் என்ற நிலையில் தன் குடும்பத்தை பார்க்க சென்றாள்.

 

   நாலு ஜோடிக்கும் குலதெய்வத்தை வேண்டி பொங்கல் வைத்து படைக்க வேண்டும். அதனால் மகள், மகனினாக அம்மா, அவ்வீட்டின் மருமகள்கள் பொங்கல் வைக்கிறார்கள்.

   வசுந்தராவிற்கு  செய்யும் பொங்கலில் வேந்தன், எழிலரசி ஜோடியாக செய்கிறோம் என்றதால் அவளையும் வரக்கூறி இருக்க.. இப்போது காவ்யா வைத்து சென்ற பின்.. தன் உடல்நிலையை மறைத்து, மறந்து அக்கா, அண்ணி, அத்தை, சித்திகள் மற்றும் தன் தனுமாமாவுடன் நின்று தேவையான போது.. சொன்ன வேலையை செய்தபடி அவர்களுடன் கதை அளக்க ஆரம்பித்தாள்.

 

   வேந்தன் யோகா அண்ணி.. காவ்யா அக்காவிற்கு சொன்னதுதான்.. உங்களுக்கும். நாங்க பார்த்துக் கொள்ளுகிறோம். நீங்க போய் கமலேஷ்கூட இருங்க. ”

   இளமதி.. அண்ணா, மாமாவெல்லாம் எங்க இருக்காங்க?. ”

   நாங்க இங்க இருப்பதால பசங்களோட இருக்காங்க. “

 

    புன்னகையுடன்.. ” ம்.. நானும் அதுமாதிரிஅரசியை தோள் அணைக்கபோக..

    அவன் கூற வருவதை புரிந்த சுரபி புன்னகையுடன்.. ” உங்க அரசி..  உங்க குழந்தை மாதிரினு சொல்லவரீங்களா?. ” வேறு ஒன்றை கூறமுடியாமல் இருவரும் புன்னகை மட்டும் புரிய..

 

   அவன் அருகில் வந்த சுரபி மெல்லிய குரலில்.. ” அண்ணா.. உங்க அன்பை இன்னும் இரண்டுநாள் அடக்கி.. பத்திரபடுத்தி வைங்க. இங்க சித்தியோட நாத்தனர்கள் இருக்காங்க. அவங்களுக்கு எல்லாம்.. நீங்க குடும்பத்தில் பார்த்து வைத்த மாப்பிள்ளைதான். நேற்று நீங்க ஊட்டிவிட்டத அவங்கதான் பார்த்து சொன்னது. ”

   .. நினைத்து ராதாவுடன் இருந்தவர்களை பார்த்துவிட்டு.. ” ம்..நான் அவங்கள பார்த்துடேன். இனி பார்த்து நடந்து கொள்கிறேன். ” மெல்லிய புன்னகையுடன் கூற..

 

   கடவுளேதர்ஷினி அம்மா சித்தியுடன் பேசிக் கொண்டுயிருந்த எழிலரசியை ஒரு பார்வை பார்த்து.. பின் இளமதி.. ” வேந்தன் அவங்க எல்லாம்..  மேகா இன்பாவை கல்யாணம் செய்யாம.. மாத சம்பளம் வாங்கும் பார்த்திபனை செய்ய போவதற்கு. அஸ்வினுக்கு அவங்க குடும்பத்தில் இருக்க பொண்ணுங்களை பார்க்கலாம் என்று இருந்தாங்க..

   நந்தினி அவனை விரும்ப.. அவங்க தெரியாம கல்யாண பண்ண காரணமே எழிலரசிதான் காரணம் என்று அவளை மறைமுகமாக திட்டி.. கொஞ்சம் சமாதானம் ஆகியிருக்க அத்தைங்க இரண்டுபேரையும் குழப்பி.. “

 

   கையை பாதி உயரத்தில் வைத்து நிறுத்துங்க!. என சைகை செய்து..

   ” இளமதி.. ஆள் ஆளுக்கு பண்ணுற தப்பு எல்லாவற்றிக்கும்.. அரசிய காரணம் சொல்லுறாங்க.. அதை கேட்டு எங்கள அமைதியா இருங்கனு சொல்லி.. அவங்கள விட நீங்கதான் தப்பு பண்ணுறீங்க.உங்க அத்தைங்க அவங்க பார்வையில்.. அரசி மேல கோபப்பட்டு பேசினா.. அதை சமாளிக்க அவளுக்கு தெரியும். முடியலையா நான் பார்த்துபேன்.

 

   நான்..  அவ சின்னவயதில் இருந்து.. இதுவரை கூட இருந்து பார்க்க வேண்டிய பல நிகழ்வுகளை மிஸ் பண்ண வரைக்கும் போது. இப்ப அவகூட இருப்பதை மற்றவங்க பார்ப்பாங்க.. கேட்பாங்கனு என்பதற்காக.. திரும்ப கிடைக்காத தருணத்தை இப்ப நான் இழக்க விரும்பல. “

 

   அவன் கூறுவதை மறுத்து பேச காரணம் இல்லாததால்.. ” ம்.. சரி வேந்தன். எழிலரசி பற்றி இப்படி நினைக்குறாங்க. உங்க முன்னாடியே இதை பற்றிய பேச்சுகள், பிரச்சனைகள்.. இப்ப உடனேவும் வரும்.. உங்க கல்யாணம் முடிந்தும் வரும். உங்ககிட்ட கூறி உங்களை பார்த்து இருந்துக்கோங்கனு கூற நினைத்து தான் நாங்க சொன்னது. “

 

   இளமதி ஒருவர் கிட்ட இருந்து நமக்கு பிடிக்காத விஷயம் வரும்போது.. அவர்களை குறை கூறி பேசி முடிக்க.. அதற்கு நேரமும், கால அளவே இல்ல.. அடுத்தடுத்துனு தொடந்து வந்துகொண்டே தான் இருக்கும். “மெல்லிய புன்னகையுடன் தன்அரசியை பற்றிய பேச்சுக்கள் போதும் என கூறுவதுபோல இவற்றை பற்றி பேசி முடித்து..

 

   அடுத்தடுத்து வேறு விஷயங்கள் பேசிய படி.. பொங்கல் தயார் ஆனதும்.. குலதெய்வத்தை வேண்டி அரசியின் கையால் கொண்டுவந்து வசுந்தராவின் மணபந்தலில் வைத்தார்கள். மற்றவர்களும் உரிய மணபந்தலில் வைத்தார்கள்.

    வைத்துவிட்டு வந்தவர்கள் அங்கு இருந்த சேர்களில் அமர்ந்து திருமணத்திற்கு ஏற்றார்போல் தயாராகி இருந்த நாலு மணமேடைகளையும்.. இன்னும் சில நிமிடங்களில் திருமண சடங்குகள்ஆரம்பிக்க படுவதற்காக அனைத்து அறிகுறிகளும் தெரிந்தன. அதனால் அவர்களும்.. வந்திருந்த இன்னும் சில உறவினர்களுடன் சாப்பிட சென்றனர். வேந்தன் எழிலரசி மட்டும் தர்ஷினி அறைக்குசெல்ல..

 

    அங்கே நாலு திருமண ஜோடிகள் மற்றும் மூன்று பெண்களின் தாய்மார்களும், எழிலரசி அம்மா லட்சுமியும் இருந்தார். பெண்களும் அன்னைமார்களும் எதிர்எதிராக இருகட்டிலில் நால்வர், நால்வர் எனவும்.. ஆண்களுக்கு இருவர் இருவர் அமரக்கூடிய டேபிள் சேர் இருக்க அதில் அனைவரும் அமர்ந்துயிருந்தார்கள்.

   திருமணம் முன் ஒன்றாக சேர்ந்து சாப்பிடலாம் என ஆண்கள் அறை சிறியதாக, பெண்கள் மூவர் இருந்ததால்.. தர்ஷினி மட்டும் இருந்த அறையில் பொருட்கள் இல்லாமல் அதிகம் இடம் இருக்க அனைவரும் இங்கு வந்தார்கள்.

   சத்யா, திலகன் என மச்சான், நண்பர்கள் இங்கு இருப்பார்கள் என நினைத்து வர.. அவர்கள் அனைவரும் ஜோடிகள் உண்ணவேண்டும் என்பதால்.. இப்போது தான் உண்ண சென்றுயிருப்பது இவர்களுக்கு தெரியாது. இவர்கள் வருவது அவர்களுக்கு தெரியாது.

 

    வேந்தன் எழிலரசியை பார்த்ததும்.. புன்னகையுடன் ஆண்களும், தர்ஷினி, இரு அன்னைமார்கள் மட்டும் வரவேற்க.. அவர்கள் அமர சரியான இடம் இல்லாததால் கண்ணாடி அருகே இருவரும் நின்றனர். இதனை இப்போது மூவர் நக்கல்பார்வை மற்றும் புன்னகையை அடக்கியபடி பார்த்த அடுத்த நிமிடம் அவர்களின் அறையே பக்கத்து ஆண்கள் அறையில் இருந்து மாற ஆரம்பித்தது.

 

   நடுவில் இருந்த மடிக்கும் படியான சுவரை( foldable wall) மூவர் நகர்த்தி வைக்க.. அங்கு திருமணஏற்பாட்டார் வேந்தன், எழிலரசி முதல் அனைவருக்குமான உணவுடன் அங்கு இருந்தார். வேந்தனிடம் வந்தவர்..  சார் நீங்க சாப்பிட இவங்க பக்கத்தில் டேபிள் போட சொல்லவா? ” சரியாக அத்தம்மா லட்சுமி, தர்ஷினி அருகில் போடவா என கேட்க.. சரி என தலையசைத்தான். மற்றவர்கள் நடப்பதை வியப்புடன் பார்த்தனர்.

   பேசியவர் கண்ணசைவில் ஆண்கள் ரூம்பக்கமாக டேபிள் சேர் போட.. இருவருக்கும் உணவு வைத்து.. கூடவே எழிலரசிக்கு சூடுநீர் வைத்துவிட்டு சென்றனர். மற்றவர்களுக்கு வேறுசிலர் வைத்தும், கொடுத்தும் சென்றனர். ஆண்கள் சாப்பிட ஆரம்பிக்க.. அன்னைமார்கள் தங்கள் மகளுக்கு உணவை ஊட்ட ஆரம்பித்தனர். தர்ஷினிக்கு லட்சுமி ஊட்டியபடியே.. தன் மகளுக்கு ஊட்டும் வேந்தனை அவ்வப்போது பார்த்திருந்தார்.

    வேந்தன், எழிலரசிக்கு கூட நடந்ததை ஒருநொடி பார்த்து புரியாமல் இருந்தனர். பின்னர்தான் தங்களை.. தங்களுக்கு இடையூறு இல்லாத அளவிற்கு பாதுகாப்பு மற்றும் தேவைக்கு கூடவே ஆள் வந்து கொண்டுயிருக்கார்கள் என்று இருவருக்கும் புரிந்தது. பின்தான் இருவரும் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வேந்தன் ஊட்ட எழிலரசி சாப்பிட ஆரம்பித்தாள்.

 

   வேந்தன் தங்களை பார்க்கும் லட்சுமியிடம் மெல்லிய குரலில்.. ” அத்தம்மா அவ ஏற்கனவே கம்மியா சாப்பிடுறா. நீங்க.. ” முடிக்கும் முன்..

   லட்சுமி அவசரமாக அதேசமயம் புன்னகையுடன்.. ” நான் குட்டிம்மாவ பார்க்கல மாப்பிள்ள.. நீங்க ஏன் சாப்பிடலனு உங்களதான் பார்த்தேன். ”

   அனைவரும் இருப்பதால் மனதில்அனைவரும் இருக்கும் இந்த இடத்தில் எழிலரசிக்கு ஊட்டிவிடுகிறார் என்றால் காரணம் இல்லாமல் இருக்காது எழிலரசி உடலுக்கு ஏதோ?. ‘ என அவனை புரிந்து நினைத்தபடியே தன் மகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு தர்ஷினிக்கு ஊட்டினார். அவனும் சரி என தலையசைத்து தன் வேலையை தொடர்ந்தான்.

    இவர்களின் வருகை ஆண்களுக்கும், தர்ஷினிக்கும் காரணம் இருப்பதால் தங்களை பார்த்தும் போகாமல் உள்ளே வந்துயிருக்கிறான்.. மற்றவர்களுக்கு இவர்களால் ஜோடிகளுக்கு உண்டான மதிப்பு குறைவது போன்ற உணர்வை கொடுத்தது. தங்களுக்கு உள்ளே பேசிவிட்டு உணவு முடிக்கும் தருவாயில்..

    ஆண்கள் அறைபக்கமாக உள்ளே வேகமாக வந்த இருவர்.. சட்டென்று அப்படியே நின்று வேந்தனை அவனின் பின்பக்கமாக  பார்த்து நின்றார்கள்.

   இதனை பார்த்தவர்கள் எழிலரசி உட்படயாருடா இவர்கள்? ‘ என பார்வையுடன் வேந்தனை பார்க்க.. அவனவள் தனுவை கையில் தட்டி பின்பக்கம் திரும்பும்படி காண்பித்தாள். உணவு கொடுத்திருந்தவன் கொடுத்துவிட்டு திரும்ப.. அங்கே டாக்டர். அனிதா நின்றுயிருந்தார்.

   சொல்லுங்க அனிதா. ”

    அவனை முறைத்து.. ” எழிலரசிக்கு ஊட்டிமுடிங்க. அவங்கள தான் பார்க்க வந்தேன். ”

   ‘ அப்படியா எனவும் அருகில் இருப்பவர் ஏன்?. ‘ என பார்த்துவிட்டு.. ஊட்டிவிட்டு.. பின் திரும்பி..

   ” நீங்க சாப்பிடிங்களா? அனிதா. ” ஆம் என தலையசைத்து புன்னகைதார். சரி என அரசிக்கு உணவை முடித்து.. சுடு தண்ணீர் கொடுத்து விட்டு கை கழுவி வந்தான்.

 

    அனிதாவை அவன் உட்பட அனைவரும் அவளின் பதிலுக்காக பார்க்க.. ” வேந்தன் ரோஹித் எழிலரசிக்கு இப்ப காய்ச்சல் எப்படி இருக்குனு? பார்த்துட்டு.. இரத்தம் எடுத்து டெஸ்ட் பண்ணி பார்க்க சொல்லியிருக்காரு. “

 

    காய்ச்சல் என்ற புது செய்தியை தர்ஷினி தவிர அனைவரும் எழிலரசி, வேந்தனை பார்க்க.. ” ம்.. சரி பாருங்க. ” தன்னவள் அருகில் நின்று பதட்டப்படாதே என தலைதடவி கொடுத்துதான்.

 

    சரி என எழிலரசியிடம் வந்தவள்.. உடல்நிலை, இரத்த அழுத்தம் செக் செய்து அதை கூறிவிட்டு.. கை நரம்பில் இரத்தம் எடுத்து உடன் வந்தவரிடம் கொடுக்க.. அவர் வாங்கி சென்றுவிட்டார்.

   அனிதா எழிலரசியின் நெற்றிய தொட்டு பார்த்துவிட்டு.. ” வேந்தன் காய்ச்சல் வந்த காரணம் முழுசா நீங்க சொல்ல போல. நான் சரியா கேள்வி கேட்டலனு ரோஹித் அண்ணா என்னைய திட்டுறாங்க. ” வேந்தன் எழிலரசியை நீயே சொல் என பார்க்க.. எழிலரசி வேந்தன் கூறியதில் நலங்கு, குளிர்த்தநீரில் குளித்ததை கூற..

   நீ ஏன் குளிர்ந்த நீரில் குளித்தீங்க மேடம்?.. ” அனிதா போனில் இருந்து கோபமான, வேகமான கேள்வி வந்தது. தீடிர் வந்த கோபமான குரல் மற்றும் சத்தம் வர வேந்தன் முதற்கொண்டு அதிர்ந்தனர்.

   அனிதாவிடம் இருந்து எழிலரசி போன்னை வாங்க.. வேந்தன் ஆண்களை பார்த்து.. ‘ பெண்களை அழைத்து போங்கஎன்ற பார்வை பார்த்தான். அன்னைமார்களுக்கு அதேவே கூறியது.. பெண்களால் தான் அவள் தண்ணீரில் நனைய.. அதனால் தான் காய்ச்சல் வர காரணம்.

   சித்ராவிற்கு.. வேந்தன் எழிலரசியுடன் செய்வேன் என்றதில் சுத்தமாக விரும்பவில்லை. அதற்கு அவன் செய்யாமலே இருக்கலாம் என்ற எண்ணத்தில் அவனிடம் நேற்றில் இருந்து பேசாமல்.. வருகை பிடிக்காமல் கோபத்தை அடக்கியபடி இருந்தவர்..

   இப்போது வசு வேந்தன் மீது கோபம் கொண்டு எழிலரசியை பேசியதில் அவள் வருந்தி காய்ச்சல் வந்துள்ளது என்ற புதுசெய்தியில் தங்கள் பிள்ளைகளின் எண்ணத்தில் தான் என்ன நினைக்க? புரியாமல் தன் மகளை அவள் அறையில் வினோவுடன் இருக்க வைத்துவிட்டு.. திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்க சென்றுவிட்டார்.

 

    மற்றவர்கள் புதுசெய்தியில்.. வேந்தன், எழிலரசி பற்றி சிந்திக்க இது நேரம் அல்ல என அறைக்கு வந்துவிட.. அனிதாவிடம் அவர் போன்னை கொடுத்து அனுப்பிவிட..

   வேந்தன், எழிலரசியுடன் தர்ஷினி, லட்சுமி அறையில் இருந்தனர். எழிலரசி ஏதோ வசு கூறியதை சமாளித்து தன்னவன் போன்னை வைக்க.. லட்சுமி தான் கண்ணீருடன் வந்து அவளின் உடலை தொட்டு பார்க்க.. சூடு இல்லை. ஆனால் முகத்தில் பொலிவு இல்லை.. என வருந்துபவரை வேந்தன் சமாதானம் செய்து இளமதி, சுரபி வர வைத்து அவர்களுடன் அத்தம்மாவை அனுப்பி வைத்தான். எதுவும் கூற முடியாமல் இருந்த தன் முயல்குட்டியை தோள் அணைத்து விடுவித்தான்.

 

   சில நிமிடத்தில் வந்த இருவரின் நண்பர்கள் உடன் ஆண்கள், பெண்கள் ஒன்றாக இருந்து கல்யாண நிகழ்வு நிமிடத்திற்கான உணர்வுகளுக்கு மணமகன்கள், தர்ஷினியை வர வைத்தனர். பின் சில நிமிடங்களில் மாப்பிள்களை அழைத்து அனைத்து திருமண சடங்குகளும் இனிதே ஆரம்பம் ஆனது..

 

   இப்போது மணமகன்கள் அனைவரும் மணமேடையில் கல்யாண பட்டுவேஷ்டி, சட்டையில்.. தங்கள் துணைகளை பற்றி எண்ணியும், வருகையை ஆவலுடன் எதிர்பார்த்தும் வேள்விமுன் ஐயர் சொல்லும் மந்திரம் சொல்லிக்கொண்டு இருக்க..

 

    பிரியதர்ஷினி அடர்பச்சை சேலை, சிவப்புநிற பாடர் மற்றும் பிளவுஸூம், மேகா- சிவப்புநிற சேலை, கத்தரிப்பூ நிற பாடர் மற்றும் பிளவுஸூம், வசுந்தரா ஆரஞ்சு மற்றும் பிங் கலந்த தங்க நிற பாடர் பச்சைநிற பிளவுஸூம், நந்தினி- காபி கலர் சேலை, மாம்பழநிற பிளவுஸ் அணிந்து( அவர்களின் திருமணம் அன்று உடுத்திய அதேபுடவை) துணைகளை நிமிர்ந்து பார்க்க, குனிந்தும் மனம் முழுவதும் சந்தோஷம், சிறிது நாணம் என்ற உணர்வில் வந்தனர்.

 

   அவர்களுடன் அவர்களின் நாந்தனார்கள், அக்காக்கள் உடன் வந்தனர். அனைவருக்கும் ஒரே நேரத்தில் அனைத்து சடங்களும் நடைபெறுவதால்.. மேகா, பார்த்திபனுக்கு அவர் அவர்களின் அம்மா, அப்பாவும்.. அஸ்வினுக்கு அவனின் பெரியப்பா கஜேந்திரன், பெரியம்மா இந்திராணியும்..

    தர்ஷினிக்கு எழிலரசியின் அப்பா அருணாச்சலம், அம்மா லட்சுமியும் அப்பா, அம்மா முறைசடங்குகள்  செய்தனர். வேந்தன், எழிலரசி வசுந்தரா மேடையில் தான் இருந்தனர்.

   நான்கு மேடைகளிலும் மணமக்களை சுற்றி குறிப்பிட்ட எழுஎட்டு நபர்கள் மட்டுமே.. நாத்தனார் முடுச்சு போடுபவர் மட்டும் மணமக்களின் பின்னே நிற்க.. மற்றவர்கள் சற்று தள்ளிதான் நின்றுயிருந்தனர். அதனால் மணமக்களை ஆசிர்வாதம் செய்ய வந்த விருந்தினர்களுக்கு நாலு ஜோடிகளும் நன்றாகவே தெரிந்தனர். இருந்தாலும் ஆங்காங்கே டிவி வைக்கப்பட்டு நடப்பவைகள் திரையில் வந்துக் கொண்டுயிருந்தது.

 

    இன்முகத்துடன் மணமகள்கள் நால்வரும் தன் துணையின் அருகே அமர.. இருவரும் சேர்ந்து செய்ய வேண்டியவைகள் அனைத்தும் செய்யபட்டு.. மூவரின் திருமாங்கலம் , ஒருவரின் திருமாங்கல காசுடன் கூடிய செயின் நான்கும் நான்கு தட்டில் வைக்கப்பட்டு கார்த்திக், வேந்தன், அருட்செல்வம், அருள்நிதி நால்வரும் அனைவரிடமும் சென்று ஆசிர்வாதம் வாங்கி ஐயர் கையில் கொடுத்தார்கள்.

  அடுத்த மூன்றாவது நிமிடத்தில் இருநிமிட இடைவெளியில்.. நான்கு ஆண்மகளும் தங்களின் மனம் விரும்பியவர்களின் கழுத்தில் திருமாங்கலத்தை அணிவித்து.. இன்னாரின் கணவன், மனைவி என்ற பட்டத்தை பெற்று.. அனைவரிடமும் அதற்கான ஆசிர்வாதம், வாழ்த்துக்களை அவர்கள் தூவிய பூமற்றும் மஞ்சள்கலந்த அரிசியில் பெற்றனர்.

 

   அதன்பின்னான சடங்குகள் அனைத்தும் நடைபெற.. வசுந்தராவின் அண்ணன், அண்ணியாக வேந்தனும், எழிலரசியும் சபையில் செய்ய வேண்டியவைகளை செய்தபின்.. அக்கா, மாமாவாக அருள்நிதி, இளமதியுடன் தர்ஷினிக்கும் செய்தனர்.தர்ஷினி எழிலரசியை கட்டிஅணைத்து எதிர்பார்க்காத தன் மகிழ்ச்சியை தெரிவித்தாள்.

   மற்ற இருஜோடிக்கும் குடும்பத்துடன் செய்தனர். பின் யாருடனும் மற்ற சடங்குகளில் உடன் நிற்கவில்லை.. எழிலரசியால் நிற்க முடியவில்லை. முழுவதும் ஓய்வு எடுக்காமல் அடுத்தடுத்து வேலை செய்து நின்றுயிருந்தால் சோர்வுடன் தெரிய..

   இம்முறை லட்சுமியின் கட்டளையின் பேரில் அனைவரையும் பார்க்கும் படியான இடத்தில் கீழே வந்து சத்யா, திலகன் குடும்பத்தினருடன் அமர்ந்துவிட்டார்கள். வேந்தனின் குடும்பத்திற்கு வருத்தம்தான் ஆனால் காட்டிக் கொள்ளவில்லை.

 

    சடங்குகள் முடிந்து.. பால், பழம் கொடுத்து.. விருந்தனர்கள் அனைவரும் வாழ்த்தி முடித்து.. மணமக்கள் உணவு சாப்பிட சென்றுயிருக்க..

   அப்போது வேந்தனிடம் வந்த ஒருநபர்.. அவனிடம் இருகவரை கொடுத்துவிட்டு சென்றார். இருவருக்கும் போனில் உடனே அதை பிரித்து படிக்கும் படி மெசேஜ் வந்தது. படித்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க.. அவர்களின் அருகில் மற்றொரு நபர் வந்து அவர்களை ஒரு அறைக்கு அழைத்து சென்றனர்.

   அழைத்து சென்றநபர் வெளியே நின்றுவிட்டார். இதனை குடும்பத்தினர் பாதி பேர் பார்த்தனர். உள்ளே சென்றவர்கள் கால்மணி நேரம் கழித்து வெளியே வர.. எழிலரசி இன்னும் சோர்த்து இருக்க.. இன்பா, சந்துரு, அனிதா அவர்களிடம் வந்துவிட.. எழிலரசியை மட்டும் மீண்டும் அறையினுள் அனிதா அழைத்து சென்றாள்.

 

   ‘ என்னவென்று?. ‘ இன்பா.. மாமாவை பார்க்க.. வேந்தன் தன் கையில் இருந்ததை கொடுத்தான். இன்பா, சந்துரு இருவரும் படித்தவர்கள்.. ” மாமா உங்க இரண்டுபேரையும் என்ன சொல்லுங்க? நினைப்பாங்கனே தெரியாதே. “

 

   ” ம்.. எனக்கு அதை பற்றி கவலையில்ல இன்பா. அரசிக்கு என்ன சொல்லனு தெரியலனு.. நான் என்ன சொன்னாலும்..  எனக்கும் அது சரினு சொல்லிட்டா. எனக்கு இதில் சம்மதம்தான். இதை அவங்க நாலுபேர்கிட்டையும் கொடுத்துவிடு. ” கூறிவிட்டு வேந்தன் தன்அரசியிடம் சென்றுவிட்டான்.

    

    

   

   

    

  

    

   

   

  

  

  

   

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!