Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 41.2

 

நாம் 41(2)

 

    அதற்கு முன்.. ”  இரண்டு ஜோடிகளுக்கும் நீங்க தனித்தனியா முக்கியத்துவம் கொடுத்துயிருக்கனும்.



Advertisement

   சாப்பாட்டில் சுத்தமா சூடே இல்ல. அப்ப சாப்பாடு செய்து முடித்து எவ்வளவு நேரம் ஆகியிருக்கு. அஸ்வின், நந்தினிகாக நீங்க கால்மணி நேரம் காத்திருந்து இருக்கலாம். அதற்கு மேல கமலேஷ், வசுவை சாப்பிட வைத்துயிருக்கனும்.

   கமலேஷ், வசு அங்க வீட்டிற்கு  மறுவீடு வந்திருந்தா.. சாப்பாடு செய்து முடித்த அடுத்த நிமிடம் சாப்பிடுவாங்க. அதான் நான் செய்யுறேன். செய்தவுடன் நான் குளிச்சுப்பேன். உப்பு மட்டும் நீங்க பார்த்துக்கோங்க. அத்த நீங்க அஸ்வினை கவனிக்க. அம்மா மற்றவங்களை கவனிக்க. “

    வேந்தன் யாரையும் எதுவும் பேச வாய்ப்பு கொடுக்காமல்.. வேகமாக எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டே கூறினான். உதவிக்கு வந்தவர்களை வேண்டாம் என மறுத்துவிட்டான். அப்படியே தன் அரசியை பார்த்தவன் அவள் போனில் தன்னை வீடியோ எடுப்பது போல இருந்தது அவளின் கண்கள்.

Advertisement

 

Advertisement

   டேய் அவங்கயெல்லாம் சோகமா போறாங்கடா. “

 

    அதுக்கு நான் என்னக்கா பண்ண?. மாப்பிள்ளை, பெண்ணு வீட்டிலும் மறுவீடு, அதன் பிறகான சில நாட்கள் எத்தனை ஜோடி இருந்தலாம்.. ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தனியாவும், பையன் வீட்டில் பெண்ணுக்கும், பெண்ணு வீட்டில் பையனுக்கு தனித்தனியா தான் மதிப்பு கொடுக்கனும்.

Advertisement

 

   இல்ல குடும்பத்தில் ஆரம்பத்திலே இருந்தே மனஸ்தாபம் வந்துவிடும். வசுவை அண்ணா பொண்ணுதானே.. என்று சாதாரணமா விட்டுவிட்டாங்க போல. அதான் அவங்க வந்தவுடனே நேரம் ஆச்சுனு வேகமாக வந்தவங்க.. வசு சாப்பிடாமல் இருப்பது தெரிந்தும் எல்லாம் கதை பேசிட்டு இருக்கிங்க. “

 

   அவனை தோளில் அடித்து.. ” டேய் நீயும் வந்தவுடன் கதைதானேடா பேசிட்டு இருந்த?. “

 

   ம்.. ” அருகில் வீடியோ எடுத்து இருந்தவளை சட்டென்று அணைத்து.. யோகா மட்டும் இருக்க தைரியம்.

   ” எனக்கு பதில இவ இருக்கா. ” கூறி அவளை முறைப்பை பெற்று பின் விடுத்து.. எழிலரசி வசுவை பார்த்தது.. பின் வசு தன்னிடம் கூறியதை மிகமிக சுருக்கமா கூறி..

 

   ” அக்கா கல்யாணம் முடிந்து.. நைட் சடங்கு அவளுக்கு நடக்கல என்பதற்காக நீங்க, அம்மா, அத்த எல்லாம் வசுவை எப்போதும் போல நினைத்து சாதாரணமா இருந்தீங்களா?. ” மனதில் உருத்திய கேள்வியை தன்னவள், அக்கா தானே என வெளிப்படையாக கேட்க..

 

   யோகா முதலில் அதிர்ந்தாலும்.. பெண்களுக்கு எல்லாம் பார்ப்பவன் இதை அவன் கேட்பதில் என்ன கூச்சம் படப்போகிறான்?. என நினைத்து..

   ” டேய் தம்பி.. கமலேஷ் சொன்னதால நமக்கு தெரியும். இல்லைனா என்ன செய்துயிருப்போம். அதனால அதை நாங்க சுத்தமா நினைக்கல.. அதனால சாதாரணமாவும் இருக்கல டா. ஆனா இரண்டு ஜோடிக்கு விருந்து கொடுக்கும் போது.. ஒருவரை தனியா விட்டு நீ சொன்ன மாதிரி தனியா கவனிக்க தோனுல டா. “

 

   அக்கா நீங்க சொல்வது சரிதான். ஆனா நேற்று விஷயத்தை யோசித்து.. வசுவை கவனித்துயிருக்கனும் அக்கா. அவ நந்தினிக்காகனு உணவு செய்ய சொன்னது.. காத்திருப்பதை பார்த்து.. நான் சொன்னது தான் காரணம் என்று நினைத்து இருப்பா. “

 

   யோகா அரசியின் காதில் ஒன்று கூற.. அவள் உடனே வேந்தனிடம் கூற.. யோகாஇவளஎன முறைக்க..

 

   புன்னகையுடன்.. ” அண்ணி.. தனுக்கிட்ட இப்பவே அதைபற்றி சொன்னாதான்.. வேறு எதனால் வசு அழுதானு யோசித்து சரி செய்ய முடியும்.

 

   அதுபோல உங்க எல்லோருக்கும் நந்தினி பற்றி தெரியும்.. ஆனா வசுவிற்கு தெரியாது இல்லையா. அதனால வசு அப்படியும் நினைக்க வாய்ப்பு அதிகம். அதை பற்றி கேட்க.. அதனால்தான் என்று சொல்ல முடியாம.. இந்த விஷயத்தில் அஸ்வின், நந்தினியை பார்க்க முடியாம..  நம்ம வீட்டிற்கு போய் இருந்தா நல்லாயிருந்து இருக்குனு கூட நினைத்து இருப்பா. “

 

    தன்னவனை பார்க்க.. ‘ ஆம்என தலைசைக்க..

 

   ம்.. இருக்கலாம். வசு கிட்ட நான் நேரடியா இதை பற்றி பேசிக்கிறேன். நீங்க இதை இத்தோட விடுங்க. சரியா. நான் வெளியில் என்ன நடக்குதோ? யாரையும் காணாம். “

 

   அண்ணி.. அவங்க உங்கள தான் எதிர்பார்த்துயிருப்பாங்க. ” அடங்கபட்ட புன்னகையுடன்.. ” இப்போதைக்கு யாரும் இங்க வந்து தனு கிட்ட மாட்டிக்க மாட்டாங்க. ” சற்று தள்ளி தனுவை பார்த்தபடி கூற..

 

   அவன் திரும்பவில்லை. ‘ அய்யயோ நான்..  இன்னும் நல்லா மாட்டினேன் போல. ‘ அவள் யோகாவை பார்த்தாள்.

 

   வேந்தன் செய்து முடித்த.. வெஜ் புலாவ், இறால் மசாலா, நல்லி எழும்பு மட்டன் தோரன், மட்டன்கோலா உருண்டை, நண்டு ஆம்லைட் அனைத்தும் சுவை பார்த்தவர்.. ” வேந்தா எல்லாம் சூப்பரா இருக்குடா. ஆனா அளவு கம்மியா இருக்கு. அதனால வசு, கமலேஷ் அடுத்து எனக்குதான். “

 

   ம்.. சாப்பிடுங்க. இன்பா வந்துயிருப்பான். அத்தைக்கிட்ட நான் எங்க குளிக்கனு கேட்டு அங்க டிரஸ் வைக்க சொல்லுங்க. ” சரி என தலையசைப்புடன் உணவு இருந்த பாத்திரம் கொண்டு சொல்ல..

 

   தன்னவளிடம் வெஜ் புலாவ் மட்டும் எடுத்து கொடுத்து.. ‘ உனக்கு ரொம்ப தைரியம் ஜாஸ்தி ஆகிவிட்டதுஅவளை இதழை பிடித்துழுத்து பார்க்க.. ‘ போடா தனுமாமாஅவனின் கையை தட்டிவிட்டு.. முறைப்புடன் அரசி வெளியே செல்ல.. புன்னகையுடன் அவனும் அவளுடனே மீதியை நால்வர் முன் வைத்தான்.

 

   வேந்தன் புன்னகையுடன் முதலில் வசு, கமலேஷ், அஸ்வின் கடைசியாக நந்தினிக்கு என நால்வருக்கு மட்டும் வைத்துவிட்டு விருந்தினர் அறைக்கு குளிக்க சென்றுவிட்டான்.

 

   வெஜ் சாப்பிடும் கல்யாண வீட்டினர் தனியாக அமர அவர்களுக்கு இன்பா, எழிலரசி, சித்ராவின் தங்கை பரிமாற.. மற்றவர்களுக்கு யோகா, கார்த்திக், கண்ணன் அவனின் மாமா பையன் ரிஷி பரிமாற இரண்டுமே சாப்பிடனர்.

 

    வேந்தனின் செயல் மற்றும் கருத்திற்கு விருந்து சமைத்தவர்கள் யாரும் ஒன்றும் பதில் கூறவில்லை. அவர்களை பொறுத்தவரை வேந்தனிற்கு, இருஜோடிகளுக்காக உணவு செய்து காத்திருந்தது சரியே என நினைத்து.. 

    புன்னகையுடன் தங்கைக்கான உணவு செய்ததை அனைவரும் ஒருவாய் ருசி பார்த்திருந்தவர்கள்.. டைனிங் ஏரியாவில் இன்பாவுடன் இருந்த எழிலரசியிடம் வேந்தனுக்கு உரிய பாராட்டையும், கொடுத்து வைத்தவள் என்று சிலர் கன்னத்தில் முத்தமிட்டு, கட்டியணைத்து என்று வெளிபடுத்தி சென்றனர்.

 

    இதனை விரைவில் குளிந்துவிட்டு வந்தவன் பார்த்து வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு அவர்களை முறைத்தபடி தன்னவள் அருகில் நின்றான்.

 

   அவர்களோபோடா போடாஎன்ற லுக்கொடுத்து புன்னகையுடன் சென்றனர். மெதுவாக அனைவரின் உணவை சாப்பிட்டு முடிந்து அங்கு வந்த நால்வரில் நந்தினி அமைதியாக நிற்க.. வசு, கமலேஷ், அஸ்வின் புன்னகையுடன் வேந்தனை கட்டிணையத்தனர்.

 

   பின் வசு.. ” அண்ணா நீங்க செய்தது சூப்பரா இருந்தது.  சரி என தலைதடவி கூற.. இதனை பார்க்கவும், தன்வீட்டில் வேந்தன் வசுவிற்காக உணவு செய்தது பிடிக்காமல் இருந்தவள்.. சுமதி கமலேஷ், வசுவை அழைக்க நந்தினி மட்டும் அவர்களுடன் சென்றுவிட்டாள்.

 

    வேந்தன் நீங்க சூப்பரா சமைப்பீங்க நான் எதிர்பார்க்கல. நீங்க ஹோட்டல் வைத்து இருப்பதால் கற்றுக் கொண்டீங்களா?. ” முடிக்கும் முன்..

 

   வேந்தன் எழிலரசியை பார்க்க.. ” .. உங்களுக்கு அந்த வயதிலே உங்களுக்கு எழிலரசி இப்ப செய்யும் சாப்பாடு நல்லாயிருக்காதுனு தெரிந்துவிட்டதா?. “

 

   புன்னகை மட்டும் புரிய.. இருவரையும் கிள்ளி.. ” என்ன?. அன்னைக்கு இதே வீட்டில் நான் செய்த பாயசத்தை இரண்டு கப் வாங்கி சாப்பிட்டு.. இப்ப நல்லாயில்லைனு சொல்லுறீங்க?. “

   மூவரும் புன்னகைக்க.. அவள் புரியாமல் முழிக்க..

 

   தன் தங்கையிடம்…” எழில்மா.. நீ செய்ததை பற்றி யாரும் உன்னிடம் ஒன்றும் கருத்து சொல்லியிருக்க மாட்டாங்களே. “

    யோசித்தவள்.. ” ஆமாம்.. ” இழுவையாக கூற..

   ” ஏன்னா அவங்க யாரும் சாப்பிடவே இல்ல. ”

 

    என்ன? அதிர்ந்து வேந்தனை பார்க்க..

    அடங்கபட்ட  புன்னகையுடன்.. ” அரசி.. கற்கண்டு கம்மியா போட்டு ஸ்விட் வைந்திருந்த.. நந்தினி, வசுவும் சாப்பிடாததை தான்..  நானும், அஸ்வினும் அன்னைக்கு சாப்பிட்டோம். “

    பாவமாக அப்ப மேகா, தர்ஷினி என பார்க்க..

   அது புரிந்து.. ‘ அய்யோ முயல்குட்டிஎன தோள்அணைக்க..

 

   இன்பா சிரிப்புடன்.. ” தர்ஷினி, மேகாவிற்கு நீ செய்ததுனு தெரிந்தும் தெளிவா அவங்க வாங்கவே இல்ல. ” கூறி அண்ணாவுடன் சேர்த்து அவளவனும், அஸ்வினும் சிரிக்க..

 

   அவர்களை பார்த்து முறைந்திருந்தவளை.. சில செல்ல வார்த்தைகளில் சமாதானம் செய்து..

   சுமதி, வசு பரிமாற.. வேந்தன், எழிலரசி, இன்பா சாப்பிட்டு முடித்து கணேஷ் வீட்டின் அருகில் இருந்த ராகவன் வீட்டிற்கு.. மூவர் மற்றும் வேந்தன் வீட்டினர் செல்ல.. மற்றவர்கள் அனைவரும் குளித்து.. வீட்டையும் சுத்தம் செய்தபின் அனைவரும் வேந்தன் வீட்டிற்கு நலங்கு கிளம்பினர்.

   

   எழிலரசியும்.. தன்னவளின் அருகில் மென்மையாக கைபிடித்திருந்த வேந்தனும்.. அவன் வீட்டின் முற்றத்தில் பூக்களினால் ஆன தொங்கும் தோரணங்கள், பலவண்ண பூக்களினால் அலங்காரங்கள் செய்யபட்ட இடத்தின் நடுவே இருவரும் புன்னகையுடன் அமர்ந்து இருந்தார்கள்.

 

    வேந்தன், எழிலரசி இருவரின் உறவினர்கள், சென்னையில் இருந்து வந்தவர்களை அவர்கள் வரும்முன் ஈஸ்வர், அமுதன், கதிரவன் அனைவரையும் வரவேற்று.. அவர்களை வெளிதோட்டத்தில் அமர வைத்திருந்தனர். அவர்கள் வந்தவுடன் வேந்தன் தன் அரசியின் கைகளால் வாசலை திறக்க வைத்தான்.

 

    உள்ளே வந்தவர்களுக்கு தரைதளத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் எடுக்கப்பட்டு. வீடா இல்லை நந்தவனமா என்று நினைக்கும் அளவிற்கு.. பூக்களும் அதன் வாசனையும் அனைவர் மனதையும் இதமாகியது. முற்றத்தில் மட்டுமே வெளிச்சம். மற்ற இடங்கள் மெல்லிய விளங்கு ஒளி  மட்டுமே. அனைவரும் கீழே அமரும் படியாக மெத்தை இருக்கை அமைக்கபட்டு இருந்தது.

 

    குங்குமசிவப்பு பட்டு தாவணி, மாம்பழவண்ண பட்டு பாவாடை, பிளவுஸ்.. தங்க நிறம் பாடர் உடை எழிலரசி அணிந்திருந்திருக்க.. தன்னவளின் உடைக்கு ஏற்றார் போல் வேந்தன் குர்தா, தோத்தி அணிந்து இருந்தான். இருவரின் உடைக்கு ஏற்ற பூக்களின் அலங்காரம் இருந்தது.

 

   தனு எனக்கும் ஏன் இங்கேயே?. நான் முற்றத்தில் அலங்காரம் செய்யுங்க மட்டும்தான் சொன்னேன். ஏன் இவ்வளவு? “

   அவளின் தாவணி உடை, நெற்றி, காது, கழுத்து, கை, கால் என அசல் முத்துக்களில்..  கோர்க்கபட்ட சிறிய மஞ்சள்ரோஜா இருந்தது.

 

   மெல்லியகுரலில்.. ” காய்ச்சல் சூடு குறைய.. நான் உன்னைய நான் கட்டிபிடித்து படுத்திருந்தபோதே.. இரண்டு பேருடையதையும் ஒன்னா இங்க பண்ணலாம் முடிவு எடுத்துட்டேன்.

 

   அப்ப.. நீ பூப்பெய்த அன்று மாலை போட்டுயிருந்த உடை போல் பார்க்க தோன்றியது. அதான் என் முயல்குட்டிய குமரியா கோயில் பார்த்தது, அன்று மாலை இரண்டையும் சேர்ந்தார் போலான கலரில் உடை.. நலங்கு ஸ்பெஷல் முத்து அணிகலகளின் அலங்காரம். ” தன்னவளை கண்களால் பருகிய படியே கூற..

 

    அவளோ தான் நேற்று இருந்த நிலையை பார்த்து தனு மிகவும் வருந்தி.. அதனை மறக்க தாங்கள் ஒன்றாக இருந்த தருணத்தை யோசிக்க போய்.. மாலை சடங்கு ஞாபகம் வந்து.. அன்று தாவணியில் சடங்கு வைத்தது போன்றும்.. ஆனால் இப்போது தான் அருகில் அமர வேண்டும் என இம்முடிவை எடுத்து இருப்பானோ?. என அவனிடமே தன் சந்தேகத்தை கேட்க..

 

   ” ம்.. முயல்குட்டி அன்னைக்கு மாதிரியே இருக்கா.. ஆனா கொழுகொழு தான் இல்ல. அதற்கு மொத்தமா சேர்த்து உன் கன்னம் இருக்கு அதை வைத்து நான் அஜெஸ்ட் பண்ணிக்கிறேன். ” அவனின் கன்னத்தின் மீதான பார்வை.. அவளை வெக்கபட வைத்தாலும் அதனை மறைத்து முறைப்பாக பார்க்க முயன்றாலும் முடியாமல் திணறிக் கொண்டுயிருக்க.. அதனை அவளவன் ரசித்துக் கொண்டுயிருந்தான்.

 

   இருவருக்கும் இங்கு செய்வது அவனின் விருப்பத்தை யாரும் ஒன்றும் கூற முடியாத நிலையில் அனைவரும் இருவரை சுற்றி அமர்ந்தார்கள். வந்த உறவினர்களில் அத்தை, அக்கா, மாமா முறையில் உள்ளவர்கள்  மட்டும் பச்சை, மஞ்சள் இரண்டும் கலந்த வண்ண  சேலையிலும், ஆண்கள் மஞ்சள்சட்டை அணிந்து இருந்தார்கள். இருவரின் பெற்றோர்கள் நலங்கு வைக்க ஆரம்பிக்கலாம என பார்க்க.. புன்னகையுடன் இருவரும்சரிஎன புன்னகையுடன் தலையசைத்தனர்.

 

    முதலில் வேந்தனுக்கு என்று தெரிவித்து.. அவர்களின் முன்னால் வெள்ளி கின்னம், தட்டில் இருந்த நலங்குமாவு, ரோஸ்வாடர் கரைசலை எழிலரசியிடம் இன்பன் நீட்ட.. இத்தனை நாள் இல்லாத தயக்கம் எழிலரசிக்கு வந்தாலும்.. என்றும் போல் தன்னை கட்டுபடுத்திக் கொண்டு  தன்னவனை பார்க்க.. அந்த கள்ளன்.. தன் கள்ளியின் தொடுகைக்காக  காத்துயிருப்பதை மறைத்து சாதாரண புன்னகையுடன் பார்த்தான். இருவரும் ஒருநிலையில் இல்லை என்பதை அவர்களின் சிலிர்த்து எழுந்த முடிகளை இருவரும் கவனிக்கவில்லை.

 

    இருக்கையில் எழுந்த எழிலரசி தாவணியை சரியாக வைத்துகொண்டு.. தன் இரு கைகளினால் நலுங்குமாவு கரைசலை எடுத்து வேந்தனின் கன்னத்தை அழுத்தி பிடித்திழுத்து.. பின் கை, கால்களில் தன் தொடுகையை அவனுக்கு உணர்த்தியும், உணர்த்தாமல் மென்மையாக தடவிவிட்டாள். பின் நெய், பால் கரைசலை தலையில் தடவினாள். அவனின் பார்வை ஆரம்பம் முதல்இறுதி வரை அவளின் கழுத்தில் இருந்ததை.. அவள் நாணமும், புன்னகையுமாய் தன்னவனின் கண்களை பார்த்து ஒருவழியாய் பூசி முடித்தாள்.

 

    அடுத்து எழிலரசிக்கு என்று கமலேஷ் உடன் நின்று வசுந்தரா நீட்ட.. வேந்தன், எழிலரசி இருவரும் இதனை எதிர்பார்க்கவில்லை.

 

   யோகா வசுந்தராவிடம் வேந்தன், எழிலரசியின் சந்தேகத்தை கேட்க.. அவளும்ஆம்என அவளிடமும் கண்ணீர் வடிக்க.. பின் நந்தினி பற்றி கூறி.. படிப்பு முடியும் வரை.. எந்த ஜோடி பற்றியும் நினைக்காதே சமாதானம் செய்ய.. பின் அவளும் புரிந்து.. வேந்தன், எழிலரசி தன்னை சரியாக புரிந்து கொண்டதை எண்ணி மகிழ்ந்து.. இனி தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். அதன் முதல்படியாக அண்ணா.. தான் அவருடன் நின்றாள் மகிழ்வார் எனவும்.. அவர்முதலில் யாருக்கு வைக்க நினைப்பார் என அறிந்தளாக..  வேந்தனின் முன் தன் துணையுடன் நின்றாள். இதனை பார்த்து குடும்பத்தினர் மகிழ்ந்தனர்.

 

   புன்னகையுடன் வேந்தன் கரைசலை எடுத்து.. தன்னவளிற்கு மட்டுமே உரித்தான புன்னகையுடன் ஒரு நொடி அவளின் உடல் முழுவதும் ஒரு பார்வையை செலுத்தி.. அவளின் கன்னம், கை, கால்பாதத்தை மிக மிக மென்மையாய் தடவி அவளை அவளின் உடை நிறத்திற்கு கொண்டு வந்திருந்தான். அவனின் அரசியும் அவன் இதழை குறுகுறு என பார்த்து அவனையும் அந்நிறத்திலே அமர வைத்தாள்.

 

   பின் இருவரின் தாத்தா, பாட்டிகள், பெற்றோர்கள் என தம்பதிகளாக ஆரம்பித்து.. அடுத்தடுத்துஉறவினர்களில் வெளியூரில் வந்தவர்கள், புதுமண தம்பதிகள், நண்பர்கள் உட்பட ஜோடியாக வந்து எழிலரசிக்கு மாவு பூசியும், வேந்தனுக்கு மாவுடன், தலைக்கு நெய், பால் தேய்த்தனர். சென்னையில் வந்தவர்களில் பெண்கள் எழிலரசிக்கும், ஆண்கள் வேந்தனுக்கு மட்டும் தேய்த்தனர். சாருலதா, சந்துரு, கடைசியாக இன்பா  தேய்த்தான். 

 

   இன்பா அவனின் குட்டிம்மாவிற்கு தேய்க்கும் போது கண்கள் கலங்கினான். எதனால் என்று இருவருக்கும் புரிந்தது. எழிலரசியும் அவனிற்கு தேய்த்து விட்டாள்.

 

   இன்பா வேந்தனின் கன்னம் தேய்க்கும் போது.. ” நீங்க மட்டும் அண்ணாக்கு எல்லாமே தெரியனும் குட்டிம்மாவிடம் கூறாமல் இருந்து இருந்தா.. இப்ப என்ன மாதிரி அண்ணா, மகனா இருக்கனும் என்று எல்லோரும் அப்பாகிட்டசொல்லி பெருமைபடியா இருந்து இருப்பனா தெரியாது. தேங்கஸ் மாமா. ” முழுமையாக தேய்ந்தவாறே கூறி அணைத்து விடுவித்தான்.

 

   வேந்தனும் புன்னகையுடன்.. ” தான் இருந்தால் அரசியை எவ்வாறு பார்த்திருப்பேனோ அதைவிட கூடுதலால் பார்த்துக் கொண்டதற்கு நான்தான் உனக்கு தேங்கஸ் சொல்ல வேண்டும். ” அவனும் எழுந்து தன் மச்சானின் கன்னத்தில் தடவி அணைத்து விடுவித்தான்.

 

   என்ன பேசி? இவ்வாறு நடக்கிறது என இருந்த பாதி பேருக்கு தெரிந்து.. ‘ டேய் இரண்டுபேரும் எத்தனை தடவைதான் மாறிமாறி நன்றிய சொல்லுவீங்க?. ‘ என நக்கல் பார்வை பார்த்தனர். அவர்களின் அருகில் இருந்த ஒருத்தி வெளிபடையாக புன்னகை புரிந்தாள். அனைவரையும் முறைப்புடன் பார்த்திருந்தவர்கள் தன்னவள், தங்கையை ஆனந்த புன்னகையுடன் பார்த்தனர்.

 

   இருவரும் அனைவர்முன் விழுந்து பூக்களால் மூலம் ஆசிர்வாதம் வாங்கிய பின்னர் இளையவர்கள், நண்பர்களுடன் விதவிதமான போடோக்கள் எடுத்த பின் திலகன், சத்யா இன்னும் ஓர்இருவர் தவிர வேந்தன் குடும்பத்தினர் பிரியதர்ஷினி வீட்டிற்கும்.. எழிலரசி வீட்டினர் அவளின் பெரியப்பா வீட்டிற்கும் கிளம்பிவிட்டனர்.

 

    இரண்டாம் தளத்தில் வெளிச்சம் எப்பொதும் வரும்படியாக மூடியிருக்கும்.. ஆனால் வேண்டிய நேரம் அதனை திறந்துக்கொள்ளலாம். மாடியில் மூடியபகுதி முழுவதும் திறந்து.. அதன்அடியில் சலடைபோலான கம்பிகள் வைக்கப்பட்டு.. அதன்மேல் தண்ணீர் வரும்படியாக குழாய் பொருத்தபட்டு மூடிவைத்திருந்தனர்.

 

    இருவர் மட்டுமேயான புகைபடங்கள் எடுத்தபின் இருக்கைகள் நகரத்தபட்டு.. தரைதளம், முதல்மாடியில் திறந்த பகுதிகளில் என முற்றத்தை சுற்றி திரைகளால் முடப்பட்டது. எழிலரசி, வேந்தன் முற்றத்தில் நின்றுயிருக்க.. அவர்கள் மீது மிதமான வெப்பநிலையில் மழை போல நீர் பொழிந்தது.

 

    சட்டென்று தன்மேல் விழுந்த தண்ணீர் துளிகளை பார்த்து மகிழ்ச்சியுடன் தன்னவனை அணைத்து கொண்டாள் எழிலரசி.

   அணைத்தவளின் தாவணி வெற்றிடை இறுக்க பற்றி தூக்கி ஆழந்த முத்தம்பதித்து.. ” முயல்குட்டி இரண்டு பேருக்கும் இங்கயே வைக்கலாம் முடிவு செய்தற்கு வேற காரணங்கள் கூட இருக்கு. ”

    என்னவென்று?. ‘ அவனின் இதழில் முத்தம் பதிக்க.. தன் இதழிகளில் மூலம் தன்னவள் இதழில் உணர்ந்த பால், நெய் சுவையில் இருவரின் முத்தம் சில நொடிகள் நீண்டது.. “  நீ முற்றத்தில் ஏற்பாடு செய்ய சொன்னனு.. எனக்கு தெரிந்தது போது.. நானும் முதலில் இங்கதான் சொல்லியிருந்தேன். உனக்கு சஸ்பென்ஸா இருக்கட்டும் என்று சொல்லாமல் வைத்துயிருந்ததை நீயும் சரியா எப்படி சொன்னேன்?. என்ற ஆச்சரியத்தை இருவரும் ஓரே இடத்தில் அனுபவிக்க. “

 

   ம்என அவள் புன்னகையுடன் நெற்றி முட்ட.. அவனும் நெற்றி முட்டி.. ” அன்னைக்கு நீ என்னையபற்றி நீ யோசிக்கமா தண்ணீரில் அழுதுக்கொண்டே நனைந்து காய்ச்சல் வர வைத்தற்கான தண்டனை. ” சாதாரணமாக கூறியபடி..

 

    தண்ணீர் விடும்போதே மேலே திரைபோட்டு வெளிச்சம் மறைக்கப்பட்டது. தொங்கிய தோரணங்களின் நடுவில் சிறுசிறு விளங்குகள் இருக்க.. அதை தண்ணீர் திறந்துவிடும் போதே ஆன் செய்திருந்தனர். இப்போது இருவர் மட்டும் அவர்கள் நலங்கு முடிந்தவுடன் குளியல் அறையில் குளிப்பது போலேவே முற்றத்தின் நடுவில் இருந்தனர். ‘

 

   அவளை நிமிர்த்தி ஒரு நொடி முற்றத்தில் இருந்து இரண்டாம் தளம் வரை வீசிய மெல்லிய ஒளியுடன் கூடிய வீட்டின் அழகை பார்க்க வைத்தான்.

 

   அந்த ஒருநிமிடம் மட்டும்தான் அவள் அவளின் வசம் இருந்தாள். அடுத்தநொடியில் இருந்து அவனவள் அவள் எதையும் உணரும் முன் அவளின் கண்களை கட்ட.. பதில் கூறும்முன் அவளின் இதழை சிறைபிடித்து.. தன் கண்களை கட்டிக்கொண்டான்.

   அடுத்து ஒவ்வொரு நொடியும் என ஐந்து நிமிடங்கள் தன் முயல்குட்டியை தன் கைகளில் சுழன்றபடியே தன் தொடுகையை உணரவைத்து இருவரும் குளித்திருந்தனர்.

   இருவரின் கண்ணில் கட்டியிருந்த துணிகளை அவிழ்த்து.. ” தாவணியில் உன்னோடு மழையில் நனையும் ஆசையையும் நிறைவேற்றி கொள்ளவும் தான். ” கழுத்தில் முத்தம்பதித்து கள்ளபுன்னகையுடன் அவளை.. அவள் வசம் கொடுத்தான்.

 

    அடுத்த சிலமணிநேரத்தில் எழிலரசி அவள் வீட்டின் ஹாலில் வான்நீலநிற சேலை.. அதன் முழுவதும் வெள்ளி சரிகையினால் கோடு டிசைன். சேலைக்கு அடர்ரோஜா வண்ணம் பிளவுஸ்.. அதில் தங்கம்,வெள்ளி சரிகை வேலைபாடு இருந்தது. மல்லிகைபூ, மெல்லிய ஒப்பனை, வைரம், தங்கம், முத்துக்கள் கலந்த பெரிய நெக்லஸ், அதேபோலான தோடு, சிறிய நெற்றி சுட்டி, சேலை நிறத்திற்கு ஏற்ற கண்ணாடி வளையல் என வேந்தன் வீட்டில் இருந்து தன் வீட்டிற்கு காரில் வந்தவள் தேவதையாய் இறங்க..

 

    இளஞ்சிவப்புநிற சட்டை, வெள்ளிசரிகை வேஷ்டி என அவளின் தனுமாமா.. தன் அரசி.. அவள் பூப்பெய்த சிலநிமிடத்திலேயே அவளுடன் நான் இருந்து பேசி, விருப்பத்தை பகிர்ந்து, தன் தோளில் சாய்ந்து உறங்கி.. எனக்கு மட்டுமேயான உரிமையுள்ளவளாக அன்றே மாறிவிட்டாள்.

   அதனால் இனி அவளின் தாய்மாமாக்களுக்கு எந்த உரிமையை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்று.. அன்றிலிருந்து இன்றுவரை தான் விட்டதை நிறைவேற்றிக் கொள்ள..

 

    ஒருதெரு தள்ளி இருக்கும் சத்யாவின் வீட்டில் இருந்து மேளதாளத்துடன் முறைமாமா, காதலன், கணவனாக போகிறவன் பட்டங்களுக்கு உரியவனாக.. தன்மேல் அக்கறை உள்ள தனக்கு விருப்பமானர்கள் மற்றும் ஒரே உடையில் இருக்கும் மாமா, அத்தை, அக்கா, தங்கைகளை அழைத்துக் கொண்டு.. வேந்தன் தன்னவளிற்காக வாங்கிய நகைகள், உடைகளில் பாதி மற்றும் சீர்வரிசை பொருட்களுடன் அதனையும் வைத்து எழிலரசி முன் அவளை மயக்கும் புன்னகையுடன் பார்த்து வந்தான்.

 

    எழிலரசியின் பின்னால் அவளின் பெரியப்பா வீட்டில் இருந்து வேந்தன் வாங்கிய நகைகள், உடைகளில் மீதி மற்றும் சீர்வரிசை பொருட்களுடன் அவளின் மாமா, அத்தை, அக்காக்களில் பெண்கள் பச்சை, மஞ்சள் இரண்டும் கலந்த வண்ண சேலையிலும், ஆண்கள் மஞ்சள் சட்டை அணிந்து ஒரே உடையில் இருந்தவர்கள் மற்றும் சில உறவினர்கள் அவளுடன் இணைந்தனர்.

 

    மணமக்கள் வேந்தன், எழிலரசி மற்றும் மொத்த குடும்பத்தினரையும் எழிலரசியின் அப்பாஅருணாச்சலம், அம்மா லட்சுமி, அண்ணா இன்பன் வரவேற்று வீட்டிற்கு உள்ளே அழைத்து சென்று..

 

   இருவரையும் அலங்கரிக்க பட்ட இடத்தின் முன் அமர வைக்க.. அவர்கள் முன் வயதானவர்கள் மட்டும் உட்கார்ந்து.. மற்றவர்கள் ஹாலில் யாரும் உட்கார முடியாமல் நிற்கும் அவளவிற்கு அவனின் சீர்வரிசை பொருட்கள் இருந்தது.

 

 

  

    

    

  

   

  

  

   

  

   

  

  

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!