நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 41.4
நாம் 41(4)
மெல்லிய புன்னகையுடன் தன்னவளின் நெற்றி புருவத்தை நிவியபடி.. ” நான் சொல்லி.. அதைகேட்டு.. எங்க அதற்கு நீ தான் காரணம் என்று சொல்லி அழுவியோ?. என்ற பயம்!. தான். மறைத்து சொல்லகூடாது.. ” நினைக்கல. முடிக்கும் முன்.. அவன் வாயை கைவைத்து முடியிருந்தாள்.
Advertisement
” ம்.. நான் வினோ அண்ணி சொல்லும் போதே அழுதேன். நீ சொல்லியிருந்தா நான் நான் ஏன் டா நீ என்ன.. ” பார்த்த??… என்று முடிக்கும் முன்.. தன்னவளின் கழுத்தை வேகமாக பக்கத்தில் இழுத்து அவளின் இதழை சிறையெடுத்து.. அதற்கு வலித்து அழும் அளவிற்கு முத்தம் என்ற தண்டனை கொடுத்தான்.
” நீ அழுவியோ என்பதை விட.. இதுபோல சொல்லி விடுவியோனு தான்.. பயந்தேன்டி!.. ”
அவளின் கால்களை சேர் மீது வைத்துவிட்டு.. கட்டியில் அமர்ந்த அடுத்த நொடி அவளின் இதழை மீண்டும் சிறையெடுத்து இம்முறை இதழிற்கு மருந்திடும் விதமாய் மென்மையாய் முத்தம் பலமுறை பதித்தும்.. அடுத்து கண்கள், கன்னங்களில் பலமுறை முத்தம் கொடுத்து.. அவளை தன்னுள் இறுக்க புதைத்து கொண்டான்.
Advertisement
ஒருசில நிமிடங்கள் கழித்து தன்நிலைக்கு வந்தபின் அவள் கால்களின் அருகில் டேபிள்பேன் வைத்துவிட்டு.. கட்டியில் அமர்ந்து அரசியை தோளில் சாய்ந்து கொண்டு கைகளுக்கு ஆரம்பித்தான்.
Advertisement
அரசி தன்னில் ஒன்றாமல் பட்டும்படாமல் தோள் சாய்ந்துயிருந்தால்..
‘ தான் முன்பே கூறியிருக்கலாம் தன் தவறை உணர்த்து.. ‘ பெருமுச்சு விடுத்து.. நெற்றி முட்டி அவனை பார்க்கவைத்து..
” அரசிம்மா.. வினோவை பார்க்க ஆரம்பித்ததில் இருந்து.. மெடிக்கல் படித்து.. கைனகாலஜிஸ்ட் டாக்டர் ஆகனும் என்று தான் நினைத்தேன். அதற்கு ஏற்றார்போல பப்ளிக் எக்ஸாம் பிரிபேர் செய்தேன் தான்.
Advertisement
ஆனா நாம்ம படித்து முடித்து.. வேலை பார்க்கும் போது.. முழு மனசோட.. ஈடுபாட்டோட நேரம் காலம் பார்க்காம மருத்துவம் பார்க்கனும். அதனால நம்ம விருப்பியதை.. விருப்பபட்ட நேரத்திற்கு செய்ய முடியுமா?. முடியாதா என்று தெரியாது. மெடிசன் படிக்கனுமா?. வினோவிற்கு செய்யவது போல செய்வதற்கு படிக்கனும் அவசியம் இல்லயேனு பலமுறை தோன்றியிருக்கு.
அந்த சமயத்தில் தான் என் முயல்குட்டி என்னோட முதல் பேஷண்டா வந்து.. என் கூட ஒருமணி நேரம் இருந்துட்டு.. என்னையும்.. என்னோட எதிர்காலத்தை மாற்றிட்டு போயிட்டா. ”
அவன் கூறியதும் ‘அப்படியா!. ‘ என கன்னத்தில் முத்தம் கொடுத்து கேட்க.
‘ ஆம் ‘ என புன்னகையுடன் நெற்றி முட்டி.. “ ரிசர்ச் பற்றிய ஈவென்டில் தான் ராகேஷ் முதலில் அறிமுகம். அவன் மூலம் தான் இரண்டு பேரையும் பார்த்தது.
டாக்டருக்கு படித்து இருந்தா டாக்டரா மட்டும் தான் இருந்துயிருப்பேன். ஆனா இப்ப என் முயல்குட்டியால்.. இயற்கை வைத்தியம் முறையில் உடம்பிற்கு மேல் ஆரோக்கியமா, அழகா இருக்க பயன்படுத்தும் பொருட்களை கண்டுபிடித்து கொடுக்குறேன்.
அப்பா பிஸ்னஸ் பார்க்க கொள்ள முடிந்தது. என் பெரிய முயல்குட்டி பிடித்த.. வரபோற குட்டி முயல்குட்டிகளுக்கும் பிடிக்கும் என்று என் அரசியோட சேர்ந்து.. நானே எதிர்பார்க்காத ஒன்றை ஆரம்பித்து இருக்கோம். எதிர்பார்க்கும் மற்றொன்று ஆரம்பிக்க போறோம்.
இது எல்லாம் நடக்க காரணம் அன்று உன்னைய பார்த்தினால் தான். எல்லாவற்றிக்கும் காரணம் நீதான்டி.
அதனால வினோ சொன்னது கூட.. இதையும் ஞாபகம் வைச்சுக்கோ. சரியா. ” கைகளுக்கு வேகமாக போட்டபடி கூறிக் கொண்டுயிருந்தவன்.. அரசியிடம் இருந்து பதில் வராமல் இருக்கவும்.. அவளின் முகம் பார்க்க..
அவளோ அவள் இதழை தடவிய படி முறைத்திருந்தாள். மெல்லிய புன்னகையுடன்.. ” ஓய் உன்னைய லிப்பாம் தடவ கூடாது சொன்னது மறந்து போச்சா?. நான் கோபமா அடுத்த வார்த்தை வரக்கூடாது என்று சாதாரணமாதான் ஆரம்பித்தேன். ஆனா வன்மையா மாறியதற்கு உன் இதழ் தான் காரணம். ”
” ஓ.. அப்ப இரண்டாம் தடவை மட்டும் எப்படி மாறியது?. ”
” ம்.. எனக்கு இருந்த கோபத்திற்கு அப்பயும் கொடுத்துயிருப்பேன்.. பாவம் முயல்குட்டி. வட்டியும் முதலுமா நாளைக்கு.. ” முடிக்கும் முன்.. அவனே பாதியில் நிறுத்தி நிமிர்ந்து..
அழுது சிவந்துயிருக்கும் நுனி நாசியில் மென்முத்தமிட்டு.. ” சாரி டி. நான் முன்னாடியே சொல்லியிருக்கனும்.. இன்னைக்கு பார்த்து தெரிந்து போக.. முயல்குட்டிய வருந்தபட வைத்து அழவச்சுடேன். ”
‘ நீ இல்ல முயல்குட்டி வருந்தாதே ‘ என தொடுகை மற்றும் முத்தம் மூலம் சிறிது தெளிந்தவள்.. விளக்கம் மூலம் முற்றிலும் தெளித்து.. இதே அறையில் குழம்பி இருந்த தன்னவன்.. தன்னால் தனுவின் மனம் தெளிவாகி.. ஒரு முடிவு எடுத்துகிறான். அதன்மூலம் அவன் விரும்பியது.. அவனே எதிர்பார்க்காத உருவான கம்பெனி என பல நல்லது.. நடந்து இருக்கிறது என்று நிம்மதி அடைந்து..
‘ இல்லை ‘ என அவனின் தோளில் புதைத்துக்கொண்டு.. மெஹந்தி போடுவதை தொடர வைத்து…
” தனு நீங்க அந்த வயதிலே அண்ணா பார்த்துக் கொள்ள கூறியது.. என்ஜிஓ மூலம் பெண்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து உதவி செய்வது. என்னைய ஐந்து நாளா பார்த்துகொள்ளும் முறை.. டாக்டரிடம் நீங்க என்னைய, குழந்தை பற்றி கேட்ட விரிவான கேள்வி, விளக்கம் எல்லாம்.. நல்லா படிக்கும் நீங்க ஏன் டாக்டருக்கு படிக்கல.. படித்து இருக்கலாமே அப்ப தோனுச்சு.
பின்ன நீங்க பார்த்ததில் இருந்து தொடுவதற்கும்.. முத்தம் கொடுப்பத்திற்கும்.. சிலநாட்களாக நீங்க என்னிடம் நடந்து கொள்ளும் முறை.. அப்படியே வேறயா இருக்கு. நேற்று வீட்டிற்கு வந்தபின்ன நீங்கதான் எனக்கு சேலையே மாற்றி விட்டீங்க. நான் தூங்கிட்டு இருந்தாலும் நீங்க தொடும் விதம் நல்லாவே நான் உணர்ந்தேன்.
அதில முன்னாடி நடந்து கொண்ட முறைதான் தெரிந்தது. இன்னைக்கு கண்ண கட்டிட்டு நீங்க தொட்ட விதமும், ஒரு முத்தமே சொல்லுச்சு.. நான் உங்களுக்கு எவ்வளவு தேவைனு. இதுநாள்வரை தனியா இருந்து.. எப்படி நீங்க இத்தனை வருடமா கட்டுபடுத்திட்டு இருந்தீங்க? அதுவும் ரொம்ப விருப்பும் பொண்ணுகிட்ட எல்லோராலையும் முடியாது.. இப்பதான் அதுவும் என்னாகதான் உங்க உணர்வுகளை என்னிடம் காட்டுறீங்க. அது எப்படி இரண்டுவிதமா சர்வ சாதாரணமா உணர்வுகளை கட்டுபடுத்தி மாறி மாறி நடந்துக் கொண்டு.. இரண்டுமே வேறு ஆள் மாதிரி கூட இருப்பீங்க. எப்படி?. எப்படிதான் நினைத்துயிருக்கேன்.
சீர் சடங்கு முடிந்து அப்பா, மாமா கிட்ட பேசிட்டு இருந்தபோது.. வினோ அண்ணி.. தீபாஅண்ணிக்கிட்ட தனக்கும் பெண் குழந்தையா இருக்கனும் சொல்லிட்டு இருந்தபோது.. அண்ணா இந்நேரம் டாக்டர் ஆகியிருந்தா.. அவரே ஸ்கேன் பார்த்து என்ன குழந்தைனு?. சொல்லியிருப்பாருனு சொன்னாங்க.
என்கிட்ட அவங்க சொல்ல. ஆனா கேட்ட எனக்கு அப்பதான் நீங்க என்னிடம் டாக்டரா, தனு, தனுமாமா நினைத்து நடந்துயிருக்கீங்கனு புரிந்தது.
எனக்கு வலி தெரியமா நல்லா பார்த்து கொள்ளும் நீங்க.. இன்னும் படித்துயிருந்தா எவ்வளவு பேருக்கு உதவியிருக்கும் அந்த எண்ணம் தான்.. என்னால தான் நீங்க டாக்டர் படிக்காம.. படிப்பு விஷயத்திற்கும்.. நான் காரணமோ? என்று தோன்றி அப்படி கேட்க வந்தேன். “ மருதாணி காய்ந்திருந்த மற்றொரு கையால் ‘சாரி தனுமாமா.. ‘ என கழுத்தை கட்டிக்கொண்டாள்.
அவளவன் அவள் கூறியதற்கு பதில் அளிக்க விருப்பமால் அமைதியாக இருக்க.. அவன் முகத்திற்கு.. தன் முகம் நிமிர்த்தி.. ” தனுமாமா அதான் சாரி சொல்லிடேன் தானே. பின்ன ஏன்டா அமைதியா இருக்க?. ” பாவமும், கோவமும் கலந்து கேட்க..
அவளை முறைத்து கையை எடுத்துவிட்டு.. அவன் அணைப்பில் இருந்து விடுவித்து.. ” அரசி நீ வினோ சொன்னதை கேட்டு உனக்கு தோன்றியது எதுவும் தப்புல்ல. ஆனா நான் உன்னைய பார்த்து இருக்க வேண்டாம்.. என்று சொல்ல வந்தது தான் தப்புடி.
விரும்பும் பெண்ணிடம் தன் உணர்வுகளை கட்டுபடுத்தி.. உனக்கு செய்யதை போல செய்வதற்கும்.. குழந்தை பற்றி கேட்பதற்கும்.. டாக்டருக்கு உரிய பக்குவமும்.. அறிவும் தேவையில்ல.
உண்மையான காதலோடு.. வாழ்க்கை துணையா நினைக்கும் ஆண் எல்லோருக்கும் அதுதானா வந்துடும். நான் அவங்களில் ஒருத்தன் தான். அதனாலதான் நீ சொன்னவுடன் அமைதியா இருந்தேன். ” அவளை பார்க்காமல் கூறியபடியே அவன் வேலையை பார்க்க..
அதில் கடுப்பாகி.. ‘ ஏதோ புரியாம சொல்லிட்டேன் ரொம்ப பண்ணுறான்.. போடா தனுமாமா ‘ என மீண்டும் பட்டும்படாமல் தோள் சாய்ந்தாள்.
சில நிமிடங்கள் பார்த்தான். இன்னும் அதே நிலையில் இருப்பவளின் மேல் அவளவன் அவளை விடஅதிகமான கடுப்புடன்.. அவளை நிமிர்த்தி.. ” அதான் நான் உன்கிட்ட சொல்லாதற்கு தண்டனையா.. நீ சொன்னதை நல்லா காது குளிர கேட்டேன். நீ சொன்னதற்கு நல்லா வாங்கி கொண்ட. ” புன்னகையை அடக்கி இதழை பார்த்து கூறி..
” பின்ன எதுக்குடி இப்ப இப்படி சாய்ந்து இருக்க?. ”
அவனின் கன்னத்தை கிள்ளி.. ” நீ அமைதியா இருந்த சரி. எதுக்குடா என் கைய எடுத்துவிட்ட?. ”
ஓ.. புன்னகையை கட்டுபடுத்தி.. ” நீ என்னை கட்டிபிடித்த அழகு அப்படி. இன்னும் கொஞ்ச நேரம் விட்டுயிருந்தா.. நான் உன் கைக்கு மருதாணி போடும் எண்ணம் இல்லாமல்.. வேற எண்ணத்தில் இருந்துயிருப்பேன். ” அவள் புரியாமல் முழிக்க..
‘ முயல்குட்டி ‘ என அவளை இழுத்து மீண்டும் அதுபோலவே போட்டுக்கொள்ள.. அடுத்த நொடி இனிமையாக அதிர்ந்தாள். தான் அவனின் மேல் நன்றாக அழுத்தி கட்டிக்கொண்டு இருந்துயிருக்கிறேன். ஆனால் தான் அப்போது உணராததை இப்போது உணர்ந்து.. அதில் சிலிர்த்து ஒன்றும் கூறாமல் நல்லபிள்ளையாக தோளில் நன்றாக சாய்ந்து கொண்டாள்.
அவனோ சிரிப்புடன் ” என்னடி.. அமைதியாகிட்ட?. ”
மீண்டும் கன்னத்தை கிள்ளி.. ” நாம்ம எவ்வளவு சீரியசா பேசிட்டு இருந்தோம். நீ என்னடானா.. அந்த நேரத்திலும்.. ” முடிக்கும் முன்..
அவள் இதழில் தன் இதழ்பதித்து எடுத்து.. ” முயல்குட்டி உன்கிட்ட மட்டும் தோன்றும் உணர்வு.. நாம்ம கோபத்தில் இருக்கும்போதும் கூட வரும்டி. இப்ப நாம்ம பேசியது நம் மனம் சம்பந்தபட்டது. அப்ப நீ வந்து இப்படி கட்டிபிடித்தா. தோன்றாமா இருந்தான்டி தப்பு. ஏதோ நான் அப்ப மருதாணி போடும் சமயம் என்பதால் நீ தப்பித்த. ” அவனை நிமிர்த்தி..
‘ ஓ.. இல்லையென்றால்?. ‘ புருவம் உயர்த்தி கேட்க. மருதாணி போட்டு முடித்திருந்த தைரியத்தில்.. கள்ளபுன்னகையுடன் ஏதோ கூறவர.. கதவு தட்டு சத்தம் கேட்டது.
‘ அச்சோ மறந்தே போயிட்டேன். ‘ பதறி.. ” முயல்குட்டி திலகன் தான். ” அவளை நிமிர்த்தி.. கோனை வைத்து விட்டு.. மருதாணி படாமல் இருக்க போட்டுயிருந்த துணியை அவசரமாக எடுத்து வைத்துவிட்டு.. அரசியின் கால்களை ஒருபார்வை பார்த்து.. பின் கதவை திறக்க.. அங்கு திலகனுடன் இளமதியும் சேர்ந்து கோபமாக முறைத்திருந்தனர்.
அவர்கள் தொடங்கும் முன்.. ” ஹேய் கொஞ்சமாது கல்யாண மாப்பிள்ளை, பொண்ணு மேல அக்கறை இருக்கா?. அவங்களை பார்க்க வரும்போது ஏதாவது குடிக்க, சாப்பிட எடுத்துட்டு வராம.. வெறும் கையுடன் வந்து நிக்குறீங்க. அதுவும் பார்வையெல்லாம் பலமா வேற இருக்கு?? “
இதனை இருவரும் ஒருபார்வை பார்த்து.. ” ம்.. இது வெறும் கை இல்லாடா.. உன்னைய அடிச்சு வளர்க்காமா விட்டதால.. நான்கு அடி கொடுக்க போற கை. ” அவனை உள்ளே தள்ளி திலகன் அடிக்க போக. அறையை பார்த்து.. அப்படியே அதிர்ந்து.. ” டேய் உனக்கு இன்னும் கல்யாணம் முடியல தானே?. “
தன் கை என எண்ணி அருகில்.. அவனை போலவே மனதில் நினைத்து இருந்த இளமதி கையை அழுத்தி கிள்ளி விட.. அவள் ” அம்மா.. ” அலறி திலகனை கையில் அடித்து.. ” ஏன்டா என் கைய கிள்ளின?. ”
நான் எப்ப உன்னை என அதிர்ச்சி மாறாமல் இளமதியை பார்க்க.. அவள் கை தடவியதில் புரிந்து.. ‘ ஓ.. அதான் நமக்கு வலிக்கலையா?. ‘
” சாரி மதி.. என் கைனு நினைத்து.. ” முடிக்கும் முன்.. அவனின் முழிப்பதை பார்த்து புன்னகையுடன்.. ” சரி சரி நம்ம வந்த வேலைய பார்ப்போம். ”
” இரு இரு.. ” மெதுவாக அரசியை கட்டிலில் இருந்து இறக்கி நேராக நிற்க வைத்து கொண்டுயிருக்கும் வேந்தனிடம் திரும்பியவன்.. ” டேய் இந்த ரூம் ஏன்டா இப்ப அலங்காரம் செய்து இருக்கு?. “
இருவரையும் பார்த்தவன்.. ” நான் என்ன சொன்னாலும் நீங்க கூச்சபடமாட்டிங்க என்றால்.. நான் பதில் சொல்லுறேன். ” தானும், அரசியும் சரியாக இருக்கிறோமா? என பார்த்தபடி கேட்க..
அய்யோ விவகாரமா சொல்லிவிடுவானோ?. இளமதி வேற இருக்காங்கா.. அவளை பார்க்க.. அவளோ கூச்சம் என்றதும் ‘ எனக்கு பதிலே வேண்டாம் போடா ‘ என திலகன் யோசிக்கும் போதே எழிலரசியின் கால்களில் போட்டுயிருந்த மருதாணி நன்றாக காய்ந்து நடக்கும் அளவில் உள்ளதா?. என பார்த்திருந்தாள்.
‘ அப்பாடா ‘ என அவளை பார்த்து வேந்தனை அருகில் இழுத்து ‘ சொல்லாடா ‘ என பார்த்தும்.. ‘ வேறு யாராவது வந்து அறையை பார்த்து ஒருமணி நேரமாக இருக்கும் இருவரையும் தப்பாக நினைத்து பேசியிருந்தால்?. ‘ என்றும் அக்கறை பார்வையும் இருந்தது.
அதனை புரிந்து.. ” டேய் இந்த ரூம் சாவி என்கிட்ட, நிகிழ்ச்சி ஏற்பாட்டாளர் அவரிடம் மட்டும்தான் இருக்கு. யாரும் உள்ள வர முடியாது. ”
‘ சரி ‘ என தலையசைத்து.. அறை மீது பார்வை காண்பிக்க.. புன்னகையுடன்… ” என்னடா கேள்வி?. இந்த ரூம் பற்றி சொல்லியிருக்கேன் இல்ல. அதான் தனியா மருதாணி போட முடிவு செய்தவுடன்.. இந்த ரூம்மை லைட்டா அலங்காரம் செய்ய சொன்னேன். அவங்க கொஞ்சம் அதிகமா செய்துட்டாங்க. ” மெல்லிய சிரிப்புடன் கூறினான்.
‘ இது கொஞ்சம் அதிகமா?. ‘ என தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக பார்வை செலுத்தி.. ‘ போலாம்?. ‘ என கையில் சைகை செய்ய.. வேந்தன் தன் அரசியை பார்த்தான். அவள் ‘ சரி ‘ தலையசைத்தபடி அவனிடம் பொறுமையாக அடிவைத்து வந்தவளை.. அள்ளி தூக்கி கொண்டு ‘ போலாம் ‘ என நண்பனை பார்க்க.. அவன் தலையில் கை வைத்து நின்றான்.
பின்னால் நின்ற இளமதி ஒரு நொடி அதிர்ந்து பின் சிரிப்புடன்.. ” வேந்தன் எல்லோரும் வெளிஹாலில் தான் இருக்காங்க. “
ஓ.. ” கீழ இடம் இல்லையா? ” அரசியை மெதுவாக இறக்கிவிட.. ” ம்.. இடம் இருக்கு டா. எவ்வளவுநேரம் அங்கயே இருக்கனு சாப்பிட்டு மாடிக்கு கூட்டிட்டு போயிட்டேன். நீ சொன்ன நேரத்திற்கு கீழ வந்தபோது இங்கேயே உட்காரலாம் சொல்லிட்டாங்க. ” மெல்லிய குரலில் திலகன் கூறியதை கேட்ட படி நால்வரும் ஹாலிற்கு செல்ல..
அங்கே வேந்தன், திலகன், வினோத், இளமதி நால்வருடைய பள்ளி தோழன்கள், தோழிகளில் என பதினைந்து பேர் அதில் தோழன்கள் ” வேந்தன் ” கட்டியணைத்தும்..
எழிலரசியை ” ஹே குட்டிம்மா.. ” என இளமதியின் தோழிகள் சிலர் வரவேற்றனர். அனைவரும் உள்ளூரில் தான் இருக்கிறார்கள். ஆனால் திருமணம் விழாக்களில் மட்டுமே அதுவும் திருமணம் என்றால் அடுத்தநாள் மணமக்களுடன் பேச முடியாது என்பதால் முன்தினம் தான் சந்திப்பு இருக்கும். இதில் வேந்தனை சில வருடங்கள் கழித்து பார்க்கார்கள். வினோத், இளமதி தான் அனைவரையும் அழைத்தது.
புன்னகையுடன் அவனும் தோள் அணைத்து பதில் மரியாதை செய்ய.. சில தோழிகளை வரவேற்று.. மற்றவர்களை வரவேற்க திருப்புகையில் அவர்கள் அவனின் அரசியிடம் பேசியிருந்தனர். அவர்களிடம் சென்று வரவேற்று.. அனைவரையும் நலம் விசாரித்தான். பின் அரசிக்கு தன் தோழர், தோழிகளை அறிமுகம் செய்தான். அவள் சிலரை புதிதான பார்வை சிரிப்புடனும்.. சிலரை செய்யும் போது.. இருவருமே தெரிந்தவர்கள் என்ற சிரிப்புடன் பார்த்தார்கள்.
” அரசி.. உனக்கு இவங்களை முன்பே தெரியும்மா?. “
” ம். எங்க வீட்டிற்கு பக்கத்தில் இருக்க மேக்ஸ் டியூசனுற்கு வருவாங்க. அக்கா வீட்டிற்கு கூட்டிட்டு வரும்போதும்.. அவ கல்யாணத்திற்கு கூட வந்தாங்க. “
மெல்லிய புன்னகையுடன் ‘ சரி ‘ என கூறி.. தங்களிடம் திரும்பியவனை.. ” வேந்தா நீ, ஆனந்த், செளமியா, இலக்கியா எல்லாம் மெடிசின் படிப்போம் என்று படிச்சிங்க. அவங்க மூனுபேர் படித்தாங்க. நீ அவங்களை விட ஜாஸ்தி மார்க் தான்.. ஏன்டா படிக்கல? ” அய்யோ என தன்னவளிடம் திரும்ப.. அவள் முகம் மாறியது.
” ஏன்டா என் கல்யாணத்திற்கு வந்துட்டு இப்ப இது ரொம்ப முக்கியமாடா?. ” தன்னவள் முகம்மாறாமல் இருப்பதால்.. ‘ இன்று போய் ஏன் நான் அவளிடம் கூறாதது?. அடுத்தடுத்து மற்றவர்கள் மூலம் கூட்டமாக இருக்கும் இடத்தில் தெரியவருகிறது ‘ புலம்பி அவர்களிடம் கேட்க.
” இலக்கியா அம்மா புது ஹாபிட்டல் கட்ட போறாங்க என்று.. ஆனந்திடம் சொல்லிட்டு இருந்தா. அப்படியே எல்லாம் உன்னை பற்றி பேசினோம். ரொம்ப வருடமா நாங்க கேட்க நினைத்த கேள்வி. “
அப்போது எழிலரசி அவர்கள் பார்த்து பேசிய மூவரில்.. ஆனந்த் தனக்கு காய்ச்சல் போது.. தன் வீட்டில் பார்த்திருக்கிறாள். ஒருத்தியை தெரியவில்லை.. மற்றொருத்திய கூர்மையாக பார்த்து யோசித்தாள். இதனை வேந்தனும் பார்த்தான்.
” மாமா ” அழைப்பில் வேந்தனும் உடன் இருந்தவர்களும் திருப்ப.. அங்கு இன்பா இருந்தான். ” மாமா எல்லோரும் மருதாணி போட்டாச்சு. இனி கிளம்பி விடுவாங்க. அதனால நீங்க அங்க இருக்கனும் என்று.. உங்கள கீழ வந்து பேச சொல்லி அத்தை சொன்னாங்க. ” சரி என இன்பாவிடம் தலையசைத்து நண்பர்களிடம் திருப்ப.. அவர்களும் ‘ போகலாம் ‘ என கூறி.. இன்பா, திலகன், இளமதியுடன் முன்னே சொல்ல.. வேந்தனும் எழிலரசி பின்னே சென்றார்கள்.
” தனு நீங்க பார்த்து பேசிட்டு இருந்தவங்களில் இருந்து.. எனக்கு.. ” முடிக்கும் முன்.. ” முயல்குட்டி அவங்க நீங்க கேட்க வந்தவங்க மகள் தான். அவங்களை விடு. உனக்கு நடக்க பிரச்சனை இல்லையே. ”
புன்னகையுடன்.. ” இருந்தா தூக்கிட்டு போவீங்களா?. ” முன்னால் நண்பர்களும் அண்ணாவும் இருப்பதால் அவள் கேட்க.. ” ஏன்டி மாட்டேனு நினைக்கிறீயா. ” என்றவாறே தூக்க போக.. அரசி அவனை முறைத்து.. ” தனு நான் சும்மாதான் சொன்னேன். ” பக்கவாட்டில் நகர..
அவளை முறைத்தவாறே.. அவளை தோள் பிடித்து நிறுத்தி.. ” படிகட்டு அரசி. அதான். ”
லெஹங்கா பாவாடை தடுக்கி வழிக்கிடுமோ?. என்ற பயத்தில் அவளின் வார்த்தையை பொருட்படுத்தாமல் தூக்கிகொண்டான். முன்னே சென்ற இன்பாவை தவிர யாரும் கவனிக்கவில்லை.
அவளின் இதழை பார்த்தான். நல்லவேளை ஒன்றும் தெரியவில்லை. இதனை பார்த்தவள் சிரிப்பை அடக்கி மெல்லிய குரலில்.. ” தனுமாமா உதடு உள்ளதான் காயம் ” அவனும் மெல்லிய குரலில் ” கேடி முயல்குட்டி அங்க நான் கொடுக்கவே இல்ல. வேண்டும் என்றால் இப்பவே கொடுக்கட்டா. ” கீழே வந்தவுடன் இறக்கிவிட்டவாறே கேட்க.
” ஏன் உங்க முத்தம் பாக்கி இருக்கா?. ” அரசி நடந்தவாறே கேட்க.. ” ம்.. ஒரு மாதம் முன்னே வந்ததால அது கிடக்குது நிறைய. அதை இன்னைக்கு நைட்டே கொடுத்து.. நாளைக்கு.. இன்னைக்கு டிரைனிங் கொடுக்கலாம் இருக்கேன். ”
நாளைக்கு என்று இரவை பற்றி கூறும் வேந்தனிற்கும்.. கேட்ட அரசியும்.. இரவு சடங்கை எண்ணி என்பதை விட.. நாளை தங்கள் திருமணம் என்றதும்!. தானாக கைகள் கோர்ந்து கொண்டு இருவரும் மலர்ந்த முகம், விரிந்த புன்னகையுடன் வெளியே வந்தனர்.
இதனை அழகாக சிலரின் போன் கேமிரா.. புகைபட கலைஞரின் கேமிரா, வீடியோ படம்பிடித்தது.
