Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 42.2

 

நாம் 42(2)

 

    பிரம்ம முகூர்த்தம் என்பதால் வெண்ணிலா இவ்வளவு நேரம் இவர்களின் கூத்தை ரசித்திருந்தவள்..



Advertisement

   இவர்களை ஆதவனும் பார்த்து.. ஆசிர்வாதம் செய்ய விருப்பியது. அதனை அவரும் ஏற்று மெல்ல இருள்விலக்கி.. தன் இளஞ்சிவப்பு வண்ணத்தை காண்பித்து.. தான் வர போவதை நிலாவிற்கும், மணமக்கள் மற்றும் அனைவருக்கும் உணர்த்தியது.

 

     வேந்தன் தன்னை என்றும் கட்டியிழுக்கும்.. தன் அரசியின்  கருவிழி கண்முன் மெல்லிய புன்னகையுடன் திருமாங்கலத்தை காண்பித்து.. ” என் முயல்குட்டி உன் தனுமாமாகிட்ட வர சம்மதமாடி. ”

Advertisement

   அவளும் மெல்லிய புன்னகையுடன்ம்.. ” சிறிது கலங்கிய கண்களுடன் வேகமாக தலையசைத்தாள்.

Advertisement

 

   அரசி சம்மதம் கூறிய அடுத்தநொடி.. திருமாங்கலத்தை சரியாக மார்புவரை வைத்து. ” லவ் யூ முயல்குட்டி!. அரசி!. ” கூறியபடியும்.. அவளின் கண்கள் பார்த்தும், அடுத்து கழுத்து மச்சத்தில் ஒரு பார்வை என தன்னவளின் கழுத்தில் மூன்று மூடுச்சிட்டான்.

 

Advertisement

     இருவரின் பெற்றோர்கள், அண்ணா இன்பன் ஆனந்த கண்ணீர் பெருக்க அட்சதையை அனைவருடன் தூவினர்.

 

    வேந்தனின் அரசி.. அவர்களின் திருமாங்கலத்தின் மிகச்சிறிய வடிவம்.. அதனை தங்கசெயினில் கோர்த்து இருக்க.. அதனை தன்னவனின் கண்முன் விரித்து காண்பித்து பார்க்க.. ” முயல்குட்டி சம்மதம்டி. ” அவள் கேட்க தேவையில்லை.. அவசியம் இல்லை என அதற்கு முன் அரசிக்கு பதில் கூறியவுடன்.. அவளின் முன் தலைசாய்ந்து காண்பிக்க.. அவள் கண்கலங்கி தன்னவனின் கழுத்தில் போட்டுவிட்டாள்.

 

    வேந்தனின் செயின் அவனின் கழுத்து, மார்பு இடைபட்ட இடத்தில் இருந்தது. பின் வேந்தன் குங்குமம் எடுத்து.. அரசியின் நெற்றி வகுடு மற்றும் நெற்றியில் வைக்க கூற.. அவளை தன் தோள்வளையில் வைத்து..

   நெற்றிமுத்தம் கொடுத்துபின்.. பொறுமையாக அழாக இரு இடத்திலும் வைத்துவிட்டு.. மீதியை எப்போதுபோல தன் நெற்றியில் வைத்து கொண்டான். ‘

 

   வேந்தன் தான் திருமாங்கலத்தை தான் அணிவிக்கும் போது எதுவும் இடையில் வரக்கூடாது என அவளிற்கு கொண்டை போன்ற தலைஅலங்காரமும்..

   நெக்லஸ், ஆரம் இடையே திருமாங்கலம் அனைவருக்கும் நன்றாக தெரியவேண்டும் என சிவப்பு தாமரையினால் கட்டிய ஆண்டாள் மாலையை.. திருமண மாலையாக அணிந்திருந்தார்கள்.

   பால், பழம் கொடுத்து வந்த பின்மாலை மாற்றலாம் என கூறி இருவரும் சென்று.. சடங்கு முடித்து.. சிலநிமிடங்களில் தலைஅலங்காரம் செய்தவாளாக எழிலரசி வந்தாள். ‘

 

    இதன்இடையில்.. வேந்தனின் எழிலரசி மீதான காதல் தெரிந்தவர்களில் இருவரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கும் ஏன்?. வேந்தன் பொன்னுருக்கலின் அன்று சிறிது தங்கம் வாங்கி வைத்தான்.

   மாங்கல்யம் அதில் கோர்க்கபடும் தங்கத்தினால் இருக்கும் இன்னும் சிலவற்றை தனித்தனியாக வைத்து மஞ்சள் கயிற்றில் கோர்க்கமால்.. அனைத்தும் சேர்த்தார் போல் தாலி செய்தான் என புரிந்துகொண்டனர்.

 

   அவனின் அன்பை காதலை தெரிந்தவர்களில்.. அவர்களின் விருப்பமார்கள்.. எழிலரசி போட்டு விடும்போது கெட்டிமேளம் கொட்டச் சொல்லியும்.. அதனுடன் விசில் சத்தமும் பறந்தது. அனைத்தையும் பார்த்து பெரியவர்கள் வியந்தும், உவகையும் அடைந்து மீண்டும் அவர்கள் மேல் அரிசி தூவி அட்சதை, மலர்கள் தூவினர்.

 

   இதனை ஒருசிலர் முடியல எனவும்.. தெரியதவர்கள் ஆரம்பத்தில் இருந்தை மணமகனை நினைத்து புதுமை, சிறு வியப்பு, சொல்லவதற்கு ஒன்றும் இல்லை என பார்த்தனர்.

  

  வேந்தன், எழிலரசியின் மாற்று மாலையாக பச்சைவண்ண ஆர்க்கிட் மாலையை..

    வேந்தனின் தாய்மாமா ராகவன், கணேஷ் எழிலரசியிடம் கொடுக்க.. அதனை அவளவன் புன்னகையுடன் குனிந்து வாங்கி கொள்ள.. வேந்தனிடம் சக்கரவர்த்தி, சுந்தர்ராஜன், வரதராஜன் கொடுக்க.. தன் அரசி அவளின் இதழின் மீது பார்வை சென்று வந்தபின் போட்டுவிட்டான்.

 

   பின் வேந்தன், எழிலரசியும்..  இன்பா, யோகாவின் நடுவே தங்களின் வலதுகையை பிடித்து அக்கனியை வலம்வந்த பின்..

   எழிலரசி அம்மியின் மீது வேந்தனின் கைகளுக்குள் தன் வலதுகாலை வைத்தும்.. தனது கையை அவனின் தோள்பிடித்து நின்றாள்.

   வேந்தன் அவளின் அடிபாதம் வருடி.. அவளின் சிலிர்ப்பை பார்த்தபடி இருகால்களிலும் மெட்டி அணிவித்து.. அருந்ததி பார்த்து.. ஐயரிடம் ஆசிர்வாதம், பெரியவர்களிடமும் ஆசிர்வாதம், அட்சதை பெற்று.. காப்பை கழட்டி.. ஆரத்தி எடுத்து என.. 

   வேந்தன், எழிலரசி இருவரும் தங்களின் உலகத்தில் இருந்து பாதிநேரம், மற்றவர்களின் உலகத்தில் பாதிநேரம் என திருமண சடங்குகளை நிறைவு செய்தனர்.

 

   வந்த உறவினர்களில்.. சிலர் ஏற்கனவே சாப்பிட சென்றுயிருக்க.. சிலர் அவர்களின் அடுத்தடுத்து செய்ய ஆரம்பித்த சடங்களை மகிழ்வுடன் மேடை அருகே சென்று அமர்ந்து  பார்த்தனர்.

   ஏனெனில் மேடையில் அவர்களுடன் இருவரின் பெற்றோர்கள் இன்பா, யோகா மட்டும்தான் இருந்தனர். யோகாதான் உடன் இருக்கவேண்டும் என்பது எழிலரசியின் வேண்டுகோள்.

   அதனை வேந்தன் சித்ரா, சாந்தி கூறும் வினோதினி குழந்தை உண்டாகி இருப்பதால்.. உடல்நிலை காரணமாக புன்னகையுடன் சரி எனவும், வசுந்தரா விருப்பமும், விருப்பம் இல்லாத  மனநிலையில் இருக்க..

   யோகா அண்ணி செய்யட்டும் என கமலேஷ் சரி என பதில் அளித்துவிட்டான். சித்ராவிற்கு மூவரில் யார் செய்தாலும் முழுமனதுடன் செய்யதால் போதும் என எதற்கும் பதில் கூறவில்லை.

 

  பின் எழிலரசியும் வேந்தனும் அங்குயிருந்த இறைவனிடம் சென்று அவர்களின்  பெயரில் அர்ச்சனை செய்து.. அடி பிரதட்சணம் செய்து.. அங்கு புதிகாக அவள் அடிப்பதற்கு ஏற்ற உயரத்தில் கோயில் மணி இருவரின் பெயரில் இருந்ததை..

   வேந்தன் அவள் தனியாக அடிப்பதை விரும்பாமல்.. தன் மனைவி அரசியை.. கால்பிடித்து தூக்கி தன்னவளை அடிக்க வைத்தான். இதனை புகைபடகருவி அழகாக வேந்தன், எழிலரசியை படம்பிடித்துக் கொண்டது.

 

   அதன்பின் தங்களின் திருமண உணவை இன்பா, நண்பர்கள், சென்னையில் இருந்து வந்த நண்பன் ஆகாஷ், அனு, நிஷா, ராகினி, ஆர்த்தி நான்கு தங்கைகள்.. அவர்களின் வருங்கால துணைகளுடன் சாப்பிட சென்று.. பின்வந்து மீண்டும் மேடையில் நின்றார்கள்.

   பெற்றோர்கள், பெரியவர்கள், ஈஸ்வர், யோகா, இளமதி குடும்பம், வினோ, வசுந்தரா குடும்பம், பிற குடும்பத்தினர், நண்பர்களிடம் வாழ்த்தும், புகைபடமும் முடிந்தனர்.

 

   அதன்பின் மச்சான்கள் என ஆரஞ்சு வண்ண சட்டை மற்றும் பட்டு வேஷ்டியுடன் சென்னையில் இருந்த மூன்று நண்பர்கள் உட்பட திரையில் என பெரிய கூட்டமே வந்து  நிற்க.. அவர்களின் நடுவில் வேந்தன்.. வேந்தனாக நின்று தன் அரசியின் அனைத்து அண்ணா, தம்பிகளுடன் புன்னகையுடன் புகைபடம் எடுத்தான்.

 

  அதனை சிலர் சிரிப்பு, முறைப்பு, கடுப்பு, புரியாமல் என கலவையாக பார்த்தனர்.

   அடுத்து.. பிங் நிற சேலை, அடர்பச்சை நிற பாடர் மற்றும் பிளவுஸ் அணிந்த.. பெண்கள் தனியாகவும்.. பின் அனைவரும் ஒன்றாக இணைத்து பெரிய குடும்ப புகைபடம்..

    தாங்கள் இருவர் மட்டும் என வேந்தன், எழிலரசியும் ஆரம்பித்தில் கோர்த்த கையை விடாமல் அனைத்தையும் எடுத்து முடித்திருந்தனர்.

 

   அதன்பின் உள்ளூரில் இருப்பவர்கள்,அதிக தூரத்தில் இருந்து வந்து நான்கு நாட்களாக இருப்பவர்கள் அங்குயிருந்தே கிளம்பி இருக்க.. ரிசெப்ஷனிற்காக சிலர் மட்டுமே இருந்தனர்.

   அவர்களில் பாதிபேர் ஹோட்டலுக்கும்.. அவரவர் வீடுகளுக்கும் செல்ல.. குறிப்பிட்ட சிலர் மட்டும்.. எழில்வேந்தன் இனிப்பகத்தின் முன்.. மணமக்களாக வேந்தன், எழிலரசி வந்து இறங்கினர்.

   வேந்தன் குடும்பத்தின் அன்னபூரணி உணவகம் ஓட்டிய கட்டிடத்தில் விரைவில் வரப்போகும்.. அன்னபூரணி உணவுப்பொருட்கள் கடையும், கடைதிறந்து இன்றுடன் ஒருவாரமே ஆனா எழில்வேந்தன் இனிப்பகமும் உள்ளது.

 

   இவ்விரு கட்டிடத்தை ஒட்டி.. சில வருடங்கள் ஆனா இருமாடி கட்டிடம் யார் செய்கிறார்கள்?. என தெரியாமலையே.. இரண்டு மாதங்களாக புதுப்பிக்கப் பட்டுயிருந்துஅதற்கான விடை இன்று கிடைத்து.

 

   அதன் தரைதளம் EV ப்ராடெக்ட் கம்பெனியின் ப்ராடெக்ட் ஷோரூம் மற்றும் அனைவருக்குமான அழகுநிலையமாக மாறியிருந்தது.

 

   வேந்தன், அஸ்வின், பார்த்திபன் என பத்துபேர் பணிபுரிவதற்கு, ரிசர்ச்டெஸ்ட் , தற்காலிகமாக மூலப்பொருட்களை வைப்பதற்கு என முதல் மற்றும் இரண்டாம் தளம் மாறியிருந்தது.

 

    மூன்று நண்பர்கள் மற்றும் சில முக்கிய  உறுப்பினர்கள், பத்திரிக்கையாளர்கள் பார்க்க.. எழிலரசி, வேந்தன் இருவரும் சேர்ந்து இக்கட்டிடத்தின் திறப்புவிழா நடந்தினர்.

 

   EV நேச்சர் பீயூர் பியூட்டி ப்ராடக்ட் அண்ட் காஸ்மெடிக்ஸ் கம்பெனியின் புது ப்ராடெக்ட் அறிமுக விழா.. முன்பு கூறி இருந்த நேரம் 10 மணிக்கு  சிறப்பாக தொடங்கியது.

   உடனே அதன் அறிவிப்பும் , இப்போது அறிமுகம் செய்த பொருட்களின் விளம்பரம்.. வேந்தன், எழிலரசி அறிமுகம் செய்த  குழந்தைகள், கர்பிணி பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்களின் அனைத்து தேவைகளுக்குமான ப்ராடெக்ட் விளம்பரம்.. அங்கும்.. அனைத்து தொலைகாட்சி சேனல்களிலும் வந்தது.

 

   வேந்தன், எழிலரசி இன்னும் சிலர் தவிர.. மற்றவர்கள் முதல்மாடியில் வைத்திருக்கும் திரையில் இதனை பார்த்து.. எப்படி?. வேந்தன், ராகேஷ், சந்தோஷ், ரோஹித்..

   இவர்களின் EV கம்பெனியை சத்தமில்லாமல் சிறிது சிறிதாக முன்னேறி.. இன்று பிளாஷ்நீயூஸ் போடும் அளவிற்கு உயர்ந்ததற்கு..

   இவர்களின் தொழில் மீதான ஆர்வம் தவிர.. எடுத்துகொண்ட பணியை விரைவாக, எந்தவித வேலைகளுக்கும் இடையில் குறிந்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற எண்ணம், பக்தி, வெறி இவற்றினால் மட்டுமே சாத்தியம் ஆகும். இதனை இந்த ஒருவாரத்தில் நன்கு புரிந்து கொண்டனர்.

 

   திறப்புவிழா முடித்தவுடனே அஸ்வின், பார்த்திபன், திலகன், வினோத், கதிரவன் மேற்பார்வையில் அடுத்து அறிமுகவிழா மற்றும் உறவினர்களை வீட்டில்விடும் பொறுப்பை கொடுத்து.. 

 

   வேந்தன், எழிலரசி முதலில் பாட்டிவீடு சென்று விளக்கேற்றி.. பால், பழம் சாப்பிட்டு..

   வேந்தனின் வீடு சென்று விளக்கேற்றி.. பால் காய்ச்சி..

   பின் கடைசியாக எழிலரசி வீட்டு பூஜை அறையில் மணமக்கள் சென்று விளக்கேற்றினார்கள்.

   வேந்தன் எழிலரசி அவர்களின் வாழ்க்கையின் மூக்கிய மூன்று வீடுகளுக்கும் சென்று திருமண சடங்குகளை வெற்றிகரமாக முடித்து.. காதலர்கள் இப்போது தம்பதிளாக திருமண வாழ்க்கையை தொடங்கி விட்டனர்.

 

   எழிலரசி..  வீடு வந்தபின் தான் ப்ராடெக்ட் அறிமுகம் மற்றும்  விளம்பரத்தை பார்த்தாள்.

   தன்னவனின் மூன்று நண்பர்களும்.. தங்களின் லக்கிசாம்களின்  திருமணநாள் அன்றே இதனை செய்ய வேண்டும் என்ற மூவரின் ஆசையை நிறைவேற்றி விட்டார்கள் என.. வீட்டு மாடி ஹாலிற்கு தன்னவனின் தோளில் பல முத்தங்களை வாங்கிய படியே வந்தவள்..

   தனுவிடம் கூறி ஹால் ஷோபாவில் அமர்ந்து மூவருக்கும் ஒன்றாக அழைத்து.. ‘ வாழ்த்து, நன்றி, அவர்களின் சோர்ந்திருந்த முகங்களை பார்த்து திட்டு.. தூங்கி எழுந்துதான் மாலை வரவேண்டும்.. ‘ என்ற கட்டளை என அவர்களை பேசவிடாமல்.. அவள் பேசி கொண்டுயிருக்க..

   இவர்களிடம் பேசும் நேரம் அதிகமாகி கொண்டு போவதால் செல்லமாக அவர்கள் பொறாமை கொண்டு.. புன்னகையுடன் நண்பர்களிடம் சைகையில் வைக்க போவதாக கூறிவிட்டு.. அடுத்த நொடி போன்னை பிடிங்கி இணைப்பை தூண்டித்து விட்டான்.

 

   ஏன்டா?. ‘ என கோபமாக திருப்பியவளை அப்படியே அள்ளி கொண்டவன்.. அவளை அள்ளி தன்னவள் அறைக்கு செல்ல எடுத்து வைக்கும்.. ஒவ்வொரு அடிகளுக்கும் அவளின் முகத்தின் பாகம் ஒவ்வொரு முத்தம் மீண்டும் வாங்க ஆரம்பித்தது. முத்த நடையிலே தன்னவளின் அறையில் நுழைந்து ஊஞ்சலில் அமர்ந்து.. இதழுக்கு சிறிதுநேரம் தன் முத்தத்தை பரிமாறினான்.

 

   தன்னுடைய இறுக்கிய அணைப்பில்.. கழுத்துவளையில் படுத்திருந்த முயல்குட்டியின் சேலைபாடரும்.. தாலி கயிற்றின் மஞ்சளும் ஒன்றாக மின்னியது. மஞ்சள் வாசனையுடன் இருக்கும் அவளின் கழுத்து மச்சத்திற்கும் பல முத்தம் கொடுத்தபின்.. அதில் கோர்த்து இருந்த தாலிக்கு முத்தம் கொடுத்திருந்தான். அவனவள் அவனின் செயின் மற்றும் டாலரை வருடிக்கொண்டுயிருந்தாள். இருவருக்கும் பேச்சே வரவில்லை. சில நிமிடங்களில் அப்படியே இருவரும் உறங்கிவிட்டனர்.

 

   ஒருமணிநேரம் மேல் கடந்தநிலையில் இருவரின் போன் சத்ததில் வேந்தன் மட்டும் கண்விழித்தான். போனை எடுத்து ரவிந்திரனின் அழைப்பை ஏற்றான்.. ” சொல்லுங்க ப்பா. “

   வேந்தா.. விஸ்வநாதன், காவ்யா வீட்டில் இருந்து அவங்க அம்மா, அப்பா, தங்கச்சி, அவங்க வீட்டுமாப்பிள்ளைகள் எல்லாம் வரங்களா. ”

   ம்.. சரிப்பா. அரசி நல்லா தூங்குறா. நான் மட்டும்தான் வருவேன். “

 

   இரவு உறங்கவில்லை.. ரிசெப்சனிற்கு அதிக நேரம் நிற்க வேண்டிவரும் இன்னும் சிறிது நேரம் உறங்கட்டும் என கூற..

 

   வேந்தா.. தங்கச்சி வீட்டில் இருந்து வராங்க. மருமக வீட்டில் எழிலரசி இல்லாம இருந்தா நல்லாயிருக்காது ப்பா. “

 

    யோசித்தவன்.. எழுப்பவில்லை எனில்.. பின் இவளுக்கு தெரிந்து திட்டுவா.. ” ம்.. சரிப்பா. அத்தம்மாவை இஞ்சி டீ போட்டு வைக்க சொல்லுங்க. ” அவரும் சரி என கூறி வைத்தபின்.. வேந்தன் தன்னை சுத்தபடுத்தி வந்து..

 

    தலைஅலங்காரம் மட்டும் கலைத்து பூ மட்டும் வைத்து.. கல்யாண உடையில்.. தான் அவள் அணைப்பில் இருந்து சென்றவுடனே உடல் குறுக்கி படுத்திருந்தவளை கால்களை நேராக வைத்து.. அயர்ந்து உறங்குபவளை சட்டென்று எழுப்ப வேண்டாம்.. உடையை மாற்ற மனமின்றி.. நகைகளை மட்டும் கழட்டி வைக்க எண்ணினான். அதனை சில பல முத்தம் கொடுத்து வேந்தன் செயல்படுத்த.. அவனின் அரசி அதனை உறக்கத்திலே விரும்பி ஏற்று அவனுக்கு நகைகளை கழட்ட உதவி புரிந்தாள்.

 

    அவனின் கை ஒட்டியானம் கழட்டும் போதுதான் அவனின் கை இடையில் பட.. அதனால் அரசிக்கு சிலிர்ப்பு, நடுக்கம் ஏற்பட கஷ்டப்பட்டு கண் திறந்தவள் பார்த்தது.. அவளவன் தன் விழி பார்வைக்கு எதிர்பார்த்து.. தன் இடையில் சேலையை விலக்கி முத்தம் கொடுக்க சென்று கொண்டு இருந்தவனை. ஒரு நொடி அதை எதிர்பார்த்திருந்தவள்.. அவனின் இதழ் காட்டியகேடி முயல்குட்டிநக்கல் புன்னகையை வெளிபடுத்த.. ‘ யாரு டா கேடி?. ‘ என்று முறைத்து.. வேகமாக எழ பார்க்க.. அவள் முழுவதும் எழும்முன் அவள் எதிர்பார்த்தை கொடுத்து.. அப்படியே அள்ளி தூக்கி குளியல்அறையில் விட்டு.. பின் முச்சு வாங்கி வெளியே அவன் நிற்க.. உள்ளே அவள் நின்றாள். இருவரின் உணர்வுகளும் அடங்கவே சில நொடிகள் எடுத்ததது.

 

   பின்தான் அவனிற்கு எழுப்பிய காரணம் ஞாபகம்வந்து.. அரசியிடம் கூறியபின் வேந்தன் அவளின் நகைகளை எடுத்து வைத்து.. இதற்கு முன் அணிந்த லட்சுமி உருவம் பதித்த தங்க நெக்லஸ் மற்றும்அதே போலான ஜிமிக்கி, மெல்லிய தங்க ஒட்டியானம் எடுத்து வைத்தான்.

 

   தனு கூறியபின் முகத்தை கழுவி.. மெதுவாக கதவு திறந்து முயல்போல் பதுங்கி வர நினைத்தவளை.. அவளின் கதவு திறக்கும் சத்ததிலே அவளின் எண்ணம் புரிந்து.. வாசலிலே அவளை தூக்கி.. ஊஞ்சலில் தன் மடியில் அமர வைத்து.. முகத்தில் ஆங்காங்கே இருந்த நீர்துளிகளை அதர முத்ததால் துடைத்து.. குளிர்ந்த அதரம் முகத்தின் முடிவிற்கு வரும்போது.. புது மஞ்சள் தாலிமட்டும் அணிந்திருந்தவளின் கழுத்து சிவப்பாய் மாறியிருக்க.. அங்கயிருந்த கருப்பு பொட்டு பளிச்சிட்டு.. வா என அழைக்க.. அப்படியே அவளின் கழுத்து மச்சத்தில் முத்தம் வைத்திருந்த அதரம் கழுத்தில் ஊர்வலம் சொல்லும்போது..

    ‘ தன் முயல்குட்டி மனைவியாகி விட்டாள்!. ‘ என்ற அவனின் மகிழ்ச்சியில் அவளிடம் புதைய நினைக்க.. அதற்கான நேரம் இதுவல்ல என ஞாபகம் வந்து.. தன்னை அடக்கும் வழி தெரியமால் தொடர்ந்து முகம், கழுத்திலே வட்டமடித்து கொண்டுயிருந்தவனை.. கஷ்டபட்டு அவளின் அரசி தன் முகம் முன் கொண்டுவந்து.. இதழில் இதழ்பதித்து அவனை என நெற்றிமுட்டி பார்த்தாள்.

    சாரிடி முயல்குட்டி. சாதாரணமா ஆரம்பித்தேன். ” அவனின் இதழ் மேல் விரல் வைத்து.. மெல்லிய புன்னகையுடன்.. ” தனுமாமா பற்றி தெரியும்.. அவன் அதுக்குமேல போக மாட்டான். அதான் நானே கடுப்பாகி.. ” அதற்குமேல் அவளை பேசவிடாமல் மென்மையான இதழ் முத்தம் கொடுத்து..

   ” முயல்குட்டி நீ ரொம்ப வார்த்ததைய விடாதடி. இப்ப நான் இருக்க சந்தோஷத்தில்.. பின்ன நேரம் காலம் கூட பார்க்க மாட்டேன். பிறகு நீ.. ”

   தன்னை கிண்டல் செய்யும் தன்னவளின் இதழை ஒருகைபிடித்து கூறியபடியே.. அவனின் கண்கள் அவளின் அங்கங்களில் கணவன் பார்வையாக எல்லைமீறும் வேலையில்.. கட்டிலின் மேல் இருக்கும் அவனின் போன் அடிக்க.. யார்?. என அழைப்பின் ஒலியிலேயே புரிந்து.. அவனின் பார்வையில் இருந்து தப்பிக்க துள்ளி எழுந்து.. போன்னை எடுத்துக்கொடுக்க..

   அவனோ இப்போது இன்னும் தான் பார்ப்பதற்கு வசதியாக நின்றுயிருந்தவளை தலைமுதல் கால்வரை கள்ள புன்னகையுடன் பார்க்க ஆரம்பிக்க.. அவனின் முயல்குட்டி.. அவன் கண்களை தன் கையால் மூடி.. ஊஞ்சலை திருப்பி.. ‘ பார்க்க கூடாதுஎன இருபொருட்பட பின்பக்கமிருந்து கன்னம் கிள்ளி போன்னை நீட்ட.. அவனோம்.. இப்போதைக்கு தப்பித்த ‘. என போன்னை வாங்கி கொண்டான்.

 

   அவர்களின் சார்பில் இனிப்பகத்தின், ஹோட்டல் மேற்பார்வையாளர் ராஜன் அண்ணா.. ‘தங்கள் வீட்டு திருமணத்தின் போதும் எங்களின் உணவு தேவைகளோடு.. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை சரியாக கவனித்து..

   தங்களை தங்கள் தொழில் பற்றிய கவலைய போக்கி.. வீட்டில் உள்ளவர்களுக்கு நிம்மதி அளித்ததை.. முன்னிட்டு கடையில் வேலை செய்பவர்களுக்கு விடுமுறை அளிக்க முடியாததால் ஒருமாதம் சம்பளம் போனஸ் மற்றும்..

   தங்கள் வீட்டு கல்யாணத்திற்காக வீட்டில் உள்ளவர்களுக்கும் உடைவாங்க இனிப்பகம், ஹோட்டல் வேலை பார்க்கும் அனைவருக்கும் தனியாக ஐந்தாயிரம் கொடுக்கப்பட்டதையும்..

   கடையில் வேலை செய்பவர்களின் குடும்பத்தினற்கு சம்பந்தி விருந்து வைக்கும் நாள் தனியாக விருந்து கொடுக்கபடும் என தகவலை கூறிவிட்டேன்..

   அதற்கு அவர்களின் நன்றியும், இருவரையும் கடையில்  மணகோலத்தில் பார்த்து அனைவரும் சந்தோஷ பட்டார்கள் என்ற செய்தியை கூறிவைத்தார்.

 

   கீழே சொல்ல வேண்டி.. தன்னால் சிறிது கசங்கியிருந்த சேலை, முகம், கூந்தல் என சரி செய்திருந்தவளை பின்னிருந்து அணைக்க.. காலையில் வைத்த தாளம்பூ வாசனை விரிந்திருந்த கூந்தலில் இன்னும் கூடுதல் நறுமணத்தை கொடுக்க..

   அதனை நுகர்ந்தபடி கூந்தலை விரலால் ஒதுக்கி நகைகளை போட்டுவிட்டு.. பின் அவனின் மச்சத்தில் முத்தமிட்டு.. மீண்டும் அவன் ஒருவழி ஆக.. ‘ போடாஎன அவள் திரும்பி நின்று முறைக்க..

   அவனோஇப்படி இவகிட்ட அப்ப அப்ப மாட்டி முழிப்போதே உன் வேலை டா. ‘ என தன்னை மனதினுள் அசட்டு புன்னகையும்.. வெளியேஅப்படி தான் பண்ணுவேன் போடிநெற்றி முத்தம் கொடுத்து புன்னகையுடன் தன் மனைவி அரசியை அழைத்து கீழே வந்தான்.

 

   வேந்தன் அத்தம்மா கொடுத்த டீயை குடித்துக் கொண்டுயிருக்க..

   ரவிந்திரன், அருணாச்சலம்இரண்டு நாட்கள் முன் முடிந்த.. ‘ நான்கு திருமண செலவு என்ன என்பதை?. கணேஷ், வரதராஜன், சுந்தர்ராஜன், குமரேசன் நண்பர்களிடம் அனுப்ப கூற வேண்டும்என கூறியதாக கேட்டனர். ‘ சரிஎன அவனும் கூறி தன் அரசியை பார்க்க..

   அம்மா, அத்தம்மா ஏதோ கேட்க.. அவள் முழித்துக் கொண்டுயிருந்தாள்.

 

   அவள் எதற்கு மட்டும் இப்படி முழிப்பாள்?. என தெரியுமாகையால்.. இன்பாவை தட்டி அழைத்து.. அந்த அழகை இருவரும் பார்த்து புன்னகைக்க..

  பின் இருவரும் பாவம் முயல்குட்டி , தங்கை என ஒருசேர.. ” அம்மா..அம்மாஅழைக்க.. இருவரில் ஒருவர் கோபம், வினோதமாக எழிலரசியை பார்த்து இவர்களை என்ன? பார்க்க..

 

   இன்பா வேந்தனை பதில் அளிக்கும் படி பார்த்தான். ” அம்மா நீங்க அரசிக்கிட்ட கேட்டகேள்விக்கு பதில்.. இன்னும் ஒருவாரம் இருக்கும்மா. இப்ப எதுக்கு நீங்க அவளிடம் கேட்டீங்க?. ” கோப முகமாக இருந்த அத்தம்மாவிடமும் கேட்க..

 

   அவர் தர்ம சங்கடமாக சித்ராவை பார்க்க.. அவரும் புரிந்து.. ” வேந்தா அக்கா, அண்ணியெல்லாம்.. நீங்களும், நாலு ஜோடியும் சேர்த்து.. 

   இந்த வாரத்திலே தேனி, குமுளிக்கு விருந்துக்கு வர சொல்லிட்டு போயிருக்காங்க. இப்ப வினோ, காவ்யா வீட்டில் இருந்து கூட உங்களை  வரச்சொல்லி அழைக்கதான்.. கணேஷ்அண்ணா வீட்டில் சொல்லிட்டு.. இங்க வரப்போறாங்க.

   அதான் இரண்டு வாரத்திற்கு எல்லா வீட்டிற்கு போயிட்டு வரது போல பார்க்கலாம் என்று நினைத்து.. நாலு பெண்ணுங்க கிட்டகேட்டபோது.. பிரச்சனை இல்லனு சொல்லிட்டாங்க. அதான் எழிலரசிகிட்ட மாத்டேட் எப்பனு கேட்டோம். அவ என்னடா னா முழிக்கிறா. “

 

   காப்பாற்று தனுமாமாஎன பாவமாக பார்க்கும் தன்னளை மெல்லிய புன்னகையுடன் தன் அருகில் அமர வைத்துக்கொண்டு.. ” ம்.. அவளுக்கு அது தெரியாது. இன்பா தான் இத்தனைநாள் பார்த்தான். இனி நாங்க இரண்டுபேரும் பார்ப்போம். இனி இது போலனா கேள்வியை.. நீங்க இரண்டு பேரும்.. எங்க கிட்ட மட்டும் கேளுக்க.”

 

   இத்தனைநாள் இன்பாவிற்கு எங்கும் சொல்லவேண்டும் எனில் முன்பே தெரிந்து அதை தங்கையிடம் கூறிவிடுவான். அவளை யாரும் எதுவும் கூறக்கூடாது என அம்மாவிற்கு கூட அவளின் நாட்களை அவள் ஞாபகம் வைத்துயிருப்பது கிடையாது என மறைத்து வைத்திருந்தான். ‘

 

   இதனை கேட்ட லட்சுமி அவனை முறைப்பாதா? இல்லை பாசத்தை நினைத்து பூரிப்பாதா என புரியாமல் பார்க்க..

   சித்ரா என்னமோ போங்க டா எனசரி நீ ஏதாவது பிளான் வைத்துயிருப்பியே அதை சொல்லு. அதற்கு ஏற்றார் மாற்றி கொள்ளலாம். “

 

   ம்மா. நான் எதுவும் இப்போதைக்கு பிளான் பண்ணல. நீங்க நாலுஜோடிக்கும் பண்ணுங்க. நாங்க ஜாயின் பண்ணிக்கிறோம். “  அரசியிடம் கேட்டு.. அவளும் சரி என தலையசைத்த பின்.. இதனை சித்ராவிடம் கூறினான்.

 

   ம்.. சரிடா. ” சித்ரா, லட்சுமி மற்றவர்களுடன் பேச ஆரம்பிக்க.. இன்பா அரசி வேந்தன் அவர்கள் வேறு ஒரு பிளான் போட்டார்கள்.

   சில நிமிடத்தில் சொன்னவர்கள் கூட கமலேஷ், வசுந்தரா, காலையில் அண்ணா, வசு இங்கு வரும் போது சாருலதா.. சங்கவி கூட இருந்ததால் வரமுடியவில்லை. அதனால் இப்போது சாருலதா வர..

 

   வசுந்தரா தன் கல்யாணத்தில் தன் அண்ணா, அண்ணி.. தனக்கு கடமையாக அனைத்தும் செய்தும்.. தன்னுடனே இருந்தனர். ஆனால் தான் அவர்போல கடமைக்கு இல்லாமல்.. தன் அண்ணா அண்ணி தாலிக்கு ஈடாக அவர் கழுத்திலும் செயின் போட்டு கொண்டது.. அதுபோலவே வகுட்டில் வைத்த குங்குமம் தன் நெற்றியில் வைத்ததை பார்த்தால்.. என்றும் அவர் நெற்றியில் இனி குங்குமம் இல்லாமல் பார்க்கமுடியாது என தெரிகிறது.

   இதில் இருந்தே அவர் அன்று கூறியது போல.. அனைத்து உறவுகளுக்கும் அதற்குரிய அன்பை, கடமையை சரியாக, குறையில்லாமலும் வழங்குவார்.. அதுபோல எழிலரசி அண்ணியும் கூறியது போல நடந்து கொள்ளவார் என்று புரிந்துக்கொண்டும்.. வேலையை தான் வாங்கி விடுவேன் என்ற நம்பிக்கையில்..

   இப்போது சிறிதும் வருத்தம் இன்றி முழுமனதுடனே அவர்களின் ரிசெப்ஷனில் அண்ணா, அண்ணியுடன் இருப்பதற்காக..

   மாமா வீட்டினர் இங்கு அடுத்து வருகிறார்கள் என தெரிந்தவுடன்.. தூங்கியிருந்த தன் கணவன் கமலேஷை விரட்டி கிளம்ப வைத்து தூக்க கலக்கத்துடனே அழைத்து வந்தாள்.

   ஆனால் வந்தவுடன் தன் துணைக்கு.. லட்சுமி அத்தையிடம் டீ வேண்டும் நான் போடுகிறேன் என கூறி.. வேண்டியவர்களுக்கு சேர்த்து போட சமையல்அறை சென்றுவிட்டாள். மகளின் அருமை தெரிந்து சித்ரா உடன் லட்சுமி சென்றுவிட்டார்.

 

 

   

  

   

  

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!