Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

காதலா?? அப்படின்னா?! – 1

காதலா?! அப்படின்னா??

 

 

காதல் பகுதி 1.



Advertisement

சஷ்டியை நோக்க சரவணா பவனார்
சிஷ்டருக் குதவும்செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி ஆட
மையல் நடனஞ்செய்யும் மயில்வாகனனார்….

என்று மதுரை ஹாஸ்டலில் அதிகாலை 6 மணிக்கு தன் மொபைல் spotify-யில் இருந்து பக்தி மணம் பரப்பி கொண்டிருந்தது நம் நாயகி வென்முகில். காலையை வழக்கம் போல் தன்னுடைய சூரியநமஸ்க்காரத்துடன் ஆரம்பித்து இருந்தாள். அவள் அவளின் உடற்பயிர்ச்சியை முடித்து வருவதற்குள் நாம் வென்முகில் பற்றி ஒரு சிறு முன்னோட்டம் பார்த்துவிடலாம்

காலேஜ் விடுதியில் இரட்டை படுக்கைகள் கொண்ட அறையை தன் தோழி விதுனாவுடன் பகிர்ந்திருக்கிறாள். பிறந்தது வளர்ந்தது எல்லாமே மதுரை தான். படிப்பது B.Arch நான்காவது வருடம். தந்தை ஷக்திவேல் பாண்டியன் காவல்துறையில் உயர் அதிகாரி. அம்மா லஷ்மி இல்லத்தரசி. ஒரு அக்காபனிமலர், திருமணமாகி கணவனுடன் ஸ்காட்லாண்டில் (scotland) வசிக்கிறாள். அன்பான குடும்பம். 

Advertisement

ஒரே வீட்டில் வளர்ந்திருந்தாலும் இரு பெண்களின் குணயியல்பும் எதிர் எதிர் துருவமாகவே இருந்தது. பனிமலர் சாந்தமான, கொஞ்சம் பயந்த சுபாவமாக இருக்க, வென்முகில் உருவத்தில் அம்மாவை போல் இருந்தாலும்; அவளின் முன்கோபமும், துணிச்சலும் அப்பவை கொண்டு பிறந்திருந்தாள் பெண். தந்தையின் பணிமாற்றம் காரணமாய் சென்ற இரண்டு வருடமாய் ஹாஸ்டல் வாசம். அப்பாவை விட அம்மாவே மிகவும் கண்டிப்பானவர். தன்னுடன் மதுரையில் இருப்பதாய் கூறிய தாயை விதுனா அதே ஹாஸ்டலில் தான் இருக்கிறாள் என்று அதையும் இதையும் சொல்லி வழுக்கட்டாயமாய் தந்தையுடன் அனுப்பிவைத்து இருந்தாள்

Advertisement

வென்முகிலும் விதுனாவும் பள்ளி நாட்கள் தொட்டு நண்பர்கள். விதுனா  தன் பள்ளி படிப்பை பாட்டி வீட்டில் இருந்து முடித்து இருந்தாலும் ஒவ்வொரு நாளும் பேருந்தில் வந்து செல்வது சிரமமாய் இருக்கும் என்று ஹாஸ்டலில் தான் முதல் வருடம் முதல்

எப்பொழுதும் விதுனாவின் தோழிகள் கூட்டத்தில் வென்முகிலும் இருந்தாலும் சென்ற இரண்டு வருடமும் இவர்கள் இருவரும் மட்டுமே அறையை பகிர்ந்து கொண்டனர், காரணம் ஒன்றும் பிரமாதம் இல்லை, வென்முகிலின்  ருல்ஸை அனுசரித்து போவது விதுனாவால் மட்டுமே முடியும்

அதற்காக வென்முகில் ஏதோ ருல்ஸ் ராமானிஜி, ஸ்டிரிக்ட் ஆபிஸர்

Advertisement

என்று நினைச்சுக்காதிங்க. அவளுக்கென்று  சில சட்டதிட்டங்கள்

உண்டு அதை யாருக்காகவும் எந்த தருணத்திலும் விட்டுகொடுக்காத

மனதிடம் உண்டு. சுயஒழுக்கமும், சுயமரியாதையும் நிரம்ப

பெற்றவள். அவளை யாரும் குறை சொல்லிவிட முடியாதபடி தன் நடவடிக்கை இருக்க வேண்டும் என்ற வைராக்கியம் உடையவள்

மொத்த ஹாஸ்டலும் ஞாயிற்றுக்கிழமை காலை சூரியனுக்கு

குட்னைட் சொல்லி தூங்கிக்கொண்டு இருக்க இவள் மட்டும் அர்த்த

ஜாமத்தில் (காலை 6 மணியெல்லாம் மிட்னைட் தானே பாஸ், அதுவும்

ஞாயிற்றுக்கிழமை

மொட்டை மாடியில் சூரியனுக்கு திருப்பள்ளி எழுச்சி பாடிக்கொண்டிருந்தால் கடுப்பாகாம என்ன செய்யவாங்க? இதற்கமேல் அவளின் குனா()திசியங்களை போக போக தெரிந்து  கொள்ளலாம், இப்பொ நம்ம வென்முகில்  உடற்பயிற்சி முடித்து குளித்துவிட்டு தன் அறைக்கு சென்று அரை மணி நேரம் ஆகிவிட்டது உள்ளே இருந்து வரும் சத்தம் ஒன்றும் நல்லவிதமாய் தெரியவில்லை என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போம்.

விது, இப்போ எழுந்திரிக்க போறியா இல்லை மொத்த தண்ணியையும் ஊத்தட்டுமாடி.” கடந்த ஒரு மணிநேரமாய் அவளை எழுப்புவதற்கு மல்லு கட்டிய கடுப்பில் கையில் தண்ணிர் பாட்டிலோடு நிற்க இதற்கு மேல் இவள் பொறுமையைச் சோதித்தால் அபிஷேகம் நிச்சயம் என்று உணர்ந்து 

அடியேய் சரியான ரூஸ்டர்டீ (rooster) நீஞாயிற்றுக்கிழமை காலங்காற்தால ஏண்டி இப்படி படுத்துற.” என்று அலுத்துக்கொண்டே எழுந்தவள் முகவாயில் கைவத்த கொண்டுஆனா பாருடீ உனக்கு வாய்க்கிர பேரு எல்லாம்ரூவுலயே இருக்கு., ரூஸ்டர், ரூல்ஸ் இனிமே உனக்கு வைக்கிறதும்ரூவுலயே ஆரம்பிக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஒரு மெமொ போடனும்என்று நேரம் தெரியாமல் அவளை வம்பிழுக்க 

எருமை மணி எட்டாக போகுது. நீ இப்பொ கட்டிலை விட்டு இறங்கினா தான் நாம 10 மணிக்காவது ஹாஸ்ட்லை விட்டு வெளியே போவோம்.” என்று கத்த 

இரண்டு காதையும் நாடக பானியில் முடிக்கொண்டு, “சவுண்டக்குறை!! சவுண்டக்குறை!!! உன்ன பத்தி தெரிஞ்சும் ஞாயித்து கிழமை வெளிய போக ப்ளான் பண்ணின என்னை சொல்லனும். ஆமா எனக்கு மட்டும் தான் பாடுறியா இல்லை எல்லாருக்கும் பாடிட்டு வந்துட்டியா?” என்று எரியுற கொள்ளியில இன்னும் கொஞ்சம் petrol ஊத்த

எண்டி ஒரு டைம் சொன்னா சொன்ன நேரத்திற்கு கிளம்ப மாட்டியா??” என்று கடிந்து கொள்ள

நீ என்னவேனும்னாலும் சொல்லு இப்போதைக்கு கட்டிலை விட்டு அசையும் எண்ணம் இல்லை என்பது போல் இன்னும் வசதியாய் சாய்ந்துகொண்டு,

யாருக்கு பாலாஜிக்கு சொன்ன நேரத்துக்கா?  பாலாஜி மட்டும் இன்னைக்கும் கடைய சாத்தட்டும் மஹாவ அலேக்கா இங்க தூக்குறோம்.” என்று கள்ளலகரை  கலாய்த்தபடி இன்னும் கட்டிலில் உருண்டு கொண்டிருந்தாள் விது.

மரியதையாய் எழுந்திறி, அப்பறம் என் அம்மா நான் லேட்டா வர்ற 10 நிமிஷத்துக்கு அரை மணிநேரத்திற்கு எனக்கு மண்டகப்படி நடத்துவாங்கஎன்றபடி அவளின் போர்வையை இழுத்தாள்

வென்முகில் அதிகமாக ஹாஸ்ட்லில் இருந்து வெளியே செல்ல விரும்பமாட்டாள். அவளின் அம்மா கண்டிப்பானவர் என்பது ஒரு காரணமாக இருந்தாலும், என்ன தான் தைரியமான, பொறுப்பு உணர்ந்த பெண் என்று தெரிந்தாலும் அவளின் அம்மா அரை மணிநேரத்திற்கு ஒரு முறை அழைத்துகொண்டே இருப்பது அவளுக்கு ஒரு எரிச்சலை கொடுக்கும். எதோ எப்பொழுது ஒரு கண்கானிப்பில் இருப்பது போல் இருக்கும், அதன் காரணமாகவே அதிகம் வெளியே செல்வதை தவிர்த்து விடுவாள்

ஏண்டி, இப்படி பட்டுன்னு போர்வையை உருவாதன்னு எத்தனை முறை சொல்வது. என்னைக்காவது உன் கண்ணு ப்யுஸ் போகபோது பாரு.” என்றபடி குளிப்பதற்க்கு துணிகளை எடுத்த படி 

வென்ஸி, நான் குளிச்சுமுடிக்கிறதுக்குள்ள எப்படியும் நம்ம கஜா மேஸ்ஸ மூடிடும் அபியை எனக்கு சாப்பாடு எடுத்துட்டு வர சொல்லுடீ என் தங்கம் இல்லஎன்று அவளை கொஞ்சி கொண்டிருக்க

 “சாப்பாடு அறைக்கு எடுத்துக் கொண்டு வரக்கூடாதுன்னு தெரியாதா. இதுக்கு தான் இவ்வளவு நேரமாய் கத்திட்டுருந்தேன் எழுந்திருச்சா தானே! ” என்று அதற்கும் அவளை ஒரு வழி செய்ய  இதற்கு மேல் இங்க இருந்தா மொத்திடுவானு அறையை விட்டு பறந்துவிட்டாள்

அரையிலையே வைத்திருக்கும் ஒரு குட்டி டொஸ்ட்டரில் அவளுக்கு ப்ரெட் அண்ட் ஜாம் டோஸ்ட் பொட்டு வைத்தவள், அறையில் இருக்கும் பழங்களை அழகாய் வெட்டி வைத்தவள் மற்ற தோழிகளை விரட்டுவதற்கு சென்றுவிட்டாள்

அனைவரையும்  செக்கிழுத்து கிளப்புவதற்குள் மேல் மாடி சூடாகி விட்டது நம்ம ருல்ஸ்கு. ‘எப்படித்தான் ஒவ்வொரு வாரமும் வெளியே போறாங்ளோடா சாமி. ஒரு நாளைக்கே நமக்கு நாக்கு தள்ளுதுஎன்று மனதிற்குள் புலம்பியபடி கிளம்பினாள்.

நம்ம ருல்ஸ்ட்ட யார் சொல்றது எந்த டிரெஸ் போடுறதுங்குறதுல தொடங்கி, என்ன உடை போடணும் முதல் எந்த இடத்தில் மதிய உணவு சாப்பிடனும் என்பது வரை இதெல்லாம் ஒரு ப்ரொஸெஸ் இதை அனுபவிக்கனும் ஆராயக்கூடாதுன்னு?!

கள்ளழகர் கோவிலில் வழக்கமான கூட்டம் இருந்தாலும் இன்று அழகரை தரிசிக்க முடிந்தது. 5 நிமிடமேயாயினும் பக்கத்தில் இருந்து ரசிக்க முடிந்தது. அழகரின் அழகில் தன்னை மறந்து நின்றவளை, அதிர் வரிசையில் தன் நன்பனுடன் நின்ற நம் நாயகன்  “ஹப்ப்பா, என்ன கண்ணுடா சாமிமொத்ததையும் அள்ளிக்கொண்டு போய்விடும்போல் இருக்குஎன்ற மென் குரலில் நண்பனிடம் முனுமுனுத்தவன் திரும்பி நடக்க ஆரம்பித்திருந்தான். சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவளின் பார்வையில் இருவர் திரும்பி நடந்து போவது மட்டுமே தெரிந்தது

வழக்கமான ரொட் சைட் ரோமியோக்கள் என்று எண்ணியவள் பல்லை கடித்து கொண்டு, “எங்க போனாலும் இம்சைங்க”, என்று முனுமுனுத்தவள் அவர்களை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க, அவளின் குணம் அறிந்த விது, “உன்னை தான் சொன்னங்க என்று என்ன நிச்சியம் பேசாம வாடி.” என்று இழுத்துகொண்டு சென்றாள்

எங்கே இன்னும் சிறிது நேரம் நின்றாலும் அவர்களிடம் போய் எதாவது எடாகுடமாய் பேசிவிடுவாளோ என்று பயந்தே அவளை இழுத்து சென்றனர்

வென்முகில் முனுமுனுத்தது மற்றவர்களுக்கு கேட்பதற்கு வாய்ப்பில்லை என்றாலும் அவள்  கண்கள் அழகனை ரசித்து கொண்டிருக்கும்  பொழுது எதிரே அவளை ரசித்துக்கொண்டிருந்த வீரேஷ்ற்கும்  அவன் அருகே நின்றிருந்த சுதர்ஷனுக்கும் தெளிவாய் அக்‌ஷர சுத்தமாய் கேட்டதுஅதில் ஒருவன்  “ஸ்வீட்என்று கொண்டாடிக்கொண்டது மட்டும் தெரிந்தால் ம்துரையை எரித்த கண்ணகியின் மறு அவதாரம்  நானே என்று கிளம்பிருப்பாள் நம் வென்ஸி

ஆனால் பேசியவனுக்கும் தெரியாது கெட்டவனுக்கும் இது தெரியாது இல்லையா, அவர்கள் வழக்கம் போல் கோவில் பிரகாரத்தை சுற்றியபடி வம்பழந்து கொண்டிருந்தனர்.

அடப்பாவி, என்னதுஸ்விட்டா” 

எப்போ இருந்து இவ்ளோ நல்லவனான? கிட்டதட்ட உன்ன பொறுக்கி ரேஞ்சுக்கு பேசிட்டு  போகுது அந்த பெண் அது உனக்கு ஸ்விட்டா?” என்று அவன் காதை கடித்து கொண்டிருந்தான் சுதர்ஷன். வீரேஷின் கல்லூரி தோழன்

ஷாக்க குறை! ஷாக்க குறை!!! இல்லைடா, நான் சொன்னதும் அதிகப்படி தானே!” 

இம்சைங்கங்கிற வார்தையை எல்லாம் மரியாதையான வார்த்தையா எப்போ மாத்தினாங்க? வர வர இந்த தமிழ் அறிஞர்களுக்கு

 மரியாதையே தெரியலை இப்படி இப்படி இதை இதை மாத்திருக்கோம்ன்னு ஒரு நோட்டிஸ் விடுறதுல்லை??.” என்று பொருமியபடி அழகர் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்துக்கொண்டிருந்தனர்

எவ்ளோ தைரியம் பாரேன்தமிழ் சிங்கம் உனக்கு சொல்லாம விட்டது எத்தகைய பெரும் குற்றம். சங்கம் வளர்த்த மதுரையிலயே குப்பைக்கொட்டுற உனக்கு சொல்லாம விட்டு இருக்கானுங்க பாருடா.” என்று சிவாஜியிடம் டியுஷன் எடுத்தவன் போல் வீரேஷ் அனியாயத்துக்கு நடிக்க 

கோவில் என்பதால்மூடிட்டு வாடா”  என்பதை டீசண்டாய் கையை வாயில் வைத்து செய்கையில் காண்பித்தவன் பிரகாரம் சுற்ற ஆரம்பிக்க. வீரேஷின் மனதிலோ, கல்லூரி மாணவி போல் தான் இருக்கிறாள். இந்த ஊராக தான் இருக்குமோ என்ற எண்ணமே

வீரேஷும் சுதர்ஷனும் கல்லூரி தோழர்கள். இதே மதுரையில் மிகவும் புகழ் பெற்ற கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். நண்பனின் திருமண வரவேற்ப்பிற்காக மதுரை வந்திருந்தான் வீரேஷ். இரவு தான் வரவேற்ப்பு என்பதால், மலரும் நினைவாக அழகர் மலைக்கும் அழகருக்கும் ஒரு விசிட்

சுதர்ஷன் குடும்பம் மதுரையின் அருகே இருக்கும் ஆலத்தூரில் பெரும் செல்வந்தர்கள். ஊரில் பாதிக்கும் மேற்ப்ட்ட விவசாய நிலமும் , தோப்பும் இவர்களதே. இது தவிர அரிசி மில்லும், சர்க்கரை ஆலையும், ஹோட்டலென இவர்களின் தொழில் சுற்றும் பெரிதே

வீரேஷ் சென்னையின் விரல் விட்டு என்னக்கூடிய பெரும் வணிக அதிபர்களில் ஒருவரின் வாரிசு

VV  குரூப் ஆப் கம்பனிஸ்! சேர்மன் (chairman) வேதநாயகம் அவருடய காதல் மனைவி வரலக்ஷ்மி.. மனமொத்த தம்பதியர்

இவர்களின் மூத்த மகன் வீரேஷ் 27 வயது படித்தது B.E Civil Engineering மேற்படிப்பை எடின்பர்வில் (Ediburugh) முடித்து இப்பொழுது அவர்களின் அனைத்து தொழிற்களையும் வெற்றிகரமாக நடத்தி வருபவன்..

இரண்டாவது மகன் வருன் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து கொண்டிருக்கிறான். அடுத்தது செல்ல தங்கை வேதா மருத்துவ கல்லூரியில் இரண்டாவது வருடம் படித்துக்கொண்டிருக்கிறாள். இருவருக்கும் அண்ணன் மேல் பாசம் அதிகம் என்றாலும் அப்பாவிடம் இருக்கும் அதே மரியாதையும் உண்டு

பரம்பரை பரம்பரையாக பல தொழில்கள் செய்து வரும் குடும்பம் வேதநாயகத்தின் குடும்பம்..  இந்தியா மட்டும் அல்லாது வெளிநாடுகளுக்கும் எற்றுமதி செய்யும் தொழிற்களிலும் கோலோச்சி கொண்டிருப்பவர்கள்

வெளிநாடுகளில் VV  குரூப் ஆப் கம்பனிஸை விரிவுப்படுத்தியது வீரேஷின் கடின  உழைப்பும் தொழிலில் அவனுக்கும் இருக்கும் ஆளுமையும் தான். எடுத்த காரியம் அனைத்திலும் வேகம்பொறுமை, நிதானம் என்பதெல்லாம் அவனின் அகராதியில் இல்லையோ என்று தோன்றும் அளவிற்கு வேகம். ஆனால் விவேகத்துடன் கூடிய வேகம். அதன் பொருட்டு எட்டிய வெற்றி என அவன் வேகத்துக்கு இது வரை தடை எதுவும் இருந்தது இல்லை. அவனின் அண்ணைக்கு அவனின் வேகம் ஒருவித பதட்டத்தை கொடுத்தாலும் அவனின் மேல் இருக்கும் நம்பிக்கையும்கடவுள் மேல் கொண்ட பற்றுமே அவரின் பெரும் பலமாய் இருக்கிறது

வீட்டிலும், நண்பர்களுடனும் அவன் வயதிர்க்கேற்ற குறும்புத்தனத்துடன் இருப்பவன், தொழில் என்று வந்து விட்டால் முற்றிலும் வேறே

நிர்தாட்ஷன்யமும் அவனின் அழுத்தமான ஆழுமையும் தொழில் வட்டாரத்தில் பிரபலமேவர்த்தக உலகத்தில் அவனை யாராலும் கணிக்க  முடியாது. ஆனால், அடுத்தவர்களை எடை போடுவதில் அவன் அப்படியே அவனின் தந்தையை கொண்டிருந்தான்ஆகையால்அவனிடம் யாரும் அளந்து தான் பேசுவர்! தேவையற்ற வார்த்தைகள் வந்துவிட்டால் அவனின் ஒரு பார்வை போதும் பேசியவரின் வாயடைக்க!  

அவன் குரலில் இருக்கும் கம்பீரம், அவனின் தோரனை , அழகும் கம்பிரமும் நிறைந்த தோற்றமும் அவனை “the most eligible bachelor of south” என்று சொல்ல வைத்தாலும், அவனின் வெளித்தெரியும் குண இயல்பை வைத்து அவனை நெருங்க பயப்படும் பெண்களே அதிகம்.

இப்படி இருப்பவன், பார்த்ததும் ஒரு பெண்ணை ரசிப்பது அதிசயம் என்றால், அதனிலும் அதிசயம் தன் ரசனையை கிண்டலாக, அத்தனை பேர் மத்தியில் சொல்லியது

என்ன தான் அதிக கூட்டம் இல்லை என்றாலும், பக்கத்தில் நின்ற சுதர்ஷனுக்கு கேட்டது போல் அவளின் நண்பர்களுக்கும் கேட்டுற்பதற்கு வாய்ப்புகள் அதிகமே

வீரேஷை பற்றி அறிந்தவன் என்பதால், இவன் கல்லூரி காலத்திலேயே இப்படி யாரிடமும் பார்த்தது இல்லை என்பதால் அவனுக்குமே சிறிது ஆச்சரியமே

சரி! காதல் முத்தினால் நன்பனிடம் வந்து தானே ஆகவேண்டும் என்று எண்ணியபடி அவன் வாயில் இருந்தே வரட்டும் என்று காத்திருந்தான்

ஆனால், நம் நாயகனுக்கும் பொறுமைக்கும் தான் வெகு தொலைவாச்சே! இதில் முத்தும் வரை எங்கே காத்திருப்பது?

இங்கேசலனம்! அங்கே?! 

காதல்வரட்டும் …! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!