Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Ram Weds Seetha 6 1

ராம் வெட்ஸ் சீதா -6 (1)

 

“ம்மா நீ முதல்ல அந்த துடைப்பத்தை அங்குட்டு தூக்கி போடு, அப்போ தன் கீழ வருவேன் ,” என்று கூறிய மகளை பார்த்து “சரி தூக்கி போட்டுட்டேன் கீழ வா, எவ்வளவு வேலை தான் ஒருத்தியா நான் மட்டும் பாக்குறது, சீக்கிரம் வாடி கீழ, முதல்ல இந்த மாங்கா மரத்தை வெட்டு போடணும், அப்போ தான் நீ அடங்குவ “என்றவரை கீழே இறங்கி கொண்டு பார்த்த ராதா,

 



Advertisement

“ம்மா என் மரத்துல மட்டும் கையை வைச்சி பாரு நடக்கிறதே வேற, சரி நீ போயி ஆவற வேலையை பாரு ம்மா நான் போயி குளிச்சிட்டு வந்துடறேன்”என்று குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் ராதா.

 

“ஹ்ஹமும் இவளை கட்டிக்க போற என் நாத்தனார் மவன் தான் பாவம், எல்லாம் கடவுள் தான் அந்த வெற்றி தம்பியை காப்பாத்தணும் “என புலம்பி கொண்டு வேலையை கவனிக்க சென்று விட்டார் சிவகாமி.

Advertisement

 

Advertisement

வாங்க நம்ம காந்த கறுப்பழகி ராதாவை கட்டிக்க போற மாப்பிள்ளை வெற்றியோட ஊருக்கு ஒரு விசிட் அடிச்சிட்டு வரலாம்…

ஹாஹாஹா என்ன ஒரு அழகான ஊரு, வழியெங்கும் பச்சை பசேலென கழனி நிலம், அங்கு இருந்த கிணற்றுக்குள் சிறுவர்கள், இளைஞர்கள் நீச்சல் அடித்து விளையாடி கொண்டிருக்க, தனது ஹீரோ ஹோண்டா வண்டியில் புத்தம் புதிய கடைபையோடு சென்று கொண்டிருந்தார் வெற்றி தந்தை முனுசாமி.

வாங்க அவரை பின்தொடர்ந்து போவோம், அப்போ தான் நம்ம ராதா வாழ போற வீட்டை தெரிஞ்சிக்கலாம்.

Advertisement

 

கொட்டாம்பட்டி கிராமம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இது தான் ராதாவின் அத்தை கமலத்தின் புகுந்த ஊர்.

 

“என்னடே மவனே இன்னுமா குளிக்குறவ, நாழி ஆகுது டே மவனே, சீக்கிரம் வெரசா வெளியே வா டே, உள்ள போயி கால்மணி நேரம் ஆவுது இன்னும் பச்சை தண்ணீல என்னடே ஆட்டம் போடற, பேருக்கு தான் பனைமரம் உசரத்துல வளர்ந்து இருக்கியே தவிற இன்னும் சின்னபையனாட்டம் தண்ணீர் ல ஆட்டம் போடறது, “என்று அவனை வசைபாடி கொண்டிருந்தார் வெற்றியின் தாயார் கமலம்.

 

“இந்தா மா இப்போ இன்னாத்துக்கு கத்திக்கிட்டு இருக்கற நீயி, நான் பொறுமையா குளிச்சிட்டு வர போறேன், நீ போயி எல்லாம் சரியா எடுத்து வச்சிட்டியான்னு பாரு, அப்புறம் போவும் போது, அது இல்லை டா மவனே, இது இல்லை டா மவனே, வூட்டுல மறந்து  வச்சிட்டு வந்துட்டேன் டா மவனே ன்னு நொடிக்கொரு முறை மவனே ன்னு ராகபாடுன வச்சுக்கோயேன் உன்னைய நடுரோட்டுல இறங்கி வுட்டுப்புட்டு நான் பாட்டுக்கு போயி நிச்சியத்தை முடிச்சிட்டு வந்துடுவேன் ” என குளித்து கொண்டே அவனின் தாய்க்கு சரிசமமாக வாதாடி இருந்தான் வெற்றி.

 

“சரி டே மவனே, நான் போயி எல்லாத்தையும் சரி பார்த்துட்டு இருக்கறதுக்குள்ள நீ பாத்ரூமை விட்டு வெளியே வா டே மவனே,” என்று கூறிவிட்டு சென்றார் கமலம்.

 

இதோ ஊரே திரண்டி வெற்றியின் வீட்டின் வாசலில் நிற்கும் பஸில் ஏறி அமர்ந்து கொண்டிருக்க மாப்பிள்ளை வெற்றியோ பொறுமையை கடைபிடிப்பவனாயிற்றே.

 

குளித்து முடித்துவிட்டு ஊதாக்கலரில் முழுக்கை வைத்த சட்டையும், வெள்ளை வேட்டியிளும் கிராமத்துக்கூறிய ஆண்மகன் போல் கம்பிரமாய் வெளியே வந்தான் வெற்றி. வந்தவன் தாய் தந்தையோடு ஊர் மக்கள் அனைவரையும் பஸில் ஏற்றி அனுப்பி விட்டு தனது தங்கை ஹரிணியை அழைத்து கொண்டு அவனின்  ராயல் என்பீல்டில் வேகமாக ஊர் மக்கள் செல்லும் பஸ்ஸை பின் தொடர்ந்தான்.

 

அவங்க ராதா வீட்டுக்கு போகறதுக்குள்ள நம்ம அவங்க உறவுகள் பத்தி பாக்கலாம் வாங்க..

 

ராதாவின் தந்தை முத்துராஜோடு பிறந்தவர் தான் கமலம். ஒரே தங்கை என்பதால் அன்பும் பாசமும் நேசத்தையும் கொடுத்து வளர்த்தார். கமலத்தின் பதிமூன்று வயதில் அவர்களின் பெற்றோர் ஒரு விபத்தில் சிக்கி மரணம் எய்திவிட்ட பிறகு, கமலத்திற்கு தாயும் தந்தையுமானவராய் இருந்தார் முத்து.

 

ஆனால் அவரின் தங்கை கமலம்,         அவளுக்கு தேவையானதை அவளே செய்ய கற்றுக்கொண்டார்.

 

கமலம் பண்ணிரெண்டாம் வகுப்பு பள்ளி படிக்க செல்லும் போது அங்கு  அருகிலுள்ள ஒரு வணிக வளாகத்தில் வேலை பார்த்த முனுசாமியை ஒருதலையாக காதலிக்க, அது எப்படியோ முத்துக்கு  தெரிய வந்தது..

 

அவரின் தங்கைக்கு தெரியாமல் முனுசாமியை பற்றி அந்த வணிகத்தில் வேலை பார்ப்பவரிடம் விசாரித்த முத்துவிடம் அனைவரும் நல்லதாகவே கூற, அவரும் முனுசாமியை நேரில் பார்த்து அவரின் தங்கை கமலத்தை மணமுடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

 

முதலில் மறந்த முனுசாமி கமலத்தை நேரில் பார்த்ததும் வாயெல்லாம் பல்லாக அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார்..

 

இவர்களின் திருமண வாழ்வில் சாட்சியாக முதலில் பிறந்தவன் தான் வெற்றி. அவனுக்கு எட்டு  வயதின் இடைவெளி விட்டு பிறந்தவள் தான் கடைக்குட்டியான ஹரிணி..

 

கமலத்தை திருமணம் செய்து கொடுத்து விட்டு அவரின் பெயரில் ஏழு ஏக்கர் நிலத்தை எழுதி வைத்தார் முத்து..

 

இன்று வரை வெற்றியின் குடும்பத்திற்கு விவசாயம் தான் வயிற்றி நிரம்புகிறது..

 

மின்னணு பொறியியல் பட்டதாரியான வெற்றி மதுரையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டே, அவனின் தந்தைக்கு விவசாயத்தில் உறுதுணையாக இருந்து வருகிறான்.

 

இதோ ஒரு மணிநேரம் பயணத்திற்கு பிறகு ராதாவின் இல்லத்தில் முன்னால் வந்து நின்றது வெற்றியில் ராயல் என்பீல்ட்.

 

வண்டியில் இருந்து இறங்கிய ஹரிணி ஒரே ஓட்டமாக உள்ளே ஓடினாள் ராதாவை தேடி.

 

“அடியேய் சீதா என்ன டி இது சாதாரண பொண்ணு பார்க்கறதுக்கு போயி ஊரே வூட்டுக்குள்ள வந்து வண்டி வண்டியா ஊர் கதை பேசுது, ஏன் டி நீ இன்னாத்துக்கு என்னைய இப்படி கல்யாணம் பொண்ணு போல ஜோடிச்சி அலங்காரம் பண்ணிட்டு இருக்கற, “என்ற தோழியின் கூவளை செவியில் வாங்கினாலும், பதில் கூறாது அவளின் தலையில் ஜடையை வைத்து அலங்காரம் செய்துகொண்டிருந்த போது “ஹாய் மதனி “என்று கத்திய படியே ஓடி வந்தாள் ஹரிணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!