Skip to content
Post Views: 340
ராம் வெட்ஸ் சீதா — 10.1
இளவரசனின் உளறலை மறைந்து நின்று கேட்ட இளவரசியோ அதிர்ந்தாள். அண்ணனை நன்கு அறிந்தவளாயிற்றே, அவன் சொன்ன சொல்லை கண்டிப்பாக செய்து முடிப்பான். உடனடியாக இதை நடக்காமல் தடுக்க வேண்டும், என்று முடிவெடுத்தவள் இளவரசனின் ஒவ்வொரு செயலையும்,அசைவையும் பின்தொடர ஆரம்பித்தாள் இளவரசி..
Advertisement
சூரியன் யாருக்கும் காத்திருக்காமல் அதனின் வேலையை சரியாக செய்ய, இதோ மாலை பொழுது நேரமும் வந்தது.
அனைவரும் தங்களது வேலையை முடித்துவிட்டு இல்லத்திற்கு சென்று குளித்துவிட்டு கிளம்ப ஆயுதமானார்கள் பிள்ளையார் கோவிலுக்கு.
Advertisement
Advertisement
இலக்கியாவும் அவளின் தாய் ராஜியும் கோவிலுக்கு நடந்தே சென்றுகொண்டிருக்க,
ராதாவும் ரெட்டை சடை பின்னலிட்டு சாதிமல்லியை இரு சடைகளில் வைத்துக்கொண்டு, இரு விழிக்கு ஏற்றார் போல் மைபூசியும், பருத்தித்துணியால் ஆனா பாவாடை சட்டையில் குதித்துக்கொண்டு சீதாவின் கரங்களோடு அவளின் கரங்களை கோர்த்துக்கொண்டு ஆடி பாடி தெருவில் சென்றுகொண்டிருந்தாள்.
Advertisement
அவளை பின் தொடர்ந்து வந்தார்கள் கோபுவும் இளவரசனும், கூடவே யாருக்கும் தெரியாமல் அவர்களின் இருவரையும் பின்னாலே வந்தாள் இளவரசி.
மேட்டு தெரு பிள்ளையார்கோவிலில் அருகில் சிரித்த முகத்தோடு நடந்து கொண்டு சென்றிருந்த ராதாவை பார்த்தவனின் முகம் கோபத்தில் சிவந்தது. “இரு டி இன்னும் கொஞ்சநேரம் நேரம் தான் நீ சிரிப்ப, அப்புறம் காலமுழுக்க அழுவுவ “என்று தனக்கு தானே கூறியவன், மறைத்து வைத்திருந்த அமிலம் (ஆசிட்டை ) வெளியே எடுத்தவன், கோபுவிடம் “டேய் கோபு அவ போறா, கூடவே அந்த சீதா போவுது, இன்னா டா பண்றது ” என்ற இளவரசனிடம் ” ரெண்டும் சிவப்பா இருக்குங்க, ஊருல இருக்கற அத்தனை பொட்டச்சிங்க விட ரெண்டு மட்டும் தான் சிவப்பே, பேசாம ரெண்டு பேரு மேலையும் ஊத்திட்டு வா “என்று மேலும் அவனை சீண்டி விட்டவனுக்கு தெரியவில்லை,” தன் வினை தன்னை சுடும் ” மென்று.
அண்ணனின் ஒவ்வொரு செய்கையை கவனித்து கொண்டுபின்தொடர்ந்த இளவரசியின் விழிகள் புத்தம் புதியதாய் பூத்த மலர்போல் இருக்கும் இரண்டு மங்கைகளின் மீதே இருந்தது..
இதோ ராதா, சீதாவை நோக்கி நெருங்கி கொண்டிருக்கும் போது வண்டியின் வேகத்தை குறைவுபடுத்தியவன் , முகத்தை துணியால் கண்கள் மட்டும் வெளியே தெரியுமளவுக்கு மறைத்து கொண்டான் இளவரசன்
மறைத்து வைத்திருந்த அமிலத்தை வெளியே எடுத்து கொண்டு வண்டியில் இருந்து கீழே இறங்கியவன், ராதாவை நோக்கி செல்ல ஆரம்பித்தான்.
கிட்டே நெருங்கி அமிலத்தின் மூடியை திறந்த சமயம், குறுக்கே ஓடிவந்தவளின் முகத்தில் ஊற்றினான் அந்த தீயமுரடன்.
“ஆஆஆஆஆ எரிது எரிது”வென கத்திய பெண்ணவளை யாரென்று பாராது வண்டியில் ஏறி மின்னல் வேகத்தில் பறந்து விட்டான் இளவரசன்.
இளவரசி கூவிய கூச்சலில் அங்கிருந்த மக்கள் ஓடி வந்து அவளை சுற்றி நின்று வேடிக்கை பார்க்க ராதாவின் நெஞ்சமோ படபடவென துடித்தது.
முகத்தில் ஊற்றியது அமிலம் என்று தெரிந்தும்,பொறுட்படாமல் ஓடி சென்று இளவரசியின் கைகளை பிடித்து “அக்கா அக்கா ரொம்ப ஏரிதா, சீதா ஆம்புலன்ஸ்க்கு சொல்லுடி , அக்கா கொஞ்சம் பொறுத்துக்கோங்க, இதோ ஆம்புலன்ஸ் வந்துடும் கொஞ்ச நேரத்துல”, என்றவள் சீதாவின் புறம் திரும்பி “சீதா வைத்தியர் ஆயா வீட்டுக்கு தூக்கிட்டு போவோம் வா, நீ ஒரு கையை உன் தோள்மேல போட்டுக்கோ நான் ஒரு கையை என் தோள் மேல போட்டுக்குறேன் “என்றதும் சீதா “சரி சீக்கிரம் தூக்கு டி “..
“அம்மா நம்ம இளவரசி மேல ஆசிட் ஊத்திபுட்டான்ம்மா எந்த நாதாரி பயனுன்னு தெரில, ரொம்ப துடிச்சுட்டு இருக்குது நம்ம பாப்பா,”என்று கூறிய கோமளத்தின் விசுவாசி மோகனின் குரலை கேட்டு வீட்டிற்குள் இருந்த இளவரசியின் தந்தை அதிர்ந்தார்….
“என்னா டா சொல்ற என் மவ மேல ஆசிட் ஊத்திட்டானா எவன் டா யாருனு தெரியுமா உனக்கு, அய்யோ இப்போ எங்க டா இருக்கா பாப்பா, ஆமா அவ வூட்டுல தானே இருந்தா எப்படி வெளியே போனா, டேய் நல்லா பாத்தியா டா, அது என் மவ இளவரசி ன்னு “என்று திருநாவுக்கரசு மோகனின் சட்டை காலரை பிடித்து உலுக்கி கேட்க அவனோ “ஐயா நான் நிஜம்தான் சொல்றேன், அந்த ராதா சீதா புள்ளைங்க தான் பாப்பாவை கூட்டிட்டு வைத்தியர் கிட்ட போட்டுருக்குதுங்க “என்ற ராதாவின் பெயரை கேட்டதும் அங்கு நின்று இருந்த கோமளத்தின் கண்கள் கோவத்தில் அனலாய் கொதித்தது.
உடனே புடவை முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகி கொண்டு, வீட்டின் வாசல் முற்றத்தில் இருந்த சாணத்தையும், தொடப்பதையும் எடுத்துக்கொண்டு சென்றார் வைத்தியசாலை நோக்கி .
மனைவியின் கோபத்தை பார்த்த திருநாவுக்கரசு இவளை திருத்தவே முடியாது, அய்யோ என் பொண்ணு எப்படி இருக்கிறாளோ, என்று அவரும் பதறியபடி ஓடினார்.
எப்படியோ ஊர் முழுவதும் பரவியது,இளவரசியின் முகத்தில் அமிலம் ஊற்றிய சம்பவம்.
ரத்தினமும் ஓடோடி வந்தான் வைத்தியசாலைக்கு,,
வலியால் முனங்கி கொண்டு இருந்த பெண்ணவளே யாரும் பார்க்க கூட அனுமதிக்க விடவில்லை.
ராதாவும் சீதாவும் கண்ணீரோடு பயந்த முகத்தோடு திகைத்து நின்று இருந்தார்கள்.
ஊரே வைத்தியசாலையில் வாசலில் மக்களால் நிரம்பி கொண்டிருந்தது.
இங்கே இளவரசியின் நிலைமை மோசமாக இருக்க, அங்கே காட்டில், தனது கூட்டாளிகளோடு மகிழ்ச்சியுடன் சாராயம்குடித்து கொண்டிருந்தான் இளவரசன்.. இன்று தான் அவன் சாராயம் குடிக்கும் கடைசி நாளாக இருக்கும்.
ரத்தினமும் வெளியே அச்சத்தோடு நின்று இருந்த இரண்டு பேரிடம் வந்தவன் அவர்களை பார்த்து “ராதா என்ன நடந்துச்சு, எப்படி நடந்துச்சு, யாரு அவன், “என்று கேள்விகளால் சற்று குரலை உயர்த்தி கேட்க, ராதாவோ அவனை பார்த்து மிரண்டு தான் போனாள்.
“அது வந்து நானும் சீதாவும் புள்ளையார் கோயிலுக்கு நடந்து போயிட்டு இருந்தோம்,
ஆனா இளவரசி அக்கா எங்க கூட வரவே இல்லை, எப்படி எங்க பக்கத்துல வந்தாங்கன்னே தெரில, அவங்க முகத்துல ஆசிட் ஊத்துனத்துக்கு அப்புறம் தான் எனக்கே அவங்க எங்க பக்கத்துல இருந்தாங்க ன்னு தெரியும்,”என்று திக்கி திணறி பதில் கூறினாள் ராதா.
வைத்தியசாலையின் உள்ளே உயிருக்கு போராடி கொண்டிருந்த மகளை பார்க்க ஓடிவந்த திருநாவுக்கரசையும் பார்க்க விடாமல் தடுத்தனர்.. முகத்தை ஏதும் செய்ய முடியுமா என்ன, முகம் முழுவதும் வெந்து சதைகள் காணாமல் போயிற்று. மனதின் வலியும், முகத்தின் வலியில் துடித்தாலும் தந்தையை நினைத்து கொண்டே தனது உயிரை துறந்தாள் இளவரசி. ஆம் அவளின் உயிர் இவுலகை விட்டு பிரிந்தது.
அவளின் உடலை வீட்டிற்கு எடுத்து சென்று இறுதிகாரியமும் நடந்துகொண்டிருக்கும் போது நண்பனோடு குடித்துவிட்டு தள்ளாடிய படியே வந்தான் இளவரசன்.
வீட்டில் கூட்டமாகவும், கூவும் அழுகையின் கூடவே சத்தமுமாய் இருக்க போதையில் வந்தவனோ அங்கும் இங்கும் பார்த்து கண்களை பெரியதாய் விரித்து அங்கிருந்த ஒரு வயது மூத்த பெரியவரிடம் என்னவென்று கேட்டான், அந்த பெரியவரோ அவனை பார்த்து முகத்தை சுளித்து “ச்சே போடா பொசக்கெட்ட குடிகார பய, கூட பிறந்தவ இறந்துட்டா, இவனுக்கு குடி ஒன்னு தான் கேடு , ஒழுங்கா அப்படி தள்ளி நில்லு நாத்தம் நாறுது,” என்ற பெரியவரின் சட்டையை பிடித்து அவரை தள்ளிவிட்டவன், நேராக சென்றான் இளவரசியின் உயிரற்ற உடலை நோக்கி.
அங்கு அவனின் தாய் சோகத்தின் ஊடே கண்ணீரோடு அமர்ந்து இருக்க, அவனின் தந்தையோ மகனின் வருகையை எதிர்பார்த்து இருந்தவர் போலும், அவன் வந்த உடனே அவனின் தலை முடியை பிடித்து இருகன்னத்திலும் மாறிமாறி ஓங்கி அறை விட்டார் திருநாவுக்கரசு.
அப்போது எதேற்சையாக ராதாவின் முகம் அவனின் பார்வையில் சிக்கியது, கண்களை நன்றாக ரெண்டு முறை சுருக்கி
பார்த்தவன் திகைத்தான், இது எப்படி சாத்தியமாகும், ஆசிட் ஊத்துனது இவ மேல தானே, எப்படி ஒன்னும் ஆகாமல் சிவப்பா நல்லா நிக்குறா என்று மனதில் யோசித்தவனுக்கு ராதாவை உச்சி முதல் பாதம் வரை அங்குல அங்குலமாக பார்த்தவனுக்கு காமம் தலைக்கேறியது.
உடனே அங்கு இருக்கும் மக்கள் கூட்டத்தை கூட பொருட்படாதது சீதாவோடு ஒரு ஓரமாய் நின்ற ராதாவை நோக்கி சென்று அவளின் கையை பிடித்து இழுக்க, அவளோ பயத்தில் அவனை தள்ளிவிட முயற்சித்து தோற்று போனாள்.
அவனின் இந்த செயல் அங்கிருந்த ஜனங்களை ஆத்திரம் கொள்ள செய்தது.
அவனோ அவளின் கையை பிடித்து “ஏய் சிவப்பி நீ இன்னும் சாவலியா, நல்லதா போச்சு, என் கூட வா, ஆமா நான் ஆசிட் ஊத்துனது யாரு மேல, ஆனா நான் உன் மேல தானே ஊத்தினேன், நீ இன்னும் கருகி வெந்து சாவாம நல்லா ஜம்முனு சிவப்பா இருக்கற, ஆனா சும்மா சொல்லக்கூடாது உனக்கு பொறுத்த பேரு தான் நான் வச்சியிருக்கேன் என்ன சிவப்பி நல்லா இருக்கா “என்றவனின் முதுகை பதம் பார்த்தது ஒரு இரும்பு ராடு.
அடித்தவன் அங்கே பெரியாண்டவரின் கோப உருவம் போல் கையில் இரும்பு ராடோடு கோவத்தில் கண்கள் சிவந்து போய் நின்றுஇருந்தான் ரத்தினம்.
அவன் அடித்த அடியின் வலியை கூட பாறாங்கலால் அடித்தது போல் வலித்தது அந்த காமக்கொடூரனுக்கு.
போதையோடு கீழே விழுந்தவன் “இந்தாரு டா ரத்தின நீ தேவையில்லாம என் வழியில வர, பேசாம ஓடி போயிடு, இல்லை நடக்கிறதே வேற “என்று கூறி மீண்டும் ராதாவை பார்த்தான், அவளோ கையில் அருகில் இருந்த சவுக்கு கட்டையோடு அவனை நோக்கி வந்து அவனின் மண்டையில் ஓங்கி ஒன்று போட்டாள் , அவ்வளவு தான் உடம்பின் இருந்த போதை அனைத்தும் வெளியே வந்தது அவனுக்கு.
அப்போது தான் நிதானத்துக்கு வந்தவன் தாய் இருக்கும் இடத்திற்கு சென்றான், அவன் தாயோ அவனை துடைப்பக்கட்டையால் வெளுத்து வாங்க, அவனின் தந்தையோ அவனுக்கும் தனக்கும் எந்த சம்மதம் இல்லை, என்று ஓரமாக நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.
ஆனால் நடுவில் உடல் முழுவதும் வெள்ளையாடையால் சுற்றி படுத்திக்கொண்டிருந்த இளவரசியை பார்த்து யாரென்று கேட்டான் அவன்.
அவனின் தாயோ பதில் கூறமுடியாமல், பொத்தென்று அமர்ந்து கதற அவனோ அங்கிருந்தவர்களை பார்த்து கேட்க ஒவ்வொருவரும் அவனுக்கும் பதில் கூறாமல் பின்னே நகர்ந்தனர்.
ஏற்கனவே காதலியை சாகடித்தவன் , இப்போதும் ஒன்னும் அறியாததை போல் கேள்வி கேட்டவனின் சட்டையை பிடித்து “டேய் இவ உன் தங்கச்சி டா, கூட பொறந்த தங்கச்சி டா, உனக்கு இவ என்ன துரோகம் பண்ணா, அப்பாவி பொண்ணு, உன்மேல பாசம் உயிரே வச்சிருக்கா, எப்போப்பார்த்தாலும் அண்ணன் அண்ணா ன்னு உருகுவா, நீ தப்பான வழியில போனதுக்கு உனக்கு புத்தி சொன்னவளை கொன்னுட்டியே டா பாவி உன்னைய எதுக்கு சும்மா விடணும் “என்று அவனை இடையே இழுத்துக்கொண்டு வந்து அடித்து தள்ளி விட இளவரசனின் தலையோ அங்கிருந்த சீமென்டால் ஆனா துணி துவைக்க கல்லில் மோதி ரத்தம் வழித்தது.
அதை கூட பாராமல் அவனை அடித்து நொறுங்கினான் ரத்தினம். கோவம் ஒரு மனிதனை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும், அதுதான் மிக பெரிய ஆபத்தில் முடியும், அதே தான் ரத்தினமும் செய்திருக்கிறான்.
நன்றாக உதை வாங்கியவனை யாரும் தடுக்காதது ரத்தினத்துக்கு வசதியாகி போனது, அருகில் இருந்த பூச்சாடி தூக்கி அவனின் மண்டையில் ஒரு போடாய் போட்டான்.
அவ்ளோதான் இளவரசனின் உடல் நினைவு இல்லாமல் படுத்த படுக்கையாய் அதே இடத்தில் கிடந்தது.
பெண்கள் அனைவரும் கூடி ஒப்பாரி வைத்து, மறுநாள் காலையில் இளவரசியின் உடல் இறுதி ஊர்வலத்துக்கு எடுத்து செல்ல பட்டது..
ஒரு முறை தானே காதலை சொன்னான் ரத்தினம், அடுத்த முறை காதலியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளும்படி ஆகிவிட்டது.
இதோ புவியில் புதைத்தார்கள் இளவரசியை. ஆதரவாய் இருந்த ஒரே மகள் விட்டு சென்றதும், அவளின் முப்பதாவது நாள் காரியம் முடிந்ததும் கையில் கொஞ்சம் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து கொண்டு சென்றார் ராமேஸ்வரம் நோக்கி.
ஆனால் இளவரசன் உடல் இன்னும் உயிரோடு அவனின் வீட்டிலே வைத்து வைத்தியம் பார்த்தும் தேறாதது இருக்க கொஞ்சம் நாளின் மனநிலை பாதிக்க பட்டவன் போல் நடந்து கொள்ள ஆரம்பித்தான்..
அங்கே ராதாவின் இல்லத்தில் , தனது முக நிறத்தால் ஒரு உயிரே சென்று விட்டது என்றவள் அன்றிருந்து முகத்தில் கண்மை பூசும் கறுப்பை உபயோகிக்க ஆரம்பித்தாள் ராதா.
ஊரில் உள்ளவர்கள் உண்மையாகவே நம்பினார்கள், அவளின் அப்பத்தா பேச்சின் வாய்ச்சொல்லை கேட்டு, “என் பேத்தி எப்படி தான் கறுப்பா ஆனாளோ தெரில, இப்போல்லாம் கண்ணாடி முன்னாடி போயி நின்னு பவுடரு பூசறது இல்லை “என்று பொயாய் கூறி தன் பேத்தியை காப்பாற்றி வந்தார் பேச்சியம்மாள்.
ஆனால் உண்மையை சீதாவின் குடும்பத்தினர் மட்டும் அறிந்ததே….
அப்பாடி ஒரு வழியா பிளாஷ்பேக் முடிஞ்சிடுச்சி..
இதோ ராதாவின் ஊர் எல்லையை தொட்டது வெற்றியின் ராயல் என்பீல்ட்.
இன்னும் ஐந்து நிமிடத்தில் அவன் சரிபாதியவளை காணப்போகும் உற்சாகம் அவனை தொற்றிக்கொண்டது…
error: Content is protected !!