Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ராம் வெட்ஸ் சீதா – 11 (1)

ராம் வெட்ஸ் சீதா 11.1

விடியற்காலை மூன்று மணிக்கு ராதாவின் வீட்டுக்கு வந்தடைத்தான் வெற்றி.



Advertisement

அங்கு மரத்தில் ஓரமாக உடம்பு முழுவதும் ரத்ததோடு சிவந்த நிலையில் கட்டிபோட்டு கொண்டிருந்த கோபுவை கண்டான் அவன்.

கோபுவை அடித்தது வேறு யாருமில்லை, நாகமாய் இருந்து மனிதவுறுவதிலிருந்து வந்த ஒரு தவமுனிவர்….

Advertisement

Advertisement

உடனே, வீட்டுக்கு உள்ளே செல்ல கதவை தட்ட போக, அதுவோ வெறுமனமே பூட்டு போடாமல் சாத்திய இருந்தது.

கதவை திறந்து சத்தமில்லாமல் நடந்து வந்தவன், கதவை மீண்டும் சத்தம்வராமல் சாத்திவிட்டு கூடாரத்தில் வெறும் தரையில் உறங்கி கொண்டிருந்த தன்னவளை பார்த்தான்.

Advertisement

அவளுடன் அவள் பாட்டி பேச்சி உறங்கிகொண்டிருந்தார்.

உடனே அவன் அங்கிருந்த மின்விளக்கை போட்டு அங்கிருந்த சோபாவில் அமர்த்தவனுக்கு உறக்கம் தான் வர மறுத்தது.

அவனின் கனவில் வந்ததை திரும்ப ஒருமுறை யோசித்து பார்த்தவனுக்கு, அந்த பாம்பு நினைவுக்கு வந்தது, யார் அந்த பாம்பு, எதற்காக மனிதவுருவத்தில் வந்து தன்னவளை வேவு பார்த்தவனை அடித்து கட்டி போட வேண்டும், என்று பலத்த யோசனையோடு எப்போது தான் உறங்கினானோ அவனுக்கே தெரியவில்லை….

 இரவு முழுவதும் தூக்கமின்மையால் அசதியில் தனது பணியை சிறப்பாக செய்து விட்டு, ஓய்வு எடுக்க கதிரவனின் வருகைக்காக காத்திருந்தாள் இரவு பெண்ணவள், அவளின் எதிர்பார்ப்பை தாமதிக்காமல் சூரியன் உதிர்க்க ஆரம்பித்தது.

விடியலும் அழகாக விடிந்தது..

இதோ கோழி கூவும் சத்தம் கேட்டு விழித்த சிவகாமி, கூடாரத்தில் உறங்கி கொண்டிருந்த வெற்றியை நன்றாக உறுத்து பார்த்துவிட்டு, என்ன இது மாப்பிள்ளை தம்பி இங்க எப்படி வந்துச்சு, எப்போ வந்துச்சு, யாரு கதவை திறந்து விட்டது, என்று முனுமுனுத்து கொண்டே மகள் எங்கே என்று பார்த்தார்.

அவர் பெத்த மகளோ அவரின் தாயாரோடு படுத்து குறட்டை விட்டு உறங்கி கொண்டிருந்தாள்.

“இவ ஒருத்தி பொழுது விடியற நேரம் பார்த்து தான் குறட்டை அடிக்குறா, பாவம் இந்த வெற்றி தம்பி, கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி குறட்டை அடிக்குறான்னு பார்ப்போம், “என்று புலம்பி கொண்டே வாசலுக்கு சென்று சாணி தெளித்து பெருக்கி கூட்டி குப்பைகளை அள்ளி வைத்து நின்ற போது, மரத்தில் கட்டி வைத்திருந்த கோபுவை கண்டார்.

உடனே துடப்பதை கீழே போட்டு விட்டு உட்கார்ந்து உறங்கி கொண்டிருந்த கோபுவிடம் உயிர் மூச்சு இருக்கிறதா என்று சோதித்து பார்ப்பதற்காக தண்ணீரை கொண்டு வந்து அவனின் முகத்தில் அடித்தார்.

முகத்தில் சில்லென்று பனிகொட்டுவது போல் தண்ணீர் பட்டதும் விழிகளை திறந்த கோபு, எதிரே நின்றிருந்த சிவகாமியை பார்த்தான்.

“அம்மா தாயி என்னைய மன்னிச்சுடு, நான் உங்க வூட்டுக்கு சும்மா தான் வந்தேன், திருட வரல, என்னைய நம்புங்க, ப்ளீஸ் இந்த கட்டை அவுத்து விடுங்க, உடம்புலாம் நோவுது “என்று சோககீதை பாடியவனை பார்த்து இரக்கம் கொண்ட சிவகாமி, சரி உண்மையை சொல்லு இன்னாத்துக்கு என்ற வூட்டுக்கு வந்து வேவு பார்த்த, நீ அந்த பொம்பள கோமளத்தோட கூட்டாளின்னு எனக்கு நல்லாவே தெரியும்., “எனவும், அவனோ “இல்லை நான் அவங்க அனுப்பி வரல, அவசரமா கக்கூஸ் வந்துச்சு அதான் பாத்ரூம் எங்கேன்னு தேடி பார்த்தேன் “, என்று கூறியவனை நம்பாமல் பார்த்தார் சிவகாமி..

“இந்தா நீ உண்மையை சொல்ல போறதுயில்லை, நல்லா விடியட்டும், உன்னைய பஞ்சாயத்துல நிக்க வச்சி என்ன சொல்றாங்களோ அதன் படி உனக்கு தண்டனை கொடுத்து அனுப்புறோம் “என்று அவனை பேசவிடாமல் வாசலில் கோலத்தை போட்டு விட்டு உள்ளே சென்றுவிட்டார்.

 சீதாவின் இல்லம்.

மணி ஆறை தொட்டது. வழக்கம் போல் விடியலிலே எழும் சீதா இன்று ஏழாமல் இன்னும் உறங்கி கொண்டிருந்தாள்..

அவளின் தாயோ மகளை எழுப்புவதற்காக அறையின் கதவை திறந்து உள்ளே வந்தவர், அவளை தட்டி எழும்ப, அவளோ நன்றாக போர்த்திக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தாள்.

“சீதா எழுந்துரு டா, இன்னக்கி உனக்கு ஸ்கூல் இருக்கு, சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு கிளம்பி வா, டெய்லி உன்னைய எழுப்பியே என் பாதி உசுரு போயிடும், இந்தா டி இப்போ நீ எழும்பல நான் ஸ்கூலுக்கு வந்து உன் கணக்கு வாத்தியார் கிட்ட போட்டு கொடுத்துடுவேன் “என்றதும் தான் தாமதம், அவளோ பக்கென்று எழுந்து அமர்ந்து தாயை முறைத்து கொண்டிருந்தாள்..

“ஏன்மா உனக்கு வேற வேலையே இல்லையா, ஒரு நல்ல கனவு தெரியுமா, அதுவும் நானும் ராமும் கல்யாண கோலத்துல அக்னியை சுத்தி வந்துட்டு இருந்தோம் “என்று உளறிய மகளை கேள்வியாய் விழிகள் விரித்து பார்த்தார் காமாட்சி.

“அடியேய், அது எவன் டி ராமு, என்ன டி சொல்ற நீ, எனக்கு தெரியாம உனக்கு பையன் பிரண்ட்டா இருக்கானா “என தாய் கேள்வி கேட்ட பிறகே தாம் உளறியிருகிறோம் என்று உணர்ந்தாள் சீதா..

இப்போ எப்படி சமாளிப்பது என்று யோசித்தவளின் தலையில் ஒரு தட்டு தட்டி “இந்தா டி படிக்கற வயசு என்ன பையன் கிட்ட பேச்சு உனக்கு, பொண்ணுங்க படிக்குற பள்ளிக்கூடத்துல தானே நீயும் ராதாவும் படிக்கறீங்க, அப்போ எப்படி பையன் உனக்கு பிரண்ட்டா கிடைப்பான் “என கோவத்தில் மகளிடம் என்ன பேசுகிறோம் என்று அறியாமல் கத்திகொண்டிருந்தார் காமாட்சி..

தாயின் கோவத்தை பார்த்து அசட்டு விழித்த சீதா “அம்மா நான் என்ன சொன்னேன் இப்போ எதுக்கு ஊருக்கே கேட்கற மாதிரி கத்திகிட்டு கிடக்குற, ராம் பேர் மட்டும் தான் சொன்னேனே தவிர அவன் என் பிரண்டு ன்னு சொல்லவே இல்லை., நான் என்னக்கி பையனை பிரண்ட்டா என்கூட கூட்டு சேர்த்து இருக்கேன், நீ பார்த்தியா, போ மா பெத்த பொண்ணை கூட நம்ப மாட்ட, காலம் மாறி போகுது, கனவுல ராமனும்,சீதையும் கல்யாண என் கனவுல வந்துச்சுமா, அதுல சீதையா நான் மாலை போட்டு, நல்லா நிறையா உச்சியில இருந்து பாதம் வரைக்கும் நகைநட்டு போட்டு அழகா அலங்காரம் பண்ணி ராமன் பக்கத்துல நின்னுட்டு இருந்தேன், கெட்டுமேளம், கெட்டிமேளம் ன்னு சொல்லும்போது தான் நீ தட்டி எழுப்பிட்ட, எழுப்பினது மட்டும் இல்லாம மிஸ் கிட்ட போட்டு விடுவேன் ன்னு சொல்ற, “என்று மூச்சி விடாமல் பேசும் மகளை ஆச்சரியத்தோடு பார்த்தார் சீதாவின் தாய் காமாட்சி..

“அடியேய் படிக்குற வயசுல உனக்கு கல்யாண கனவு வேற கேட்குதா, ஒழுங்கா எழுந்துரு, இந்தா டி என்ன மொறைப்பு, இந்த மொறைக்குற வேலையெல்லாம் உன் அப்பா கிட்ட வச்சிக்க, முழிய நோண்டிபுடுவேன் நோண்டி, எழுந்து போ, பாரன் டி இன்னும் குத்துகல்லாடம் உட்கார்ந்துட்டு இருக்கிறவ,”என மகளை பிடித்து தூக்கி நிக்கவைத்து அவளை குளியலறைக்குள் தள்ளி விட்டு “அப்பாடா, இவளுக்கு சீதான்னு பேர்வச்சது தப்பா போச்சு, எல்லாம் அந்த பாழப்போனா ஜோசியக்காரனை சொல்லணும், இருக்கட்டும் எங்கே ஓடிட போறா, நம்ம பொண்ணையே நம்ம நம்பலைனா யாரு நம்ம போறா, என் வளர்ப்பு என்னைக்கும் தப்பாக்காது “என்று தனக்கு தானே அறிவுரை சொல்லி மனசை தேற்றி கொண்டவருக்கு தெரியவில்லை, கனவில் வந்த ராமனே சீதாவை நினைத்து காதலோவியம் வரைத்து கொண்டிருக்கிறானேன்று…

சூரியன் புவிக்கு வந்து நேரமாகி விட்டது, கிராமத்து வாசிகள் தங்களது வேலையை வழமை போல் செய்துகொண்டிருக்க ராதாவோ பள்ளிக்கூடத்துக்கு கிளம்பலாமா வேணாமா? என்று யோசித்து கொண்டிருந்தாள், ஏனென்றால் அவளின் அத்தை பெத்த மகன் அங்குதானே இருக்கிறான், சரி இன்னக்கி லீவு போடுடலாம், சீதா வந்தா என்ன பதில் சொல்லுறது “என்று பலத்த யோசனை செய்துகொண்டிருந்த ராதாவை உலுக்கி “அடியேய் பள்ளிக்கூடத்துக்கு கிளம்பமா இன்னும் இன்னா டி பண்ணிட்டு இருக்கறவ, அச்சச்சோ நாழி ஆகுது, அடியேய் எழுந்துரு ஒழுங்கா, இந்தா டி நான் பாட்டுக்கு கத்திகிட்டு கடக்குறேன் நீ பாட்டுக்கு வயித்த புடிச்சிட்டு வாயை கோணலா வச்சிக்கிட்டு இருக்கறவ, ‘.என்றார் சிவகாமி.

“ஐய்யோ அம்மா முடில, வயித்து வலிக்கிது ஊஊஉஉஉஉஉஉஉ அம்மாம்ம்ம்ம்மாஆஆஆ, ஆஆஆஆ ஆத்தி வலிக்குது அம்மா இன்னாத்துக்கு என் மண்டையில அடிச்ச நீயி ‘என தாயை நோக்கி ஒரு பார்வை பார்த்தாள் ராதா.

“உன் வேஷம் இங்க செல்லாது, நீ ஒழுங்கா பள்ளிக்கூடத்துக்கு கிளம்புற வழியை பாரு அடுத்த மாசம் எக்ஸாம் வருது, இவ இங்க வேஷம் போட்டா யாரு படிச்சி எக்ஸாம் எழுதறது “என்று அவளின் தாய் கூற அது வெளியே கூடாரத்தில் அமர்ந்து கொண்டு தேனீர் பருகிக் கொண்டிருந்த வெற்றியின் செவியில் விழ, அவன் நேராய் ராதாவின் அறைக்கு வந்தான்.

அவனை பார்த்து மனது ஆட்டம் போட்டாலும், அதை வெளியே காட்டாமல் முகத்தை உம்முனு தூக்கி வைத்துக்கொண்டு இருந்து ராதாவை பார்த்தான்.

“அத்தை என்ன பிரச்சனை, ஏன் ராதா வயித்தை புடிச்சிகிட்டு அழறா “என்று கூறியவனை பார்த்து “ஹாஹா நம்ம மாமன் கூட நம்மளை நம்புது, என்னைய பெத்த ஆத்தா இருக்கே, என்னைய மட்டும் எதுனாலும் குத்தம் சொல்லிட்டே இருக்கும் “என மனதில் நினைத்துக்கொண்டவள், “ஆஆஆஆ வயித்து வலிக்குது அத்தான், இந்த அம்மா என்னைய புரிஞ்சிக்கவே மாட்டுது! நீங்களாவது எடுத்து சொல்லுங்க அத்தான், “என்று அவளின் அத்தானை பார்த்து வராத கண்ணீரை துடைத்து கொண்டே கூற, “சரி அழாத,இரு ரதிகுட்டி நான் பேசுறேன் ” என்றான் அவன்..

அவனோ உதட்டில் ஒரு மென்மையான புன்னகையோடு சிவகாமியின் கையை பிடித்து கொண்டு அறையிலிருந்து வெளியே வந்தவன், “அத்தை நீங்கப்போங்க நான் பார்த்து அவளை ஸ்கூலுக்கு போக வைக்குறேன் “என்று கூறிவிட்டு மீண்டும் அறைக்கு வந்து பார்த்தான், அவனவளோ இன்னும் வயிற்றில் கையை வைத்துக்கொண்டு வலியால் முணங்கி கொண்டு வேஷம் போட, அவளிடம் வந்தவள் “ரதி குட்டி, கிளம்பு ஹாஸ்பிடல் க்கு போய்ட்டு ஒரு ஊசி போட்டா சரி ஆகிடும், அப்புறம் கிளம்பி வரும் போது ஸ்கூல் யூனிபோர்ம் ல வா, ஹாஸ்பிடல் க்கு போய்ட்டு நேரா ஸ்கூல் ல விடறேன் ” என்றதும் தான் தாமதம், அவளோ “அய்யோஓஒ ஊசியா, வேணாம் அத்தான், ஊசி போட்டா வலிக்கும், நான் அழுத்துடுவேன்,”என்று அவனிடம் வெளியே கூறியவள், மனதின் ஓரத்தில் ‘ச்சே இதுக்கு என்னை பெத்த ஆத்தாவே பரவாயில்லை, ஊசி வேற போடுவாங்களே பேசாம நாமளே வலி குறைஞ்சிடுச்சு ன்னு சொல்லுவோம் ‘என்று யோசித்து விட்டு

“அதுவந்து அத்தான் சாதாரண வயித்து வலிக்கு எதுக்கு ஹாஸ்பித்திரி க்கு போகணும், வழமை போல வர வலித்தானே, விடுங்க அத்தான் நான் பள்ளிக்கூடம் கிளம்புறேன் “என்று நல்லா பிள்ளையாய் கூறிய ராதாவை நினைத்து மனதுக்குள்ளே சிரித்துக்கொண்டு,”க்கும் என் சொல்லுக்கு தான் அடங்குவியே தவிற வேற யாருக்கும் அடங்காத பொண்ணா இருக்கியே ரதி குட்டி “என்று அவளின் கன்னத்தை பிடித்து கிள்ள ராதாவுக்கோ முகம் ஞாணத்தால் சிவந்தது…

சரி நேரம் ஆகுது நான் கிளம்புறேன், நீயும் குளிச்சிட்டு சீக்கிரம் கிளம்பி பள்ளிக்கூடத்துக்கு போய்ட்டுவா “என்று கூறி செல்லப்போனவனின் கரத்தை பிடித்து “அத்தான் கீழே குனிங்க, என்று கூற அவனோ அவளின் உயரத்துக்கு கீழே குனிந்த உடனே அவனின் கன்னத்தில் அவளின் இதழ்களை பதித்தாள் ராதா.

அவனோ தன்னவளின் முதல் முத்தம் கிடைத்த நொடியே அவளின் முகத்தை பார்த்தான் அவளோ தலையை கீழே குனிந்து கொண்டு போங்க அத்தான், நேரம் ஆகுது நானும் கிளம்பனும்,”என்று கூறும் போதே சைக்கிள் மணி கேட்டது..

“அய்யயோ சீதா வந்துட்டாளே, என்று பதறி அத்தான் நீங்கள் ஊருக்கு பார்த்து போய்ட்டு வாங்க, நான் குளிக்க போறேன் டாட்டா,”என்று கூறிவிட்டு குளியலறைக்கு நுழைந்து கொண்டாள் ராதா..

என்ன இது எவ்வளவு நேரம் பெல் அடிக்கறது, இன்னும் அவளை காணோம், என்று யோசித்து விட்டு சைக்கிளை வெளியே ஸ்டாண்ட் போட்டு நிறுத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள் சீதா..

அங்கு வெற்றியோ அவனின் அத்தை சிவகாமியிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே வரும் போது சீதாவை பார்த்து ஒரு புன்னகை சிந்தி விட்டு வெளியே வந்தவன் அங்கு மரத்தில் கட்டியிருந்த கோபுவை மீட்டு அவனை தனது வண்டியில் ஏற்றி நேராய் சென்றான் காவல் நிலையம் நோக்கி…

“அம்மா என்ன இன்னும் ராதாவை காணோம், இன்னுமா கிளம்புறா, ” என்றவளிடம் “அதையேன் கேட்கற, அவ மாமன் வந்துட்டான் ன்னு ஸ்கூல் லீவு போட பார்த்தா, வயித்து வலின்னு நாடகம் போடறா, அவ மாமாந்தேன் எதோ பேசி அவள பள்ளிக்கூடத்துக்கு கிளம்ப வைச்சான்,”.என்று கூறிய போது ராதா குளித்துமுடித்து விட்டு வெளியே வர நேரம் சரியாக இருந்தது..

அவசர அவசரமாய் தலையை ரெண்டை சடை பின்னியலிட்டு உணவை அரைகுறையாக முழுங்கி விட்டு பள்ளிப்பையை எடுத்துக்கொண்டு சைக்கிளை வேகமாக மெரித்து சென்றார்கள் இருவரும்..

அங்கு களத்துமேட்டில் சீதாவை இன்னும் காணாது சோகமாக முகத்தை வைத்துகொண்டிருந்த ராமை முறைத்து பார்த்தான் முருகேசு,

“ஏன்டா ராமு ஸ்கூலுக்கு நேர ஆகுது டா, இன்னக்கி மேத்ஸ் டெஸ்ட் வேற இருக்கு டா வா டா அந்த புள்ள இன்னக்கி ஸ்கூல் லீவு போல அதான் இன்னும் காணோம், அப்படியே வந்தாலும் சாயங்காலம் வூட்டுக்கு போகும் போது பாக்கலாம் வா டா,”என்று கூறிய முருகேசுவின் வார்த்தைகள் அவனின் செவிக்கு எட்டியதோ இல்லையோ, ஆனால் நமக்கு கேட்டது…

நாளைக்கு எபி உண்டு மீதியை நாளைக்கு பாக்கலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!