Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

பஞ்சமியில் விசாலாட்சி – 2 (1)

அத்தியாயம் 2.

வருடங்கள் வேகமாக உருண்டோடியாது.



Advertisement

சுப்பன் களவாடிய பணத்தையும் பொருளையும் வைத்து சொந்தமாக ஐந்து காணி நிலம் வாங்கி அதில் விவசாயம் செய்து கொண்டும் குடும்பத்தை பார்த்துக்கொண்டும் வருகிறான்.

விவசாயத்தில் வரும் லாப பணத்தை வைத்து தென்னை கீற்று வீட்டை மச்சு வீடாக மாற்றி கட்டினார்.

Advertisement

Advertisement

இப்பொது பிள்ளைகள் வளர ஆரம்பித்து விட்டார்கள்.

மூத்தவள் பார்வதிக்கு இருபது  வயதானதும்

தூரத்து சொந்தமான விவசாயப்பரம்பரையை சேர்ந்த மாரியப்பனுக்கு திருமணம் செய்து கொடுத்தார் சுப்பன்.

Advertisement

அடுத்தவள் அபிராமிக்கு பதினெட்டு வயதாகிறது, பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் சமையல்கட்டில் தாய்க்கு உதவியாக இருக்கிறாள்.

பக்கியலக்ஷ்மி க்கு பதினாரு அகவையும் இருக்க, இரட்டையர்களான விசாலாட்சிக்கும் விதுரனுக்கும் பத்து வயது நடந்து கொண்டிருக்கிறது.

அந்த அதிகாலை ஐந்து மணியான வேளையில் உறக்கத்தில் இருந்து விழிந்த பார்வதி, தூக்கமில்லாமல் மேறிட்ட வயிற்றோடு எழுந்து கதவை திறந்து ஒரு தூக்கு வாளியில் தண்ணீரை பிடித்து அதில் சிறிது சாணத்தை கலந்து வாசலில் தெளித்தாள் .

பிறகு பெருக்கி கூட்டி குப்பையை வாரி ஒரு சாக்கில் கொட்டி வைத்துவிட்டு கோலம் போட்டு வர மணி ஐந்தரை நெருங்கி விட்டது.

உடனே தானும் குளித்து விட்டு, கணவனை எழுப்பி அவரையும் குளியலறைக்கு அனுப்பி விட்டு  ஒரு காட்டன் புடவையை எடுத்து கட்டிக்கொண்டு, கிளம்பி ரெடியாக இருக்க அவளின் கணவரும் குளித்துவிட்டு வருவதும் சரியாக இருந்தது.

அவளின் கணவர் பொண்டாட்டி பேச்சை தட்டி கேட்காதவன். அவனின் தாய் ராக்காயி  தான் பார்வதியிடம் எப்போதும் குறை கண்டுபிடித்து குத்தம் கூறி கொண்டே இருப்பார்.

அதற்கு தான் விடியலில் எழுந்து கிளம்பி அவளின் தாய் வீட்டின் விஷேசத்திற்கு கிளம்பி கொண்டிருக்கிறாள்..

கணவன் வந்ததும் அவருக்கு சட்டையை எடுத்து கொடுக்க அவளின் கணவரோ “பாரு, அம்மா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு கிளம்புவோம் டி, நாம சொல்லாம போனா அம்மா சண்டை போடும் டி, அம்மாக்கு யாரு இருக்காங்க, நம்ம தான் பாத்துக்கணும், சொன்ன கேளு பாரு,,”என்ற மாரியப்பனை முறைத்த பார்வதி

“இந்தாருங்க அவங்க கிட்ட சொன்னேன் வச்சிக்கோங்களேன், அவ்ளோத்தேன் சண்டை நடக்கும், என் வூட்டுல ஒரு நல்லது நடக்கும் போது தான் உன் அம்மாக்கு கசக்குமா, நேத்து இராவுல நாம பொறுமையா எடுத்து சொன்னோமா இல்லையா, இந்தாருங்க என்ன முழிப்பு, நேத்து ராத்திரி சொன்னோமா இல்லையா ன்னு மட்டும் சொல்லுங்க ” என்ற மனைவியை ஏறிட்டு பார்த்தான் மாரியப்பன்.

“அது வந்து அம்மாக்கு வயசாகி போச்சுல்ல அதான் அம்மா அப்படி கோபத்துல பேசும், நீ ஏதும் உன் வூட்டுல சொல்லாத பாரு, ஆமா நீ துணி மனி சீரு எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டியா பாரு, போயி சரியா இருக்கன்னு இன்னொரு தரம் பார்த்துட்டு இரு, நான் போயி அம்மாட்ட சொல்லிட்டு வரேன் “என்றவன் மனைவியின் பதிலை கூட எதிர் பாக்காது அவனின் தாய் உறங்குமிடத்துக்கு வந்தான்.

அவன் வருகிறான் என்றறிந்த ராக்காயி கிழவி உறங்கும் போல் நடித்து படுத்து கொண்டார்.

அவன் வந்ததும் தாயின் காலை சீண்டி “அம்மா, அம்மா எழுந்து உட்காரு மா, நாணும் என் பார்வதியும் விஷேசம் போய்ட்டுவறோம், “என்ற மகனை பார்த்த ராக்காயி “ஏண்டா என்னைய கூட்டுக்கிட்டு போவ மாட்டியா நீயி, ஏன் உன் பொண்டாட்டி வேணாம் ன்னு சொல்லிட்டாளா என்ன, நேத்து ராத்திரி அப்படி என்ன தப்பா சொல்லிப்புட்டேன் நானு, இப்போ வயசுக்கு தானே வந்திருக்கா உன் கொழுந்தியா, மஞ்சள் நீர் நடக்கும் போது சீர் செஞ்சா என்னவாம் ன்னு தானே நான் கேட்டேன், அதுல என்ன தப்ப கண்டுபுடிச்சா உன் பொண்டாட்டி “என்ற தாயின் வாயை பொத்தி “உஸ்ஸ்ஸ்ஸ் என்னமா நீயி முடிஞ்சதை பேசி ஊத்தி அதை பெரிசாக்கி சண்டை வாங்கிட்டு தான் கம்முனு கிடப்பிய்யா, ஏன் மா உனக்கு நீ இப்படி பேசறது சரியா படுதா, இதுவே உன் தங்கச்சி பசங்க மட்டும் இருந்தா நீ சும்மாவா இருப்ப, தண்ணி ஊத்தத்துக்கும், மஞ்சள் நீர் க்கும் தனியா தானே இரண்டு தடவை பட்டுபுடவை எடுத்துனு போன நீயி”, என்றவன் மேலும் ” அம்மா பேசாம வரத்து இருந்தா கம்முனு வரணும் இல்லை போற வழில இறங்கி வுட்டு போயிடுவேன், சீக்கிரம் கிளம்பு , மாட்டு வண்டி ரெடியா இருக்கு, “என்று கூறிவிட்டு சென்றான்.

அவன் சென்றதும் அவன் தாய் ராக்காயி “இந்த எடுப்பட்ட பயல பெத்து வளர்த்து, கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து ஆளாக்கி இருந்தேன் பாரு என்னைய என் புத்திய எதால அடிக்கறது, அந்த சிறுக்கி வேற முழுகாம இருக்கா, இருடி உனக்கு புள்ள புள்ள பொறக்கட்டும், அதை வச்சே உன் வாயையும் கொட்டத்தையும் அடக்குறேன் பாரு “என்று தனக்கு தானே பேசி கொண்டு புடவை முந்தானையை உதறி இடுப்பில் சொருகி தலை முடியை எடுத்து கொண்டை போட்டுகொண்டு குளிக்க சென்றார்.

சுப்பனின் இல்லம்.

வீட்டின் வெளியே செல்லாயி இல்லம் நம்மை அன்புடன் வரவேற்கிறது என்று சுவரில் ஒட்டி இருந்த கருநீல வண்ணத்தில் ஆனா பெயர் பலகை நம்மை வரவேற்கிறது.

வீட்டில் வெளியில் பந்தல், இரண்டு பக்கமும் வாழைதார்கள் கட்டப்பட்டு எல்இடி பல்ப் வரிசையாக கட்டி இருக்க, சமையல் வேலைகளுக்கு தனியாக பெரிய பெரிய பாத்திரங்கள் அடுக்கி வைத்து கொண்டிருந்தது..

வறுமை, மின்சாரமிண்மை என்று இருந்த கிராமம் இதோ பத்து வருடத்தில் அனைத்து வசதிகளோடு ஜொலிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!