Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

டெஸ்டிங்

இதோ வெகு சிறப்பாக நிச்சயம் நடந்து கொண்டிருந்தது, மாநிகவேளிர்க்கும் இளவரசிக்கும்… ஒரு சனிகிழமை காலை நிச்சயம் நடந்து கொண்டிருக்க, திங்கள் காலை திருமணம்.

சேதுபதி பெண் வீட்டினறாய் எல்லா ஏற்பாடுகளையும் மிக சிறப்பாய் செய்திருந்தார். அப்பா அம்மா இல்லாததால் சரியா எதுவும் நடக்கவில்லை என்று யாரும் ஒரு சொல் சொல்லக் கூடாது என்பது ஒரு புறம், இவர்கள் ஜீவாவின் மக்கள் என் பேரன் , பேத்திகள் என்று ஊருக்கு காண்பிக்க வேண்டிய அவசியம்.

எல்லாம் விட மிகப் பெரிய விஷயத்தை செய்திருந்தார். தனது மறைந்த மனைவியின் உடைமைகளை எதோ பொக்கிஷம் போல பாதுகாத்து வந்தவர், இப்போது அதை தனது இரண்டு பேத்திகளுக்கும் திருமணம் நிச்சயம் ஆனதுமே பிரித்து கொடுத்தார்.

ஒரு நாள் காலை வீட்டினர் அனைவரையும் அழைத்தவர், நடுக் கூடத்தில் ஜீவாவின் அம்மாவின் பொருட்களை கடை பரப்பினார்.



Advertisement

 

 

=====================================================

Advertisement

 

Advertisement

அத்தனை பட்டுப் புடவைகள், கிட்ட தட்ட ஐம்பது ஆண்டு பழமை வாய்ந்தது, நைந்திருக்குமே என்று எல்லோரும் பார்க்க இல்லை, அப்போதெல்லாம் கைத்தறி பட்டுப் புடவை தானே உருக்கினால் தங்கமும் வெள்ளியும் நிச்சயம்

இதை உபயோகிப்பீங்கன்னா எடுத்துக்கங்க இல்லை என்கிட்டயே இருக்கட்டும் என்றார்

அவர்களுடைய அப்பாவின் அம்மாவினது, அதுவே அந்த பெண்களுக்கு ஒரு சொந்தத்தை கொடுக்க, கட்டுவோம் தாத்தா என்றாள் இளவரசி

Advertisement

அலரோ ஒரு படி மேலே போய், உனக்கு எது கட்டினாலும் நல்லா தான் இருக்கும். நான் எடுத்ததுக்கிட்டது போக மீதி தான் உனக்கு என்று அப்போதே சொல்லிவிட்டாள்

ஆண்பிள்ளைகள் எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்

 

 

=======================================================================

 

விசாகன் அகிலனின் காதை கடித்தான் என்னடா ஒரே பீலிங்க்ஸ் சா என்று

என்னா என்னா பீலிங்க்ஸ் சு என்று வடிவேலு பாணியில் அகிலன் நக்கல் அடிக்க

அதான் பொண்ணா பொறக்கலைன்னு என்று விசாகன் சொல்ல

ஏன் பொண்ணா பொறந்தா நீ என்னை கட்டியிருக்க போறியா என்ன என்று அகிலன் சொல்ல,

உன்னை கட்டிக்க எதுக்குடா பொண்ணா பொறக்கணும் என்றவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவனை இடையோடு கட்டிக்கொள்ள

ஒஹ் அவனா நீ என்று அகிலன் சொல்ல

அவசரமாய் கை எடுத்து போடா தூ தூ என்று முகத்தில் துப்புவது போல விசாகன் சைகை செய்ய

எல்லாம் அருகமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த தாரகனும் கபிலனும் சிரித்து விட, அங்கே ஒரு மகிழ்வான சூழல்

 

=========================================================================

 

தம்பி டேய் அக்காங்கக் ரெண்டு பேரும் கல்யாணம் ஆகி போய்டுவாங்க நாங்க தாண்டா உனக்கு வாடா வா என்று அவனை அருகமர்த்தி கபிலன் தோளில் கை போட்டான்

தாரகன் தான் அவனை கூப்பிடுங்கடா என்று கண்ஜாடை காண்பித்து இருந்தான். என்னவோ அவனை தங்களோடு ஓட்ட வைக்க தாரகன் என்ன முயற்சி செய்தாலும் ஆதி தள்ளித் தான் நின்றான்

ஆண் பிள்ளைகளுக்கு எதுவும் வருத்தம் வருமோ என்று சேதுபதி நினைக்க அவர்களின் சிரிப்பு அவருக்கு ஆசுவாசத்தை கொடுத்தது.

புடவைகள் முடித்து வெள்ளி சாமான்கள் எடுத்து வர, ஒவ்வொன்றும் அவ்வளவு கணம். பெரிய வெள்ளி குத்து விளக்கு இரண்டு என்று ஆரம்பித்து, வெள்ளியில் என்ன என்ன பொருட்கள் இருக்குமோ அத்தனையும் இருந்தது. அதுவே தேறும் பத்து கிலோ போல

இதுல குத்து விளக்கு எடுக்க வேண்டாம், வேற சாமான் ஆளுக்கு ஒரு பத்து சாமான் மட்டும் எடுத்துக்கோங்க, பின்ன இருக்குறது என்கிட்டே இருக்கும் ஆதிக்கு கல்யாணம் ஆனா பிறகு அவன் கிட்ட குடுத்துடுவேன்

 

=========================================================================

தாரகன் தான் ஏன் தாத்தா இப்படி எல்லாம் பேசறீங்க என

நெருப்புன்னா வாய் வெந்துடாதுடா என்னவோ எல்லாம் இன்னைக்கு சொல்லிடறேன் என்றார்

அவர் ஒரு முடிவோடு இருக்கிறார் என்று புரிய தாரகன் அமைதியாகி விட்டான்.

தேவகி யோ கருனாகரனோ ஜெகதாவோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அந்த பிள்ளைகளுக்கு கொடுப்பதில் அவர்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. அது ஜீவாவின் அம்மாவினது இப்போது அவரின் மக்களுக்கு செல்கிறது

ஆனால் அவர்கள் இதே வீட்டில் பிறந்தார்கள் வளர்ந்தார்கள் வாழ்ந்தார்கள் கணவன் என்ன வைத்திருக்கிறான் என்று மனைவிக்கோ இல்லை மக்களுக்கோ தெரியாது, ஏன் சொந்த தாய் மாமன் மகள் தான் சங்கரி ஆனால் அவருக்கும் தெரியாது

ஏதோ பூதம் காப்பது போல அதை காத்து வந்தவர் இன்று தூக்கிக் கொடுக்கிறார்

தாங்கள் அவருக்கு ஒன்றுமில்லையோ என்று மனைவி மக்களுக்கு தோன்றுவது தடுக்க முடியவில்லை அவர்களுக்கு. ஆனால் எல்லாம் அவரவர் மனதினுள், அந்த மாதிரி தோன்றும் மற்றவரிடம் கூட இந்த உணர்வை பகிர்ந்து கொள்ள மாட்டார். கணவன் மேல் தந்தை மேல் அவ்வளவு பாசம்.

=========================================================

ஆனால் ஜெகதாம்பிகைக்கு மனதளவில் பெரிய அடி தான். ஒரு வலி நிச்சயம் பொறாமை அல்ல. அவர்களுக்கு போகிறதே என்ற கெட்ட எண்ணமும் அல்ல. என்ன இருந்தாலும் எனக்கு பெரியம்மா தானே. என் மகள் வைத்துக் கொள்ளட்டும் என்று அவரின் பொருள் ஒன்றாவது கொடுக்க வேண்டும் என்று என் அப்பாவிற்கு தோன்றவில்லை.

அப்படி என்ன நான் சீரும் சிறப்புமாய் வாழ்ந்து விட்டேன். எதுவுமே இல்லையே. இப்படி எதுவுமே இல்லையே இது நாள் வரை இவரின் நிழலிலேயே வாழ்ந்து விட்டேன். எனக்கு என் மகள் என்று அப்படி என்ன செய்து விட்டார் என்ற எண்ணம் தோன்றுவது தடுக்க முடியவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!