Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உனக்குள் என் உயிரே

உனக்குள் என் உயிரே 1 1

உனக்குள் என் உயிரே


அத்தியாயம்



ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரம். நேரம் நள்ளிரவு இரண்டு மணி. விடாமல் அடித்த தன் செல் போன் சத்தத்தில் எழுந்த அர்ஜுன் அழைத்தது யார் என்று பார்க்க. அழைத்தது அவனது நெருங்கிய நண்பன் சூர்யா.

டேய் இப்ப இங்க என்ன டைம் தெரியுமா? இப்ப எதுக்குடா போன் பண்ற?” என்று அர்ஜுன் கேள்விகளாகக் கேட்க சூர்யாவிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை.

என்ன ஆச்சு சூர்யா? அம்மா, அப்பா நல்ல இருக்காங்களா? எதாவது பிரச்சனையா என்றவனுக்கு எதோ முக்கியமான காரணம் இருப்பதால் தான் சூர்யா இந்நேரத்தில் அழைத்திருக்கிறான் என்று புரிந்தது….

எல்லோரும் நல்லா இருக்காங்க அர்ஜுன். நீ டிவி போட்டு, தமிழ் நியூஸ் சேனல் பார்த்திட்டு, எனக்குப் போன் பண்ணு.” என்றவன் போன்னை வைத்துவிட்டான்.

டேய் சூர்யா பச்எதுக்கு இப்ப நியூஸ் பார்க்க சொல்றான்? அலுத்துக்கொண்டே எழுந்த அர்ஜுன் டிவியைப் போட்டுத் தமிழ் நியூஸ் தேடி வைக்க…..

இன்றைய முக்கியச் செய்திகள். பெங்களூரில் இருந்து கர்நாடகா காட்டு பகுதிக்குச் சுற்றுலா சென்ற பள்ளி கூட மாணவிகள் பஸ்சுடன் கடத்தப்பட்டனர். அவர்களுடன் சென்ற நான்கு ஆசிரியர்களும், பஸ் டிரைவரும் கடத்தப்பட்டார்கள்.

யார் கடத்தியது ? என்ற விவரமோ அவர்கள் கோரிக்கை என்னவென்றோ இன்னும் தெரியவில்லை. கடத்தபட்டவர்கள் விவரம் என்று டிவியில் ஒவ்வொரு மாணவிகளின் புகைப்படமும்,பெயரும் வர, அது முடிந்து கடத்தப்பட்ட ஆசிரியர்களின் விவரம் வந்தது.

ஒவ்வொரு புகைப்படமாக வர ஒரு புகைப்படத்தைப் பாத்ததும் அதிர்ச்சி அடைந்த அர்ஜுன்மீரா…” என்று கத்த செய்தியாளரும் அந்தப் பெயரையே சொல்ல…. அப்போது அவன் செல் திரும்ப அழைத்தது.

சூர்யா மீரா என்று மேலே பேச முடியாமல் அர்ஜுன் திணற….

அர்ஜுன், டென்ஷன் ஆகாத. அவ எங்க இருக்கானே தெரியாம இருந்தோம். இப்ப தெரிஞ்சிடுச்சு. கடத்தினவங்க ஒன்னும் பெரிய தீவிரவாதிங்க இல்லை. நான் இப்பதான் எனக்குத் தெரிஞ்ச போலீஸ் ஆபீசர்கிட்ட விசாரிச்சேன். பயப்படும்படியா எதுவும் இல்லைன்னு சொல்றாங்க.. நீ உடனே இங்க கிளம்பி வா…” என்றான் சூர்யா.

சரிடா…. நான் உடனே கிளம்பி வரேன்.” என்று போன்னை வைத்த அர்ஜுனுக்கு மீரா கிடைத்தை நினைத்து சந்தோஷபடுவதா இல்லை இப்போது அவள் இருக்கும் நிலையை நினைத்து வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. யோசிக்க நேரம் இல்லாததால் வேகமாகக் கிளம்பினான்.

தன்னுடன் வேலை பார்க்கும் நண்பனுக்கு அழைத்து, தான் உடனடியாக இந்தியா செல்ல வேண்டி இருப்பதைச் சொன்னவன், வேகமாக டாக்ஸ்யில் விமான நிலையம் சென்று…. அடுத்து இருந்த சிங்கப்பூர் விமானத்திற்குப் பயணச் சீட்டு வாங்கிவிட்டு சூர்யாவை அழைத்தான்.

சூர்யா நான் சிங்கப்பூர் போய் அங்கிருந்து பெங்களூர் போறேன்.”

சரி அர்ஜுன், அப்படியே பண்ணு. நான் இப்ப கார்ல பெங்களூர் கிளம்பிட்டேன்.”

டேய் அவளுக்கு ஒன்னும் ஆகாது இல்ல. பத்திரமா திரும்பி கிடைச்சுடுவா இல்ல…” அர்ஜுனின் குரலில் இருந்தே அவன் வேதனையை உணர்ந்த சூர்யாஅவ நல்லபடியா உனக்குக் கிடைப்பா பயப்படாம வா.” என்று சொல்லி போன்னை வைக்க, அர்ஜுன் சென்று விமானத்தில் ஏறினான்.

விமானத்தில் ஏறியவன், மீரா ஏன் டி இப்படிப் பண்ண? உன்னை நான் திரும்பி இப்படியா பார்க்கணும் என்று நினைத்துக்கொண்டே கண்ணை மூட…. அவன் விழிகளுக்குள் மீரா தெரிந்தாள்.

அன்று கல்லூரியில் கிரிக்கெட் போட்டி. அர்ஜுன் தான் அவர்கள் காலேஜ் டீமின் கேப்டன். அவர்கள் கல்லூரிக்கும் இன்னொரு கல்லூரிக்கும் இடையே இறுதி போட்டி நடந்து கொண்டு இருந்தது.

முதலில் அந்தக் கல்லூரி பாட்டிங் செய்து 240 ரன்கள் எடுத்து விட, இப்போது அர்ஜுனின் டீம் ஆடி கொண்டிருந்தனர்.

அர்ஜுன் தான் முதலில் பாட்டிங் செய்ய இறங்கினான். அவனோடு பாட்டிங் செய்ய இறங்கியவர்கள் ஒவ்வொருவராக அவுட் ஆகி சென்றுவிட அர்ஜுன் நிலைத்து நின்று ஆடி, அவன் மட்டுமே 110 ரன்கள் எடுத்திருந்தான். ஜெயிக்க இரண்டு பந்துகளில் நான்கு ரன்கள் தேவைபட்டது.

அர்ஜுன் மிகவும் டென்ஷன்னாக இருந்தான். சொதப்பிட கூடாதே என்று வேண்டியபடி பந்தை எதிர் நோக்கி காத்திருந்தான். அப்போது எல்லோரும் அர்ஜுன் four என்று கத்த. அதில் ஒரு குரல் மட்டும்அர்ஜுன் அவுட். என்று சத்தமாகக் கேட்டது.

அர்ஜுனுக்குச் சுள் என்று கோபம் வர சட்டென்று திரும்பி குரல் வந்த திசையைப் பார்த்தான். அவன் பார்ப்பது தெரிந்ததும், அந்தக் குரலுக்குச் சொந்தகாரி எழுந்து நின்றுஅர்ஜுன் அவுட். என்று சத்தமாக மீண்டும் கத்த…. அர்ஜுன் பாட்டைத் திருப்பி அவள்புறம் காமித்தான். அந்தக் காலேஜ் பொண்ணு போல என்று நினைத்தவன்….பந்தை அடிக்கத் தயார் ஆனான்….

அந்தப் பந்தில் அவனால் ரன் எதுவும் அடிக்க முடியவில்லை. கடைசிப் பந்து இந்த முறையும் அவள்அர்ஜுன் அவுட். என்று கத்த.

ச்ச.. இவ ஒருத்தி அவுட் ஆக்காம விட மாட்டா போலிருக்கு…. என்று அவள் மேல் இருந்த எரிச்சலில் அர்ஜுன் பந்தை விலாச அது சிக்ஸ்சர்….. எல்லோரும் சந்தோஷ கூச்சல் போட…. அர்ஜுனின் டீம் அவனைத் தூக்கி கொண்டாடினார்கள்.

அர்ஜுன் கெத்தான பார்வையுடன் அவனைப் பார்த்து அவுட் என்று கத்திய பெண்ணைத் திரும்பி பார்க்க அவள் சோகமாக இல்லாமல் சந்தோஷமாக ஆட்டம் போட்டு கொண்டிருந்தாள்.

இவ என்ன லூசா? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அவுட் ஆகனும்னு கத்தினா இப்ப சந்தோஷமா இருக்கா என்று நினைத்தவன் இந்தப் பொண்ணுங்களைப் பத்தி புரிஞ்சிக்க முடியாதுன்னு இதனால தான் சொல்றாங்களோ என்று நினைத்தவன், அவளை மறந்து அவன் நண்பர்களுடன் வெற்றியை கொண்டாடினான்.

ஏய் மீரா…. உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா? எதுக்குடி நம்ம காலேஜ் பையனை பார்த்து அவுட்னு கத்தின?”

கூல் கூல் டென்ஷன் ஆகாத கீத்து…. அவனை எப்படி என்னைப் பார்க்க வைக்கிறதுன்னு தெரியலை அதனாலதான் அப்படிக் கத்தினேன். திரும்பி பார்த்தான் பார்த்த இல்ல….” மீரா பெருமையுடன் தன் சுடிதாரில் இல்லாத காலரை தூக்கிவிட….

அவனுக்கு மட்டும் நீயும் இதே காலேஜ்ன்னு தெரிஞ்சிது மகளே உன்ன கைமா பண்ணிடுவான். பேசமா வா அவன் பார்கிறதுக்குள்ள போய்டலாம்…” என்ற கீர்த்தனா மீராவின் தோழி…. அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல மீரா, அர்ஜுனை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்.

ஆள் சூப்பர் இல்ல போன வருஷம் நான் காலேஜ் சேர்ந்த அன்னைக்கு…. இவனதான் முதல்ல பார்த்தேன்…. இவன் தான் எனக்கு ரோஸ் குடுத்து வெல்கம் சொன்னான். மீரா பெருமையடிக்க….

அன்னைக்கு ப்ரெஷெர்ஸ் டே அவன் உனக்கு மட்டும் இல்ல எனக்கும்தான் ரோஸ் குடுத்தான். எதோ உனக்கு லவ் ப்ரொபோஸ் பண்ணி பூ குடுத்த மாதிரி பீல் பண்ற.” கீர்த்தனா அவள் மூக்கை உடைத்தாள்.

ம்ம்…. நீ சொல்ற மாதிரி இருந்திருந்தா கூட நல்லாதான் இருக்கும்.” மீரா கண்சிமிட்டி சிரிக்க.

எல்லாமே உனக்கு விளையாட்டு தான். உனக்கு அவனைப் பத்தி என்ன தெரியும்?”

எனக்கு அவன் வரலாறே தெரியும். அவன் அர்ஜுன் B.Tech பைனல் இயர். அவனுக்குக் கூடப் பிறந்த அண்ணனும், ஒரு தங்கச்சி இருக்காங்க. அப்புறம் அவங்க அப்பா ஒரு பெரிய கார்மென்ட் பாக்டரி அண்ட் ஷோ ரூம் வச்சிருக்கார். அவங்க அம்மா ஹவுஸ் ஒய்ப்.”

ஆமா நீ எதுக்கு அவனைப் பற்றி இவ்ளோ விஷயம் தெரிஞ்சு வச்சிருக்க?”

சும்மாதான். அவனை நான் காலேஜ் திறந்த முதல் நாள் அன்னைக்கே பார்த்தேன். அப்புறம் அவனை நம்ம காலேஜ்ல நிறைய முறை பார்த்திருக்கேன். ரொம்ப ஸ்மார்ட் அப்புறம் நல்ல டைப். எல்லோருக்கும் உதவி செய்வான். ரொம்ப ஆக்டிவ்.” மீரா மடை திறந்த வெள்ளமாக அர்ஜுனை பற்றிச் சொல்லிக் கொண்டே செல்ல….

கீர்த்தனா நடக்காமல் அதே இடத்தில் நின்று மீராவின் முகத்தையே பார்த்தாள். ரொம்ப உளறிட்டமோ என்று நினைத்த மீராகான்டீன் போலாமா?” என்றதும், கீர்த்தனா அவளோடு நடந்தாள்

இருவரும் கான்டீன் சென்றபோது அங்கே மற்ற தோழிகளும் இருக்க…. எல்லோரும் சேர்ந்து அரட்டை அடித்துக் கொண்டே உண்டனர்.

அப்போது அர்ஜுன் அவனின் தோழர்களுடன் அங்கே வர மீரா மறைந்து உட்கார்ந்து கொண்டாள்.

அர்ஜுனனும் அவன் நண்பர்களும் கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி அரட்டை அடித்துக் கொண்டே குடித்தவர்கள். வெளியே இருந்த காரிடாரில் அவர்களுக்குக் கிடைத்த பரிசு கோப்பையை வைத்து சுற்றி நின்று ஆட…. அதை எல்லோரும் கைதட்டி ரசித்தனர். மற்ற மாணவர்களும் வந்து சேர்ந்து கொள்ள கொஞ்ச நேரம் பாட்டாலும், நடனத்தாலும் அந்த இடமே அதிர்ந்தது.

அவர்கள் வெளியே ஆட இங்கே மீரா அவள் தோழிகளுடன் உள்ளே ஆடிக் கொண்டிருந்தாள். ஆடி களைத்தவர்கள் மறுபடியும் கான்டீன் உள்ளே வந்து அமர்ந்தார்கள். மீராவின் தோழிகள் கிளம்பலாமா என்றதற்கு, இப்போது சென்றால் அர்ஜுனிடம் மாட்டி கொள்வோம் என்று நினைத்தவள், இன்னும் கொஞ்ச நேரம் கழித்துப் போகலாம் என்றாள்.

அர்ஜுன் ஈசியா ஜெயிக்க வேண்டிய மேட்ச். கடைசிப் பந்து வர கொண்டு வந்து இப்படி டென்ஷன் பண்ணிட்டியே…” கூட்டதில் ஒருவன் கேட்க.

ஏன்டா சொல்ல மாட்டீங்க? நீங்க எல்லோரும் அவுட் ஆகி போய்டுவீங்க. நான் மட்டும் நின்னு ரன் எடுக்கணும். அதுவும் இன்னைக்கு ஒரு பொண்ணு நான் அவுட் ஆகணும்னு சத்தமா கத்தினாடா. அந்தக் காலேஜ் பொண்ணா இருக்கும். இருந்தாலும் நம்ம காலேஜ் வந்திருக்கும் போது அப்படிக் கத்த தைரியம் வேண்டும். அவ மட்டும் நம்ம காலேஜா இருந்திருக்கணும், நேரா போய் முகரைய பேத்திருப்பேன். தப்பிச்சிட்டா…” அர்ஜுன் கையை மடக்கி காற்றில் குத்த

அதைப் பார்த்துக்கொண்டிருந்த மீரா…. போச்சு இவன் கைல மாட்டினோம் செத்தோம் என்று நினைத்தவள், கீர்த்தனாவை பார்க்க அவ உனக்கு இது தேவையா என்பது போல் முறைத்துக் கொண்டு இருந்தாள்.

மேலும் சிறிது நேரம் அரட்டை அடித்து முடித்து அர்ஜுனனும், அவன் நண்பர்களும் கிளம்ப மீராவும் கிளம்பினாள். 


தோழிகளிடம் விடைபெற்றுக் கார் பார்கிங் செல்ல அங்கே எதிரே அர்ஜுன் வந்து கொண்டிருந்தான். அவன் பார்ப்பதற்கு முன், அருகில் இருந்த காரின் பின் சென்று மறைந்தவள், அவன் முன்னே வர வர காரை மெதுவாகச் சுற்றி சென்றவள், அவன் பார்பதற்கு முன் சென்று காரில் ஏறினாள்.

அர்ஜுன் அவளைப் பார்க்காமல் பைக்கை எடுத்துக் கொண்டு சென்றான்.  அவன் சென்றதும் மீராவும் அவள் காரை ஓட்டிக்கொண்டு சென்றாள். கல்லூரிக்கு வெளியே வந்த அர்ஜுன், அங்கே நின்ற தன் நண்பனுடன் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு பேச…. அப்போது அவனைக் கடந்து ஒரு கார் சென்றது.

யாரோ என்று அலட்சியமாகப் பார்த்தவன், அதிலிருந்த மீராவை பார்த்ததும், இவதான இன்னைக்கு என்னைப் பார்த்து கத்தினா? இவ்வளவு நேரம் இங்க என்ன பண்ணா? என்று யோசித்தவன் திரும்பி அவளைப் பார்ப்பதற்குள், அவள் கார் சென்றுவிட்டது.

மீரா நேராக வீட்டிற்குச் செல்லாமல் வழியில் இருந்த கோவில் முன்பு காரை நிறுத்திவிட்டு, வெளியில் பொறி விற்றுக் கொண்டிருந்த பையனிடம் கொஞ்சம் பொறியை வாங்கினாள். அவள் அடிக்கடி இந்தக் கோவிலுக்கு வருவதால், அந்தப் பையனுக்கு அவளை நன்றாகத் தெரியும்.

மீராக்கா எப்பவும் போலப் பத்து ரூபாக்கு தானே…” என்றவன், அவளிடம் பொட்டணத்தைக் கொடுக்க. அதை எடுத்துக் கொண்டு கோவில் குளத்தின் கீழ் படியில் சென்று அமர்ந்தாள். அது வழக்கமாக அவள் வரும் நேரம் என்பதால், குளத்தில் மீன்கள் அவளுக்காகக் காத்திருக்க…. மீரா பொறியை நீரில் தூவியதும், அங்கிருந்த மீன்கள் ஆவலாகச் சாப்பிட மீரா அதை ரசித்துப் பார்த்து கொண்டிருந்தாள்.

அங்கே அரை மணி நேரம் இருந்தவள், பின்பு அங்கிருந்து கிளம்பி தங்கள் வீடு இருக்கும் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவுக்குச் சென்றாள். அங்கே விளையாடும் குழந்தைகளை வேடிக்கை பார்த்தவள், சிறிது நேரம் அவளும் குழந்தையாக மாறி, அவர்களுடன் விளையாடினாள்.
குழந்தைகளின் தாய்மார்கள் மீரா குழந்தைகளைப் பார்த்து கொள்வாள் என்ற நிம்மதியில் அரட்டை அடிக்க…. ஒரு மணி நேரம் கழித்து மீரா வீட்டுக்கு கிளம்பினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!