Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Nizhal Theadum Siragey 3.2

சொந்த கம்பெனியில இன்ஃபார்ம் பண்றதுக்கு கூட பயந்துக்கிற அளவுக்கு.. நம்மகிட்ட மட்டும்ன்னு இல்லாம நிறைய இடத்துல இழுத்து வச்சிருப்பானாட்டங்குது என நினைத்தவன்.. “ஆமாங்க.. எந்த ஹாஸ்ப்பிட்டல்ல இருக்கிங்க..?

     “இங்க பக்கத்துல இருக்க மலர் ஹாஸ்ப்பிட்டல்ல.. உடனே மருத்துவமணை பெயரை சொன்னவள்.. “உங்க நேம்..? என்றாள்.

      “மாயகண்ணன்.. என்று இணைப்பை துண்டித்தவன், கம்பெனியில் வரவேற்பாளரிடம் தகவல் தெரிவித்தான். நேர்முகக் காணலுக்கு வந்தபோது மாயகண்ணனோடு ஜெயந்தனின் சண்டையை நினைத்த காருண்யா, இவன் உண்மை சொல்றானா.? இல்ல பாஸ் இல்லாத நேரம் பார்த்து சர்டிஃபிகேட் எடுத்துட்டு போக திட்டம் செய்கிறானா என்ற சந்தேகத்தோடு யோசனையாய் பார்த்தாள்.

       இவளின் பார்வையை உணர்ந்தவன்.. “இங்க நீங்கதான ரிசப்சனிஸ்ட்.? என கோபமாய் கேட்க.. இவளின் தலை ஆமாம் என்பதாய் ஆட.. மீண்டும் ஜெயந்தன் எண்ணிற்கு அழைத்தான்.. ரகுவர்ஷினி அழைப்பை ஏற்கவும்.. “உங்க கம்பெனி ரிசப்சனிஸ்ட்.. என அங்கே அவளின் பேஜ்ஜை பார்த்து.. “காருண்யாகிட்ட உங்கண்ணன் ஆக்ஸிடன்ட் பத்தி சொன்னேன்.. அவங்க நம்பல, நீங்களே சொல்லுங்க.. என மொபைலை நீட்டினான் மாயகண்ணன்.



Advertisement

      காருண்யாவிற்கு சிறு பரபரப்பு தொற்றிக்கொள்ள “ஹலோ..என்றாள். ரகுவர்ஷினி நிலையை விளக்க.. அழைத்து விபத்து நடந்திருப்பதை உறுதிபடுத்திக்கொண்டவள்.. வேலை செய்பவர்களிடம் ஜெயந்தனின் விபத்தை விளக்கி..

     “ஓ நெகட்டிவ் ப்ளட் தேவைப்படுதாம், இங்க யாருக்காவது ஓ நெகட்டிவ் இருந்தா டொனேட் பண்ணுங்க.. இல்ல, ஃப்ரண்ட்ஸ் ரிலேட்டிவ்ஸ் இப்படி யாருக்காவது இருந்தா சஜஸ்ட் பண்ணுங்க ப்ளீஸ்.. என்றாள்.

      “எனக்கு பி பாசிட்டிவ், எ.பி பாசிட்டிவ்.. என ஆளுக்கொரு ரத்த வகையை சொன்னார்கள். “ஒருத்தருக்கு கூட ஓ நெகட்டிவ் இல்லையா.? என ரிசப்சனிஸ்ட் வருத்தத்தோடு கேட்க.. “இல்ல காரு.. ஃப்ரண்ட்ஸ்கிட்ட சொல்லிப் பார்க்கிறேன்.. என அனைவரும் மொபைலில் மூழ்கினர்.

Advertisement

      யாரும் தானம் வழங்க ஆயத்தமில்லை எனப்புரிந்த மாயகண்ணனிற்கு ரகுவர்ஷினியின் பதட்டக்குரல் மனதை அலைக்கழிக்க.. உயிர் சம்மதப்பட்ட விசயம், பகை பாராட்டும் நேரம் இதுவல்ல.. என மருத்துவமணை விரைந்தான்.  

Advertisement

     மாயகண்ணனை கண்டதும் கம்பெனியில் அன்று நடந்த சண்டையை நினைத்தவள்.. சரியான நேரம் பார்த்து பழிவாங்க வந்திருப்பானோ என பயந்தாள் ரகுவர்ஷினி.

     ஒரு கம்பெனிக்கு வேலைக்கு வருபவன், இத்தனை நீள முடியோடும், மீசை தாடியோடும் வருவது தவறென தெரியாதா என்ன.? அதை தட்டிக் கேட்ட அண்ணனிடம் இவன் சட்டையை பிடிக்கும் அளவிற்கு முன்னேறலாமா.? என அன்று நடந்ததில் தவறு இவன்மேல்தான் என ரகுவர்ஷினி நம்பியிருந்தாள்.

     மாயகண்ணன் ஜெயந்தனின் பெயர் சொல்லி விசாரிக்கவும் மேலும் பயந்து விரைந்தாள் இரண்டாம் தளத்திற்கு. “ஏண்டாம்மா இவ்வளோ பதட்டம்.? அமருக்கு எதாவது..? என குருநாதன் பதறினார்.

Advertisement

     “அதில்ல தாத்தா.. என கம்பெனியில் நடந்ததை சொன்னவள்..அவனுக்கு எப்படி ஆக்ஸிடன்ட் ஆனது தெரியும்.? ஜெய் பேரை சொல்லி ரிசப்சன்ல விசாரிச்சிட்டிருக்கான்.. என்றாள் பதட்டமாக.

     “நீ கம்பெனிக்கு தகவல் சொல்லிட்டியா.? என்றார் குருநாதன்.

     “சொல்லிட்டேன் தாத்தா.. என்க.. “அப்போ சர்டிஃபிகேட் வாங்க கம்பெனிக்கு வந்திருப்பான்.. தகவல் தெரிஞ்சதும் இங்க வந்திருப்பானாயிருக்கும், நீ பயப்படாத, நான் பேசிக்கிறேன்.. என அமைதிப்படுத்தி..

      “மருந்து வாங்க இவ்வளவு நேரமாடா.? இங்க டாக்டர் கேட்டுட்டே இருந்தாங்க.. முதல்ல அந்த நர்ஸ் பாப்பாகிட்ட மருந்தை கொடு.. என்றார்.

       மருந்தை கொடுத்து வந்தவள், “என்னோட கார்ட் இங்க ஒர்க் ஆகல தாத்தா, வெளில போய் பணம் எடுத்து வந்தேன், அதான் லேட்.. என தகவல் தெரிவித்து, “அப்பாக்கு எப்படியிருக்கு.? கான்சியஸ் வந்துச்சா இல்லையான்னு அந்த நர்சும் தெளிவா சொல்ல மாட்றா.. டாக்டர் எதாவது சொன்னாங்களா.? என்றாள் பதட்டமாக.

      மாயகண்ணன் வந்திருக்க, ரகுவர்ஷினி குருநாதனிடம்.. “இவன்தான் தாத்தா.. என்றாள்.

      இவர்களை கண்டுகொள்ளாமல், அங்கிருந்த செவிலியிடம்.. “இங்க ஜெயந்தன்.. என கேட்கும்போதே, “இப்போ பார்க்க முடியாதுங்க.. என அவசரத்தோடு விரைந்தாள் நர்ஸ்.

     “தம்பி.. ஜெயந்தன் என் பேரன்தான்.. என்ன விசயமா அவனை பார்க்க வந்திருக்க.? என்றார் குருநாதன்.

     ஹாஸ்பிட்டல்ல இருக்கிறவனை எதுக்கு பார்க்க வருவாங்க.? என ஜெயந்தனின் நினைவில் கடுப்பாய் நினைத்தவன்.. அவனின் நம்பருக்கு அழைத்தான்.

       அருகிலிருந்த ரகுவர்ஷினி அழைப்பை ஏற்று “ஹலோ.. என்றதும் இவள்தான் என கண்டுகொண்டவன், “கொஞ்சம் முன்ன வரைக்கும் இந்த நம்பர்லயிருந்து வந்த கால்ஸ் அட்டன் செய்த்து நீங்கதானா.? எனக் கேட்க.. ரகுவர்ஷினி ஆமாம் என தலையசைத்தாள்.

       “நான் மாயகண்ணன்..  ப்ளட் தேவைப்படுதுன்னு சொன்னிங்க.. எனக்கு ஓ நெகடிவ்தான்.. அதான் வந்தேன்.என்றான்

      அன்று நேர்முகக் காணலின்போது ரகுவர்ஷினி அவ்விடத்தில் இல்லாததால்,  ரகுவர்ஷினியை சந்தித்திராத மாயகண்ணனிற்கு இவள் ஜெயந்தனின் தங்கை, அங்கேதான் வேலை செய்கிறாள் என்றெல்லாம் தெரியாதால், நம் சண்டையைப் பற்றி இவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என நினைத்து, இவளின் அண்ணன் அப்பாவிற்கான பதட்டம் மட்டும் மனதில் வைத்து கேட்டான்.  

      ஆனால் அனைத்தும் அறிந்த ரகுவர்ஷினி.. “இல்ல, அங்க கம்பெனியிலயிருந்து யாராவது வருவாங்க.. என மறுக்க.. “ஓ.. அப்போ தேவையில்லையா.? என இயல்பாகவே தோளை குலுக்கி, ஜெயந்தனோடு தன் சண்டையை ஓரிரு வார்த்தையில் விளக்கியவன்.. “சர்டிஃபிகேட்ஸ்க்காகத்தான் உங்க கம்பெனிக்கு வந்தேன், அங்க யாருக்காவது ஃபோன் செய்து என் சர்டிஃபிகேட்டை எடுத்து தர சொல்லுங்க.. எனக்கு நாளைக்கு ஒரு இன்டர்வியு இருக்கு.. என்றான்.

     “அது.. அது என் அண்ணா சரியாகி வந்தாதான் எடுக்க முடியும்.. அவங்க பர்மிஷன் இல்லாம யாரும் எடுத்து தர மாட்டாங்க..

     “என்ன..? என முறைத்தவன், “உங்கண்ணன் எப்போ கம்பெனிக்கு வரது.? என் சர்டிஃபிகேட் எப்போ கைக்கு கிடைக்கிறது.? அதுவரைக்கும் நான் வேலைக்கு போகாம இருக்கனுமா.? என்றான் கோபமாக.

     ரகுவர்ஷினியின் கண்கள் பயத்தில் கலங்கவே, குருநாதன்.. “தம்பி.. நடந்த ஆக்ஸிடன்ட்ல என் மகனுக்கும் அட்டாக் வந்துடுச்சி, இப்படி சூழல்ல என் பேத்திகிட்ட கோபப்பட்டா அது என்ன செய்யும்..?

     ஜெயந்தன் கண்ணு முழிச்சதும் நான் கேட்டு வைக்கிறேன்..  ஒரு ரெண்டு மூனு நாள் பொறுத்து வாங்க.. உங்க சர்டிஃபிகேட் எங்கையும் போகாது.. என்றார் தன்மையாக.

      வெளியே வந்த செவிலிப்பெண்.. “ஈவ்னிங் ஆப்ரேசன் பண்ணனும்.. ப்ளட் அரேன்ஜ் பண்ணிட்டிங்களா.? என்றாள்.

      “இன்னும் இல்ல, ஆனா எப்படியாவது அரேன்ஜ் பண்ணிடறோம்.. என கம்பெனிக்கு அழைத்தாள் ரகுவர்ஷினி.

      இவர்களின் நிலை புரிந்த போதும், “ஜெயந்தன் கண் முழிக்க இன்னும் எத்தனை நாளாகுமோ.? எனக்கு நாளைக்கு இன்டர்வியு தாத்தா.. சர்டிஃபிகேட் இல்லாம எப்படி போறது.? நீங்க சொன்னா கம்பெனியில செய்யமாட்டாங்களா என்ன.? என தன் நிலையை தன்மையாகவே விளக்கினாலும்.. சான்றிதழை வாங்காமல் நகர மாட்டேன் என்ற தோரணையில் நின்றான்.

      அவமானம்தான் என்றாலும்.. “இல்லப்பா என் பேச்செல்லாம் அங்க எடுபடாது.. ஒருசில விசயத்துல என் மகன் பேச்சையே பேரன் கேக்கமாட்டான்.. என்றார் குரலிறங்கி.

      “அப்போ உங்க பேத்திகிட்ட சொல்லி எடுத்து தர சொல்லுங்க.. என்றான் விடாமல்.

      “தாத்தா.. அங்க கம்பெனியில யாருக்கும் ஜெய் ப்ளட் குரூப் இல்லையாம்.. நம்ம ரிலேட்டிவ்ஸ், இல்ல உங்களுக்கு தெரிஞ்சவங்கன்னு யார்கிட்டயாவது கேட்டு பாருங்க.. என ரகுவர்ஷினி சொல்ல… அப்படியொரு முறை முறைத்தான் மாயகண்ணன்.

      கண்ணாடி அணிந்திருந்த்தால் இவனின் முறைப்பு தெரியாமல் போக.. ப்ளட் கொடுக்க வந்தேன்னு சொல்லியும், இத்தனை அவசரத் தேவையிருந்தும் பக்கத்துல இருக்க என்கிட்ட கேக்காம ஊரெல்லாம் விசாரிச்சிட்டிருக்கா.. இவ அண்ணனுக்கு மேல இவளுக்கு ஏத்தம் இருக்கும்போல என கடுப்போடு நினைத்து, எப்படியோ போகட்டும்.. நமக்கு நம்ம சர்டிஃபிகேட் முக்கியம் என..

     “உங்க கம்பெனிக்கு ஃபோன் செய்து என் சர்டிஃபிகேட்டை எடுத்து தர சொல்லு.. என்றான் சிறு மிரட்டலாக.

     ரகுவர்ஷினி.. “அது யார் நினைச்சாலு எடுக்க முடியாது.. அண்ணா லாக்கர்ல வச்சிருப்பாங்க, லாக்கர் நம்பர் அண்ணாக்கு மட்டும்தான் தெரியும்.. என்றாள் மன்றாடலாக.

     பொறுமையை இழுத்துப்பிடிக்க முயன்று.. “எப்படின்னாலும் நாளைக்கு காலைல என் சர்டிஃபிகேட் என் கைக்கு வந்தாகனும்.. உங்கண்ணன் கண் முழிச்சதும் அவர்கிட்ட கேட்டு வைக்கிற.. இல்ல, லாக்கர் உடையும்.. என எச்சரித்து கிளம்பியவன்.. மீண்டும் வந்து.. “என் சர்டிஃபிகேட் கிடைக்கிற வரைக்கும் என் கால்ஸ் அட்டன் பண்ணனும்.. என கட்டளையிட்டு கிளம்பினான்.  

     மாயகண்ணன் அகன்றதும் ஒரு தொல்லை விட்டது என நினைத்து தாத்தாவை பார்க்க, அப்பா அண்ணனின் கவலை மனதை அழுத்தினாலும், ஓய்ந்து அமர்ந்திருக்கும் குருநாதனை பார்க்க பாவமாய் தோன்றிட.. “தாத்தா டீ எதாவது வாங்கி வரவா.? என்றாள்.

   “மேலுக்கும் கீழுக்கும் எத்தன தடவடா நடப்ப.? நம்ம கம்பெனியிலயிருந்து யாரையாவது துணைக்கு கூப்பிட்டுக்கோ.. என்றார்.

    “ஹெல்ப் கேக்குற அளவுக்கு கம்பெனியில யாரோடவும் சகஜமா பேசினதில்ல தாத்தா, அண்ணா பேச விடமாட்டான். ஜெய்க்கு பயந்துட்டு மத்தவங்களும் என்னோட தேவையில்லாம பேச மாட்டாங்க.

      தொழில் ஒன்றே கருத்தாய் நினைப்பவன் எப்பொழுதுதான் மனிதர்களை கருத்தில் கொள்வானோ என வேதனையடைந்து, “விடுடாம்மா, நம்ம சுப்ரமணி மகனை கூப்பிட்டுக்கலாம்.. என தன் வீட்டுசமையலரின் மகனை சொன்னார் குருநாதன்.

     சரியென்பதாய் தலையசைத்து ரகுவர்ஷினி டீ வாங்க சென்றிட.. அங்கே வந்த மருத்துவர்.. ஜெயந்தனிற்கான இரத்த தேவையின் அவசரத்தை விளக்கிச் சென்றார் குருநாதனிடம்.

     பத்து நிமிடத்தில் ரகுவர்ஷினி வந்திருக்க, பேத்தி டீ குடிக்கும்வரை அமைதிகாத்து.. “அம்மாடி.. ரத்தம் கிடைச்சாத்தான் சாய்ங்காலம் ஆப்ரேசன் செய்ய முடியுமாம், ஜெயந்தனுக்கு இன்னைக்கே ஆப்ரேசன் பண்ணியாகனும்னு டாக்டர் சொல்லிட்டு போயிருக்காங்க..

     குருநாதனிற்கு மேல் பதட்டமானவள்.. ஒரு மணி நேரம் வரை தனக்கு தனது தோழிகளிடம் பேசினாள். எங்கும் இவனின் ரத்த வகை இல்லை என்றே பதில் வர.. ரத்த வங்கிகளிலும் இவ்வகை ரத்தம் இருப்பு இல்லாமல் போக.. குருநாதனிடம் நிலையை விளக்கி.. “என்ன தாத்தா பண்றது.? என்றாள் கலக்கமாக.

      குருநாதனும் மலங்க விழிக்கவே, சத்தென அமர்ந்தவளிற்கு மாயகண்ணன் நினைவு வர, உடல்நிலை சரியான பின்னே இவன் ரத்தம் கொடுத்த விசயம் தெரிந்து ஜெய் திட்டினாலும் பரவாயில்லை, இவனை விட்டால் வேறு வழியில்லை என உணர்ந்து மாயகண்ணிற்கு அழைத்தாள்.

      அழைப்பை பார்த்தவன்.. “என்ன..? இவளே கூப்பிடுறா.? தலைல அடின்னாங்க, அதுக்குள்ள முழிச்சிட்டானா.? அப்படியே விழிச்சாலும் சர்டிஃபிகேட் பத்தி சொல்லியிருக்க மாட்டான், ஆக.. இரத்த தேவைக்குத்தான் அழைக்கிறாள் எனப்புரிந்து அழைப்பை ஏற்றான்.

      “ஹ..ஹலோ.. நான் ரகுவர்ஷினி பேசுறேன்.. என்க..

      “என்ன.? உங்கண்ணன் அதுக்குள்ள கண்முழிச்சிட்டானா.?

      “இ.. இல்ல.. ப்ளட் கொடுக்க வந்தன்னிங்களே, கொஞ்சம் வரிங்களா.? ரொம்ப அர்ஜன்ட்.. என்றாள் கெஞ்சலாக.

      “நான் கேட்டப்ப பார்த்துக்கிறேன்ன.? என இணைப்பை துண்டித்து.. சாப்பிட கிளம்பினான்.

      இங்கே ரகுவர்ஷினிக்கு கண்ணீர் வந்திருந்தது.. குருநாதனிடம் நிலையை விளக்க, “என்னம்மா நீ..? உதவ வந்தவனை உதாசினப்படுத்திருக்க..? எனக் கடிந்து.. “நீ போன் போட்டு கொடு.. நான் பேசுறேன்.. என்றார்.

      பெரும் தயக்கத்திற்கு பிறகு ரகுவர்ஷினி மீண்டும் அழைக்க, அழைப்பை ஏற்றதும்.. “தாத்தா பேசறாங்களாம்.. என சன்னக்குரலில் சொல்ல, “சாப்பிட்டு வரேன்.. என இணைப்பை துண்டித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!