Skip to content
Post Views: 3,523
EPISODE 1O
கண்ணாடி முன்னே நின்று தன் தோற்றத்தை தானே ரசித்துக்கொண்டிருந்தாள் மாதங்கவதனா.
Advertisement
காட்டன் சுடிதார், கழுத்து வரை இருக்கும் முடியை ஒருபக்கமாய் ஜடையிட்டு, நெற்றியில் சின்னதாய் உடையின் நிறத்தையொத்த கல் பொட்டு!
Advertisement
Advertisement
இவ்வளவு தான் அலங்காரம்! ஆனால், தான் மிக அழகாக இருப்பதாய் உணர்ந்தாள் அவள்.
Advertisement
‘ஹாரன்’ சப்தம் கேட்டது.
அஜய் தான் வந்திருக்கிறான் என்பது புரிய, லேசாக வெட்கம் கூட வரப்பார்த்தது.
‘இன்னைக்கு நம்மளை பார்த்தா கொஞ்சம் அதிகமா வழிவாரோ?’
என்றோ ஒருநாள் அவன் பேசும்போது சொன்னதை வைத்து தன் அலங்கரித்து கிளம்பியவளுக்கு அவன் பாராட்டு தேவையாய் இருந்தது.
அவள் மனமோ, ‘நீ குளிக்காம, அழுக்கு நைட்டில போய் அவன் முன்னால நின்னாலும் வழிய தான் செய்வான்! சரியான திருடன்!’ என்று உண்மையை போட்டு உடைக்க, இன்னமும் வெட்கம் பூத்தது.
மீண்டும் ‘ஹாரன்’ ஒலி…!
சோபாவில் சமத்தாய் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்த பிரசன்னாவதனா’வை தூக்கிக்கொண்டு வீட்டை பூட்டிவிட்டு கீழிறங்கி சென்றாள்.
காரில் சாய்ந்து நின்றுக்கொண்டிருந்தவன், இவர்களை பார்த்ததும் சிரிக்க, “அஜ்…ஜீ” என உற்சாகமாய் அவளை விட்டிறங்கி அவனிடம் ஓடினாள் பிரசன்னா.
ஓடி வருபவளை வாரியணைத்துக்கொண்டவன், “பப்புக்குட்டி, சூப்பரா இருக்கீங்களே!” என்று சொல்ல, “அம்மா… அம்மா!!!” என்றது குழந்தை!
“ஓ! அம்மா தான் புது ட்ரெஸ் போட்டுவிட்டாங்களா?” என்றவன், அருகே நிற்ப்பவளை திரும்பியும் பார்க்கவில்லை.
பாராட்டு’ கேட்க வந்தவள், பார்வை கூட கிடைக்காததில் கோபம் கொண்டு காரின் முன்பக்கம் சென்று ‘உம்மென’ அமர்ந்துக்கொண்டாள்.
கண்டும்காணாமல் இதையெல்லாம் கவனித்தவன், மெல்லிய குரலில், “உங்கம்மா என்னை லவ் பண்ணுவாளாம் குட்டி! ஆனா, அதை வாய் திறந்து சொல்ல மாட்டாளாம்! நான் மட்டும் நாய்க்குட்டி மாதிரி அவ பின்னாடி சுத்தணும்! இன்னைக்கு பாரு எப்படி வெறுப்பேத்துறேன்னு!” என்றான்.
என்ன புரிந்ததோ அந்த குட்டி வாண்டும் வாய்மூடி சிரித்தது.
அப்படியே அவளை அள்ளிக்கொண்டே காருக்குள் அமர்ந்து வண்டியை கிளப்பினான்.
மாதங்கவதனா விவாகரத்துக்கு முழுவதுமாய் ஒப்புதல் கொடுத்துவிட்டாள். இன்று கடைசி ஹியரிங்கில் எல்லாம் முடிந்துவிடும்!
இந்த ஒருவாரமாய் பிரசன்னவதனா முக்கால்வாசி பொழுதுகளை அஜய்யுடன் தான் கழித்திருந்தாள்.
காலையில் அவளை பக்கத்து வீட்டு ஆன்ட்டியிடம் ஒப்படைத்துவிட்டு அருகே இருக்கும் தன் அலுவலகத்துக்கு மாது சென்றுவிட்டால், அடுத்த சில மணித்துளிகளில் பிரசன்னாவை தூக்கி செல்ல வந்துடுவிடுவான் அஜய்!
இது இரு நாட்கள் அவளுக்கே தெரியாமல் நடந்துக்கொண்டிருந்தது.
பிரசன்னா வாயில் இருந்து, ‘அஜ்…ஜீ!’ என்று வரும்வரை ஒருவரும் இதை அவளிடம் பகிர்ந்திருக்கவில்லை.
தெரிந்தபின்னோ, கோபம் எல்லாம் இல்லை! ஒரு நிம்மதி! ஆசுவாசம்! நிறைவு! இவ்வளவே!!!
அஜய் ‘என்னை கல்யாணம் பண்ணிக்கோ!’ என்று கேட்பதை சுத்தமாய் நிறுத்தியிருந்தான்.
சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாகிவிட்டது. இனி அவளே சொல்லட்டும்! என்று விட்டுவிட்டான்.
நால்வர் படை வீடு வாங்குவதில் மும்மரமாய் இறங்கியதில், இன்று பத்திர பதிவு நடக்கவிருக்கிறது. அடுத்து வரும் முகூர்த்தத்திலேயே புதுமனை புகுவிழா நடத்தவும் ஏற்ப்பாடு ஆகிக்கொண்டிருந்தது.
ஆக, அஜய் அத்தனை பக்கத்தில் இருந்தும் கொஞ்ச கொஞ்சமாய் அவளிடம் நெருங்கிக்கொண்டே இருந்தான்.
அவள் ‘சம்மதம்’ என்று சொல்லப்போகும் ஒருவார்த்தைக்காக மட்டுமே அவனது காத்திருப்பு!
விவாகரத்து வழக்கு முடிந்ததும் சொல்லிவிடுவாள்! என்று தீர்கமாய் நம்பினான்.
அதேதான் மாதங்கவதனாவும் நினைத்திருந்தது. முற்றிலுமாய் பழைய வாழ்க்கையில் இருந்து வெளியே வந்துவிட்டு தன் முடிவை சொல்லலாம் என காத்திருந்தாள்.
காரில் அஜய்யும் பிரசன்னாவும் மட்டுமே பேசிக்கொண்டிருந்தனர்.
மாதங்கவதனா என்ற ஒருத்தி அருகே இருப்பதாய் கூட அவன் மதிக்கவில்லை.
பிரசன்னாவிற்கு கடலை மிட்டாய் ஒன்று கொடுத்துவிட்டு, அதன் நன்மைகளை பட்டியலிட்டுக்கொண்டிருந்தான். அதுவும் சொல்வதெல்லாம் புரிவதை போல அப்படியொரு பாவனை காட்டிக்கொண்டிருந்தது.
ரம்யமான காட்சி தான் அது!
ஆனால், அதை ரசிக்கும் மனம் தான் அந்த நொடி அவளுக்கு இல்லை!
‘இவர் எப்படி என்னை அவாய்ட் பண்ணலாம்?’ குழந்தையாய் மனம் சுனங்க, இருமி பார்த்தாள், செருமிப்பார்த்தாள், தும்மி பார்த்தாள்… ம்ஹும்!!!
இவள் புறம் கூட திரும்பாமல் ஒரு தண்ணீர் பாட்டில் அவளிடம் நீண்டது!
அடமாய் மறுத்துவிட்டு திரும்பிக்கொண்டாள்.
முகத்தில் எழும் நக்கல் சிரிப்பை அவளுக்கு காட்டாது மறைத்துக்கொண்டு, “பாப்பூ’வ நான் கூட்டிட்டு போறேன்! ரெஜிஸ்ட்ரேஷன்’க்கு டைம் ஆச்சு! நீ கோர்ட்டு போய் ஃபார்மாலிட்டீஸ் முடிச்சுட்டு வீட்டுக்கு போய்டு! நான் ஆன்ட்டிக்கிட்ட இவளை விட்டுடுறேன்!” என்றான் சாலையில் கண்வைத்துகொண்டே.
‘ம்ம்ம்’ என்று சொல்லக்கூட மனமில்லை அவளுக்கு.
அழுகை கூட ‘வருவேன்’ என வாக்கு சொல்லியது.
அடக்கிக்கொண்டு முகத்தை அவனுக்கு காட்டாதபடி அவள் அமர்ந்திருக்க, இதற்குமேல் அவளை தவிக்க விட மனமற்று போனான் அஜய்.
“பப்பூக்குட்டி அம்மா இன்னைக்கு செம்ம அழகா இருக்காங்களே, என்ன விஷயம்?” என்று கேட்ட மறு வினாடி அவன் தோளில் மொத்’மொத்தென தன் லெதர் பேக் கொண்டே அடித்தாள் மாதங்கவதனா.
‘இப்போ தான் உங்க கண்ணுக்கு தெரியுறேனா?” கேட்டுக்கொண்டே அடிக்க, உண்மையிலேயே அவனுக்கு வலித்தது.
என்ன நடக்கிறது என புரியாவிடினும் சிரித்துக்கொண்டிருந்தாள் பிரசன்னா.
“ஏய், வலிக்குதுடி ராட்சசி!” அலறினான் அஜய்.
“டி’யா?” என்றவள், இன்னும் அடிக்க,
“ஆமான்…டி, என் பொண்டாட்…டி..ஈஈ!” என ராகம் போட்டான் அவன்.
‘ஹும்!’ சலித்துக்கொண்டு பேகை ஓரம் போட்டவள், “டி’ சொன்னா அப்பறம் நானும் ‘டா’ சொல்லுவேன்!” என்றாள் மிரட்டல் போல.
அவனோ, “நீ கெட்ட வார்த்தைல கூட திட்டு! ஐ வோன்ட் கேர்!” என்று சிரிக்க, “ச்சீ!” என்றாள்.
“ஹே, இப்போ நான் என்ன செஞ்சேன்னு ‘ச்சீ’ங்குற?”
“ஐய்….யோ.. ச்சீ!”
“அதுக்கும் ‘ச்சீ!’யா? கொஞ்சம் ‘ச்சீ’ய மிச்சம் வை’ம்மா! தேவைப்படும்போது சொல்லிக்கலாம்!” கண்ணடித்தான்.
முகத்தை மூடிக்கொள்ளலாம் போல இருந்தது அவளுக்கு.
‘ப்ரீ ஹேராய்’ இருந்திருந்தால் முகத்தை மறைக்க சுலபமாய் இருந்திருக்கும்!
நீதிமன்றம் இருக்கும் சாலையை தொட்டிருந்தனர்.
“கார் பிடிச்சுருக்கா?” என்றான்.
வாங்கி இரண்டு நாட்கள் தான் ஆகியிருந்தது.
“ம்ம்… நல்லா இருக்கு! ஆனா, என்ன திடீர்ன்னு?”
“இவ்ளோ நாள் சிங்கிளா இருந்தேன்! கார் எதுக்கு? பைக் எதுக்குன்னு வசனம் பேசிக்கிட்டு…! இனிமே அப்படியா? எனக்கும் பொண்டாட்டி, புள்ளைன்னு ஆகிடுச்சுல!? இன்னும் வேற குடும்பம் பெருகும்! அப்போ கார் வேணும் தானே?”
‘கிராதகன், எப்படி பேசுறான் பாரு!’ நாணத்தை மறைக்க முகத்தை திருப்ப, “அந்த மூஞ்சியை எங்களுக்கும் காட்டலாம்! சும்மா சும்மா மறைச்சுக்கிட்டு!!!” சடைத்துக்கொண்டான் அவன்.
அதற்கும் அவள் சிரித்துக்கொண்டே திரும்பியிருக்க, “மறைச்சுக்கோ, மறைச்சுக்கோ! எவ்ளோ நாள் ‘எல்லாத்தையும்’ என்கிட்ட இருந்து மறைப்பன்னு பாக்குறேன்!” என்றான்.
“ஹான்?”
“முகத்தை ம்மா! முகத்தை சொன்னேன்!”
போலியாய் முறைத்தவள், பேச்சை மாற்ற, “கார் எவ்ளோ?” என்றாள்.
அவன் சொன்ன தொகையை கேட்டவள் அதிசயித்து, “சீப்’பா இருக்கே!” என்றிட,
“ஹாஹா! இது பிரெஷ் பீஸ் இல்ல… செகன்ட் ஹேன்ட்!” என்றான்.
“அப்படியா?”
“ஆமா, ரெண்டு வருஷம் முன்ன ஆக்டர் கிஷோர் வாங்குனது… அவருக்கு இது செட் ஆகல போல! ரொம்ப யூஸ் பண்ணாம வச்சுருந்தாரு! அதான் நான் கேட்டு வாங்கிட்டேன்!” என்றான்.
எதையோ யோசிக்க ஆரம்பித்தாள் அவள்.
“பிரெஷ்’ஷாவே நம்மளால வாங்க முடியும்… ஆனா பாரு, எனக்கு கார் டிரைவிங் டச் விட்டு போச்சு! புதுசா வாங்கி அதுல லேசா ஒரு கீறல் விழுந்தா கூட மனசு தாங்குமா? அதான் செகன்ட் ஹேன்ட்…
நல்லா ஓட்டி பழகிக்கலாம்! ஆல்ரெடி யூஸ் பண்ணதுங்குறதால ரன்னிங் கண்டிஷன்’ல இருக்கும்! எதாவது அடிப்பட்டாலும் பெருசா மனசு வலிக்காது!
இன்கேஸ், கொஞ்ச நாள்ல ஓட்டி கத்துக்கிட்ட பிறகு புது வண்டி வாங்கனும்ன்னு தோணுச்சுன்னா இத வந்த விலைக்கு தள்ளிவிட்டுடலாம்!” சொல்லிக்கொண்டே போனவன்,
“கோர்ட் வந்தாச்சு, இறங்கிக்கோ மாது!” என்றான்.
அமைதியாய் இறங்கிக்கொண்டவள், அவன் அமர்ந்திருந்த பக்கம் வந்து நிற்க, இவனும் பிரசன்னாவை தூக்கிக்கொண்டு இறங்கி நின்றான்.
“தெளிவா பேசிடு! நம்ம லாயர் எல்லாம் பார்த்துப்பாங்க! டென்ஷன் ஆகாம கூலா ஹேண்டில் பண்ணிட்டு வா! அந்தாள் எதாவது பேசுனாலும் நீ கண்டுக்காத! என்ன?” என்றவன்,
“அங்க ரெஜிஸ்ட்ரெஷன்க்கு டைம் ஆச்சு டா! நான் பாப்பூவை தூக்கிட்டு போறேன்! ஓகே வா!” என்றான்.
அவள் ஒன்றுமே பேசவில்லை.
அவனுக்கு குருவிடம் இருந்து அழைப்பு வந்தது.
குரு, “நீ இல்லாம சைன் போட மாட்டோம்ன்னு சொன்னோம் தானே?” என்றான் உர்ரென…
“இதோ வரேன்டா! பத்தே நிமிஷம்” என்று சொல்லிவிட்டு, “வரவா மாது?” என்று அவசரகதியில் அவளிடம் கேட்க,
“அஜய்…!” என்றாள்.
நின்று திரும்பியவன், “சொல்லுமா?” என்றிட,
“நானும் இந்த கார் மாதிரி தானோ? அதான் உங்களுக்கு என்ன பிடிச்சுருக்கா?” என்றாள்.
முதலில் அவனுக்கு புரியவில்லை.
சில நிமிடங்களில், அவன் காரை வைத்து சொன்ன சாதகப்பலன்களை எல்லாம் அவள் தன்னோடு ஒப்பிட்டுப்பார்த்து இருக்கிறாள் என்று புரிந்தது.
புரிந்த பின், அவளை உறுத்து விழித்தவன், தன் கோபத்தை எல்லாம் திரட்டி, அவள் தலையில், ‘நங்’ என கொட்ட, ‘ஐயோ!’ என தலையை பிடித்துக்கொண்டாள் அவள்.
கண்டிப்பாய் வலித்திருக்கும்!
அவள் வலி கண்டும் இளகாமல் முறைத்தவன்,
“இன்னொரு வாட்டி இப்படி கேனத்தனமா பேச தோனுச்சுன்னா இந்த ‘கொட்டு’ நியாபகம் வரனும்!” என்று சொல்லிவிட்டு பிரசன்னாவுடன் கிளம்பிப்போக, இப்போது அவளுக்கு வலிக்கவில்லை.
தன்னை மீறி சிரித்துக்கொண்டே உள்ளே சென்றாள் அவள்.
அங்கே பதிவாளர் அலுவலகத்தில் மூவருக்கும் வீடு பத்திரம் செய்யப்பட்டது.
“அடுத்து உன் கல்யாணத்துக்கும் இங்கதாண்டி மாப்ள வரனும்” ஏகத்துக்கும் கலாய்க்க ஆரம்பித்தனர்.
அத்தனையும் சுகமாய் ஏற்றுக்கொண்டு நல்ல உணவகத்தில் வயிற்றை நிரப்பிக்கொண்டு பிரசன்னாவை வீட்டில் விட அழைத்து சென்றான்.
வீடு பூட்டியிருந்தது.
மாதங்கவதனாவுக்கு அழைக்க அவள் எடுக்கவில்லை.
‘ஹியரிங் லேட் ஆகிடுச்சோ?’
பிரசன்னாவை பக்கத்து வீட்டு ஆன்ட்டியிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பினான்.
அதன்பிறகு அவனது வேலைகள் அவனை இழுத்துக்கொள்ள, அவன் கை காலை நீட்டி சாய்ந்தபோது மணி பத்தை தொட்டிருந்தது.
மொபைலை எடுத்து பார்த்தான். அவளிடம் இருந்து இன்னமும் அழைப்போ, குறுஞ்செய்தியோ வந்திருக்கவில்லை.
அழைத்தான் அவளுக்கு…
எடுக்கவில்லை அவள்.
விவாகரத்தில் எதுவும் பிரச்சனையோ? என்று தோன்ற, லாயருக்கு அழைத்தான்.
‘எந்த பிரச்சனையும் இன்றி எல்லாம் சுமூகமாய் முடிந்தது’ என்றார் அவர்.
‘பிறகென்ன?’ என யோசித்துக்கொண்டே மீண்டும் அழைத்தான்.
எடுக்கவில்லை.
‘மொபைல் தொலைஞ்சுடுச்சா?’ இப்படி தோன்றியதுமே பக்கத்து வீட்டு ஆன்ட்டிக்கு அழைத்தான்.
அஜய்யின் மீது அவருக்கு நன்மதிப்பு உண்டு!
அவன் கேட்டுக்கொண்டதும் உடனே அவள் வீட்டு கதவை தட்டினார் அவர்.
சில நிமிடங்கள் கடக்க, வந்து கதவை திறந்தவள் முகமெல்லாம் சிவந்து, வீங்கிப்போயிருக்க, அதை ஆராய்ச்சியாய் பார்த்துக்கொண்டே,
“அஜய் தம்பி லைன்ல இருக்கு! பேசுவியாம்!” என்றார் அவர்.
“நான் பேசிக்குறேன் ஆன்ட்டி! என் போன்ல சார்ஜ் இல்ல!” என்றவள், “குட் நைட்” என்றுவிட்டு கதவை மூடிவிட்டாள்.
லைன்’னில் இருந்தவனுக்கும் அவள் பேசியது கேட்டது.
ஆக, ‘மொபைல் தொலையவும் இல்லை’
“தம்பி!?”
“சொல்லுங்க ஆன்ட்டி!”
“புள்ளை அழுத மாதிரி இருக்காப்பா!” என்றார் அவர்.
அவள் குரலே அதை அவனுக்கு கோடிட்டு காட்டியிருக்க, அதையே அந்த ஆன்ட்டியும் சொல்ல, காரணம் புரியாமல் குழம்பிப்போய் நின்றான் அஜய்.
=வாழலாம்…
error: Content is protected !!