Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maiyam Kollum Puyal

மையம் கொள்ளும் புயல் 3 3

“அது எப்படி? யுவன் அவன் ரூம்ல தானே இருக்கான்? அந்த யுக்தா இங்க வரட்டும். அவளை என் மகனை பாக்கவே விட மாட்டேன்”

“ஹா ஹா, நீ அந்த பொண்ணையும் புரிஞ்சிக்களை. உன் மகனையும் புரிஞ்சிக்கலை”



Advertisement

“என்ன உளறீங்க?”

“யுவன் அப்பவே கிளம்பி போயாச்சு. நீ யுக்தாவை இங்க வரக் கூடாதுன்னு சொன்னா கண்டிப்பா யுவன் இங்க இருக்க மாட்டான். அவளுக்காக அவ்வளவு பெரிய அவனோட கனவையே தூக்கி போட்டவன் யுவன். அப்படி இருக்க அவளுக்காக உன்னைத் தூக்கிப் போட யோசிக்க கூட மாட்டான்”

Advertisement

Advertisement

“என் மகன் ஒண்ணும் அப்படிக் கிடையாது. நான் ஒண்ணும் அவனை அப்படி வளைக்கலை. அவனுக்கு என் மேல அன்பும் மரியாதையும் உண்டு”

“யுவன் நல்லவன் தான். மரியாதையும் அன்பும் அவனுக்கு உண்டு. ஆனா உன் மத்த பிள்ளைங்களை விட அவன் ரொம்ப நல்லவன். அது தான் இங்க பிரச்சனை. எப்பவும் நியாயத்துப் பக்கம் தான் நிப்பான். நீ காரணமே இல்லாம அவன் பொண்டாட்டியை வெறுத்தா அதை பாத்துட்டு சும்மா இருக்க மாட்டான். அப்புறம் என் முடிவையும் கேட்டுக்கோ. இத்தனை நாள் அவங்க தனிக் குடித்தனம் போறதைப் பத்தி நான் யோசிக்கலை. அவன் தனியா போயிட்டா நீ வருத்தப் படுவேன்னு தான் அமைதியா இருந்தேன். ஆனா இனி அவன் தனியா போறேன்னு சொன்னா நான் அவனைத் தடுக்க மாட்டேன்”

Advertisement

“என்னங்க சொல்றீங்க?”

“என் மகன் சந்தோஸமா இருக்கணும். அது தான் எனக்கு வேணும். உன்னோட வரட்டுக் கவுரவத்துக்கு ஆதரவா என்னால இருக்க முடியாது”, என்று ஈஸ்வரன் சொல்ல சுந்தரி அவரை முறைத்தாள்.

அப்போது வீட்டுக்குள் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு வந்தான் யுவன்.

“என்னமோ சொன்னீங்க, அவ பின்னாடி போயிருவானு. அங்க பாருங்க. என் மகன் எப்படி சிங்கம் மாதிரி சிங்கிலா வரான்னு”, என்று புன்னகையுடன் சொன்னாள் சுந்தரி.

“பஞ்ச் டயலாக பேசுற நேரமா டி இது? அவன் முகத்தைப் பாரு. மகனோட கவலையை விட உனக்கு உன் பிடிவாதம் தான் பெருசா? சீ நீ இப்படி சுயநலப் பிறவியா மாறுவேன்னு நான் நினைக்கேவே இல்லை”, என்று அவர் அவளை வறுத்து எடுத்துக் கொண்டிருக்க அவர்களின் அருகில் வந்து அமர்ந்தான் யுவன்.

“என்ன ஆச்சு கண்ணா? இப்ப தான் மருமக கொடுத்திருந்த பேட்டியைப் பாத்தோம். எல்லாத்தையும் ஒண்ணும் இல்லாம செஞ்சிட்டாளேப்பா?”, என்றார் ஈஸ்வரன்.

“ஆமாப்பா, இப்ப இருக்குற யுக்தா பழைய யுக்தா இல்லை. ஒரு நாள்ல ரொம்ப மெச்சூரா மாறிட்டா”

“இது ஒரு நாள் வந்த மாற்றம் இல்லை மகனே. இத்தனை நாள் அவ மாறிட்டே இருந்துருக்கா. நாம தான் அவளைப் புரிஞ்சிக்கலை. சரி அவ எங்க?”

“இங்க வர மாட்டேன்னு சொல்லிட்டா”

“அப்பாடி எனக்கு இப்ப தான் நிம்மதியா இருக்கு”, என்றாள் சுந்தரி.

“வாயை மூடிட்டு இரு சுந்தரி”, என்று சொன்ன ஈஸ்வரன் “என்னப்பா? அவ பேசினதை எல்லாம் பாக்குறப்ப அவ உன்னை மன்னிச்சிட்டான்னு நினைச்சேனே?”, என்று கேட்டார்.

“என் மகனை மன்னிக்க அவ யாரு? அவ மன்னிக்கிற அளவுக்கு என் மகன் ஒண்ணும் தப்பு பண்ணலையே”, என்றாள் சுந்தரி.

“உன்னை வாயை மூடச் சொன்னேன் சுந்தரி”, என்று மனைவியிடம் சொன்னவர் “என்ன ஆச்சுன்னு தெளிவா சொல்லு யுவன்”, என்று கேட்டார்.

“அவ நம்ம புது வீட்ல தான் இருக்கா. ஆனா என் மேல உள்ள கோபம் குறையலை”

“நீ என்ன செய்ய போற? எதுக்கு கவலைப் படுற? அவ உன்னை விட்டுப் பிரிஞ்சு இருக்க மாட்டா டா”

“அது எனக்கு தெரியும் பா. அவ கோபம் சரியாகிட்டுனா என்னைத் தேடுவா. நான் இப்ப டல்லா இருக்குற விஷயம் வேற ஒரு காரணத்துக்கு”

“என்ன விஷயம் யுவன்?”

“அவ என்னை நாளைக்கு ஆஃபிஸ்கு வரச் சொல்லிருக்கா”

“அவளோட ஆஃபிஸ்க்கா?”

“ஆமாப்பா”

“அங்க எதுக்கு? மறுபடியும் உன்னை அடிமையாக்கவா? நீ ஏன் டா இப்படி இருக்க? உனக்கு சூடு சுரனையே கிடையாதா?”, என்று கேட்டாள் சுந்தரி.

“சும்மா அவளை திட்டிட்டே இருக்கணும்னு செய்யாதீங்க மா. எனக்கு எரிச்சலா இருக்கு”, என்றான் யுவன்.

“அவ என்ன செஞ்சாலும் நீ அவளுக்கு பணிஞ்சு பேசிட்டே இரு விளங்கிரும். கல்யாணத்துக்கு முன்னாடி தான் நீ அவளுக்கு அடிமை வேலை பாத்த. இப்ப கல்யாணத்துக்கு அப்புறமும் அவ ஆஃபிஸ்க்கு உன்னை வரச் சொல்லிருக்கான்னா அவளுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்? அவ என் கைல கிடைச்சா செத்தா. எங்கயாவது புருஷனை அடிமை மாதிரி வேலை ஏவுவாங்களா? இதே நான் பாத்த பொண்ணு இப்படி பண்ணுமா?”

“சும்மா இருங்க மா எரிச்சல் படுத்திட்டு”

“நான் பேசுறது உனக்கு எரிச்சலா இருக்கா யுவன்?”

“கண்டிப்பா அப்படி தான் மா இருக்கு”

“யுவன்”

“நான் என்ன சொல்ல வறேன்னு ஒழுங்கா கேக்காம பட்டு பட்டுன்னு பேசிக்கிட்டு”

“என்னங்க. பாருங்க இவன் என்னை எப்படிச் சொல்றான்னு?”

“நான் தான் வாயை மூடு மூடுன்னு சொல்லிட்டு இருந்தேன்ல? நீ எங்க கேட்ட? அப்புறம் அவன் கிட்ட வாங்கிக் கட்டிக்க தான் செய்யனும்”

“உங்களுக்கும் நான் வேண்டாதவளா போயிட்டேன்ல? என் புருஷன் பிள்ளையையை எனக்கு எதிரா மாத்திட்டா. என்ன ஆனாலும் சரி நீ நாளைக்கு அவ ஆஃபிஸ்க்கு போக கூடாது. உனக்கு கிடைச்சிருக்குற  வேலைல போய் சேந்தேன்னா உனக்கு கீழே ஆயிரம் பேர் வேலை செய்வாங்க. நீ அங்க போக கூடாதுன்னு கூடாது. சொல்லிட்டேன். அப்படி என் பேச்சை மீறி போன…”

“போனா என்ன செய்வீங்க? இல்லை என்ன செய்வீங்கன்னு கேக்குறேன். நீங்க நினைக்கிற மாதிரி அவ ஒண்ணும் என்னை அடிமையா ஒரு நாளும் நடத்த நினைக்கலை. நீங்க தான் என்னை வார்த்தைக்கு வார்த்தைக்கு அடிமை அடிமைன்னு சொல்லி கஷ்டப் படுத்துறீங்க?”

“யுவன்”

“சும்மா இருங்க மா. உங்க மேல உள்ள மரியாதையே எனக்கு போச்சு”, என்று அவன் சொன்னதும் விக்கித்துப் போனாள் சுந்தரி.

“நீங்க தான் மா என்னை அசிங்க படுத்துறீங்க. அவ என்னைக்குமே என்னை விட்டுக் கொடுத்தது இல்லை. எல்லாம் நான் கொடுத்த இடம் தான். முதல் தடவை நீங்க அவ மேல வெறுப்பைக் காட்டும் போதே நான் உங்களைக் கண்டிச்சிருக்கணும். அம்மா தானே பொறுமையா இருன்னு அவ கிட்ட சொன்னது தப்பா போச்சு”

“என்ன டா ரொம்ப பேசுற? எவளாவது கட்டின புருசனுக்கு தனக்கு கீழே வேலை போட்டுக் கொடுப்பாளா? அவ கொடுக்குறா. நீயும் அவ பின்னாடியே திரி. இதை கேள்வி கேட்டா நீ என்னையே வாயை அடைக்கிற?/”

“அவ ஒண்ணும் சாதாரண வேலைக்கு அங்க என்னை வரச் சொல்லலை”

“ஓஹோ, அப்ப பி.ஏ வேலை போட்டுக் கொடுத்துட்டாளா? அதான் இவ்வளவு சோகமா இருக்கியா? உனக்கு தேவை தான் டா., இன்னும் நான் என்ன எல்லாம் பாக்கணுமோ?”

“அப்பா, இந்த அம்மாவோட வாயை மூடவே வைக்க முடியாதா?”

“அது முடிஞ்சா நான் எப்பவோ செஞ்சிருக்க மாட்டேனா?”, என்று ஈஸ்வரன் கேட்டதும் இருவரையும் முறைத்துப் பார்த்த சுந்தரி “வீட்டுக்கு வந்த அந்த சனியனால தான் எனக்கு கெட்ட பேர்”, என்றாள்.

“அம்மா, இனி அவளை ஒரு வார்த்தை தப்பா பேசினீங்க நான் மனுசனா இருக்க மாட்டேன்”

“என்ன டா பண்ணுவ? அடிப்பியா என்னை?”

“சே எனக்கு எனக்கு உங்க மேல வெறுப்பு தான் வரப் போகுது.  அவ என்னை ஆஃபிஸ்க்கு வரச் சொன்னது மேனேஜர் வேலையோ பி. ஏ வேலையோ பாக்குறதுக்கு இல்லை. என்னை முதலாளியா வரச் சொல்லிருக்கா போதுமா? நாளைக்கு நான் எம்., டி யா அங்க ஜாயின் பண்ணப் போறேன். லிங்கா குருப் ஆப் கம்பெனிஸ்க்கு நான் தான் எம். டி”

“என்னப்பா சொல்ற?”, என்று ஈஸ்வரன் அதிர்ச்சியாக கேட்டார் என்றால் சுந்தரியோ வாடைத்துப் போய் நின்றாள்.

“ஆமாப்பா, அவளோட வீட்டையும். லீ கார் கம்பெனியையும் அவங்க அப்பா பேர்ல எழுதி வச்சிட்டு அவளோட மத்த எல்லா சொத்தையும் என் பேர்ல எழுதி வச்சிட்டா. இப்ப அவ சொத்து முழுசா எனக்கு தான் சொந்தம்ன்னு சைன் பண்ணிட்டா. அதுவும் அவங்க அப்பா முன்னாடியே”

“என்னால நம்பவே முடியலை”

“ஆமா கண்டிப்பா நம்ப முடியாது. ஏன்னா இது பொய் தான். அவளாவது இவன் பேர்ல சொத்தை எழுதி வைக்கிறதாவது. அவளுக்கு இவன் எப்பவும் அவ காலையே சுத்திக்கிட்டு இருக்கணும். அதுக்கு தான் இவன் கிட்ட புழுகிருக்கா”, என்று சுந்தரி சொல்ல தாந்தையும் மகனும் அவளை முறைத்தார்கள். அதற்கெல்லாம் சுந்தரி அசருபவளா? பதிலுக்கு அவர்களை முறைத்தாள்.

அப்போது யுவனின் போன் அடித்தது. அழைப்பது சிவசுந்தரம் என்றதும் போனை எடுத்த யுவன் அதை ஸ்பீக்கரில் போட்டான்.

புயல் வீசும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!