Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

hi

அத்தியாயம்…15

அடுத்த வாரம் நடக்க இருந்த வரவேற்பபு இன்னும் பத்து நாட்களுக்கு தள்ளி சென்றது… கேசவ மூர்த்தியின்  தொழிலில் நடந்த சில பிரச்சனையால்,  கேசவ மூர்த்தி வாகனத்தின் உதிரிபாகங்கள் தயாரிக்கு தொழிற்சாலை நடத்திக் கொண்டு இருந்தார்..

 

அதில் சிறு தீ விபத்து… உயிர் சேதம் இல்லை.. பொருட்சேதம் தான்.. அதுவும் இன்சூரன்ஸ் இருந்ததால்,  பணம் விரையமும் கிடையாது தான்..



Advertisement

 

ஆனால் நேரம் விரையம்… விக்ரமுக்கு தன் தொழிலை கூட  விட்டு ஒரு மகனாக தந்தைக்கு அனைத்துமாக நின்று  விரைந்து முன் நின்று  போல் செயல்  பட்டான்…  

 

Advertisement

இதன் நடுவில் விக்ரமின் கவனம் வேறு  எங்கும் இல்லை.. ஏன் தன் உணவு தூக்கத்தை கூட அவன் அன்னை தான் கவனித்து  கொண்டார்.. அப்படி இருக்க விக்ரமனின் கவனத்தில் தங்க மலர் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..

Advertisement

 

தங்க மலருக்கு இது எல்லாம் புதியது.. தொழில் இது போல் தீ விபத்து என்று கேட்ட உடன்.. முதலில் அவள் மனதில் ‘ அய்யோ.. இது தான் வந்த ராசி என்று சொல்லி விடுவார்களோ..’ என்று மனதில் அவ்வளவு அச்சம். 

 

Advertisement

ஆனால்  அதை யாரிடமும் தங்க மலர் சொல்லவில்லை.. தொழில் நஷ்டம் என்றாலே ஒரு அபசகுணம்.. தீ என்பது இன்னும் கெட்ட சகுணமாக  நினைப்பார்களோ…

 

 அதுவும் சென்னையில் இருந்து யாரிடம் இருந்தும் அவளுக்கு அழைப்பே இல்லாததால் அவள் மனம் இன்னும் பயந்து தான் போனது..

 

அதோடு வீட்டில்  வைஷாலி அண்ணி கூட.. தன்னிடம் சரியாக பேசாது போல் அவள் உணர்ந்தாள்..

 

அவள் நினைத்தது சரியே வைஷாலி தங்மலரிடம் என்ன..?  வேறு  யாரிடமும் பேச முடியாது தான் இருந்தாள்..

 

அம்மா வீட்டில் பிரச்சனை… எந்த பெண் தான் புகுந்த வீட்டில் அமைதியோடு  எப்போதும் போல் இருக்க முடியும்…? அம்மாவிடம் கேட்டு விட்டால்..

 

“ இங்கு என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.. அங்கு வருகிறேன்..” என்று..

 

ஆனால் ராஜேஷ்வரி.. “ இது இரண்டு பட்டு வரும் மாதம் வர கூடாது… நீ அங்கேயே இரு..” என்று விட்டார்..

 

அந்த கோபம் வேறு வைஷாலிக்கு…  அதனால் புகுந்த வீட்டில் முகத்தை தூக்கி வைத்து கொண்டு தான் இருந்தாள்.. அதன் காரணம் என்ன என்று மற்றவர்களுக்கு தெரிந்தது..

 

நேரிடையாக அர்ஜூன் தங்கள் அறையில் தனிமையில் அதன் எதிரொலியாக  மனைவியிடம் இருந்து நிறைய வாங்கி இருப்பதால், மனைவியை புரிந்து கொண்டு அனுசரணையாக இருந்தான்..

 

ஆனால் தங்க  மலர்.. தான் ஒதுங்கி போனாலும் இழுத்து வைத்து பேசும் அண்ணி தானே போய் பேசினால் கூட கேட்டதற்க்கு பதில் அளித்து போகும் வைஷாலியின் செயலில் ஒரு குழப்பம் என்றால்,

 

இரவு எந்த நேரம் ஆனாலும் தன்னிடம்  வீடியோ காலில் பேசி தன் முகத்தையாவது பார்த்தால் தான், கொஞ்சம் தூக்கமாவது வருகிறது என்று சொல்லும் கணவன் ஒரு வாரமாக பேசியில் அழைக்காது போனதில். அவளே அவனை அழைத்தாள்..

 

விக்ரமின் பேசியில் அவள் அழைப்பை ஏற்றது வருண்…

 

வருண் அழைப்பது தங்க மலர் என்றதும் ஏற்றான்… குரல் வேறுப்பாட்டில் தங்க  மலர். தயங்கி பேச்சை ஆரம்பிக்கும் போதே..

 

“ ஆ சொல்லுங்க மலர் மேடம்..” என்று வருண் பேச்சை ஆரம்பித்து விடவும் அழைப்பின் இந்த பக்கம் இருந்த தங்க மலர்.. “ அவ..ர்..” என்று பேச்சை  ஆரம்பித்தவள் அடுத்த வார்த்தை பேசும் முன் அந்த பக்கம்..

 

“ என்ன வருண் இருக்கும் நிலை  புரியாது  அரட்டை அடிச்சிட்டு இருக்க..” என்று  விக்ரம்  போட்ட சத்தம் இங்கு தங்க மலருக்கே தெளிவாக   கேட்டது தான்..

 

வருண்.. “ மலர் மேடம்..” என்று சொல்லியும்..

 

“ அது எல்லாம் அப்புறம் பார்க்கலாம்.. முதல்ல என்ன என்ன ஸ்டாக் இருந்தது என்று பார்..” என்று   விக்ரம் போட்ட சத்ததில்  வருண் 

 

தங்க மலரிடம் சொல்லாது கூட பேசியை அணைத்து விட்டான்..

 

அவனின் அந்த செயலில் தங்க மலர் இன்னும் உடைந்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்..

 

‘அன்னைக்கு அப்படி சொன்னான்.. தொழிலில் தோற்கலாம்.. வாழ்க்கையில் தோற்க கூடாது என்று… ஆனால் இப்போ பார் தொழிலுக்காக என்னிடம் பேசாது இருக்கான்..’ என்று மனது வெதும்பி கொண்டாள்..

 

அவளுக்கு விக்ரம் பற்றி ஒன்றும் தெரியாது தானே… விக்ரம் சொன்னது போல் குடும்பம் தான் அவனுக்கு முதன்மை… பின் தான் தொழில்…  ஆனால் ஒரு சில இக்கட்டான நிலையில் எதையும் பார்க்க கூடாது..

 

இப்போது  விட்டு விட்டால் அவர்கள் எப்போதும் மேல் எழும்ப முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள்.. வசதி இல்லாது வாழ்வது பிரச்சனை கிடையாது..

 

ஆனால் பிறந்ததில் இருந்து அனைத்து வசதிகளும் அனுபவித்து விட்டு,பின் அது இல்லை எனும் போது.. அது நடை முறை வாழ்க்கையில் எவ்வளவு சிக்கலை ஏற்படுத்தும் என்பதும் அவனுக்கு நன்கு தெரியும்..

 

தந்தையின்  தொழிலில் பிரச்சனை என்றால், அவர்கள் அந்த அளவுக்கு இறங்கி  விட மாட்டார்கள் தான்.. ஆனால் அதன் பின் விளைவு…

 

சொந்தத்தின் நடுவில் அது ஒரு வித தலை குனிவு தான்.. இந்த தொழுற்சாலை விக்ரமனின் தாத்தா உருவாக்கியது..,அது படுத்தால் அது அவர்களுக்கு அவமானமே.. 

 

அதன் தொட்ட விக்ரம் அனைத்தும் மறந்து… இன்சூரன்ஸ் ஆட்கள் கேட்பது இதை கேட்க கூடும் என்று முன் எச்சரிக்கையில் அனைத்தும் கொடுத்து… சரியான பின் தான் அவன் கண் முன்  தங்கம் வந்து நின்றது…

 

இங்கு தங்கமோ ஒரு முறை தன் அழைப்பை வருண் ஏற்று பேச முடியாது போனதில் பின் அவள் விக்ரமை அழைக்கவில்லை..

 

அர்ஜூன் .. “ அத்தான் சென்னையை விட்டு எப்போது வருவார் என்று தெரியாது.. அதனால் நீ அந்த வீட்டுக்கு போக  வேண்டாம்… இங்கேயே இருக்க சொன்னார்.. 

 

அதோட வர வேற்ப்பு எப்ப்போ என்று முடிவாகவில்லை..” என்ற தகவலின் படி அவள் தாய் வீட்டில் இருந்து  தான் மருத்துவமனைக்கு சென்று வருகிறாள்…

 

தங்க மலர் அர்ஜூன் சொன்னதும்.. “ யார் சொன்னா..?” என்று கேட்டாள்..

 

“ ஷாலி தான்..’ என்ற பதிலில் அண்ணிக்கு யார் சொல்லி இருக்க கூடும் என்று அனுமானத்தில், தங்கைக்கு அழைத்து பேச தெரிந்தவருக்கு, தன்னை அழைத்து பேச நேரம் இல்லையோ.. இது தான் நினைத்தது..

 

பாவம் அவளுக்கு தெரியாதது… வைஷாலிக்கு அவள் அன்னை ராஜேஷ்வரி தான் அழைத்து… 

 

“  தீ விபத்துக்கு காரணம் …மின்சார கசிவு என்று தான்  விசாரணையில் இருக்கு.. ஆனாலும் நாம ஜாக்கிரதையாக இருக்கிறது நல்லது… மலர் அங்கு தனியா இருக்க வேண்டாம்..  உங்களோடவே இருக்கட்டும்..” என்று  சொன்னதை சொல்லாது வைஷாலி சொன்னதாக மட்டும் சொல்லி விட்டு தங்கையின் மன வேதனையை அதிகம் 

 

படுத்தியது தெரியாது அர்ஜூன் சென்று விட்டான்…

 

அதுவும் ஒரு மருத்துவராக தன் உடல் நிலையின் மாற்றம்.. அதுவாகதான் இருக்கும் என்று  அவள் மனது உறுதி பட சொன்னாலும், அதற்க்கு உண்டான பரிசோதனையோ.. இல்லை மருந்தகத்தில் ஒரு சின்ன சாதனம் அதை வாங்கி பார்த்தால் கூட  உறுதியாகி விடும்..

 

ஆனால் அதை அவள் தனித்து செய்ய மனம் வராது.. இதை பற்றி வீட்டவர்களிடமும் சொல்லாது ஏதோ யோசனையிலேயே இருந்தாள்.

 

அதுவும்  அன்று பேசிய தன் பெற்றோரின் திருமணம் அர்ஜூன்  பிறந்ததை இணை கூட்டியவன் பேச்சு.. 

 

அது தங்களுக்கே எனும் போது… ஒரு பக்கம் சிரிப்பு மறுப்பக்கம் வெட்கம்.. இந்த சமயத்தில் பெண்களுக்கே இருக்கும் ஹார்மோன்ஸ் மாற்றம்.. அதில் கணவனின் பாராமுகம் அனைத்தும்  சேர்ந்து தங்கம் தத்ததளித்து போய் விட்டாள்..

 

 விக்ரம் தொழிற்சாலையில் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்த பின்..  மனைவியை அழைக்க.. இங்கு மனைவி முறுக்கி கொண்டு விட்டாள்..

 

விக்ரம் அழைக்கும் போது தங்க மலர்  மருத்துவமனையில் இருந்தாள்.. அந்த சமயம் மதியம் அவர்கள் உண்ணும்  நேரம் தான்..  நேரம் பார்த்து தான் விக்ரமும் தன் மனைவியை அழைத்தது..

 

ஆனால் தங்க மலரோ.. நேரம் காலம். ஏன் பக்கத்தில் இருப்பவர்கள் கூட பார்க்காது 

 

விக்ரமிடம் இருந்து வந்த அழைப்பை  மூன்று முறை துண்டித்து   விட்டாள்..

 

பக்கத்தில் இவளோடு சாப்பிட்டு கொண்டு இருந்தவர்கள்.. இவளின் செயலை பார்த்து அவர்களூக்குள் சிரித்து கொண்டனர்..

 

அதில் ஒருத்தி.. “ அத்தானை தவிக்க விடலாமா..?” என்று கேலி பேச்சு பேச.. இவள் முறைத்த முறைப்பில் அடங்கிய பாவனை செய்தவள் அடுத்த தோழிகளிடம்..

 

“ ஊடலுக்கு பின் நிகழும் கூடலும்  சுகம் தானே..” என்று கிண்டல் பேச்சில் லயிக்கும் நிலையில் அவள் இல்லை..

 

இவளை பற்றி நன்கு தெரிந்த சாகித்யா தான்.. மற்றவர்களிடம் .. “  சும்மா என்ன எப்போது பார்த்தாலும் இது போலான பேச்சு..” என்று அடக்கி விட்டாள்.

 

பின் தனிமையில்.. “ என்ன மலர்…  அன்னைக்கு ஷ்யாம் என்ன பேசினார் என்று உன் விக்ரம்  கிட்ட சொல்லிட்டியா..?” என்று கேட்டவளுக்கு இல்லை என்று தலையாட்ட..

 

“ம்.. சொல்லி விடு மலர்.. விக்ரம் சார் நல்லவர்.. கண்டிப்பா நீ சொல்வதை சரியா புரிஞ்சிப்பார்… தான் எனக்கு தோனுது.. அதோட சென்னையில் வர வேற்ப்புக்கு பின் விக்ரம் சார்.. 

 

இங்கு  நம்ம எல்லோருக்கும்  ட்ரீட்  கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கார்..  ஐந்து வருடம் முன் விக்ரம் சார் பற்றி நீ பேசும் போது தான்யாவும் இருந்தா.. பார்த்து அவள் ஏதாவது உலருவதற்க்கு முன் நீ சொல்லி விடு..” என்ற பேச்சில்..

 

தங்க மலருக்கு தலையை சுற்றியது… ஒரு நிலைக்கு  மேல் எனக்கு மட்டும் ஏன் இப்படி..? என்பது போல் ஒரு நிலைக்கு  ஆளானாள்…

 

அங்கு விக்ரமோ… தன் அழைப்பை ஏற்காது துண்டிக்கவும்.. 

 

“ சரி வேலையா இருப்பா..” என்று தான்  நினைத்தானே தவிர. கோபமாக இருப்பாள் என்று நினைக்கவில்லை… தன் தங்கம் கோபப்படுவாள் என்று அவனுக்குமே தெரியாது தானே…

 

சாகித்யாவின் பேச்சில் தங்க மலருக்கு சொல்லி விட வேண்டும்.. ஷ்யாம் அன்று வரவேற்ப்பு முடிந்து என்ன சொன்னான்.. பின் வீட்டுக்கு வந்து பேசியது.. அனைத்தும் சொல்லி  விட வேண்டும் என்றதில் அவள்  கோபம் மறந்து விக்ரமை அழைக்க…

 

அழைப்பை ஏற்ற விக்ரமுக்கு இத்தனை நாள் பிரிந்த ஏக்கம்.. பேசாத பேச்சில்.. புதுமாப்பிள்ளையாக பேச்சை ஆரம்பித்து பின்…

 

தங்களின் வரவேற்ப்பு நாள்.. எந்த தேதி.. என்று சொன்னானே ஒழிய… தங்க மலரை பேசவிடவில்லை..

 

விக்ரமின் பேச்சில் தன் மீது கோபமோ.. பின் தான் நினைத்தது போல் ராசி பிரச்சனையும் இல்லை என்றதில் கொஞ்சம் நிம்மதி அடைந்த தங்க மலர்..

 

பின் “அத்தான்..” என்று அவள் பேச்சை ஆரம்பித்தாளே… விக்ரம் அவளின்  பேச்சை தனக்கு  பிடித்தது போல் மாற்றி அமைத்து என்று அரை மணி நேரமாக இவர்களின் பேச்சு இப்படி தான்  சென்றதே ஒழிய…

 

தங்க மலர் சொன்ன நினைத்த இரண்டு முக்கியமானதை சொல்லாது போயின.. தங்க மலரும் இது போனில் சொல்ல கூடியதோ. அடுத்து பேச கூடியதோ இல்லை என்று.. 

 

சரி இன்னும் ஒரு வாரம் தானே இருக்கிறது வரவேற்ப்புக்கு அப்போது நேரில் பேசிக்  கொள்ளலாம்.. சொல்லிக் கொள்ளலாம் என்று அவளே ஒரு முடிவு எடுத்துக் கொண்டவள்..

 

அடுத்து அடுத்து விக்ரம் அழைப்புக்கு ஏற்று பேசியவர்களின் பேச்சுக்கள் அனைத்துமே புது மண தம்பதியர்களின் பேச்சாக ஒரு சிலது எழுத்தில் எழுத  முடியாத 18 ப்ளஸ் வகையில் சார்ந்ததாக இருந்தது..

 

விக்ரம் ஒவ்வொரு முறை அழைக்கும் போதும் தங்க மலர்.. “ எப்போ இங்கு வருவீங்க..? ரிசப்ஷன் முன் வர முடியாதா..? என்று தங்க மலரின் கேள்விக்கு விக்ரம்..

 

“ இல்லடா பிரச்சனை எல்லாம் ஒரளவுக்கு சரியானாலும். இன்னும் முழுமையாக முடியலேடா.. நான் வந்துட்டா அப்பா அம்மா தான் எல்லாம் பார்த்து கொள்ள வேண்டும்.. இந்த தொழில் பிரச்சனையோடு நம்ம ரிசப்ஷனுக்கு உண்டான வேலை வேறு இருக்குலே தங்கம் அது தான்.. 

 

நீ நகை புடவை எடுக்கும் போது வீடியோ கால் செய் தங்கம்… நானே உனக்கு செலக்ட் செய்து தருகிறேன். என் செலக்ஷன் உனக்கு  பிடிக்கும் தானே..” என்றவனின் பேச்சி தங்க மலர்..

 

“சரி..” என்று மட்டும் தான் சொல்லும் படியானது..

 

விக்ரம் சொல்லாத விட்ட ஒன்று.. அது விக்ரமனின் அந்த திடிர் திருமணம் தொழில் முறையிலோ. உறவு முறையிலோ யாருக்கும் தெரியாது போனதால்..

 

திடிர் என்ற இந்த வரவேற்ப்பு என்றதில் ஒரு சில உறவில் நட்பில்.. “ என்ன காதலா..?” என்று கேட்டு அதோடு விட்டு விட்டனர்..

ஒரு சில வக்கிரம் மனம் பிடித்தவர்கள்.. “ காதல் என்றால் கூட அவசர அவசரமா கல்யாணம் என்றால், என்ன  மகன் அவசரப்பட்டு விட்டானா..? என்று  தன்னிடம் கேட்டால்  கூட பரவாயில்லை. தந்தையிடம் அது போலான கேள்விகள் எழுந்ததில் விக்ரம் அனைவரையும் நானே அழைக்கிறேன் என்று அந்த வேலை 

 

முழுவதையும் அவனே ஏற்றுக் கொண்டதால் தான் அவனால்  கோயம்பத்தூர் பக்கம் தலையை கூட காட்ட  முடியாது போயின…

 

அந்த காரணத்தை தங்கத்திடம் சொன்னால்  சங்கடப்பட கூடும் என்று சொல்லாது விடுத்து விட்டான் விக்ரம்..

 

இங்கு கோயம்பத்தூரில் வரவேற்ப்பு அன்று தான் குடும்பமாக சென்னைக்கு வரும் படியாயின.. காரணம் வைஷாலியின்  கரு மாத கணக்கு இரட்டை பட்டையில் தாய் வீடு செல்ல கூடாது என்ற ஐதிகத்தில்..

 

அன்று தான் ஒத்தை பட்டை கணக்காக  வரவேற்ப்பு அன்று தான் கணக்கு தொடங்குகிறது என்றதில் அனைவரும் ஒன்றாக செல்லலாம் என்று  சொல்லவும்..

 

தங்க மலர் அதற்க்கும் ..”  ம்..” என்றும் படியாகி விட்டது..

 

இப்படி அனைத்து வகையிலும் தங்க மலர்   தங்கள் ரகசியத்தை தன் கணவனிடம் சொல்ல முடியாத நிலையில் சென்னைக்கு மதியம் வந்தவள் கணவனிடம் தனித்து பேச முடியாது நேரம் இல்லாது சூழ்நிலையில்..

 

மணமக்கள் இருவரும் மேடையில் ஜோடியாக நிற்க/.. மகனை பெற்றவர்கள் வைஷாலியை தன் வீட்டுக்கு மருமகளாக எடுக்க நினைத்து அவள் காதல் என்றதில் சரி மகளுக்கு பார்க்கலாம் என்று நினைத்தவர்களின் கண்களுக்கு விக்ரம் தங்க மலரின் ஜோடி பொருத்ததை பார்த்து வயிறு எரிந்தது

.

அந்த புகைச்சலில் பரவாயில்லை… பெண்ணையும்  மகனையும் உஷாரா தான் வளர்த்து இருக்காங்க வைத்திய நாதன்.. என்று பேசிக்  கொண்டு இருப்பது மேடையில் இருப்பவர்களுக்கு தெரியவில்லை என்றாலும், வந்தவர்களை வர வேற்றுக் கொண்டு இருந்த காயத்ரி… வைத்திய நாதன் அர்ஜூன் காதில் விழுந்தது தான்..

 

ஆனால் அதை கண்டு கொள்ளாது வரவேற்ப்பு நல்ல முறையில் நடந்து முடிந்தால் போதும் என்று இருக்கும் வேளயில் தான் வர வேற்ப்பு தொடங்கி ஒரு மணி நேரம் சென்ற  நிலையில்.. தங்க மலருக்கு மயக்கம் வருவது போல் இருந்தது..

 

ஒரு நிலைக்கு மேல் முடியாது  போக விக்ரமை   கை தொட  போகும் முன் அவள் கீழே போக அதற்க்குள் ஏதோ ஒரு உந்துதலில் திரும்பிய விக்ரம் மனைவியின்  நிலையில் அவளை கீழே சரியாது பிடித்தான்…

ஆனால் அவளின்  மானம்..? 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!