Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Sari Paathi

Un Sari Paathi 3 1

நானே உன் சரிபாதி…

3

கன்யாவிற்கு அவளின் அப்பா பார்த்து முடித்து வைத்த திருமணம்தான். அப்போது கல்லூரி இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தாள்.



Advertisement

அனுஷாவின் திருமணம் முடிந்து மூன்றாண்டுகள் ஆனா நிலையில்… “கன்யாவிற்கு பார்க்கிறீர்களா…” என சதாசிவத்தின் ஜாதகத்தை தனபால் கையில் கொடுத்தார்… ஏதோ திருமணத்தில் இவர்களை பார்த்த தனபாலின்  ஒன்றுவிட்ட அண்ணன்.

அப்போது கன்யாவின் தந்தைக்கு… அவளை இப்போது திருமணம் செய்யும் யோசனை கூட இல்லை. ஆனால், பையன் டாக்டர் என்ற வார்த்தையில் வீழ்ந்தார்.    

சரி, “ஆரம்பிப்போமே” எனதான் தனபால் இதில் இறங்கினார். ஜாதகம் பொருத்தம் பார்த்து… சதாசிவத்தின் வீட்டில் பேசினார். அப்போதுதான் பெரிய பூதம் கிளம்பியது அங்கிருந்து.

Advertisement

%%%%%%%%%%%%%%%%%%%

Advertisement

வெங்கட் நினைத்த படி திருமணம் செய்து சதாவை வெளிநாடு அனுப்பலாம் என முடிவு செய்தனர். கல்யாணிக்குதான் அவ்வளவு சந்தோசம்… எப்படியோ தன் மகனுக்கு வாழ்வில் ஒரு பற்றுகோல் இருந்தால் சரி என எண்ணி.. பெண் பார்க்க தொடங்கினர்.

அவச அவசரமாக தேடினர்… எல்லா சொந்தத்திலும் தனது தேடலை சொல்லிவைத்தார்… வெங்கட். 

சரியாக இரண்டாம் வாரம் கன்யாவின் வீட்டிலிருந்து அவளது தந்தை தனபால் அழைத்தார். கெட்டியாக பிடித்துக் கொண்டனர் சதாசிவம் வீட்டினர். 

Advertisement

வெகட்ராமன் தன் மகன் வெளிநாடு சென்று படிப்பதால் திருமணம் செய்து அனுப்புகிறோம் என சொல்லி… சம்மதிக்க வைத்தார் கன்யாவின் வீட்டினரை. 

எல்லோரிடமும் விசாரித்தனர் தனபாலும்… எல்லா உறவுகளுமே நல்லவிதமாக சொல்லியது சதாசிவம் பற்றியும் அவனின் குடும்பம் பற்றியும். அகமகிழ்ந்தார் தன்பால்.

ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு இப்படி ஒரு மாப்பிள்ளை அமைந்ததில் திக்கு முக்காடிதான் போனது கன்யாவின் வீடு. தன் பெரிய பெண்ணிற்கு செய்ததை விட அதிகமாக செய்தார் கன்யாவிற்கு தனபால்.

வெங்கட்டின் சொந்த ஊர் ஈரோடுதான். இவர் இப்போது இருப்பதும் சென்னை. எனவே, இரு குடும்பங்களும் சந்தித்து அடுத்த நிலை குறித்து பேசினார். பரபரவென வேலை நடந்தது. எதற்கும் தடை இருக்கவில்லை…

வீட்டோடு நிச்சையமும் முடித்தனர். சதாசிவத்தின் போட்டோ மட்டும் காட்டினர். பையன் திருமணத்திற்கு வந்துவிடுவான் அவன் பிஸி என்றனர். கன்யா வீட்டினரும் நம்பினர்.

டெல்லியில் உள்ள பிரபல மருத்துவகல்லூரி அதில் இடம் கிடைப்பதே அரிது… எனவே அதை தொட்டு அங்கிருந்தே வெளிநாட்டில் படிப்பு, என கன்யாவின் வீட்டில் சற்று பிரம்மிப்பை தர சரி சரி என்றனர்.

இப்படியே சென்றது இரண்டு வாரத்தில் திருமணம் முடிய வேண்டும் என சதா வீட்டினர் கூறினார். திருமணநாள் குறிக்கப்பட்டது.

சதாசிவம் வீட்டில் எப்படியேனும் பையன் திருமணத்திற்கு வந்து விட வேண்டுமே என்ற பரபரப்பு. சதாவிடம் சொல்லாமலே திருமண தேதி குறிக்கப்பட்டது. அவனின் அக்காவும் குடும்பத்துடன் தன் தம்பி திருமணத்திற்காக சென்னை வந்தார்.

திருமணத்திற்கு இரண்டு நாள் இருந்த நிலையில் யசோதா அவனின் அக்காதான் சதாக்கு போன் செய்தார்… நடு ராத்திரி இரண்டு மணிக்கு… “சதா…” என்றார் குரலில் வலியுடன் படபடவென “அப்பாக்கு உடம்பு சரியில்லை டா” என்றார் எடுத்த உடன்.

சதாவும் விடியற்காலை ப்ளைட் பிடித்து வந்தான் நேரே கோவை வர செய்தனர்.  பரபரவென காலை பத்து மணி திருமணத்திற்கு, காலை எட்டு மணிக்கே சதா வந்துவிட்டான் சத்தியமங்களத்திற்கு…

சதாவை சுற்றி… எல்லோரும் நின்றனர்… அந்த திண்ணை வீட்டில். வெங்கட் ஏதும் பேசவில்லை. கல்யாணிதான் அழுதுகொண்டே தன் மகனிடம் எல்லாம் விளக்கினார்.

ஏதேதோ விளக்கங்கள்… என்ன, என்னமோ இறைஞ்சல்கள்… கெஞ்சி, பேசி, மிரட்டி என பலவகையில் அந்த இரண்டுமணி நேரத்தில் அவனை திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்திருந்தனர். அப்படிதான் அன்று நினைத்திருந்தனர்.

சதா… பட்டு வேட்டி சட்டையில் வந்தான். முகம் மட்டும் தெளிவில்லாமல் இருந்தது. யாரையும் கண்டு கொள்ளாத பாவம்… ஆசை ஆசையாக அருகில் அமர்ந்தவளை திரும்பியும் பார்க்க தோன்றவில்லை அவனிற்கு.

அடுத்த அரமணி நேரத்தில்… கையில் அய்யர் மங்களநாண் கொடுக்க… அதை ஏனோதானோவென கன்யாவின் கழுத்தில் வைத்தானா… கட்டினானா தெரியாது…

அட்சதை தூவ… சந்தனம் குங்கும் மணக்க, அதை கண்கலங்க தலை குனிந்து வாங்கியவள் நிமிரும் போது… 

அட்சதைகளை தட்டி விட்டபடி… நகர்ந்து.. போனில் பேசிக் கொண்டிருந்தான் சதா… கன்யாவிற்கு முதுகுகாட்டி நின்று…

அதன்பின் எந்த சடங்கும் செய்யவில்லை அவன் மெட்டி போடவில்லை… அவளின் கைபிடித்து அக்னி வலம்வில்லை… பால்பழம் உண்ணவில்லை இப்படி எதுவும்… எதற்கும் அவன் இல்லை

உறவுகளிடம் சலசலப்பு “என்ன… படிச்ச பையன்னா… எதுவும் செய்ய மாட்டாகளோ…

புள்ள தனியா… மேடையில நிக்குது…

என்னாமோ… ஊரு உலகத்துல இல்லாத மாப்பிள்ளை… 

என்ன சொல்ல… எல்லாம் தனபாலுக்கு அவசரம்…    

எல்லாம் பணம் படுத்தும் பாடு…” என வகை தொகை இல்லாமல் பேச்சு… 

அப்போது தனபாலுக்கு தொடங்கியது “அவசர பட்டு விட்டோமோ” என….

அதன்பின் ரெஜிஸ்டர் ஆபிஸ்க்கு சென்றனர்… எல்லா ஏற்பாடுகளும் முன்னமே சரியாக இருந்தது… 

நேரே எதற்கோ கட்டுபட்டவன் போல் வந்தான், அப்போதும் திரும்பவில்லை சதா… தன் பெற்றோரிடம் கூட கோவபடவில்லை, முகத்தை காட்டவில்லை. அமைதியாக ஏதோ பிக்னிக் வந்தவன் போல் கையெழுத்து போட்டு… தன் பெற்றோரை நிமிர்ந்து பார்த்தான்.

தன் பொற்றோர் அவமானம் படக்கூடாது என்தான்… சதா கன்யாவை திருமணம் செய்தான்.  சொந்தபந்தங்கள் அனைத்தையும் கூட்டி வைத்துக் கொண்டு தன்னை இப்படி கார்னர் செய்கிறார்களே என தோன்றினாலும்.

சதாக்கு தன் அன்னை தந்தை அவ்மானபடுவது பிடிக்கவில்லை என அவர்கள் சொன்னபடி செய்தான். மேலும் அவன் மனதில் இந்த திருமணம் என்ற வார்த்தை கூட அப்போது இல்லை.

எனவே இது ஏதோ ஒரு செய்யலாகதான் தோன்றியது அவனிற்கு. இப்போது தன் அக்கா யேசோத முகத்தை அழுத்தமாக பார்த்தான்… அதில் என்ன இருந்தது இன்றுவரை தமக்கைக்கு தெரியவில்லை… ஏனென்னில் இன்றுவரை தன் அக்காவுடன் பேசவேயில்லை அவன்.

தன் அன்னை தவிர… யாரிடமும் பேசவில்லை அவன். அதுவும் எப்போதாவது ஆறுமாதத்திற்கு ஒருதரம்தான் பேசுவான்… 

மிஞ்சி போனால் நாலு வார்த்தை… போர்மளாக… வேறு எதை பற்றியும் அவனிற்கு பேச வராது… அன்னை கேட்டால் பதில் சொல்லுவான் அவ்வளவே… மிக குறைவான பேச்சு எப்போதும்.   

அன்று எல்லாம் நிமிடத்தில் முடிந்தது… யாரோ காரெடுத்து வர, கிளம்பிவிட்டான் அந்த ஷணமே.

மீண்டும் ஒருபாடு எல்லோரும் பேசி தீர்த்தனர். வெங்கட்டுக்கு ஏக சந்தோசம்… அப்போதும் தன் மகன் பிஸி என்பதாகவே பில்டப்கொடுத்தார்… கன்யாவின் வீட்டினரிடம்.

தனபாலுக்கும் மைதிலிக்கும்… சொந்தங்களுக்கு நடுவே தங்கள் பெண்ணின் வாழ்வு… தடமாறி நிற்பதை பார்க்க கோவமாக வந்தது. மேலும் கன்யாவின் முகத்தை பார்க்க முடியவில்லை.

எனவே ஏதும் காட்டிக் கொள்ளாமல்… உறவுகளை கவனிக்க தொடங்கினர் இன்முகமாகவே… ஆனாலும் நெருடல்தான் உள்ளுக்குள்.

எனினும் அங்கிருந்த உறவுகள் தனபாலிடம் “பார்த்துப்பா… கவனமா இருங்க… சீக்கிரம் பெண்ணை மாப்பிள்ளையுடன் அனுப்பி வைங்க…” என பல புத்திமதி சொல்லித்தான் சென்றது.

எல்லாமே சதா விஷயத்தில் காற்றில் கரைந்த கற்பூரமே… அவன் இசைவின்றி திருமணம் வேண்டுமால் நடந்திருக்கலாம்… 

ஆனால் அதற்காக “நான் வாழ்வேன்” என எப்படி எதிர்பார்த்தீர்கள் என எல்லோருக்கும் சொல்லுவது போல் இந்த ஐந்து வருடம் பதில் சொல்லிவிட்டான்.

                      @%@%@%@%@%@%@

தனபால் இறந்தது முதல்… சதாவின் தந்தை வெங்கட் கன்யாவின் குடும்பத்தை தன் குடும்பமாகவே பார்த்தார். வாரத்தில் ஒருதரம் கணவன் மனைவி இருவரும்… கன்யாவை வந்து பார்த்து செல்வர்.

ஏதோ இதனை தனது கடமையாகவே செய்தார் வெங்கட்.

மேலும் அவர்களின் வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் கன்யா வீடு இல்லாமல் இருக்காது. அப்படி பழக்கம்தான் கீர்த்தனா.. கார்த்திக்கு. கீர்த்தனாக்கும் கார்த்தியை பிடித்திருந்தது. 

இதை கன்யாவும் கவனித்திருக்கிறாள். இப்போது சரியான நேரம் பார்த்து… தன் மாமனார் வீட்டினரிடம் பேசி… பொறுப்பான தங்கையாக திருமணமும் நிச்சையித்துவிட்டாள் இருவருக்கும்  

கார்த்திதான் இன்னமும் தடுமாறிக் கொண்டிருந்தான் அண்ணனாக. அவனிற்கு பல யோசனைகள்… தன்னுடைய முடிவு தவறாகிவிட கூடாது என..

தங்களின் திருமணம் நடைபெறும் நேரம்.. தங்கள் குடும்பத்திற்கும் சதாவின் குடும்பத்திற்கும் உறவு மேலும் நெருங்கும்… எனவே சதா கண்டிப்பாக தன் தங்கையுடன் வந்து சேர்வான். 

மேலும் உறவு நெருங்கும் போது, அந்த சதாசிவத்தை நெருங்கி கேட்கலாம் என்ற எண்ணம் கொண்டு தன் மனதை தேற்றிக் கொண்டான்.

அத்தோடு எவ்வளவு நாட்கள்தான் தங்கையை எந்த பதிலும் தெரியாமல் காக்க வைப்பது. 

ஒருவேளை நூற்றி ஒரு பங்காக சதாசிவத்திற்கு இந்த திருமணம் விருப்பமில்லை எனில் வேறு திருமணம் செய்யவேண்டும்.. அதற்கு அந்த சதாவின் பதில் தெரிய வேண்டும்… 

எப்படியேனும் ஒரு முடிவு வேண்டும் என நீண்ட நீண்ட நெடிய திட்டம் போட்டே கார்த்தி திருமணத்திற்கு சம்மதம் சொன்னதே..

ஆனால், கன்யா முற்றிலும் வேறு… அவள் பெரிதாக சதாசிவத்தை எதிர்பார்க்கவில்லை. அவன் பிம்பமே அவளிடம் சற்று கலங்ககளாகதான் தெரிகிறது. சதா வந்து தன்னுடன் சேர்வான் வாழ்வான் என்பதை பற்றி அவளிற்கு தெரியாது.

ஆனால் நேரில் பார்க்க வேண்டும் என்னை விட… படிப்பு வேலை முக்கியம் என்பவன் எதற்கு என்னை திருமணம் செய்தாய் என கேட்கவேண்டும்… கேட்க வேண்டும்..

கொஞ்சம் இது நாடகபாணியில் இருந்தாலும்… அவளின் மன எண்ணத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. இது விளக்கவும் முடியாது. 

எந்த தடுமாற்றமும் இல்லாமல் ஐந்து வருடங்கள் சென்ற நிலையில் அவளும் இந்த சதாவின் வரவை எதிபார்த்தே இருந்தாள்.    

அத்தோடு, தன்னால், தன் அண்ணனின் திருமணம் தள்ளி போகிறது… எனவே எப்படியேனும் அவன் வாழ்வை சிறக்க செய்ய வேண்டும் எனவே கார்த்தியின் இந்த ஒப்பந்தத்திற்கு அவள் சம்மதம் சொன்னது.

சதாவின் வீட்டினரும், இந்த ஐந்தாண்டுகளில் என்னென்னமோ.. எப்படி எல்லாமோ சதாவை அழைத்து பார்த்துவிட்டனர்… ஆனால் அவர்கள் செய்த தவறால் இன்று சதா… தன் பெற்றோரின் எந்த பேச்சையும் நம்ப மறுக்கிறான்.  

மேலும் அவனின் பதில் அன்றிலிருந்து இன்றுவரை ஒன்றேதான். அவன், தனது தேடலை… காதலை… கரைத்து குடித்து… சித்தம் தெளிந்த பிறகே  திரும்பி வருவேன் என்றுவிட்டான். 

இந்த வருடத்துடம் அவனின்… அவன் சொன்ன இந்த ஐந்தாண்டு முடிகிறது. எனவே… என் மகன் என்னை ஏமாற்ற மாட்டான் வந்துவிடுவான் என… நம்பி… 

அவனின் ரிசர்ச் சென்டருக்கு… கீர்த்தனாவின் பத்திரிக்கையுடன் ஒரு கடிதம் மட்டுமே வைத்து அனுப்பியுள்ளார் வெங்கட். சதாவின் தந்தை.    

யார் முகத்திலும் யாரும் விழிக்க முடியாத மெல்லிய சோகம்… மேலும் அதை தீர்பதற்கு இந்த திருமணம் வழி செய்யும் என்ற ஒரு பெரிய பெரிய நம்பிக்கை 

@%@%@%@%@%@%

இன்று.. மாலை, தான் கொஞ்சம் அதிகமாக பேசியதால்.. தன் அன்னையை சமாதானம் செய்ய… தானே தோசை உற்றிக் கொண்டிருந்தாள்… கன்யா. கார்த்தி உண்டு கொண்டிருந்தான்… அமைதியாக…

மைதிலியும் ஏதும் சொல்லவில்லை அமைதியாக கார்த்தி அருகில் அமர்ந்து கொண்டார். என்றாவது இப்படி தானே வேலை செய்வாள் கன்யா..

கார்த்தியின் அமைதியும் தன் அம்மாவின் சோர்ந்த முகமும் ஏதோ செய்ய கன்யாதான்… “என்ன கார்கி… இப்படியே இருக்க… விடு பார்த்துக்கலாம், நானே கவல படல… நீ ஏன் உம் ன்னு இருக்க….” என்றாள்… இன்னொரு தோசையை அவன் தட்டில் வைத்தபடி…

தன் அன்னையை பார்த்தான்… ஏதும் பதில் சொல்லாமல், அவருக்கு சங்கடம்… என்ன சொல்லுவது என தெரியவில்லை… எல்லாம் கை மீறிய செயலாகவே தெரிந்தது எனவே அமைதியாக இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!