Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Sari Paathi

Un Sari Paathi 3 2

கார்த்தி கன்யா இன்னும் இங்கு நிற்பத்கை பார்த்து “அப்படியெல்லாம் இல்லடா… பார்த்துக்கலாம்” என்றான். தானும் உண்டபடி..

எப்போதும் டிவி சத்தமாவது கேட்கும் இன்று அதுவும் சத்தமில்லாமல் இருக்க… அந்த மூன்று பேரிடமும் ஒருவித இறுக்கம். கன்யாவிற்கு பொருக்க முடியவில்லை… 

“அம்மா… ஏன் ம்மா… எல்லாம் சரியா போகும்மா” என்றாள் நீண்ட நாள் சென்று குரல் கெஞ்சியது தன் அன்னையிடம்.

மைதிலி “சரி சரி… நல்லதா நடந்தா சரி” என்றார் ஒரு பெருமூச்சுடன். 



Advertisement

பின் ஏதும் பேசாமல் அமைதியாக உண்டு உறங்க சென்றனர்.

வீடு இயல்பாக சென்றது… அதிகம் பேச்சுகள் இல்லை. கல்யாண வேலைகள் கீர்த்தி வீட்டில் பார்ப்பதால், இவர்கள் சற்று ப்ரீ.

ஆனால் வீட்டில் எல்லோருக்கும் ஏன்.. சதா வீட்டில் கூட அனைவருக்கும் ஒரே எண்ணமே “சதா வருவானா..” எனதான். இப்படியே ஒருமாதம் சென்ற நிலையில்… 

Advertisement

இன்று, கீர்த்தனா வீட்டிலிருந்து பத்திரிகை கொண்டு வந்திருந்தனர். இருவீட்டாரும் சேர்ந்து பத்திரிகை பிரிண்ட் செய்ததால் அதை தருவதற்காகவும், மற்றது பேச… 

Advertisement

எப்போது ஊருக்கு செல்வது… என்பன போன்ற பொதுவான தகவல்கள் பேசவும் வந்திருந்தனர் இன்று கார்த்தி வீட்டிற்கு.

அன்று சண்டே என்பதால் இலகுவாக இருக்க… அனுஷாவின் குடும்பம் வந்திருந்தது.

கன்யாவின் மாமனார் வீடும் வந்திருந்தனர். உள்ளே தடபுடலாக சமையல் நடந்து கொண்டிருந்தது. கன்யாவிற்கு வீட்டின் இறுக்கங்கள் தற்று தளர்வது போல் ஒரு எண்ணம்…

Advertisement

எப்போதும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு… எதற்காவோ யோசித்து யோசித்து பேசிக் கொண்டு…  அப்பாடா கன்யாவிற்கு பிடிக்கவேயில்லை இந்த நாட்கள்… எனவே இன்று சற்று முகம் தெளிந்து… இயல்பாக இருந்தாள்.

கன்யா அப்போதுதான் அனைவருக்கும் ஜூஸ் எடுத்து வந்து கொடுக்க… எல்லோரும் அமைதியாக எடுத்துக் கொண்டனர்.

வெங்கட் சதாவின் தந்தை, கார்த்திக்கிடம்  “நீ ஏதும் போன் பண்ணிய கார்த்தி, சதாக்கு“ என்றார்.

கார்த்தி “செய்தேன் மாமா… ஏதும் பதில் இல்லை… நீங்க பேசுங்க மாமா கல்யாணத்திற்கு வந்திடுவார்ல்ல.. அப்புறம் என்மேல வருத்தப்பட கூடாது” என்றான் கறாராக.

அவரின் தம்பி பெண்தான் கீர்த்தனா எனவே “என்ன தம்பி… உங்க கல்யாணத்த சாக்க சொல்லித்தான் அவன பாக்கனும்னு… இங்க நாங்க எவ்வளவு தவிக்கிறோம்னு உங்குக்கு தெரியாதா….

வருவான் தம்பி… எப்படியாவது வர வைச்சிடுறோம்… இப்போ கூட பத்திரிக்கை கூட லெட்டர் வைச்சு அவனோட ரிசர்ச் சென்டர்க்கு அனுப்பி இருக்குபா…” என்றார் ஒரு பெரு மூச்சுடன்.

அங்கு கிட்சனில் கல்யாணி, மைதிலியிடம் “வந்திடுவான் கண்டிப்பா வந்திடுவான்… அவனே இந்த வருஷத்தோட.. முடியுது வந்திடுவேன்னு சொல்லியிருக்கான், நீங்க நம்பிக்கையா இருங்க..

அன்னிக்கும் சொன்னேன், இப்பவும் சொல்றேன்… என் பையன் தங்கம்… என் மறுமகள நல்ல பார்த்துப்பான்…

ஏதோ நேரம்… அதான்…” என்றார். ஐந்து வருடமாக தெளியாத முகத்துடன்… அப்படியேயான குரல்… எப்போது தீருமோ இந்த நாட்கள் என அவர் மனம் நினைக்காத நாளில்லை.

ஏதோ செய்து… இப்போது நாங்கள் மட்டும் அல்லாது எங்களுடன் சேர்ந்து ஒரு பெண்ணின் நிலையும்… கேள்வியாக்கிவிட்டோமே என்ற எண்ணம்தான் அவரின் முக்கிய வேதனை… தீராத வேதனை… எனவே அது குரல் வழியே வந்தது.    

கன்யா உள்ளே வருவது தெரிந்ததும்… இருவரும் பேச்சை மாற்றினர். கன்யாவிற்கு இதெல்லாம் புரிந்தாலும் அமைதியாக தன் வேலையை செய்ய…

அந்த நேரம் கன்யாவின் செல்லுக்கு கீர்த்தி போனே செய்தால், ஆசையாக எடுத்து “ஹலோ.. கீர்த்தி… என்ன அங்க இருக்க முடியலையா… எங்க அண்ணன் வந்து தூக்கிட்டு வர சொல்லவா” என்றாள் சிரிப்புடன்.

கீர்த்தி “ஆமாம் பா எல்லோரும் என்னை மட்டும் விட்டுட்டு வந்துட்டாங்க… அதான் செம போர்… “ என்றாள் கூடவே “அம்மாவும் பெரியம்மாவும், ஏதாவது சொன்னாங்களா…” என்றாள்.

கன்யா “இல்லையே கீர்த்தி…. ஏன்” என்றாள்.   

அதற்குள் இவர்கள் பேசுவதை கேட்ட கல்யாணி, கன்யாவிடம் “ஆமாம் கன்யா, கீர்த்தனா… அடுத்த சண்டே ஜவுளி எடுக்க போலாமான்னு கேட்டா  நாங்கதான் சொல்ல மறந்திட்டோம்… உனக்கு அன்னிக்குதானே லீவ்” என்றார்.

கன்யாவின் வாய் தன்போல “போலாமே…” என்றது… கூடவே ஏதோ யோசனை..

அதற்குள் கீர்த்தனா “உ… உன் அ.. அண்ணன் “ என தட்டு தடுமாற.. சட்டென சிரித்தாள் கன்யா… “கண்டிப்பா வருவான்… அவன் என்ன உங்க அண்ணனா மாதிரியா… அவனுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்..” என இயல்பாக சொல்லி நிமிர்ந்தாள்.

அங்கே தன் மாமியார் வாஞ்சையுடன் பார்க்க, தன் அன்னை கோவமாக பார்க்க… போனில் கீர்த்தி “ஹேய்.. அப்படியெல்லாம் இல்ல..” என சொல்லிக் கொண்டிருக்க…

தான் பேசியது அப்போதுதான் புரிந்தது… கன்யாவிற்கு. இருந்தும் ஏதும் காட்டிக் கொள்ளாமல் “கண்டிப்பா வருவான்… நாமா போலாம்” என சிரித்தபடியே பேசிகொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.    

மைதிலிதான் கல்யாணியிடம் “நீங்க எதுவும்..” என நிறுத்த..

கல்யாணியே பேசினார் “அப்படில்லாம் இல்ல அண்ணி… ஏதோ நீங்கலா இருக்க இப்படி பொறுமையா இருக்கீங்க… வேறு யாராவதா இருந்தால்… ம்.. ” என்றார் தங்களின் மகனை நினைத்து பெருமூச்சு எழுந்தது அவருள்.     

அதன்பின் சதா பற்றி பேச்சை அனைவரும் தவிர்த்து மற்றது பேசி முடிவு செய்தனர். மதியம் உண்டு முடித்து கிளம்பினர் அனைவரும். கன்யா வீட்டில் அனுஷாவின் பையன் ரித்விக் இருக்க… வீடு கலகலப்பாக சென்றது.

கல்யாண வேலைகள் தொடங்கியது… முதலில் குலதொய்வம் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வந்தனர்… பத்திரிகை வைத்து வந்தனர்.

அனுஷாவும் செந்திலும்தான் பத்திரிகை வைத்து அழைக்க சென்றனர்…

இங்கு கார்த்தியின் குடும்பத்தார் புடவை எடுக்க சென்றனர். கீர்த்தி வீட்டிலிருந்து அனைவரும் வந்திருந்தனர். கீர்த்தியின் அண்ணி கயல்விழி, அண்ணன் ராம்சரண் அவர்களின் பெற்றோர்… கூடவே கல்யாணியும் வந்திருந்தார்.

சற்று பூசினார் போன்று உடல்வாகு கீர்த்திக்கு… கொஞ்சி கொஞ்சி பேசும் குமரியவள்… இதில் கல்யாண பெண் அழகும் சேர்ந்து கொள்ள… இன்னும் அழகாக தெரிந்தாள் கார்த்தியின் கண்களுக்கு. 

இப்போது கார்த்தி இயல்பாக பேசினான் கீர்த்தியிடம்… இன்றுதான் அதிக நேரம் பேசினர் இருவரும்… பேசியபடியே புடவையும் பார்த்துக் கொண்டிருந்தனர். கன்யா, கயல்விழியுடன்… நேரம் செலவழித்தாள்… 

ஆனாலும், மனது ஏனோ முகம் தெரியாத தன்னவனை தேடியது… சற்று கவனமாக தேடியும் அவனின் முகம் கண்ணில் வரவில்லை… அவளின் சின்ன உலகில் அவன் எங்கோ ஓர் மூலையிதான் எப்போதும்… இன்று எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை…

கயலும் அவ்வபோது தன் கணவனின் பிடித்தம் கேட்டு புடவை பார்க்க… கன்யாவிற்கு ஏதோ போல் ஆனது.

இப்போதெல்லாம் அவன் புகைபடத்தை கூட பார்ப்பதில்லை அவள். அதனால் எப்படி தேடியும் சதா முகம் வரவில்லை, அவளின் மனகண்ணில். பெருமூச்சு எழுந்தது அவளுள்.

அங்கே அவளின் சிந்தனை களைய… தன் அண்ணனும் கீர்த்தியும் ஏதோ புடவையை பார்த்து பேசியபடி நிற்பது தெரிந்தது.

சட்டென… திரும்பி நின்றாள் கன்யா… அவள் திரும்பிய வேகத்தில் அவளின் தோளில்… பின்னல் வந்து விழ… கண்களில் நீ நிறைந்தது. ஏனோ இந்த இடத்தில் தான் அன்னியமாக உணர்ந்தாள்.

“கயல்… காபி குடிக்க போலாமா” என்றாள் தெளிவில்லாமல். அங்கே நிற்க முடியாதவளாக. எதிலிருந்தோ தப்பிக்கும் எண்ணம் வந்தது.

கயல், ராம்… மைதிலி என அனைவரும் கிளம்பி ஏதோ ஜூஸ் குடித்து வந்தனர் மணமக்களுக்கு தனிமை கொடுத்து. பின் பில் போட்டு கிளம்ப… கார்த்தி பைக்கில்… கீர்த்தியை விட சென்றான். எனவே தாயும் மகளுமாக வீடு வந்தனர்.

இப்படியாக நாட்கள் நகர தொடங்கியது.

திருமணத்திற்கு ஒருவாரம் இருக்கும் நிலையில்… சதாவிடமிருந்து ஒரு வாய்ஸ் மெசேஜ்… வந்தது வெங்கட்டுக்கு… அதில் அவர் அனுப்பிய கடிதத்திற்கு, பதில் இருந்தது

சாந்தமான குரலில்… கத்தாமல் கோவபடாமல் மெல்லிய குரலில் ஏதோ அங்கும் இங்கும் நடந்தபடி பேசியிருப்பான் போல, இயல்பாக இருந்தது குரல் “ப்பா… ஐ டோன்ட் ஹேவ் எனி கநெக்க்ஷன் வித் இன் திஸ் மேரேஜ்… 

இது என்னுடைய விருப்பம் கேட்டும் நடக்கவில்லை… 

அப்போ என்னை மட்டும் எப்படி வர சொல்றீங்க… “ என கூறி லேசாக சிரித்தான், சத்தம் இங்கு கேட்டது.

பின் “என்ன… ப்ளக் மெயிலா… “ என்றான்… மீண்டும் சின்ன சிரிப்பு…

இப்போது தொடர்ந்தான் “எனக்கு அன்னிக்கு மறுநாள்தான் ப்ளைட்… அதனால்.. ப்ளீஸ் நான் சென்னை வர ஒன் வீக் ஆகும்… 

வரேன்ப்பா… ப்ளீஸ்… டோன்ட் டிஸ்டர்ப் மீ… “ என்றான் 

பின்.. “ம்மா… என்ன பண்ற… உடம்பு எப்படி இருக்கு… சம்மு என்ன பண்றான்… படிக்கிறானா வேலைக்கு போறானா” என்றான்.

ப்பா… கேட்டிருந்த கல்யாணிக்கு ஏதேதோ எண்ணம்.. கண்ணில் நீர் வர ம்… ம்… கொட்டி அமர்ந்திருந்தார் பேச்சே வரவில்லை.

ஆனால் இது வாய் மேச்சேஜ்தானே அதுவே முடிந்தது…  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!