Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Sari Paathi

Un Sari Paathi 8

அத்தியாயம்       8

அங்கு கீழே, கன்யாவை மைதிலி உறுத்த விழித்தபடி ஏதோ          கேள்வி கேட்டு கொண்டிருக்க… கல்யாணி “விடுங்க அண்ணி,           சின்ன பிள்ளைதானே போக போக சரியாகிடும்” என்றார்..

கன்யா, சின்னபிள்ளை எல்லாம் இல்லை… தெரிந்தேதான் அப்படி    செய்தாள். அது ஒரு கோவம்… எப்படி என்னை விட்டு செல்லலாம்      என்ற கோவம்… பேசவில்லை, பார்க்கவில்லை.. ஏன், இருக்கிறேனா..      கூட கேட்கவில்லையே என்ற கோவம்… எப்போது எப்படி            காட்டுவது என தெரியாமல் இப்போது இப்படி வெளிப்பட்டதோ…



Advertisement

அது, அந்த அமைதி… ஒன்றுமே பேசாமல் வந்து பக்கத்தில் நிற்கும் கணவனை… என்ன செய்வது என தெரியாத நிலையில் சதாவை வெறுப்பேற்றவும்… செய்தாள்.

ஆனால் இப்போது இது தன் அன்னையிடம் வந்து நின்றது.

கல்யாணி சொன்னதை மைதிலி கேட்கவேயில்லை, ஏதோ அவள்       மேல் அப்பாடியொரு கோவம், “இப்படியா, ஒரு பொன்னு… பத்து  நிமிஷத்துக்கு முன்னாடி போட்ட தாலியை கலட்டி வைச்சிட்டு        வருவ” என திட்டிக் கொண்டிருந்தார்…

Advertisement

கீர்த்தியின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்தான் இருந்தனர். ஆனாலும், யாரும் ஏதும் சொல்லவில்லை, இவளின் கழுத்தை        பார்த்து, தன் அன்னை கண்டுபிடிக்கவும் இவளுக்கு அய்யோ      என்றானது…

Advertisement

சதா அப்போதுதான் உடைமாற்றி வெளியே வந்து, மாடியில்             அந்த கைப்பிடி போன்ற வராண்டாவில் நின்று நடப்பை கவனித்து கொண்டிருந்தான்..

சதாவிற்கு மனம் வலிக்கவே செய்தது அவளது செய்கையில்…        அதனை அவன், அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை. இப்போது         கீழே நடப்பவற்றை சும்மாவே வேடிக்கை பார்த்து நின்றிருந்தான்..         ஒரு கட்டத்தில் கன்யா “ம்மா…” என மிரட்ட தொடங்க..

மைதிலி கிளம்பினார் எல்லாவற்றியும் எடுத்துக் கொண்டு… “என்        பெண் இப்படி பொறுப்பில்லாதவள் இல்லை… அப்படிதான் என்றால்     அவள், என் பெண் இல்லை” என்ற வார்த்தையை சொல்லி,      விடுவிடுவென  கல்யாணியிடம் மட்டும் சொல்லி கிளம்ப அந்த       இடமே இப்போது ரணகளமானது…

Advertisement

எல்லோரும் பதறி நிற்க… மேலிருந்து சதா “அத்த” என்றான்.         இதுவரை பேசியதே இல்லை அவரிடம்… இப்போதுதான் முதல்      முதலில் அழைக்கிறான். நின்றே விட்டார் மைதிலி.

சதா, இறங்கி வந்தவன் “விடுங்கத்த… பிடிக்கலன்னா என்ன            பண்ண முடியும்…” என்றான். ஏதோ இவனிற்குதான் எல்லாம் பிடித்திருக்கிறது, அவளிற்குதான் எதுவுமே பிடிக்கவில்லை             எனும் விதமாக சொல்ல..

கல்யாணியே சற்று அதிர்ந்தார் அவனின் பேச்சில்.  ‘இவன்          சமாதனம் செய்கிறானா… இல்லை தூண்டிவிடுகிரானா’ என,           வெங்கட் நினைக்க.

மைதிலிக்கு, ‘இந்த பேச்சு வர கூடாது எனத்தானே நினைத்தேன்          பார்’ எனும் விதமாக… தன் மகளை எரிப்பது போல் ஒரு பார்வை    பார்த்தார்.

சதா “விடுங்கத்த அவங்களுக்கு மணியாச்சு கிளம்பட்டும் நீங்க,        இருங்க… அப்புறம் போகலாம்” என்றான் மெதுவான குரலில்       அழுத்தமாக சொன்னான்.

கல்யாணியும், மைதிலியிடம் சென்று “விடுங்க அண்ணி, அவனே        ஏதும் சொல்லல, இதெல்லாம் சின்ன புள்ளைங்க விஷயம் நீங்க          ஏன்… பெருசு படுத்துறீங்க.. வாங்க” என அழைத்து சென்றார்.

கன்யா, சதாவை வெறித்தபடியே நின்றிருந்தாள்… சரியான அடி…      ஆனால் முதுகில் என நினைத்தவள் தன் தண்ணீர் பாட்டிலில்        தண்ணீர் நிரப்பிக் கொள்ள சென்றாள்.

கார்த்திக்கும், கீர்த்திக்குமே இந்த சதாவின் வார்த்தைகள் சங்கடத்தையே கொடுத்து.. கார்த்தியானால் தலையில் கை வைக்காத குறையாக அமர்ந்திருந்தான்.

வெங்கட், கார்த்தியிடம் எப்போதும் போல் ஏதோ சமாதனம் சொல்ல       வர கார்த்தி “மாமா… ப்ளீஸ்” என்றவன் தன் தங்கையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சதா “கிளம்பு கன்யா… நான் டிராப் பண்றேன்… எனக்கு ரூட் மட்டும்    சொல்லு” என்றான் இயல்பாய்… இப்போது பேசிய வன்மம் இல்லாமல்.   இதில் எது அவன் தெரியவில்லை யாருக்கும், அவன் அன்னை உற்பட யாருக்கும் தெரியவில்லை…

சதா…

அவனிர்கான முக்கியத்துவம் என்பதே வந்த நாட்களில் அவன் உணரவில்லை.. எப்போதும் எல்லோர் வாயிலும் வருவது… கன்யா,    அண்ணி, மருமக… என்ற முறை வைத்த உறவாக கன்யாவை          பற்றிய பேச்சு.

அவன் இதுவரை பணிபுரிந்த இடங்களில் அவன்தான் ராஜா… மிக        வயது முதிர்ந்தவர்கள் கூட அவனிடம் ஒரு ஒப்பினியன் கேட்பதுண்டு. அப்படி அவன் துறையில் அவன் வல்லவன்… இந்த மூன்று வருடங்களில்.

இப்போது இங்கு இந்த குடும்பத்தில்… நான் கொடுத்த காசில்தான் வீடு கட்டியிருக்கின்றனர்.. இந்த கார், அதுவும் நான் வாங்கியது.. இதோ    இப்போது கழட்டி வைத்துவிட்டு வந்தாலே… அதுவும் நான்     வாங்கித்தந்தது…

ஆனால், எல்லா இடத்திலும் அவள் பெயர் மட்டுமே… இதில் நான்        ஏன் வரவில்லை… மிக நீண்ட வருடங்கள்… கடந்து வந்திருக்கிறேன்…   எனவே எனக்கான இடம் இல்லை இப்போது எல்லாம் கன்யா மயம்…      என ஒரு வேகம்… கோவம்… பயம்…  என எல்லாம் வந்தது அவனுள்.

மேலும், முதலில் சதாவிற்கு.. இங்கு வரும் வரையில் கூட கன்யா      என்ற மனைவியின் எண்ணம் இல்லை… சுத்தமாக இல்லை…       திருமணம் செய்துதான் வந்தோம் என்ற எண்ணமே இல்லாத போது     எப்படி இருக்கும் மனைவியின் எண்ணம்.

ஆனால், ஊருக்கு வந்துடன் எல்லாம் மாறியது, சதா கன்யாவை       பார்த்த போது ஒரு நிர்மலமானம் மனதுடன்தான் அவளை பார்த்தான்.   இவள் யாரென தெரிந்ததும், ஏதோ உணர முடிந்தது அவனால்…

“கன்யா..” என தனக்குள் ஒருமுறை உச்சரிக்க முயன்றான்…          அவளின் பெயரை. மென்மையாக அவள் நடந்து வந்த போது… எதிர்பார்க்கவேயில்லை அவன்.. தன்னால் ஒரு பெண்ணை             உணர முடியும் என அப்போதுதான் உணர்ந்தான்.

அவனை விட சற்று மட்டுபட்ட நிறம்தான் ஆனால், நல்ல         கலையான முகம்… அவனை ஈர்க்கவே செய்தது. மனைவி         திருமணம் குறித்து கனவுகளே இல்லாதவன்.. கொஞ்ச            கொஞ்சமாக “என்னவள்” என்ற எண்ணம் எழாமல் இல்லை…

சண்முகம் அண்ணி என அழைத்ததில் திரும்பிய அவள் பாவம்      இயல்பாய் ஒரு புன்னகையை தாங்கி நிற்க… சதா, அவள் வசம்        செல்ல, சென்று.. இருந்தான்.

ஆம் எனக்காக பார்த்த பெண் அல்ல… ஏற்கனவே உறவாகிய,       என்னவள் என்ற எண்ணத்தில்தான் இருந்தான்.. எனவே ஒரு         ஆராயும் பார்வையுடன் ஒரு ஹலோவும் சொன்னாந்தான்.

ஆனால், தயக்கம்.. எத்தனை வருடங்களாக இல்லாத உரிமையை        எப்படி உடனே அவளிடம் காட்டவது என்ற பயம். எனவே, எல்லாம்    சேர்ந்து சட்டென அவனை பேசவிடவில்லை அவ்வளவுதான்.

ஆனால், கன்யா காரெடுத்து தனியாக சென்றது… மயக்கமாகி          திரும்ப   வந்தது. எல்லாம் அவன் மனதில் எதையோ பதிய        வைத்தது.. பாதிப்பை ஏற்படுத்தியதோ…

அது என்ன உணர்வை கொடுத்ததோ… “என்னை பிடிக்கவில்லையோ..”    என்ற எண்ணத்தை தான், இந்த நட்ட நடு ஹாலில் அவன் பேசிய வார்த்தைகளைதான் இத்தனை நாள் மனதில் வைத்திருந்தான். அதை பேசியும் விட்டான்.

ஆனால், கண்ணில் பார்க்காமல் காதல் கொண்டவள் இப்போதும் அவனிடமிருந்து தூரவே நின்றாள். எனவே அவள் விளையாட்டாய்… உரிமையாய்… ஊடலாய், கோவமாய் செய்தது எல்லாம் இப்போது    சதாவின் மனதில் சுழன்று கொண்டிருக்கிறது.

எப்போதும் பெரியவர்கள் சொல்வதுண்டு… ஆத்திரகாரனுக்கு… புத்தி..     சற்று மட்டுதான் என.. கன்யாவின் ஆத்திரம்… அவளின் கணவனிடம் வெறுப்பை தந்தது.

எனவே சதா, பேசி முடித்து உணவு உண்ண சென்று அமர்ந்தான்.     நகத்தை கூட ஒரு மில்லிமீட்டர் அதிகம் வளர விடாதவன்… தள்ளியிருக்கவே எண்ணினான்… ஆனால், எப்படியோ வந்துவிட்டது     அவன் வாயிலிருந்து வார்த்தைகள்.

அழகான நீண்ட சுத்தமான விரல்களால்… அதே கம்பீரமாக, நான்   சொன்னதில் தவறு இல்லை என்ற அதே கம்பீரத்துடன் பொங்கலை     எடுத்து வாயில் போட்டபடி… “சாப்பிடு கன்யா, போலாம்” என்றான் அலட்டாமல்.

இங்கே தோற்றது யார் என தெரியவில்லை… மைதிலிக்கு,     உண்மையாகவே அவசரப்பட்டு திருமணம் முடித்துவிட்டோமே   என்றிருந்தது.

கார்த்தி இதை எப்படி எடுப்பது என்பதே தெரியவில்லை.          அமைதியாக அமர்ந்து கொண்டான். முகம் முழுவதும் சாந்தம்…        எப்படி வாயில் மட்டும் அமிலம் எனதான் பார்த்திருந்தனர்       அனைவரும்.

கன்யாவிற்கு ஏதோ சரியாகிவிடும் அவன் இப்போது கூட              பெப்பி என்றானே, ஏதோ விளையாடுகிறான். என்னிடம் பேசி               சரி செய்துவிடுவான் என நினைத்திருந்தாள்… போன ஷணம்,            வரை அப்படிதான் நினைத்திருந்தாள்..

இப்போது எல்லோர் எதிரிலும் தன்னை பற்றி அப்படி சொல்லவும்,       என்ன செய்வது என புரியவில்லை… அவளுக்கு. இப்போது போய்    விளக்கவா முடியும், இங்கே பார் நான் வேறு தாலி கழுத்தோடு போட்டிருக்கிறேன், நீ திரும்பி பார்க்காமா கட்டிட்டு போனியே    அப்போலிருந்து போட்டிருக்கிறேன் என விளக்கவா முடியும்…. அது   எவ்வளவு அசிங்கம்…

மேலும், எதுவாக இருந்தாலும் அங்கேயே பேசியிருக்க          வேண்டாமா… இப்போது இங்கே வந்து…. என தகிக்க தொடங்கியது… இப்போதைக்கு அவனின் பேச்சில்… இமைக்கவிருந்த கண்களை       நன்றாக விரித்து வைத்துக் கொண்டாள்… கண்ணீர் விழுந்து விடாமல்.

விழி விரித்தபடியே தனக்கொரு தட்டெடுத்து அமர்ந்து கொண்டாள்…    தட்டில் யாரோ உணவு இட்டனர்.. வேறு யார் சதாவின் அக்கா   யசோதாதான்… உணவு வைத்தாள்..

உண்ணவில்லை, விழுங்கினாள்… கன்யா. விக்கியது… தண்ணீர்        குடித்து விழுங்கினாள். தானே எழுந்து சென்றுவிட்டாள்…

யசோதாக்கு பார்க்கவே பாவமாக இருந்தது. காத்திருந்த பெண்ணுக்கு இப்படியொரு பேச்சா எனதான் தோன்றியது. தன் தம்பியிடம் ஏதும் பேசவில்லை. அவன் தன்னை மதித்து பேசவேமாட்டானே.. அவன் திருமணத்தில் தொடங்கிய பகை. எனவே அமைதியாக இருந்தார்    வேடிக்கை பார்த்தபடி.

சண்முகம் இப்போது எது சொன்னாலும் தவறாகிவிடும் என அவனும் வேடிக்கை பார்த்தான். மற்ற எல்லோரும் அப்படியே.

பள்ளி வயதில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கு சிரிப்போமே    அப்படியொரு சிரிப்புடன் கல்யாணியிடம் மட்டும் தலையசைத்து       விட்டு, வெளியே சென்றுவிட்டாள் கன்யா.

கார்த்தி அவசரமாக ஓடிவந்தான்.. “நில்லு கனிம்மா.. நான் டிராப்     பண்றேன்” என்றான்.

கன்யா “கூட எங்கையாவது வந்த… எதிலாவது விழுந்து செத்துடுவேன்” என்றாள். பற்களுக்கிடையே கடித்த வார்த்தைகளாக..

ஆனால், பின்னாடியே சதா வந்தான்… “கன்யா… இரு” என்றான் காரை ரிவேர்ஸ் பார்த்து வெளியே நிறுத்தினான்… எல்லோரும் பார்த்திருக்க கன்யாவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை… அவனுடன் காரில்     பயணம் செய்தாள்.

பார்த்திருந்த கார்த்திக்கு என்னவோ போல் ஆனது. ஆனால் ஏதோ  நம்பிக்கை இப்போதும்… எதனால் என தெரியவில்லை…

கார் ஸ்டார் ஆனவுடன் பாடியது….

“இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ….

இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ….

ஆசை தூண்டிலில் மாட்டிக் கொண்டு…

இது தத்தளித்து துடிக்கிறதே…..

காயம் யாவையும் தேற்றிக் கொண்டு..

இது மறுபடியும் நினைக்கிறதே..

உள்ளுக்குள்ளே துடிக்கும் சிறு இதயம்

எத்தனையோ கடலை இது விழுங்கும்….

                        (இதயமா இதயம்….)

வேண்டும்… வேண்டும் என கேட்கையிலே…

வேண்டாம் வேண்டாம் என சொல்லுமே..

வேண்டாம் வேண்டாம் என விலகி நின்றாள்…

வேண்டும் வேண்டும் என துள்ளுமே…

இது தகித்துடும் நெருப்பா…

இல்லை குளிர்ந்திடும் நீரா..

இது பனிஎரி மலையா..

இதை அறிந்தோர் யாருமில்லை…

உள்ளத்திலே அறையுண்டு வாசலில்லை…

உள்ளே வந்திடும் நினைவோ திரும்பவில்லை…” என அவளை       போலவே கதறிக் கொண்டிருந்தது… சற்று நேரம் பேச்சே இல்லை   இருவரும்.

கன்யா வாயை திறக்கவில்லை, சதா “எப்படி போகணும் “ என்றான்.

கன்யா கூகுள் பாப்பாவை ஆன் செய்து அவனிடம் நீட்ட.. சதா “நான்     எப்படி புடிக்கிறது… வை.. ரூட் மட்டும் சொல்லு” என்றான்.

கன்யா தன்னை ஆசுவாசபடுத்தினால் ப்பா… படுத்தாரானே… எண்ணியபடி… “நேர போங்க” என்றாள்.

“எங்க வேலை பார்க்கிற” என்றான்.

இவள் பேங்க் பெயரை சொல்லவும்… அமைதியானவன் “எத்தனை    வருடம்” என்றான் மீண்டும்…

கன்யா அதற்கும் பதில் சொல்ல… மேலும் இன்னும் ஏதோ கேள்வி அவனிடமிருந்த வர, கன்யா ஓய்ந்தே போனாள். இவன் யார்! ஏன்      இப்படி இரட்டை வேஷம் என புரிவில்லை அவளிற்கு… ஏதேதோ கனவுகளுடந்தான் இருந்தாள், இப்போது எல்லாம் விடுபட்ட நிலை..

மளுக்கென கண்ணீர் வந்தது அவளிடம். அப்படியே திரும்பினால்,   அவனிடம் “என்ன பிரச்சனை இப்போ உங்களுக்கு” என்றாள்.

சதா அமைதியாகிவிட்டான் மேலும் அவளின் கண்ணீர் ஏதோ         செய்தது அவனை… “ஹேய்… சும்மா தான் கேட்டேன்… நீ தைரியமான பொண்ணுன்னு சொன்னாங்க… என்ன இப்படி அழுகிற” என்றான்.

கன்யா கண்களை துடைத்தபடி… “மணியாச்சு.. சீக்கிரம் போங்க”       என்றாள், வேறு ஏதும் பேசாமல். அதன்பின் சதாவும் ஏதும் பேசவில்லை, வண்டி விரைந்தது அவளின் இடம் நோக்கி.

இறக்கிவிட்டவன்… “எத்தனை மணிக்கு வர” என்றான்.

கன்யா “இல்ல நானே வந்திடுவேன்… நீங்க அலைய வேண்டாம்”     என்றாள். இறங்கியபடி அவனை பாராமல் சொன்னாள்.

ஆனால், சதாக்கு அதில் ஏதோ உறுத்தியது, அவள் மறுக்க மறுக்க…     இவன் இன்னும் இறைஞ்சினான்.. “பரவாயில்ல நான் வரேன்… எப்போ வரட்டும்” என்றான்.

கன்யா “ரொம்ப தூரங்க… ஈவ்னிங் ட்ராபிக் நிறைய இருக்கும், நான் மெட்ரோல வந்துடுறேன்” என்றாள், குரலில் வேண்டாமே… இன்னும்    நேரில் பார்த்து, தனியே இருந்தால் மீண்டும் சண்டை வந்து… என்ற எண்ணத்தில் சொன்னாள்…

சதா “இன்னிக்கு ஒருநாள் மட்டும்… நாளைக்கு நீ மெட்ரோலதான்,        நீயே கேட்டாலும் நான் வரமாட்டேன்… சொல்லு ஒன்டே தானே…          சரி ஆறுமணிக்கு வரேன்” என்றான் அவனே யோசித்து.

கன்யா மனதேயில்லாமல் சரி என்றாள்.

இன்னும் தொடங்கவேயில்லாமல்… இருவரும் பெர்பெக்ட் கப்புளாக… ஒன்றுமே நடவாததுபோல் பேச தொடங்கினர்…

வீடு வந்த சதாக்கு… பெரியவர்களின் முகம் அதிருப்தியை காட்ட…      அங்கு அமர பிடிக்காதவனாக… மேலே வந்துவிட்டான்…

எல்லோரும் கிளம்பியிருந்தனர். யாருக்கும் திருப்தியே இல்லை…   பெண்ணை கொடுத்து மாட்டிக் கொண்ட நிலைதான் கன்யா வீட்டிற்கு. அதைவிட வேகத் தம்பதிகளின் நிலை மோசம்… பதில் பேசவே முடியவில்லை.. கார்த்தியின் முகத்தை பார்க்கவே முடியவில்லை   அவரால். ஒன்றும் பேசி தங்களை தாங்களே காயபடுத்திக் கொள்ளாமல் கிளம்பினர்.

சதா, அடுத்த இரண்டு மணிநேரமும் அவனை… வீடியோ கால்ஸ் இழுத்துக்கொள்ள… சாட்டிங்கு முடித்துதான் கீழே வந்தான்.       சண்முகமும் ஆபீஸ் சென்றிருந்தான்.

தன் தந்தையிடம் சதா “ப்பா… இங்க யாரவது எலக்ட்ரிஷன் இருந்தா,      வர சொல்லுங்க… கொஞ்சம் வேலையிருக்கு..” என்றான்

அவரும் “இப்போ எதுக்கப்பா… “ என்றார். இவன் ஏதாவது செய்து      வைக்க போகிறான் என்ற எண்ணத்தில்.

கல்யாணி “இப்போ என்னடா..” என்றார் சலித்தபடியே.

சதா “வேணும்… அவ்வளவு தான்” என்றான் பிறகு ஒன்றும் சொல்வதற்கில்லை என எண்ணி ஏதும் சொல்லாது வரவைத்தார்  ஆட்களை…

அடுத்த இரண்டு மணி நேரத்தில்… அவன் அறையில் இருந்த… அந்த       புக் கபோர்ர்டுக்கும்… கட்டிலுக்கும் இடையில் ஸ்கீரின்… வந்தது.

அவளுக்கென ஒரு ட்ஸ்சிங் டேபிள், ஒரு கபோர்ட் எல்லாம் வந்தது. இப்போது அவனின் அறை… குடும்பஸ்தனுக்கான எல்லா      அம்சங்களையும் கொண்டது.

பிறகுதான் உணவே உண்டான் சதாசிவம்.. காலையில் பேசியது      எல்லாம் அவன் நினைவிலேயே இல்லை… அவளின் அந்த தாலியை    எடுத்து பத்திரபடுத்தினான்.

இப்போது அவன் வருகிறேன் என்று சொன்ன நேரத்திற்கு         முன்னேயே சென்றான் அவளின் அலுவலகத்திற்கு… அங்கு காரில் அமர்ந்தபடியே காத்திருக்க தொடங்கினான் எப்போது மணி          ஆறாகும் என…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!