Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Sari Paathi

Un Sari Paathi 14

அத்தியாயம்       14

வீட்டினுள் வரும்போதே யாரையும் காணம் ஹாலில்… தன்        பெற்றோரின் அறையை பார்க்க… லேசாக சாற்றி இருந்தது.. சதா   “தூங்கறாங்க போல” என்றான் கன்யாவிடம்…

அவளும் “ம்..” என்றவள் தண்ணீர் எடுக்க… கிட்சேன் சென்றாள்.



Advertisement

அவளுடனேயே… சதாவும் சென்றான்… “பால் வெளிய இருக்கா”      என்றான்.

தன் பின்னால் கிட்சேன் வருபவனை அதிசியமாக பார்த்தாள் கன்யா.      சதா “காபி வேணும் போல இருக்கு” என்றான். இப்போது இன்னும்    பார்த்தாள்.. இப்படி இவன் கேட்பதை, கூப்பிட்டால் கூட சாப்பிட வரமாட்டான்.. இப்போ, அதுவும் காபி வேண்டுமாம் என பார்த்தாள்..

கன்யா “நான் போடுறேன்..” என சொல்லி பாலை வெளியே எடுத்து   பாத்திரம் எடுக்க…

Advertisement

“ஹேய்… இரு இரு… நீயும் டையடா இருக்க… நா.. நான் போடறேன்” என்றவன் பின்னாலேயே நின்றான், அதாவது இவளிடமிருந்து       இரண்டடி தள்ளி நின்றான் அவ்வளவுதான்.

Advertisement

கன்யா முறைத்தபடியே “கொஞ்சம் தள்ளிதான் நில்லுங்களேன்”        என்றாள் மெல்லிய குரலில். அவளுக்கு, அவனின் அருகாமை        அவளை ஏதேதோ செய்ய, புதிதாய் ஒட்டுகிரானோ என தோன்ற தொடங்கியது.

சதாவும் அப்படியேதான் பின்னாலே வந்தான்… அவன் “டிக்காஷன்    இருக்கா… சுகர் எங்க இருக்கு” என வேண்டுமென்ற நச்ச       தொடங்கினான்.

கன்யாவிற்கு ஐயோ என்ன குரல் இது, என்ன உடல் மொழியிது.. படுத்தரானே என்றெண்ணியபடி “நான்தானே இத்தனை நாள் போட்டேன்… போங்க, அங்க போய் உட்காருங்க நான் பார்த்துக்கிறேன்” என்றாள்  பொறுமையான குரலில். ஆனால் அவளின் குரலி சொன்னதோ       அவளின் பயத்தை.

Advertisement

சதா “ம்.. கூம்… “ என்றவன் அவளின் அருகில் வந்து நின்றான்        இன்னும் ஒட்டிக் கொண்டு உரசியபடியே… தேடுவது போல் நின்றான்.  கன்யா தடுமாறி “எ… என்ன..” என்றாள் குரலே வரவில்லை.

சதா அமைதியான குரலில் “ம்… என்ன… இன்னும் சத்தமா சொல்லு”  என்றான் இருபுறமும் தனது ஷார்ட்ஸில் கை விட்டபடி… மூச்சே  வரவில்லை கன்யாவிற்கு வெறும் காத்துதாங்க வருது நிலை      அவளிற்கு.

சதா “ஹேய்.. பால் பொங்குது பார்” என்றான் பட்டென திரும்பி       அடுப்பை அனைத்தாள். சதா நகரவில்லை. கன்யா “கொஞ்சம்          தள்ளி” என சொல்ல.. தொடங்க

சதா பட படவென கப் எடுத்து “நான் போடறேன் “ என்றவன்           அவள் கை வளைவில் தன் கைகளை விட்டுக் கொண்டான்…

கன்யா, பட்டென கைகளை அவன் வளைவில் இருந்து எடுக்க…      அவளின் கையை இழுத்து தனது முழங்கைக்கும், நெஞ்சுக்கும்        நடுவில் வைத்து இறுக்கி கொண்டான்.. இப்போது கன்யாவினால்          நகர முடியவில்லை…

இப்போது மெல்ல ஒவ்வென்றாக பொறுமையாக எடுத்து இரண்டு         காபி கலந்தான்.. இன்னும் கையை விடவில்லை.. அப்படியே டைனிங்   ஹால் வரை கூட்டி வந்த பிறகே தனியாக அமர்ந்தான்.

அப்பாடா என்றானது அவளிற்கு. அவளை கண்களால் பார்த்தபடி,       இவன் பருக, கன்யா என்ன செய்வது என தெரியாது அமர்ந்திருந்தாள்… எழவும் முடியாவில்லை காபி குடிக்கவும் முடியவில்லை. என்ன     நடந்தது.. என உணர்கிற அவளால்… உள்வாங்க முடியாமல்..     தடுமாறினாள்.

ஆனால் சதா அவ்வளவு அமைதியாக இருந்தான். காபி குடித்து       முடிந்து இவன் வேண்டுமென்றே அவளை வேடிக்கை பார்க்க… ஒரு   வீம்புடன் தானும் அவனை பாராமல் காபியை பருக தொடங்கினாள்.

ஏனோ தொண்டை சின்னதாக இருப்பதாக தோன்றியது… எவ்வளவு   குடித்தும் தீரவேயில்லை அந்த குவளையிலுள்ள குளம்பி. முடியாமல்     கீழே வைத்தவளின் அரை டம்பளர் காபியை, சதா சத்தமில்லாமல் விழுங்கிதான் எழுந்தான்..

நிமிராமல், செல்லும் அவனை பாராமல், அமர்ந்திருந்தாள் கன்யா.      கன்யா “ஐயோ சும்மா இருந்திருக்கலாமோ… யாரு பேசுனா என்ன, பேசலைன்னா.. என்ன, ச்சு… “ என புலம்பியபடி அமர்ந்திருந்தாள்.

ஆனால், உள்ளுக்குள் இதமாக இருந்தது. என் அருகாமையை விரும்புகிறானோ, என்னை பிடிக்குமோ… என் அமைதி இவனை   பாதிக்குமோ என சின்ன சந்தோஷம் வந்தது அவள் முகத்தில்…     அப்படியே அமர்ந்திருந்தாள் அவனை மூலையில் நிரப்பி…

சற்று நேரம் சென்றுதான் கல்யாணி எழுந்து வந்தார்… “எப்போம்மா…     வந்த” என்றார்.

கன்யா இப்போதுதான் சதாவின் நினைவிலிருந்து வெளியே வந்தாள்  “ஹான்… அத்த, அப்பயே  வந்துட்டோம்” என்றாள்.

கல்யாணி “கொஞ்ச நேரம் படேம்மா… எப்போதும்தான் ஆபிஸ்… இன்னிக்காவது கொஞ்சம் ரெஸ்ட் எடு…” என்றார்.

கன்யா சிரித்தபடி “பரவாயில்ல த்த… உங்களுக்கு குடிக்க தரவா”      என்றபடி எழுந்தாள். அதன்பின் இருவரும் பேசியபடியே மெல்ல      வளைய வந்தனர், நேரமும் சென்றது.

சதா, அதன்பின் கன்யா உண்ண அழைத்த உடன்.. தானே வந்தான்.   அதுவரை அவனிற்கு கால்ஸ் இருந்தது. அங்கு வெங்கட், சண்முகம் இருக்கவும்.. இவனும் அமர்ந்து கொண்டான். ஏதோ யோசனை ஓடியது போல, எதுவும் பேசாமல் உண்டனர்.

சதா மெல்ல அமைத்தியான குரலில் “எப்போ வந்த சம்மு” என்றான்.

“ஏன் ண்ணா, ஒன் ஹெர் ஆச்சு, ஏன் ஏதாவது வேணுமா” என்றான்.  இப்போது கன்யாவை ஆராய்ச்சியாய் பார்த்தான் சதா. ஏனோ கன்யா     அவன் முகத்தை பார்க்கவில்லை, கிட்ட தட்ட தலையை கவிழ்ந்து   கொண்டு அனைவருக்கும் பரிமாறினாள்.

சதா “இல்ல கொஞ்சம் மேல வரியா… அக்கௌன்ட்ஸ் டிடையில்ஸ் சொன்னார் ஆடிட்டர், கொஞ்சம் அத பாலோ செய்து கொடேன்..        எனக்கு ஒரு முக்கிய வேலையிருக்கு, இந்த வாரத்தில் முடிக்க   சொல்றாறு..” என தொடர்ந்து அவர்களின் பேச்சு சென்றது.

சதாவின் டேக்ஸ்… ப்ரோப்லம்.. அதை இன்னும் சரி செய்யவில்லை       சதா அவனுக்கு கணக்கு வழக்குகளில் அக்கறை வரவில்லை.     சம்பாதித்தது அப்படியே அக்கௌண்டில் இருக்கிறது.

அதனை பராப்பர்டியாகவோ… ஷேர்ஸ்சாகவோ மாற்றினால் சற்று     ப்ரீயாக இருக்கலாம் என ஆடிட்டர் சொல்கிறார், இவன்தான்       செய்வதற்கு நேரமில்லாமலும்.. வேலையினாலும் நேரம்     கடத்தியிருந்தான். எனவே இப்போது தன் தம்பியின் உதவியை     நாடினான்.

இருவரும் உண்டு முடித்து அடுத்த ஒருமணி நேரம், அதனை         குறித்து ஆடிட்டருடன் கலந்து பேசிக் கொண்டிருந்தனர். நேரம்       சென்றது இன்னும் கன்யா மேலே வரவில்லை.

வெங்கட் தெருவில் நடக்க தொடங்கினார். சதாவின் ஏற்பாடு      உண்டவுடன் நடக்க வேனும் என்பது. கல்யாணி அவருடன்      நின்றிருந்தார். வேலையெல்லாம் முடிந்தது. எனவே கன்யா             என்ன செய்வது என தெரியாமல் டிவி பார்த்தபடி            அமர்ந்திருந்தாள்.

சதாவிற்கு நேரம் போனது தெரியவில்லை, சதாவின் போன்           ஒலிக்க தொடங்கியது… யசோதாதான்.

சதா அலட்டாமல் எடுத்தான் சண்முகம்தான் அப்படியே        பார்த்திருந்தான். ‘என்னடா நடக்குது இங்க…’ என்பது போல “ம்..  சொல்லுக்கா” என்றான் குரலில் கூட அதிர்வு இல்லை, அதற்கும்      சேர்த்து சண்முகம் அதிர்ந்தான். அங்கு ஏதோ பேச்சு சென்றது.   பொறுமையாக கேட்டுக் கொண்டான் சதா.

தொடர்ந்து அவனின் மாமா, குழந்தைகள் எல்லாம் பேசினார்       கடைசியாக சண்முகத்திடம் கொடுத்தான். அவனும் பேசி முடித்து வைக்கவும், சதா “ஏன், இன்னிக்கு வரல” என்றான் மதிய நிகழ்வை    மனதில் வைத்து.

“அது சாரிண்ணா… இம்பார்ட்டன்ட் மீட்டிங்.. திடீர்ன்னு அதான்,   அண்ணிகிட்ட நீங்க போயிட்டு வாங்கன்னு மெசேஜ் பண்ணேன்”       என்றான் சோம்பல் முறித்தபடி.

தொடர்ந்து அவனே “என்ன ண்ணா, அக்கா கிட்ட பழம் விட்டா           போல இருக்கு” என சிரித்தபடியே, கேட்டவன் எழுந்து கொண்டான்.

சதா, ஏதும் சொல்லாமல் சிரித்தான். ஷன்முகம் “சரி பைய்…        நாளைக்கு நான் பார்க்கிறேன்… நீங்க எதுக்கும் அண்ணிகிட்ட     சொல்லுங்க… அவங்க ஏதாவது ஐடியா கொடுப்பாங்க” என்றான்.

சதா மையமாக தலையசைத்து வைத்தான். சண்முகம் சென்ற      பிறகுதான் கன்யா மேலே வந்தாள்… உடைமாற்றி சற்று நேரம்     உலவலாம் என மொட்டை மாடி செல்ல, சதா “என்ன பிளான்..          என்ன பிளான்… “ என்றான்.

கன்யா “கண்டு பிடிச்சிட்டான்” என அப்படியே நின்றாள். பின்னால்        வந்த சதா “ப்பா, எவ்வளோ பெரிய அக்கறை உங்க அண்ணி மேல… எப்படியோ, என் கூட பேச வைச்சிட்ட… அப்படியே எனக்கும் ஒரு      பிளான் சொல்லேன்… உன் கூட எப்படி பேசறதுன்னு” என்றான்.

கன்யா திரு திருவென விழித்து நின்றாள், அதெல்லாம் அந்த நிமிடம் மட்டும்தான் “உங்க அக்காக்கு உங்க மேல ரொம்ப பாசம், அவங்க     எத்தனை வருஷம் என்கிட்டே அழுதிருக்காங்க தெரியுமா…        உங்களுக்கு எப்படி தெரியும் அதெல்லாம்” என்றாள் கோவமான       குரலில்.

சதா ஓய்ந்தே போனான், என்ன பேசினாலும் இப்படி இவள்            பழைய நினைவிலேயே நிற்கிறாள் என ஓய்ந்து போனான்.                ஒரே விழயத்தை மீண்டும் மீண்டும் பேசுவதாக தோன்ற.. அது        அவனின் இயலாமையை தூண்ட அதன் தாக்கம், வார்த்தையாக       சீறியது.. எப்போதும் போல் “எனக்கு யாரையும் தெரியாதுதான்,        எதுவும் தெரியாதுதான்… யாரும் எனக்கு தெரிய வைக்கல”           என்றான். ஏனோ, சதாவிற்கு இந்த வாதம் பிடிக்கவில்லைதான்.

ஆனாலும், கன்யா எப்போதும் இதையே நினைத்து புதிய           நினைப்பை ஏற்க மறுப்பதாக தோன்றியது அவனிற்கு. எனவே        இன்னும் அடிக்குரலில் சீறினான்  “ஏன் நீ பேச வேண்டியது            தானே எனக்கு. உனக்குத்தான் புருஷன் கல்யாணம் எல்லாம்..        எல்லாம் பிடிச்சுதானே செய்துக்கிட்ட, எனக்குதான் ஒன்னும்       கண்ணுக்கு தெரியல.. உனக்கு தெரியுமில்ல” என்றான்.

கன்யாவிற்கு என்ன பதில் சொல்லுவது என தெரியவில்லை.           என்ன குரல் அது குற்றம் சொல்லும் குரல்… ஒருவேலை இது        உண்மை தானோ.. என தன் மேலேயே சந்தேகம் வந்தது அவளிற்கு.

கண்களில் நீர் கோர்க்க தொடங்கியது ஏதும் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தாள். பழைய படத்தில் அசுரன் விடும் அம்புகளை        எல்லாம் அவன் பக்கமே திருப்பும் கடவுள் போல இப்போது சதா     தெரிந்தான் அவளிற்கு.

அவளின் வெறித்த பார்வை, அவனை ஏதோ செய்ததோ இல்லை,     நெருங்க சொன்னதோ மெல்ல அருகினில் வந்து அவளை                       தோளோடு சேர்த்தனைத்தான்… தோளோடு தோள் உரச நின்றான்          “என்னை பிடிச்சுதானே கல்யாணம் செய்துகிட்ட” என்றான்,                             ஏதோ திணறும் காதலன் குரலில், யாசகனின் குரலில். அன்று          அவன் வந்த போது இவள், திரும்பியும் பார்க்காது காரெடுத்து      சென்றாலே அப்போது தோன்றியது அவனிற்கு என்னை    பிடிக்கவில்லையோ என, அதனை மெல்ல கேட்க..

நிமிரவில்லை அவள். மெல்ல அருகில் அமர்ந்து அவள் தாடையில்     தனது விரல் கொண்டு நிமிர்த்த, கன்யாவின் முகம் நிமிர்ந்ததே தவிர இமைகள் கீழ் பார்த்தே இருந்தது. சதா “இங்க பாரு கன்யா” என்றான் மந்திரமான குரலில்…

மெல்ல விழிமலர்ந்தாள் அவள் “நான் உன் போட்டோ கூட     பார்க்கவில்லை… சொல்ல போனால் எனக்கு திருமணம் நடப்பதே   தெரியாது, வந்து இறங்கியவுடன்… அக்காதான் சொன்னாள்,            அம்மா ஒரே அழுகை… எங்களை ஏமாற்றி விடாதே என…       இந்நிலையில் நான் எப்படி இந்த திருமணத்தை ரசிப்பேன்”           என்றான் ஆர்பாட்டம் இல்லா குரலில்… என்னை நம்பேன் என்ற        யாசக குரலில்.

கன்யா அமைதியாக பார்த்திருந்தாள் ஏதும் பேசவில்லை “என்ன      சொல்லு உனக்கு பிடிச்சித்தானே கல்யாணம் செய்துகிட்ட” என்றான் வார்த்தைக்கு வலிக்காத அழுத்தமான குரலில்

கன்யாவிற்கு இப்படி கேட்கவும் அவனின் நிலை அவளுள்          மாயம்தான் செய்தது.. மதியம், ‘வரீங்களா இல்லை, நான் போகவா’       என்ற வீரம் எங்கோ சதா பின்னால் சென்று ஒழிந்து கொண்டது       போல…

ஒரே அறையில் இருக்கிறேன் இதுவரை இது போல் அவன் குறையாக பேசியதில்லையே என்ற எண்ணம்தான் வந்தது. நான் பதில் சொல்ல  வில்லை என்றால் இவன் முகம் வாடிவிடுமோ.. இந்த அருகாமையை இழந்துவிடுவேனோ… என கன்யா திணறினாள்.

சதா “என்ன… யோசனை “ என்றான்.

அந்த கேள்வியில் கன்யாவின் தலை, தன்போல் அவன்             குரலுக்கு அசைந்தது “ஆம்” என்பதாக.

சதாவிற்கு வேறெதுவும் தேவையாக இருக்கவில்லை… ஏதும்.. எதிர்பார்ப்பவன் இல்லைதான் என்றாலும், உனக்கென ஒருத்தி  வந்துவிட்டேன் என்ற நினைப்பை தினமும் அவனுள் விதைத்துக்   கொண்டே இருந்தாலே…சில நேரம் கோவமாக… சண்டையாக,     மௌனமாக இப்படி எல்லாவகையிலும், அவனுள் பரவி விரவி    கிடந்தவளை தன்னுள் புதைக்கும் எண்ணம் வந்தது அவனுள்…         இன்று மதியம் அவளின் செயல்கள் அதைதானே சொல்லியது…        எனவே தனக்குள் இன்னும் முழுதாக இழுத்துக் கொண்டான்…

மெல்ல அவளை நுனி விரளால் தீண்ட தொடங்கினான்.. தன் விரல்  கொண்டு அவளின் கன்னம் தீண்ட.. அவனின் விரல்பட்டு சிவந்தது    அவளது கன்ன கதுப்புகள்.. ’ப்பா.. என்ன ஒரு வெம்மை’ என அவன்  உதடுகள் முனு முனுக்க… அதனை மென்னையாக வருடியபடியே         தன் இழளால் அவளை உணர தொடங்கினான்…

கன்யா திணறியோ, தடுத்தோ ஏதும் செய்யவில்லை.. அவனின் பேச்சு மொத்தமாக அவளை தாக்கியிருந்தது… மேலும், அவளின் ஆழ் மனதில் ஆண்டாண்டு காலமாய்… கணவன் என்ற பிம்பம் இவனைதானே   சொல்லியது. எனவே அதனை சுற்றியிருந்த குறைகள் எல்லாம்       எங்கோ சென்றுவிட்டது போல… நடுவில் நின்ற சதா மட்டுமே       பெரிதாக தெரிய கன்யா, மொத்தமாகவே சரணடைந்தால்          அவனிடம்.

சதாவின் தயக்கங்களை பெண்மை உணரவே செய்தது… மிக        கவனமாக கையாண்டான் அவளை சின்ன சின்ன இடங்களிலும்       அவளின் முகம் பார்த்து நடந்தான் சின்ன அவஸ்தையையும்       அவளிற்கு கொடுக்காமல் சுத்த காதலனாகவே மாறினான்,      வார்த்தையில் இல்லை கணவன் மனைவி புரிதல், இதிலும்          வேணும் என்பதாகத்தான் தேடினான் அவளிடம். இருதியில்             என்ன முயன்றும் அவளின் கண்ணில் கண்ணீர்  வந்தே              விட்டது. அந்த நேரத்தில் அதைமட்டும் கவனிக்கவில்லை             அவன்… அழகான தேடல் முடிந்து… சின்ன சின்ன முத்தங்களாக      அவளை இன்னும் சாரலாய் தொடந்தவனது உதடுகள்தான் உணர்ந்தது அவளின் கண்ணீரை, சட்டென “சரியாகிடும்… டோன்ட் வொர்ரி..”      என்றவன் இன்னும் அவளிடம் நெருங்கி தனது தோள் சாய்த்துக்   கொண்டான். நீண்ட நாட்களின் தாகம் தீர்ந்தவனாக… ஆழ்ந்து         இன்னும் தனக்குள் புதைத்துக் கொண்டான்.

மறுநாள் காலையில் எப்போதும் போல… விடியல் வந்ததுதான்        ஆனால் இவர்கள் முன் காலையில்தான் எழுந்தனர்… கன்யாவிற்கு    கண்கூசும் வெட்கம் வந்தது அவனிடம்… சத்தம் போடாமல் எழுந்து    குளித்து வந்தாள்.

சதா, அதன் பிறகே எழுந்தான். கன்யா அமர்ந்தே இருந்தாள்         அதுவரை வெளியே செல்லவில்லை… சதா பார்த்து “என்ன..            இப்படி உட்கார்ந்திருக்க” என்றான்.

கன்யா “சீக்கிரம் வாங்க… கீழ போலாம்” என்றாள்.

“ஏன் அம்மா கூப்பிட்டாங்களா… என்னாச்சு” என்றான் அலட்டாமல்.

“இல்ல எப்படி கீழ போறது, எவ்வளோ நேரமாச்சு… சங்கடமா இருக்கு” என்றாள் தயங்கி தயங்கி..

சதா அவளையே பார்த்திருந்தான்… ஒரு காட்டன் சுடிதான்… தேன்      கலரில் டாப்.. டார்க் கிரீன் பாட்டம் என எப்போதும் உடுத்தும்     உடைதான், ஆனால் கண்ணில் ஏதோ ஒலி தெரிந்தது, சின்ன         பொலிவு முகத்தில், சதாவிற்கு சந்தோசம் தன் மனைவியின்           முகம் கண்டு… “போ.. போ.. யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க”     என்றான் அவளை ரசித்தபடி.

கன்யா தயங்கியபடியே அவனை பார்க்க “இப்படி முகத்த ஏதோ         போல் வைக்காம போ… யாராவது ஏன் லேட்டுன்னு கேட்டா.. நீயே சொல்லிடுவ போல… அப்படி இப்படின்னு” என்றான் சிரித்தபடி      கிண்டலாக.

கன்யா “ஆமாம்… என் புருஷன் கெஞ்சினான் கதறினான் அதான்         அப்டி இப்டின்னு சொல்லுவேன்” என்றாள் அசரா திமிராக..

அந்த வார்த்தையில் அத்தனை வெட்கமும், பெருமையும் வந்தது   கணவனாக சதாவுக்கு… இருந்தும் “நேரம் எல்லாம் என் நேரம்” என சிரித்தபடியே சொல்லி ரெடியாக சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!