Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ராகம் – 20.2

அதிர்துடியன் அறையில் இருந்து வெளியேற யாழியோ விழிகளை மீறிய நீரை துடைக்கவும் முற்படாமல் அமர்ந்திருந்தாள்.

“தந்தையுடன் சேர்ந்து சாப்பிட்டு கொள்கிறேன் என்றவன் ஏன் என்னோடு சேர்ந்து சாப்பிடவில்லை” என்ற கேள்வியே அவளை வாட்டி வதைக்க போதுமானதாக இருக்க இன்னுமே அழுகை பெருகியது….



Advertisement

பல நிமிடங்கள் தனக்குள் அவள் உழன்று கொண்டிருக்க ஒருகட்டத்தில் அவள் மனசாட்சியோ, ‘ஏய் யாழி ஹஸ்பண்ட் தன்னை பத்தி கூட கவலை படாம வைப்க்கு முன்னுரிமை கொடுத்து  இப்படி ஊட்டி விட்டு குழந்தை மாதிரி உள்ளங்கையில வச்சி தாங்கினா தானே லவ்..!! அவரும் அப்படி தானே இருக்கார் அப்புறம் இதென்ன  சின்ன குழந்தை மாதிரி அழுகை..??’ என்று வினவ 

யாழிக்கோ என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை ..

‘சொல்லு யாழி அவர் தான் நீ எதிர்பார்க்கிற மாதிரி உனக்கு பிடிச்சதை செய்யறாரே அப்புறம் ஏன் இப்படி இருக்க…??’

Advertisement

‘இல்ல இது எனக்கு பிடிக்கல’ பட்டென பதில் வந்தது

Advertisement

‘ஏன்..??’

‘இது… இது நல்லாவே இல்ல.. நானும் விஷ்ணுவும் எவ்ளோ சண்டை போட்டாலும் தனியா சாப்பிடவே மாட்டோம் ஆனா…’

‘லூசு யாழி அவரும் விஷ்ணுவும் ஒண்ணா..??’

Advertisement

‘இல்… இல்ல தான் ஆ….ஆனா விஷ்ணு தானே என் பெஸ்ட் பிரெண்ட்…’

‘அப்போ இவரும் உன் பிரெண்டா இருக்கனும்ன்னு சொல்றியா..??’

‘ஆ.. ஆமா’

‘ஏன்..??’

‘அப்ப… அப்போ தானே டிவோர்ஸ் பண்ண முடியாது…’

‘என்ன சொல்ற..??’

‘ஹஸ்பண்ட் வைப்ன்னா டிவோர்ஸ் பண்ணலாம் ஆனா பிரெண்ட்ஸ் பண்ண முடியாதே’

‘அதுக்காக ஹஸ்பண்டை பிரெண்டா மாத்த போறியா..??’

‘எனக்கு தெரியல’ என்றவளின் மனதை இனம் புரியா பாரம் அழுத்தி கொண்டிருந்தது கணவன் மனைவி உறவில் கம்பானியன்ஷிப் (தோழமை) எத்தனை அவசியம் என்பதை வார்த்தைகளால் இன்றி செயலால் உணர்த்தி அவளை சிந்திக்க வைத்து அதிர்துடியன் வெளியில் சென்று விட்டான்.

எப்போதுமே எந்த சந்தேகம் என்றாலும் கூகுளிடம் கேட்டு பதில் கண்டுகொண்டவளுக்கு இப்போது தன்னை தானே அலசி சுயபரிசோதனை செய்து கொள்கையில் திறம்ப்பட செயலாற்றி விடை காண முடியா நிலை…!!

மனைவிக்கு உரிமை மட்டுமல்ல கடமையும் உண்டு என்று உணராத பேதைக்கு இறுதியில் இயலாமை பெருகி பெரும் கேவலாக வெடித்தது..

அவள் எதிர்பார்த்தது போல கணவன் அவள் கனவிற்கு தோள் கொடுத்து நிற்கிறான் அவள் விருப்பத்திற்கு முன்னுரிமை அளித்து அவளுக்காக அனைத்தையும் ஒத்தி போடுகிறான், எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்றுவிட்டான், காணொளியில் கூறியது போல அவளை அடிமையாக நடத்தாமல் சுதந்திரமாக அவள் லட்சியத்தை நோக்கி செல்ல சொல்கிறான் அப்படி இருந்தும் ஏதோ ஒன்று இருவரிடையே குறைந்து ஒரு வித இறுக்கத்தை தோற்றுவித்திருக்கிறது அது என்ன..?? என்று கண்டறிய முடியா நிலை…!!

‘அதற்குமேல் அதை எப்படி சரி செய்ய..??’ என்று தெரியாமல் குழம்பி நிற்கிறாள்.

‘கடவுளே எத்தனை தான் அவளும் குழம்பி நிற்ப்பாள் உதவிக்கு கைபேசியும் இல்லை கூகுள் ஆண்டவரின் துணையும் இல்லை அவளும் எப்படி தான் இச்சூழலை கையாள்வது..??

எதிர்பார்த்த அத்தனையும் இவளுக்கு கிடைத்தும் அதை எண்ணி மகிழ முடியாததன் காரணம் அவனது விலகல் என்று ஆழ்மனதிற்கு புரிந்தாலும் அவளால் புரிந்து கொள்ள முடியாமல் போக  தலையை பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டாள்.

இதுவே கையில் கைபேசி இருந்திருந்தால் ‘ஹவ் டு கன்சோல் ஹஸ்பன்ட்’ என்று கூகுளிடம் கேட்டு ஏதாவது செய்து அவனை சமாதனபடுத்தி  இருப்பாள் ஆனால் அதற்கும் வழி இல்லாமல் போக யோசிக்க தொடங்கினாள்.

பல கட்ட யோசனைக்கு பிறகு ஒரு நொடி அவனிடம் அனைத்தையும் சொல்லி விடலாமா..?? என்று தோன்றினாலும் அதன் பின்பான விளைவுகளை அவளால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

இப்போதைய அவன் விலகலே மனதை கொன்று கிழித்து கொண்டிருக்க ஒருவேளை உண்மை அறிந்த பின் அவன் அவளை வெறுத்தால் அவள் உயிரற்ற ஜடமாகி போவாளே.. என்ன செய்ய..?? 

********************************************

அதிர்துடியன் ஒருமணி நேரம் கழித்து அறைக்கு திரும்பிட கண்களை துடைத்து கொண்டு எழுந்தமர்ந்தவள் அவனிடம், ‘உங்களுக்கு என்னலாம்  பிடிக்கும் சொல்லுங்க..??’ என்றாள்.

அவனோ கொண்டு வந்த பாலை அவளிடம் கொடுக்க யாழிக்கு தான் வாங்க மனமில்லை.., ஆனால் நீண்ட அவன் கரம் தாழாமல் இருப்பதை கண்டு உள்ளுக்குள் பொங்கிய அழுகையை வெளிவராமல் விழுங்கி கொண்டே அதை வாங்கியவள்,

‘உங்களுக்கு..?’ 

‘நீ குடி எனக்கு வேண்டாம்’ என்று மறுக்க அவளோ,

“நான் பாதி குடிச்சிட்டேன் எனக்கு போதும் இது உங்களுக்கு…, வேண்டாம்ன்னா நீங்களே கொட்டிடுங்க” என்றாள்.

இதழோரம் துடிக்க டம்ப்ளரை வாங்கியவன் குடித்து முடிக்க,

‘உங்களுக்கு என்னலாம்  பிடிக்கும்…??’ சொல்லுங்க என்றாள் பிடிவாத குரலில்.

அவளை ஆழ்ந்து பார்த்தவன், ‘ஏன்…?? அதை எதுக்கு நீ கேட்கிற..??’

‘எதுக்கா..?? என்று அதிர்வோடு அவனை பார்த்தவள் இதழ்கள் ‘எதுக்குன்னா..??’ என்று முணுமுணுத்து தவிப்புடன் அவனை பார்க்க,

‘யோசிச்சி வை வரேன்’ என்று உடை மாற்றும் அறைக்கு சென்று டீஷர்ட் ஷார்ட்ஸ்சோடு திரும்பி வந்தவன், 

‘சொல்லு யாழி’ என்றவாறே கட்டிலில் சாய்ந்து அமர, 

‘நா… நான் உங்க வைப் தானே அப்போ எனக்கு தெரியனும் தானே..??’

‘அப்படியா..??’

‘ஆ…மா’

‘எதுக்கு தெரியனும்..?? தெரிஞ்சு நீ என்ன செய்ய போற..?? ” 

‘என்ன செய்ய போறேனா..?? இப்படி கேட்டால் என்ன பதில் சொல்வது..?? அவளுக்கு பிடித்ததை மட்டும் அவனிடம் சொல்லி அது போல ஏன் நடக்கவில்லை என்று கேட்டவளுக்கு இப்போது தான் அவன் பிடித்தத்தை கேட்க தோன்றியது அதற்கு அவளும் என்ன செய்ய..??’

‘சொல்லுங்க’

‘சரி  உனக்கு பிடிச்சதை சொல்லு நான் தெரிஞ்சிக்கிறேன்’

‘ஏன்..?? நீங்க சொல்லாதப்போ நான் மட்டும் ஏன் சொல்லணும்..??’

‘இது என்ன கேள்வி யாழி..?? வைப்புக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்குறது தானே ஒரு நல்ல ஹஸ்பன்ட்க்கு அழகு’ என்றிட, 

‘அப்… அப்போ நா… நானும் தானே..’ என்று ஏதோ தோன்ற அதை சரியாக யோசிக்க முடியாதவள் அதை புறம்தள்ளி, ப்ச் இல்ல முதல்ல நீங்க சொல்லுங்க..’

‘என்ன சொல்லணும்..??’

‘அன்னைக்கு நீ.. நீங்க என்னை எனக்கு, இல்லல்ல உங்களுக்கு பிடிச்ச மாதிரி ட்ரெஸ் பண்ண சொன்னீங்களே, அந்த மாதிரி உங்களுக்கு வேற என்ன பிடிக்கும்’

“ச்சோ அதுவா.., அது ஏதோ நியாபகத்துல, ஆசையில சொல்லிட்டேன் அதெல்லாம் பெருசா எடுத்துக்காத நீ மறந்துடு யாழி”

‘ஏன்…??’ என்றவளுக்கு மனதில் சஞ்சலம் மூண்டது..,

‘உன் ட்ரெஸ் உன் விருப்பம்..!! நான் எனக்கு பிடிச்ச மாதிரி இருக்க சொல்றதும்  உன்னை ஒருவிதத்துல கட்டுபடுத்துறது தான்னு எனக்கு அப்போ தெரியலை..,  ஏதோ ஆசையில, எனக்கு பிடிச்ச மாதிரி உன்னை பார்க்க வேண்டி அப்படி சொல்லிட்டேன் ஆனா அப்புறம் தான் புரிஞ்சது நான் ஹஸ்பண்டா இருக்கிறதாலேயே எந்த அளவுக்கு உன்கிட்ட வரம்பு மீறி இருக்கேன்னு..’ என்றிட யாழிகோ புரிந்தும் புரியாத நிலை.

“அதிலும் அன்று புடவை எடுக்க வந்த போது அவன் கூறிய  அவன் அவள் ரசனைக்கு ஏற்ப உடுத்த வேண்டும் , அவள் அவன் ரசனைக்கு ஏற்ப உடுத்துவேன் என்றதற்கு  எல்லாம் என்ன அர்த்தம்..??,

அன்று உயிர் வரை ஊடுருவி அவளை சிலிர்க்க வைத்த பார்வை இப்போதும் அவள் மனக்கண்ணை விட்டு அகலவில்லையே திருமணத்தின் போதும் கூட அப்படி தானே…, ஆனால் இப்போது இப்படி சொல்வதன் காரணம் என்ன..?? 

‘என் விருப்பத்திற்கு நான் உடை அணிந்தால் அவன் ரசிக்க மாட்டானா…? அப்படி என்றால் நானும் அவனை ரசிக்க கூடாதா..??’ என்ற அச்சத்துடன் அவனை பார்த்தவளுக்கு அவனை பார்க்காமல் எப்படி இருப்பது அது அவளால் முடியாதே..??’ அதை எண்ணியபோதே அவள் உள்ளம் கலங்கி போக, 

அதிர் துடியனோ குரலை செருமி “உன்னை ட்ரெஸ் விஷயத்துல ரெஸ்ட்ரிக்ட் பண்ண நினைச்சதுக்கு சாரி யாழி கல்யாணம் ஆகிட்டதால மாறணும்ன்னு அவசியமில்லை நீ நீயா இரு எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல” என்றிட யாழிக்கு அதற்கு மேல் அவனிடம் எதையும் கேட்கும் சக்தி இல்லை மனம் வெதும்ப அமைதியாக சென்று படுத்துவிட்டாள்.

****************************************

கலங்கிய விழிகளுடன் அவள் சென்று படுக்கவும் அதிர்துடியனுக்கும் மனம் நிலைகொள்ளவில்லை.., கண்களை இறுக மூடி அமர்ந்திருந்தவன் சில நிமிடங்களுக்குப் பின்,

‘யாழி’ என்று அவனழைக்க சத்தமின்றி தலையனையை நனைத்து கொண்டிருந்தாள் அவள்..,

‘தூங்கிட்டியா..??’

‘இல்லை’ என்று தலை அசைத்தாள்.

‘ப்ச் திரும்புடி பேசணும்’

அவளுக்கோ எங்கே அவன் முகம் பார்த்தால் இன்னும் கதறிவிடுவோமோ என்ற பயத்தில்  கண்களை இறுக மூடிக்கொள்ள,

‘என்னை பாருடி’ என்று அவளை தன்னை நோக்கி திருப்ப அவளோ அவசரவசரமாக கண்ணீரை துடைத்து கொண்டே திரும்பினாள்.

சிவந்த விழிகளும் விடைத்த நாசியை கண்டவன், ‘உனக்கு பிடிச்ச மாதிரி தானேடி இருக்க சொன்னேன் அதுக்கும் அழுதா என்ன அர்த்தம்..??’

‘ஆ.. ஆனா அது உங்களுக்கு பிடிக்குமா..??’ என்று ஏதோ ஒரு தைரியத்தில் அவள் கேட்டுவிட,

‘இதுக்கு நான் பதில் சொல்லியே ஆகணுமா..??’

‘ஆம்’

‘பைன் இப்படி தான்னு இல்லை நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும் போதுமா..???’

“அப்.. அப்போ நீங்.. என்றவளுக்கு தான் எப்படி இருந்தாலும் அவனுக்கு பிடிக்கும் என்றால் அவன் எப்படி இருந்தாலும் தனக்கும் பிடிக்குமா..?? அப்புறம் ஏன் இப்படி…” என்று தொடர் கேள்விகள் எழ எதையும் சிந்திக்க முடியாமல் குழம்பி தலையை பிடித்து கொண்டாள்.

அவளால் கண்டு கொள்ள முடியாவிட்டாலும் முதல் முறை போட்டோவில் பார்த்த போதே அவனை அவனுக்காகவே  அவளுக்கு பிடித்தது தானே நிஜம்..!!

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவன் மீதான அவள் தூய நேசம் இடையில் காணொளி, நண்பர்கள் என்று தடம் மாறி தன்னை குழப்பி ஏதேதோ எண்ணங்களால் ஆட்கொள்ளப்பட்டு இருவரின் உறவை சிக்கல் ஆக்கி கொண்டிருக்கிறாள்.

‘சரி இப்போ உனக்கு என்ன தெரியனும் சொல்லு’ என்றான் எழுந்தமர்ந்து.

உடனே முகம் பிரகாசிக்க தானும் எழுந்தமர்ந்தவள், ‘உங்களுக்கு என்னலாம் பிடிக்கும், எது எல்லாம் பிடிக்கும், பிடிக்காது.., உங்களை பத்தி தெரிஞ்சிக்கணும் எனக்கு சொல்லுங்க’

‘சரி என்ன தெரியனுமோ கேளு நான் பதில் சொல்றேன்’

இப்போது முகத்தை அழுந்த துடைத்து கொண்டு புன்னகையுடன்,

‘உங்களுக்கு பிடிச்ச கலர் என்ன..??’

‘ப்ளு’

‘பிடிச்ச சாப்பாடு’ என்று அவள் அறிவிற்கு எட்டிய அளவு கூகுளின் உதவி இன்றி கணவனை அறிந்து கொள்ள மனைவி கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொன்னவன் அவள் விருப்பங்களையும் கேட்டறிய இப்போது யாழி முகத்தில் அத்தனை மகிழ்ச்சி..,

புரிதலின்றி தொடங்கும் உறவு நிலைக்காது என்பதால் இருவருக்கிடையிலான புரிதலின் முதல் படியை மனைவியையே எடுக்க வைத்திருந்தான்.

அவர்கள் பேச்சு நீண்டு கொண்டே செல்ல அதிர்துடியன் அவளிடம், ‘உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொண்டு வந்திருக்கேன்’ என்றிட அவளுக்கோ என்ன என்று கேட்கும் ஆர்வம்கூட இல்லை பதிலாக அதிர்துடியனின் கல்லூரி கதையை கேட்கும் ஆர்வம். 

‘நீங்க சொல்லுங்க அந்த பையனை அடிச்ச அப்புறம் உங்க எச்ஒடி என்ன சொன்னாங்க…. உங்களுக்கு அப்போ இருந்தே கோபம் அதிகமா வருமா..??’ என்றிட, 

‘ஏய் உனக்கு சர்ப்ரைஸ் கொண்டு வந்திருக்கேன்டி, டெயிலி சர்ப்ரைஸ் கொடுக்குறது தானே யாழி நல்ல ஹஸ்பண்ட்க்கு அழகு’ என்றிட,

‘அச்சோ அது அப்புறம் பார்த்துக்கலாம் நீங்க எனக்கு சொல்லுங்க..’ என்றால் பிடிவாதமாக,

அவனும் அவள் கேட்ட கதைகளை கூறி முடித்தவன் ‘தூக்கம் வருது யாழி தூங்கலாமா..??’ என்று கேட்க,

மனமெங்கும் நிறைந்த மகிழ்ச்சியுடன் ‘ஹ்ம்ம்’ என்றவள் அவனை பார்த்தவாறே திரும்பி படுக்க அவனோ வெளியில் சென்றவன் சில நிமிடங்களிலேயே திரும்பி, 

“சர்ப்ரைஸ் கொடுக்க மறந்துட்டேன் யாழி இதோ உன்னோடது..!!” என்று அவள் அருகே டெட்டியை படுக்க வைத்தவன், 

“இது இல்லாம உனக்கு தூக்கம் வராது இல்ல இப்போ தூங்கு” என்று கூற யாழிக்கு இத்தனை நேரம் கொண்டிருந்த மகிழ்ச்சி மொத்தமாக வடிய சத்தமே இல்லாமல் உள்ளுக்குள் ஏதோ ஒன்று நொறுங்கி போனது..,

விளக்கை அணைத்து விட்டு மறுபுறம் அதிர்துடியன் வந்து படுக்கவும் கலங்கிய விழிகளுடன் அவளையும் அறியாமல் விழிகள் வரிவடிவமாக இருந்தவனை பார்த்திருந்தது.

அவனோ வலக்கரத்தை நெற்றி மீது பதித்து கண்களை மூடி சீரான சுவாசத்துடன் உறங்கி கொண்டு இருந்தான்.

‘இனிமேல் நான் தான் உன்னோட டெட்டி.. என்னை பிடிச்சிட்டு தூங்கு’ என்று முதல் நாள் அவன் கூறிய வார்த்தைகளே அவள் செவியில் சுழல இப்போது இருவருக்கும் இடையில்  இருந்த டெட்டியை பார்த்தவளுக்கு அழுகையும் கோபமும் சேர்ந்தே வந்தது.

அவன் நிம்மதியாக உறங்க இங்கு யாழிக்கு தான்  தூக்கம் தூர போயிருந்தது அருகே இருந்த டெட்டியை அணைக்காமல் வெறித்து பார்த்து கொண்டிருந்தவள் தொண்டைக்குழி ஏறி இறங்கி கொண்டிருந்தது…,

எத்தனை நேரம் அதை வெறுப்போடு பார்த்திருந்தாளோ தெரியாது ஆனால் பார்க்க பார்க்க மனதில் ஏதோ வெறுமை படர்வதை உணர்ந்தவள் ஒரு கட்டத்தில் அதை தூக்கி தூர எறிந்த  பின்பே அவளால் நிம்மதியாக உறங்க முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!