Skip to content
Post Views: 12,798
சிங்காரத்தின் அழைப்பை துண்டித்து தோய்ந்து போய் அமர்ந்தார் மகேஷ்வரன்.
மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் முடிவெடுத்து தரகரை அணுகிய மகேஷ்வரனுக்கு நிச்சயம் தன் மகளுக்கு நல்ல வரன்கள் வீடு தேடி வரும் என்ற நம்பிக்கை இருந்ததே தவிர ஜாதகம் கொடுத்த அடுத்த நாளே மகளை பெண் பார்க்க வருவார்கள் என்று இத்தனை சீக்கிரம் அவருமே இதை எதிர்பார்க்கவில்லை..!!
சிறு குழப்பத்துடன் அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் அவர் கைபேசியையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.
அதே நேரம் மகேஷ்வரனின் புதிதான அதீத கோபம் பிள்ளைகள் இருவரையும் மிரள செய்ய அவரை பார்த்தவாறே யாழி, ‘டேய் நாம பண்ணது என்ன அவ்ளோ பெரிய தப்பாடா..??’ என்று ரகசிய குரலில் தம்பியை கேட்க,
Advertisement
‘தெரிலடி ஆனா அப்படி தான் இருக்கும் போல, அதான் அப்பா இவ்ளோ கோபபடறார்’
‘டேய் எப்படிடா நாம தான் பேஸ்புக், இன்ஸ்ட்டால பார்க்கிறோமே எல்லாரும் இந்த மாதிரி ஒரு சடன் ட்ரிப் ப்ளான் பண்ணி எவ்ளோ எக்ஸைட்டிங்கா என்ஜாய் பண்றாங்க நாமளும் அப்படி தானேடா பண்ணோம் இதுல என்ன தப்பிருக்குன்னு புரியல’
“அதே தான்டி எனக்கும் புரியலை எங்க காலேஜ்ல அரியர் வச்சி இருக்க பசங்க தான் கெத்து அவங்களுக்கு பொண்ணுங்க கிட்ட இருக்க கிரேஸ் மத்த பசங்களுக்கு கிடையாது தெரியுமா..?? அதுவும் நல்லா படிக்கிற பசங்க கிட்ட எந்த பெண்ணும் பேச்சே வச்சிக்கிறது இல்லடி, எப்ப பாரு படிப்பு படிப்புன்னு அதையே பேசி கழுத்தை அறுக்கிறானுங்கன்னு எந்த பெண்ணும் அவங்களை திரும்பியும் பார்க்கிறது இல்ல”
Advertisement
‘இல்லையா பின்னே..!! rugged boys தான்டா எப்பவும் கெத்து..!! இப்போ ட்ரென்ட்டே அவங்க தான் அதோட பொண்ணுங்களோட ஆல் டைம் பெவரெட் rugged boys..!! அவங்க கூட இருக்கப்போ லைப்பே செம த்ரில்லிங்கா, என்ஜாயபிலா, அடுத்து என்ன நடக்கும்ன்னு தெரியாத அளவு நம்மளை என்கேஜ்டா வச்சி இருப்பாங்க ஒரு மாதிரி மாஸா இருக்கும்டா.., படிப்ஸ் எல்லாம் வேஸ்ட் சுத்த போர் அவனுங்களுக்கு லைப்பை என்ஜாய் தெரியாது என் பிரெண்ட்ஸ்க்கு கூட படிக்கிற பசங்க அலர்ஜிடா விஷ்ணு’
Advertisement
அதை கேட்டவன், “உனக்கு ஒன்னு தெரியுமா யாழி..???” என்றான்.
‘என்னடா..??’
“போன முறை யூனிவர்சிட்டி ரேங்க் எடுத்த தினேஷ் கூட இந்த வருஷத்துல இருந்து அரியர் வைக்க ஆரம்பிச்சிட்டான்”
Advertisement
“நிஜமாவா..?? என்று விழிகள் விரிய கேட்டவள், சூப்பர்டா இனி பாரு எத்தனை பொண்ணுங்க அவன் பின்னாடி சுத்தும்ன்னு”
‘ஆனா இதெல்லாம் அப்பாக்கு புரிய மாட்டேங்குதே அரியர் வச்சது என்னமோ பெரிய பாவம்ங்கிற மாதிரி பேசுறாரு..??’
‘அதான்டா எனக்கு தெரியலை ஐ திங்க் தாய் மட்டும் இல்லை தந்தையும் அப்டேட் ஆகணும் இல்லன்னா அவங்க லைப் ரொம்ப கஷ்டம்’ என்று மகேஸ்வரனை பாவமாக பார்த்தவாறு யாழி கூற,
‘ஏன்டி ஒருவேளை நாம யாருக்கும் சொல்லாம போனது தான் அவரோட கோபத்துக்கு முக்கிய காரணமா இருக்குமோ..??’
‘இல்லடா எனக்கு தெரிஞ்சு நாம பைக்ல போனதா தான் இருக்கும்’
“ஏய் அது எப்படிடி பைக்ல போனதை தப்புன்னு சொல்லுவாங்க..?? எத்தனையோ பேர் நம்மளை விட சின்ன பசங்க வீலிங், ஹைக்கிங்ன்னு, ட்ரெக்கிங், ட்ரிப்பிங்ன்னு லைப்பை எப்படி எல்லாம் என்ஜாய் பண்றாங்க, நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..?? இத்தனைக்கும் நாம ஒன்னும் **** இந்த சேனல் அண்ணன் மாதிரி வெளிநாட்டுக்கு பறந்து போய் பெருசா எதையும் எக்ஸ்ப்ளோர் பண்ணலையே.., தமிழ்நாட்டுல ஒரு இடத்தை எக்ஸ்ப்ளோர் பண்ண நினைச்சது பெரிய குற்றமா சொல்றாங்க” என்று அவளை கேட்க,
‘அது தான்டா எனக்கும் புரியலை’ என்று சில நிமிடம் யோசித்தவள் பின்,
‘டேய் ஒருவேளை அப்பாக்கு சொல்லாம நாம சேனல் ஆரம்பிச்சதால தான் கோபமோ’ என்று யாழி மெல்லிய குரலில் கேட்க,
“இருக்கும்டி அதுவும் காரணமா இருக்கலாம்.., ஆனா எப்பபாரு படி படின்னு சொல்றவரு நம்மோட கனவு, பேஷன் பத்தி அவர்கிட்ட சொன்னா நிச்சயம் புரிஞ்சிக்க மாட்டாரு எதையும் செய்ய விடமாட்டார்ன்னு தானே நாம அவருக்கு தெரியாம ஆரம்பிச்சோம்” என்றவன் தொடர்ந்து,
‘சேனல் ஆரம்பிக்கிறதுல என்ன தப்பு கண்டுபிடிச்சார்ன்னு தான் எனக்கு புரியலை யாழி எவ்ளோ பேரண்ட்ஸ் அவங்களே சேனல் ஆரம்பிச்சு பசங்களோட டேலன்ட்டை என்கரேஜ் பண்ணி உலகத்துக்கு எக்ஸ்போஸ் பண்றாங்க ஆனா நம்ம அம்மா அப்பாக்கு கொஞ்சமும் நம்ம மேல பாசமே இல்லடி அவங்க சொல்றதை மட்டுமே செய்யணும்ன்னு சொல்லி கட்டாயபடுத்தி நம்மளை அடிமை மாதிரி நடத்துறாங்க.., இதுக்கு தான் பினான்ஷியலா அவங்களை டிபென்ட் பண்ண கூடாதுன்னு நாம சேனல் ஆரம்பிச்சதே”
“இல்லடா விஷ்ணு அப்பா எப்பவும் நம்ம மேல பாசமா தானே இருப்பார் கேட்டது எல்லாம் வாங்கி கொடுத்து, பிடிச்சதை எல்லாமே பார்த்து பார்த்து செய்வார் அங்க பாரு” என்று கண்களால் மேஜையை யாழி சுட்டி காட்டிட,
‘என்னது..??’ என்று அவனும் அங்கே பார்க்க,
‘அதோ பாருடா நேத்து நாம ஜாகிங்க் போறதுக்காக கேட்டோம்ன்னு அப்பா நமக்காக ஷூஸ் வாங்கி வந்திருக்காரு’ என்றவள்,
“நீ கவனிச்சி இருக்கியா விஷ்ணு திட்டினாலும் அப்பா நம்மளை எங்கயும் யார்கிட்டயும் விட்டு கொடுக்காம இருப்பார் ஆனா இப்போ அவரை பார்த்தா எனக்கு பயமா இருக்கு முதல் முறையா என்னை பேச வேண்டாம்ன்னு சொல்லி உன்னை அடிக்கவே வந்துட்டாரேடா, இதுவரை இப்படி இருந்தது இல்லை” என்ற கூற அதன் பின் இருவரிடமும் கனத்த மௌனம்.
பின் பெரும் தயக்கத்துடன் யாழி அவர் அருகே வந்து, ‘அப்பா சாரிப்பா சொல்லாம போனது தப்பு தான் இனி அப்படி செய்ய மாட்டோம்’ என்று கூற விஷ்ணுவும் அதை ஆமோதித்து தலை அசைத்து நின்றான்.
அவனுக்கு இன்னுமே அரியர் வைத்ததற்காக தந்தை பேசியதை ஏற்று கொள்ள முடியவில்லை பின்னே அவன் நண்பர்கள் எல்லாம் இருபத்தி ஐந்து முப்பது என்று அரியர் வைத்திருக்கும் நிலையில் அவன் பன்னிரண்டு தானே வைத்திருக்கிறான் அதற்கே என்ன பேச்சு பேசி அடிக்க வந்தார் அந்த ஆதங்கம் விஷ்ணுவிற்கு தீரவில்லை.
அவர்களை நிமிர்ந்து பார்த்தவர் என்ன நினைத்தாரோ செல்போன் யுகத்தில் அதனூடே சேர்ந்து வளர்ந்து வரும் பிள்ளைகள் இன்னும் வாழ்க்கை குறித்த புரிதல் இல்லாமல் இருப்பதை கண்டு மனம் வெதும்பியவர் தன் கோபத்தை கைவிட்டு இருவரையும் அழைத்து தன் அருகே அமர்த்தி பேச தொடங்கினார்.
********************************************************
அவர் பேசிய பேச்சுக்களில் சில அவர்கள் ஏற்று கொள்ள கூடியதாக இருந்தாலும் பெரும்பாலும் இன்றைய சமூகத்தில் இருந்து மாறுபட்டு இருப்பதாக உணர்ந்த பிள்ளைகள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு அமர்ந்திருக்க மகேஷ் அவர்களிடம், ‘அப்பா உங்க நல்லதுக்காக தான் சொல்றேன்னு உங்களுக்கு புரியுதா ..??’ என்று அவர்களை பார்க்க,
‘புரியுதுப்பா உங்க கிட்ட சொல்லாம சேனல் ஆரம்பிச்சது, திருவண்ணாமலை போனது அதுவும் பைக்ல ‘ என்று யாழி கூற,
‘ஆனா எல்லாரும் இப்படி வீடியோ போடுறாங்கபா, ஏதாவது ஒரு இடத்தை திடீர்ன்னு போய் எக்ஸ்ப்ளோர் பண்றது தான் த்ரில்லிங்கே அதுவும் பைக்ல போறது தான் இப்போ ட்ரெண்ட்’ என்று விஷ்ணு கூற,
எப்போது பார்த்தாலும் ட்ரென்ட், பேஷன், ரீல்ஸ், ஷார்ட்ஸ், அது இது என்று ஆரம்பிப்பவர்களிடம் இனி என்ன பேச..?? என்ற சலிப்புடன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்த மகேஷ்வரனின் மனம் முழுக்க அதிர்துடியனே..!!
ஆம் மாப்பிள்ளை குறித்த விபரங்களை கூறி அவர் வீட்டார் நாளை பெண் வருகின்றார் என்ற சிங்காரத்தின் அழைப்பை தொடர்ந்து சுந்தரலிங்கம் நேரடியாகவே மகேஷ்வரனிடம் பேசி இருந்தார்.
யாழியின் முகத்தை எங்கோ பார்த்தது போல தோன்றியவருக்கு பெற்றோர் குறித்து விசாரிக்கையில் அவள் மகேஷின் பெண் என்பதை அறிந்து கொண்டவர் உடனே மகிழ்ச்சியுடன் மகேஷிர்க்கே அழைத்து விட்டார்.
“யாழியோட முழுப்பேர் மெல்விண்யாழியா மகேஷ்..??” என்று பேச்சை ஆரம்பித்தவர்
“கடைசியா யாழியை நம்ம ஸ்கூல்ல படிக்கிறப்போ பார்த்தது அதுக்குள்ள எத்தனை சீக்கிரம் ஆளே மாறி போயிருக்கா..?? அதிக்கு எங்கெங்கேயோ பொண்ணு தேடின எனக்கு யாழி நியாபகமே வரல மகேஷ் அதோட ஸ்கூல்ல பார்த்ததுல இன்னும் குழந்தையாவே என் மனசுல பதிஞ்சிட்டா போல ஆனா எத்தனை சீக்கிரம் கல்யாணம் பண்ற அளவு வளர்ந்து இருக்கா..!!” என்று ஆச்சர்யபட்டவர்,
” என் வைப் இன்னைக்கே உன் பெண்ணை நிச்சயம் பண்ண துடிச்சிட்டு இருக்காங்க மகேஷ் ஆனா நான் தான் முதல்ல உனக்கும் உன் குடும்பத்துக்கும் பிடிக்கணும்ன்னு சொல்லி அவங்களை கட்டுபடுத்தி இருக்கேன்.. உனக்கு தெரிஞ்சி இருக்குமே அதி இப்போ பெங்களூர் போயிருக்கான் அதனால நாளைக்கு காலையில நானும் என் வைப்பும் உன் வீட்ல இருப்போம்” என்றவர்,
‘சார் அதி சார்க்கு இதுல…’ என்ற மகேஷ்வரனை இடைநிறுத்திய சுந்தரலிங்கம்,
“அவர்கள் ஏற்கனவே யாழியை திருவண்ணாமலையில் பார்த்ததை தொடர்ந்து அவள் தான் அவர்கள் வீட்டு மருமகள் என்பது போல பேசியவர் மற்றதை நேர்ல பேசிக்கலாம் ” என்று அழைப்பை துண்டிக்க மகேஷ்வரன் மகிழ்வதற்கு பதில் அரண்டு போனார்.
அவர்கள் தகுதிக்கு ஏற்றார் போல எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு நிரந்தர வேலையில் உள்ள தன் பெண்ணுக்கு ஏற்ற குணமான மாப்பிள்ளை அமைய வேண்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்க இங்கே அதிர்துடியனே மாப்பிள்ளையாக வரக்கூடும் என்று அவர் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
இது மகேஷ்வரனுக்கு இனிய அதிர்ச்சி தான்..!!
என்ன தான் சுந்தரலிங்கத்திடம் பல வருடங்கள் வேலையில் இருந்தவருக்கு அவர் குடும்பம் பற்றிய பரிச்சயம் இருந்தாலும் சில வருடங்களாக அதிர்துடியனை அருகே இருந்து பார்ப்பவருக்கு தெரியாதா அவன் குணம், பழக்கவழக்கம், நேர்த்தி, திறமை எல்லாம், நிச்சயம் அவனை போல ஒரு தங்கமான மாப்பிள்ளை அவர் எத்தனை தேடி அலைந்தாலும் அவர் மகளுக்கு அமைவது கடினமே என்று அவருக்கு தெரியும்.
அதிலும் அவன் குடும்பம் தன் மகளை எத்தனை தூரம் தாங்குவார்கள் என்பதும் அதி தான் மூத்த மகன் என்பதால் யாழிக்கு புகுந்த வீட்டில் அளிக்கப்படும் முக்கியத்துவம், செல்வாக்கு எல்லாம் அவள் கனவிலும் நினைத்து பாராததாக இருக்கும்.
அதிலும் இப்போது சுந்தரலிங்கம் அவள் தான் மருமகள் என்பது போல பேசிட அதிக்கும் தன் மகளை பிடித்து போனால் மறுபேச்சு பேசாமல் அவர்கள் கேட்கும் சீர் செனத்தியை செய்து மகளை அனுப்ப அவர் தயார் ஆனால் இங்கே அவர் தயக்கத்திற்கும், குழப்பத்திற்கும் முழுக்காரணம் அவர் மகளே தவிர வேறு யாரும் இல்லை.
யாழி நினைப்பது போல கைபேசியில் அவர்கள் காணும் உலகம் நிஜம் அல்லவே..!!
திருமணத்திற்கு பின் எந்த அளவிற்கு அவள் அதிர்துடியனின் குணத்திற்கு ஒத்து போவாள் என்பதை அவரால் அனுமானிக்க முடியவில்லை.. என்னதான் மகள் பெரிதாக பிடிவாதமோ, முன்கோபமா, மற்ற குணங்களோ இல்லாமல் இருந்தாலும் எந்நேரமும் கைபேசியை கையோடு வைத்து கொண்டு திரியும் மகள் எந்த அளவு திருமணத்திற்கு பின் தன்னை மாற்றிகொண்டு அவர்கள் குடும்பத்தோடு பொருந்தி போவாள் என்று அவரால் உத்திரவாதம் கொடுக்க முடியாது.
அதிலும் அதியின் முன்கோபம் அவர் நன்கு அறிந்ததே..!!
அவன் கோபத்தில் இருக்கும் நியாயம் எதிர்தரப்பினரையே மறுகேள்வி கேட்காமல் அவன் முடிவற்கு கட்டுப்பட வைத்துவிடும்,
மகளை பிடித்து பார்க்க வருபவர்களிடம் கைபேசியை ஒரு காரணமாக எடுத்து சொல்லி மறுக்க முடியாத நிலை ஏனெனில் உலகமே இப்போது கைபேசியில் இயங்குவதால் அவர் இதை ஒரு காரணமாக சொல்வதை யாரும் ஏற்றுகொள்ள போவதில்லை, ஒருவேளை இங்கே இப்படி இருந்தாலும் திருமணத்திற்கு பின் செல்லும் இடத்தில் அவள் நிலை உணர்ந்து தன்னை திருத்தி கொள்ளவும் வாய்ப்பு உண்டு அல்லவா..?? அதனால் எதற்கு வலிய வரும் சம்பந்தத்தை தானே மறுத்து அவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார்.
அதை விட முக்கியமாக யாழிக்கு அதியை பிடிக்க வேண்டுமே..!! அவளுக்கு அதிர்துடியனை பிடிக்கவில்லை என்றால் நிச்சயம் மகள் விருப்பத்திற்கு மாறாக அவரால் நடக்க முடியாது.
அதோடு மனைவியிடம் மகள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து இருந்தாலும் அதை உறுதி படுத்தி கொண்டு அவர்களை வர சொல்லுவது சிறந்தது என்று எண்ணியவர் மகளை அழைத்து ‘நாளை பெண் பார்க்க வருகிறார்கள் உனக்கு பிடித்தால் அடுத்து திருமண ஏற்ப்பாட்டை தொடங்குவேன்’ என்று கூற,
யாழியோ தனக்கு திருமணத்தில் பரிபூரண சம்மதம் என்று கூறிவிட அவரும் சுந்தரலிங்கத்திற்கு அழைத்து பேசி இருந்தார்.
error: Content is protected !!