Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ராகம் – 8.2

‘ஏன்டி நேத்தே உனக்கு சொன்னேனே அவசரபடாத டைம் எடுத்து மாப்பிள்ளை கிட்ட பேசிட்டே முடிவு பண்ணுன்னு இப்போ இப்படி வந்து சொன்னா என்ன அர்த்தம் யாழி..?? கல்யாணம் என்ன விளையாட்டா போயிடுச்சா..??’ என்று மகள் அளித்த அதிர்ச்சியில் சுகமதி  கொந்தளிக்க,

“ம்மா நீ சொன்ன மாதிரி இப்போ டைம் எடுத்து யோசிச்சிட்டு தான் என் முடிவை சொல்றேன்”

‘வேண்டாம் யாழி நீ பேசுறது கொஞ்சமும் சரி இல்லை’ என்று மகளை கடிந்தவர் ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு, ‘சரி சொல்லு ஏன் வேண்டாம்’ என்றார் அழுத்தமான குரலில்.

இரவு முழுக்க அதிர்துடியனை மறுக்க என்ன காரணம் இருக்க கூடும் என்று தீவிரமாக யோசித்து விஷ்ணு கொடுத்த யோசனைப்படி,



Advertisement

‘அவருக்கும் எனக்கும் நிறைய வயசு வித்யாசம் செட் ஆகாது’ என்றாள்.

‘ஏழு வயசு வித்யாசம் எல்லாம் பெரிய விஷயமா அப்படியே இருந்தாலும் இது நேத்தே தெரியலையா உனக்கு..?? மாப்பிள்ளை வீட்டார் வரதுக்கு முன்னாடியே உங்க அப்பா அவரை பத்தி சொன்னார் தானே..!!’

“அது ஏதோ குழப்பத்துல சொல்லிட்டேன் இப்போ என்னம்மா அமேசன்லயே பொருள் பிடிக்காட்டி எக்ஸ்சேஞ் ஆபர்ல மாத்தி பண்ணிக்கிறது இல்லையா ..?? இப்போ இங்க என்ன கல்யாணமா நடந்துடுச்சி இல்லையே ஜஸ்ட் பிடிக்கலை செட் ஆகாதுன்னு சொல்ல போறோம் யாரும் யாரையும் கட்டாயபடுத்தி கல்யாணம் பண்ண முடியாது புரியுதா..??”

Advertisement

அதை கேட்டு ஆத்திரத்தில் முகம் சிவந்த சுகமதி “யாழி என்ன பேசிட்டு இருக்கன்னு புரியாம பேசாத, நீயே கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்லிட்டு இப்போ வேண்டாம் சொன்னா என்ன அர்த்தம்..??? கல்யாணம் என்ன சாதாரண விஷயமா உன்னோட மறுப்பு அவங்களுக்கு எவ்ளோ வலி கொடுக்கும் தெரியுமா..??”

Advertisement

“ம்மா சும்மா இப்படி டைலாக் பேசிட்டு இருக்காதம்மா சாப்பிடற சாப்பாட்டை கூட நமக்கு பிடிக்காட்டி குப்பைல போட்டுட்டு பிடிச்சதை தானே சாப்பிடுறோம் ஆனா இது வாழ்க்கை கொஞ்சமும் சீரியஸ்ன்ஸ் இல்லாம பேசிட்டு இருக்காத, அடுத்தவங்க வலிக்காக பார்த்து காலம் முழுக்க நான் கஷ்டப்பட முடியாது”

‘ஏய் அறிவுகெட்டவளே அந்த குடும்பத்துல அப்படி என்னடி கஷ்டம் உனக்கு வரபோகுது..’ என்று கேட்ட சுகமதியின் குரல் உடைந்தே விட்டது அறிவீனத்தால் வலிய வரும் ஸ்ரீதேவியை எட்டி உதைக்க முற்படும் மகளின் போக்கை கண்டு.

“அதிர்துடியனை திருமணம் செய்து கொண்டால் கைபேசியை உபயோகிக்கவே முடியாது என்பதோடு தன் யூடியூபர்  கனவிற்கு மூடு விழா நடத்தி விட வேண்டும் என்பதை எப்படி சொல்லுவாள்..!! சொன்னால் ஏற்று கொள்ளும் பக்குவம் அவள் பெற்றோருக்கு கிடையாதே, அவளும் என்ன செய்ய..??”

Advertisement

“ம்மா பிடிக்கலைன்னா பிடிக்கலை விடுங்களேன்..”

‘ஏன்டி நிச்சயத்துக்கு நாள் குறிச்சி புடவை நகை எடுத்து இருக்க இந்த நேரத்துல இதென்ன அபசகுனமான பேச்சு வாயை மூடு, முதல்ல உன் எண்ணத்தை மாத்து ஆசையோட எல்லாம் செய்திட்டு இருக்க அவங்க கிட்ட  எப்படி இதை சொல்லுவேன்’ என்று அவர் தவித்து நிற்க,

‘ம்மா பேசாம நாம அவங்களை பிராங்க் (prank) பண்ணோம்ன்னு சொல்லு அவங்களே புரிஞ்சிப்பாங்க’ என்று விஷ்ணு எடுத்து கொடுக்க,

‘என்னது பிராங்க்கா..??’ என்று அதிர்ந்து சுகமதி மகனை பார்க்க,

“ஆமாம்மா போன வாரம் கூட ஒரு சேனல்ல ஒருத்தர் அவர் செத்துட்ட மாதிரி ஏமாத்தி அவங்க குடும்பத்தை பிரான்க் பண்ணார் தெரியுமா..??  செம fun அவங்க பேமலில எல்லார் முகமும் எப்படி மாறிடுச்சி எல்லாரும் அவரை கட்டி பிடிச்சி கதறி அழுதுன்னு வேற லெவெல் என்ஜாய்மெண்ட்டா இருந்தது தெரியுமா..??” என்று கூற,

மறுபுறம் யாழியின் அடிமனமோ ஒருபுறம் தம்பிக்காக, தனக்காக யோசித்தாலும் மறுபுறம் அதியை இழப்பதற்கு தயாராக இல்லாததால் திருமண பந்தத்திற்கு நுழைந்தால் தான் அவன் பேச்சிற்கு கட்டுப்பட வேண்டும் என்பதால் தீவிரமாக சிந்தித்து வேறொரு முடிவிற்கு வந்தது…

அது தான் அதிர்துடியனுடன் லிவிங் ரெலேஷன்ஷிப்பில் இருப்பது என்பது..!!

ஆம் திருமணம் இன்றி சேர்ந்து வாழும் போது நிச்சயம் அவள் அவளாக இருக்க முடியும், அவள் லட்சியத்தை அடைய முடியும் அதிரனால் அவளை கட்டுபடுத்த முடியாது என்ற உறுதி பிறக்க, தான் பேசுவது சரியா தவறா..?? என்பது மட்டுமல்ல பேசும் வார்த்தையின் அர்த்தம் கூட உணராமலே தாயிடம் ,

“இந்த கல்யாணம் தான் வேண்டாம் வேணும்ன்னா நான் அவர் கூட லிவிங் ரிலேஷன்ஷிப்ல இருக்கேன்..” என்று அவள் ஆரம்பிக்கவுமே, 

‘அடி செருப்பால..’ என்று சுகமதி அவளை நெருங்கும் முன் அங்கே வந்த மகேஷ்வரன் மகளின்  வார்த்தைகளில் அதிர்ந்து யாழியை ஓங்கி அறைந்திருந்தார்.

“ஏய் என்ன வார்த்தை பேசுற நீ ..!! எங்க இருந்து கத்துக்கிட்ட  இதெல்லாம் முதல்ல லிவிங்க்கு அர்த்தம் தெரியுமா உனக்கு..??” என்று அவர் விழிகள் சிவக்க கர்ஜித்தவாறு மீண்டும் யாழியை அறைய போக, 

தன் முன் ருத்ரமூர்த்தியாக நின்ற தந்தையை கண்ட யாழிக்கு தூக்கி வாரி போட்டது.

அதிலும் அவர் அடிப்பார் என்பதை  எதிர்பாராதவள் மகேஷ் அடித்த வேகத்தில் சுவரில் மோதி கலங்கிய விழிகளுடன் அவரை பார்க்க சுகமதி தான் ‘என்னங்க வேண்டாம்’ என்று அவரை பிடித்து நிறுத்தி இருந்தார்.

அதற்குள் விஷ்ணு தமக்கையை தாங்கி பிடிக்க, “ஏன் தெரியாம..?? பிடிச்ச ரெண்டு பேரும் எந்த சாஸ்த்திரம், சம்பிரதாயம், நெறிமுறைகளுக்கு  கட்டுபடாம அவங்க விருப்பபடி பிடிச்ச வரை எவ்ளோ நாளானாலும் சேர்ந்து வாழலாம் பிடிக்காட்டி பிரிஞ்சி போயிடலாம் உங்க கல்யாணத்துல இருக்க மாதிரி இதுல பொண்ணுங்க யாருக்கும் அடிமையா இருக்க வேண்டியது இல்ல தெரியுமா..??” என்று பெற்றவர்களுக்கே வகுப்பெடுக்க, 

‘அப்போ உனக்கு மாப்பிள்ளையை பிடிக்கும் அப்படி தானே..??’ என்று சுகமதி மகள் மனதை அறிந்து கேட்க,

அவளோ அவர் கேள்வியை எதிர்பாராமல்  திகைத்து நிற்க தொடர்ந்த விஷ்ணு,

“ம்மா பாவம் யாழி உங்க கௌரவத்தை காப்பாத்த அவ வாழ்க்கையை பலி கொடுத்துடாதீங்க.., இல்லன்னா விட்டுடுங்க மிங்கிள் ஆகாம நாங்க கடைசி வரை சிங்கிளாவே  இருந்திக்கிறோம்” என்று விஷ்ணு  முடிக்கும் முன்,

‘ஏன்டா  இப்போ அது தான் ட்ரென்ட்டா..??’ என்று சுகமதி வலியோடு கேட்க

‘எது..??’

‘அதான் அவுத்து விட்ட கோவில் மாடு மாதிரி கேட்பார் மேய்ப்பார் இல்லாம தன் போக்கில்  கட்டுப்பாடே இல்லாம திரியறது..’ என்று அவர் கூறவும் இடையிட்ட யாழி, 

‘ம்மா ஒரு பொண்ணு சுயகௌரவத்தோட வாழவே கூடாதா..??’

“ஏன்டி எனக்கு கல்யாணம் ஆகி இருபத்தி நாலு வருஷம் ஆச்சு நான் என்ன சுயமரியாதை இல்லாமையா இருக்கேன் இல்ல உங்க அப்பா தான் என்னை கௌரவத்தோட நடத்தலையா..?? கல்யாணம் ஆனாலே எல்லாமே முடிஞ்சதுன்னு எவன்டி சொன்னான்..?? எங்க இருந்துடி இதையெல்லாம் கத்துட்டு வந்து எங்க உயிரை எடுக்குறீங்க.. இந்த அரைகுறை கூட சேராதன்னு சொன்னா கேட்கிறியா..?? நேத்து சந்தோஷமா  சம்மதம் சொன்னவ இப்போ மாத்தி பேச இந்த நாய் தான் காரணமா..??” என்று இருவரையும் அவர் சரமாரியாக  திட்டி தீர்க்க,

‘ம்மா நீ அந்த காலத்து மனுஷி அதான் அப்பா உன்னை பெட்டி கட்டி அனுப்பிடுவாருன்னு பயந்துட்டு எல்லாத்துக்கும் பொறுத்துட்டு போற ஆனா எங்களுக்கு என்ன தலை எழுத்து எதுக்கு பொறுக்கணும்..??’ என்று யாழி கேட்க,

“ஏய் லூசே எங்க ரெண்டு பேருக்குள்ள எந்த பிரச்னையும் இல்ல நாங்க மனமொத்து ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுகொடுத்து சந்தோஷமா, மதிப்போட தான் வாழ்ந்துட்டு வரோம்.., ஆனா என்னை பெட்டி கட்ட வைக்க போறதே நீங்க தான்டி, உங்களை மாதிரி அறிவு கெட்ட ஜென்மங்களை பெத்த… ” என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே,

“ம்மா திரும்ப திரும்ப விட்டு கொடுக்குறதுன்னு சொல்லி சொல்லி எங்க சந்தோஷத்தை பறிக்காதீங்க ஏன் பொண்ணுங்க தான் பொறுமையா இருக்கனுமா..? இதையே சொல்லி சொல்லி அவங்களை வளரவிடாம முடமாக்கிட்டு வருது இந்த சமூகம் ‘ என்று விஷ்ணு பேசிக்கொண்டே போக ,

ஒருகட்டத்தில் யாழி அவனையே விழி அகலாமல் ‘எப்புட்றா..??’ என்பதாக பார்க்க,

‘நேத்து உனக்காகவே இன்ஸ்ட்டால fbல தேடிட்டு இருந்தப்போ ஒரு  motivational speaker சொன்னாருடி அப்போ தான் எனக்கே தெரிஞ்சது உனக்காக பேச யூஸ் ஆகுமேன்னு லிங்க் சேவ் பண்ணி வச்சேன்’.

தன் மீதான தம்பியின் பாசத்தில் நெகிழ்ந்து நின்றவளுக்கு கண்கள் கலங்க, “சரிடா  நீ பேசு, மறக்காம அந்த லிங்க்  எனக்கு அனுப்பு என் பிரெண்ட்ஸ்க்கு யூஸ் ஆகும்” என்று கூறவும் மீண்டும் தந்தை புறம் திரும்பியவன்,

‘கல்யாணத்தை விட லட்சியம், கனவு முக்கியம் ஏன் எப்பவும் பொண்ணுகளை அந்த குறுகிய வட்டத்துக்குள்ள  அடைக்க பார்க்குறீங்க..?? பெத்துட்டதால எங்க வாழ்க்கையை நீங்க தீர்மானிப்பீங்களா..?? உங்க பிள்ளையாவே இருந்தாலும் வீ ஆர் இன்டிவிஜுவல்ஸ்(we are individuals) எங்களுக்குன்னு தனித்தன்மை இருக்கு, கனவுகள் இருக்கு, எங்க வாழ்க்கையை எப்படி அமைச்சிக்கனும்ன்னு எங்களுக்கு தெரியும்’ என்று விஷ்ணு கூற பாய்ந்து வந்து அவன் கன்னத்திலும் தன் கரத்தை இடியென இறக்கி இருந்தார் மகேஷ்…

அவன் அதிர்ச்சியுடன் பார்க்கவும், “இனி வாயை திறந்த கொன்னு புதைச்சிடுவேன் நாயே உன்னை..” என்று விழிகள் சிவக்க மீண்டும் ஒரு அரை விட்டு மகேஷ் எச்சரிக்க,

“வேண்டாம் யாழி உங்களோட ஒவ்வொரு வார்த்தையும் எத்தனை பேரை காயபடுத்தும் எத்தனை மனசை குத்தி கிழிக்கும்ன்னு தெரியாம பேசாத, எவ்ளோ ஆசையோட வந்தாங்க அந்த அம்மா, மாப்பிள்ளையில இருந்து  எல்லாருக்கும் உன்னை பிடிச்சி போச்சு, உனக்காக உன் விருப்பத்தை முன்னிறுத்தி புடவை, நகை வாங்கியாச்சு அவங்க வேற என்ன பண்ணனும்ன்னு எதிர்பார்க்கிற…??” என்று அதே கோபத்தோடு மகள் புறம் திரும்ப,

‘ம்மா அடுத்தவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து என் வாழ்க்கையை நான் இழந்துட முடியாது.., கல்யாணத்துக்கு நான் ஒத்துக்காட்டி அவங்களுக்கு சில நாள் கஷ்டம் , வலி, வேதனை எல்லாம் ஆனா ஒத்துக்கிட்டா வாழ்க்கை முழுக்க எனக்கு வலி நரக வேதனை தான்’

உங்களுக்கு நிதர்சனம் புரியல கல்யாணம், குடும்பம் இதெல்லாம் விளையாட்டா இருக்குல” என்று வலியோடு கேட்ட சுகமதி,

“யாழி இன்னும் நீ மாப்பிள்ளையை நேர்லயே பார்க்கலை அவர்கிட்ட ஒரு வார்த்தை பேசல அதுக்குள்ளே எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வருவ..??”

‘நேத்து ஏதோ அவசரத்துல சம்மதம் சொல்லிட்டேன் இப்போ நிதானமா யோசிக்கிறப்போ தான் தெரியுது அது தப்புன்னு..”

“யாழி  அப்போ சொன்ன சொல்லுக்கும் கொடுத்த வாக்குக்கும் எந்த அர்த்தமும் இல்லையா..??” என்று கேட்ட மகேஷ்வரனின் காதில் ‘எனக்கு வார்த்தை ரொம்ப முக்கியம் மிஸ்டர் மகேஷ்’ என்ற அதிர்துடியனின் வார்த்தைகளே ரீங்காரமிட்டு கொண்டிருந்தது.

‘இப்படி எல்லாம் கேள்வி கேட்டா என்ன பதில் சொல்றது எனக்கு தெரியாதுப்பா…, ஆனா ஒன்னு மட்டும் சொல்லுவேன் என் வாழ்க்கை என் கையில் தான் (My life my rules) உங்களுக்காக கூட அதை விட்டு கொடுக்க மாட்டேன்  இதுக்கு மேல என்னை வற்புறுத்தினா நான் சியூசைட் பண்ணிப்பேன்’ என்று நேற்று இரவு முழுக்க கண் விழித்து  சோஷியல் மீடியாவில் வலம் வந்து தோழிகளுடன் பேசி சந்தேகங்களை தீர்த்து இறுதியில்  தன் முடிவை அவள் தெரிவிக்க நொறுங்கி போனார் மகேஷ்வரன்.

சுகமதியோ  மயங்கியே விழுந்திருந்தார்.

மனைவிக்கு முதல் உதவி செய்து அவரை அறைக்கு அழைத்து சென்றவர் படுக்க வைக்க பிள்ளைகள் இருவரும் வெளியில் நின்று கைகளை பிசைந்து கொண்டு பார்த்திருந்தனர்.

அவர்களோ தங்களுக்குள், “நாம என்னடா தப்பு பண்ணோம் எப்போ நம்மளை புரிஞ்சிப்பாங்க, இவங்க யாருடா நம்ம வாழ்க்கையை தீர்மானிக்க..?? இன்னும் அடிமைத்தனம் மாறவே இல்ல” என்று தங்கள் தவறை உணராமல் அவர்கள் பேசிக்கொண்டிருக்க,

வேறு வழி இல்லாத மகேஷ்வரன் சுந்தரலிங்கத்திற்கு அழைத்து திருமணத்தை ஒத்தி போடுமாறு கூற ‘ஏன்..??’ என்று அவர் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தடுமாறியவர் மனம் முழுக்க விஷயம் அதிக்கு தெரிய வருகையில்  அவன் கோபம் எந்த அளவிற்கு சென்று யார் மீது எப்படி முடியும் என்று கணிக்க முடியவில்லை.

மறுபுறம் இருந்த சுந்தரலிங்கமோ ‘நீங்க வைங்க மகேஷ் நான் நேர்ல வந்து பேசுறேன்’ என்று ஆழைப்பை துண்டிக்க அங்கே வந்த மரகதம் கணவனின் முகத்தை படித்து,

“என்னங்க விஷயம் சம்மந்தி என்ன சொன்னார்..?? கேட்ரிங் பத்தி சொல்லிட்டீங்களா..?? யாழிக்கு பிடிச்ச டிஷ்ஷஸ் என்னன்னு கேட்க சொன்னேனே கேட்டுட்டீங்களா..??” என்றிட,

‘ஆம்’ என்பதாக தலையசைத்து மனைவியின் உடல் நிலை புரிந்த சுந்தரம் அதற்கு மேல் தொடர்ந்த அவர் கேள்விகளுக்கு பதில் இன்றி தவித்து நின்றார்.

******************

மகேஷ்வரனின் வீட்டின் முன் வந்து காரை நிறுத்தி  இறங்கிய அதிர்துடியனின் கரம் அடுத்த நொடியே இடியென விஷ்ணுவின் கன்னத்தில் இறங்கி இருந்தது.

ராகம் தொடர்ந்து இசைக்கும் இணைந்திருங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!