Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிறம் தந்த வானவில் 1

??என்னையும் அறியாமல் சில பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்.. போட்டி முடியும் முன் பிழைகளை மாற்றி கொள்கிறேன்�

 


அத்தியாயம் ஒன்று

அதிகாலை துகினமும், சற்று முன் போடப்பட்ட சாம்பிராணி புகையும், ஓம் நமசிவாய என்ற எஸ். பி. பி குரலில் ஒலித்தப் பாடலும் அந்த கோவிலை ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது… அந்த கோவிலில் இருந்து வந்த சாம்பிராணி புகையின் வாசமோ இல்லை அதிகாலை துகினத்தின் குளிமையோ ஏதோ ஒன்று அவளின் மனதை மெல்ல வருடி விட்டது…



Advertisement

அதனை ஆழ்ந்து சுவாசித்தவள் எதிர்புறம் கம்பீரமாக நின்ற கோவிலைப் பார்த்தபடியே அந்த எழுபதடி தார் சாலையை கடக்க முயன்றாள்.

Advertisement

அந்த சமயம் கிரீச் என்ற சத்தத்தில்  ஓர் இரு சக்கர வாகனம் அவளின் முன் நின்றதும் பயந்து பின்னால் இரடி வைத்தவள் வாகனத்தில் அமர்ந்திருந்தவனைக் கோபமாக பார்த்தாள்.

Advertisement

“காது என்ன பொடனிலயா இருக்கு…

ஹார்ன் அடிச்சிட்டே வரேன் கொஞ்சம் கூட காதுல வாங்கிக்காம நீ பாட்டுக்கு க்ராஸ் பண்ற… நான் மட்டும் ப்ரேக் போடலன்னா இந்நேரம் போயி சேர்ந்திருப்ப இடியட்…” எனக்  கத்தினான் இரு சக்கர வாகனத்தில் வந்தவன்.

Advertisement

அவன் இதழ் அசைவை தெளிவாக புரிந்து கொள்ள சில நிமிடங்கள் தேவைப்பட்டது அவளுக்கு… இதுதான் கூறியிருப்பான் என்று யூகித்த  நொடி  நாசித்தூவரம் விடைக்க “சாரி…” என்றவள்

“இவன் அப்பன் வீட்டு ரோடு மாதிரி இஷ்டக் கூந்தலுக்கு வேகமா வர வேண்டியது. அப்பறம் எவனவது க்ராஸ் பண்ணா குத்துதே கொடையுதேன்னு சொல்ல வேண்டியது. இரிடேடிங் கபோதீங்க…” என சற்றே சத்தமாக பேசிவிட்டு அவனைக் கடந்து சென்றாள்.

அவளின் கத்தல் பேச்சில் அவசரமாக   பார்வையை சுழல விட்டான்.  அதிகாலை என்பதால் இவர்கள் இருவரை தவிர வேறு எவரும் அங்கில்லை

“அப்பாடி யாருமில்லை…” என நெஞ்சில் கைவைத்து முணுமுணுத்தவன் தன்னைத் தாண்டி சென்றவளைப் பார்த்தான்.

‘எவன் சிக்கிட்டு சீக்கியடிக்க போறானோ தெரியல…’ என மனம் தன்னாலேயே அவளின் கணவனை நினைத்து அனுதாபப்பட்டது. பாவம் அவனுக்கு தெரியவில்லை  அந்த பாக்கியசாலியே அவன் தானென்று…

******

மாங்கல்யம்

தந்துனானே மம ஜீவன

ஹேதுனா கண்டே பத்னாமி

சுபகே த்வாம் ஜீவ சரடாடட்

சத்தம்

என்ற ஐயரின் குரல் அவன் காதை நிறைக்க தன் அருகில் அமர்ந்திருந்தவளின் சங்கு கழுத்தில் பொற்தாலியை கட்டினான் காசி.  அவளோ  காசியை ஓரக்கண்ணால் பார்த்தப்படி இதழ் கடித்து மெல்ல சிரித்தாள்.

மனையாளின் சிரிப்பில் இன்னும் அவளை நெருங்கி அமர்ந்தவன்

“கும்முன்னு இருக்கடி தங்கம்…” என அவளின் செவி மடலில் இதழ் உரச கூறியவனை எட்டி உதைத்தாள் காசியின் மனையாட்டி…

“ஐயோ,…” என கனவில் விழுந்தவன் நிஜத்திலும் கிழே விழுந்திருந்தான். இல்லையில்லை நிஜத்திலும் எட்டி உதைத்ததால் கிழே விழுந்திருந்தான்.

“ஐயோ அம்மா…” என அலறியடித்து கண் விழித்தான். அனைத்தும் கனவென்று புரியவே சில நிமிடங்கள் தேவைப் பட்டது அவனுக்கு…

“ஹிம்ம் கனவுல கூட நான் கடைசியா சந்தோசமா இருந்த நாள் தான் வருது…” என புலம்பி கொண்டே தரையிலிருந்து எழுந்தவனின்  கண்கள் இடுப்பில் கைவைத்து முறைத்துக் கொண்டிருந்தவன் மேல் விழுந்தது.

“டேய், நீ எப்ப டா வந்த? வர எட்டு மணியாகுன்னு சொன்ன?…” எனக் கண்களை கசக்கிக் கொண்டே கேட்டான் காசிநாதன்.

காசியை ஒரு பார்வை பார்த்தவன்  “கும்முன்னு இருக்க டி தங்கன்னு. சொல்லும் போதே வந்துட்டேன் டா மாமே…” எனக் கோண சிரிப்புடன் கூறினான் வந்தவன்.

அவனின் வில்லங்கமான சிரிப்பை சந்தேகமாகப் பார்த்தபடி.”நீயா என்னை தள்ளிவிட்ட?…” எனக்  கேட்டான்.

“ச்ச ச்ச தள்ளியெல்லாம்  விடல எட்டி உதைச்சேன்…” என்றான் வலது காலை ஆட்டிக் கொண்டே

“ஏன் டா நாயே…” என பல்லை கடித்தபடி கேட்டான் காசி..

“பின்ன கொஞ்சுவங்களா? இத்தனை நாள்  வெயிட் பண்ணதுக்கு கையும் களவுமாக சிக்கியிருக்க விடுவேனா நான்…” என்றான் இவனும் பதிலுக்கு பல்லைக் கடித்துக்கொண்டு.

அவனின் கோபம் எதற்கென்று புரிய வர “இங்க பாரு மச்சான்  என்னால தான் உன் கல்யாண பேச்சுக்கு ஃபுல் ஸ்டாப் வந்துச்சு அதை மனசுல வைச்சுக்க…” என்றான் இல்லாத காலரை தூக்கி விட்டப்படி.

“மயிரு, நானே ஏதாவது பேசி ஸ்டாப் பண்ணிருப்பேன். பெரிய பருப்பு மாதிரி நேரம் சரியில்ல அது சரியில்ல இது சரியிலன்னு சொல்லி இங்க வர வைச்சுட்டு பேச்சை பாரு வெண்ணை…” என ஆரம்பித்து சில பல ஆங்கிலக் கெட்ட வார்த்தைகளை எடுத்து விட…

அவசரமாக காது இறுக மூடியப்படி  குளியலறையைக்குள் புகுந்து கொண்டான் காசி…  அவன்  செய்கையில் இருந்த  கோபம் சட்டென்று மறைய

“எத்தனை மணிக்கு இன்டர்வியூ மாமே…” எனக் கத்தினான்.

மாமே என்ற அழைப்பிலயே அவன் மலையிறங்கி விட்டான் எனப் புரிந்து கொண்டவன் குளியலறையிலிருந்து தலையை மட்டும் வெளிவிட்டு நக்கல் தொனிக்கும் குரலில்

“இன்டர்வியூ எத்தனை மணிக்கோ அத்தனை மணிக்கு…” எனக் கூற  “அடிங்க…” எனத் தலையணையை தூக்கி எறிந்தான்.

“நீ செருப்பையே கழட்டி தூக்கிப் போட்டாலும் இன்னைக்கு இன்டர்வியூ டைமை சொல்ல மாட்டேன் டா சாவு…” என சத்தமாக கூறிவிட்டு  குளியலறைக்குள் நுழைந்து கொண்டான் காசிநாதன்.

“வெளிய தானே வருவ. அப்ப இருக்கு டி உனக்கு…” எனக் கத்தியவன் அவ்வீட்டிலிருந்த மற்றொரு அறைக்குள் நுழைந்து கொண்டான்.

பயணக் களைப்பு போக சுடு நீரில் தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்தவன் மணியைப் பார்த்தான். நேர்காணலுக்கு செல்ல இன்னும் சில மணி நேரம்  இருக்க படுக்கையில் விழுந்தான்.

பயணக் களைப்பில் கண்கள் தன்னாலேயே மூடிக் கொள்ள அடுத்தநிமிடம் அவன் விழிகளுக்குள் விழுந்தாள் சற்று முன் பார்த்த பெண். அதுவும் அவளின் கன்னத்திற்கு சற்றே மேலிருந்த அந்த மச்சம் ‘அம்மாடியோவ்…’ உண்மையாகவே அவனை ஏதோ செய்தது.

சட்டென இமைகளைத் திறந்து கொண்டவனின் மனமோ “அவ கபோதீன்னு திட்டியும் கன்னத்து மச்சம் வரைக்கும் பாத்து வைச்சிருக்கயேடா…” எனக் கேலி செய்ய அதனை தலையில் தட்டி அடக்கியவனின் அலைபேசி தன் இருப்பைக் காட்டியது…

அலைபேசியில் தெரிந்த இலக்கத்தை பார்த்தவனின் இதழ்கள் தன்னாலேயே புன்னகையை பூசிக் கொள்ள அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

“டாட்…” என்றவனின் குரலில் அத்தனை மென்மை…

“கலை ரீச் ஆயிட்டியா?…” எனக் கேட்டார் கலையின் தந்தை தியாகராஜன்.

“வந்துட்டேன் ப்பா. நானே உங்களுக்கு கூப்பிட நினைச்சேன் நீங்களே கூப்பிட்டீங்க…” என்றான் இதழில் நீங்காத சிரிப்போடு.

“நீ  கிளம்பிட்டேன்னு சொன்னதுல இருந்தே நான் தூங்கல தம்பி. இப்ப டைம் பார்த்தேன் நீ ரீச் ஆயிருப்பண்ணு தோணுச்சு. அதான் உடனே  கால் பண்ணேன்…” என்றார் அவனின் தந்தை.

தந்தையின் பேச்சில்  கலையின் அழுத்தமான இதழ்கள் இன்னும்  புன்னகையில் விரிய அதே புன்னகையுடன்  “அம்மாவும், பாப்பாவும் தனியா இருக்காங்க ப்பா… அவங்க சொன்னா புரிஞ்சுக்க மாட்டாங்க. நீங்களும் இல்லை, மாமா கூடயே என்னையும் இங்க அனுப்பிட்டாங்க. எப்படி ஆம்பளை இல்லாம ரெண்டு பேராலயும் சமாளிக்க முடியும்  தெரியல. ஏதாவது சொன்னா பெண்ணியம் பெரியாரிசம் பேசி எரிச்சலை கிளப்புவாங்க…” என்றவன் தயங்கியப்படி

“அவங்க எது சொன்னாலும் காதுல வாங்கிக்காதீங்க அப்பா.. எனக்காக அவங்களோட போய் இருங்க ப்பா…” என்றான்.

“இதெல்லாம் நீ சொல்லனுமா தம்பி. அவங்களை நான் பாத்துக்கிறேன். நீ பத்திரமா இரு…” என்றார் தியாகராஜன். தந்தையின் பேச்சில் என்றும் போல இன்றும் பூரித்து போனான். அதே சமயம் தாயின் பேச்சும், முக பாவமும் நினைவிற்கு வந்தது.

******

“இப்ப முடிவா என்ன தான் சொல்ற? இப்படியே கல்யாணம் பண்ணாம உங்கப்பாக் கூடயே இருந்திருக்கிறயா…” என கல் திட்டில் அமர்ந்திருந்த மகனைப் பார்த்துக் கத்தினார் சௌந்தர்யா.

“எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் ம்மா. சொன்னா புரிஞ்சுக்கோங்க. சும்மா சும்மா ஏதாவது ஒரு பொண்ணோட போட்டோவை அனுப்பி  பாரு பாருன்னு டார்ச்சர் பண்ணாதீங்க  பிளீஸ்…” என தாயை போல கத்தவில்லை என்றாலும் அவன் தந்தையை போல் அமைதியாகவே கூறினான். இனி இவனிடம் பேசி பயனில்லை என நினைத்தவர்

“ஏங்க தம்பி நீங்களாவது சொல்ல கூடாதா. இப்பவே இருபத்தி எட்டு வயசை நறுக்குன்னு முழுங்கிட்டு இருக்கான். இன்னும் இரண்டு வருசம் போச்சுன்னா இப்ப வந்துட்டு இருக்கற வரன் கூட வராமல் போயிடும். இவனுக்கு கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன் தம்பி…” எனத் தனக்கு எதிரில் நின்ற  மருமகன் காசிநாதனிடம் கூறினார் சௌந்தர்யா.

“விடுங்க அத்தை, அவனாது கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கட்டு்ம்…” எனக் கூறியவனின் கையை நறுக்கென்று கிள்ளி வைத்தாள் காசியின் துணைவி மணிமேகலை.

“ஷ்…” என்ற முனகலோடு பக்கவாட்டில் திரும்பி பார்த்தான்.  தன் மேடிட்ட வயிற்றை பிடித்தபடி காசியின் மனைவி  நின்றிருந்தாள்.

‘இவ இருக்கறது தெரியாம வாய்விட்டு மாட்டிகிட்டயே காசிநாதா…’ என நினைத்தவன் சௌந்தர்யாவை  அசட்டு பார்வை பார்த்தான். அவரோ மகள், மருமகனின் ஊடல் தெரியாமல் மீண்டும் காசிநாதனிடம் முறையிட்டார்.

“ஏன் தம்பி, நீங்க கல்யாணம் பண்ணிட்டு புள்ளைக் குட்டியோட நல்லா தானே இருக்கீங்க அப்பறம்  என்னவாம் இவனுக்கு…” என்றவரிடம்

“அட ஏங்க அத்தை நீங்க வேற புள்ளைகுட்டி பெத்துகிட்டா போதுமா மனுசனுக்கு நிம்மதி…” என ஏதோ சொல்ல வர… சட்டென்று காசியின் மனம் மேகலையை நினைவுப் படுத்தியது.  ஓரக்கண்ணால் மனைவியைப்  பார்த்தான். அவளோ நாவால் கன்னத்தை நிமிட்டியப்படி  “நீ மேல சொல்லு டி அப்பறம் இருக்கு உனக்கு…’ என்பதைப் போல் கண் ஜாடை காட்ட…

அசட்டு சிரிப்பை உதிர்த்தவனின் மனமோ ‘மறுபடியும் மறுபடியும் தப்பு பண்றீங்க காசி…’ என கேலி செய்ய அதனை தலையில் தட்டி விரட்டி விட்டவன் தான் கூறியதை சமாளிக்கும் விதமாக

“அது வந்து அத்தை…மச்சானுக்கு நேரங்கிரம் சரியில்லயோ என்னவோ. கொஞ்ச நாள் வெளி வேலைக்கு அனுப்பி விடுங்களேன். நாலு நல்லது, கெட்டது  பார்த்தா மனசு மாறும் நினைக்கிறேன்…” எனக் கூற சட்டெனத் திரும்பி காசியை முறைத்தான் கலை.

‘கல்யாணத்திலிருந்து தப்பிக்க ஐடியா தரேன். கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம முறைக்கிறான் பாரு…’  என நினைத்தபடியே கலையை பார்த்தான். அவனோ தந்தையை விட்டு பிரிய வேண்டுமே என்ற எண்ணத்தில் இருந்தான்.

நால்வரும் அவரவர் யோசனையில் மிதக்க சிறிது நேரம் அங்கு மௌனம் மட்டுமே ஆட்சி செய்தது. அங்கு நிலவிய மெளன ஆட்சியை காசியின் மனைவி தான் களைத்தாள்

“ஏங்க மாமா, நீங்க கூட உங்க ஆபீஸ்ல  ஏதோ வொர்க் இருக்குன்னு வேணுன்னு சொல்லிட்டு இருந்தீங்களே அந்த வேலை அண்ணனுக்கு செட் ஆகுமான்னு பாருங்களேன்…” என மேகலை கூறவும் தான் அன்று எம்.டி பேசியது நினைவிற்கு வந்தது.

“சைட் மெட்டீரயலுக்கு பிராப்பர்  பில் இருந்தாலும்  எனக்கு என்னவோ சரியாப் படலை காசிநாதன். மெட்டீரியல் சப்ளேக்கு நம்பிக்கையான ஒரு ஆளை பாருங்க…” எனக் கூற சரியென தலையாட்டிவிட்டு வந்தவன் தற்போது மனைவி நினைவு படுத்தும் வரை அதனை மறந்திருந்தான்.

“பாரேன் தங்கம் நானும் இதை மறந்துட்டேன்…” என மனைவியிடம் கூறியவன்  கல் திட்டில் அமர்ந்திருந்த கலையிடம்

“ஏன் மச்சான் உங்களுக்கு ஒகேன்னா அங்க வந்து பாருங்களேன்…” என்றான்.

“இல்ல மாமா நான் அங்க வந்துட்டா அம்மாவும், பாப்பாவும் தனியா இருப்பாங்க. அதும் இல்லாம  இங்க ஒன் மந்த் நோட்டீஸ்… ” என கலை சொல்ல சொல்லவே  இடையிட்டார் சௌந்தர்யா.

“உன் அம்மா காலேஜ் பிரின்சிபாலுன்னு  அடிக்கடி மறந்து போற ஏகலைவா. எந்த பிராப்ளம் வந்தாலும் ஆம்பளை இல்லாம ஃபேஸ் பண்ற தைரியம்  எங்க இரண்டு பேருக்குமே இருக்கு. நீ எங்களை பாத்துக்க வேணுன்னு இல்லை…” சட்டென பிரின்சிபால் டோனில்  கூறியவர் அதே குரலில்

“நீ மாமா சொன்ன வேலையை பாரு… அவரு சொல்ற போல நாலு இடம் போனாதா உனக்கும் புத்தி வருன்னு   நினைக்கிறேன்…” என  கூறினார். அவரின் குரலே நீ சென்று தான் ஆக வேண்டும் என்ற செய்தி இருந்தது…

ஆனால் இவனோ தந்தையை விட்டு பிரிய வேண்டுமே என்ற  எண்ணத்திலயே மாட்டேன் என்பதில் உறுதியாக நின்றான்.

“மா புரியாதா மாதிரி பேசாதீங்க…  இங்க நோட்டீஸ் பீரியட் ஒன் ஆர் டூ மந்துக்கு இருக்கும். தென் உங்களுக்கே தெரியும் நான் இங்க ரொம்ப வருசமா வொர்க் பண்ணிட்டு இருக்கேன். சடன்லி சொல்லாம கொள்ளாம வேலையை விட்டு நின்னுட்டா எனக்கு தான் கெட்ட பேர் வரும்… சோ இப்போதைக்கு நான் எங்கேயும் போக மாட்டேன்.பியூ மந்த்ஸ் போகட்டும் அதுக்கு அப்பறம் கல்யாணம் பண்றது வெளியூருக்கு வேலைக்கு போறத பத்தியெல்லாம் பேசிக்கலாம்…” என்றான் எரிச்சல் குரலில்

“பரவாயில்ல மச்சான். நீங்க நோட்டிஸ் பீரியட் முடிஞ்சே  வாங்க.  அப்பறம் வெளியூரெல்லாம் போக வேண்டா மச்சான். நான் வொர்க் பண்ற இடத்தில தான் உங்களுக்கு வேலை… இப்போதைக்கு இங்க வொர்க்ல ஜாயின் பண்ணிக்கோங்க தென் மேரேஜ் பத்தி பேசிக்கலாம். அப்படி தானே அத்தை…” கலை மறுத்த அனைத்திற்கும் காசி விடை சொல்ல அவனை முடிந்த மட்டும் முறைத்தான் கலை.

அவனோ நமட்டு சிரிப்புடன் “என்ன மச்சான் ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிறீங்க…” எனக் கேட்டு புருவத்தை ஏற்றி இறக்க… பல்லை கடித்தபடி “சரி மாமா வர பாக்குறேன்…” என்றான் சௌந்தர்யாவின் மூத்த புதல்வன் ஏகலைவன்.

காசிநாதனும், ஏகலைவனும் கல்லூரி காலங்களிலிருந்தே நண்பர்கள்… தன் நண்பனின் தங்கையை ஒரு தலையாக காதலித்தவன் நண்பனின் சம்மதத்தோடு சௌந்தர்யாவிடம் முறையாக பெண் கேட்டு மணம் முடித்து கொண்டான்.  என்னதான் நண்பர்களாக இருந்தாலும் சௌந்தர்யா முன் மட்டுமே இருவரும் முறை சொல்லி அழைத்துக் கொள்வார்கள். மற்ற நேரங்களில் இருவரின் அழைப்பும் பேச்சும் அதற்கு எதிர் மறையாக தான் இருக்கும்…

அடுத்த நாளே தந்தையிடம் தன் மறுப்பிற்கான காரணத்தை கூறி புலம்பினான் .

அவரோ  “நீ  போ தம்பி. நீயும் அவளை விட்டு போனா தான் ஆம்பளைங்க துணை இல்லாம பொம்பளையால ஒன்னும் கிழிக்க முடியாதுன்னு புரியும் உன் அம்மாக்கு…” என்றார் எரிச்சலாக.

அதற்கு கலை பதில் கூறவில்லை அவன் அமைதியில் “உன் அம்மாவையும், பாப்பாவையும் நான் பாத்துக்கிறேன் ப்பா. நீ தைரியமா போ…” என்றார்.  அதன் பிறகே கோபியிலிருந்து கோவை செல்ல வேண்டிய ஏற்பாடுகளை கவனித்தான்.

சௌந்தர்யா, தியாகராஜன்  தம்பதயினருக்கு பிறந்த மகவுகளில் மூத்தவன் ஏகலைவன், இளையவள் மணிமேகலை…  மூத்தவன் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததுமே தியாகராஜன் சௌந்தர்யாவை வேலையை விட சொல்ல மாட்டேன் என்று விட்டார்.  அப்போது ஆரம்பித்தது இருவருக்குமான விரிசல் அது இளையவள் பிறந்த பின்பு இன்னும் அதிகமானது…

சௌந்தர்யா அவரின் முடிவில் உறுதியாக இருந்தார் என்றால் தியாகராஜன் அவரின் முடிவிலும்,  உறுதியாக இருந்தார்.  நாட்கள் செல்ல செல்ல  அந்த உறுதியே இருவரின் பிரிவிற்கும் காரணமாக இருந்தது…  அது பிள்ளைகள் இருவரும் வளர்ந்து இளையவளுக்கு திருமணமான பின்பும் தொடர்கிறது.

ஆம்பளை நான் இல்லாமல் ஒற்றையாளாக  பிள்ளைகளை உன்னால் பார்த்து கொள்ள முடியுமா? ஒரு பெண்ணின் சம்பாத்தியத்தை வைத்து இரண்டு பிள்ளைகளை பார்த்துக் கொள்ள முடியுமா? என்ற தியாகராஜனின் ஆணவப் பேச்சிற்கும், ஏகத்தாளமான கேள்விக்கும் இன்று சௌந்தர்யா  இருக்கும் நிலை தான் பதில்.

மனைவியை விட்டு பிரிந்து சென்றாரே ஒழிய பிள்ளைகளை விட்டு செல்லவில்லை அவர்… கலையின் அதீத நேரம்  தந்தையுடன் தான் கழியும். அதனால்

தான் என்னவோ தந்தையின் புத்தி இவனுக்குள்ளும் சில சமயம் தலை தூக்கும். அந்த சமயம் அதனை தலைத்தட்டி அடக்கி விடுவது என்னவோ சௌந்தர்யா தான்…

ஆனால் இனி ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!