Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ராகம் – 15.1

அலுவலக அறையில் இருகரங்களையும் கோர்த்து அதில் நாடி பதித்து அமர்ந்திருந்த அதிர்துடியனின் பார்வை அவன் முன்னிருந்த கணினியில்  பேசிக்கொண்டு இருந்த யாழியின் மீது  படிந்திருந்தது.

கடந்த சில மணிநேரங்களில்  அவளது மொத்த காணொளியையும் பார்த்து முடித்திருந்தவன் முகத்தில் இளம் புன்னகை…!!

இப்போது யாழியின் கலெக்டர் கனவில் தொடங்கி யாழி விஷ்ணுவின் பார்வை பரிமாற்றத்தின் வரை அர்த்தம் புரிபட கணினியை அணைத்து விட்டு இருகரங்களையும் பின்னே கோர்த்தவாறு நடக்க தொடங்கியவனின் மனதில் நேற்று யாழியுடனான நொடிகளின் ஊர்வலம்..!!

‘அவன் முத்தமிட்டதும் மயங்கியதில் தொடங்கி இறுதியாக அவனுக்கு அவளை பிடிக்குமா..??’ என்று கேட்டது வரை அவனருகே அவளை தொலைத்து நின்றவளின் உணர்வுகளை  நிதானமாக  அசைபோட்டு கொண்டிருந்தான்.



Advertisement

இறுதியில் அதரங்கள் இன்னுமே அழகாய் விரிய  தன் இருக்கையில் அமர்ந்தவன் “லிவிங்ல இருக்க அளவு என் மேல காதலாடி..??” என்று தன்னுள் இருப்பவளிடம் கேட்டவாறே மகேஷிற்கு அழைத்தான்.

அசுரத்தனமான தொழிற்நுட்ப வளர்ச்சியின் சாதகத்தை மீறிய பாதகங்களை நாள்தோறும் கவனித்து வருபவன் தான் அதிர்துடியனும்..!!

அதிலும்  கர்ணனுக்கு கவச குண்டலம் போல இந்த கால பிள்ளைகளிடம் தங்களின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட ஸ்மார்ட்போனின் தாக்கம் எத்தகையது என்பதையும் நன்கு அறிவான்.

Advertisement

பக்குவம் இல்லாத வயதில் அதன் பயன்பாடு குறித்த தெளிவில்லாமல் கைபேசியின் பிடியில் சிக்கிகொண்டிருக்கும் ஏராளமான யாழிக்களும் விஷ்ணுகளும் உள்ளனர்..,

Advertisement

நிச்சயம் இது அவனுக்கு மிக பெரிய சவால் தான்..!!

யாழியை திருமணம் புரிந்த பின்னர் வாழ்க்கை எவ்வாறு அமையபெரும் என்று பட்டவர்த்தனமாக தெரிந்த பிறகும் இந்த அக்னி பரிச்சையை அவன் மேற்கொள்ள வேண்டுமா …?? என்று மனதின் ஓரம் கேள்வி எழுந்து அவள் பக்குவம் பெரும் வரை திருமணத்தை தள்ளி போடலாமே என்ற ஆலோசனை கொடுக்க அதை புறம் தள்ளிவிட்டு அடுத்த வாரமே அவளை மணக்கும் முடிவிற்கு வந்திருந்தான்.

*************************

Advertisement

‘உட்காருங்க மாமா’ என்று புன்னகையுடன் அவரை வரவேற்று அமர்த்திய அதி,

‘வழக்கமா நீங்க நிச்சயதார்த்தம் உங்க வீட்ல வைப்பீங்ளா இல்லை மண்டபமா..??” என்று எடுத்ததும் கேட்க,

‘சா…ர்ர்ர்’

“நோ மோர் சார் ,மாப்பிள்ளைன்னு கூப்பிடுங்க” என்றான்.

அவன் அதிரடியில் திகைத்து போயிருந்தவருக்கு வார்த்தை வசப்படவில்லை,

“ஏற்கனவே முடிவு பண்ணின  மாதிரி நாளைக்கு  நிச்சயம் வச்சிக்கலாம் ஆனால் கல்யாணம் அடுத்த  மாசம் இல்ல வர புதன்கிழமை உங்களுக்கு ஓகே தானே மாமா..??”

‘சா…’ என்று ஆரம்பித்தவர் அவன் பார்வையில் தன்னை திருத்தி,

‘இவ்ளோ அவசரமா செய்யணுமா மாப்பிள்ளை  நீங்க இன்னும் கொஞ்சம் டைம் எடுத்து யோசிச்சி முடிவு பண்ணுங்களேன்’ என்றார்.

‘தேவையான அளவு யோசிச்சிட்டேன் மாமா, எப்பவும் என்னோட டிசிஷன்ல செகேன்ட் தாட்க்கு இடம் இருக்காதுன்னு உங்களுக்கே தெரியும்’ என்று அவரை பார்க்க ‘ஆம்’ என்று தலை அசைத்தவர்

‘ஆனா எனக்கு கொஞ்சம்  டைம் கொடுங்க மாப்பிள்ளை’

‘எதுக்கு..??’

‘என் பொண்ணு கிட்ட பேசி அவளுக்கு புரிய வைக்…’

‘பேசினா புரிஞ்சிபாங்கன்னு நினைக்குறீங்களா மாமா..??’ என்று கேள்வியாய் பார்க்க அவரிடம் பதிலில்லை.

“பேசுறது வேஸ்ட் மாமா ஏன்னா நீங்க, நான் எல்லாம் வளர்ந்த சூழல் வேற ஆனா இப்போ இருக்க பசங்க வளருற சூழல் வேற.., எல்லாம் தெரியும்..!!எல்லாமே அவங்க கையில் அடக்கம்ன்னு நெனச்சிட்டு  வாழ்க்கையை கோட்டை விட்டுட்டு இருக்காங்க..”

“செல்போன் இல்லாம வாழ முடியுமா..?? முடியாதா..?? என்பது இங்க பிரச்சனை இல்ல மாமா ஆனா செல்போன்  இல்லாம வாழவே  தெரியாத ஒரு தலைமுறை சத்தமே இல்லாம உருவாகிட்டு வருது, அதை வளர விடாம தடுக்குற சமூக பொறுப்பு ஒவ்வொருத்தருக்கும் இருக்கு தானே..??” என்று கேட்க அவரும் ஆமோதிப்பாய் தலை அசைத்தார்.

“என்ன தான் நாம உட்கார வச்சி நிதர்சனத்தை எடுத்து சொல்லி பக்கம் பக்கமா எடுத்துக்கட்டோட லெக்சர் கொடுத்தாலும் அவங்க ஈகோ அதை ஏத்துக்க விடாது வயசு அப்படி..!! அதோட அவங்களே அறியாம  அவங்களை இன்ப்ளுயன்ஸ் பண்ண கூடிய விஷயங்கள் திரும்புற பக்கமெல்லாம் கொட்டி கிடைக்கறப்போ அவங்களும் என்ன பண்ணுவாங்க..??”

ஆனா அதை பத்தின தெளிவை உண்டாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கு தானே..?? என்று கேட்டவனின் பார்வையே அதை செய்யாது போன அவரை குற்றம் சாட்ட மகேஷிடம் அதிர்வு..,

‘மா..ப்பிள்..ளை ..’

“நிச்சயமா ஸ்மார்ட்போன் பத்தின புரிதல் இல்லாத பசங்க கிட்ட அதை கொடுத்த உங்க மேல தான் முதல் தப்பு..!! என்ன தான் அத்தியாவசியமா இருந்தாலும் அதை பற்றின புரிதல் தெளிவு கொடுப்பதோடு நிறுத்திடாம கண்காணிப்பு ரொம்பவே முக்கியம்..” என்றிட மகேஷிடம் மௌன தலைஅசைவு.

‘இன்னைக்கு உங்க பொண்ணு, பையன்னா நாளைக்கு என் பொண்ணு பையனும் இதையே தான் பேஸ் பண்ணுவாங்க யார் கண்டா இதை விட அதிகமாவே இருக்கலாம்..!! நீங்க நினைக்கிற மாதிரி இப்போ சுயநலமா நான் பின்வாங்கலாம் ஆனா அப்போ முடியாதே..!!’

‘எனக்கென்ன போச்சுன்னு இருக்க முடியாது மாமா, என்னைக்கு இருந்தாலும் எல்லாரும் சந்திக்க வேண்டிய கட்டாயத்துல இந்த தொழில்நுட்ப யுகம் நம்மளை நிறுத்தி இருக்கு.., யாரா இருந்தா என்ன மாமா அடிப்படை சமூக பொறுப்பும், கடமையும் இருக்கணும் இல்லையா..??’

“நாமே கண்கூடா பார்க்கிறோம் பலர் பட்டு தான் திருந்துறாங்க ஆனா அதுக்கு அவங்க கொடுக்குற விலை ரொம்ப அதிகம்..!! சிலரோடது வாழ்க்கைன்னா சிலரோடது உயிரே..!! இது தான் நிதர்சனம்”

“இதுல ஹைலைட்டே என்ன தெரியுமா என்னவெல்லாம் இழந்திருக்கிறோம்ன்னு அந்த நேரம் இல்லாம  காலம் கடந்து தான் உணருறாங்க.. அது கொடுக்குற வலி ரொம்பவே மோசம்”

‘மாப்பிள்ளை தப்பு என்னோடதும் ஆனா…’ என்று பரிதவிப்போடு அவனை பார்க்க,

‘போனை மட்டும் சொல்லலை மாமா பலர் இங்க உழைப்புன்னா என்னன்னே தெரியாம குழந்தைகளை வளர்த்துட்டு இருக்கீங்க, சோஷியல் ஸ்டேடசுக்காக பிள்ளை வளர்க்குறது அதிகமாகிடுச்சி ஸ்விம்மிங், டான்ஸ் , யோகா, எக்செட்ரா எக்செட்ரா சொல்லி கொடுக்குறவங்க உழைப்பை கத்து கொடுக்குறது இல்லை, உறவுகளோட முக்கியத்துவம் தெரிய விடறது இல்லை’

“பலநேரம் பசங்க அந்த சோஷியல ஸ்டேடஸ்குள்ள மாட்டிட்டு முழிக்கிறாங்க அவங்களோட தேவைகளை விளம்பரங்கள் தான் முடிவு பண்ணுது..!! இந்த ப்ராண்டட் ஜீன்ஸ் வாங்கணும் இந்த பிராண்டட் ஷூஸ் வாங்கணும் இந்த ஜிம் போகணும் இந்த டையட் பாலோ பண்ணனும்ன்னு அவங்களையும் அறியாம அவங்க மனசுக்குள்ள இந்த செல்போன் புகுத்திடுது…”

“சமயோஜிதமா ஒரு சூழலை கையாள தெரியலை, சின்ன சின்ன விஷயத்துக்கு கூட போனை சார்ந்து இருக்காங்க.., எல்லாமே இன்ஸ்டண்ட்டா கிடைச்சுடுறதால லைப்பும் அப்படி தான் ஈசியா  இருக்கும் என்ற மைன்ட் செட்க்கு வந்துடுறாங்க ஆனா அவங்களுக்கான பொறுப்பு வாழ்க்கையோட நிதர்சனம் தெரிய வரப்போ அதை எப்படி கையாளனும்ன்னு புரியாம தவிச்சு மனஅழுத்தம் கூடி, வார்த்தை தடித்து டைவர்ஸ்ங்கிற பெரிய முடிவுல போய் நிற்கிறாங்க…”

‘quality of time ரொம்ப முக்கியம் ஆனா குழந்தைகளுக்கு அதை கொடுக்காம கேட்டது கேட்காதது எல்லாம் வாங்கி குவிச்சு நேரம், ஒழுக்கம், மனுஷங்க மட்டும் இல்லை பணத்தோட அருமை தெரியவிடாம  பண்ணிடுறீங்க..!!’

“கைநிறைய சம்பாதித்தாலும்  அதை எப்படி நிர்வகிக்கனும்ங்கிற தெளிவு இல்லாம  தடுமாருற ஆட்கள் பலர் இருக்காங்க..,  காசு ஒரு பக்கம் வருது ஒரு பக்கம் போகுது சுத்தமா மணி மேனேஜ்மென்ட் தெரியலை”

‘பணத்தை நம்ம கையாள எண்ணி கொடுக்கும் போது அதுக்கான மதிப்பு, அருமை  நமக்கு புரிஞ்சது இப்போ எல்லாம் ஜிபே, நெட்பாங்கிங், ஏடிஎம்ன்னு எங்க போனாலும் (swipe) சுவைப் பண்றாம் வாங்குறோம்.. பல நேரம் பணத்தை நம்ம கையாள தொடாமையே போயிடுறோம்.. அதுவே அதோட மதிப்பை, அவசியத்தை உணர முடியாம அதை திட்டமிட்டு செலவிட முடியாம பண்ணிடுது.

‘இப்படியே போனா என்னாகும் மாமா..?? இது நாம முழிச்சிக்க வேண்டிய நேரம்.., ரெண்டு குழந்தைங்க உலகம் புரியாம இருந்தா அதை அதன் போக்கில் போய் அவங்களுக்கு புரிய வச்சு வழி நடத்தனுமே தவிர எக்கேடோ கெட்டு போன்னு விட்டுட முடியாது’

“மாப்பிள்ளை ஆனா நீங்க, உங்க குடும்பம் அதனால..”

“முடியாதது எதுவும் இல்ல மாமா, நாம தான் அப்படி நெனச்சிக்கிறோம்  கொஞ்சம் பொறுமை தேவை, நீங்க நினைக்கிற மாதிரி அட்வைஸ் பண்ணினா அவங்களை தடுக்குற நம்ம மேல வெறுப்பு தான் மிஞ்சும்..!!”

“இனி யாழி மட்டும் இல்ல விஷ்ணுவும் என் பொறுப்பு அவங்களை எப்படி வழிக்கு கொண்டு வரணும்ங்கிறதை நான் பார்த்துக்குறேன் நீங்க கல்யாணத்துக்கான ஏற்பாட்டை மட்டும் பாருங்க” என்று கூற பிரமித்து போய் அமர்ந்திருந்த மகேஸ்வரனுக்கு மகிழ்ச்சியில் கண்ணீர் துளிர்த்துவிட்டது.

‘சரி மாப்பிள்ளை’ என்று எழுந்தவர் தயக்கத்தோடு அவனை பார்க்க,

“என் பொண்டாட்டிய நான் எங்கயும் விட்டு கொடுத்திட மாட்டேன் மாமா நீங்க தைரியமா போங்க” என்றவன்,

“சொல்ல மறந்துட்டேன் நாம பேசினது விஷ்ணு யாழிக்கு தெரிய வேண்டாம்.., அப்போ தான் நீங்க நினைக்கிற மாற்றம் கிடைக்கும் புரியும்ன்னு நம்புறேன்..” என்றிட,

‘நிச்சயமா மாப்பிள்ளை’ என்ற போதே அங்கே வந்த ப்ரித்வி,

‘அண்ணா இந்தாங்க’ என்று அவனிடம் பெட்டியை கொடுக்க அதை வாங்கியவன் மகேஷிடம் கொடுத்து,

“யாழியோட போன் தொலைஞ்சிடுச்சி அதான் புது ஐபோன் வாங்கி இருக்கேன் இதை அவகிட்ட கொடுத்துடுங்க’ என்றான்.

‘மாப்பிள்ளை’ என்று அவர் அதிர்ந்து பார்க்க,

‘ஏன் மாமா..??’

‘இல்ல.., வேண்டாம் மாப்பிள்ளை இதனால இன்னும் நிலைமை மோசமாகும் போன் இல்லாம இருந்தா தான் திருந்துவாங்க’

“அப்படின்னு நீங்க நினைச்சிட்டு இருக்கீங்க ஆனா அதுதான் ஆபத்து.., பயப்படாம இதை அவ கிட்ட கொடுங்க மத்ததை நான் பார்த்துக்குறேன்” என்றான்.

அவன் குரலில் இருந்து உறுதியில் நம்பிக்கை பெற்றவராக கிளம்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!