Skip to content
Post Views: 10,818
எத்தனை நேரம் இருவருமே மோன நிலையை கொண்டிருந்தனரோ ஆனால் வெளியில் கதவு தட்டும் சத்தம் கேட்டு தன்னை மீட்டெடுத்த அதிர் அவளை பார்க்க யாழியோ துடிக்கும் இதழ்களை ஒன்றோடொன்று அழுந்த பற்றிக்கொண்டு கண்களை இறுக்கமாக மூடி அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தாள்…
அழகோவியமாக அவள் அவன் தோள் சேர்ந்திருந்த அத்தருணத்தை தவறவிடாமல் உடனே கைபேசியை எடுத்து அதை பொக்கிஷமாக சேமித்தான்.
இன்னுமே யாழி தன்னிலை திரும்பாமல் இருக்க மென்மையாக அவள் முகம் பற்றி தன் புறம் திருப்பிய அதிர்துடியனின் பார்வை அவளிதழ்களில் ஒரு கணம் தடுமாறி நின்றது.. பின்னே ஒவ்வொரு நொடிக்கும் துடித்து அடங்கும் அவளிதழ்கள் அவனை முத்தாட அழைப்பு விடுப்பது போலிருக்க அவனும் தன்னை மறந்து அவளை நெருங்கி அவளிதழ்களோடு கலந்துவிட துடித்தான்.
அதே நேரம் அவன் மனமோ, ‘என்னடா பண்ற அதி.., டோன்ட் லூஸ் யுவர் கண்ட்ரோல் வந்த வேலையை பாரு.., கதவு வேற தட்டிட்டு இருக்காங்க’ என்று எடுத்துரைக்க அவள் வசத்தில் வாசத்தில் சிக்கி இருந்தவன் முயன்று தன்னை மீட்டெடுக்க முற்பட்டான்.
Advertisement
ஆனால் மனமெனும் குரங்கு அதற்கு விட்டால் தானே..!! மீண்டும் மீண்டும் துடிக்கும் அவளிதழ்களின் ஊர்வலத்தை கோலாகலமாக அவனுள் நிகழ்த்த மெல்ல அவள் கன்னத்தில் பட்டும் படாமல் மென்மையாக தன் அதரங்களை அதிர்துடியன் ஒற்றிட பாவையவள் மேனியில் அவளையும் அறியாமல் மெல்லிய சிலிர்ப்பு விரவியது..!!
மறக்காமல் அதையும் அழகிய புகைப்படமாக மாற்றியவன், அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து, நெற்றி முட்டி என்று பல கோணங்களில் செல்பி எடுக்க யாழியோ இன்னும் மோனநிலை கலைந்தாள் இல்லை.
அவளிடையில் இருந்து தன் கரத்தை தளர்த்தி ‘யாழி கண்ணை திற’ என்று அவளை உலுக்கவும் தன்னிலை மீண்டவள் இன்னுமே அவன் நெருக்கம் குறையாமல் இருப்பதை கண்டு தவித்து போனாள்.
Advertisement
‘ஆர் யு ஓகே..??’ என்று கேட்டவனின் முகம் பார்ப்பதை தவிர்த்து மறுபுறம் திரும்பி கொண்டவளிடம் ‘இன்னும் எடுக்கலையா..??’ என்ற மெல்லிய முனங்கல்…
Advertisement
இப்போது ஆற அமர அவள் வெட்கத்தை ரசிக்கும் மனநிலையில் இல்லாத அதி மீண்டும் கொக்கியை நீக்க முற்பட்ட அதுவோ எக்குத்தப்பாக மாட்டிக்கொண்டு வளைந்து கொடுப்பேனா..?? என்று அவனுக்கே ஆட்டம் காட்டியது.
இப்போது கதவை தட்டும் சத்தத்தோடு அவன் கைபேசியும் சேர்ந்து ஒலிக்க வேகமாக செயல்பட வேண்டி அதி இடது கையால் அவள் சங்கிலியை பிடித்து கொண்டு பற்களால் கடித்திழுக்க முற்ப்பட அவள் தாவணி மீண்டும் அவன் முகத்தை மூடியது.
அதே நேரம் கதவு தட்டும் சத்தத்தில் தூக்கி வாரி போட அவனை பார்த்த யாழி, ‘யா… யாரோ.. சீக்..கி…’ என்றவளின் வார்த்தைகள் இடையில் ஊர்ந்த அவனிதழ்களின் தகப்பில் திகைத்து தொண்டைக்குழியிலேயே சிக்கிக்கொள்ள தன்னுள் நிகழும் ரசவாதங்களை கையாளும் வழி அறியாது ஸ்தம்பித்து போனாள்.
Advertisement
அவனிதழ்களும் நாசியும் போட்டி போட்டுக்கொண்டு அவளிடையை உரசி அவளை வதைத்திட தன் பிஞ்சு விரல்களால் அவன் தோளை பற்றி நிலை படுத்தி இருந்தவள் ஒரு கட்டத்தில் அதிர்துடியனின் இதழ்கள் அவளிடையில் அழுத்தமாக புதைந்திட அவனை தடுக்கும் வழி அறியாத பெண்ணவள் கரங்களும் ஒய்ந்து தளர்ந்திட கால்களும் வலுவிழக்க தொடங்கியது.
மெல்லிய குரலில் அவனிடம், ‘நீ.. நீங்க … நான் நிற்க.. முடி… என.. என..க்கு’ என்று தொடங்கியவளுக்கு நா வரள பேச்சற்று எச்சில் கூட்டி அவனை பார்த்தாள்.
அதியோ இனியும் தாமதிப்பது ஆபத்து என்பதால் உடனே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து அவளை தன் மீது அமர்த்தி கொண்டு அவன் முகம் மறைத்த தாவணியை முன்புறமாக எடுத்து போட்டுவிட்டு வசதியாக கொக்கியை நீக்க முயன்றான்.
யாழியோ இப்போது அவன் நெருக்கத்தில் இன்னுமே தவித்து தத்தளிக்க,
‘கொஞ்சம் அசையாம உட்காருடி இப்படி நெளிஞ்சிட்டே இருந்தா நான் எப்படி எடுக்குறது..??’ என்றவனுக்குமே மயக்கும் மோகினியான அவளருகாமையை தவிர்க்கும் வேகம்..!!
கைச்சங்கிலி இன்னுமே விடுபடாமல் அவனை சோதிக்க அதற்கு மேல் யாழி அவனை அவஸ்த்தைக்குள்ளாக்க சட்டென,
‘உன்னை யாருடி இதை எல்லாம் போட சொன்னது.. இப்போ பாரு தேவை இல்லாத தொல்லை..’ என்று சிடுசிடுத்து விட்டான்.
அதை கேட்ட யாழிக்கு கண்களில் நீர் திரண்டு விட்டது..,
பின்னே வந்ததில் இருந்து ஒரு வார்த்தை அவள் எப்படி இருக்கிறாள், ஒப்பனை, உடை பற்றி எதுவும் சொல்லாமல் மணமேடையில் அவளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்காமல், அவளுடன் போட்டோஷூட் நடத்தாமல், அவர்கள் ஊர் எம்.எல்.ஏ முதற்கொண்டு விருந்தினர்களிடம் பேசிக்கொண்டு இருந்தவன் இப்போது ஏன் இதை எல்லாம் போட்டிருக்கிறாய்..?? என்று கேட்டால் அவளும் என்ன பதில் சொல்ல..??
அவனுக்கு பிடிக்கும் என்று பார்த்து பார்த்து அலங்கரித்தால் அதை பற்றி புகழாமல் அவளை பிடித்து இப்படி திட்டி தீர்க்கிறானே என்று மனம் கசங்கி போனது ..
ஆனால் அவன் எதிரே அழுதால் அதற்கும் ‘ஸ்டாப் க்ரையிங் யாழி’ என்று திட்டுவான் என்பதால் அழுகையை தொண்டைக்குள் விழுங்கி கொண்டு அவனை பார்த்தாள்.
ஒருவழியாக கைசங்கிலியை பிரித்து எடுத்தவன் ‘வா போகலாம்’ என்று அவளாடையை திருத்தி யாழியுடன் வெளியில் வர வழியிலேயே அவளை பிடித்து கொண்ட விஷ்ணு யாழியின் முகத்தை ஆராய்ந்தான்.
அவள் கண்கள் கலங்கி இருப்பதை கண்டுகொண்டவன், ‘உன்னை திட்டினாராடி..?? உண்மையை சொல்லு’ என்று கேட்க,
யாழிக்குமே யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போல இருக்க அவனுடன் மணமகள் அறைக்கு சென்றவள், ‘ஆமாடா’ என்று மற்றவர்களின் வரவேற்ப்பை போல தனக்கு நடக்கவில்லை தன்னை அவன் மதிக்கவில்லை, அனைத்திருக்கும் மேலாக திட்டிவிட்டான் என்று கூறி ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.
***********************
உடை மாற்றி அன்னையின் துணையுடன் தலையலங்காரத்தை பிரித்து ஒப்பனையை கலைத்து முகம் கழுவி வந்து யாழி அமரவும் சுகமதி வெளியில் சென்றார்.
ரிசெப்ஷனில் அவள் சந்தித்த மனிதர்கள் அதி மற்றும் அவன் குடும்பத்தின் உயரம், அவள் வரவை கொண்டாடிய தருணம், அவளை அவர்கள் நடத்திய விதம், அதற்கும் மேல் உரிமையாக அவளிடையை வளைத்திருந்த அவன் கரம், அவன் ஸ்பரிசம், அவனுடனான நிமிடங்கள், அவன் சீற்றம் என்று அனைத்தும் கொடுத்த அச்சத்தில் தனக்குள் உழன்று கொண்டிருந்த யாழிக்கு முதல் முறையாக திருமணம் குறித்த கேள்வி பிறந்தது..,
அதாவது இதுநாள் வரை அவள் காணொளிகளில், நேரில் என்று கண்டு களித்த ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் முடிந்த பிறகான திருமண வாழ்வு குறித்து..!!
அதே நேரம் அறையை திறந்து உள்ளே அவளுக்கான பாலுடன் வந்த சுகமதியிடம், “ம்மா கல்யாணம்ன்னா என்னம்மா..??” என்று கேட்டாள்.
அவரோ தான் சரியாகத்தான் கேட்டோமா என்ற சந்தேகத்துடன் ‘என்ன கேட்ட..??’ என்றார்.
யாழி மீண்டும் கேட்க சில நொடி மகளை வெறுமையாக பார்த்தவர் மனம் அத்தனை ஆர்பரித்தது…
‘சொல்லும்மா..’
‘ஏன் உன் கூகுள் கிட்ட கேட்கலையா..??’ என்றார்.
ஏனோ யாழியின் மனதில் இனம் புரியா உணர்வு, ஒருவித பதைபதைப்பு, முதல்முறையாக ஏதோ தவறுகிறோமோ என்ற எண்ணம்…!!
‘அவள் நிச்சயத்தின் போதே தோழிகள் தனி குடித்தனம் குறித்த விதையை அவள் மனதில் விதைத்திருக்க அவளும் அதில் திடமாக தான் இருந்தாள் ஆனால் அவை எல்லாம் அன்றும் இன்றும் அதியின் குடும்பத்தை பார்க்கும் வரையில் தான்…!!
ஆனால் இப்போது இத்தனை அழகிய குடும்பத்தில் இருந்து பிரிந்து தனிக்குடித்தனம் செல்வது சரியாக இருக்குமா..?? என்ற கேள்வி அவளுள்.., அதைவிட ரிசெப்ஷனில் பாதி நேரம் தம்பி மகனை தன்னருகே வைத்து கொண்டிருந்த அதிர்துடியன் இதற்க்கு சம்மதிப்பானா..?? என்ற யோசனை…
‘அப்படி அவன் சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வது..?? அடுத்து என்ன..??’ என்ற கேள்விகள் அவளை மொத்தமாக சுருட்டிக்கொள்ள மூச்சு முட்டி போனது யாழிக்கு.
யோசனையில் சுருங்கி இருந்த மகள் முகத்தை பார்த்தவாறு சுகமதி இருக்க,
‘ம்மா சொல்லும்மா ப்ளீஸ்..’
அவரோ ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டு ‘நல்லவேளை கல்யாணத்துக்கு முன்ன இந்த கேள்வி கேட்ட’ என்றார்…
‘ஏன்மா அப்படி சொல்ற ..???’
‘இல்லடி உன் வேகத்துக்கு கல்யாணம் ஆன கையோட டைவர்ஸ் பண்ணிட்டு வந்து இந்த கேள்வியை கேட்பன்னு நெனச்சேன் பரவால்ல ஏதோ கொஞ்சம் மூளை இருக்கு இத்தனை நாள் கூகிள் கிட்ட அடமானம் வச்சிருந்ததை மீட்டு நீயி யோசிச்சதுல எனக்கு சந்தோசம் …’ என்றார் கசந்த முறுவலுடன்.
‘அதெல்லாம் இருக்கட்டும் கல்யாணம்ன்னா என்னன்னு பதில் சொல்லுமா’ என்று மீண்டும் கேட்க
மகளின் பரிதவிப்பை அதற்கு மேலும் காண பொறுக்காதவர்,
‘பொறுப்பு’ என்றார் ஒற்றை வார்த்தையில்..!!
‘பொறுப்பா…?? அப்படின்னா..??’ என்று யாழி சுகமதியை பார்க்க,
அவரோ அதற்குமேல் ஒரு வார்த்தை பேசவில்லை.. எங்கே பேசி அவள் அதற்கு எதிர்வாதம் செய்து அதனால் மனம் நோக அவர் தயாராக இல்லை ஏதோ கடவுள் அருளால் இந்த நேரத்திலாவது இந்த கேள்வியை கேட்டாளே என்று அகமகிழ்ந்து போனவர் அவளிடம் ‘நீயே யோசி’ என்று கூறி சென்று விட்டார்.
‘கல்யாணம்ன்னா பொறுப்பா..?? இதென்ன புதிதாக….’ என்ற யோசனையுடனே பாலை குடித்துவிட்டு படுத்தாள்.
***************************
அடுத்த நாள் திருமணத்தின் போது கைபேசியில் படம் எடுக்க முயற்சி செய்த விஷ்ணு அதி பார்த்த பார்வையிலேயே அதை அணைத்து வைக்க, விஷ்ணுவை அழைத்து தன்னருகே இருத்தி கொண்ட அதி..,
“அக்கா கல்யானத்தை இப்படி பக்கத்து உட்காந்து கண் குளிர பார்த்து ரசிக்கணுமே தவிர கேமரா லென்ஸ் வழியா பார்க்க கூடாது…, இதே நீ வேற நாட்டுல இருந்து வர முடியாம இருந்தா பரவல்ல ஆனா பக்கத்துல இருந்துட்டு இதென்ன முட்டாள் தனம்..?? அதான் எல்லா ஆங்கிளையும் கவர் பண்ற மாதிரி இத்தனை கேமரா , ட்ரோன் வச்சிருக்கேனே இதில்லாம நீ எதை புதுசா எடுக்க போற..??” என்று கேட்க,
யாழியின் சேனலுக்கு என்ற உண்மையை அவனிடம் கூற முடியுமா என்ன..?? அதனால் மெளனமாக அதியை பார்க்க அவனோ,
” கல்யாணம் முடியற வரை உன் கையில போன் பார்க்க கூடாது அப்படி பார்த்தேன் என்ன நடக்கும்ன்னு நான் உனக்கு சொல்ல வேண்டியது இல்லை..” என்றவனின் பார்வையே விஷ்ணுவை மிரள செய்திட ‘சரி’ என்று தலை அசைத்தான்.
விஷ்ணு அவனுக்கு மாலை அணிவித்து கால் கழுவிட அதியும் மச்சானுக்கு மோதிரமும் செயினும் போட்டு விட்டவன் அவனை தன் ஒருபுறம் அமர்த்தி கொண்டு குறித்த முகூர்த்ததில் தன் மறுபுறம் அமர்ந்திருந்த யாழிக்கு திருமாங்கல்யம் அணிவித்து தன் சரி பாதியாக ஏற்றிருந்தான்.
மணமக்கள் இருவரையும் அமர்த்தி அறையிலேயே அவர்களுக்கு உணவு பரிமாறி கொண்டிருந்தனர்…
யாழியோ விஷ்ணுவும் மற்றவர்களும் கொண்டு வந்த உணவுகளை அவளே அதிரனுக்கு பரிமாறி கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்தில் அவள் மனசாட்சியோ, “யாழி என்ன பண்ற…?? அமைதியா இரு எத்தனை ப்ரோபோசல் வீடியோஸ் பார்த்திருப்ப எப்பவும் பாய்ஸ் தான் கேர்ள்ஸ்சை தாங்கனும் அவங்களுக்காக சேக்கரிபைஸ் பண்ணனும், ஊட்டி விடனும், வெளியே கூட்டிட்டு போகணும், கேட்டது எல்லாம் வாங்கி தரனும் ஆனா நீ என்ன பண்ணிட்டு இருக்க..?? என்று காரி துப்ப,
‘சாப்பாடு போடறது தப்பா..??’ என்று அவள் திருப்பி கேட்டிருந்தாள்.
“இல்லையா பின்னே..!! நேத்து உன்னை திட்டினதுக்கு ஒரு சாரி கூட கேட்காம இருக்கார் பசியில உன்னோட குடல் அரிச்சிட்டு இருக்கு உட்காந்து சாப்பிடாம லூசு மாதிரி அவங்களுக்கு பார்த்து பார்த்து பரிமாறுற..?? தப்பு தப்பா நடக்காத யாழி பிரெண்ட்ஸ் எல்லாம் என்ன சொன்னாங்க.., மறந்துட்டியா..??” என்று அவளை கழுவி ஊற்ற,
அதியும் “யாழி அவங்க பரிமாறட்டும் நீ உட்காந்து சாப்பிடு” என்று கூற ‘சரி’ என்று தலை அசைத்து அமர்ந்தாள்.
சாப்பிட்டு கொண்டிருந்தவளுக்கு அப்போது தான் அவள் தோழி கூறியது நினைவு வரவும் சட்டென அவன் புறம் திரும்பி,
“நாம ஹனிமூன்க்கு எங்க போக போறோம்” என்றிட, தண்ணீர் குடித்து கொண்டிருந்த அதிர்துடியனுக்கு சட்டென புரைக்கேறியது…
உடனே அவன் இரும தொடங்க ‘மெதுவா மெதுவா..’ என்று அவன் தலையில் தட்டி யாழி ஆசுவாசபடுத்த,
அவனோ கர்சீப்பால் முகத்தை துடைத்து கொண்டு, ‘என்ன கேட்ட..??’ என்றான்.
‘இல்ல நாம ஹனிமூன்க்கு எங்க போக போறோம்ன்னு கேட்டேன்’
நல்லவேளை அப்போது அறையில் யாரும் இல்லை ஆனால் ப்ரித்வியும் விஷ்ணுவும் அறை வாயிலில் பேசிக்கொண்டு நிற்ப்பதை கண்டவன்,
“இதுக்கு இப்பவே பதில் சொல்லனுமா..??” என்றான் நெறிந்த புருவங்களுடன்.
‘அவன் கேள்விக்கு என்ன பதில் சொல்வது’ என்று புரியாமல் யாழி அவனை பார்க்க,
‘நைட் சொல்றேன்’ என்று எழுந்து கொண்டான்.
அதன் பின் மணமக்களை மகேஷ்வரனின் வீட்டிற்கு அழைத்து வந்து பால் பழம் கொடுக்க அடுத்த சில நிமிடங்களில் அதிர் அவசர வேலையாக அவளிடம் விடைபெற்று வெளியே கிளம்பி சென்றான்.
கணவன் கிளம்பிய பின்னர் வீட்டில் உறவுகள் சூழ்ந்திருந்ததாலும் விஷ்ணுவும் உடன் இல்லாததாலும் தன் அறைக்குள் சென்றவள் அசதியில் உறங்கி விட்டாள்.
error: Content is protected !!