ராகம் – 17.2
சில நிமிடங்களிலேயே திரும்பி வந்தவன் அவள் மீண்டும் பேச்சை தொடங்கும் முன் ‘இப்படியேவா இருக்க போற ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிக்கோ’ என்றான்.
‘உங்.. உங்களுக்கு புடவை பிடிக்குமே.., பூஜை வேற இருக்கு பரவால..’ என்றிட
‘இல்ல இன்னைக்கு நாள் சரி இல்லாததால பூஜை இல்ல அதோட இனி நீ புடவை கட்ட வேண்டாம் யாழி’ என்றான் புடவையில் அவள் வயதிற்கு மீறிய அழகுடன் அவன் கொண்டிருக்கும் உறுதியை தகர்த்து அவனை அடியோடு சாய்த்து கொண்டிருப்பவளை கண்டு.
யாழி புரியாமல் பார்க்க,
Advertisement
‘ரூமுக்குள்ள எப்பவும் போல பராக், ஸ்கர்ட், த்ரி போர்த்ன்னு இரு கீழ போறப்போ சுடிதார், குர்த்தி, லாங் ஸ்கர்ட் இப்படி உனக்கு கம்பார்ட் ஆனதை போட்டுக்கோ’ என்றான்.
‘என்ன இது..?? அவனுக்கு பிடிக்கும் என்று அவள் செய்தால் இவன் வேண்டாம்’ என்கிறானே ஒன்றும் புரியாமல் அவள் குழம்பி தவிக்க,
அவளருகே அமர்ந்த அதி, ‘எனக்கு பிடிச்ச மாதிரி ட்ரெஸ் பண்ணுவேன்னு நீதானே சொன்ன..??’ என்று கேட்க,
Advertisement
‘ஆம்’ என்ற தலையசைப்பு பெண்ணவளிடம்.
Advertisement
‘அப்போ சொன்னதை செய்’ என்றவன்,
‘மறக்காம இந்த மேக் அப் எல்லாம் ரிமூவ் பண்ணிட்டு பேஸ் வாஷ் பண்ணிட்டு வா..’ என்று அவளை அனுப்பி வைத்தவன் தன் கப்போர்டை திறந்து பெட்டியை எடுத்து வைத்து அவளுக்காக காத்திருந்தான்.
உடை மாற்ற சென்றவளுக்கு ஏனோ மனதை பிசைந்தது…!!
Advertisement
“என்ன நடந்து கொண்டிருக்கிறது தனக்கு.., அவள் மட்டும் தான் அவனுக்காக உருகி கரைந்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை இழந்து கொண்டிருக்கிறாள் ஆனால் அவன்..??? திருமணத்திற்கு அடிப்படையான காதலை தான் தெரிவிக்கவில்லை என்று பார்த்தால் குறைந்த பட்சம் அவளை பிடிக்கும் என்று கூட கூறவில்லை.
‘அவன் இஷ்டத்திற்கு திருமணத்தை தான் நடத்தி கொண்டான் என்று பார்த்தால் இப்போது அவன் இஷ்டத்திற்கு விடிய விடிய பூஜை செய்ய திட்டமிடுகிறான் பிறகு அவனே அதை ரத்து செய்கிறான் எதையும் அவளிடம் கலந்தாலோசிக்கவில்லை.., இது தான் மனைவியை நடத்தும் விதமா..?? அவள் உணர்விற்கு அவனிடம் மதிப்பில்லையா..??’ என்று பெண் மனம் நொறுங்கி போனது.
‘பெண் என்றால் தன் கணவனுக்கு கிள்ளுக்கீரையா..?? எத்தனை பெரிய சக்தி என்று தெரியாமல் இருக்கிறானே.., தன் மனம் கவர்ந்த அதியிடம் அவள் இதை எதிர்பார்க்கவில்லை தன் காதல் தோற்று போன உணர்வு’.
இப்படியே போனால் தன் வாழ்வு என்னாவது என்ற பயம் அவளை ஆட்டிபடைக்க யாழியின் விழிகளில் கண்ணீர் பெருகியது..,
எத்தனை நேரம் அப்படியே இருந்தாளோ மெல்ல கண்ணீரை துடைத்து கொண்டு உடை மாற்றி முகம் கழுவி ஒரு முடிவோடு வெளியே சென்றாள்.
‘என.. எனக்கு உடனே குழந்தை வேண்டாம் பைவ் இயர்ஸ் அப்புறம் தான் பெத்துக்கணும்’ என்றாள் வீம்பாக..
ஜன்னலருகே யோசனையுடன் நின்றிருந்தவன் அவள் குரலில் திரும்பினான்.
அழுதிருப்பாள் போலும் கலையாத கரைந்த கண்மையே அவள் நிலை சொல்ல ஆழ்ந்த குரலில் ‘ஏன்..??’ என்றான்.
‘ஏன்..னா.. ஏன்.. ஏன்னா… ஏன்ன்னு சொல்ல முடியாது ஆனா பைவ் இயர்ஸ் அப்புறம் தான் குழந்தை’ என்று அடமாக கூற,
‘ஓகே’
‘ஹான்…’
‘ஓகே…எனக்கும் ஒரே நேரத்துல ரெண்டு குழந்தையை வச்சு சமாளிக்கிறது கஷ்டம்.. முதல் குழந்தை வளரட்டும் அப்புறம் அடுத்த குழந்தை பத்தி யோசிக்கிறேன்’
‘என்னது..?? ஏன் இப்படி சொல்கிறான்..?? ஒருவேளை ட்வின்ஸ்சாக பிறக்குமோ அதனால் தான் இப்படி சொல்கிறானோ..??’ என்று நினைத்தவள்,
‘எனக்கு ஒரே குழந்தை போதும்’ என்றாள்.
‘ஏன் ..??’
‘இப்போது அது தானே லேட்டஸ்ட் ட்ரென்ட்..’ என்று வாய் வரை வந்த வார்த்தையை அவன் பார்வையை கண்டு உதட்டுக்குள் நிறுத்தியவள் மௌனமாக அவனை பார்க்க அவனோ,
‘எனக்கு ஒண்ணெல்லாம் பத்தாது குறைஞ்சது மூணு குழந்தை வேணும்’ என்றான்..,
‘மூணா..??’ என்று யாழி திகைக்க,
‘ஆமா உனக்கு ஓகே தானே..??’ என்று கேட்க,
‘என்ன இது பெற்றுகொள்ளபோவது நான் தானே.., முடிவு செய்யும் அதிகாரம் எனக்கு தானே.., அப்படி தானே சொன்னாங்க’ என்று மீண்டும் மனதினுள் பார்த்த காணொளியை ஓட்டி சரி பார்த்தவள்,
‘அது எப்படி அவன் முடிவு செய்யலாம், பெண்கள் என்ன பிள்ளை பெற்று கொள்ளும் மிஷினா..?? குழந்தை கூட அவன் விருப்பம் தானா..?? தன் மனம் கவர்ந்தவன் இப்பேற்பட்ட ஆணாதிக்க மனோபாவம் கொண்டவனா..?? என்று மனதினுள் கேட்டுக்கொண்டு இருக்கையிலேயே,
‘யாழிக்கு சம்மதம் இல்லயா ..??’ என்றான் அவள் விழி பார்த்து,
அவன் விழிகளை சந்தித்த பின் மறுப்பது என்பது அவள் அகராதியிலேயே கிடையாதே அதனால் ‘சரி’ என்று தலை அசைக்க அவனோ மென்னகையுடன் அவளை கடந்து சென்றான்.
‘என்ன இது..?? ஏன் இப்படி அவன் வார்த்தைகளுக்கு எல்லாம் தலையாட்டுகிறேன்’ என்ற யோசனையில் அவளிருக்க,
‘பால் குடிக்கிறியா..??’ என்று இருவருக்கும் டம்பளரில் ஊற்றி அவளிடம் நீட்ட,
‘எனக்கு வேண்டாம்’
‘ஏன்..??’
‘எனக்கு பால் வேண்டாம் ஆனா நாம ஹனிமூன்க்கு எப்போ, எங்க போறோம்ன்னு எனக்கு தெரியனும்’ என்றவளிடம் மீண்டும் பிடிவாதம்.
‘என்னடி பிரச்சனை உனக்கு..??’ என்றான் அவள் முன் நீட்டி இருந்த பாலில் பார்வையை பதித்து,
உடனே அதை வாங்கி கடகடவென குடித்தவள் வாயை துடைத்து கொண்டே, ‘சொல்லுங்க எங்க போறோம்..??’
அவளை அழுத்தமாக பார்த்து கொண்டிருந்தவன், ‘எங்கயும் போறதில்லை’ என்றான்.
விடைத்த நாசியுடன், ‘ஏன்..??’
‘போறதில்லை, நான் வரல அவ்ளோதான்’ என்றவன் சென்று கட்டிலில் அமர,
‘ஏன் ஹனிமூன்க்கு வரமாட்டேன் சொல்றீங்க..??’
‘எதுக்கு வரணும்..??’
‘எதுக்கு வரணுமா..?? கல்யாணம் ஆனதும் ஹனிமூன் கட்டாயம் போகணுமே அதுவும் கூடவே கேமராமேனையும் கூட்டிக்கொண்டு சென்று தனித்தன்மையுடன் புகைப்படம் எடுத்து வலைதளங்களில் பதிவிடுவது தானே லேட்டஸ்ட் ட்ரென்ட் அது கூட தெரியாமல் இருக்கிறானே’ என்று மனதினுள் நொந்து போய் அவள் பார்க்க,
‘ஹனிமூன்ல என்ன பண்ணனும் சொல்லு’ என்றான் கைகளை தலைக்கு பின் கோர்த்து கொண்டு படுக்கையில் சாய்ந்தவாறு.
‘என்னது..??’
‘புரியலையா..??’ என்றவன் மீண்டும் அவளிடம் ‘ஹனிமூன்ல என்ன பண்ணனும்..??’ என்று கேட்க அவன் வார்த்தையில் அதிர்ந்து போனாள் யாழி.
‘என்ன இவன் இப்படி இருக்கிறான்’ என்று குறையாத திகைப்புடன் அவனை பார்த்திருந்தவள்,
‘உங்களுக்கு தெரியாதா..??’ என்றிட
‘இல்ல தெரியாது நீ சொல்லு தெரிஞ்சிக்கிறேன்’ என்றான் அழுத்தமான குரலில்.
‘கடவுளே என்ன இது..?? ஹனிமூனில் என்ன செய்யவேண்டும் என்று கூட தெரியாத அளவு சிறுபிள்ளையாக வளர்ந்து இருக்கிறானே.., எப்படி இவனோடு காலம் தள்ள போகிறோம்’ என்ற நிஜம் நெற்றிப்பொட்டில் அறைந்து பெண்ணவளை அச்சுறுத்தியது.
‘நிஜமாவே தெரியாதா..??’
‘தெரியாதுடி’
‘தெரிஞ்ச அப்புறம் வருவீங்களா..??’
கண்கள் இடுங்க அவளை பார்த்தவன், ‘சரி வரேன் ஆனா நீ முதல்ல சொல்லு’
‘அச்சோ பாவம்..!!’ என்று அவனை பார்த்தவளுக்கு எப்படியாவது ஹனிமூனில் என்ன செய்யவேண்டும் என்பதை அவனுக்கு கற்றுகொடுத்து புரிய வைத்து விடும் வேகம் பிறந்தது.
“என்ன அமைதியா இருக்க சொல்லு தெரிஞ்சிக்கிறேன்” என்று அவன் கேட்கவும் யாழி கதவை திறக்க போனாள்.
‘எங்க போற..??’
‘என்ன பண்ணனும்ன்னு கேட்டீங்கல்ல அதுக்கு பதில் சொல்ல தான் வெளியே போறேன்’
‘வெளியேவா..?? எதுக்கு..??’
‘அச்சோ ஒரு நிமிஷம் இருங்க போன் எடுத்துட்டு வந்து விளக்கமா சொல்லி தரேன்’ என்றவள் மேஜை மீதிருந்த சாவியை எடுத்து கொண்டு வெளியில் சென்றாள்.
‘போன் எடுக்க போறாளா..?? என்ன பண்ணுவா..??’ என்று எழுந்தமர்ந்தவன் அவள் சென்ற வழியையே பார்த்திருந்தான்.
அதே நேரம் போன் எடுத்து வந்தவள் அவனருகே அமர்ந்து வேகமாக வாட்ஸ்அப்பை திறந்து அவள் தோழிகளின் அண்ணன் அக்கா அவர்களின் தேனிலவின் போது எடுத்த புகைப்படங்களை காட்ட,
அப்போது தான் அவனுக்கு தடைபட்டிருந்த மூச்சே வெளியானது.
‘பாருங்க எவ்ளோ அழகான இடத்துல, ரெண்டு பேரும் ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டுட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் ஊட்டி விட்டு எத்தனை விதமா போஸ் கொடுத்து ரெயின் பேக்ட்ராப், ஹில்ஸ், ஸ்னோ பேக்டிராப்ன்னு எவ்ளோ போட்டோஸ், செல்பி எடுத்து இருக்காங்க…, இதுக்கு தான் ஹனிமூன் போவாங்க அது கூட உங்களுக்கு தெரியாதா..??’ என்று கேட்க,
‘ஓஒ இப்படி தான் ஹனிமூன் செலிபரேட் பண்ணனுமா..??’ என்று பொங்கிய சிரிப்பை அடக்கமுடியாமல் ஒரு கட்டத்தில் இருமி சமாளித்து அவன் கேட்க,
‘ஆம்’ என்று வேகமாக தலை அசைத்தவள்,
‘இப்போ வருவீங்க தானே..??’ என்று எதிர்பார்ப்புடன் அவனை பார்க்க ,
‘என்னால முடியாது’ என்றான் தீர்க்கமான குரலில்.
‘என்னது..??’
‘ஆமா என்னால செல்பி எடுக்க எல்லாம் ஹனிமூன் போக முடியாது’
‘இல்ல செல்பி எடுக்க வேண்டாம் நாம் போட்டோகிரப்பர் கூட கூட்டிட்டு போகலாம் அவர் எடுப்பார்’ என்றிட
‘என்னது..??’ என்ற அதியிடம் உச்சபட்ச அதிர்வு..
‘ஆமா உங்களுக்கு செல்பி எடுத்தாதானே பிடிக்காது’ என்று அவள் அவசரமாக கூற,
அவனோ முகத்தில் தோன்றிய கடுமையை மட்டுபடுத்தி இடுங்கிய கண்களுடன் அவளை பார்த்து, ‘ஓஒ அப்போ ஹனிமூனை கவர் பண்ண போட்டோகிராப்பர் கூட கூட்டிட்டு போகணும்ன்னு சொல்ற அப்படி தானே..??’ என்று கேட்க அவனது கடினமான குரலே அவள் நெஞ்சில் குளிர் பரப்பியது.
‘என்ன தவறாக கேட்டேன் நான்..??’ என்று இப்படி கோபமாகி போனான் என்று புரியாது யாழி பார்க்க,
சிவந்த விழிகளுடன் அவளை பார்த்த அதிரனிடமோ கட்டுபடுத்த முடியாத சீற்றம்..!!
என்னதான் அவள் அறியாமையின் வெளிப்பாடு என்று புரிந்தாலும் சட்டென அதை ஏற்று கொள்ள முடியாமல் போனவனுக்கு இதற்கு மேலும் அங்கிருந்தால் நிச்சயம் அவளை காயபடுத்தி விடுவோம் என்பது புரிபட,
‘நாம ஹனிமூன் போறதில்லை, தட்ஸ் இட்..!! நோ மோர் அர்கியுமென்ட் புரிஞ்சதா..??’ என்று குறையாத கடுமையுடன் கூறி கைபேசியை வாங்கிக்கொண்டு வெளியில் சென்றான்.
***************************
