ராகம் – 17.3
அதியை அருகே கண்டதும் யாழி வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தமர, அவனோ இன்னுமே அவள் மீதான பார்வையை மாற்றினான் இல்லை.
உயிரை ஊடுருவும் அவன் பார்வையில் யாழிக்கு உதறல் எடுக்க கண்களை துடைத்துக்கொண்டு சட்டென எழுந்து நின்றுவிட்டாள்.
‘வெளியே போயிட்டு வந்த அஞ்சு நிமிஷத்துக்குள்ள என்னடி ஆச்சு உனக்கு..?? எதுக்கு அழுதுட்டு இருக்க ..??’
Advertisement
திருதிருவென விழித்தவள், ‘இல..ல்ல.. ஒன்… ஒண்ணு..மில்..ல’
‘ஒண்ணுமில்லையா..??’ என்று அவன் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்க,
இங்கு யாழிக்கோ கணவனது ஒற்றை வார்த்தையில் இத்தனை நேரம் அவளை ஆட்கொண்டிருந்த கொள்கைகள், கோட்பாடுகள் பெண்ணிய சிந்தனைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் சிதறி ஓட விவாகரத்து செய்வதன் மூலம் அவனை இழந்து விடுவோமோ என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கிட சட்டென அவள் கண்களில் கங்கை உற்பத்தி ஆகியது.
Advertisement
மகேஷ், சுகமதி மூலமாகவும் யாழியின் சேனலில் இருந்த வீடியோக்கள் மூலமாகவும் ஓரளவு அவளை குறித்த புரிதல் கொண்டிருந்தவனுக்கு கைபேசியை வாங்கி வைத்ததாலும் அவள் ஆசைகளை புறம் தள்ளியதாலும் அவள் குண இயல்பிற்கு நிச்சயம் அவள் தன்னிடம் வெடிப்பாள் என்று அவன் எதிர்பார்த்திருக்க அவளோ அதற்கு நேர்மாறாக மீண்டும் கண்ணீரில் கரைந்து கொண்டிருக்கிறாள் அதிலும் முன்பை விட அதிகமாக..!!
Advertisement
அழுதழுது சிவந்து போன நாசிகளும் வீங்கிய முகமுமாக தன் முன் இருந்தவளை கண்டு ‘ப்ச் யாழி..’ என்று ஒரு நொடி கண்களை மூடி திறந்தவன் ‘முதல்ல உட்கார்’ என்று அவளை அமர்த்தினான்.
மனமெங்கும் அவனை இழக்க போகும் ரணம் விரவி கிடக்க துடிக்கும் இதழ்களை கட்டுபடுத்தியவாறு அவன் முன் யாழி அமரவும்,
“என்னடா ஆச்சு உனக்கு..?? எதுக்கு இந்த அழுகை..?? எதுவா இருந்தாலும் சொல்லு”
Advertisement
என்ன தான் அவன் முன் அழக்கூடாது அவனுக்கு பிடிக்காது என்று கட்டுபடுத்தி கொண்டு நின்றாலும் அவன் அனுசரணையான பேச்சில் அதை கடைபிடிக்க முடியாது உடைந்து போனவள்,
‘நா… நான் எங்கயும் போக மாட்டேன்.. எனக்கு உங்க கூட தான் இருக்கணும்.. ஆனா எனக்கு ரொம்ப பயமா இருக்கு… என்.. என்னால கண்டிப்பா உங்களை டைவர்ஸ் பண்ண முடியாது அப்படி பண்ணினா நா.. நான் அப்புறம் இருக்கவே மாட்டேன்.. சியு.. சியூசைட் பண்ணிப்பேன்” என்று அழுகையினூடே கூற,
மணமாகி ஒரு நாள் கூட முழுதாக முடியாத நிலையில் அவள் வார்த்தைகளை கேட்ட அதியின் முகத்தில் அதிர்ச்சி ரேகை வேகமாக படர்ந்தது..
தாடை இறுக “என்ன பேசுற..?? எதுக்கு டிவோர்ஸ்..?? எதுக்கு சியு…?? ப்ச் என்ன பேச்சுடி இது..??” என்ற அதியின் குரலில் சீற்றம் ஓங்கியது..,
அவன் கோபத்தை கண்ட யாழி எங்கே அடித்து விடுவானோ என்று மிரண்டு போனவள் கோர்த்திருந்த கைகளை பின்னே கொண்டு சென்று அவன் அறியாவண்ணம் நகர்த்தி சற்று பின்னே நகர,
அதை கவனித்தவன் மனம் வெகுவாக சுணங்கி போக நெற்றியை இருவிரல்களால் வருடி கொடுத்து தன்னை மட்டுபடுத்தியவன் உடனே அவள் அருகே அமர்ந்து யாழி முகத்தை தன் கரங்களில் ஏந்தி விழியோடு விழி கலந்து மென்மையான குரலில்,
“யாழிக்கு என்ன ஆச்சு..?? ஏன் இந்த மாதிரி ஒரு யோசனை..?? என்று கேட்க மருளும் விழிகளால் அவனை பார்த்தவளிடம் மௌனம்..,
‘என்னை பார்த்தா டிவோர்ஸ் கொடுக்குறவன் மாதிரி தெரியுதா..?? இல்ல அவ்ளோ ஈசியா என்னை விட்டு உன்னை போக விட்டுடுவேனா..?? அதுக்கு தான் அவசரமா கல்யாணம் பண்ணினேனா..?? ஏன் இப்படி சொல்ற..??” என்று கேட்கவும் அவன் கனிவில் உருகிய பெண் மனது அதற்கு மேலும் எதையும் மறைக்க முடியாமல் உடனே தன் ஏக்கங்களையும்,ஏமாற்றங்களையும், ஆசைகள் நிராசை ஆனதையும் அதனால் ஏற்பட போகும் பின்விளைவுகள் என்று அவனிடம் அனைத்தையும் கொட்டி தீர்த்து தன் பாரத்தை இறக்கி வைத்த பின்பே ஆசுவாச மூச்சை எடுத்து இருந்தது.
******************************************
பொறுமையாக கேட்டு கொண்டிருந்த அதிக்கு அவன் எதிர்பார்த்தது தான் என்றாலும் அதன் அளவு இத்தனை பிரமாண்டமாக இருக்கும் என்று நினைக்கவில்லை..,
‘என்ன இது..?? ஒருவரை நல்லது கேட்டது பகுத்தறிந்து பார்த்து சிந்தித்து செயல்பட முடியாத அளவு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று வாழ்வோடு சேர்த்து உயிரையே போக்கி கொள்ளும் அளவு இன்றைய சமூக வலைதளங்களின் ஆதிக்கம் இருக்கிறதா..??’ என்ற முதற் கட்ட அதிர்ச்சி.
ஆனால் அவனை இழந்த பின் உயிர் வாழ முடியாது என்றவளின் பேரன்பும் பெருங்காதலும் அவனுக்கான அடுத்த கட்ட அதிர்ச்சி.
யாழியை பார்த்தவனுக்கு ‘என்ன பெண் இவள்..!!’ என்ற வியப்பே மேலோங்கியது.
“இன்னும் அவனை பற்றி முழுதாக தெரியாது, அவனோடு இயல்பாக பேசவில்லை, பரஸ்பர புரிதல் இல்லை, அவன் காதலை அறிந்திருக்கவில்லை, அவனோடு வாழவில்லை ஆனால் அவனுக்காக, அவன் இல்லை என்றால் உயிரை மாய்த்து கொள்ளும் அளவு அவன் மீது காதல்..!! இந்த காதல் தான் எத்தனை விந்தையானது..?? அப்படி என்ன செய்து விட்டான் அவன் அவளுக்கு இத்தகைய உயிர் நேசம் கொள்ளும் அளவு..??” என்ற கேள்வி எழாமல் இல்லை.
‘இப்போ உனக்கு நான் லவ் ப்ரொபோஸ் பண்ணாதது தான் உனக்கு பிரச்சனையா யாழி..??’ என்று கேட்கவும்,
‘ஆம்’ என்று தலை அசைத்தவள், “உங்களுக்கு என்னை பிடிக்காததால தானே அதெல்லாம் செய்யலை..” என்றாள் வேதனை தாளாமல்,
‘யார் சொன்னா எனக்கு உன்னை பிடிக்காதுன்னு..??’ பிடிச்சிருந்தா அதெல்லாம் செய்யணும்ன்னு ஏதாவது கட்டாயமா யாழி ..??’ என்று கேட்டவனுக்குமே அவள் எதிர்பார்ப்புக்கு அதிகமாகவே மனம் நிறைந்தவளுடன் காதல் மொழி பேசி கொஞ்சி, கொண்டாட ஆசை தான்… ஆனால் தன் காதலின் கனத்தை அவள் தாங்குவாளா..?? அல்லது இதேபோன்ற கொஞ்சல் மொழிகளை மட்டுமே கொண்டு வாழ்க்கை முழுமைக்கும் அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியுமா..?? நிச்சயம் அதுவும் ஒரு அங்கமே தவிர்த்து அது மட்டுமே காதலை உணர்த்தும் வழி ஆகா..!!
நிதர்சனம் அறியாமல் வாழ்க்கை புரியாமல் இருப்பவளை அத்தகைய ஆசை வார்த்தைகளை சொல்லி வளைத்து தன் காரியத்தை சாதித்து கொள்வது ஒன்றும் அவனுக்கு கடினமான காரியமல்ல ஆனால் அப்படி செய்வதன் மூலம் அவளை தடம் மாற செய்து விடக்கூடாதே அது நல்ல ஆண்மகனுக்கு அழகல்லவே..!!
அவன் மனைவி தான்..!! அவன் பால் தீராகாதலும் மயக்கமும் கொண்டிருப்பவள் தான் அவனை நீங்கிய பின் உயிரே அவளுக்கு துச்சம் எனுமளவு உயிர் நேசம் கொண்டிருப்பவளின் அறியாமையை பயன்படுத்தி கொள்வது ஒரு கணவனுக்கு அழகாகாதே..!!
காதல் மட்டுமல்ல பரஸ்பர புரிதல், நம்பிக்கை, இன்றி அவசரமாக தொடங்கும் உறவு எக்காலத்திலும் நிலைத்து நிற்காது..!!
அவளை அவன் புரிந்து கொண்டிருந்தாலும் இன்னும் அவள் அவனை, அவன் காதலை உணரவில்லையே.., பக்குவ படுத்தபடாத நிலத்தில் பயிர் செய்வது எத்தனை அறிவீனமோ அதே அளவு பக்குவப்படாமல் இருக்கும் பெண்ணவளை தன் உணர்வுகளின் வடிகாலாக கொள்வது என்பது அவனுக்கு தெரியாதா..??
கைபேசியில் அவள் காணும் உலகத்தில் இருக்கும் செயற்கை பூச்சுக்கள் தான் காதல் என்ற தப்பர்த்தம் கொண்டு இருக்கும் மனைவியின் எண்ணத்திற்கு ஏற்ப அவன் செயல்பட்டால் ஆத்மார்த்தமான காதலை அவள் உணர்வது எப்போது..?? நிதர்சனத்தை ஏற்று கொள்வது எப்படி ..?? நிஜ வாழ்வின் ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டு வாழ்வது எப்படி..??
*****************************************
அவள் மீதான அவன் காதலை உணர முடியாத நிலையில் இருப்பவளுக்கு அவள் எதிர்பார்க்கும் வார்த்தைகள் அந்த நேர நிம்மதியை அளிக்குமே தவிர காலம் முழுமைக்குமான நம்பிக்கையை தராது.., சில காலத்திற்கு பின் திரும்பவும் அதே கேள்வி முளைக்கும்.
அடிப்படை புரிதல், நம்பிக்கை இல்லாமல் தொடங்கும் உறவு எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்..?? அவனை அவன் காதலை அவள் ஆத்மார்த்தமாக உணர வேண்டும் அதற்க்கு அவள் மாய உலகில் இருந்து விடுபடவேண்டும்.., அவளை விடுவிக்க, மீட்டெடுக்க அவனிடம் இருக்கும் பிரம்மாஸ்த்திரமே அவன் மீதான அவள் காதல் தான்..!!!
ஆம் அவன் மனைவியாகவே இருந்தாலும் அவன் பார்வையில் செயலில் மிளிரும் காதலை புரிந்து கொள்ளாது மனதளவில் பக்குவபடாமல் இருப்பவளை, தாம்பத்தியத்தின் அரிச்சுவடி அறியாதவளை அதை பிரதானபடுத்தி அவனோடு தக்கவைத்து கொள்வது அவன் ஆண்மைக்கு இழுக்கு அல்லவா..?? தன் இணையை விடுத்து தன்னை மட்டும் பிரதானபடுத்தும் திருமண வாழ்வில் என்றும் வெற்றி வாகை சூட முடியாதே…
எக்காலத்திலும் அதி அத்தகைய விஷபரிட்சையை மேற்கொள்ள மாட்டான் … அவசரமாக வாழ்வை தொடங்கி அதே வேகத்தில் முடித்து கொள்ளும் அளவு அவன் முட்டாள் இல்லை..!!
திருமணம் ஆகிவிட்டதாலேயே அவள் அவனது ஏகபோக உரிமை என்று கொண்டால் அவன் நோக்கம் நிறைவேறுவது எப்படி…?? பக்குவமில்லாத பெண்ணவளை தன் காதல் கூட காயபடுத்திவிட கூடாது என்றே எட்ட நிற்கிறான்.
அதோடு இப்போது அவன் கையில் இருக்கும் துருப்பு சீட்டே அவள் காதல் தான் அதை கொண்டு மட்டுமே அவளை மாற்ற முடியும் . ஆனால் அதற்கு அவன் சில காலம் காத்திருக்க வேண்டும்.., காத்திருப்பும் காதலில் சுகம் தானே!!
அவள் யார் எங்கே இருக்கிறாள் என்று தெரியாது போயிருந்தால் அவன் எத்தனை காலம் காத்திருந்து அவளை கைபிடித்திருப்பான் என்று அவனுக்கே தெரியாது ஆனால் இப்போது அவனருகே அவன் மனைவியாக இருக்கையில் இனி காத்திருப்பின் சுவையும் சுகமும் அதிகரிக்க தானே செய்யும்..!!
இப்போது அவள் கேள்விகளுக்கு அவன் விளக்கமளித்தாளும் அதை புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாதவளிடம் அவள் போக்கில் சென்று தான் புரிய வைக்க வேண்டும் அதனால் தீவிர யோசனைக்கு பின்,
‘ஓகே யாழி லெட்ஸ் டேக் எ செல்பி’ என்று எழுந்து கொண்டான்.
அதை எதிர்பாராத யாழியின் முகத்தில் கோடி சூரிய பிரகாசம், ‘நிஜமாவா…??’
‘ஆமா’
‘ஆனா நான் மேக்அப் சேரி எல்லாம் ரிமூவ் பண்ணிட்டேனே’ என்றவளுக்கு இப்போது எடுக்கும் செல்பியை வலைதளங்களில் போட முடியாதே என்ற கவலை..,
‘முதல்ல இப்படி எடுப்போம் அப்புறம் நீ சொல்ற மாதிரி எடுக்கலாம் வா’ என்ற அதி சட்டென அவளை இழுத்து தன் முன் நிறுத்தி கையோடு கொண்டு வந்திருந்த கைபேசியை திணித்தவன் ‘நீயே எடு’ என்றான்.
‘நானா..??’
‘ஆமா எடுக்க தெரியும் தானே..??’ என்று சந்தேகமாக கேட்க..,
‘அதெல்லாம் சூப்பர்ரா எடுப்பேன் ஹைட்டா இருந்தாலும் விஷ்ணுவே என்னை தான் எடுக்க சொல்லுவான்’
‘குட்..!! அப்போ எடுக்கலாமா…??
‘ஹ்ம்ம்’ என்று மகிழ்ச்சியோடு ஜோராக தலை அசைத்தவள் கைபேசியை உயர்த்தி பிடித்தாள்.
********************************

