Post Views: 9,448

‘அண்ணா… ண்ணா…’ என்று கதவை தட்டி உள்ளே வந்த ஆராதனா யாழியிடம் ‘அண்ணி அண்ணா எங்க..??’ என்றிட,
‘வரேன் ஆரு’ என்றவாறே உடை மாற்றும் அறையில் இருந்து சட்டையை முழங்கை வரை ஏற்றி விட்டவாறு வெளியில் வந்தான் அதிர்துடியன்.
“அண்ணா நான் போட்ட கால்குலேஷன் படி முடிக்க முடியலை ப்ராபப்லி இன்னும் டூ டேஸ்ல முடிச்சிடுவேன் வெட்னேஸ்டே நீங்க ப்ரீயா..?? முடியுமா..?? இல்ல நான் ரீஸ்கெட்டியூல் பண்ணிக்கட்டுமா..??” என்றாள்,
Advertisement
‘புதன் கிழமையா..??’ என்று புருவங்கள் நெறிபட யோசனையில் ஆழ்ந்தவன்,
‘அன்னைக்கு…’ என்று நெற்றியை நீவி விட்டுக்கொண்டே,
“சரி ஆரு நீ எதுவும் மாத்த வேண்டாம் அன்னைக்கு மார்னிங் எயிட்க்கு ஸ்டார்ட் பண்ணிடலாம் முடிச்சிட்டு நான் கிளம்புறேன்…”
Advertisement
‘அண்ணா எனக்காக பார்க்க வேண்டாம்.. உங்களுக்கு முக்கியமான மீட் இருந்தா நீங்க…’
Advertisement
‘ப்ச் இல்ல ஆரு நான் ரீஸ்கெட்யூல் பண்ணிக்குறேன் நீ மாத்த வேண்டாம்’
‘சரிண்ணா அப்போ இந்த சண்டே டேம் போகலாம் உங்களுக்கு ஓகேவா..??’
‘ஏன் மூவி வேண்டாமா..??’
Advertisement
‘இல்லன்னா அடுத்த வாரம் பார்க்கலாம்’ என்றிட அவனும் சரி என்று தலை அசைத்தான்.
‘அம்மா பூரி பண்ணி இருக்காங்க நான் உங்களுக்கும் எனக்கும் சப்பாத்தி பண்ணிட்டேன் குருமா ஓகேவா இல்ல தக்காளி சட்னி செய்யட்டுமா…??’ என்றாள் நேரத்தை பார்த்தவாறே,
தங்கையின் முகத்தை பார்த்தவன், “நான் வேண்டாம்ன்னு சொன்னாலும் விடவா போற செய்.., நான் பிப்டீன் மினிட்ஸ்ல வந்துடுறேன்” எனவும்
‘சரிண்ணா ‘ என்று அவள் கிளம்ப.., யாழி ஒன்றும் புரியாமல் அவர்களை பார்த்திருந்தாள்.
‘யாழி’
‘ஹான்’
‘இதோ இதுல பைவ் தவுசன்ட் இருக்கு உனக்கு ஏதாவது ஷாப் பண்ணனும்ன்னா போயிட்டு வா கூட சாருவை வேணும்ன்னா கூப்பிட்டுக்கோ முடிச்சிட்டு எனக்கு கால் பண்ணு நாம அப்படியே படத்துக்கு போயிட்டு டின்னர் வெளில முடிச்சிட்டு வரலாம்’ என்று பணத்தை அவளிடம் கொடுக்க,
‘நீ.. நீங்க வரலையா..??’
‘நீ ஷாப்பிங் முடிச்சிட்டு கூப்பிடு வரேன்’
‘எ… ஏன்..’ என்றவள் முடிக்கும் முன்னமே,
‘நான் உனக்கு டிபன் எடுத்துட்டு வரேன் அதுக்குள்ள என்ன படத்துக்கு போகலாம்ன்னு டிசைட் பண்ணிட்டு எனக்கு சொல்லு நான் டிக்கெட் போட்டுடுறேன்’ என்று கீழே சென்று திரும்பியவன் அவளுக்கு பூரியை ஊட்டி விட,
அவளோ வாயை திறக்காமல் ‘எனக்கு கை இருக்கு’ என்றாள்..,
“இருந்தா என்ன..?? பொண்டாட்டிக்கு ஊட்டி விடறதை விட எனக்கு வேற வேலை முக்கியமில்லை” என்றவன் அவள் மேலும் பேசாத வகையில் ஊட்டி விட தொடங்கி இருந்தான்.
‘யாழிக்கோ இவருக்கு மட்டும் நான் எதுவும் செய்ய கூடாது ஆனா இவர் மட்டும் எல்லாமே செய்யலாமா..??’ என்ற எண்ணம் எழ,
‘நான் வரல’ என்றாள்.
‘எங்க..???’
‘ஷாப்பிங், பிக்சர் எதுக்கும் நான் வரல’
‘ஏன் யாழிக்கு ஷாப்பிங் பிடிக்காதா…??’
‘பிடிக்கும் , ஆனா..’ என்று அவனை பார்த்தவளும் என்ன சொல்வாள்..??
அன்று தம்பியிடம் அவன் தாமதமாக வந்ததற்கு உரிமையாக உன் ஐஸ்க்ரீம் வேண்டாம் என்றவளுக்கு இங்கே அதே போல ஷாப்பிங் வேண்டாம் என்று உரிமையாக வெளிப்படையாக கோபிக்க முடியாத நிலை…,
‘பின் கடமையில் இருந்து தவறி நிற்ப்பவளுக்கு உரிமை மட்டும் எதற்கு..??’ என்று உணராமல் உணர்ந்ததன் விளைவே அவள் ஷாப்பிங் வேண்டாம் என்றது..,
‘ஏன்..??’
‘எனக்கு பிடிக்கல’
‘ஓகே’
‘ஓகேவா..??’
‘ஆமா உனக்கு பிடிக்காததை செய்ய சொல்லி என்னைக்கும் நான் வற்புறுத்த மாட்டேன்… என்ன வேணும் வேண்டாம்ன்னு முடிவெடுக்குற சுதந்திரம் உனக்கு உண்டு அதுல தலை இட நான் யார்..?? எப்பவும் அதை செய்ய மாட்டேன் உன் இஷ்டம் போல இரு வேற எதுவும் வேணும்ன்னா எனக்கு கூப்பிடு’ என்றவன் இறங்கி செல்ல யாழிக்கு கண்களை கரித்து கொண்டு வந்தது.
பல நிமிடங்களுக்கு பின் கண்களை துடைத்து கொண்டு கீழே செல்ல அங்கு ஆராதனா ஒரு புறம் சாருலதா ஒரு புறம் என்று நின்று கொண்டு அதிர்துடியனுக்கும் ப்ரித்விக்கும் பரிமாறி கொண்டிருந்தனர்.
************************************
கலங்க முற்ப்பட்ட விழிகளை துடைத்து கொண்டு மரகதத்திடம் சென்று அமர அவரோ துவைத்த துணிகளை மடித்து கொண்டிருந்தார்…
‘சாப்பிட்டியாமா..??’
‘ஹ்ம்ம் அத்தை’ என்றவளின் கண்களில் அதிரின் துணிகள் பட உடனே அதை எடுத்து அவள் மடிக்க முற்ப்பட,
‘படிக்கிற பிள்ளை உனக்கு எதுக்குமா இந்த வேலை..?? அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்.. நீ போய் படி’ என்றார்.
‘இல்ல பரவால்ல அத்தை நான்…’
“வேண்டாம் யாழி உன் புருஷன் பார்த்தா என்னை தான் திட்டுவான் அன்னைக்கு உன்னை கொழுக்கட்டை செய்ய சொன்னதுக்கு என்னை என்ன பேச்சு பேசினான்.., இப்போ இதை பார்த்தா அவ்ளோதான் நீ போம்மா நான் பார்த்துக்குறேன்” என்றிட,
அதே நேரம் “ம்மா நான் கிளம்புறேன்” என்றவாறு அங்கே வந்தவன் யாழியிடமும் சொல்லிக்கொண்டு வாசலுக்கு செல்ல,
யாழிக்கு மனமெங்கும் சொல்லில் அடங்கா ரணம்.
திடீரென ‘சாரு’ என்ற அவன் குரல் கேட்க யாழி அதிர்துடியனை பார்த்தாள்.
‘சொல்லுங்க மாமா…’
‘என்னோட கார் கீ மறந்துட்டேன் கொஞ்சம் எடுத்துட்டு வா’ என்றவாறே அவன் ஷூவை மாட்டி கொண்டு இருந்தான்.
‘சரி மாமா’ என்றவள் எடுத்துகொண்டு வந்து கொடுக்க,
அதை பார்த்து கொண்டிருந்த யாழிக்கோ “அப்போ இது அடிமைத்தனம் இல்லையா..?? பெண்கள் என்ன இவர்களுக்கு சேவகம் செய்ய பிறவி எடுத்தவர்களா..??” என்ற கேள்வி எழவில்லை மாறாக முகத்தில் குழப்பம்.
“என்ன இது..?? மனைவியான அவளை பரிமாற விடவில்லை, அவன் துணிகளை மடிக்க விடவில்லை, காபி, ஜூஸ் எதுவானாலும் அவன் அன்னையை கேட்கிறான், எதற்கும் அவளை எதிர்பார்ப்பது இல்லை, அவன் தேவைகளை அவனே பார்த்து கொள்கிறான் அல்லது அவன் அன்னை, தங்கை என்று யாரேனும் ஒருவர் செய்து விடுகிறார்கள்… இதோ இப்போது கூட கார் கீ வேண்டும் என்று சாருவிடம் கேட்பவன் ஏன் தன்னிடம் கேட்கவில்லை..”
“மொத்தத்தில் இங்கு அவள் கணவனுக்கு எதற்குமே அவள் தேவைப்படவில்லை… எங்குமே, எந்நிலையிலுமே அவளை சார்ந்து அவன் இல்லை… அப்போது அவள் யார் இங்கு..??” என்ற கேள்வி உதயமானது..
ஆனால் விஷ்ணு காலேஜ் செல்லும் முன் குறைந்த பட்சம் இருபது யாழி போட்டுவிடுவான்…
‘என் புக் எங்கடி, டைம் இல்ல நீயே ஊட்டிவிடு, ஒரு ஷூ தான் இருக்கு இன்னொன்னு எங்கடி போச்சு..?? என் வாட்ச் கட்டாதன்னு சொன்னா கேட்டியா இப்போ பார் எங்க வச்சியோ அவசரத்துக்கு கிடைக்கலை, செல்போன் சார்ஜர் எடு..’ என்று அவளில்லாமல் அவன் நாள் தொடங்கவும் தொடங்காது முடியவும் முடியாது.
அதேபோல தான் மகேஷ்வரனும்..!!
ஒரு விடுமுறை நாளன்று யாழியும் விஷ்ணுவும் அமர்ந்து தந்தை எத்தனை முறை ‘மதி’ என்று அழைக்கிறார் என்று கணக்கு போட்டு இறுதியில் நாற்பத்தி ஏழு முறை அவர்கள் தந்தை தாயை அழைத்ததை கண்டு வியந்து போயினர்.
ஆனால் இங்கே அதிர்துடியனும் ‘யாழி’ என்று அழைக்கிறான் அது அவன் தேவைக்காக இல்லை அவள் தேவைகளை பூர்த்தி செய்ய மட்டும்.., அவள் கேட்டது போலவே சுதந்திரமாக அவள் இருக்கிறாள் அவளுக்கு எந்த கட்டாயமும் இல்லை அவளாகவே செய்ய போனாலும் தடுத்து விடுகிறார்கள்.., மொத்தத்தில் அவள் கேட்ட சுதந்திரம் அவளிடம் ஆனால் அதுவே வரமாக இன்றி சாபமாக அமைந்திருப்பது தான் விந்தையிலும் விந்தையாகி பெண்ணவளை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.
ஆம் கணவனின் எதிர்பார்ப்பின்மையும், சுதந்திரமும், நீ நீயாக இரு என்ற வார்த்தைகளும் அவள் விரும்பிய மகிழ்வை கொடுக்காமல் ஏனோ அவளை இத்தனை பேர் நடுவில் தனியாக ஒதுக்கியது போலவே தோன்றியது அவளுக்கு..!!
இதில் வேறு அவ்வப்போது அதிர்துடியன் “உனக்கு ஏதாவது வேணுமா யாழி இப்போ நான் நீ எதிர்பார்க்கிற மாதிரி இருக்கேனா இல்ல ஏதாவது மாத்திக்கணும்னா சொல்லு செய்யறேன் என் பொண்டாடிக்கு பிடிச்ச மாதிரி இருக்குறதுல எனக்கு எந்த பிரச்னையும் இல்லை” என்றிருந்தான்.
இது தானே அவள் கேட்டது..!!
ஆனால் இதை கொண்டு அவளால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை ‘பொறுப்பு’ என்ற ஒன்றை எதற்கு பெண்கள் தூக்கி சுமக்க வேண்டும் ..??? என்று ஒருவர் காணொளியில் பேசியதை வைத்து என்ற எண்ணத்தினூடே அன்று அன்னை கூறிய பொறுப்பு நினைவு வர உடனே தன் அறைக்கு ஓடியவள் சுகமதிக்கு அழைத்து விட்டாள்.
***************************************
சுகமதி அழைப்பை ஏற்கவும் “ம்மா அப்பாவும் நீயும் லவ் பண்றீங்களாம்மா” என்றாள் எடுத்ததும்…
‘இது என்னடி புதுசா கேள்வி…??’
‘ம்மா சொல்லும்மா…,’
‘லவ் இல்லாம இத்தனை வருஷம் நாங்க சேர்ந்து இருக்க முடியுமா யாழி…??’
‘இல்லை’ என்று தலை அசைத்தவள்
“ஆனா அப்பா எப்பவும் உனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது இல்லை, அதிகமா வெளியே கூட்டிட்டு போனது இல்ல..”
மருமகனின் முயற்சி பலன் அளிக்க தொடங்கி இருப்பதை உணர்ந்தவரும், “யாழிமா நான் தான் சொல்லிட்டு இருக்கேனே நீங்க பார்க்கிற மாதிரி கண்களுக்கு விருந்தா, பகட்டா, மிகபெரிய பொருட்செலவுல வெளிபடுத்தினா தான் காதல்ன்னு இல்லை, அதை தான்டி பல விஷயம் இருக்கு..,
‘ஆனா நீங்க ரெண்டு பேரும் ஐ லவ் யூ கூட சொல்லி நாங்க கேட்டது இல்லையே’
‘ஏன்டி வார்த்தைக்கு வார்த்தை ஐ லவ் யூன்னு சொல்லிட்டு இருக்கிறது தான் காதல்ன்னு நெனச்சியா…?? அது ஆத்மார்த்தமா உணரப்பட வேண்டியது..!!’
‘உணரனுமா..??’ அது எப்படி என்று புரியாமல் ‘எப்படிம்மா..?’
“எப்படி சொல்ல..?? என்று மகளுக்கு புரியும் வகையில் சொல்ல சில நொடி நிதானித்தவர் பின்,
“இப்போ என்னோட விருப்பு வெறுப்பு உங்க அப்பாக்கு அத்துபடி, அவரோட விருப்பு வெறுப்பு எனக்கு அத்துபடி.., ரெண்டு பேருமே ஒரு விஷயம் செய்யும் முன்ன இன்னொருத்தருக்கு அது பிடிக்குமா பிடிக்காதான்னு யோசிச்சி செய்வோம்”
‘ஆனா அப்பா உங்களை கூட்டிட்டு போய் உங்களுக்கு பிடிச்சது எடுத்து கொடுத்தது இல்லையேம்மா’ என்று தன் சந்தேகத்தை கேட்க,
‘யாழி என்னதான் பல நேரம் புடவை எடுக்க நான் போகாம இருந்தாலும் அவர் எடுக்குறது எனக்கு பிடிச்ச மாதிரி இருக்கனும்ன்னு எனக்காக நேரம் செலவழிச்சு தேடி தேடி எடுப்பாரு…’
“எனக்கு நீங்களே எடுங்கன்னு சொல்றது என்னோட காதல்ன்னா, எனக்கு பிடிச்ச மாதிரி அமையணும்ன்னு மெனக்கெடுறது அவரோட காதல்.. ஆனா எனக்கு பிடிக்கலைன்னு சொன்னா உடனே அதை மாத்தியும் கொடுத்துடுவாரு இப்போ எல்லாம் வீடியோ கால் வசதி இருக்கிறதால அதிகம் மாத்துற அவசியம் இல்ல’
யாழிக்கோ அவள் கண்ட உலகில் இருந்த காதலுக்கும் அன்னை சொல்லகூடியதற்க்கும் இடையில் இருக்கும் மலைக்கும் மடுவிற்க்குமான வித்யாசம் இருப்பதை உணர்ந்தவள்,
‘நீங்க…, உங்க பர்த்டே, வெட்டிங்டேக்கு போட்டோஷூட் எடுக்கவே இல்ல, மன்த்லி ஆனிவர்சரி கொண்டாடின போட்டோஸ் கூட இல்லையேம்மா..??’
‘ஏன்டி வீக்லி ஆனிவர்சரி, மன்த்லி ஆனிவர்சரி கொண்டாட வாழ்க்கை என்ன நீங்க பார்க்கிற படமா..?? அது தான் இருபத்திஐந்து நாள், ஐம்பது நாள், நூறு நாள் கொண்டாட்டம்ன்னு போஸ்டர் அடிச்சி ஓட்டுவாங்க.., ஆனா அதுக்கு அப்புறம் அது தியேட்டர்ல இருக்காது வாழ்க்கை என்ன இத்தனை நாட்கள்ன்னு வெற்றிகரமா கொண்டாடிட்டு அப்புறம் டாட்டா பை பை சொல்லி கிளம்ப…’ என்று இத்தனை நாட்கள் மகளிடம் பேச முயன்று முடியாமல் போன விஷயங்களை எல்லாம் இன்று மகள் காது கொடுத்து கேட்கவும் அவளிடம் கொண்டு சேர்த்துவிடும் முனைப்பு..!!
இதனால் அவளுக்கு புரிதல் வருமா இல்லையா என்று அவரால் உறுதியாக கூற முடியாது ஆனால் இதுநாள் வரை கைபேசியின் மூலமாக மூளையில் அவள் சேர்த்து வைத்திருக்கும் குப்பைக்கு பதில் நல்லவைகளை விதைத்து விடும் வேகம்.