Post Views: 10,179

அதிர்துடியனும் ப்ரிதிவியும் அலுவலகத்திற்கு கிளம்பிட ஆராதனா சாரு இருவரும் மதிய உணவு சமைக்க வேண்டி சென்றிட ஹாலில் அமர்ந்திருந்த யாழிக்கு எல்லாம் பிரமிப்பாகவும், ஆச்சர்யமாகவும், புதுமையாகவும் இருந்தது…
பின்னே ஒரு வீடியோ எடுத்து விட்டால் அதை எடிட் செய்து அப்லோட் செய்யும் வரையில் யாழிக்கு தூக்கம் வராது… விஷ்ணுவிர்காக காத்திருக்கும் நேரத்தில் கூட வீடியோவை மீண்டும் மீண்டும் ஓட விட்டு எதெல்லாம் வெட்ட வேண்டும் எங்கெல்லாம் பிஜிஎம் சேர்க்க வேண்டும் என்று நாள் முழுக்க அதே யோசனையில் தான் சுற்றி கொண்டு இருப்பாள்.. அது மட்டுமா வீடியோவை அப்லோட் செய்த பின் அதை வாட்ஸ்அப், முகபுத்தகம், இன்ஸ்ட்டா என்று அத்தனை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றி, ஷார்ட்ஸ் ஸ்டோரி என்று அன்றைய நாளே கைபேசியோடு முடிந்து விடும்.
ஆனால் இங்கே ஆராதனா ஒருமுறை கூட தன் வீடியோவை சரி பார்க்காமல் அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டாலே இது எப்படி சாத்தியம்..?? என்ற கேள்வியே அவளை சுழற்றி அடித்து கொண்டிருந்தது.
Advertisement
அதோடு அவளும் எத்தனை சிரத்தை எடுத்து ஒவ்வொரு வீடியோவும் போடுவாள் ஆனால் அதற்கு வரக்கூடிய கருத்துக்களோ அவள் உழைப்பை, திறமையை பாராட்டி வந்திருக்காது பதிலுக்கு நீ சூப்பர், உன் ட்ரெஸ் சூப்பர், லிப்ஸ்டிக் போடு நல்லா இருக்கும், மேக் அப் இல்லாம வீடியோ போட்டா பார்க்க மாட்டோம் என்று அவள் அழகை வர்ணித்து தான் இருக்குமே தவிர்த்து இதுவரை அவள் உழைப்பை இந்த அளவு யாரும் பாராட்டியது இல்லை..
அதிகபட்சமாக கோவில்கள் பற்றி என்பதால் வணங்குவது போன்றோ அல்லது கடவுளை போற்றி மந்திரமோ சிலர் பதிவிட்டிருப்பர் அவள் தோழி, தோழர்கள், சப்ஸ்கரைப்பார்கள் யாருமே அவள் திறமையை ஒவ்வொரு இடமாக எடுத்து சொல்லி இன்று இவர்கள் அளவு பாராட்டியது இல்லை.
முதல் முறை அவள் அறிவிற்கு, உழைப்பிற்கு, திறமைக்கு கிடைத்த அங்கிகாரம் ஒருவித மன நிறைவை கொடுக்க கண்களை மூடி அனுபவித்து கொண்டிருந்தாள்.
Advertisement
‘யாழி’ என்று மரகதம் அழைக்கவும் கண்களை திறந்தவள் முன் பழச்சாறை அவர் நீட்ட,
Advertisement
‘அத்தை நீங்க ஏன் எடுத்துட்டு வந்தீங்க..??’ என்று அவள் பதறிக்கொண்டு எழ,
‘இதுல என்னமா இருக்கு டையர்டா இருப்ப குடி’ என்று கூற ,
‘உங்களுக்கு..??’ என்று எப்போதும் பகிர்ந்துண்ணும் பழக்கம் கொண்டவள் அவரையும் கேட்க,
Advertisement
‘நான் குடிச்சிட்டேன்டா நீ குடி’ எனவும் ஒரே மூச்சில் குடித்து முடித்தவள்,
“எப்படி அத்தை வீடியோ முடிச்சதும் அவங்கவங்க வேலை பார்க்க போயிட்டாங்க…” என்று அவள் ஆச்சர்யமாக கேட்க
‘இது அதி ஏற்படுத்தின பழக்கம்மா..’
‘என்ன பழக்கம் அத்தை’
“ஒரு வேலை முடிச்சதும் அடுத்ததை பார்க்க போறதும்மா..”
‘ஆனா அது எப்படி அவங்க வீடியோ எத்தனை பேரை ரீச் ஆகி இருக்கு, என்ன கருத்து சொல்றாங்க இப்படி எதுவும் பார்க்க மாட்டாங்களா..??’ என்று அவள் தயக்கத்தோடு நிறுத்த,
“இல்லம்மா அதை பத்தின கவலை அவளுக்கு இல்லை.., தன்னோட வேலை ஒழுங்கா படிச்சி அதை மத்தவங்களுக்கு எடுத்து சொல்றதோட முடிஞ்சதுன்னு அடுத்த டாபிக் படிக்க போயிடுவா நீ சொல்ற எல்லாமே அதியும் ப்ரித்வியும் பார்த்துப்பாங்க..” என்றிட அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
“யாழி ஒன்றரை வருஷம் முன்ன அதிர் இந்த யூடியூப் சேனல் ஆரம்பிச்சப்பவே அதனோட நோக்கத்தை ஆராதனாக்கு முதல்ல தெளிவு படுத்தினான்… அதாவது நாம படிச்சதை டெஸ்ட் எழுதி எப்படி சரி பார்த்து திருத்திப்போமோ அது போல தான் இப்படி வீடியோல மத்தவங்களுக்கு சொல்லி கொடுக்கிறது கூட ஒரு விதமா நம்மை நாமே சுய மதிப்பீடு பண்ணிக்கிற மாதிரின்னு”
“அதாவது என் பொண்ணோட டெஸ்ட் பேப்பரை கரெக்ஷன் பண்ணி மார்க் கொடுக்க அவளோட குடும்பம் இருக்கு, அவ குறை நிறை இரண்டையும் நாங்க சொல்றோம் அதை திருத்திகிட்டு அடுத்தடுத்துன்னு போயிக்கிட்டே இருக்கனும்ன்னு சொன்னவன்.., எங்களோட வார்த்தையை விட பெரிய நம்பிக்கையை யாரோ முகம் தெரியாதவங்க சொல்ற கமெண்ட்ஸ் கொடுத்திட போறதில்லைன்னு ஆராதனாவுக்கு புரிய வச்சான்”.
‘ஏன்.. ஏன் அத்தை அப்படி..?’
“ஏன்னா இப்போ தொழில்நுட்பம் ரொம்ப வேகமா வளர்ந்துட்டு வருது அதை உபயோகிச்சே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு எல்லாரும் தள்ளப்படறோம் ஆனா எந்த அளவுக்கு சாதகம் இருக்கோ அதை விட அதிகமான பாதகமும் இருக்கு ஆனா அதில் இருந்து தப்பிச்சு நமக்கான வாழ்கையை நாம சந்தோஷமா நிம்மதியா வாழறதே பெரிய சவால்ன்னு அதி சொல்லிட்டே இருப்பான்…”
வேறு உலகத்தில் எதுவும் தவறில்லை என்ற மனபோக்கில் இருந்த யாழிக்கு அவர் பேச்சு புதிதாக இருக்கவும் புரியாமல் பார்க்க,
“அதான் பார்க்கிறோமேம்மா இப்போலாம் பால் போடுறவன்ல இருந்து காய் விக்கிறவங்க வரை ஜிபே யூஸ் பண்றாங்க …, டெக்னாலஜிக்கு தகுந்த மாதிரி எல்லா இடங்களும் அப்டேட் ஆகிட்டு வருது அதனால தான் ஸ்கூல்ல பசங்களுக்கு கணினியின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பிச்சப்போ அதில் முதல்ல பண்ணின விஷயம் ஹால்ல ஒரு சிஸ்டம் வாங்கி போட்டது தான்மா…”
‘என்ன அத்தை சொல்றீங்க..??’
“ஆமாம்மா அவளுக்கு படிப்புக்காக கேட்ஜெட் தேவை பட்டப்போ அவன் போன், லேப்டாப் வாங்கி கொடுக்கலை அதுக்கு பதிலா கம்ப்யூட்டர் வாங்கி கொடுத்து அதை ஹாலில் போட்டு அங்க இருந்தபடி அவளை படிக்க சொல்லுவான் அதுவும் குறிப்பிட்ட நேரம் தான்…, இதே அவன் படிக்கிறப்போ இப்போ இருக்க மாதிரி பொழுதன்னைக்கும் போன், லேப்டாப்பே கதின்னு யாரும் இருக்க மாட்டாங்க.., ஏன்னா கம்ப்யுட்டர் இணையம் வசதி எல்லாம் பெரும்பாலான வீடுகளில் இல்லை அப்போ கம்ப்யூட்டர் செண்டர் போயிட்டு பணம் கொடுத்து ஒரு மணி நேரம், அரை மணி நேரம் உபயோகிப்பாங்க… “
“ஆனா இப்போ அப்படி இல்ல அதனால் வீட்டுக்கு வைப்பை கனெக்ஷன் வாங்கினவன் அதோட கண்ட்ரோல் எங்க ரூம்ல இருக்க மாதிரி பார்த்துகிட்டான்… ஏன்னு கேட்டப்போ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பத்தி எங்களுக்கும் தெரியனும் அதனோட பயன்பாட்டை நாம சொல்லி கொடுக்குறது மட்டும் இல்லாம அதனுடைய கட்டுப்பாடு நாம் கிட்ட இருக்கணும் சொன்னான்.
***************************************************
“முக்கியமா தொழில்நுட்ப வளர்ச்சி நம்ம வீட்டு குழந்தையை மேம்படுத்த உதவனுமே தவிர அவ அதனால பாதிக்க கூடாதுன்னு ரொம்ப கவனமா இருந்தான்”
“அதன் படி ஆராதனாக்கு அவ தேவைக்கு ஏற்ப ஒன்னு இல்ல ரெண்டு மணி நேரம் கம்ப்யூட்டர் யூஸ் பண்ண அலோவ் பண்ணுவோம்… அப்போ நானும் அவ பக்கத்துல ஏதாவது வேலை இருக்க மாதிரி பார்த்துப்பேன்… எப்பவும் என் பொண்ணு படிப்பை தாண்டி வேற எதுக்கும் பெருசா இணையத்தை உபயோகிச்சது இல்ல, அவ பாட்டு கேட்க மியூசிக் சிஸ்டம் இருக்கும் இல்லயா நியூஸ் பார்க்க ஹாலில் டிவி இதை தவிர்த்து ஆடம்பரத்துக்காக எல்லா ரூம்லயும் டிவி மாட்டுறதோ புது மாடல் போன் வாங்குறதோன்னு என்னைக்கும் நாங்க யாரும் அதை ஊக்குவிச்சது இல்லை”.
ஸ்கூலில் கட்டாயம் என்று சொன்னதும் அவர்களுக்கு கைபேசி வாங்கி கொடுத்ததை நினைத்து பார்க்க அவள் கவனத்தை தன் புறம் திருப்பினார் மரகதம்..,
“யாழி யூடியூப்ல சொல்லி கொடுக்குறதும் ஒரு மீடியம் ஆப் லேர்னிங்கே தவிர நம்ம வீடியோவை எவ்ளோ பேர் பார்க்கிறாங்க எத்தனை சப்ஸ்க்ரைபர்ஸ் எத்தனை லைக் என்ன கமென்ட்ன்னு கவலை பட கூடாது … அவ பேமிலியை விட அவ மேல அக்கறையோட நிறை குறை சொல்றவங்க வேற யாரும் இருக்க மாட்டாங்க இல்லையாடா…, அவளோட வயசுக்கு தொழில்நுட்பம் குறித்த தெளிவான புரிதல் இல்லாதப்போ அவ அதுல கவனம் செலுத்தினா அவளோட லட்சியத்துல இருந்து விலகி பாதை மாற வாய்ப்பு இருக்கு..”,
“ஆனா அதிர்துடியன் அதுக்கு வாய்ப்பே கொடுக்கலை…, ஆராதனாவை படிப்புல மட்டும் போகஸ் பண்ண சொல்லிட்டு சேனல் பொறுப்பை அதி ஏத்துகிட்டான்”
ப்ரித்வி எடிட்டிங் பண்ணி கொடுத்ததும் அதி அதை சரி பார்த்து யூடியூப்ல போட்டுடுவான்.. எங்களையும் வீடியோ எடுக்கறப்போ உட்கார வச்சி அவ பேசுறது, ப்ரெசென்ட் பண்ற விஷயம், சொல்ற கருத்து, மாடுலேஷன் இப்படி எதாவது குறை நிறை இருந்தா எங்களை சொல்ல சொல்லுவான் ஆராதனாவும் அதை கேட்டுட்டு அடுத்து படிக்க போயிடுவா.
‘ஏன் அத்தை அப்படி..??’
‘இல்லமா கருத்துங்கிற பேருல சிலர் தேவை இல்லாம கண்டதையும் பேசலாம் இல்ல உருவ கேலி இல்ல அவளோட குரல் இப்படி எதையாவது கிண்டல் பண்ணி போடலாம்… அதெல்லாம் எதிர்கொள்ள கூடிய பக்குவம் அவளுக்கு இல்லாத வயசு அதனால ஒவ்வொரு தலைப்பும் படிச்சி முடிச்சி அதை வீடியோ எடுத்த பிறகு எத்தனை லைக்ஸ் வந்திருக்கு யார் என்ன சொன்னான்னு எதை பத்தியும் கவலை படாம அவளோட அடுத்த டாபிக்க்கு போயிடனும்ன்னு சொல்லி தான் இந்த சேனல் ஆரம்பிச்சான்’
‘அப்போ கமெண்ட்ஸ் எல்லாம் படிக்கவே மாட்டா…’
‘அப்படி இல்லம்மா எல்லா கருத்தையும் அதியும் ப்ரித்வியும் ப்ரீயா இருக்கப்போ தவறாம படிப்பாங்க.., எனக்கும் சில சமயம் அனுப்பி வைப்பாங்க ஆரம்ப கட்டத்துல சிலர் குறைகள் சொல்லி இருந்தாலும் அதுக்கு அப்புறம் அவ நடத்துற விதம் பிடிச்சி போய் எல்லாரும் பாலோ பண்ண ஆரம்பிச்சிட்டாங்க இப்போ எல்லாம் கமென்ட் செக்ஷன்ல நிறைய கேள்விகள், சந்தேகங்கள் கேட்பாங்க அதை எல்லாம் இவங்க தனியா எழுதி அவகிட்ட கொடுப்பாங்க அவளோட ஆன்சர் ஒரு நாள் எடுத்துட்டு போடுவாங்க’
‘எப்பவும் படிச்சிட்டே இருப்பாங்களா அத்தை ஆனா அவங்க சமைக்கிறாங்க.. அப்புறம் … ஆனா என்னை மட்டும்.. வே…’ என்று தன் சந்தேகத்தை கேட்க,
“ஓஒ அதுவாம்மா..?? என்று புன்னகைத்தவர்
“நீ இப்பதான் ஆரம்ப கட்டத்துல இருக்கியாம் ஆனா இந்த வீட்டு மருமகளா உனக்கு பொறுப்பு, கடமை நிறைய இருக்கு இல்லையா..?? அதனால அதெல்லாம் உன்கிட்ட எதிர்பார்த்து செய்ய சொல்லி உனக்கு எந்த அழுத்தமும் கொடுக்க கூடாது… ஆராதனா போல தான் நீயும், இன்னும் கொஞ்ச நாள் போன பிறகு நீ ஓரளவுக்கு ஸ்டேபிள் ஆனதும் நீயே வந்து செய்வன்னு சொல்லி அதி சொன்னான்ம்மா…”
‘அப்படியா..??’ என்று விழிகள் விரிய அவள் பார்க்க,
“ஆமாம்மா..!! ஏன்னா ஆராதனா படிக்க ஆரம்பிச்ச புதுசுல அவளுக்கு எந்த ப்ரெஷரும், டைவர்ஷனும் இருக்க கூடாது சொல்லி எந்த வேலையும் நாங்க கொடுக்க கூடாதுன்னு அதி ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டான்.., ஆனா அவ ஓரளவுக்கு எந்த டிஸ்டிராக்ஷனும் இல்லாம படிக்க தொடங்கின பிறகு, அவளோட மாறுதலுக்காவும் ரிலாக்ஸ் பண்ண வேண்டியும் சமைக்க ஆரம்பிச்சா… சின்ன சின்ன வேலைகளில் உதவ ஆரம்பிச்சா.. ஆனா அதி சொல்லனும்ன்னு இல்லை எனக்கே தெரியாதா நீ எவ்ளோ பொறுப்பான பிள்ளைன்னு அதான் நானும் சரின்னு சொல்லிட்டேன்” என்று அவர் பெருமிதத்தோடு அவளை பார்க்க,
‘அத்தை’ என்றவளின் மனமோ இவர்களிடம் இருந்து தனித்து வாழ செல்ல நினைத்ததை எண்ணி பார்த்து கூசி போனது..
“எங்களுக்கு நீயும் ஆராதனாவும் ஒன்னு தான்டா என்ன உன்னை விட அவ ஆறு மாசம் பெரியவ அவ்ளோ தான் வித்யாசம்” என்று கூற,
யாழியோ அவர் பேச்சில் நெகிழ்ந்து போய் அவரை பார்த்திருந்தாள்.
“என்னதான் ஐஏஎஸ்க்கு படிச்சாலும் இருபத்தி நாலு மணி நேரமும் புக் வச்சிட்டு இருக்க முடியாது இல்லையா..?? அவளுக்கு ஒரு சேன்ஜ் வேணுமே அதனால் அவ அண்ணனுங்க அப்பா வீட்ல இருக்க நேரம் சமைக்கிறது அவங்களுக்கு பரிமாறுறது குழந்தை கூட நேரம் செலவழிக்கிறது… அவ ரூம் கிளீன் பண்றது இப்படின்னு அப்பப்போ மொத்தமா ஒரு நாளைக்கு ரெண்டு மூணு மணி நேரம் ரிலாக்ஸ் பண்ணுவா..?? “
‘அதே போல ஞாயிறுக்கிழமை ஒரு வாரம் அதி ஒரு வாரம் ப்ரித்வின்னு அவளை கூட்டிட்டு வெளில போயிட்டு வருவாங்க…’
‘ஏன் அப்படி..??’
ஆராதனாவோட அண்ணன்களா அவங்களுக்கும் பொறுப்பும் கடமையும் இருக்கே அதை தவறாம அதி என்னைக்கும் செஞ்சிடுவான் ப்ரித்வியையும் இப்ப செய்ய வைக்கிறான்.
‘வேற எதுவும் பண்ண மாட்டாங்களா..?? அத்தை’
‘ஏன் பண்ணாம நைட்ல எப்பவாவது பாட்டு போட்டுட்டு மூணு பேரும் சேர்ந்து டேன்ஸ் ஆடிட்டு இருப்பாங்க..’,
டான்ஸ்சா..?? அவரா…?? என்று அவள் வியப்பாக கேட்க,
“ஆமாம்மா அதி ட்ரெயின்ட் டான்சர்..!! காலேஜ்ல கல்ச்சுரல் செகரட்ரியா இருந்தவன் சின்ன வயசுல இருந்தே மூணு பேரும் சனி ஞாயிறு ஆனா பாட்டும் ஆட்டமுமா இருப்பாங்க வளர வளர குறைஞ்சிடுச்சி இப்பவும் எப்பவாவது ஆடிட்டு இருப்பாங்க” என்று கூற யாழியிடம் இன்னுமே குறையாத வியப்பு…
இப்போது ஓரளவிற்கு அவனுடைய பிடித்தம் அவளுக்கு புரிந்தது இனி நிச்சயம் அவனை கோபபடுத்தும் விதம் நடந்து கொள்ள கூடாது என்று அவள் யோசித்திருக்க,
“நான் வேற படிக்கிற பிள்ளை கிட்ட நிறைய கதை பேசி உன் டைமை வேஸ்ட் பண்ணிட்டேன் போல நீ எதையும் யோசிக்காம போய் படி கூடிய சீக்கிரமே நீயும் ஆரு போலவே உன் கையால சமைச்சு உன் புருஷனுக்கு பரிமாறலாம் , இவ்ளோ ஏன் ஊட்டியே விடலாம் என்ன..??” என்று அவள் மனவோட்டம் அறிந்து அவர் புன்னகைக்க,
யாழிக்கோ அவர் வார்த்தைகளில் சட்டென முகம் செந்தூரமாகி போக புன்னகையுடன் ‘சரி அத்தை’ என்று தன் அறைக்கு திரும்பி வெகு தீவிரமாக படிக்க தொடங்கினாள்.
**********************************
அன்று அதிர்துடியன் வருவதற்கு தாமதமாக மரகதம் யாழி, சாரு, ஆராதனா மூவரையும் ஒன்றாக அமர்த்தி முதலில் சாப்பிட வைத்து அறைக்கு அனுப்பி விட்டார்.
வீட்டிற்கு வந்தவன் உணவை முடித்து கொண்டு அறைக்கு வர இரண்டு மூன்று புத்தகங்களை வைத்து யாழி குறிப்பு எடுத்து கொண்டிருந்தாள், அவனை கண்டதும் முகம் மலர ‘சாப்ட்டீங்களா..??’ என்று கேட்க,
‘முடிச்சிட்டு தான் வரேன், நீ சாப்ட்டியா..??’
‘ஹ்ம்ம்’
‘என்ன படிச்சிட்டு இருக்க..??’ என்றவாறே அவள் மேஜை அருகே சென்றவன் புத்தகங்களை பார்வையிட யாழியோ சோர்ந்திருந்த அவன் முகத்தில் விழிகளை நிலைக்க விட்டு நின்றிருந்தவள் அவன் அவள் புறம் திரும்பவும், ‘தேங்க்ஸ்’ என்றாள்.
‘எதுக்கு..??’
‘எதற்க்கா..?? எதற்கு என்று அவள் எப்படி வெளிப்படியாக சொல்லுவாள்..?? வீடியோ எடுக்க வேண்டும்.., தான் பிறருக்கு ஒரு விஷயத்தை கொண்டு சேர்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சியோடு படிக்க தொடங்கியவளுக்கு இப்போது இருநாட்களாக இருந்த கடினம் இல்லையே .. ஆர்வத்தோடு கற்கிறாள் அதற்க்கான நன்றி’ ஆனால் காரணத்தை சொல்ல முடியாதவள் அவனிடம்,
‘தெரியல சும்மா சொல்ல தோனுச்சு’ என்றாள்.
அதிரோ கையோடு கொண்டு வந்திருந்த ‘இந்தியன் கல்ச்சர் அண்ட் ஹெரிடேஜ்’ புத்தகத்தை கொடுத்து இன்னைக்கு நீ நல்லா பேசினதுக்கு என்னோட கிப்ட் என்றான்.
‘தேங்க்ஸ்’ என்றவளிடம்,
“உனக்கு டெல்லில இருக்க கோச்சிங் சென்டர்ல பேசி இருக்கேன் சீக்கிரமே கிளம்ப வேண்டி இருக்கும் உனக்கு ஓகே தானே..??” என்று அவன் முடிக்கும் முன்னமே,
‘எ… எதுக்கு…??’
‘இது என்னடி கேள்வி..?? வீட்ல இருந்து படிக்கிறதை விட கோச்சிங் சென்டர்ல…’ என்றவனை மேலும் தொடரவிடாமல்,
‘நா… நான் எங்கயும் போக மாட்டேன் இங்க தான் இருப்பேன்’ என்றாள் உறுதியோடு..
‘ஏன்..??’
‘ஏன்… ஏன்னா..?? என்னால முடியாது’
‘அது தான் ஏன்..??’
‘ஏன்.., ஏன்னா… ஏன்னா.. எனக்கு அப்பா, அம்மா… விஷ்…எனக்கு எல்லாரையும் பிரிஞ்சு இருக்க முடியாது’ என்றால் அவனை தவிப்போடு பார்த்து,
‘அப்படியா..??’ என்று மீசையை இருவிரலால் நீவிவிட்டு கொண்டே அவளை பார்த்தவன், அப்போ ஒன்னு பண்ணலாம்.. என்று நிறுத்த,
‘என்ன..??’
‘வேணும்ன்னா உன் அப்பா அம்மாவையும் துணைக்கு அனுப்பி வைக்கிறேன் அங்கேயே வீடு எடுத்து உன்னை பார்த்துக்கட்டும்’ என்றிட யாழியோ அகலாத அதிர்வோடு அவனை பார்த்து நின்றாள்.