Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Kadhal enbadhu kanavu allava -24

24

 

காட்டூரிலிருந்து கிளம்பி சென்னை வந்தாள் பூங்கொடி.

“அடியேய் பூங்கொடி இந்தா டி இன்னைக்கு என் தங்கச்சி மகன் ஊர்ல இருந்து வரான். அவனுக்கு மீன் குழம்புன்னா ரொம்ப பிடிக்கும். ஆக்கிடு சீக்கிரம். அதுமட்டுமல்ல அவனுக்கு தங்குறதுக்கு கார்த்திக் ரூமை தான் ஒதுக்கி கொடுத்துருக்கேன் அவன் டாக்டர், சுத்தம் ரொம்ப பார்ப்பான் அதனால் பெட் எல்லாம் க்ளீன் பண்ணிடு ஓகேவா ” என்று மீனாட்சி சொல்லிவிட்டு நகர்ந்தாள்.



Advertisement

 

‘ம்ம் முதல்ல மீன் குழம்பு வைக்கிறதா இல்லை ரூம் க்ளீன் பண்றதா’ என்று தலையை சொரிந்தாள் பூங்கொடி.

 

Advertisement

“என்ன கனகா மேடம் இன்னைக்கு நீ எங்க ரூம்ல தான் படுக்கனும் போலருக்கு. பேசாம குழந்தைகளை வச்சிக்கிட்டு நீயும் நானும் இந்த ரூம்ல படுத்துக்கலாம். கோபியும் கார்த்தியும் ஹால்ல படுக்கட்டும்” என்றாள் லதா.

Advertisement

 

“ஆமாக்கா நானும் அதே தான் யோசிச்சேன் ,சரி அதை விடுங்க,நம்ம சின்ன மாமியார் புள்ள வராராமே நீங்க இதுக்கு முன்னாடி பாத்துருக்கீங்க ? ” என்றாள் கனகா.

 

Advertisement

“அட நீ வேற கல்யாணம் ஆகி இத்தனை நாள்ல இதான் முதல் தடவை நம்ம வீட்டுக்கு விருந்தாளி வருவது ” என்றாள் லதா. இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே லதாவின் மகன் வீல்லென்று அழத்துவங்கினான்….

 

“அச்சோ பாப்பா அழுவது ” என்று ஓடினாள் அதற்குள் அக்குழந்தையை தூக்கி ஏந்தி தன் மார்போடு அணைத்தான் அவன்…

 

அவன் பெயர் பிரகாஷ். மீனாட்சியின் தங்கை மகன்.

 

“என்னங்க மிஸஸ் லதா பாப்பாவுக்கு பசி ஆற்றாம உள்ள என்ன பண்றீங்க” என்றான் பிரகாஷ்.

 

“வாங்க வாங்க நீங்க தான் பிரகாஷா?” என்றாள் புன்னகையுடன்.

 

“ம்ம் யெஸ் பிரகாஷ் செல்வன் ”

 

“வாங்க உட்காருங்க, என்று அவனை அமர வைத்து விட்டு உள்ளே சென்று மீனாட்சியை அழைத்து வந்தாள் லதா.

 

“வாடா வாடா வாடா என்று வாயெல்லாம் பல்லாக மீனாட்சி அவனை வரவேற்றார்.

 

“என்ன பெரியம்மா நீங்க நான் வரும்போது நீங்க வாசல்ல ஆரத்தியோட காத்துட்டு இருப்பீங்கன்னு பார்த்தா உள்ள என்னமோ பண்ணிட்டு இருக்கீங்க நானும் என்னடா வீட்டுல ஆளையே காணுமே அப்படின்னு சொல்லி உள்ள நோஞ்சான் இங்க குழந்தை வீழ்வேனென்று காத்திட்டு இருந்துச்சு என்றான் பிரகாஷ்.

 

லதாவிடம் கையில் குழந்தையை கொடுத்துவிட்டு அவனும் உள்ளே வந்தான் சமையலறையில் நுழைந்தவன் மீனாட்சி மகனுக்காக சமைத்து வைத்திருந்த கேசரியை வாசம் பிடித்து ஆஹா பெரியம்மா எனக்காகவா செஞ்சு வச்சு இருக்கீங்க சூப்பரா இருக்கு, என்று சுவைத்தவாறு கூறினான்.

 

“சரி சரி தட்ட பூங்கொடி கிட்ட கொடுத்துடு அவ கழுவி போட்டுருவா என்றால் மீனாட்சி பூங்கொடியா அது யாரு என்ற விழித்தான் பிரகாஷ்.

 

“பூங்கொடி நம்ம வீட்ல வேலை செய்றாப்பா அவ ஊர் காட்டூர்” என்றார் மீனாட்சி.

 

பூங்கொடியே சற்று நிமிர்ந்து பார்த்தான் பிரகாஷ் வேலைக்காரிக்குரிய தோற்றம் அவளிடம் இருந்தாலும் அதை தாண்டி அவளுக்குள் இருக்கும் உண்மையான அழகை கண்டு வியந்தான்.

 

“உங்க ஊரு காட்டுற அங்கங்க இருக்கீங்க” என்ற பேச்சை அவளிடம் துவங்கினான்.

 

“நான் சிவன் கோயில் பக்கத்தில் இருக்கும் தெருவுல இருக்கேன்.” என்றாள் தயங்கியபடி.

 

“சரி சரி இவ கிட்ட உனக்கு என்ன பேச்சு நீ போய் ரெடி ஆயிட்டு வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன் ” இன்று மீனாட்சி சொன்னதும் அங்கிருந்து நகர்ந்தான்.

 

நம் பூங்கொடிக்கு அவனைப் பார்த்ததும் பிடித்து விட்டது தன்னிடம் இவ்வளவு இயல்பாக யாரும் பேசி அவள் பார்த்ததில்லை வேலை செய்யும் இடத்தில் வேலைக்காரியாய் மட்டும் பார்க்கும் மக்களுக்கு இடையே பிரகாஷ் சற்று வித்தியாசமானவன் ஏதோ நீண்ட நாள் பழகிய ஒரு நெருக்கம் அவனிடம் பேசும் போது அவளுக்கு இருந்தது.

 

ஒருவேளை அந்த பெரியவர் சொன்ன ராஜகுமாரன் இவன்தானோ என்று மனதுக்குள் சொல்லி சிரித்தாள் ஆனால் அதே சமயம் தன் மனசாட்சி அவளிடம் நான்தான் பூங்கொடி ரொம்ப ஆசைப்படாத இதெல்லாம் நல்லதுக்கே இல்ல அவன் ஏதோ எதார்த்தமா ஒரு ரெண்டு வார்த்தை பேசிட்டான் ஆனால் நீ ரொம்ப கற்பனைக்கு போக கூடாது என்று கூறியதை கேட்டு பூங்கொடி தன் தலையில் தானே கொட்டியபடி நகர்ந்தாள்.

 

பிரகாஷ் அங்கு இருக்கும் நாட்களில் பூங்கொடியிடம் இனிமையாக பழகி வந்தான்.

 

“நீ சாப்டியா ”

 

“ஏன் டல்லா இருக்க ”

 

“வைட்டமின் மாத்திரைகள் ஒழுங்கா சாப்பிடு ” என்பது போன்ற கரிசனமான உபசரிப்புகளை செய்தான்.

 

ஒருவரிடம் கரிசனமாக பேசுவதிலேயே காதல் மலரும் என்றால் அது இவர்கள் விஷயத்தில் சாத்தியம் தான். அவன் கருணையோடு பழகுவதிலேயே அவளுக்கு அவன் மீது காதல் வந்துவிட்டது. ஆனால் அவனிடம் சொல்லத்தான் முடியவில்லை.

 

அவன் அங்கு தங்கிவிட்டு போகும் தருவாயில் அவளிடம் சொல்லிட்டு கிளம்பும் போது தான் அவள் கண்களில் காதல் நிரம்பியிருப்பதை கண்டான் பிரகாஷ்.

 

“நான் கிளம்புறேன்”என்றபோது…அவள் மௌனமாகவே இருந்தாள்.

 

“பூங்கொடி ஐ மிஸ் யூ ” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிவிட்டு கிளம்பினான். அவனுக்கு அவள் மீது அன்பு இருக்கிறது என்பதை உணர்த்திவிட்டு சென்றான்.

 

‘இவ்வளவு நாள் இங்க இருந்து என் மேல் பாசம் காட்டிட்டு ஏன் போன ? இப்போ என்னால இயல்பாகவே இருக்க முடியலை.’ என்று வருந்தினாள்.

காதல் திருமணம் செய்துகொண்ட கனகாவுக்கு அவள் மனம் நன்கு புரிந்தது.

 

“என்ன ஒரு மாதிரி ஆயிட்ட இப்போல்லாம்” என்றாள் கனகா.

 

“அதெல்லாம் ஒன்றுமில்லை கனகா மா நான் நார்மலா தான் இருக்கேன்..”என்றாள் கனகா.

 

“இங்க பாரு,இங்க இருக்கிற மத்தவங்களுக்கு வேணும்னா புரியாம இருக்கலாம் ஆனால் எனக்கு நல்லாவே புரியுது . உன் மனசுல பிரகாஷ் செல்வன் இருக்காருன்னு . அவரு ஒரு கெஸ்டா இங்க தங்கிட்டு போனாலும் ரொம்ப ஜாலி டைப்பா எல்லார்கிட்டயும் நல்லா பேசி பழகுனாரு. இந்த மாதிரி ஒரு ப்ரண்டு இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்னு எனக்கு தோணுச்சு. அட எனக்கே அப்படி தோணுரப்ப உனக்கு தோணாதா என்ன? சரி அதெல்லாம் விடு.. சீக்கிரமே உன்னை தேடி அவர் வருவாரு. ” என்றாள் ஆதரவாக.

 

“நிஜமா வருவாரா” என்றாள் பாவமாக.

 

“கண்டிப்பா வருவாரு என்று அவளை தன் தோள்

மீது சாய்த்தபடி ஆசுவாசப்படுத்தினாள்.

 

விரைவில் இவர்கள் காதல் தொடரும்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!