ராகம் – Prefinal 1
ப்ரிலிம்ஸ் பாட திட்டத்தோடு சேர்த்து மெயின்ஸ் சம்பந்தப்பட்ட சில தலைப்புகளையும் யாழியின் வேகமாக கற்று காணொளியாக மாற்றும் திறன் கண்டு ஏற்கனவே அதிர்துடியன் அவளை முடிக்க வைத்திருந்தான். அதனால் இரண்டாம் முறையாக மெயின்ஸ்க்கு தயாராகும் ஆராதனாவுக்கு ஈடு கொடுத்து யாழியால் பாடத்திட்டங்களை விரைவாக முடிக்க முடிந்தது.
இதனால் யாழிக்கு அடுத்த கட்ட தயாரிப்புகள் எளிதாகி போயிருந்ததோடு பெரிதாக சமையல், வேலை என்று எதையும் செய்ய கூடாது என்ற வீட்டினர் இருவரையும் தடுத்துவிட வெகு தீவிரமாக மெயின்ஸ்க்கு படித்து கொண்டிருந்தனர்…
சமூகத்தின் மீதான ஆதங்கமும் படிப்பின் மீதான ஆர்வமும் யாழியை முன்பை விட இன்னும் தீவிரமாக உழைக்க செய்திருந்து… பல நாட்கள் இரவு இரண்டை தாண்டியும் இருவரும் படித்து கொண்டிருப்பர்… அது தெரிந்து இப்போதெல்லாம் அதி, ப்ரித்வி , சாரு யாராவது ஒருவர் இரவு வேளையில் அவர்கள் தேவையை பூர்த்தி செய்து விடுவர்.
Advertisement
மேலும் இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில் அன்று யாழியின் பிறந்தநாள் என்பதால் காலை குளித்து விட்டு வந்தவள் அதிர்துடியன் தேர்ந்தெடுத்த புடவையோடு மிதமான ஒப்பனையில் தயாராகி கொண்டிருக்க சத்தமில்லாது உள்ளே நுழைந்த அதிர்துடியன் அவளை பின்னிருந்து அணைத்து கன்னத்தில் முத்தமிட,
சிறு அதிர்வோடு யாழி அவனை கண்ணாடியினூடு பார்த்தாள்,
‘பிறந்த நாள் வாழ்த்துக்கள்டி பொண்டாட்டி’ என்று மறுகன்னத்திலும் அழுத்தமாக அவன் முத்தமிட யாழிக்கோ நடப்பதை நம்ப முடியவில்லை,
Advertisement
‘உன்.. உங்களுக்கு தெரியுமா..??’ என்றாள் கண்கள் மின்ன,
Advertisement
‘என்னடி கேள்வி இது…?? என் பொண்டாட்டி பர்த்டே எப்போன்னு எனக்கு தெரியாம இருக்குமா..??’ என்று அவளை தன் புறம் திருப்பி நெற்றியில் முத்தமிட்டவன் ‘சீக்கிரம் வா வெளியே கிளம்பனும்’ என்றிட அப்போது தான் வேட்டி சட்டையில் இருந்தவனை கண்டு யாழி இமைக்கவும் மறந்து நின்றிருக்க,
‘டைம் ஆச்சுடி போற வழியில பொறுமையா சைட் அடிச்சுப்ப இப்போ கிளம்பி வா’ என்று அவள் இதழ்களை மென்மையாய் தீண்டி சென்றான்.
கீழே வந்த யாழி மாமனார் மாமியாரிடம் ஆசி பெற்று நேரே பெற்றோரிடம் சென்று அவர்களிடமும் ஆசி பெற்று அங்கேயே காலை உணவை முடித்து கொண்டு காரை எடுத்த அதிர் கிருஷ்ணகிரியை தாண்டி செல்வதை கண்டவள்,
Advertisement
‘எங்கங்க போறோம்…??’ என்ற அவள் கேள்விக்கு பதிலளிக்காமல் வழியில் பூக்கடையில் நிறுத்தி பூ வாங்கி அவளை திரும்ப சொல்லி வைத்து விட்டவன் ‘சர்ப்ரைஸ்’ என்று வாகனத்தை செலுத்த,
இப்போது கர்நாடகா எல்லைக்குள் நுழைந்து கொண்டிருப்பதை கண்டு,
‘ஏங்க எங்கங்க போறோம் பெங்களூரா..?? மைசூரா..?? ஸ்டே பண்ண போறோமா ..?? ஆனா நாம லக்கேஜ் எதுவும் எடுத்துட்டு வரலையேங்க’ என்றவளிடம்.
‘இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும்’ என்று காரை செலுத்தியவன் அடுத்து சென்று சேர்ந்த இடம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோடி லிங்கம் கோவில்.
ஈசனின் கோவிலை கண்டு யாழி ஆச்சர்யமாக பார்க்க , ‘நான் சொன்ன சர்ப்ரைஸ் பிடிச்சிருக்கா’ என்று சிவன் பக்தையான மனைவியை கேட்க அவளோ முகம் மிளிர ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.
ஈசனின் சந்நிதானத்தில் ஆரம்பித்த அவர்கள் உறவு ஈசனை தரிசித்த பின்பே அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற தீர்மானத்துடன் அவளை கோடி லிங்கம் கோவிலுக்கு அழைத்து வந்திருந்தான் அதிர்துடியன்.
வழக்கம் போல இருவரின் கைபேசியையும் காரில் வைத்து பூட்டியவன் மனைவியோடு கோவிலுக்குள் நுழைந்தான்.
ஆனால் வழி நெடுகிலும் எதற்க்காக கோவிலுக்கு வருகிறோம் என்ற எண்ணமே இல்லாமல் ஆளாளுக்கு கைபேசியை உயர்த்தி பிடித்திருப்பதை கண்டு, “என்னங்க இது போன், கேமரா யூஸ் பண்ண கூடாதுன்னு அங்கங்க போர்ட் வச்சி இருந்தும் எல்லாரும் செல்பி எடுக்குறாங்க அதுவும் சாமி முன்ன நின்னு..?? என்று அவள் அதிர்வுடன் கேட்க,
“இப்படி தான்டி எல்லாமே மாறி போச்சு..!! எதுக்கும் மதிப்பில்லை..!! மனித மனங்கள் பிளாஸ்டிக் ஆகிட்டு வருது இயற்கையோடு இணைந்து வாழனும் ஆனா செயற்கை அதிகமாகிடுச்சு”
‘எப்போ இவங்க எல்லாம் மாறுவாங்க..??’ என்று எதிர்பாப்போடு கேட்க,
‘இனியும் மாறுவாங்கன்னு நினைக்கிறியா..??’ என்றவன் ஒரு நொடி நிறுத்தி சுற்றி இருந்த கூட்டத்தை பார்த்தவன்,
‘ஆனா மாற்றம் ஒரே நாள்ல வந்துடாது நம்மால முடிந்த வரை எடுத்து சொல்லலாம் ஒன்னு ரெண்டா மாறும் ரெண்டு நாலா மாறும் யாருக்கு தெரியும் நீ சொல்ற மாற்றம் மெது மெதுவா தொடங்கி தொழிற்புரட்சி மாதிரி செல்போனுக்கு எதிரான புரட்சி வெடிக்கவும் வாய்ப்பு இருக்கு அதன் மூலம் கட்டுபாடுகள் விதிக்கப்படலாம், மனிதனின் நேரத்தை, ஆக்கசக்தியை விழுங்க கூடிய புது புது அர்த்தமற்ற செயலிகளின் (applications) வரவு தடுக்கப்படலாம்..’ என்றிட
வேதனையுடன் அங்கிருந்த மக்களை பார்த்த யாழி பின் கணவனுடன் கோவில் முழுக்க இருந்த சின்னதும் பெரியதுமாக கோடிக்கும் அதிகமான லிங்கங்களை வணங்கி இறுதியாக ஆசியாவிலேயே உயர்ந்த சிவலிங்கத்தையும் தரிசித்து கிளம்பினர்.
‘ஒரு நிமிஷம் இரு யாழி’ என்று கோவில் முகப்பில் அவளை நிற்க வைத்து அதிர் கிளம்ப,
‘என்னங்க எங்க..??’
‘இதோ வந்துட்டேன் இரு’ என்று விட்டு காருக்கு திரும்பி கைபேசியை எடுத்து வர,
‘இப்போ எதுக்கு போன்..??’
‘செல்பி எடுக்க தான்’
‘செல்பியா..??’ என்று கேட்டவளுக்கு இப்போது கணவனை நன்கு புரிந்திருப்பதால் எந்த அச்சமும் இல்லை.
‘ஆமா கல்யாணத்துக்கு பிறகான என் பொண்டாட்டியோட முதல் பிறந்த நாள் அதோட ஒவ்வொரு நிமிஷத்தையும் சேமிக்க வேண்டாமாடி..??’ என்று கேட்க யாழி முகமெங்கும் பூரிப்பு. (rpmgreatermilwaukee.com)
‘அதை விட என்கூட தனியா செல்பி எடுக்கனுங்கிறது என் பொண்டாட்டியோட நீண்ட நாள் ஆசை அதை நிறைவேத்த வேணாமா..??’ என்று அவளை சீண்ட,
‘யாழிக்கோ அன்று அவன் செல்பி எடுக்க முற்ப்பட்டது நினைவில் எழ சட்டென முகம் குங்குமமாக சிவந்து போனது…’,
‘என்னடி ஆச்சு திடீர்ன்னு உன் முகம் சிவக்குது..??’ என்றவனின் விழிகள் தப்பாமல் அவள் நாணத்தை படம் பிடித்து மனபெட்டகத்தில் சேமித்து கொண்டிருந்தது..,
‘ஒண்ணு..மில்..லை’ என்று அவள் தலையசைக்க,
‘நம்பிட்டேன்’ என்றான் மீசை துடிக்க,
அதில் இன்னுமே யாழியின் முகம் செங்கோழுந்தாகி போக மெல்ல நகர்ந்து வந்து அவன் அருகே நிற்கவும் ‘நிமிர்ந்து பாருடி’ என்றான்.
முகம் நிமிர்த்தியவளின் பார்வை கேமராவை அல்லாமல் வழக்கம் போல அவனை பார்க்க அதே நேரம் அவன் பார்வையும் அவளோடு கோர்க்க இருவரின் முதல் செல்பி ஈசன் சந்நிதியில் காதலாட எடுக்கப்பட்டது.
செல்பி எடுத்தவன் அதை அவளுக்கு அனுப்பி ‘இது பர்த்டே பேபிக்கு என்னோட முதல் கிப்ட்’ என்றான்.
******************************************
மாலை வீடு திரும்பிய யாழியை விஷ்ணு, சாரு, ஆராதனா மூவரும் ஆர்பாட்டத்துடன் வரவேற்று அழைத்து செல்ல உள்ளே மொத்த குடும்பமும் அவளுக்காக கேக் வாங்கி வைத்து பெரிதான அளவில் அவள் பிறந்த நாளை கொண்டாடி ஒவ்வொருவரும் தனி தனியாக யாழிக்கு பரிசுகளை குவித்து கொண்டிருந்தனர்…,
சுந்தரலிங்கமும் மரகதமும் யாழியை ஆசிர்வதித்து வைர அட்டிகையை கொடுக்க ப்ரித்வியும் சாருவும் சேர்ந்து வந்து அவளுக்கு தங்கள் பரிசை கொடுக்க,
‘அக்கா நீங்களும் மாமாவும் இப்போ சேர்ந்துட்டீங்களா..?? சண்டை ஓவரா..??’ என்று அவர்கள் இணக்கத்தை கண்டு கேட்க,
‘ஆம்’ என்று புன்னகையோடு சாரு ப்ரித்வியை பார்க்க அவனும் புன்னகையோடு மனைவியை தான் பார்த்திருந்தான்.
பின் ஆராதனா யாழியோடு விதவிதமாக செல்பி எடுத்து கொண்டிருந்தாள்..
ஆம் இப்போதெல்லாம் இருவரும் வீட்டில் நடக்கும் எந்த முக்கிய தருணத்தையும் தவறவிடுவதில்லை அவளோ ஆருவோ அதை புகைப்படமாக மாற்றி சேமித்து விடுவார்கள் ஆனால் வலைதளங்களில் போடுவதற்காக அல்ல..!!
அனைவருடனும் பேசிக்கொண்டு இருந்தவள் மாடிக்கு செல்வதை கண்ட அதிர் அவளை தடுத்து,
‘எங்க போற..??’
‘ட்ரெஸ் சேன்ஜ் பண்ண போறேங்க’
‘இல்ல வேண்டாம்’
‘ஏன்..?? இது… உங்களுக்கு… நீங்க தானே பூஜை அப்போ மட்டும் கட்ட சொன்னீங்க..’ என்று அவள் அவனை கேள்வியாக பார்க்க,
‘ஆமா’
‘அது தான் நாம கோவிலுக்கு போயிட்டு பூஜை முடிச்சிட்டு வந்துட்டோமே’
‘இல்ல நைட் பூஜை இருக்கு அதனால மாத்த வேண்டாம்’ என்று அவன் கூறி செல்ல,
அவளோ சிறு குழப்பத்துடனே அறைக்கு சென்றவள் முகம் கழுவி திரும்பி இரவு உணவை தயாரிக்க செல்ல அங்கே வந்த மரகதம்,
‘ஏன்மா இன்னும் புடவையிலேயே இருக்க போய் மாத்திட்டு வந்து செய்யறது தானே’ என்று கேட்க
‘இல்ல அத்தை பூஜை இருக்கு அதான்..’
‘பூஜையா..?? என்ன பூஜைம்மா..??’ என்று அவர் புரியாமல் பார்க்க,
‘அதான் தெரியலை அத்தை ஆனா நாங்க ரெண்டு பேர் மட்டும் நைட் செய்யற பூஜை ஏதோ இருக்காம் அதான் அவர் என்னை ட்ரெஸ்…’ என்று பேசிக்கொண்டே சென்ற மருமகளிடம் குரலை செருமிகொண்டே,
“சரி.. சரி.. போதும் போதும் நீ போ நான் சப்பாத்தி போடுறேன்..”
‘பரவால அத்தை நான் பண்றேன்’ என்ற மருமகளுக்கு என்ன சொல்வது என்று புரியாமல் நின்றவர் குரலை சற்று உயர்த்தி,
“சொன்னா கேளு யாழி நீ போ நான் பார்த்துக்குறேன்” என்று வெளியே அனுப்பியவர் மகன் மருமகள் இருவரையும் அமர்த்தி தானே பரிமாறி இருந்தார்.
அதிர் உணவை முடித்து கொண்டு மாடிக்கு சென்றுவிட யாழியோ சாரு மற்றும் ஆராதனாவுடன் பேசி கொண்டு இருந்தாள்.
மேலும் அரை மணி நேரம் கடந்த பிறகும் மருமகள் அங்கேயே இருப்பதை கண்ட மரகதம், “மூணு பேரும் சேர்ந்து பேசினா பேசிட்டே இருப்பீங்க நேரம் போறதே தெரியாது வெயில்ல சுத்திட்டு வந்திருக்க பிள்ளையை இன்னும் பிடிச்சி வச்சா எப்படி..?? என்றவர்,
‘நீ என் கூட வாம்மா’ என்று மருமகளை அழைத்து கொண்டு பூஜை அறை சென்றவர் பிள்ளைகளின் வாழ்வு சிறக்க கண்மூடி வேண்டிட யாழியும் அவரை பின்பற்றி கைகூப்பி கண்மூடி நின்றிருந்தாள்.
மரகதம் அவளுக்கு குங்குமமிட்ட பின் யாழியும் இருவருக்குமான பாலோடு மாடிக்கு சென்றாள்.
**************************************************************

