ராகம் – 22.2
அதிர்துடியனின் வார்த்தைகள் கொடுத்த அதிர்வில் இமைக்கவும் மறந்தவளாக யாழி ஒருபுறம் உறைந்து போய் நின்றிருந்தாள் என்றால்,
மறுபுறம் இருந்தவனோ ‘உன் பெற்றோரை துணைக்கு அனுப்பி வைக்கிறேன்’ என்ற அவன் வார்த்தைகளால் மின்சாரம் பாய்ந்த அதிர்வோடு அவனை பார்த்தவளின் விழி ஈர்ப்பு விசையில் மதி மயங்கி போய் நின்றிருந்தான்.
பின்னே தன்னை விட்டு பிரிய வேண்டுமே என்பதால் அவள் கொண்ட அதிர்வு அது என்பதை அறியாதவனா அவன்..!!
Advertisement
இது தானே அவளின் அவனுக்கான இந்த தவிப்பும் தேடலும் தானே அவனை பித்தம் கொள்ள செய்து கொண்ட உறுதியில் இருந்து தடுமாற செய்து கொண்டிருக்கிறது…,
என்னதான் அவள் படிப்பை முன்னிறுத்தி அவனுக்கு அவனே கட்டுப்பாடு விதித்து அவளுடனான நிமிடங்களை இயல்பாக கடந்து விலகி விடலாம் என்று நினைத்தாலும் அவளது காதலும் தேடலும் அவனை மும்மடங்கு வேகத்தோடு அவள் பால் கட்டி இழுக்க தன் சொல் பேச்சு கேளாமல் அவள் புறம் வீழும் மனதை அவனும் என்ன தான் செய்ய..??
இதோ இன்று கேமரா வழியே அவளை பார்த்திருந்தவனுக்கு அலுவலகத்தில் வேலையில் கவனம் செலுத்த முடியாத வகையில் அவள் முகம் அகக்கண்ணை விட்டு அகல மறுக்க கிட்டத்தட்ட அவள் நினைவிலேயே சுற்றி திறந்தவனின் சோதனை காலம் தொடங்கி விட்டதை அதிர்துடியனும் உணர்ந்தே இருந்தான்..,
Advertisement
ஒவ்வொரு ஸ்லைட் மாறும் நொடி நேர இடைவெளியிலும் திரையில் இருந்து மீண்டு அவனை தொட்டு வருடி சென்ற அவள் பார்வைகள் இன்னமும் ஆடவனை வரைமுறையின்றி வதைத்து கொண்டிருந்தது என்றால் மிகையல்ல..!!
Advertisement
பேசி முடித்த பின்பும் அத்தனை பேர் நடுவில் அவனை விட்டு அகலாத பார்வையும் அதில் அவனுக்கே அவனுக்காக பிரத்யேகமான கொள்ளை காதலும், தேடலும், தூய நேசமுமாக, பரிதவிப்பும், சிறு கலக்கமும் என்று மொத்தமாக மருளும் விழிகளால் அவனை சுழற்றி அடித்து அவனியல்பில் இருக்க விடாமல் ஆட்டி படைத்து கொண்டிருந்தாள் அவன் மனையாள்…
இப்போது கூட தனக்காக பரிதவித்து நிற்கும் அவளை அணைத்து ஆற்றுபடுத்த துடிக்கும் கரங்களை முயன்று கட்டுபடுத்தி கொண்டு நிர்ப்பவனுக்கு எப்படியாவது அவளை இங்கிருந்து அகற்றி விடும் வேகம்…!!
இத்தனை நாட்கள் சமூக வலைதளங்களின் பிடியில் சிக்கி தவித்து கொண்டிருந்த பெண் சுயமாக சிந்தித்து தனக்கான பாதையை தேர்ந்தெடுத்து கொண்ட உறுதியில் இருந்து பின்வாங்காமல் அவள் வேகமாக பயணிக்க தொடங்கி இருக்கும் நிலையில் இப்போது வேக தடையாக அவனே அமைந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறான்.
Advertisement
ஆம் அவனது சிறு தொடுகையும் அவளை பாதித்து திசை திருப்பி விடக்கூடாது.., தானே அவள் படிப்பிற்கு தடையாகி போய் விடக்கூடாது என்றே அவளை விட்டு விலக முயல்கிறான்.
முயல்கிறானே தவிர முழுதாக செய்ய முடியவில்லை. பின்னே அவளது ஒவ்வொரு அசைவிலும், பார்வையிலும், செயலிலும், பேச்சிலும், முடிவிலும் அவள் காதலை உணர்பவனுக்கு அவளை அருகே வைத்து கொண்டு தள்ளி நிற்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறான்.
ஆணின் தவிப்புகள் சொல்லிலடங்கா நிலையை எட்டியதால் எடுத்த முடியவே அவளை டெல்லி அனுப்புவது என்பது..!!
ஆனால் அது ஒன்றும் அவனுக்கு மட்டும் அத்தனை சுலபமில்லை என்பதை அவன் மட்டுமே அறிவான்.
யாழியோ தைரியத்தை வரவழைத்து கொண்டு அவனிடம், “நீங்க ஏன் ஆருவை டெல்லிக்கு அனுப்பாம என்னை மட்டும் அனுப்புறீங்க” என்று முடிக்கும் போதே தன்னை மட்டும் ஒதுக்குகிறானே என்று அவள் கண்கள் வெகுவாக கலங்கி விட்டிருந்தது,
பின்னே அவள் இங்கே இருந்தால் முழு நாளும் இல்லையென்றாலும் குறைந்த பட்சம் காலை, மாலை இரவு என்று மூன்று வேளையும் அவன் தரிசனம் கிட்டும் அதோடு அவனருகே இருக்கலாம் அவன் பேச்சை கேட்கலாம் அவனை கள்ளத்தனமாக ரசிக்கலாம் ஆனால் அத்தனை தூரம் சென்றால் அவன் தரிசனம் கிடைப்பது அரிதாகி போகுமே..,
முடியாது நிச்சயம் முடியாது !!
பின்னே அவனை விட்டு பிரிய முடியாது என்ற நிலையில் உடனே திருமணத்திற்கு சம்மதித்தவளுக்கு இப்போது அவனை பிரிவது உயிரையே வேரோடு பிரித்து எடுத்து கொடுத்து வெறும் கூடாகி போகும் நிலையல்லவா…?? நிச்சயம் அவளால் முடியாது.
‘சோ… சொல்..லுங்..க…??’ என்று அவள் தழுதழுக்க அவளிடம் உண்மை காரணத்தை சொல்ல முடியாத அதிர்துடியனோ நெஞ்சை நீவி விட்டு ஆழ்ந்த மூச்சை எடுத்தவன்,
“ப்ச் யாழி ஆராதனாவை முதல்ல டெல்லில இருக்க கோச்சிங் சென்டர்ல சேர்த்தினேன் ஆனா அவளுக்கு அங்க சாப்பாடு, கிளைமேட் ஒத்துக்காம அப்புறம் ஹோம் சிக்ன்னு முடியாம போகவும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன்”
‘அப்போ எனக்கு மட்டும் அதெல்லாம் வராதா..??’ என்றவளின் கண்ணீர் கன்னம் தாண்டி சென்றது அதை கண்டவனுக்கு இன்னும் மனம் ரணமாகி போக,
“ஏன்டி ஏன்..?? ஏன் நீ இப்படி இருக்க..?? நான் அப்படி என்ன பண்ணிட்டேன்னு உனக்கு என் மேல கிறுக்கு பிடிச்சி போயிருக்கு, உன்னோட சேர்த்து என்னையும் கிறுகிறுக்க வைக்கிற..,” என்று அவன் இனிதாக சலித்து கொள்ள,
அவளோ விடாப்பிடியாக, ‘எனக்கும் சாப்பாடு ஒத்துக்காது, ஹோம் சிக்…’
“யாழி அதுக்கு தான் உன் அப்பா அம்மாவை கூட அனுப்புறேனே அப்புறம் என்னடி, கிளம்ப வேண்டியது தானே..??” என்று அவளை பார்க்க,
யாழியோ அவனருகே வந்தவள் விடைத்த நாசியுடன் கண்ணீரை துடைத்தவாறே, ‘யார் கூட வந்தாலும் நான் போக மாட்டேன்’ என்றாள் என்றுமில்லாத பிடிவாத குரலில்..,
‘யார் வந்தாலுமா..??’ என்று நிறுத்தியவனுக்கு அப்போ ‘நான்..??’ என்ற எதிர் கேள்வி கேட்டு அவள் வாய் மொழியாக பதில் அறிய ஆசை தான் ஆனால் அவள் பதிலறிந்த பின் அவனை கட்டுபடுத்துவது தானே அவனுக்கு மிகப்பெரிய சவாலாகி போகும்…,
அதனால் தேவையில்லாமல் விஷபரிட்சையில் இறங்க தயாராக இல்லாதவன்,
“சொன்னா கேளு யாழி கொஞ்சம் என்னை புரிஞ்சிக்கோ..”,
‘என்.. என்ன புரிஞ்சிக்கணும்..? முடியாது நான் இங்க இருந்து போக மாட்டேன் ‘ என்றாள் உறுதியாக..,
*******************************************
அதிர்துடியனோ பொறுமையை இழுத்து பிடித்து நிதானமான குரலில், ‘யாழி உனக்கு சென்டர்ல இன்னும் நல்லா கோச் …’
“இல்ல எனக்கு எதுவும் வேண்டாம்…,ப்ளீஸ் நான் இங்க இருந்தே படிக்கிறேன், கண்டிப்பா நீங்க சொல்ற எல்லா எக்ஸாமும் பாஸ் பண்ணி ப்ராமிஸா நான் கலெக்டர் ஆகிடுவேன் நம்புங்க” என்று கெஞ்சலாக அவனை பார்க்க,
‘ஏய் இங்க இருந்தா எங்க நீ கலெக்டர் ஆக முடியாதோன்னு தான் உன்னை டெல்லிக்கு அனுப்புறேன் அதை கூட புரிஞ்சிக்கமாட்டியாடி…??’ என்று கோபமாக குரல் உயர்த்தியவன் அடுத்த கணமே நெற்றியை பிடித்து கொண்டு கட்டிலில் அமர்ந்து விட்டான்.
அவன் கோபத்தை எதிர்பாராத யாழிக்கு உடல் அதிர்ந்து அடங்கிட, மருளும் விழிகளால் அவனை பார்த்தவள் மெல்லிய குரலில்,
“ஏன்..?? ஏன் அப்படி சொல்றீங்க..??” என்றவளுக்கு இப்போதெல்லாம் கைபேசி குறித்த நினைவு கூட இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்தி கொண்டிருக்கும் அவள் மீது ஏன் அவனுக்கு நம்பிக்கை இல்லாமல் போனது என்ற கேள்வி,
‘சொல்லுங்க..’ என்று அவள் மீண்டும் கேட்டும் அவன் பதிலளிக்காமல் போக அவன் எதிரில் வந்து நின்றவள்,
‘ஏன் அப்படி சொல்றீங்க சொல்லுங்க..?? உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லையா..?? நான் வேணும்ன்னா கோவில்ல சாமி மேல ப்ராமிஸ் பண்ணட்டா கண்டிப்பா கலெக்டர் ஆவேன்னு அப்போ நம்புவீங்களா..??’ என்று குழந்தையாய் மிழற்ற..,
நெற்றியில் இருந்து கையை எடுத்து அவளை பார்த்த அதிர்துடியனுக்கோ மனைவியின் பேரன்பில் மூச்சு முட்டி போனது.
நெற்றி பொட்டை அழுத்தி விட்டு கொண்டவன் பின் அவளிடம், “உன் மேல நம்பிக்கை இல்லாம நான் இதுல இறங்குவேனா…?? உன்னை விட மத்தவங்களை விட அதிகமா உன்னை நான் நம்புறேன்டி ஆனா…” என்றவனிடம் இப்போது தடுமாற்றம்,
அவன் சொற்களில் உண்டான மகிழ்வோடு கண்களை மீற துடித்த கண்ணீரை உள்ளிழுத்தவள் ‘சொல்லுங்க, ஆனா என்ன..??’ என்றவளுக்கு எப்படியாவது அவனை சமாதானபடுத்தி இங்கேயே இருந்து விடும் வேகம்..
மூச்சை இழுத்து விட்டு, “எனக்கு என் மேல நம்பிக்கை இல்ல போதுமா..??”
‘உங்க மேலயா..?? ஏன் அப்படி சொல்றீங்க..???’ என்று புரியாமல் அவள் பார்க்க அவனிடம் கனத்த அமைதி..,
‘சொல்லுங்க..??’ என்று அவள் விடாப்பிடியாக அவனெதிரில் நெருங்கி நிற்க,
‘ஏன்டி நீ வேற படுத்துற…??’ என்று கேட்டுகொண்டே அவளிடம் இருந்து சற்று பின்னே தள்ளி அமர்ந்தவன்,
‘யாழி எங்க பூஜை நடந்திடுமோன்னு பயமா இருக்குடி’ என்று தாள முடியாது போட்டு உடைத்தான் .
‘பயமா..?? உங்களுக்கா..?? என்று வியப்போடு அவள் கேட்க,
‘ஆமா’
‘எ… எதுக்கு …??’
‘பூஜையை நெனச்சி தான்டி’
‘பூஜையை நெனச்சா..??’ என்று கேள்வியோடு அவனை பார்த்தவள் முகம் யோசனையில் ஆழ்ந்தது.
அதிர்துடியனோ ‘எப்படி இவளை சரி கட்டி டெல்லி அனுப்புவது..’ என்ற யோசனையில் இருக்க,
சில நிமிடங்களுக்கு பின் ‘ஏன் உங்களுக்கு பூஜை பண்ண தெரியாதா..??’ என்றாள்,
அவள் கேள்வியில் உண்டான அதிர்வில் இருந்து மீளாமல் அவளை பார்த்தவனுக்கு தான் ஏதும் தவறாக கேட்டோமா..?? என்ற சந்தேகம் பிறந்ததில் ஆச்சர்யமில்லை.
ஆனால் யாழியோ ‘சொல்லுங்க உங்களுக்கு பூஜை பண்ண தெரியாதா..??’ என்று மீண்டும் கேட்க
‘ஏதே..??’ என்று எழுந்தே விட்டான்.
“இல்ல உங்களுக்கு பயமா இருக்குன்னு சொன்னீங்களே நான் படிக்காம இருந்ததால எனக்கும் முதல்ல எந்த கேள்விக்கும் பதில் தெரியாம எப்படி எக்ஸாம் எழுதுறதுன்னு அதை நெனச்சி பயமா தான் இருந்துச்சி.., அதான் உங்களை கேட்டேன்… ஒரு … ஒருவேளை உங்களுக்கும் பூஜை பண்ண தெரியாம எப்படி பண்றதுன்னு பயப்படறீங்களான்னு கேட்டேன்” என்றவளுக்கு இப்போது அதிர்துடியனின் பார்வையில் லேசாக நெஞ்சில் குளிர் பரவிட ஏதோ தவறாக சொல்லி விட்டோமா…?? என்ற அச்சம் பிறந்தது.
‘அடிப்பாவி…’ என்று தெறித்த விழிகளுடன் அதிர்துடியன் அவளை பார்த்திருக்க,
யாழியோ எங்கே அவனை கோபபடுத்தி விட்டோமோ என்று பயத்தில் “ப…பப்…பரவல்ல விடுங்க உங்களுக்கு பூஜை பண்ண தெரி…” என்று ஆரம்பித்தது தான் தெரியும் ஆனால் அடுத்த நொடியே அவளை இழுத்தணைத்து அழுத்தமாக அவளிதழ்களை சேர்ந்த அதிர்துடியன் அவள் வார்த்தைகளை அத்தனை வேகமாக விழுங்கி இருந்தான்.
நிமிடங்கள் பல கழிந்த நிலையிலும் மனைவியின் இதழ்களில் மூழ்கி கொண்டிருந்தவன் உலகம் மறந்திருக்க இங்கு யாழியோ அவனணைப்பில் எலும்புகள் நொறுங்கி போனதுவோ என்ற அச்சத்தோடு இத்தனை நேரம் மூடி இருந்த கண்களை திறந்து அவனை பார்க்க, இப்போது அதிர்துடியனின் அதரங்கள் இன்னும் அழுத்தமாக மனைவியை தீண்டியதில் மூச்சு காற்றுக்கு தவித்து போனாள்.
அவன் இடையோடு கட்டி கொண்டிருந்த அவள் கரங்கள் தளர்ந்து கால்கள் வலுவிழக்க கிட்டத்தட்ட கண்களை இருட்டி கொண்டு வந்தது பெண்ணவளுக்கு..,
அவள் மூச்சுக்கு திணறி கொண்டிருப்பதை கண்டு மெல்ல அவள் இதழ்களை பிரிந்தானே தவிர்த்து அப்போதும் அவளை பிரிந்தான் இல்லை.
வேகமாக சுவாசகாற்றை சேமித்த யாழிக்கோ சற்று முன் என்ன நடந்தது என்று கிரகிக்கும் அவகாசம் கூட அளிக்காமல்அவளை அவன் வசபடுத்தி அதே வேகத்தில் விடுவித்து இருந்தவனின் வன்மையான தீண்டலில் இதழ்களின் துடிப்பு இன்னுமே அடங்க மறுத்தது.
மனமெங்கும் பரவிய பரவசத்துடன் வார்த்தைகளற்று அவனது அணைப்பில் கட்டுண்டு, அவன் மார்பில் முகம் பதித்து இருந்தவள் தனக்கு இணையாக அவன் இதயத்துடிப்பும் ஏகத்திற்கும் எகிறி இருப்பதை உணர்ந்தாலும் அதில் இருந்து மீளும் எண்ணம் இல்லாமல் இன்னுமே பாந்தமாக அவன் நெஞ்சோடு ஒன்றினாள்.
‘என்னடா பண்ற அதி..??’ என்று அவன் மனசாட்சியின் கேள்வியில் தன்னை மீட்டெடுத்தவன் ‘யாழி’ என்று அவள் முகம் நிமிர்த்த அவளோ முடியாது என்பது போல இன்னுமே அவன் மார்பில் புதைந்தாள்.
“யாழிம்மா இங்க பாரு..” என்று தன்னோடு கோர்த்திருந்த அவள் கரங்களை பிரித்தவன் மெல்ல அவளை தன்னிடம் இருந்து பிரித்து கட்டிலில் அமர்த்தி தானும் அருகே அமர்ந்தான்.
‘ஆர் யு ஓகே..??’ என்றதற்கு சிறு தலையசைப்பு அவளிடம்,
“பைன் !! இந்தா முதல்ல தண்ணி குடி” என்று பாட்டிலை நீட்ட அமைதியாக வாங்கி பருகியவள் ‘உங்களுக்கு..??’ என்று அவனிடம் நீட்ட,
“ஏன்டி இப்படி இருக்க..?? என்னை பார்த்த முதல் நாள்ல இருந்து இப்படி தான் என்னை சின்னாபின்னம் ஆக்கிட்டு இருக்க…” என்று மனதினுள் அவளை கோபித்தாலும் தண்ணீரை வாங்கி பருகியவன் குரலை செருமி,
‘இதோ பார் யாழி பூஜை பத்தி நீ எதுவும் யோசிக்காத இப்போ உனக்கு படிப்பு மேல தான் கவனம் இருக்கணு…’ என்றவனை முடிக்க விடாமல் இடையிட்டவள்,
‘இல்ல எந்த நல்ல விஷயம் செய்யறதுக்கு முன்னாடியும் பூஜை பண்ணிட்டு ஆரம்பிச்சா நல்லபடியா முடியும் இல்லையா..?? சின்ன வயசுல இருந்தே அப்படி தான் பிள்ளையாருக்கு தேங்காய் உடைச்சி தோப்புகரணம் போட்டுட்டு எதையும் தொடங்குவோம் அதான் கேட்டேன்’ என்றிட
‘அடியேய் ஏன்டி என்னை சோதிக்கிற..??’ என்பதாக அவளை பார்த்த அதிர்துடியனுக்கோ எங்காவது சென்று முட்டி கொள்ளலாம் போல இருந்தது.
“நிஜமா தான் சொல்றேன் நீங்க தனியா பூஜை பண்ணனும்ன்னு பயப்படாதீங்க நானும் ஹெல்ப் பண்றேன் ஒரு முறை சொல்லி கொடுத்தா உடனே கத்துப்பேன்..”,
‘அடி என் அறிவுகொழுந்தே.. உனக்கு கற்பூர புத்தின்னு எனக்கு தெரியாதா…??’ என்று உள்ளுக்குள் அவளை கொஞ்சி கொண்டவன்,
அவள் ஆர்வத்தை கண்டு, “போதும் நிறுத்துடி..!! விட்டா இப்படி பேசி பேசியே என்னை என் கன்ட்ரோல்ல இருக்க விட மாட்டா போலயே” என்று அதிர்துடியன் வலக்கரத்தை குவித்து நெற்றியில் இடித்து கொண்டு அவன் தன்னை கட்டுபடுத்த அதை கண்டவளோ,
“நீங்க ஏன் கஷ்டபடுறீங்க நான் பூஜை முடிச்சிட்டே படிக்க போறேன் அப்பதான் இன்னும் நல்லா படிப்பேன்” என்றிட,
‘இவளை….’ என்று பற்கள் நறநறக்க யாழியை பார்த்து நின்ற அதிர்துடியனுக்கோ இனியும் இவளை பேசாவிட்டால் நிச்சயம் அவன் உறுதிகளை தகர்த்து பூஜை செய்ய வைத்துவிடுவாள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக புரிபட இனியும் இங்கே அவளுடன் தனித்து இருப்பது ஆபத்து என்பதால் உடனே அவள் கையை பிடித்து ‘என் கூட வாடி..’ என்று அழைத்து கொண்டு ஆராதனாவின் அறைக்கு சென்றான்.
********************************

