Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிறம் தந்த வானவில் 16

அத்தியாயம் 16

இத்தனை நாட்கள் மனதிலிருந்த கோபமும் வருத்தமும் மொத்தமாய் மாறியது போன்று உணர்ந்தான் ஏகலைவன்.  அதே மனநிலை அந்த நாள் மட்டுமல்ல அதற்கு பின்னனா நாட்களிலும்  தொடர்ந்தது.

அன்று காலையில் எட்டு மணிக்கே  அலுவலகத்திற்குக் கிளம்பி இருந்தான். கேட்டை பூட்டிவிட்டுப் பாதி  தூரம் தான் சென்று இருப்பான் வழியிலேயே எதிர் வீட்டு  பிருந்தாவின் மகன் தர்ஷனை  கண்டான்.

ஸ்கூல் உனிபார்ம்மில் திருத்திருவென விழித்து நின்றிருந்தான் சிறுவன். அவனைக் கண்டதும்  அவனின் தாய்,தந்தை அங்கே தென் படுகிறாரா என்று பார்த்தான். அவர்கள் இருக்கும் அறிகுறியே இல்லை சிறு புருவ முடிச்சோடு சிறுவனின்  அருகில் சென்றவன் “ஓய் தேன் பூச்சி இங்க என்ன பண்றீங்க..” எனக் கேட்டான். சட்டெனக் கேட்ட குரலில் பயந்த சிறுவனும் நிமிர்ந்து வாகனத்தில் அமர்ந்திருந்தவனைப் பார்த்தான். இத்தனை நேரம் சிறுவனின் கண்களில் மின்னிய பயம் அந்த நிமிடம் மாயமாய் மறைய கலையைப் பார்த்துச் சிரித்தான் தர்ஷன்.

“இங்க என்னங்க பண்றீங்க…” என மீண்டும் சிறுவனிடம் கேட்டான்.

“தாத்தா இங்க நின்னார். நான் இறங்கி அவர்கிட்ட போனேனா ஸ்கூல் பஸ் போயிதுச்சு தாத்தாயும் இல்லை…” என கொஞ்சும் மழலை குரலில் கூறியவனைப் பார்த்தவனுக்கு “இப்படியெல்லாம் பாதி வழியில் இறங்கக் கூடாது…” என்று அதட்ட மனம் வரவில்லை.

“அப்படியா? ஸ்கூல் பஸ் தான் போயிடுச்சே இப்ப எப்படி ஸ்கூலுக்கு போக போறீங்க…” சின்ன சிரிப்போடு கேட்டான்.

கன்னத்தில் கைவைத்து யோசித்தவன் உதட்டைப் பிதுக்கி “தெரியலையே…”  என்றான்

“ஹ்ம்ம் இப்படிப் பாதி வழியில இறங்கிட்டா இப்படி தான் முழிக்கணும்… இப்ப நான் வந்தேன் பரவாயில்லை யாருமே வராலன்னா என்ன பண்ணிருப்ப…” எப்படிக் கட்டுப்படுத்தியும் குரலில் கடுமை வந்தது…

“அப்பா போன் நம்பர் தெய்யும்.. அப்பதியும் இல்லைன்னா போலீஸ் அங்கிள் இருப்பார் அவதத்த (அவர்கிட்ட) சொல்லுவேன்…” என ரோசமாகக் கூறியவனை கண்கள் விரியப் பார்த்தான் ஏகலைவன்.

“அது சரி.. ஆமாங்க அன்னைக்கு நான் பேசினதுக்கு நீங்க எங்கிட்ட பேசவில்லை,  இன்னைக்கு கேட்கிற எல்லா கொஸ்டீனுக்கும் அன்சர் பண்றீங்க ஏன்?…” எனக்  கேள்வியாக வினாவியவனை அண்ணாந்து பார்த்தவன்

“அன்னைக்கு உங்களை எனக்குத் தெரியாது அதனால் பேசலை…” என்றான்

“ஹிம்ம் விவரம் தான்…” என நினைத்தபடியே “இனிமே இப்படி இறங்காதீங்கன்னு சொல்ல மாட்டேன். இறங்கு வெளிய பாரு ஆனா அது இப்ப இல்ல நீ பெரிய பையன் ஆனதுக்கு அப்பறம்…” என்றதும்  சரியெனத் தலையாட்டினான்.

‘என்ன புரிஞ்சுதோ சரி சரின்னு மண்டையை மண்டையை ஆட்டறான்…’ என நினைத்தவன் சிறுவனுடன் பேச்சுக் கொடுத்தபடியே வாகனத்தை ஓட்டினான்.

சில நிமிட பயணத்திற்குப் பிறகு பள்ளியை அடைந்தனர் இருவரும். நேராக பஸ் நிற்குமிடதிற்கு வாகனத்தை விட்டான். அங்கு ஏற்கனவே சிறுவனைக் காணவில்லை என்ற பரபரப்பில் தான் அனைவரும் இருந்திருப்பார்கள் போலச் சிறுவனைக் கண்டதும் தான் முகத்தில் நிம்மதியே வந்தது.

நேராக அவர்களிடம் சென்றவன்  “உங்க முகத்தை எல்லாம் பார்த்தா ஸ்கூலுக்கு வந்ததுக்கு அப்பறம் தான்  பையனைத் தேடிப் பார்த்து இருப்பீங்க போல.எவ்வளவு கேர்லெஸ்ஸா இருக்கீங்க நீங்க… உங்களை நம்பி எப்படி பையனை அனுப்பறது. ஒருவேளை பையனுக்கு ஏதாவது ஒன்னுக்கடக்க ஒன்னாகியிருந்தா என்ன ஆகறதுங்க… நான் பார்த்து கூட்டிட்டு வந்தது நல்லதா போச்சு இல்லன்னா என்னாகியிருக்கும் மனசாட்சி இல்லாம பையனை இங்க வந்து தேடறீங்க…” என அங்குச் சென்று நின்றும் நிற்காமல் கத்தினான்.

அனைவரின் இதழ்களும் பூட்டுப் போட்டது போல ஒட்டிக் கொண்டது.. கலையின் கேள்விக்கு ஒருவரும் பதிலே பேசவில்லை… அவனின் கேள்வி அந்த பள்ளி முதல்வர் வந்து மன்னிப்பு கேட்கும் வரை நீடித்தது. கலைக்கு அப்படியொரு கோபம் குழந்தையைக் கவனிக்காத அளவிற்கு என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று… அதுதான்  வந்ததும் படபட பட்டாசாய்  பொரிந்து தள்ளிவிட்டான்.

தர்ஷனை அவன் வகுப்பிற்கு அனுப்பி வைத்துவிட்டு வாகனத்தை உயிர்ப்பித்தவன் கண்களில் பள்ளி வளாகத்திலிருந்த பூங்காவில் அமர்ந்திருந்த ஆரி விழுந்தாள்.

பள்ளியைச் சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள் பெண். அலுவலகத்தில் மனித உருவில் நடமாடும் இயந்திரம் போலச் சுற்றிக் கொண்டிருப்பவள் பள்ளியில் அப்படியே வேறு போல் இருந்தாள். அனைவரிடமும் சிரித்துப் பேசி கலகலவென இருக்கும் இந்த ஆரியைப் பிடித்து இருந்தது கலைக்கு. உண்மையை சொல்லப்போனால் அவளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் இன்னும் அதிகமானதே தவிரக் குறையவில்லை.

‘எவ்வளவு பெரிய சரித்திரம் பண்ணியிருக்கிறோம் கொஞ்சம் கூட கண்டிக்காத  மாதிரி இருக்கறா பாரேன்…” என முனகிக் கொண்டே அவளுக்கு முன் சென்று நின்றான்.

ஆடவனின் நிழல் அவளின் மேல் விழ நிமிர்ந்து தன் முன் நின்றவனை நிமிர்ந்து பார்த்தாள். சட்டெனத் தோன்றிய ஆச்சரிய பார்வையை சில நொடிகளுக்குள் மறைத்தவள் அவனை என்னவென்பதை போல் புருவத்தை உயர்த்தி பார்த்தாள்.

“நீங்க இங்க என்ன பண்றீங்க மிஸ்டர் ஏகலைவன்…” இப்படியான கேள்விகளைப் பாவையின் எதிர்பார்த்தான். ஆனால் அவளோ என்ன என்பதைப் போல் பார்த்தது இவனுக்கு வழக்கம் போலவே கடுப்பை கிளப்பியது.

“இந்த பார்வைக்கு ஒன்னும்  கொரச்சல் இல்லை…” என முனகிக் கொண்டே ஆரிக்கு எதிரில் இருந்த மற்றொரு திட்டில் அமர்ந்தான்.

கலை அங்கு வந்ததும் ஆரியுடன் பேசியபடி நின்றிருந்த பெண்மணி தலையசைத்து விட்டுச் சென்று விட்டார். அவருக்குச் சிரித்தபடியே விடை கொடுத்தவள் அதே சிரிப்போடு தன் எதிரில் அமர்ந்திருந்த கலையைப் பார்த்து

“என்ன வேணும் உங்களுக்கு…” எனக் கேட்டாள்.

“இப்போதைக்கு எதுவும் வேண்டாம். உங்களைப் பத்தி, உங்க ஃபேமிலி பத்தி சொல்லுங்க…” எனக் கேட்டவன் மனமோ “அவளைப் பத்தி சொல்லுவாளான்னு தெரியாது… ஆனால் நீ இப்படி கேட்கிறதுக்கே வண்டி வண்டியா  கழுவி ஊத்துவா  வாங்கிக்க…” எனக் கூற அதனை அடக்கியபடி ஆரியை பார்த்தவன்

“இந்த ஸ்கூல் உங்களோடதா?..” என்றான் அவளின் பதிலுக்கு எதிர் பார்க்காது.

“ம் ஆமாம் எங்களோடது தான். அப்பா நார்மல் ஸ்கூலா ஸ்டார்ட் பண்ணது இப்ப அதோட டெப் ஸ்கூலும் ஜாயின் பண்ணி இருக்கேன்..” என்றாள் அமைதியான குரலில்.

“உங்களுக்கு இவ்வளவு அமைதியா கூட பேச வருமா..” ஆச்சரியமாகக் கேட்டவனை முறைத்தாள்.

அவளின் முறைப்பில் நாக்கை கடித்து ஒற்றை கண்ணை மூடி “இல்லை சும்மா தான் கேட்டேன். இதுநாள் வரைக்கும் நீங்க அமைதியா பேசி நான் பார்த்தது இல்லை அதான்…” கூறினான்.

“ஆக்சிடென்ட் ஆனதுல இருந்தே எனக்கு என் வாய்ஸ் கேட்காது.  எனக்கே கேட்காதப்ப என்னோட குரல் எந்தளவுக்கு லவுடா வருன்னு எனக்கு எப்டி தெரியும்… மொஸ்ட்லி சத்தம் வெளியை வரக்கூடாதுன்னு தான் பேசுவேன். என்னையும் மீறி குரல் வெளி வந்துடுது. இப்ப கூட உங்ககிட்ட எப்படி பேசரன்னு தெரியல…” கண்களை மூடி ஆழ மூச்செடுத்து கூறினாள்.

அவளைப் பார்த்தபடி “மெல்லமா தான் பேசறீங்க..” என்றான் மெல்லிய குரலில்.

“ம்ம்,..” என்றவள் கண்களை இறுக மூடி திறக்க

“டெப் ஸ்கூல் ஏன் ஓபன் பண்ண வேணும்னு நினைச்சீங்க?..” எனக் கேட்டான் அடுத்த கேள்வியாக

“ஆக்சிடென்ட் ஆனதுக்கும் அப்பறம் யாருமே இல்லாமல் நான் மட்டுமே இருந்தேன். அப்பா எங்களுக்காகச் சேர்த்த சொத்து எல்லாமே எனக்கு மட்டும் தான்னு. அதை நான் மட்டும் வைச்சு என்ன செய்ய போறேன். அதுமட்டுமல்ல அப்பா பிஸ்னாஸ் மூலமா வர அமௌன்ட்டும் எனக்கும் மட்டும் தான்.. சோ அதை எல்லாம் என்ன செய்யன்னு யோசிக்கும் போது தான் இந்த ஐடியா தோணுச்சு சோ டெப் ஸ்கூல் ஓபன் பண்ணிட்டேன்… இங்க படிக்கர டெப் ஸ்டூடண்ட்ஸ் எல்லாருக்கும் ஃபீஸ் எல்லாம் வாங்கலை ஃப்ரீயா தான் படிக்க வைக்கிறோம்… அவங்களுக்கு காது கேட்க எல்லாமே செய்யறேன்..இனியும் செய்வேன்…” என்றாள் மெல்லிய புன்னகை இழையோடும் குரலில்.

ஏதோ பொறி உருண்டை இலவசமாகக் கொடுத்தேன் என்பதைப் போல் கூறுகிறாள் பாரேன் என நினைத்தபடியே மங்கையைப் பார்த்தவன் “தனியா இருக்கேன் சொல்கிறதுக்குப் பதிலா ஏதாவது கல்யாணம் பண்ணிக்கலாம் தானே. அப்படி பண்ணிருந்தால் இந்நேரம் உங்களுக்கும் ஒரு குடும்பம் இருந்து இருக்கும். ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க?கல்யாணம் பண்ற ஐடியா இருக்கா? இல்லையா?…” நேராகவே மங்கையின் திருமணத்தைப் பற்றி விசாரித்தான்.

அதற்கு ஆரி பதில் சொல்லும் முன்பே “இந்த ஸ்கூல் புள்ளைங்களை என் புள்ளைங்களா நினைச்சு வளர்த்த போறன்னு ஏதாவது சினிமா டயலாக்கை பேசிடாதீங்க பிளீஸ்..” என அவசரமாகக் கூறியவனை அமைதியாகப் பார்த்தாள்.

மங்கையின் அமைதியில் “லவ்ஃபெய்லியரா…”அசோக்கை மனதில் வைத்தபடி கேட்டான். அதற்கும் அவளிடம் பதிலில்லை “உங்களுக்கு ப்ரெய்ன் டூமர்ரா, இல்லை எச் ஐ வி ஏதாவது இருக்கா… ” என அடுத்து கேள்விகளை விடாமல் கேட்டவனைப் பார்த்துச் சிரித்தாள்.

“ம்ப்ச் சொல்லுங்கள்…” என்றான் பிடிவாதமாக.

” உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு அந்த ஐடியாவே இன்னும் வரலை…”

“எல்லா பொண்ணுங்களுக்கு இருக்கிறது போலக் கல்யாண ஆசை இருந்தானாலா தான் மேரேஜுக்கு ஒகே சொன்னேன். அப்பா, அம்மா இல்லைன்னு வரும் போது எல்லாமே இல்லைன்னு ஆயிடுச்சு…” என்றாள் மரத்த குரலில்

“ஏன் ரீலேட்டிவ் யாரும் இல்லையா…” என்றதும் கசப்பான புன்னகை பூவையிடத்தில்.

“அதான் சொன்னேனே அப்பா, அம்மா இல்லைன்னு ஆகும் போது இதுவும் இல்லைன்னு ஆயிடுச்சு… ஆக்சிடென்ட் கேஸ், மூணு பேரும் ஸ்பாட் அவுட் நான் சீரியஸ் சோ எப்படியும் கேஸ் ஃபைல் ஆகும் அதுக்கு இதுக்குன்னு நம்ம அலையனுமான்னு நினைச்சிட்டாங்க போல…மூணு பேரையும் அடக்கம் பண்ணிட்டு என்னையும் கருணை கொலை பண்ண சொல்லிட்டு போனவங்க இப்ப வரைக்கும் நான் எப்படி இருக்கேன் கூட பாக்க வரலை…” என்றாள் கண்களை இறுக மூடி அன்றைய கசப்பை விழுங்கியபடி கூறினாள்.

“சாரி…” என அவளுக்காக வருந்தியவன் “உங்களுக்கு நிச்சியமாச்சே அவர் கூடவா உங்களைப் பார்க்க வரலையா,? அவர் எங்க..?

“கல்யாணம் ஆயிடுச்சு. எனக்கு ஃபிக்ஸ் பண்ண அதே டேட்ல…” எரிச்சலோ கோபமோ எவ்வித உணர்வையும் வெளிப்படுத்தாமல் கூறினாள்.

“இன்னும் அவரை நினைச்சுட்டு இருக்கீங்களா?…” இல்லையெனத் தலையாட்டினாள் ‘ ஹப்பாடி…’ என நெஞ்சில் கைவைத்துக் குனிந்து சிரித்தான்.

சட்டென நிமிர்ந்து “சரி இதுக்கும் ஆபிஸ்ல சகஜமா இல்லாமல் இருக்கிறது என்ன சம்பந்தம்…” எனக் கேட்க அவனை ஆழ்ந்து பார்த்தாள்.

“அது நிறையக் கஷ்டம் மிஸ்டர் ஏகலைவன்… சிக்கலான விசயம்…” என்றவள் மெல்லிய புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.

“இதுல என்னடா காம்பிளிக்கேட்டட்டான விசயம் இருக்கு…” என நினைத்தவனுக்கு அடுத்த வாரமே அது என்ன என்று அறிந்திருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!