Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் – 9

அத்தியாயம் – 9

              மறுநாள் ரஞ்சனி காலேஜ்க்கு போகும் போது கதிர் அவளுக்காக காத்திருந்தான். ஆனால் அனு அவனை நிமிந்து கூட பார்க்காமல் சென்று விட்டாள். அவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. மதியம் போன் வரும் என்று எதிர்பார்த்தான் வரவில்லை.மாலை நேரத்தில் போன் வந்தது அனு பேசுவாள் என்று நினைக்க நர்மதா பேசினால் பதட்டத்துடன்.

 

“அண்ணா எங்க இருக்கீங்க வேகாம காலேஜ் கிட்ட வாங்க அண்ணா. ரஞ்சனி கிட்ட நாலு பசங்க வம்பு பண்ணிட்டு இருக்காங்க “என்றாள்



Advertisement

 

கதிரவன் வண்டியில் வேகமாக வந்து கொண்டிருந்தான்.

 

Advertisement

நேத்து திருவிழாவில் கதிர் அடித்த பையன் இப்பொழுது அவன் நண்பர்களுடன் வந்து அனுவிடம் வம்பு செய்துக் கொண்டிருந்தான்.

Advertisement

 

“இந்தாமா பாப்பா இங்க வா, நேத்து கோவில உன்ன இடிச்சதுக்கு ஒருத்தன் என்ன அடிச்சான்ல யாரு அவன் உனக்கு “

 

Advertisement

 அனு அமைதியாக நின்று கொண்டிருந்தாள். அவளுடைய உடல் பயத்தில் நடுங்கி கொண்டிருந்தது. கேக்குறேன்ல பதில் சொல்லு என்றான்.

 

“நேத்து உன்ன லேசா இடிச்சதுக்கு அவன் அந்த அடி அடிச்சான்ல இப்போ உன் கைய பிடிச்சி கட்டி அனைச்சி, உன் உதட்டுல முத்தம் தந்து அப்பறம் வேறென்னென்னமோ பண்ணப்போறேன்”

 

“அவன் வந்து என்னத்தை கிழிக்குறானு நானும் பாக்குறேன் ” என்று கூறிக் கொண்டே அனுவின் கையை பிடித்து இழுத்தான். அந்த பொறுக்கியின் நண்பர்கள் மூவரும் அனுவை சுற்றி நின்று கொண்டனர்.

 

“டேய் மச்சான் எல்லாத்தையும் நீ மட்டுமே தனியா பண்ணாதடா நாங்களும் கொஞ்சம் பண்ணுறோம் குட்டி வேற பாக்க சூப்பரா இருக்கு ” என்றான் மூவரில் ஒருவன்.

 

“அண்ணா அண்ணா ப்ளீஸ் அண்ணா என்ன விட்டுருங்க ப்ளீஸ்” என்று அனு அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

 

“என்னடி சும்மா சும்மா அண்ணா அண்ணானு சொல்லிடு இருக்குற நீ என்ன என்கூடவா பொறந்த. இல்ல என் அப்பா உன் வீட்டுக்கு வந்தாரா இல்ல உன் அப்பா என் வீட்டுக்கு வந்தாரா “என்றான் அசிங்கமாக.

 

“அண்ணா ப்ளீஸ் இப்படிலாம் பேசாதீங்க அண்ணா, என் கைய விட்டுங்க அண்ணா ப்ளீஸ் ” என்றாள் அனு.

 

அனு கெஞ்சிக் கொண்டிருக்கும் போதே கதிர் அங்கு வந்துவிட்டான். அனுவின் பின்னால் இருந்த இருவர் ஒரு மரத்தின் பின்னால் ஒழிந்துக் கொண்டனர்.

 

“வாடா மாப்பிளை உனக்காக தான் இவளோ நேரம் காத்துட்டு இருந்தேன், இந்த குட்டிக்கு ஒண்ணுன்னா ஓடி வந்துர நல்லா கம்பெனி தாரா போல. எனக்கும் கம்பெனி தாணு அப்போ இருந்து கேட்டுட்டு இருக்கேன் தாரா மாட்டேன்கிறளே “என்று கூறிக் கொண்டே அனுவின் கையை பிடித்து இழுத்து அவளை கையணைப்புக்குள் வைத்து கொண்டான் அனு திமிறி கொண்டே இருந்தால்.

 

“டேய் அவ மேல இருந்து கைய எடுடா, இல்ல உன் கைய வெட்டிருவேன் என்று கூறிக்கொண்டே அவர்களை நெருங்கினான்.

 

“டேய் அங்கையே நில்லு பக்கத்துல வந்த அப்படியே கத்திய இவ கழுத்துல இறக்கிடுவேன் “என்றான் கத்தியை காட்டி.

 

“டேய் என்ன என்னவேணுனாலும் பண்ணிக்கோடா ப்ளீஸ் அவளை விட்டுருடா” என சொல்லி கொண்டிருக்கும் போதே மறைந்து இருந்த இருவர் பின்னால் இருந்து. கதிரை அடிக்க ஆரம்பித்தனர்.

 

“டேய் நீங்க இவனை கவனிங்க நான் இந்த பாப்பாவை கவனிக்குறேன் ரொம்ப நேரமா பக்கத்துல வச்சிட்டு சும்மா இருக்க முடியலடா” என்று கூறி விட்டு அனுவை அருகில் இருந்த காருக்கு இழுத்து செல்ல முயன்றான். அனு அவன் கையை உதறி விட்டு ஓட ஆரம்பித்து விட்டாள்.

 

இந்த நேரத்தை பயன்படுத்தி கதிரவன் அவர்கள் இருவரை அடி வெளுத்து விட்டான்.

 

மற்ற இருவர் அனுவை துரத்தி கொண்டிருக்க அவர்களையும் பிடித்து ரத்தம் வரும் அளவுக்கு அடித்தான். .

 

“ப்ளீஸ் கதிரவா அண்ணே விட்டுருங்க தெரியாம பண்ணிட்டேன். வலிக்குனே விடுருங்க விட்டுருங்க “

 

“வலிக்குதா வலிகட்டும் இந்த கை தான என் ரஞ்சு கைய பிடிச்சது ” என்று அனுவை கட்டி பிடித்தவன் கைகள் இரட்டையும் உடைத்தே விட்டான்

 

“இந்த வாய் தான அவளை அசிங்கமா பேசிச்சு என்று அந்த பொறுக்கியின் வாயில் ரத்தம் கொட்ட கொட்ட குத்தினான் “

 

மற்ற மூவரும் அண்ணே தெரியாம பண்ணிடோம் இனிமேல் அந்த பொண்ணு பக்கமே வர மாட்டோம். ப்ளீஸ் இவனை விட்டுருங்க அண்ணே இதுக்கும் மேல அடிச்சா செத்துருவான் விட்டுருங்க.

 

உங்கள இப்படியே விட முடியாது வாங்கடா போலீஸ் ஸ்டேசனுக்கு, அண்ணா அண்ணா ப்ளீஸ் இந்தா பிரச்சனையா இதோட விட்டுருங்க இனிமேல் எதும் பண்ண மாட்டோம்.

என்றனர் அந்த பொறுக்கிகள்.

 

கதிர் யோசிக்கும் இடைவெளியில் அவர்கள் காரில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அனு எங்கே என்று கதிர் தேட ஒரு மரத்தின் அடியில் கைகால் களை சுருக்கிக் கொண்டு அமர்த்திருந்தால். அனுவின் உடல் முழுவதும் பயத்தில் நடுங்கி கொண்டிருந்தது.

 

கதிர் அவளை தொட்டதும் வெறி பிடித்தவள் போல் எல்லாம் உன்னால தான்டா உன்னால தான் என்று கூறி கொண்டே கதிரவனை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தால். பின் கதிரை கட்டிக் கொண்டு அவன் எங்கிட்ட எவளோ அசிங்கமா பேசுனா தெரியுமா ரொம்ப பயந்துட்டேன்டா என்று அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு தேம்பி தேம்பி அழுதாள்.

 

செல்லம் ஒன்னும் இல்லடா நான் தான் வந்துட்டேன்ல. பயப்புடாத வா போலாம் என்று கூறி அழைத்து வந்து அவள் பேக் இருந்து தண்ணீர் எடுத்து குடிக்க கொடுத்தான்.அனு சற்று அமைதி அடைந்தாள்.பின் அவனிடம்.

 

“இப்போ சந்தோசமா கதிர் உனக்கு, உன்னோட இந்த கோவத்தால இன்னும் என்னென்ன கஷ்டமெல்லாம் படப்போறேன்னு தெரியலடா “

 

“இப்போ நீ வந்துட்ட எதும் நடக்காம காப்பாத்திட ஒரு வேளை நீ இங்க இல்லாம போயிருந்தா என் நிலைமை என்ன ஆகிருக்கும், அவங்க என்ன “என்று கூறி கொண்டிருக்கும் போதே கதிர் அவள் வாயில் கைவைத்து இதுக்கு மேல எதும் சொல்லாத ப்ளீஸ்டி என்றான் கண்கள் கலங்க.

 

“நேத்து நீ அந்த பொறுக்கிய அடிச்சதையும் உன்னோட அந்த கோவத்தையும் பார்த்து எனக்கே உன்ன பார்த்தா பயமா இருக்குடா கதிர் “என்று கூறி அவனை காட்டி பிடித்து அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டால்

 

“ப்ளீஸ் கதிர் இந்த கோவத்தை விட்டுரு எனக்காக ப்ளீஸ் ப்ளீஸ் ” என்று கூறி அழுதாள்.

 

“அனு ப்ளீஸ் அழாதடி, என் செல்லம்ல அழாத உனக்காக என் கோவத்தை குறைச்சிக்கிறேன் “என்றான்.

 

இந்த பிரச்சனைக்கு பின் அனு கதிரவன் இருவருக்கும் இடையில் காதலும், நெருக்கமும் அதிகரித்தது.

 

“ரஞ்சு நாம காதலிக்க ஆரம்பிச்சி நாலு மாசம் ஆச்சி. ஏண்டி என்கிட்ட எதுவுமே கேக்க மாட்டேன்கிற. ஒரு சாக்லேட் வாங்கி தந்தா கூட அதை வாங்க மாட்டேன்கிற “என்றான் கதிரவன்.

 

“உண்மையா சொல்லனுனா எனக்கு உன்கிட்ட அது வாங்கி தா இது வாங்கி தாணு கேக்கணுன்னு ஆசையா தான் இருக்கும். உங்கிட்ட தான் பணம் இருக்காதுன்னு நெனச்சி கேக்காமா இருந்துருவேன்”.

 

“லூசு என்கிட்ட தான் பணம் இருக்குல, நான் தான கடைய பாத்துக்குறேன் “.

 

“கதிர் நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல எனக்கும் எல்லாம் தெரியும் இந்த கடைல வர வருமானதை வச்சி தான் நீ உன் செலவு எல்லாத்தையும் பாத்துக்கணும். இதுல கருப்புக்கு வேற சம்பளம் தரணும் “.

 

“அதை பத்திலாம் நீ யோசிக்காதடி, உனக்கு என்ன வேணுமோ கேளு நான் வாங்கி தாரேன். என் செலவுக்கு அப்பா அக்கௌன்ட் இருந்து பணம் எடுத்துப்பேன் “.

 

“உங்க அப்பா பணத்தை செலவு பண்ண உனக்கு உரிமை இருக்கு பண்ணுற, நான் ஏன்டா செலவு பண்ணனும்,நீ சம்பாதிக்குற காசுல நான் வாங்கிகிறேன் எனக்கு வேண்டியதை, அதுவும் நீ தனியா எப்போ சம்பாதிக்கிரியோ அப்போ சரியா ” என்றாள்.

 

கதிர் ரஞ்சனி சொன்னதை பற்றி யோசித்து கொண்டிருந்தான். அவ சொல்லுறதும் சரி தான் அப்பா வந்ததும் கடைய அப்பா பாத்துப் பாங்க. அப்பறம் நான் என்ன பண்ணுறது என்று யோசித்து கொண்டே இருந்தான்.

 

ஒரு வாரம் கழித்து செல்போன் ரீசார்ஜ் செய்யும் வேலையை ஆரம்பித்தான். முதலில் ஏர்டெல், ஏர்செல் மட்டும் ரிசார்ஜ் செய்துக் கொண்டிருந்தான். அதன் மூலம் நல்ல லாபம் வர அனைத்து நெட்ஒர்க் க்கு ரிசார்ஜ் செய்தான். இதன் மூலம் ஒரு நாளைக்கு 700,800ரூபாய் லாபம் வந்தது. கதிரவன் மிகவும் சந்தோசமாக இருந்தான்.

 

கதிர் அனுவிடம் 7322 ரூபாயை குடுத்து இது நான் சம்பாதிச்ச பணம் உனக்கு என்ன வேணுமோ சொல்லு நான் வாங்கி தாரேன் என்றான்.

 

ரஞ்சனி ஐம்பது ரூபாய் டைரிமில்க் ஒன்றை மட்டும் வாங்கி கொண்டாள். எனக்கு இது போதும் கதிர். லூசு வேற ஏதாவது வாங்கிக்கோ டி. இப்போதைக்கு இது போதும் நீ இன்னும் நிறைய சம்பாதிச்சிடே இருடா. என்னைக்காது ஒருநாள் பெரிய கிப்ட்டா கேப்பேன் அப்போ வாங்கி தரணும் சரியா என்றாள்.

 

கதிரவன் எதிர்காலத்தை பத்தி யோசிக்க ஆரம்பித்தான்.அடுத்து என்ன வேலை செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே இருந்தான். அப்பொழுது ஒருவர் செல்போன் ரிப்பேர் ஆகிவிட்டது சரி செய்ய வேண்டும் கூறினார். இங்கு சர்வீஸ் செய்வதில்லை என்று கூறி அனுப்பி விட்டான்.

 

அந்த ஊரில் செல்போன் சர்வீஸ் செய்யும் கடைகள் குறைவு என்பதால் அதை நாம் செய்தால் என்ன என்று யோசித்தான். அதற்கான கிளாஸ்க்கும் செல்ல ஆரம்பித்தான் தினமும் காலையில் அனுவை பார்த்து விட்டு பின்பு திண்டுக்கலில் கிளாஸ்க்கு சென்று மாலை அனுவை பார்ப்பதற்கு வந்து விடுவான்.

 

ஒரு மாதம் கிளாஸ் முடித்து விட்டு அவனுடைய கடையிலே போன் சிர்விஸ் சென்டர் ஆரம்பிதான். இவ்வாறு கதிரவனின் தொழில் வளர்ச்சியடைய ஆரம்பித்தது.

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!