Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -12

அத்தியாயம் – 12

ஹாஸ்பிடலில் இருந்து அனுவும் அகிலனும் வீட்டுக்கு வந்தனர்.

“அனுமா என்னடா ஆச்சு, பெரிய அடி ஏதும் இல்லையே, ரொம்ப வலிக்குதா “

 



Advertisement

“சின்ன அடி தான் அப்பா, இப்போ வலிலாம் இல்லபா “அனுவை அகில் அங்கிருந்து சோபாவில் உக்கார வைத்தான்.

 

“சாந்தி இவளை எந்த நேரத்துல தான் பெத்த எப்போ பாத்தாலும் இவளுக்கு மட்டும் உடம்புக்கு ஏதாவது வந்துட்டே இருக்கு “என்றார் ராமசந்திரன், ராஜலக்ஷ்மியின் தாயார் வள்ளியம்மாள்.

Advertisement

 

Advertisement

 

ராஜலட்சுமியின் கணவர் இறந்த பின்னர் ராஜி மட்டும் கீதாவிற்கு துணையாக வள்ளியம்மாள் ராஜியின் வீட்டில் தாங்கி கொண்டார்.

 

Advertisement

“என்ன அத்தை இப்படிலாம் பேசுறீங்க “என்றாள் வருத்தத்துடன் சாந்தி.

 

அகில் வள்ளியம்மாவை முறைத்துக் கொண்டிருந்தான். அதை பார்த்த வள்ளி உடனே

“நான் தப்பான அர்த்தத்துல ஏதும் சொல்லல சாந்தி,அனுக்கு ஏதாவது உடம்புக்கு வந்துட்டே இருக்குல அதான் ஜோசியரை பார்த்து ஏதாவது பரிகாரம் பண்ணலன்னு தான் சொல்ல வந்தேன் ” என்றார்.

 

வள்ளியம்மாளுக்கு அகிலன் மீது எப்போதும் சிறு பயம் இருந்துக் கொண்டே இருக்கும் ஏனென்றால் அனுவிற்கு ஏழு வயது இருக்கும் போது அனு அதிகமாக சேட்டை செய்கிறாள் என்று அவளை திட்டி விட்டார் வள்ளி.

 

அதில் கோவம் அடைந்த அகில் வள்ளியம்மாள் சாப்பிடும் வெத்தலையில் அளவுக்கு அதிகமாக சுண்ணாம்பு தடவிக் கொடுத்து விட்டான். வள்ளியம்மாள் வாய் வெந்து புண்ணாகி விட்டது. இனிமேல் அனுவ திட்டுனா கண்ணுல மிளகாய்ப் பொடிய போடுருவேன் என்று மிரட்டி வேறவிட்டான் அகில்.அதன் பின் அகிலனின் முன்னாள் அனுவை திட்டுவது இல்லை வள்ளி.

 

“அம்மா நீங்க சொல்லுறதும் சரி தான் நானே ஜோசியரை பாக்கணுன்னு தான் மா நினைச்சேன் “என்றார் ராமசந்திரன்.

 

கார்த்திக் எதையோ யோசித்துக் கொண்டே அமர்த்திருந்தான்.

“என்ன அத்தான் எதை பத்தி யோசிச்சிடு இருக்கீங்க இப்படி உக்காந்து “என்றாள் கீதா.

 

“எல்லாம் உன் அண்ணே அகிலனா பத்தி தான். அவன் அனு மேல வச்சிருக்குற பாசத்தை பார்த்து சந்தோஷ படுறதா இல்ல பயப்படுறதானு தெரியல “.

 

“சந்தோசப்படுங்க அத்தான் உங்க தங்கச்சி மேல நீங்க வச்சிருக்குற பாசத்தை விட ஏன் உங்க அம்மா அப்பாவை விட என் அண்ணே நிறைய அன்பு, பாசம், காதல் எல்லாமே வச்சிருக்குறான். சில நேரம் எனக்கே அனுவ பார்த்து பொறாமையா இருக்கும். நீங்களும் என் அண்ணா மாதிரி இருக்க கூடாதான்னு, இதுல அவனை பார்த்து பயப்படுறதுக்கு என்ன இருக்கு “.

 

“அகில் பண்ணுற வேலைய பார்த்து பயப்படாம எப்படி இருக்குறது. நாம கல்யாணத்துக்கு என் கூட வேலை பாக்குறவங்கல்லாம் வந்தங்கள அதுல ஒருத்தன் அனு கிட்ட, உன் பேரு என்ன, என்ன படிக்குற, எங்க படிக்குறனு கெட்டுருக்கான். அனுவை பார்த்து சாரில பாக்க அழகா இருக்கானு சொல்லிருக்கான் போல. அதை அகில் கேட்டுட்டான். அந்த பையன் சாப்பிட்டு மாடில இருந்து கீழ இறங்கி வரும் போது பின்னாடி இருந்து அவனை தள்ளி விட்டுட்டான்.”

 

“அவன் தள்ளுனதை பார்த்து நான் போய் அவன் கிட்ட ஏன்டா இப்படி பண்ண கீழ விழுந்தவனுக்கு கை கால் ஒடஞ்சிருந்தா இல்ல வேற ஏதாவது ஆகிருந்தா என்னடா பண்ணுறதுனு கேட்டேன் “

 

“அவன் கை கால் ஏதாவது ஒடையும் நினைச்சேன்.சின்ன அடியோட தப்பிச்சிட்டானு எவளோ திமிரு இருந்தா என் அனு கிட்டயே அழகா இருக்கானு சொல்லுவான் “

 

“அகில் நீ பண்ணுறது ரொம்ப தப்புடா”

 

“எனக்கும் அனுவுக்கும் நடுவுல எவன் வந்தாலும் அவனை நான் உயிரோடவே விட மாட்டேன்”.

 

“இப்படினு என் கிட்டயேசொல்லுறான் கீதா, இன்னைக்கு கூட பார்த்தல சுஜிய எப்படி திட்டுனனு “

 

“அனு கேட்ட வளையலை நான் தரலைனு அந்த வளையலை என் கண்ணு முன்னாடியே ஒடச்சிட்டு என் அனுவுக்கு இல்லாதது உனக்கும் இருக்க கூடாதுனுசொன்னவானச்சே என் அண்ணே “என்று கீதா மனதிற்குள் நினைத்து பார்த்தாள்.

 

“அண்ணாக்கும் அனுக்கு கல்யாணம் ஆன எல்லாம் சரி ஆகிருவன். அனுவை அவன் நல்லா பார்த்துபான் நீங்க கவலை படாதீங்க “.

 

மறுநாள் அனுவால் கால்களை ஊண்டி நடக்க முடியாததால் அகிலனே அனுவை காலேஜில் விட்டுட்டு வர சென்றான்.அகிலனின் புல்லட் வண்டில் அனுவை கூட்டிக் கொண்டு சென்றான்.

 

கதிரவன் அனுவை பார்ப்பதற்காக தினமும் நிற்கும் இடத்தில் நின்றுக் கொண்டிருந்தான். தூரத்தில் ஒரு புல்லட் வண்டி வருவதை பார்த்தான். அவன் அருகில் சற்று தள்ளி நின்றுக் கொண்டிருந்த இரு பெண்கள்

 

“ஏய் அங்க பாருடி அந்த வண்டில வர பையன் சூப்பரா இருக்கான்ல.அவன் அழகும் கலரும் வண்டி ஒட்டுரா ஸ்டைலும் செமயா இருக்குறான் எந்த பொண்ணுக்கு குடுத்து வச்சிருக்கோ “என்றனர் இரு பெண்களும் ஏக்கத்துடன்.

 

கதிரவனும் கூட அந்த பையனை பார்த்து நல்லா தான் இருக்கான் என்று மனதிற்குள் நினைத்தான்.

 

கதிர் அனு வருகிறாளா என்று பார்த்துக் கொண்டிருக்க அவனை கடந்து சென்ற புல்லட்டிலிருந்து அனு அகில் அறியா வண்ணம் கை அசைத்தால்.அதை பார்த்த கதிர் அனுவை புரியாமல் பார்த்தான். உடனே அனு காலில் போட பட்டிருந்த கட்டை காட்டினால். என்ன ஆச்சு என்று கதிர் கேக்க போன் பண்ணுவதாக சைகை செய்தால்.

 

கதிர் மிகுந்த குழப்பதுடனும், கவலை உடனும் இருந்தான். அகில் அனுவை கல்லூரியில் விட்டு விட்டு மாலை வருவதாக கூறி சென்று விட்டான். அனு நர்மதாவிடம் போனை வாங்கி கதிருக்கும் போன் செய்தால் அவன் முதல் ரிங்கில் போனை எடுத்து விட்டான்.

 

“ஹலோ ரஞ்சு என்ன ஆச்சு கால்ல எப்படி அடிபட்டுச்சி, ரொம்ப வலிக்குதா “

 

“கதிர் சாமி டென்ஷன் ஆகாதிங்க நேத்து மாடிப் படில இருந்து சிலிப் ஆகி கீழ விழுந்துட்டேன், கால் கட்டை விரல் நகம் பிஞ்சிருச்சி சின்ன காயம் தான் பயப்படுற அளவுக்கு லாம் ஏதும் இல்ல “

 

“எரும இவளோ பெரிய பொண்ணு ஆகிட்டா உனக்கு படி ஏற கூட தெரியாத ” என்றான் கோவமாக.

 

“கதிர் சாமி மாலை போட்டுருக்கீங்க இப்படிலாம் கோவப்படக்கூடாது “

 

“இதை மட்டும் நல்லா பேசுங்க சாமி, ஒழுங்கா பார்த்து படி கூட ஏற தெரியல வாய் மட்டும் காது கிழியுற அளவுக்கு பேசுங்க சாமி நீங்க “

 

“கதிர் சாமி ப்ளீஸ் திட்டாதீங்க, நேத்துல இருந்து எல்லாருமே திட்டிட்டே இருகாங்க சாமி, நான் பாவம் இல்லையா விட்டுருங்க இதோட இன்னும் திட்டாதீங்க “.

 

“ரஞ்சனி சாமி ஹாஸ்பிடல் போனிங்களா,காயம் ரொம்ப வலிக்குதா, நடக்க முடியலையா அதான் வண்டில வந்திங்களா “

 

“லைட்டா வலிக்குது சாமி, கால் ஊண்டி நடக்க முடியல அதான் வண்டில வந்தேன் “

 

கதிர் சிறு தயக்கத்துடன்

“உங்கள வண்டில கூட்டிடு வந்தது யாரு சாமி “

 

“என்னோட அகில் அத்தான் தான் என்ன விட வந்தாங்க, ஈவினிங் காலேஜ் முடிஞ்சதும் கூட்டிடு போக வருவாங்க “

 

“அகில் அத்தானா உங்களுக்கு பிரேஸ்லேட் வாங்கி தந்ததா சொன்னிங்கல அவரா “என்றான் சற்று கவலையுடன்

 

“ஆமா கதிர் சாமி அவரே தான் “

 

“அவரு வேலைக்கு போகலையா வீட்டுல தான் இருக்காரா அதான் உங்கள விட வந்தங்களா “

 

“சாமி மறந்துடிங்களா நான் சொன்னதை, அகில் அத்தான் ME முடிச்சிட்டு ஜெர்மனில ஒர்க் பண்ணுறாங்கனு சொன்னேல, இப்போ ரெண்டு மாசம் லீவுக்கு வந்துருக்காங்க”.

 

கதிர் மனதளவில் மிகவும் சோர்ந்து போனான். அகிலன் கதிரை விட அழகு, படிப்பு, வேலை என்று அனைத்திலும் சிறந்தவனாக இருந்தான். இது கதிருக்கு தாழ்வு மனப்பான்மையை அளித்தது.

 

“கதிர் சாமி என்ன ஆச்சு ஏன் பேசவே மாட்டேன்கிறிங்க, லைன்ல இருக்கீங்களா “

 

“அனு சாமி சொல்லுங்க நீங்க பேசுறத கேட்டுட்டு தான் இருக்கேன் “

 

“கதிர் இன்னும் பத்து நாள்ல செமஸ்டர் எக்ஸாம் ஆரம்பிக்க போகுது, அதுனால உங்க கிட்ட சரியா பேச முடியாது, பாக்க கூட முடியாது, நான் உங்களா ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன்”என்றாள் அனு சோகமாக.

 

இவளால மட்டும் தான் நம்மள கஷ்ட பட வைக்கவும் முடியும் அதை விட அதிகமா சந்தோச பட வைக்கவும் முடியும் என்று நினைத்துவிட்டு.

 

“அனு சாமி என்ன பத்தியோசிக்கிறத விட்டுடு ஒழுங்கா எக்ஸாம்க்கு படிங்க நல்லா எக்ஸாம் எழுதுங்க சரியா “

 

“அப்பறம் வர 21 தேதி நான் சபரிமலைக்கு கிளம்புறேன். காலைல இருமுடி கட்டிட்டு, மதியம் விரதம் விட்டுட்டு ஈவினிங் கோவிலுக்கு கிளம்புறேன், இருமுடி காட்டும் போது நீங்க கோவிலுக்கு வரணும் என்கூட சரியா “

 

“அன்னைக்கு எனக்கு எக்ஸாம் இல்ல கதிர் சாமி, வீட்டுல ஏதாவது சொல்லிட்டு வரேன். ஆனா உங்கள வழி அனுப்புற வரைக்கும் இருக்க முடியுமானு தெரியல சாமி “என்றாள்.

 

“அனு சாமி காலைல இருமுடி கட்டிட்டு, நம்ம வீட்டுக்கு வந்து விரதம் விட்டுடு நீங்க கிளம்பிருங்க சாமி, வரும் போது ரேணுகா, வெங்கட் ரெண்டு பேரையும் கூட்டிடு வந்துருங்க சரியா “.

 

இரண்டு நாட்கள் கழித்து அகில் அனுவை காலேஜில் இருந்து அழைத்துக் கொண்டு போகும் போது “அனு ஐஸ் கிரீம் சாப்பிடலாமா, புதுசா ஒரு கடை ஆரம்பிச்சிருக் காங்க அங்க நிறைய புது வேரைட்டி ஐஸ்கிரீம்லாம் இருக்காம் போலாமா”

 

“ஐஸ்கிரீமா சூப்பர் அத்தான், எனக்கு நிறைய ஐஸ்கிரீம் வாங்கி தரணும்,நீ கேட்ட அந்த கடைய கூட வாங்கி தந்துருவேன் அனு வா போலாம்”.

 

அகிலின் வண்டி கதிர் கடை பக்கம் சென்றது. அத்தான் இந்த பக்கம் எங்க போறீங்க. அனு இங்க தான் ஐஸ்கிரீம் கடை இருக்கு.கதிரின் கடைக்கு எதிரில் இரண்டு கடை தள்ளி இருந்தது அந்த புது கடை.

 

கதிர் கடையில் இருந்து பார்த்தாள் இவர்கள் அமர்ந்து இருப்பது நன்றாக தெரியும். கதிர் ஒரு போனை சர்விஸ் செய்துக் கொண்டிருந்தான் அதனால் அனுவை அவன் பார்க்க வில்லை.அனு அங்கிருந்து கதிரை தான் பார்த்து கொண்டிருந்தாள்.

 

கருப்பு கதிரிடம் அண்ணா அண்ணி வந்துருக்காங்க என்றான். எங்கடா என்றான் சந்தோசமாக, எதிர் கடையில இருக்காங்க அண்ணா என்றான்.கதிர் அங்கு பார்த்தான். அனு ஹாய் என்றாள் கை அசைத்து.

 

அனு தனியாக அமர்த்திருப்பதை பார்த்து கதிர் அவளிடம் செல்ல கிளம்பினான். அனு வேண்டாம் என்று சைகை செய்துவிட்டு ஐஸ்கிரீம் வாங்கி கொண்டிருந்த அகிலனை கட்டினால். கதிர்வன் முகம் வாடி விட்டது.

 

“அண்ணே சாமி அண்ணி கூட வந்துருக்குற பையன் யாரு ” என்றான் கருப்பு.

 

“உங்க அண்ணியோட முறைப் பையன்”

 

“ஆளு பார்க்க ஹீரோ மாதிரி இருக்கான். அவனை விட்டுட்டு போயும் போயும் உங்கள லவ் பண்ணுறாங்க பாருங்க ரஞ்சனி அண்ணி, அவங்க டேஸ்ட் என் தான் இவளோ மோசமா இருக்கோ “

 

“கருப்பு சாமி இங்க இருந்து போயிருங்க இல்ல அடி வாங்கிருவிங்க “என்றான் கதிர். கருப்பு அங்கிருந்து உள்ளே ஓடி சென்று விட்டான்.

 

அனு கதிரை பார்த்து முறைத்தாள் அவள் முண்டகண்ணை உருட்டி. கதிருக்கு சிரிப்பு வந்துவிட்டது அவளை பார்த்து.

” ஏன் கோவப்படுற “

 

“இந்த கடைக்கு நீங்க ஏன் என்னை கூட்டிடு வரல “

 

“உனக்கு எக்ஸாம் முடிஞ்சது கூட்டிடு வரலாம்னு நெனச்சேன் “

 

“நம்பிட்டேன் ” இருவரும் சைகையில் பேசி கொண்டிருக்க அகில் அங்கு வந்துட்டிட்டான்.

 

“அத்தான் எதுக்கு இவளோ ஐஸ்கிரீம் வாங்குனீங்க”.

 

“சாப்பிடு அனு ஆசைத்திர, நான் நெஸ்ட் வீக் ஜெர்மனி கிளம்புறேன் உனக்கு வேற ஏதாவது வேணுனா சொல்லுடா வாங்கி தாரேன் “.

 

“அதுக்குள்ள உங்க லீவு முடிஞ்சதா, இப்போ தான் வந்த மாதிரி இருக்கு ” என்றாள் சோகமாக.

 

“இப்போ போய்ட்டு அப்பறம் எப்போ அத்தான் வருவீங்க “.

 

“ஒரு வருஷம் கழிச்சி தான் அனு வருவேன் “

 

“ஒரு வருசமா,நான் உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவேன் அத்தான் “.

 

“நீ மட்டும் சரினு ஒரு வார்த்தை சொல்லு குட்டிமா இப்போவே உன்ன கல்யாணம் பன்னி கையோட ஜெர்மனிக்கு கூட்டிடு போயிறேன். அங்க நீ நான் மட்டும் தான் நமக்கு நடுவுல வேற யாரும் வர முடியாது” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

 

“நானும் தான் அனு உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன், சரி அனு இன்னும் ஒரு வருசத்துல படிப்பு முடிஞ்சுரும் அடுத்து என்ன பண்ண போற “

 

“MCA பண்ண போறேன் அத்தான்” என்றாள்.

 

அகிலன் மனம் மிகுந்த வேதனை அடைந்தது. இன்னும் 3வருடங்கள் இவளை பிரிந்து இருக்க வேண்டுமா என்று நினைத்தான்.

 

“என்ன அனு திடிர்னு MCA படிக்கனுன்னு சொல்லுற “

 

” எனக்கு நிறைய படிக்கனுன்னு ஆசையா இருக்கு அத்தான் “.

 

அனு ஆசைபடும் அளவுக்கு அவளை படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணினான்.இவர்கள் இருவரும் பேசி சிரித்து கொண்டிருப்பதை கதிர் இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“குட்டிமா இந்த ஐஸ்கிரீம் சாப்பிட்டு பாரேன் சூப்பரா இருக்கு என்று கூறி அவனுடைய ஐஸ்கிரீமை எடுத்து அனுவிற்கு ஊட்டி விட்டான். சூப்பரா இருக்கு அத்தான் என்றாள் அனு”

 

கதிர் இதற்கு மேல் பொறுக்க முடியாமல் கடையில் இருந்து வெளியே வந்து வண்டியை எடுத்துக் கொண்டு வேகமாக சென்று விட்டான். போகும் முன்பு அனுவை பார்த்து முறைத்து விட்டு சென்றான்.

 

கதிரின் கோவத்தை பார்த்த அனுவிற்கு அழுகையாக வந்தது அதை அடக்கி கொண்டு அமர்த்திருந்தால்.

 இரு ஆண்களின் காதலுக்கு நடுவில் வெள்ளந்தியான குணம் கொண்ட அனு தான் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!