Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vannam Theda Vaarayo

வண்ணம் தேட வாராயோ-03

சொர்க்கத்தின் வாசலும்
நரகத்தின் வாசலும்
என் கண் முன்னே…..

நந்தினி பயத்துடனே நடந்து சென்று கொண்டிருக்க..,,அந்த நாற்பது வயதுடைய நபர் அவளை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தான்.

பயத்தில் நந்தினிக்கு கைகால்கள் எல்லாம் நடுங்க ,,அந்த குளிரான நேரத்திலும் வேர்வை துளிகள் வெளியேற அதை துடைக்கும் பலம் கூட இல்லாமல் கால் போன போக்கில் நடந்துகொண்டு இருந்தாள்.

நான் தான் உன் டோனி
என்னோட வா நீ
தங்கம் மினுமினுக்குது
உன்னோட மேனி
நான் தான் உன் ரெய்னா
நீதான் என் குய்னா
வானத்தில் பறக்குதுப் பார்
கலர் கலரா மைனா



Advertisement

அடி காட்ரினா கைப்பே
நீதான் எனக்கு wife u
என்னோட நீ இருந்தா
நல்லா இருக்கும் லைப்பு என்ற பாடலை அவன் அவனது மொபைலில் போட்டு விட்டு நந்தினிக்கு கேக்கும் படி அந்த பாடலை சத்தமாக வைத்து கொண்டு அவள் பின்னே சென்றான்.

இதை கேட்ட அவளுக்கு ஒரு நொடி இந்த இதய துடிப்பு நின்றுவிட கூடாதா என்று இருந்தது.

கீர்த்திக்கு தன்னை யாரோ கையை பிடித்து இழுத்தது போல் இருந்தது. யார் என்று பார்ப்பதற்குள் கண்களை மூடிவிட்டனர்.

Advertisement

ஒரு நிமிடம் தான் பயந்தாள் யாராக இருக்கும் என்று ..?? அடுத்த நொடியே அது தன்னவனின் வேலை தான் என்று தெரிந்ததும் மாமா என்றாள் கீர்த்தி.ஹே கீர்த்தி எப்படி கண்டுபிடிச்ச ..?? என்று ஆச்சரியமாக கேட்க இதுல என்ன ஆச்சரியம் இருக்க போகுது . நான் தான் உங்கள சின்ன வயசுல இருந்து பாக்குறேன்னே மாமா என்றாள் அசால்டாக.

Advertisement

[the_ad id=”6605″]

சரி என்ன இந்த டைம்ல பாக்க வந்துருக்க …?? என்று கீர்த்தி கேள்வி எழுப்ப ,,அதற்கு ராஜிவ் ஒரு பிராஜக்ட் ஒர்க்னால ஒன் மண்த் பிசியாக இருந்துட்டேன் . உன்ன பாத்து வேற ஒரு மாசம் ஆச்சா ,, அதான் பாத்துட்டு போலாம்ன்னு வந்தேன் என்றான்.

பிறகு சிறிது நேரம் அந்த அழகான மாலை நேரத்தில் அவர்களது காதலை பகிர்ந்து கொண்டு சென்றனர்.

Advertisement

ஜீவா தான் நினைத்த கல்லூரியில் சீட் கிடைத்து விட்ட சந்தோஷத்தை இனிப்புடன் சொல்ல வேண்டும் என்று தோன்ற ,,தனது வண்டியை எடுத்துக்கொண்டு ஸ்வீட் ஷாப் நோக்கி சென்றான்.

நந்தினி வேகமாக நடந்து சென்று கொண்டிருக்க அந்த பெரியவரும் அவள் பின்னே சென்றான். ஏய் பொண்ணே…!!! கொஞ்சம் நில்லு . உன் கிட்ட கொஞ்சம் பேசணும் நில்லு என்று அந்த வயதானவர் கூற ,, ஸ்வீட் வாங்கிக்கொண்டு திரும்பிய ஜீவா இதை எதார்த்தமாக வெளியே பார்த்தான் .பின்பக்கமாக பார்த்ததால் அவனுக்கு அங்கே நந்தினி இருந்தது தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு பெண்ணிடம் வம்பு செய்கிறான் என்று தெரிந்துக்கொண்ட ஜீவா சாலையை கடக்க முயல அதற்குள் ஒரு கார் அந்த பெண்ணின் முன் நின்றது. அங்கேயே நின்ற ஜீவா அங்கு நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

காரிலிருந்து வேகமாக இறங்கிய சூர்யா நந்தினியின் முன்பு நிற்க ,, அவள் வேகமாக சென்று அவனை அணைத்து கொண்டு தேம்ப ஆரம்பித்தாள். அழாதா நந்தினி என்று சூர்யா அவளை சமாதானம் செய்ய முயற்சிக்க அப்போதே அந்த இடத்தை விட்டு நழுவ பார்த்த அந்த நபரை காண ,, இங்கு நடந்த நிகழ்வை வெகுவாக யூகித்தவன் …,,அவளை பின்புறமாக நிற்கு வைத்துவிட்டு ஒரே எட்டில் அந்தாளை பிடித்தான் .

பிடித்த அவனை அடி அடியென அடிக்க ,, நந்தினி பயத்தில் நடுங்கி போனாள் . இதனை அனைத்தையும் கண்ட ஜீவாவிற்கு கொலைவெறியே வந்தது. ஆனாலும் அவனை கட்டு படுத்திக்கொண்டு நின்றான்.

ஏன் டா நாயே !! உனக்கெல்லாம் வெக்கமா இல்ல . இப்படி ஒரு சின்ன பொண்ணு ‌பின்னாடி சுத்துரியே .அவ உனக்கு ஒரு பொண்ணு மாதிரி டா என்று முகத்தில் மீண்டும் ஒரு குத்து விட்டான். எனக்கு தெரிஞ்சு உன் பொண்ணு பின்னாடியும் இப்படி தான் சுத்துவ போல என்று சூர்யா அவனது கைகளை முறுக்கிய படியே கூற அய்யோ..!!! தம்பி வலிக்குது என்ன விட்டுட்டுங்க என்று கதற ஏன் டா நாயே நான் உனக்கு தம்பியா…??? அப்போ இவ உனக்கு என்ன வேண்டும் என்று நந்தினியை அவன் முன்னே நிறுத்த ,,அம்மா தாயி என்ன மன்னிச்சிடு மா என்று நந்தினியின் காலில் விழ அவ பதறியடித்து கொண்டு பின்னே நகர்ந்தாள்.

அட ச்சீ எந்திரி டா. இவ பின்னாடி வரும்போது தெரியல இந்த பொண்ணு உனக்கு அம்மா மாதிரின்னு .அம்மா என்ற அழகான சொல்ல அசிங்க படுத்தாதீங்க டா. உன்ன மாதிரியான ஆட்கள் இருப்பதால் தான் இன்னும் பெண்களுக்கு பாதுகாப்பின்றி இருக்கு என்று கூறி மீண்டும் அடிக்க அவனது உதிரம் வெளியே வந்து தெரித்தது. இதனை கண்ட நந்தினி மயங்கி விழ அவளை தாங்கி பிடிக்க சூர்யா போக அதற்குள் அந்த பெரியவர் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினான்.

[the_ad id=”6605″]

ஜீவா தன் கைகளை முறுக்கி பக்கத்தில் இருந்த செவுறீல் ஒரு குத்து விட்டான்.

பின்பு,, ஜீவா வண்டியை வீட்டிற்கு  எதிர்மறை சாலையில் விட்டான். இதனை ஓரமாக கண்ட இரு கண்களுக்கு சொந்தமான ஒரு உருவம் அதன் கண்ணில் ரௌத்திரத்தோடு நின்றிருந்தது.

நந்தினியை காரில் அமர வைத்துவிட்டு பக்கத்தில் இருந்த கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து ,, அவளது முகத்தில் தெளிக்க ,,சிறிது நொடிகளில் கண் விழித்த நந்தினி அழுக ஆரம்பித்தாள். அவளை சமாதானம் செய்ய முயற்சித்த சூர்யாவிற்கு தோல்வியே கிடைக்க அவனது அஸ்திரத்தை எடுத்த பின்னரே அமைதியானாள்.

பின்னர் நந்தினியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றான்.

சூர்யாவை எதிர்பார்த்து காத்திருந்த கங்காவிற்கு ,,நந்தினியுடன் பார்க்க ஆத்திரமாக இருந்தது. சூர்யா நந்தினியை அவன் கை வலைக்குள் வைத்துக்கொண்டே வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்.

நந்தினி வீட்டிற்கு வந்ததை அறிந்த சுஜி மற்றும் கவி இருவரும் வேகமாக அவளை காண அறையில் இருந்து வந்தனர்.

இருவரும் நந்தினியின் நிலையை கண்டு அதிர்ந்தனர். அவர்கள் இருவருக்கும் தெரியும் நந்தினி அக்கா பயப்படுவாள் என்று ஆனால் இப்படி பயந்து நடுங்குவால் என்று இருவருக்கும் தெரியவில்லை.

அக்கா என்று கவி அழைக்க போக சூர்யா அவளை தடுத்து நிறுத்தினான். பிறகு சூர்யாவே அவளை அவளது அறைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தான். அவன் பின்னாடியே கவியும் சுஜியும் சென்றனர்.

இதையெல்லாம் பார்த்து முறைத்துக் கொண்டே அங்கு இருந்த சோஃபாவில் அமர்ந்தாள் கங்கா.

கவி..!!! சுஜி..!!! ரெண்டு பேரும் அக்கா கூடவே இருங்க . அவ கொஞ்சம் பயந்து போய்ருக்கா .
அவள பாத்துக்குறேன்ற பேருல படிக்காம இருக்காதீங்க .ஒழுங்கா உங்க புக்க எடுத்துகிட்டு இங்க உக்கார்ந்து படிக்கிறீங்க . நான் இப்போ கீழே போறேன் என்று சூர்யா கூற அவர்கள் இருவரும் அவனை ஒரு மாதிரியாக லுக் விட சூர்யா தன் புருவங்களை உயர்த்தி என்ன என்று கேட்க ஒன்னுமில்லை என்றனர் இருவரும் கோரசாக . அப்பறம் எதுக்கு இன்னும் இங்கேயே நிக்குறீங்க போங்க போய் புக்ஸ் எடுத்துட்டு வந்து படிங்க என்று முறைப்புடனே கூற அடுத்த நொடி இருவரும் கைகளில் புக்ஸுடன் வந்து அவன் முன் நின்றனர். போங்க போய் படிங்க என்று கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தான் .

நந்தினியின் அறையை விட்டு வெளியே வந்தவன் ,,நேராக அவனது அறைக்குள் நுழைந்து கொண்டான்.

சிறிது நேரம் கழித்து வேலையை முடித்து வீட்டிற்கு வந்த சிவசங்கரன் ,,கங்காவை கண்டும் காணாமல் நந்தினி நந்தினி என்று அழைக்க அவள் வராமல் போக ,,அங்கே சோஃபாவில் அமர்ந்திருந்த கங்காவை கண்டு நந்தினி எங்க கங்கா…???? என்று கேட்க அவள் வேகமாக எழுந்து அவர் முன் நின்று அந்ந மகாராணி நீங்க கூப்பிட்ட உடனெலாம் வர மாட்டாங்க .அவுங்க தான் இந்த வீட்டு மகாராணி ஆச்சே அதான் அவ ரூம்ல ரெஸ்ட் எடுக்கிறா என்று பொறிந்து தல்ல …ஏன்டா இவளிடம் கேட்டோம் என்றிருந்தது.

அவளிடம் எதுவும் பேசாமால் நேராக சிவசங்கரன் நந்தினியின் அறையை நோக்கி சென்றார்.ஏன்னெனில் நந்தினி இப்படி கண்ட நேரத்தில் ஓய்வு எடுக்க மாட்டாள் என்று அவருக்கு மட்டும் அல்ல வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

[the_ad id=”6605″]

அவளது அறைக்கு சென்ற போது கவி மற்றும் சுஜி இருவரும் விளையாடி கொண்டு இருக்க ,,கட்டிலை பார்த்த சிவசங்கரன் நந்தினி உறங்கு வதை கண்டு பதறிப் போய் அவளிடம் செல்ல ,,அச்சோ மாமா…!!! அக்காவ டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்றாள் சுஜி . அதற்கு கவி ஒத்து ஓத …இங்க எதுவும் பேச கூடாது மாமா ..,, அப்பறம் சூர்யா மாமா சும்மா இருக்க மாட்டாரு ,,எங்கல உண்டு இல்லைன்னு பண்ணி விடுவாரு என்று சிறு பயத்துடனே சுஜி கூற சரி வெளியே வாங்க இருவரும் என்று கூறிவிட்டு சிவசங்கரன் கீழே சென்று சோஃபாவில் அமர்ந்தார்.

சுஜியும் கவியும் ரும்மை சாற்றி விட்டு ,,கீழே சென்றனர்.இப்போ சொல்லுங்க ரெண்டு நந்தினிக்கு என்ன ஆச்சி..??? என்று சிவசங்கரன் கேள்வி கேட்க இருவரும் சேர்ந்து எங்களுக்கு தெரியாது . சூர்யா மாமா தான் அவளிடம் எதுவும் கேட்க கூடாது என்று கூறிவிட்டார் என்றார்கள்.

அவளுக்கென்ன அவ நல்லா தான் இருக்கா . என்னோட ரெண்டு பசங்களையும் அவளோட கை வலைக்குள் வச்சிட்டு இருக்காளே அப்பறம் என்ன என்று கங்கா அவளை இழிவு படுத்தும் நோக்கில் பேச ,,அதை காதில் கூட வாங்க அவளது கணவன் சுஜி மா நீ போய் சூர்யாவ கூட்டிட்டு வா என்று சொல்ல அவளும் சூர்யா அறைக்கு சென்று அவனை அழைத்து வந்தாள்.

சுஜி கீழே வந்த ஒர் இரு நிமிடங்களில் சூர்யாவும் கீழே வந்தான்.

அவன் வருவதை பார்த்த கங்கா அவனை பார்த்து முறைக்க ,, தன் அன்னை தன்னை பார்த்து ஏன் முறைக்கிறார்கள் என்று தெரியாமல் குழம்பிப் போய் நின்றான்.

டேய் சூர்யா நந்தினிக்கு என்ன ஆச்சி..??? என்று சிவசங்கரன் கேட்க ,, அதற்கு சூர்யா அமைதியாகவே நிற்க ,,இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள நினைத்த கங்கா “அந்த மகாராணி நல்லா தான் இருக்காங்க…அவ எப்படி நல்லா இல்லாம இருப்பா..?? அதான் ஒன்றுக்கு ரெண்டு நான் பெத்து போட்ருக்கேன்னு . ரெண்டு பேரும் அவ பின்னாடியே தான சுத்திட்டு திரியுறானுங்க .என்னத்த செஞ்சு வச்சாலோ ரெண்டு பசங்களுக்கும் தெரியல ” என்று தனக்குள் வைத்திருந்த விஷத்தை கொட்ட தொடங்கினாள். கங்கா கூறி முடிக்க அவளது இரு கண்ணங்களும் பழுத்து போய் இருந்தது சிவசங்கரனின் அடியால்.

இதனை எதிர் பாராத கங்கா திடுக்கிட்றாள் .என்னையே அடிச்சிட்டீங்கள போயும் போயும் அவளுக்காக .யாரோ ஒருத்திக்காக என்னையே அடிச்சிட்டுடீங்கள என்று மேலும் நந்தினியின் மேல் வெறுப்பை வளர்த்துக் கொண்டாள்.அவ யாரோ ஒருத்தி இல்லை அவ என் தங்கச்சி பொண்ணு என்று அழுத்தமாகவும் அதே நேரம் சிறிது குரல் உயர்த்தியும் கூறினார்.

இதை அனைத்தையும் எதர்ச்சியாக நந்தினி கேட்க ,, அவளுக்கு அந்த நிமிடமே ஏன் பெண்ணாக பிறந்தோம் என்றிருந்தது. அழுத்துக்கொண்டே அறைக்குள் சென்று தாய் தந்தை புகைப்படத்திற்கு நேராக நின்றாள்.

சூர்யா அந்த நிலையிலும் எதுவும் பேசாமல் அம்மாவுக்கு பயந்து அமைதியாகவே இருக்க ,, அவ இனி இந்த வீட்ல இருந்தா நான் இங்க இருக்க மாட்டேன் என்று கங்கா திட்டவட்டமாக கூற அம்மா என்று சூர்யா அதிகாரமாக கூற நீ அமைதியா இரு டா என்று அவனை அடக்கி வைத்தாள்.

நந்தினி எங்கேயும் போக மாட்டா என்று திட்டவட்டமாக கூற இதை கேட்ட கங்கா ஆடி போனாள். தன் கணவர் அவளை வெளியே அனுப்ப செய்வார் என்று பார்த்தால் ,,தன்னை வெளியே அனுப்புகிறார்.அப்படி என்ன தான் இந்த மூணு பேருக்கும் மாயாஜாலம் போட்டாலோ தெரியல இவளுக்கு தான் சப்போர்ட் பண்றாங்க என்று வாய்க்குள் முணுமுணுத்து கொண்டு இருக்க நான் சொன்னது கேட்டுச்சா இல்லையா என்று சிவசங்கரன் கேட்க என்ன..??? என்பதுபோல் கங்கா பார்க்க நீ இங்க இருக்கிறதும் போகுறதும் உன்னோட இஷ்டம் .ஆனா நந்தினி இங்க தான் இருப்பா என்றார்.

கவி இவர்களுக்குள் சண்டை ஆரம்பித்த சிறிது நேரத்திலே அழ தொடங்கி விட்டால்.அவளை சுஜி சமாதானம் செய்ய ,, சூர்யா செய்வதறியாது அன்னைக்கு பயந்து நின்றுக்கொண்டு இருந்தான்.

அவ தான் உங்களுக்கு முக்கியம்னா நானே இந்த வீட்ட விட்டு போறேன் என்று கங்கா கூற அது உன்னோட இஷ்டம் என்றார்.

நந்தினியே இந்த வீட்டை விட்டு போய்டுவா ..,, நீங்க போக தேவையில்லை என்று கோபக்குரல் ஒன்று வந்தது.

அதை கேட்ட அனைவரும் அதிர்ந்து நின்றனர்.

தேடல் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!