Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 6 1

மழைத்துளி 6

அதுக் குளிர்காலம் என்பதாலும் , கணவனுடன் முதன் முதல் வெளியே செல்வதாலும் கனத்த பட்டுப் புடவையையே கட்டிக் கொண்டு , தன்னை அலங்கரித்துக் கொண்ட அமிர்தா ராகவி கொண்டு வந்து தந்த மல்லிகைப் பூவைத் தலையில் வைத்துக் கொண்டே ,

 

“அண்ணி பாப்பாவுக்கு ஒரு வயசு ஆகிருச்சா ”



Advertisement

 

“இல்லண்ணி இந்த மாசக் கடைசில இவளுக்கு ஃபர்ஸ்ட் பர்த்டே .இவங்க இந்த வாரம் கோவிலுக்கு போய்ட்டு வந்ததும் அதற்கான வேலைகளப் பார்க்கணும். எங்க வீட்லயும் அவங்க வீட்லயும் சென்னைல வைக்க சொல்லிட்டு இருக்காங்க … இவங்கதான் ஆதியண்ணாவோட பெரிய கனவு பிராஜக்ட் இது…. அது முடியற வரை கன்னியாகுமரிய விட்டு நகர மாட்டேன்னுட்டாங்க.

 

Advertisement

“உங்களுக்கும் சென்னை தானா … ”

Advertisement

 

“ம்… ஆமாண்ணி… இவரும் அண்ணன் போல தனியா தான் இங்க வந்தாராம். அப்புறம் எங்கத்தை தான் பிள்ளை சாப்பாட்டுக்கு கஷ்டபடக் கூடாதுனு என்னையப் பொண்ணுப் பார்த்து கல்யாணம் பண்ணி அனுப்பி வச்சுட்டாங்க. இப்ப நான் ஒரு நாள் வீட்ல இல்லனாலும் அவர் சரியா சாப்பிட மாட்டார். அதுதான் இங்கயே இருந்துட்டேன்…. பிரசவத்துக்கு மட்டும் தான் போனேன்…. அதுக்குள்ள ரொம்ப இளைச்சுட்டார்… அதனால முப்பது நாள்லயே பாப்பாவ தூக்கிட்டு இங்க  வந்துட்டேன்.. ” எனப் பெருமையும் முகத்தில் சிவப்பும் ஏற ராகவி கூற அமிர்தாவிற்கு அவளைப் பார்க்கவே அழகாகத் தோன்றியது.

[the_ad id=”6605″]

Advertisement

 

“நீங்களுமே உங்க கையால சமைச்சு கொடுத்துப் பாருங்க… ” அதற்குள் ஆதியின் கார் வளாகத்திற்குள் நுழையவும், ராகவி ,

 

“அண்ணி எதுக்கும் குடை எடுத்துட்டுப் போங்க , மழை வந்தாலும் வரலாம் … நான் இங்க வந்ததிலிருந்து பார்க்கிறேன் … அண்ணா இவர சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பினாலும் அவங்க வர பத்து பதினொன்னு ஆகிரும் …நீங்க வந்ததும் பாருங்களேன் … எவ்வளவு சீக்கிரம் வந்தாச்சு ….வாறேண்ணி “அவள் சென்று விட

 

அமிர்தாவிற்கு ராகவி கேலி செய்ததில் நாணம் பொங்க … காரை நிறுத்திவிட்டு உள்ளே வந்துக் கொண்டிருந்த கணவனையேப் பார்க்க , அவன் வேகமாக உள்ளே வந்தவன் , மனைவியின் அழகை ரசித்துக் கொண்டே ,

 

“வா…வ் … ரொம்ப அழகா இருக்க … ”

“ஷ் ” என்பதாக ஒன்றை விரலை அவள் உதட்டின் மேல் வைத்து கைக் குவித்துக் காட்டியவளிடம் ,

 

“ஓகே… ஒகே” என்றுப் புன்னகையோடு சொல்லிவிட்டு ,

 

“அம்மா மெசேஜ் பண்ணாம பேசி உன்னை சங்கடப் படுத்திட்டாங்களா…”

 

“இல்லை..” என வேகமாக தலையசைக்க ,

 

“பின்னே ஏன் அழுத …”

 

“நான் அழுதது சந்தோஷத்துல, என்னைப் பத்தி தெரிஞ்சவங்க யோசிச்சு , பரிதாபப்பட்டு பேசும் போது … அத்தை அவங்க மருமககிட்ட இயல்பா பேசினாங்க… அது எனக்குப் பிடிச்சிருந்தது….”

 

“அட … அது தான் அம்மாவும் என்கிட்ட ஒன்னுமே சொல்லலயா….. ஒரு ஃபைவ் மினிட்ஸ்” என்றவாறு அறைக்குச் சென்று ஒரு சிவப்பும் வெண்மையும் கலந்த ரவுண்ட் நெக் டீஷர்டில் ஜீன்ஸ் பேன்டினுள் பர்சை உள்ளே வைத்தவாறே படியிறங்கியவனைப் பார்த்தவள் ‘மூர்ச்சையாகி விடுவேனோ ‘ என்றுப் பயந்து தான் போனாள். அவளது மூளை நரம்புகள் ஏதோ செய்ய வேக வேகமாக மூச்சுக்கள் வர … அருகிலிருந்த தண்ணீரைக் குடித்தவளுக்குப் புரையேறிக் கொண்டது.

 

அருகில் வந்தவன் தலையைத் தட்டி , ” மெதுவா மெதுவா…” என்றவன் , “போலாமா…” என்றவாறு காரில் சென்று ஏறிக் கொண்டான்.அருகில் அமர்ந்தவளிடம் ,

 

“தக்ஷன் பேசினார் …. அப்படி என்ன மெஸேஜ் அனுப்பினியோ …. ‘தேங்க்ஸ் ‘ங்கிற வார்த்தைய அவர் தான் குத்தகைக்கு எடுத்த மாதிரி அத்தனை…. தேங்க்ஸ்….” என்று நகைக்க , அமிர்தாவும் மலர்ந்த முகத்தோடு வெளியேப் பார்த்துக் கொண்டே வந்தாள்.

 

ஐந்து நிமிடத்திலயே கடற்கரை  வந்து விட , காரை நிறுத்தியவனைப் புருவம் சுருக்கிப் பார்த்தவளிடம் ,

 

“பீச் மட்டும்னா நம்ம வீட்ல இருந்து நடந்து வந்துருக்கலாம் தான். ஆனா இன்னொன்னும் காட்டணும் அது தான் ” என்றவன்,தன் கைக்குட்டை எடுத்து அவள் கண்களைக் கட்டி , மறுபுறம் வந்து கைப்பிடிக்க ,

 

கையை இழுத்துக் கொண்டு ‘சாமி சாமி’ எனக் கன்னத்தில் போட்டுக் கொண்டவளைக் கண்டவன் புன்னகையோடு ,

 

“ஓகே.. ஒகே …. அப்புறம் எப்படி இறங்குவ வா…” என்று கடற்கரை நோக்கி அழைத்துச் சென்றான். இரண்டு நிமிடத்தில் அவளை நிறுத்தி கைக்குட்டையைப் பிரித்து எடுத்துக் கொண்டே,

 

“இப்ப பார்” என்றவன் அவளருகில் கைகட்டி நின்றுக் கொண்டான்.

[the_ad id=”6605″]

 

வானை முட்டி விடும் அளவில் தெரிந்த மிக உயர்ந்தக் கட்டிடத்தைக் கண்டவளுக்குப் புரிந்ததும் ,புன்னகையோடு அவனைப் பார்த்தவள் , நெருங்கி மிகவும் நெருங்கி அவனைக் குனியச் சொல்லவும் , அவள் முகம் அருகே குனிந்தவனின் தாடைப் பற்றித் திருப்பி அவன் காதருகே நெருங்கி ,

 

“ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லாருக்கு ….வாழ்த்துக்கள் ” காற்றாக வந்த வார்த்தைகள் இனிமையாக காதில் நுழைந்தது.

 

அவள் பாராட்டியதால் வந்த இனிமையா , இல்லை மெல்லவே கேட்டாலும் … கேட்ட அந்தக் குரலின் இனிமையா …. இல்லை காதில் மென்மையாக உரசிய அவள் இதழ் தந்த இனிமையா தெரியவில்லை …. ஆதி ஆசைப் பெருக அவளைப் பார்க்க ,

 

பார்வையின் அர்த்தம் புரிந்தவள் , மறுபடியும் கன்னத்தில் கை மாற்றி போட்டுச் ‘சாமி’ என்பது போல் காட்டவும் ,

 

“ஆதி ….. அடங்கு” என்றவாறு தலையை உலுக்கியவன், கடலருகில் அழைத்துச் சென்றான்.

 

புடவையைக் ஒரு கையில் தூக்கி பிடித்துக் கொண்டு கடலில் கால் வைத்து ரசித்தவளை, சிறிது நேரம் கழித்து ஒரு பாறையில் அமர வைத்து விட்டு , சாப்பிட சூடாக சுண்டல் வாங்கி வரும் போது சேலையை உடலைச் சுற்றிப் போர்த்திக் கொண்டவளிடம் ,

 

“ரொம்பக் குளிருதா … சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம் ” அருகில் அமர்ந்துக் கொண்டவன் ,

 

“என்னையப் பத்தி உனக்கு என்னத் தெரியும் … என்ன சொல்லிருப்பாங்க தெரியாது … இருந்தாலும் நானும் சொல்லணும் இல்லயா….”

 

கடற்கரைக் காற்று சிலுசிலுவென அடிக்க , அவளது புடவை முந்தானை ஒரு கையில் அடங்காது பறக்க ஆரம்பிக்க , அவளது முன் நெற்றியில் வந்த கூந்தல் கற்றைகளை  மற்றொரு கையினால் ஒதுக்கிக் கொண்டே ,

 

“தெரியும் … அத்தை ,அண்ணி எல்லாரும் சொல்லிருக்காங்க ….” என்றவள் அவன் வாங்கி வந்ததை உண்ண ஆரம்பித்தாள்.

 

அவளது வாயசைவில் புரிந்துக் கொண்டவன் ,

 

“ரியலி ….. ரெண்டு நாள்ல உனக்கு என்னைப் பத்தின அத்தனை டீடெய்லும் கொடுத்துட்டாங்களா….”

 

“இல்லை” என்பதாக தலையசைத்தவள் பின்பு “ஆம்” என்பதாகவும் தலையசைக்க ,

 

“ப்பா… டெக்னாலஜி லாம் வேஸ்ட் தான் போ … என்னவொரு வேகம்… பொண்ணுங்ககிட்ட இதெல்லாம் தோற்று தான் போகுது… ” என்றவன் பலமாக சிரிக்க , அவனையேப் பார்த்திருந்தவளிடம் ,

 

“அவங்க எல்லாம் .. என் பையன் போல வருமா … எங்க பேரன் போல வருமானு உன்கிட்ட புகழ்ந்து தள்ளியிருப்பாங்க….நம்பாத….” என வாய் விட்டுச் சிரித்தவன் ,

 

“நான் அப்ப சொன்னது தான் , சாதாரண… ரொம்ப சாதாரண மனுஷன்.. என்ன ஒன்னு படிச்சு முடிக்கிற வரை ரொம்ப ஜாலியா சுத்திகிட்டு , அப்பாவோட பெயரைக் காப்பாத்தலாம்னு நினைச்சேன் , ஆனா எப்போ பிஸ்னஸ் கையில எடுத்தேனோ , அப்போ என் பெயரை இந்த உலகம் சொல்லணும்னுங்கிற அளவுக்கு ஆர்வம் வந்துருச்சு. தாத்தா தமிழ்நாட்டுல மட்டும் பண்ணின தொழில அப்பா இந்தியளவுல கொண்டுப் போனார் … நான் இன்டர்னேஷனல் லெவல்ல கொண்டுப் போகணும்னு ஆசைப்பட்டு அதற்கான முயற்சிகள்ல இறங்கியிருக்கேன். அதுக்கு ப்ளீஸ் உன்னோட சப்போர்டும் வேணும். தருவதானே…. ” என அவள் முகம் பார்த்துக் கேட்க ,

 

சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பாறைமேல் வைத்து விட்டு , அவனது வலக்கரம் எடுத்து, தன் கைகளுக்குள் பொதிந்து ,

 

” என்னோட சப்போர்ட் எப்போவும் உங்களுக்கு உண்டு.” எனப் புன்னகைக்க , அவனும் தன் மற்றொரு கரம் கொண்டு அவள் கரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அவள் விழிகளைப் பார்க்க , அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

விழிகள் மட்டுமே பேசிக் கொண்டிருக்க , ஆதியின் கைப்பேசி ஒலி எழுப்பவும் , விழிகளை அகற்றாமலே எடுத்துக் காதில் வைக்க ,

 

“அண்ணா…. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணா…”

 

பேச்சில் கவனம் கொண்டு வந்தவன் , “ஏம்மா … ஏன் …. காலையில உன் வீட்டுக்காரர் , இப்போ நீயா … ரெண்டு பேரும் இதைத் தவிர என்கிட்ட வேற ஒன்னும் சொல்லக்கூடாதுனு முடிவு பண்ணிட்டீங்களா …”

 

“அண்ணா….. ஆ” என்று செல்லம் கொஞ்சிய தங்கையிடம் ,

 

“அப்படி நான் என்ன பண்ணிட்டேன்னு நீயும் தக்ஷனும் இப்படி தேங்க்ஸ் சொல்றீங்கனு தெரியல …. உண்மைய சொல்லணும்னா அமிர்தாவ எனக்கு கொடுத்ததுக்கு நான் தான் உங்க எல்லோருக்கும் தேங்க்ஸ் சொல்லணும் … ” என்றவன் வலக்கரத்தால் அமிர்தாவின் கையை இறுக பற்றிக் கொண்டான்.

[the_ad id=”6605″]

கணவனின் பேச்சில் கண் கலங்கியவளை கண்களாலயே சமாதானப்படுத்தியவன் ,

 

“அமிர்தாக்கிட்ட பேசறீயா ” என்றவன் , உடனேயே வீடியோ காலில் அழைத்துப் பேச , ஆதி முகத்திலும் அமிர்தா முகத்திலும் இருந்த மகிழ்ச்சியைக் கண்டு பெரும் நிம்மதியடைந்தாள் ஆதியின் தங்கை.கண்களில் நீர் நிறைய அமிர்தாவைப் பார்த்து ,

 

“அண்ணி ” என்றவளை வியப்புடன் பார்த்த இருவரிடமும் ,

 

“அம்மா ரெண்டு நாளா அட்வைஸ் , ஃப்ரண்டாவே இருந்தாலும்.. அண்ணன் மனைவிய அண்ணினு தான் கூப்பிடனும்னு .. அதுவும் ஊர் பக்கம் சொல்றது போல சொல்லச் சொன்னாங்க … எனக்கு அது வரல” எனப் புன்னகைக்க ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!