Skip to content
Post Views: 2,165
தென்றல் – 5
“பொண்டாட்டியா” உறவுகள் அனைவரும் “இது எப்ப?” என கேள்வி எழுப்ப அப்பத்தா, செந்தில்நாதன், மலர், பூரணி, விஸ்வநாதன் என அனைவருக்கும் பெருத்த நிம்மதி. ஒரு வழியா அவனே ஒத்துகிட்டான் என்று.
அப்படி சொல்லுடா என் டொமேட்டோ . நான் ஃபங்ஷனுக்கு வந்தேன் னு நினைச்சியா, ச்ச் ச்ச… இல்லடா கண்ணா உனக்கு பொங்க வெக்க தான் வந்தேன் . இவரு பெரிய இவரு தாத்தாக்காக தாலி கட்டுவாறாம், அம்மாக்காக வேண்டாம்பாறாம்…
நாங்க எல்லாத்துக்கும் சரிங்கணும்மாம் எங்கள பார்த்தா எப்படி இருக்கு, என மனதுக்குள் காய்ந்த படி திரும்ப,
Advertisement
அங்கு அருள் யாரும் பார்க்காத போது கண்சிமிட்டி கை காட்டினான். பரவாயில்லை சித்தப்பு நான் நினைச்சத விட பர்பாமென்ஸ் சூப்பர் என மனதிற்குள் மெச்சிக்கொண்டான்.
பின்ன வளைகாப்புக்கு அழைக்கும் போதே இந்த விசயத்தை அவரிடம் கூறி உதவி கேட்க பின் இருவரும் இணைந்து போட்ட டிராமா தான் இது…….
பார்வதிக்கு மட்டும் கோபமான கோபம். எங்கிட்ட ஒன்னு சொல்லிட்டு இப்ப இவளை இத்தினி பேர் முன்னுக்க பொண்டாட்டி னு சொல்லிட்டானே. நாலு பேருக்கு மட்டும் தெரிஞ்சத இப்ப ஊருக்கே தெரியப்படுத்திட்டானே இனி நான் நெனைச்சது எப்படி நடக்கும் என மனதுக்குள் பொரும,
Advertisement
இளாவோ “யாருக்கு யாரு பொண்டாட்டி? என்ன இத்தனை நாள் அம்னீஷியால இருந்தீங்களா அன்னிக்கே என்னை வேண்டாம் னு சொல்லி கட்டன தாலிய திரும்ப வாங்கிட்டீங்க தான இப்ப என்ன புதுசா உரிமை கொண்டாடுறீங்க” என கோபமாய் கேட்க,
Advertisement
“இவ எவடி வெண்ணெய் திரளும் போது பானைய உடைக்கிறா” என அப்பத்தா திட்ட,
“இங்க பாரு அம்மாச்சி, உன் பேரன் வாழ்க்கை குடுத்து வாழனும் னு எனக்கு அவசியமில்லை” என கோபமாய் கூறியபடி தமிழ் குமரனை காண,
அவளின் கோபத்தில் இருந்த வலியை கண்டு இவனுக்கும் வலித்தது.
Advertisement
அடியாத்தி, எம்புட்டு திமிரு பாத்தியா அவளுக்கு ஒரு ஆம்பளைய பார்த்து எனக்கு வேண்டாம் னு சொல்றா. அதுனால தம்பி இவங்க சாங்கார்த்தமே வேண்டாம்னே நீ தான் கேட்காம… இப்ப பாரு இத்தனை பேர் முன்னாடி இது தேவையா?” என்றவர்,
“அப்பறம் இவ வேற எப்படி இருப்பா அவங்க அம்மாவாட்டவே மட்டு மரியாதை இல்லாம ” என கூற,
“இங்க பாருங்க அவ்ளோதான் உங்களுக்கு மரியாதை இதுக்கு மேல பேசுனீங்க” என விரலை நீட்டி இளா மிரட்ட,
“எங்க டி பாக்க, அடியேய் என்னியவே மிரட்டற, நீ எப்பிடி என்ற வூட்டுக்கு வர்றீனு நானும் பாக்கிறேன்” என கூற,
“அது தானே உங்க புத்தி உங்களை விட்டு எங்கே போகும்” என இளா கூற
“இளாம்மா போதும் நாம் கிளம்பலாம்” என்றபடி வந்தார் விஸ்வநாதன்,
“ஐயோ மாப்பிளை இருங்க போலாம், ஒருவாய் சாப்டதகூட கிளம்புறங்கன்றீங்க” என செந்தில்நாதன் கவலைபட,
“பரவாயில்லண்ணா இங்க வந்ததுக்கு மனசும், வயிறும் நிறைஞ்சு கிடக்கு, நாங்க எங்க பொண்ணு மலருக்காக தான் வந்தோம் வேற யாருக்காகவும் இல்லை வந்த வேலை முடிஞ்சுது நாங்க கிளம்பறோம்” என பூரணி கூறினார் .
“என்ன விஷ்வா தமிழ் என்னென்னமோ சொல்றான் நம்ம இளாக்கு கல்யாணம் ஆயிடுச்சா எப்போ” என ஒன்றும் அறியாதவர் போல் மருதாச்சலம் கேட்க,
“ஆமாண்ணே நாம அதை வீட்டில் போய் பேசிக்கலாம் இப்ப நாங்க கிளம்புறோம்” என பூரணி அங்கிருந்து கிளம்ப,
“அம்மா நாங்க கிளம்புறோம், மலரு உடம்ப பார்த்துக்கோமா நாங்க போயிட்டு வரோம் எதுனாலும் எங்களுக்கு ஒரு போன் பண்ணு” என கூறிவிட்டு நடக்க,
இளாவும் தமிழை ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்ப,
அருளோ என்ன சித்தப்பா என்பது போல் பார்த்தான்,
இரு இரு நான் பார்த்துக்கிறேன் என்பது போல் கைகாட்டி விட்டு,
“என்னமா பூரணி நீ எங்க கிளம்பிட்ட”, என கேட்க
“ எங்க வீட்டுக்கு தாண்ணா கோயம்புத்தூருக்கு”
“நீ புரிஞ்சுதான் பேசுறியா”,
“என்ன அண்ணா சொல்றீங்க”
“பின்ன என்னம்மா இன்னும் எத்தனை நாளைக்கு தான் பிரச்சனை தள்ளி போட்டுட்டே இருக்கிறது இதற்கு முடிவே இல்லையா”,
“அவங்க அன்னைக்கே முடிவு எடுத்துட்டாங்க அண்ணா”,
“அவங்க முடிவெடுக்குறாங்கன்னா அது அவங்க மட்டும் சம்பந்தப்பட்டிருந்தா சரி நம்மளும் சம்பந்தப்பட்டிருக்கும்போது அவங்க மட்டும் எப்படி முடிவெடுக்க முடியும்” என கேட்டவர், “சரி வா வீட்டுக்கு போலாம்” என அழைக்க,
“ நம்ம வீட்டுக்கு இல்லன்னா அப்பா எப்ப இறந்தாரோ, அன்னக்கி நாங்க வீட்ல இருந்து வெளியில வந்தோமோ இனிமே அங்க நாங்க வர்றதே இல்லைன்னா” என கூற,
“ நீ அங்க போக வேண்டாமா அண்ணன் நான் இருக்க என் வீட்டுக்கு வா இது பொதுவெளியில் வைச்சு பேசுற விஷயம் இல்லடா நீ வா நான் சொல்றேன் வா ஒரு முடிவு எடுத்துக்கலாம் அதுக்கப்புறம் அவங்க அவங்க வாழ்க்கையை அவங்க அவங்க பாக்கட்டும் சரியா நம்ம வீட்டுக்கு போகலாம்” என கூறினார்.
இளா மறுப்பாய் தலையசைக்க,
“ஏன் இளாம்மா இந்த அங்கிள் சொன்னா நீ கேக்க மாட்டியா” என்றவர்,
“விஷ்வா நீயாவது சொல்லுடா ரிலேடிவா வேண்டாம் நான் உன்னோட பெஸ்ட் பிரண்டு அதுக்காகவாது என் வீட்டுக்கு வரலாம்மல ப்ளீஸ்டா அங்க போகலாம்” என கூறி அனைவரையும் அங்கிருந்து அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்
இங்கோ மண்டபத்தில் உறவினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்து கிளம்பி சென்றனர்.
போகும்போது பார்வதியிடம் “என்ன பார்வதி பையன் கல்யாண சாப்பாடு போடுவீனு பார்த்தேன் போட மாட்ட போல இருக்கு சேரி எதுனாலும் சொல்லு என்ன நாங்க வாரோம்”என ஒருவர் வம்பு பேச,
“ பேசாம போயிடு பாத்துக்க” என பார்வதி பாய்ந்து விட்டார்.
அவர் கவலை அவருக்கு இந்த பங்க்ஷன சாக்கா வச்சு தன் அண்ணன் பொண்ணை எப்படியாவது தமிழுக்கு கட்டி வைச்சுடலாம்னு நினைச்சாரு நடக்காம போயிடுச்சு அப்புறம் என்ன செய்ய,
அருளும் ,செந்தில் நாதனும் வந்திருந்த உறவினர்களை கவனித்து அனுப்ப,
பாட்டி மலரை அழைத்துக் கொண்டு வீடு சென்றார் தன் மகளின் கவலையில் கண்ணீர் பாட்டி
“ கவலைப்படாதீங்க பாட்டி மருதாசலம் மாமா தான் சொல்லி இருக்காரு எப்படியாவது இன்னிக்கு பேசி இந்த விஷயத்துக்கு ஒரு முடிவு எடுத்து விடுவோம்னு”
“என்னத்தா மலரு சொல்ற”,
“ஆமாம் பாட்டி அவர்தான் மருதாசலம் மாமா கிட்ட என் வளைகாப்புக்கு அழைச்சுட்டு , தமிழ் தம்பிக்கும் இளாக்கும் தாத்தா கல்யாணம் நடத்தி வெச்சது கல்யாணத்துக்கு அப்புறம் அத்தை செஞ்ச கூத்து எல்லாத்தையும் சொல்லி எப்படியாவது தமிழையும் இளாவையும் ஒன்று சேர்த்து வைக்க சொல்லி கேட்டார் அதனால் தான் மாமா தமிழையும் இளாவையும் சேர்த்து வைக்கிறதா சொல்லி இருக்காரு”,என்று கூற
“பாரேன் பெரியவனுக்கு இருக்கிற அக்கறையும் கூட உன் மாமனாருக்கு இல்லையே”,
“பாவம் அவர் என்ன பாட்டி செய்வாரு ,யார் அவர் பேச்சு கேட்டாங்க அவசரமா செய்ய வேண்டாம்னு தாத்தா கிட்ட சொன்ன போதும் தாத்தாவும் கேட்கல, இந்த மாதிரி முடிவு எடுத்து தாலிய வாங்க வேண்டாம்னு சொன்னப்போ தமிழும் கேட்கல, அத்தை கிட்ட கோபப்படாதன்னு சொன்னப்ப அத்தையும் கேக்கல, பூரணி சித்திகிட்டயாவது அமைதியாக இருக்க சொன்னா அவங்களும் கேட்கல அப்புறம் அவர் என்ன பண்ணுவாரு.
யாராவது அவரை மதிக்கிறாங்களா இல்ல தான், அப்புறம் அவருக்கு யாரை பத்தி கவலை இருக்கணும் இப்பவும் அவர் இவ்வளவு தூரம் ஓடுறதுக்கு காரணம் இது அவர் குடும்பம் சொல்லி மட்டும் தான்” என்று கூற,
“அதுவும் வாஸ்தவம்தான் என்ற மகன் எல்லாருக்கும் நடுவுல மாட்டிகிட்டு சிக்கி சீரழியாறான்” என்ன வேதனையுடன் கூறினர்.
“எல்லாம் சரி பண்ணிடலாம் பாட்டி கவலைப்படாதீங்க” என மலர் சமாதானம் செய்தாள்.
இளாவின் முகத்தில் இருந்த வலி தமிழைக் கொன்றது. அங்கேயே ஆடாமல் அசையாமல் நின்றான்.
பார்வதி பார்த்துவிட்டு “இங்க பாரு தமிழு, நீ அம்மாகிட்ட சத்தியம் செஞ்சி இருக்க தானே சாமி நான் பார்த்து சொல்ற பொண்ண கட்டிக்கிறேன், இப்போ எல்லார் முன்னுக்கும் இவ தான் என் பொண்டாட்டினு சொல்ற, அப்ப உனக்கு அம்மா வேண்டாம் தானே” என வழக்கம் போல தன் பிளாக்மெயில் வேலையை துவங்க,
சலித்து போனது தமிழுக்கு.
எத்தனை தான் இவங்களுக்காக பார்த்தாலும் இவங்க என்ன புரிஞ்சிக்கவே மாட்டாங்களா என்ன நினைத்தான்.
“இங்க பாருயா யாரு அவங்க வீட்டுக்கு போனாலும் சரி என்ன பேசினாலும் சரி நீ இதுக்கெல்லாம் ஒத்துக்கவே கூடாது. உனக்கு இப்பவும் சொல்றேன் அம்மா வேணும்னா உனக்கு அவ வேண்டாம் இல்ல அவதான் வேனும்னா சொல்லு நான் உனக்கு இருக்க மாட்டேன் முடிவ நீயே எடுத்துக்கோ” என கூறிவிட்டு சென்று விட்டார்.
எப்போதும் போல் எந்த முடிவெடுப்பது என்று தெரியாமல் சமைந்து நின்றான் தமிழ்…..
error: Content is protected !!