Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 7 2

“ஏதாவது மனசு கஷ்டமாயிருந்தாலோ , இல்ல உடம்பு சரியில்லாம இருந்தாலோ … எங்கம்மா மடியில படுத்துப்பேன் …அப்போ அவங்க என் தலைகோதி விடுவாங்க , அப்ப ஒரு சுகம் … ஒரு நிம்மதி எனக்கு கிடைக்கும் … இது ரெண்டையும் இப்ப உன்னைப் பார்க்குறப்போவும் , உன்கிட்ட பேசும் போதும் கிடைக்குது… இந்த சுகமும் நிம்மதியும் என் வாழ்நாள் முழுசும் வேணும்னு ஆசைப்படுறேன் ….. இதுக்கு மேல உன் விருப்பம்….இருக்கவா… கிளம்பவா… முடிவு பண்ணு” பதிலை எதிர்பார்க்காது மொபைலை அணைத்து வைத்தவன், அவளது ஃபோட்டேவைப் பார்த்துக் கொண்டே …

 

“நான் சொன்னா நீ செய்வியா தெரியாது…. ஆனா செய்வ அப்படிங்கிற நம்பிக்கை இருக்கு ….”

 



Advertisement

அரவிந்தின் பேச்சு வித்யாவிற்கு மயிலறகால் வருடும் சுகத்தைக் கொடுத்ததோடு கண்ணீர் துளி ஒன்று கன்னத்தில் உருண்டோடியது.

 

ஆணோ , பெண்ணோ தாய் மடி தரும் சுகமும் நிம்மதியும் விவரிக்க இயலாத ஒன்று…. ஒருவன் தன் விருப்பத்தை இப்படியும் தெரிவிக்கையில் மயங்காத பெண்களும் உண்டோ … வித்யாவும் விதிவிலக்கல்லவே…..

Advertisement

 

Advertisement

மாலை நெருங்கவும் கோவிலில் விழா களைகட்டத் துவங்கியது. இருள் சூழத் துவங்கினாலும், அனைவரது வீடுகள் , மற்றும் சாமி ஊர்வலம் போகும் தெருக்கள்  என ஊரின் அனைத்து இடங்களும் வண்ண மின் விளக்கு அலங்காரத்தில் பகல் போல் காட்சியளித்தது.

 

விக்ரம் ,திலீபன், அரவிந்த் என அனைவரும் மாலையில் வீடு வந்து குளித்து விட்டு உடனேக் கிளம்பிச் சென்று விட்டனர்.

Advertisement

 

சங்கீதா அழகான மயில் கழுத்து நிறத்தில் அதிக கனமில்லாத பட்டுப்புடவையில் தயாராகிக் கொண்டு இருக்க , பூவெடுத்துக் கொண்டு உள்ளே வந்த வித்யாவிடம்,

 

[the_ad id=”6605″]

 

” விது ….அம்மாக் கூட அவசரமா திருநெல்வேலி கிளம்புன… போய்ட்டு வந்துட்டியா…. ”

 

“ம்… ஆமாம் கா இந்தா பூ … நானும் ரெடியாகுறேன் ” என்றவள் , பரணியோடு நெல்லைக்குச் சென்று புதிதாக வாங்கி வந்த ரெடிமேட் தாவணியை உடுத்த ஆரம்பித்தாள் .

 

சிறிது நேரத்தில் கையில் ஒரு பையுடன் உள்ளே வந்த வரு,

 

“வாவ்வ்….அண்ணி அழகா இருக்கீங்க … ” என்றவள் தன் கையிலிருந்த பூக்களையும் சங்கீதாவிடம் தர , அதை மூவருக்கும் பங்கிட்டு தந்த சங்கீதா ,

 

“வரு உனக்கு இந்த லெஹங்கா அழகா இருக்கு… ஆனா ஏன் இந்த டாப்ஸ் போட்டுருக்க … ” என அவள் அணிந்திருந்த வேறு ஒரு மேலாடையைக் காட்டிக் கேட்க,

 

“எங்கண்ணா தான் வாங்கித் தாங்க… இந்தக் கலர் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும் …. “, தலைவாரிக் கொண்டிருந்த வித்யா சட்டென்று திரும்பி வருவைப் பார்த்தாள்.

 

வெண்மை நிறத்தில் ரோஜா நிற பூக்கள் போடப்பட்ட லெஹங்காவில்  அவளைப் பார்த்ததும் வித்யா முகத்தில் புன்னகைப் பூத்தது. அவளருகில் வந்த வரு , பையிலிருந்து ரோஜா நிறத்திலான சட்டையை எடுத்துக் காட்டியவள் ,

 

” வித்யா இதுல பின்னாடி கயிறு  இருக்கு… , அண்ணாப் பாவம் கலர் பார்த்ததும் வாங்கிருப்பாங்கப் போல… பெரியம்மா ரொம்ப பிஸியா இருக்காங்க… அம்மு, சாரு எல்லாம் முதல்லயே கிளம்பிட்டாங்க … இதை தனியா போட்டுக்க முடியாதே”

 

“நீ இங்க வந்து டிரஸ் பண்ண வேண்டிதான … நானும் அக்காவும் இருக்கோம்ல….” என்றவாறு அவளை அந்த ஆடையை மாற்ற வைத்து இதய வடிவிலான ஜாக்கெட்டின் பின்புறம் இருந்த கயிறுகளை கட்டிவிட்ட வித்யா , நைட் எங்களோடவே வந்துரு … வீட்டுக்குப் போய் டிரஸ் சேன்ஜ் பண்ணக் கஷ்டப்படுவ….” என்றதும் , தலையாட்டிக் கொண்ட வரு… அதில் கொடுக்கப்பட்டிருந்த தாவணியை வட இந்தியப் பெண்கள் அணிவது போல் அணிந்துக் கொண்டாள்.

 

“வரு இந்த டிரஸ் பேக் சைட் அப்படியே உன் முதுகு முழுசும் தெரியறது போல இருக்கு .. சிட்டில யாரும் கண்டுக்க மாட்டாங்க … ஆனா இங்க ….” என்ற வித்யா ,

 

“ஒரு நிமிஷம் ” என்றவள் அவள் தோள் வரை வரை மட்டுமே இருந்தக் கூந்தலை விரித்து விட்டு ,

 

“ஆன்…. இப்படிப் போட்டா கொஞ்சம் பரவாயில்ல பூவும் நிறைய வச்சுடலாம் ….” என்றவள் பூவை வைத்து விட்டாள்.

 

“ஏன் வித்யா … டெல்லில இது எல்லாம் நார்மலா போடுறது தானே … ஏன் இங்க மட்டும் டிரஸ் போட்டுக்கிறத பெரிய விஷயமா பேசுறாங்க … அதுவும் இந்த சம்மர்ல எப்படி டீ இப்படி டிரஸ்லாம் போடுறது” என வித்யாவும் , சங்கீதாவும் அணிந்திருந்த பட்டுப் புடவையையும், பாவாடையையும் காட்டிக் கேட்க ,

 

“நீ இந்தியாவோட தலைநகர்ல படிச்ச … அதுவும் நீ படிச்ச ஸ்கூல் யம்மாடி…. எவ்வளவு பெரிய பேர் வாங்குன ஸ்கூல் … அங்க ஃபாரினர்ஸும் படிப்பாங்க …அதனால இப்படி உடம்பு கொஞ்சமா தெரியற டிரஸ் அங்க சாதாரணம், நீயும் சின்ன பிள்ளையா இருக்கிறப்ப மட்டும் தான் இங்க வந்துருக்க அது தான் உனக்குத் தெரியல…. டிரஸ் போடுறதுல இங்க நிறைய பார்ப்பாங்க…. இப்பக்கூடப் பாட்டி ஆர்டர் போட்டுட்டுப் போனதாலதான் நானும் அக்காவும் இந்த டிரஸ் போட்டுருக்கோம் …”

 

“விது அவளுக்கு கிளாஸ் எடுத்ததுப் போதும் … சீக்கிரம் கிளம்புங்க …” என்ற சங்கீதா அவர்களைக் கிளப்பினாள்.

 

“அது தான் தெரியுதே…. “என்ற வருவுக்கு கோவிலில் பேசிய பெண்மணியும் ,விக்ரமும் தான் நினைவுக்கு வந்தார்கள்.

 

பெண்கள் அனைவரும் பொதுவில் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட அவரவர்க்கான முளைப்பாரியை எடுத்து இடுப்பிலும் தலையிலும் வைத்துக் கொண்டனர்.

 

“பரணி உன் அண்ணன் மவ தலைமுடியக் கட்டிவிடு… கோயிலுக்கு இப்படி முடிய விரிச்சுப் போட்டுப் போகக் கூடாது.” எனப் பரணியின் மாமியார் சொன்னதும் ,வருவின் அருகில் வந்தப் பரணி , வருவிடம் காரணம் சொல்லி அவளதுக் கூந்தலைப் பின்னி பூ வைத்து விட்டார்.

முளைப்பாரி தூக்கும் கவனத்தில் வித்யா அதைக் கவனிக்கவில்லை. பின்னர் அதனை எடுத்துக் கொண்டு மேளதாளங்களோடு ஊர்வலம் கிளம்பினர்.

 

[the_ad id=”6605″]

 

முதலில் அனைவரது கவனமும் அவரவர் முளைப்பாரியை எடுத்து பத்திரமாகக் கொண்டுச் செல்வதில் தான் இருந்தது. வரு மற்றப் பெண்களோடுப் பேசிக் கொண்டே வர , வித்யா அமைதியாக  யோசனையோடு அவளோடு வந்துக் கொண்டிருந்தாள்.

 

இவர்கள் கூட்டத்தினிடையில் செல்லும் வரை எதுவும் பிரச்சினையின்றி தான் சென்றுக் கொண்டிருந்தார்கள். ஓரமாக வரும் போது தான் ஊர்வலத்திற்கு வலப்புறமும் இடப்புறமும் ஆண்களும் வந்துக் கொண்டிருப்பதை வித்யா கவனித்தாள். அதில் சிலர் இவர்கள் பக்கம் பார்ப்பதும் ஏதோ தங்களுக்குள் கேலி பேசி சிரித்துக் கொண்டிருந்ததையும் கண்டாள் .

 

இளம் பெண்களை திருவிழாக்களில் இளவயது  ஆண்கள் பார்ப்பதும் கேலி செய்வதும் சகஜம் தான் என்பதால் முதலில் கண்டுக் கொள்ளவில்லை. அப்பொழுது கூட்டத்தில் ஒருவன் ,

 

“ஏலே இந்த சித்திரை வெயில்ல … ஜன்னல் கதவு எல்லாம் இப்படித் தொறந்து வச்சாதான்ல காத்து நல்லா வரும். ” மற்றொருவன் ,

 

“ஆமாம்லே… எனக்கும் சந்தேகம்லே….”

 

“என்னலே … ”

 

“இதயம் உடம்புல முன்னாடி இருக்குமா … இல்ல இப்படி முதுகுல இருக்குமா … ”

 

என்றவாறு உடனிருந்தவர்கள் அனைவரும் கேலிப் பேசி சிரித்துக் கொண்டு நடந்தனர்.

 

அந்தக் கூட்டத்தில் தான் விக்ரமும் இருந்தான். அவர்கள் பேசியதைக் கேட்டவன் ,

 

“யார இவனுக இப்படி லுக் விட்டு கமன்ட் அடிக்கிறானுக” என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே , அருகில் இருந்த பிரதாப் ,

 

“சக… ல …..” என இழுக்க ,

 

“சொல்லு சகல ….” என்றதும் வித்யா சங்கீதாவுடன் அம்மு ,சாரு , வரு.. எனப் பெரிய பெண்கள் பட்டாளத்தைக் காட்டி,

 

“நம்ம தங்கச்சிங்கக் கூட வர்ற புள்ளையப் பாத்தியா … அப்படியே கல்கத்தா ரசகுல்லா போல இருக்குடா … ஆளு அப்படியே ..” என மேலும் பேசப் போனவனைத் தடுத்து , கைகாட்டி திலீபனையும் அரவிந்தையும் சுட்டிக்காட்டி ,

 

“டேய் இன்னும் ஒரு மாசத்துல சங்கீதா அங்கதான்டா மருமகளாகப் போறா , கொஞ்சம் கவனமா பேசு” என்றுப் பொதுவாகச் சொன்னாலும் , விக்ரமுக்கு பிரதாப் வருவை தான் அப்படிச் சொல்கிறான் என்பது புரிந்தது. ஏனோ அவளை பிரதாப் பார்ப்பது பிடிக்காத உணர்வைத் தரவே மேலும் பேச விடாது தடுத்து விட்டான்.

 

ஒரு இடத்தில் மேளச் சத்தத்தையும் மீறி ஒருவன் உச்சஸ்தாயில் ….

 

“சேலையில வீடு கட்ட வா… சேர்ந்து வசிக்க … ஜன்னல் வச்ச ஜாக்கெட்…. ” என்றுப் பாட ஆரம்பிக்க … அது வித்யாவின் காதுகளில் துல்லியமாக விழவும்… அதிர்ந்து வருவின் வலப்புறமாக நடந்து வந்துக் கொண்டிருந்தவள் , நின்று அவளை முன்புறம்போக விட்டுப் பார்க்க ஜடை பின்னல் இருந்ததால் அவளது கயிறு வைத்துக் கட்டப்பட்டிருந்த முதுகுப் புறம் முழுவதும் அப்பட்டமாகத் தெரிந்தது.

 

அவள் போட்டிருந்த தாவணியை வைத்து மறைக்க முயன்றாலும்  அவள் கட்டியிருந்த முறையில் மறைக்க இயலாது இருந்தது. அவளருகில் சென்றுக் காதினில் ,

 

” ஏன்டி உனக்கு ஃப்ரி ஹேர் விட்டு பூ வைச்சன்ல , எப்ப ஜடைப் பின்னனின….”

 

[the_ad id=”6605″]

 

“நான் எங்கப் பின்னினேன். அத்தை தான் பாட்டி முடிவிரிச்சுப் போடக்கூடாதுனு சொன்னாங்கனு கட்டி விட்டாங்க… எனக்கும் இந்த ஹீட்ல இப்படிக்கட்டினது தான் வசதியா இருக்கு… ” என்றவள் முன்னே நடக்க ஆரம்பித்து விட்டாள்.

 

” அடிப்பாவி அவனுக கிண்டல் பன்றதுக்கூடத் தெரியாம இவப்பாட்டுக்கு நடக்கிறா… ” என்றுப் புலம்பியவள் , அவளின் பின்புறம் சென்று அவளது முதுகுப்புறம் யாருக்கும் தெரியாதவாறு மறைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

 

வரு யாரையும் கவனிக்காது சலசலத்துக் கொண்டு வர … விக்ரம் ,அரவிந்த், திலீப் என நண்பர்கள் கூட்டத்தில் தங்கள் வீட்டுப் பெண்களை பார்வையிட ஆரம்பித்தனர்.

 

அதிக கூட்டம் இருந்ததால் யாரையும் முழுதாக வெளியிலிருந்துக் காண முடியவில்லை. அதிலும் அரவிந்த் வித்யாவைக் கண்டு அவளின் மனநிலையை அறிந்துக் கொள்ள முடிவு செய்து தேடிக் கொண்டிருந்தான். ம்ஹும் கண்ணில் படவே இல்லை…அவளைக் காண முடியாத தவிப்பு நெஞ்சில் பாரத்தைக் கொடுத்தது.

 

காதல் கொண்ட இரு உள்ளங்களான திலீபனும் சங்கீதாவும் பார்வைக்கு பார்வை பதிலாக அளித்துக் கொண்டு நடக்க ….தங்கையின் பின்னால் முகம் காட்டாது மறைவாக வந்துக் கொண்டிருந்த வித்யாவை அவள் மேல் காதல் கொண்ட அரவிந்த் , காண முடியாத தவிப்பை தன் விழிகளில் பிரதிபலிக்க …, விக்ரமோ

 

கள்ளமில்லா  தன் பேச்சாலும் , புன்னகையாலும் தன்னைச் சுற்றியிருந்தவர்களை ஈர்த்துக் கொண்டிருந்த வருவை….

 

“இந்தப் பம்கின் கிட்ட எத்தனை தடவை தான் சொல்றது … ஊரப் பொறுத்து நடந்துக்கோனு …. டிரஸ்ஸப் பாரு ஊர்ல உள்ளவன் கண்ணெல்லாம் இப்ப அவ மேல தான் இருக்கு …” என்பதாக கண்டன விழிகளோடுப் பார்த்துக் கொண்டிருந்தான் .

தூவும் …..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!