Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 7 1

மழைத்துளி 7

 

வரவேற்பறையில் அமர்ந்து அந்த ஊரின் முக்கியஸ்தர்களோடுப் பேசிக் கொண்டிருந்த விக்கிரமராஜா , வெளியே செல்லக் கிளம்பிக் கொண்டிருந்த விக்ரமை அழைத்து அங்கிருந்தவர்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்தினார் .அவர்கள் அவனைப் பள்ளிச் சிறுவனாகப் பார்த்ததுதான் .எனவே தன் ஒரே பேரனின் அருமை பெருமைகளை அவர்களிடத்தில் பகிர்ந்து மகிழ்ந்துக் கொண்டிருந்தார்.சிறிது நேரம் பேசியிருந்து விட்டு அவர்கள் கிளம்பியதும் பேரனிடம் பேச்சுக் கொடுத்தார்.

 



Advertisement

“பேரா கம்பு சுத்தப் போறீயாமே… கொடை முடியப் போற நேரம் வந்துருக்கியேப்பா … எப்படி ..என் பேரன் என்னைப் போலங்கிறது ரொம்ப பெருமையா இருக்கு ராஜா… இது நம்ம ஊரு …நம்ம பாரம்பரியம் … அதை இப்படி வளர்த்தா தான் உண்டு… அதுதான் தங்கச்சிகிட்டயும் சொல்லி … நம்ம வீட்டு புள்ளைக எல்லாரையும் ஏதாவது ஒன்னுல கலந்துக்கிட சொல்லியிருக்கேன் …. கட்டாயம் இல்ல… ஆனா உங்க விருப்பம் …. உங்கப்பாவும் , சித்தப்பாவும் உன் வயசுல எல்லாத்துலயும், அதாவது கபடி , உறியடிக்கனு இருப்பாங்க… அதுக்கப்புறம் பிஸ்னஸ் பிஸ்னஸ்னு.. அதுலயே காலம் போயிருச்சு….” எனவும் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கியவன் ,

 

“தாத்தா நாங்க எல்லாரும் உங்க ஆசையை கட்டாயம் நிறைவேத்துவோம் ….. நைட் பாருங்க… உங்க பேரன் பேத்திங்க பெர்ஃபார்மன்ஸ.. கீதுவும் விதுவும் கூட பாட்டி சொல்லி ஏதோ செடியெல்லாம் வளர்க்கிறாங்க…. ஒகே தாத்தா நான் பராக்டிஸ் கிளம்புறேன் ….”என்று சென்று விட்டான்.

Advertisement

 

Advertisement

அருகில் வந்தமர்ந்த மனைவியிடம் , ” முளைப்பாரிய தான் உன் பேரன் அப்படிச் சொல்லிட்டுப் போறான்” என்று சிரித்தவரிடம் ,

 

“நம்ம காலம் வரைக்கும் இதெல்லாம் செய்துட்டுப் போவோம்… பசங்க நமக்காகவாது செய்றாங்களேனு சந்தோஷப்பட வேண்டியதுதான்” என்ற அவனது பாட்டி மருமகள்களிடம் சென்று ,

Advertisement

 

” லதாம்மா, நீயும் பரணியும் புள்ளைகள கூட்டிகிட்டு சீக்கிரமே கோவிலுக்கு வந்துருங்க … நான் ராசம்மா மையினி ( மதினி )வீட்டுக்குப் போறேன் … அங்க இருந்தே வந்துடுறேன்…. மூத்தவளுக்கு புடவையும் இளையவளுக்கு தாவணியும் போட்டு அழைச்சுட்டு வாங்க ….” என்றவர் தன் உறவினர் வீட்டுக்கு கிளம்பி விட்டார் .

 

[the_ad id=”6605″]

 

ஆற்றோரம் இருந்த கோவில் மைதானத்துக்கு வந்த விக்ரமிடம் அங்கு ஏற்கனவே நண்பர்களோடுப் பேசிக் கொண்டு இருந்த பிரதாப் ,

 

“சகல ….. எப்படில இருக்க … ” என விக்ரமைப் பார்த்து மகிழ்ச்சியோடு வந்துக் கட்டிக் கொண்டான்.”

 

“சகல … நான் நல்லா இருக்கேன் … நீ ….எப்படி இருக்க… ஃபோன் நம்பரும் அடிக்கடி மாத்திட்டே இருக்கப் போல…. … வந்ததும் மணி பெரியப்பாக்கிட்ட கேட்டேன்… மதுரை வரைக்கும் போயிருக்கிறதா சொன்னாங்க… ”

 

“அப்பா உடம்புக்கு முடியாம போச்சு … சரினு பி.காம் முடிச்சக்  கையோட அவரு வியாபாரத்தை பார்க்க ஆரம்பிச்சுட்டேன். தாத்தா வரும்போது கேப்பேன் உன்னை… படிக்க நாடு நாடா பறந்துட்டு இருக்கனு சொன்னாங்க. முடிச்சிட்டியா… இப்ப என்ன செய்ற … ”

 

“முடிச்சிட்டேன் டா … இப்ப ” என சொல்ல ஆரம்பிக்கும் போதே திலீப் புல்லட்டில் அரவிந்தோடு வந்து இறங்க , அவனைக் காட்டி ,

 

“மச்சான் அமெரிக்காலயே செட்டிலாகிட்டான் போல …..” என  புல்லட்டில் இருந்து இறங்கியவனிடமும் ,

 

” எப்படில்ல அங்கல்லாம் இருக்கீக…. சுத்திப் பார்க்கதான்ல அந்த ஊரு லாயக்கு ….. ஒரு வாரம் வேலை விஷயமா வந்துட்டு மூணாவது நாளே எப்படா வீடு போவோம்னு ஆகிருச்சு … தேவைக்கு வருமானம் வருதா , அம்மா கையால சாப்பிட்டோமா … நம்ம ஊரு பொம்பள பிள்ளைகள சைட் அடிச்சோமா….. ஊரச் சுத்துனாலும் நைட் நம்ம வீடு வந்தோமானு இருந்தா தான்டா நிம்மதியா இருக்கு.”

 

கேட்ட மூவருமே சிரித்தாலும் திலீபன் , “மாப்ள நீ சரியா தான்டா சொல்ற… போய்ட்டு ஒரு நாலஞ்சு வருஷம் கழிச்சு வந்துருவேன்டா…. அப்புறம் இங்கயே கம்பெனி ஆரம்பிக்காலாம்னு இருக்கேன்… சரி வாங்கடா சிலம்பு சுத்துவோம்…..”

 

“நீங்க.. பழகுங்க , நான் அடிக்கடி செய்றது தான்….அப்புறம் திலீபா…. கொடைக்கு உன் பெரியப்பா சித்தப்பா மக்கமார் ( பிள்ளைகள் ) எல்லாரும் வந்துருக்காகப் போல …. கோவிச்சுக்காதடா…  வெயிலுக்குள்ள நல்லா சில்லுனு இருக்குதுல ஊரு…. ” எனக் கண் சிமிட்டியவன் ,

 

“நான் வசூலுக்கு போய்ட்டு வாறேன்” என்று நகர்ந்து விட ,

 

“மச்சான் இவன் என்னடா சொல்லிட்டுப் போறான்….”

 

திலீபன் கையைப் பிடித்து , “மாப்……ள கலக்கிறியே.” என்ற விக்ரம் , மொபைலை எடுத்து சங்கீதாவிற்கு அழைப்பு விடுத்துக் காத்துக் கொண்டிருக்க , எதிர் முனையில் வித்யா தான் எடுத்தாள். சங்கீதாவை எங்கே எனக் கேட்க,

 

“அண்ணா பாட்டி சாயந்திரம் சேலை , தாவணிலதான் முளைப்பாரி எடுக்கணும்னு சொல்லிட்டாங்க … அதுனால அம்மாகிட்ட போய் சேலை கட்டி..பழகிட்டுருக்கா… அப்புறம் அத்தான் ஃபோன் பண்ணா என்ன கலர் சேலை கட்டணும்னு ஃபோன் பண்ண சொன்னா…. அத்தான் உங்க கூட தான் இருக்காங்களா”

 

“ஓ…உங்க அத்தான் இங்க தான் இருக்கான் அவனப் பேசச் சொல்றேன்” என்று ஃபோனை வைத்தவனிடம் ,

 

[the_ad id=”6605″]

 

“டேய்….டேய் இப்ப என்ன மூட்டிவிடனு அவளுக்கு ஃபோன் போட்ட… ” என்றுப் பதறிய திலீபனிடம் ,

 

“மூட்டிவிட தான் …. ஆனா நல்லவிதமா மூட்டிவிடலாம் பார்த்தேன்….” என்று விக்ரம் சிரிக்க ,

 

“டேய்  மாப்ள ..என்னடா சொல்ற …. நேரா சொல்றா…”

 

“ம் கீதுவத் தவிர வேற எந்தப் பொண்ணும் உன் கண்ணுக்கு  தெரியலயே … அதான் சொல்றேன்…. ” என்றவாறு அவனைத் தோளோடு அணைத்துக் கொண்டவன் வித்யா சொன்னதையும் சொல்ல ,

 

“உங்க முன்னாடிலாம் பேச முடியுமாடா …. ஆள விட்டுறு மாப்ள … நான் அப்புறம் பேசிக்கிறேன்… ஆனாலும் பிரதாப் என்ன சொன்னான்னு சொல்லல நீ ” என்றவன் தான் கழட்டிய சட்டையையும் விக்ரமும் கழட்டிய சட்டையையும்  அரவிந்த் சாய்ந்து நின்ற பைக்கின் மேல் வைத்தான்.

 

“ம்…. மச்சான் நீ இந்த விஷயத்துல டியுப் லைட்டாவே இருந்தா தான்டா நல்லது ” என்றவாறு சிலம்பாட தயாராக ,

 

அவர்களது பேச்சில் சிரித்துக் கொண்ட அரவிந்த் பைக்கில் ஏறி அமர்ந்துக் கொள்ள, திலீப் விக்ரமிடம் ,

 

“விக்கி இது அரவிந்த் டா, விசு சித்தப்பா பையன் …. சொல்லிருக்கேனே…. ”

 

“ஓ லண்டன் போனா சித்தப்பா பையன் கூட தான் தங்குவேன்னு சொல்வியே … ”

 

“அவனே தான்டா.. அவனும் சின்ன வயசுல நல்லா கம்பு சுத்துவான் … ஆனா இப்போ ஞாபகம் இல்லங்கிறான்” என்ற தீலிபன் , அரவிந்திடம் ,

 

“அரவிந்தா … செல்வா மாமா பையன் ….அது மட்டுமா அவன் தங்கச்சி தான் சங்கீதா … சோ.. நம்ம மச்சான் டா…. ஒரு கும்பிடு போட்டுக்கோ” எனக் கண் சிமிட்ட ,

 

“ஆமா ஆமா…. மாப்பிள்ளைகளா … நல்லா வளைஞ்சுக் கும்பிடு போடுங்க …” என்ற விக்ரம் திலீபனின் முதுகில் அடித்து சிரிக்க ஆரம்பித்தான்.அரவிந்தோ ,

 

“அட நம்மாளோட அண்ணனா….” எனப் புன்னகையோடு பைக்கில் இருந்து இறங்கி விக்ரமிடம் கை குலுக்க கை நீட்ட , அவனும் புன்னகையோடு அரவிந்தின் கரம் பற்றிக் கொண்டான்.

 

வித்யா  ஞாபகம்  வரவும் பைக்கில் அமர்ந்து மொபைலில் வித்யா ஃபோட்டோக்களை அரவிந்த் பார்க்க ஆரம்பித்து விட , மற்றவர்கள் சிலம்பு பயிற்சிக்கு சென்று விட்டனர்.

 

அருகிலிருந்த திலீபின் சட்டையிலிருந்து மொபைல் அடிக்கவும் முதலில் கண்டுக்கொள்ளாமல் விட்டவன் மறுபடி மறுபடி அடிக்கவும் எடுத்துப் பார்க்க , ‘ஸ்வீட் ஹார்ட்’ என்ற ஆங்கில எழுத்துக்களுடன் சங்கீதாப் ஃபோட்டோவும் மின்னி மின்னி மறைய , புன்னகைத்துக் கொண்டவன் விவரம் சொல்லக் காதில் வைக்க ,

 

“அத்தான் … நான் வித்யா பேசுறேன்… அக்கா என்னக் கலர் சேலைக் கட்டணும்னு உடனே கேளுனு சொன்னா….”

 

சிறிது நேரம் மெளனமாக கண் மூடிக் கொண்ட அரவிந்துக்கு மூடிய கண்களுக்குள் வித்யாவும் தெரிய … மறுமுனையில்,

 

“அத்தான் … அத்தான்…. கேட்கல….” என்ற அவளின் குரலும் கேட்க….அவளின் அத்தான் என்ற அழைப்பில் மெய் மறந்தவன் ,

 

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க

மூக்கின் நுனி மர்மம் சேர்க்க

கள்ளத்தனம் ஏதும் இல்லா

புன்னகையோ போகன்வில்லா

 

அரவிந்த் விழிகளுக்குள் இருந்த வித்யாவிடம் அலைபேசி வழியாக சொல்ல … இப்போது மறுபுறம் அமைதி … ..

 

மெளனத்திலயே அவளை அறிந்துக் கொண்டவன் ,

 

[the_ad id=”6605″]

 

“அண்ணி என்ன கலர் போடணும்னு சிலம்பாடிட்டு இருக்கிற திலீப் வந்து சொல்லுவான்…. இந்த அத்தான் உனக்கு கலர் சொல்றேன்…. பிங்க் …. பிங்க் கலர் போட்டுட்டு வா …. உனக்கு ரொம்ப அழகா இருக்கும் …..” இப்போதும் பதிலில்லாது இருக்க ,

 

“இப்போ நான் பேசுறத கேட்கிறனா ‘உம்’ சொல்லு , இல்ல கேட்கலப் பேச பிடிக்கலனு தோணிச்சுனா ‘உம்ம்மா’ சொல்லு ”

 

என்றுப் புன்னகைத்துக் கொண்டே சொல்ல , மறுபுறம் வேகமாக , ‘ம்’ என்றாள் ,

 

“ம்…சொன்னியா உம்ம்மா சொன்னியா”

 

வித்யாவிற்கு பயத்தில் அழுகை வருவது போல் இருக்க ,

 

“நான் ம் சொன்னேன்.. வருண்ணா” என்று சொல்ல ,

 

அந்தக் குரலில் அவளை மேலும் சீண்ட மனமில்லாது ,

 

“அதென்ன வருண்ணா , திலீப் உனக்கு அத்தான்னா நானும் அத்தான் தான் … சோ இனி அத்தான் அப்படினு ஸ்வீட்டாக் கூப்பிடுற ….”

 

“ம்” என்றவளிடம் , ” நான் சொல்ற எதுவும் கட்டாயமில்ல , ஆனா ஒன்னு …நிஜமா உன்னைப் பார்க்க மட்டும் தான் இப்பவே இங்க வந்தேன். இல்லனா திலீப் கல்யாணத்தன்னைக்கு வர்றதா இருந்தேன்…. இப்ப நான் கல்யாணம் வரைக்கும் இங்க இருக்கிறதும் ,இல்ல நாளைக்கே கிளம்புறதும் உன் கைல தான் இருக்கு…”

 

” என் கைலயா … ” என்றவளிடம்,

 

“ஆமா…. நீ நான் சொன்ன பிங்க் கலர் டிரஸ்ல வந்தா கல்யாணம் வரை இங்க தான் , நீ போட்டுட்டு வரலனா , நாளைக்கு நைட்டே கிளம்பிடுவேன். உன்னை எந்த வகையிலும் தொந்திரவு பண்ண மாட்டேன்….. நிழலா ஃபோட்டோலப் பார்த்த ஈர்ப்ப விட, நேர்ல உன்னைப் பார்த்ததும் … எனக்கு சொல்லத் தெரியல … அதுவும் இப்படி உன்கிட்ட ஃபோன்ல பேசுறதே … எப்படிச் சொல்ல… ” என நிறுத்தியவன்,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!