Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருப்பு நிலா Episode-2

அத்தியாயம் 2

சார், இது இனி எனக்கு தேவைப்படாது. நீங்க வச்சுக்கோங்க என்று தமிழரசன் கழுத்தில் அவர் கொடுத்த ஸ்கார்ப்பை போட்டு விட்டாள் ரசிகா. அவர் புன்னகையுடன், “எனக்கு ஒரு உதவி செய்றியாம்மா?” என்று கேட்டார்.

என்னது சார்?

என்னோட பிரபாவோட மனைவி உடல்நலமில்லாமல் இருக்காங்க. நீ ஃபீரியா இருக்கும் போது ஏதாவது பேசுறீயா? செவிலியர் அப்பாயின்ட் பண்ணா ரொம்ப நேரம் தனியா பேச தயங்குறாங்க. நீ பேசுறது அவளுக்கு கேட்கும். ஆனால் அவளால் பதில் சொல்ல முடியாது என்றார் தமிழரசன்.



Advertisement

ஓ.கே சார், பேசணும் அவ்வளவு தான. நான் பார்த்துக்கிறேன். அப்புறம் அம்மா பசங்க கொஞ்சம் சேட்டை பண்ணுவாங்க. பார்த்தும்மா..நாங்கள் யாரை போட்டாலும் எப்படியாவது வெளிய அனுப்பிடுறாங்க. கவனமா இரும்மா என்றார் அவர்.

ஓ.கே சார் என்று அவர் சொல்ல, ஆதியோட பக்கத்து அறை தான் பசங்க அறை. இனி பசங்களோட முழு பொறுப்பும் நீ தான். பசங்க அறைக்கு அருகே இருந்த அறைக்கு இந்த பொண்ணை கூட்டிட்டு போங்க என்றார்.

நாளையிலிருந்து பார்த்துக்கோம்மா. தலைவலி அதிகமாக இருந்தால் மறு நாளில் இருந்து கூட பார்க்கலாம் என்றார்.

Advertisement

“சார், இப்ப பசங்களையும் உங்க வொய்ஃப்பையும் பார்க்கலாமா?” என பிரபாகரனை பார்த்துக் கேட்டாள்.

Advertisement

இப்ப பசங்க தூங்கிருப்பாங்களே? பிரபாகரன் சொல்ல, சும்மா எட்டி மட்டும் பார்த்துட்டு வரவா? குட்டிப் பொண்ணு நீயும் வர்றீயா? மெல்லினாவை கேட்டாள்.

குட்டிப் பொண்ணா? இந்த வருசம் என்னோட பள்ளிப்படிப்பு முடியுது. குட்டிப்பொண்ணுன்னு சொல்லாத. நான் அங்க வந்து அடி வாங்கவா? என்னால முடியாது. நீயே பார்த்துக்கோ என்றாள் மெல்லினா.

ம்ம், ஓ.கே என்று அறைப்பக்கம் சென்றாள் ரசிகா. அனைவரும் அவளை பார்த்தனர்.

Advertisement

அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று ஆடையை மாற்றி விட்டு  பக்கத்தில் இருந்த அறையை பார்த்தாள். கதவு திறந்து இருக்க மெதுவாக எட்டி பார்த்தாள். ஆதிரேயன் தூங்கிக் கொண்டிருந்த தன் குழந்தைகளின் அருகே படுக்கையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். பின் எழுந்து அவர்கள் நெற்றியில் முத்தமிட்டு அவன் வெளியே வர, வெளியே நின்று கொண்டிருந்த ரசிகாவை பார்த்து, இங்க என்ன செய்ற? என்று அவன் கேட்டான்.

“சார், நான் பசங்களை பார்த்துட்டு வாரேன்” என்று அவன் முகத்தை நிமிர்ந்து கூட பாராமல் உள்ளே சென்றாள். குழந்தைகள் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து படுத்திருக்க கண்ட ரசிகா புன்னகையுடன் இருவர் அருகே அமர்ந்தாள்.

இவள் என்ன செய்கிறாள்? என்று ஆதியும் அவளை பார்த்தான். இருவரும் ஒரே போல் இருந்தனர். லிதிக்கு மட்டும் அவள் அம்மா போல் கன்னத்தில் மச்சம் இருக்கும்.

நிது வாயில் கையை வைத்து தூங்கிக் கொண்டிருக்க, கையை எடுத்து விட்டு அவளது துப்பட்டாவால் நிது கையை துடைத்து விட்டு, கையை லிது மேலே வைக்க, இருவரும் அசைந்தனர். வேகமாக நகர்ந்தாள் ரசிகா. பின் அறையை பார்த்தாள். விளையாட்டுப் பொருட்கள் சிதறி கிடந்தது. அதனை ஒழுங்கான முறையில் அடுக்கி வைத்து விட்டு மீண்டும் அவர்களிடம் அமர்ந்து அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தவள் கண்கலங்கியது.

வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு, சன்னருகே சென்று இயற்கை காற்றை சுவாசித்து சாரி விபு என்றாள். ஆதிக்கு இவள் வருத்தத்தில் இருக்கிறாள் என்று மட்டும் நன்றாக தெரிந்தது. அவன் சென்றான்.

சற்று நேரத்தில் ரசிகாவும் வெளியே வர, மெல்லினா தன் நண்பர்களிடம் ரசிகா பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள்.

“குட்டிப்பொண்ணு, என்னோட கதையை தான சொல்ற?” உன்னோட ப்ரெண்ட்ஸா? என்று ரசிகா கேட்க, “எனக்கு தான் உன்னை பிடிக்கலைன்னு சொன்னேன்ல்ல. சும்மா தொந்தரவு பண்ணாத” என்று நண்பர்கள் லயனில் இருப்பதால் அதிகமாகவே திட்டினாள்.

“ஓ.கே பேசு” என்று ரசிகா அவளை திரும்பி பார்த்துக் கொண்டே சமையலறை பக்கம் வந்தாள். சீதா வேலையில் இருக்க, நான் உங்களை அம்மான்னு கூப்பிடலாமா? எனக் கேட்டாள்.

கூப்பிடும்மா.

அம்மா, அப்பா இல்லாம அண்ணா தான் வளர்த்தாராம்மா? சீதா கேட்க, ஆமாம்மா. அண்ணாவுக்கும் அண்ணிக்கும் அப்பொழுது தான் திருமணம் முடிவாகி இருந்தது. நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்பாவுக்கு திடீர் விபத்து. அம்மாவும் அப்பா இறந்தது தாங்க முடியாமல் அட்டாக் வந்துருச்சு. இருவரும் காதல் திருமணம்.

இந்த விபத்தால் என்னோட அக்காவும் உறவுகளும் அண்ணா கல்யாணத்தை நிறுத்த சொன்னாங்க. ஆனால் அம்மா, அப்பா பார்த்து முடிவான பொண்ணு என்பதால் அம்மா, அப்பா தான் இல்லை. எனக்கு இந்த அண்ணி வேணும்ன்னு நான் தான் அடம் பண்ணேன். அண்ணாவுக்கும் அண்ணியை பார்த்தவுடனே பிடித்து விட்டது. ஆனால் அண்ணிக்கு என்னை பிடிக்காமல் போச்சு.

நான் என்னோட அப்பா மாதிரி. ஆனால் அம்மா நல்ல கலர். எங்க வீட்லயே நான் மட்டும் தான் கருப்பா இருக்கேன். அண்ணா பசங்களும் எல்லாரும் கலரா தான் இருக்காங்க. அதனாலே அண்ணிகள் என்னை ஒதுக்கி வைக்க ஆரம்பிச்சாங்க. ஒதுக்கி வைத்தாங்களே தவிர நல்லா பார்த்துப்பாங்க. பசங்க படிப்புக்கு பணம் பத்தலை. அதுக்காக அண்ணி இப்படி செய்வாங்கன்னு நினைக்கலை என்று கண்கலங்கினாள் ரசிகா.

விடும்மா, இங்க எல்லாருமே நல்லவங்கம்மா. வீட்டுக்குள்ள இருக்கும் பிரச்சனையால் அதிகமா பேச்சு இருக்காது அமைதியாக தான் இருக்கும் என்றார் சீதா.

சின்னப்பசங்க இருக்கிற வீடு அமைதியா இருக்குமா? ரசிகா கேட்க, ஆமாம்மா. புள்ளைங்கல்ல பத்தி சொல்லுங்களேன். அவங்க பெயர் என்ன?

பொண்ணுங்க பேரு லிதியா, நிதியா. பால், பிஸ்கட், பால் சாதம் மட்டும் தான் சாப்பிடுவாங்கம்மா. அதுவும் அவங்களுக்கு விருப்பமிருந்தால் மட்டும் தான்.

பசங்க உடம்பு என்னாவது? அவள் கேட்க, அம்மான்னு ஒருத்தி இருந்தால் பிள்ளைங்க இப்படி இருப்பாங்கல்லா?

அம்மா, நாளையிலிருந்து பசங்களுக்கு வேண்டியதை நானே செய்து கொடுக்கிறேன். அம்மா ஆதி தம்பி மாதிரி அமைதியா இருக்க மாட்டாங்க. மண்டைய உடைச்சிருவாங்க என்று சொல்ல,

அம்மா, என்னோட அண்ணனுக பசங்களோட சேர்ந்து வளர்ந்தவ..இல்லை வளர்த்தவ. மூவரும் என் கையில் இருந்து வளர்ந்தவங்க. இனி  பொண்ணுங்கல்ல பத்தி யாருமே கவலையே படாதீங்க. நான் பார்த்துக்கிறேன். இப்ப தான் பார்த்துட்டு வாரேன். ரொம்ப ரொம்ப க்யூட்டா இருக்காங்க. ஐ லவ் ஹெர்..

“இருநாள் வரை இங்க தாக்கு பிடிக்கிறாயான்னு பார்க்கலாம்” என்று சீதா புன்னகைக்க, இரு நாள் என்ன? “ஆதி சார் பசங்க அவர் பின்னாடியே அப்பா அப்பான்னு சுத்தப் போறாங்க பாருங்க” என்றாள் சவாலாக.

அமைதியான வெகுளியான பொண்ணா தான் உன்னை நினைத்தேன். நீ வீர தமிழச்சி அளவுக்கு பேசுற.

எனக்கு சின்னப்பசங்கன்னா ரொம்ப பிடிக்கும். எனக்கு நண்பர்கள் அதிகமாக இல்லை. உறவுகள் இருந்தும் பெரியதாக நான் பேசுவதில்லை. என் உலகமே விபுதன், ஆரவ், யோகிதா. என்னோட அண்ணன் பசங்க தான் என்று கண்ணீரை துடைத்து, சோ நீங்க பாப்பாக்களை பற்றி கவலையே படாதீங்க.

ஆதி சார் அம்மா அறை எங்க இருக்கு? ரசிகா கேட்க, அவர் அறையை வருத்தமாக காட்டினார். தண்ணீரை மடமடவென குடித்து விட்டு சவிதா அறைக்கு சென்றாள் ரசிகா. பிரபாகரன் கண்ணீருடன் தன் மனைவி கையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

சார்? என்று இவள் அழைக்க, ரசிகாவை பார்த்து வாம்மா என்று அழைத்தார். பின் தன் மனைவியை பார்த்து, இந்த பொண்ணுக்கு உன்னிடம் பேசணுமாம் சவி. தினமும் பேசணுமாம். நீ பேசுவேல்லம்மா..என்று கேட்டார்.

அம்மா, என்னோட பெயர் ரசிகா. நான் உங்க பேத்திகளை பார்த்துக்க வந்துருக்கேன். என்னோட ஊர் சென்னை. ஒரு வேலையாக இங்கே வந்தேன். ஆனால் உங்கள் வீட்டிற்கு உங்களை சந்திக்கவே கடவுள் என்னை அனுப்பி வச்சிருக்கார். உங்க வீட்ல எல்லாரும் நீங்க பேசணும்ன்னு எதிர்பார்க்குறாங்க. ஆனால் நீங்க தான் பேசவே மாட்டேங்கிறீங்களே? என்று உரையாடுவது போல் பேச்சை தொடங்கினாள்.

ஓ..அப்படியா? அதான் பேசாமல் தூங்குறீங்களா? அப்படின்னா சீக்கிரமே அவங்க உங்களை பார்க்க உங்கள் அறைக்கு வருவாங்க. உங்களுடன் பேசுவாங்க. அம்மா..நீங்க தான் சொல்லி இருக்கீங்க? கண்டிப்பாக எல்லாரிடமும் நீங்க பேசணும்.

நான் உங்களிடம் அவங்கள கூட்டிட்டு வாரேன். நான் முதல்ல நல்லா பழகிட்டு அப்புறம் உங்களிடம் அழச்சிட்டு வாரேன். ஓ.கே வா? என்று சவிதா கையை தூக்கி விரல்கள் அனைத்தையும் மடித்து அவள் கையோடு இடித்துக் கொண்டாள். பிரபாகரன் ஆச்சர்யமாக அவளை பார்த்தார்.

அவள் பேசி விட்டு, நல்லா தூங்குங்கம்மா. நானும் தூங்கணும். காலையில நம்ம டீலுக்கான வேலையை ஆரம்பிக்கிறேன் என்று சொல்லி விட்டு சவிதா கையை படுக்கையில் வைத்து விட்டு வெளியே வந்தாள். மெல்லினாவும் இவளது சைகையை வெளியே இருந்து பார்த்து விட்டு ரசிகாவை திட்ட காத்திருந்தாள்.

ரசிகா வெளியே வரவும் என்னோட அம்மாவை நீ என்ன ஜோக்கராக்கிறியா? கத்தினாள். பிரபாகரன் அவர்களிடம் வர, ஆதியும் வெளியே வந்து மேல் நின்று இவர்களை பார்த்தாள்.

“இரும்மா..சொல்ல வர்றத கேளு” ரசிகா பொறுமையாக சொல்ல, உனக்கு பெரிய இவன்னு நினைப்பா? எங்க அம்மாவே இந்த நிலைமையில இருக்காங்கன்னு எல்லாரும் கஷ்டத்தில் இருக்கோம் என்று அவள் பேசிக் கொண்டே செல்ல, ரசிகா அமைதியாக கையை கட்டிக் கொண்டு முறைத்து பார்த்தாள்.

என்னையே முறைக்கிற? மெல்லினா ரசிகாவை கன்னத்தில் அறைந்து விட்டாள். மெல்லினா..என்று பிரபாகரன் கத்தினார்.

சார், ஒரு நிமிஷம் என்று சமையலறைக்குள் சென்று தண்ணீரை அருந்தி விட்டு வெளியே வந்து, உன்னோட அம்மாவை நான் ஏதும் செய்யலை. டாக்டர் சார் என்ன சொன்னார்? உன்னோட அம்மாவுடன் பேசணும்ன்னு தான சொன்னார். அதை தான் செய்தேன்.

இப்ப நீ என் முன்னாடி இருக்க? ஆனால் காய்ச்சலா இருக்குன்னா. அந்த நேரம் உனக்கு தேவையானதை அமைதியாக செய்து விட்டு போறது பெஸ்டா? இல்லை உனக்கு ஒன்றுமில்லை. நாளை காய்ச்சல் விட்டுரும். உன் நண்பர்களை பார்க்க பள்ளிக்கு போயிடுவன்னு  ஆறுதல் சொல்லிக் கொண்டே மருந்தளிப்பது பெஸ்டா? சொல்லு.

நாள் முழுவதும் நீ உன்னை பற்றியே உன் அம்மாவிடம் பேசுவதை விட, இன்று பள்ளியில் இதெல்லாம் நடந்தது என்று நீ சொல்லும் போது அவங்க என்ன சொல்லுவாங்கன்னு யோசித்து, அவங்க உன்னிடம் பேசுவது போல் பாவித்து அவர்களுக்கு பதிலளித்தாய் என்றால்..உன் அம்மா இந்த ஐந்து வருடமாக இப்படி படுக்கையிலே இருந்திருக்க மாட்டாங்க.

அவங்களுக்கு நாம் பேசுவது புரியும்ன்னா அவங்கள எமோஸ்னலா நாம தான் ரியாக்ட் பண்ண வைக்கணும். அவங்க பொண்ணு தான நீ. உன் அம்மாவுக்கு பிடித்தது, பிடிக்காதது உனக்கு தெரியாதா?

பேசண்ட்கிட்ட பேசுற மாதிரி பேசிக்கிட்டும் அழுதுகிட்டும் இருந்த அவங்க இன்னும் ஆள்மனதிற்குள் தான் போவாங்க. அவங்கள குடும்பத்தில எல்லாரும் சேர்ந்து தான் எழ வைக்கணும் என்று பிரபாகரனை பார்த்து, சாரி சார், நான் பேசியதில் ஏதாவது தவறாக தெரிந்ததுன்னா என்னை மன்னிச்சிருங்க என்று ரசிகா, சீதாவை பார்த்து அம்மா பசிக்குது என்றாள்.

இந்தாம்மா..எவ்வளவு பெரிய விசயத்தை சொல்லி இருக்க? என்று மகிழ்ச்சியுடன் அவளுக்கு சாப்பிட எடுத்து வைக்க, நானா போட்டுக்கிறேனே? என்றாள்.

இல்லம்மா.

அம்மா, எனக்காக யாரும் வேலை செய்வது எனக்கு பிடிக்காது என்றாள். அனைவரும் அவளை பார்த்துக் கொண்டே யோசனையுடன் அவரவர் அறைக்கு சென்றனர்.

காலை பொழுது புலர்ந்தது. மெல்லினா வெளியே வந்து, ம்ம்..ஸ்மைல் சூப்பரா இருக்கே என்று சமையற்கட்டு பக்கம் சென்றாள். பிரபாகரனும், வீட்டு வேலைக்காரர்களும் வெளியே நின்று எட்டி பார்த்தனர்.

என்ன பண்றீங்க? என்று சீதாம்மாவிடம் மெதுவாக வந்து மெல்லினா கேட்டாள்.

நம்ம வீட்டு எஜமானிகளுக்காக கேக், பால் கொழுக்கட்டை, ஜெல்லி எல்லாத்தையும் ரசிகா அவளாகவே செய்யுறா? என்றார் அவர்.

ஓ..அதான் மணக்குதா? என்று மெதுவாக ரசிகா பின்னே சென்று முன்னே இருந்த ஸ்பூனை எடுத்து பால் கொழுக்கட்டையில் வைத்தாள். ரசிகா அவள் கையை பிடித்து, வச்சிட்டு போ. ரொம்ப முக்கியமான வேலைக்காக தான் செஞ்சிருக்கேன்.

இதை எதுக்காக செய்வாங்க? சாப்பிட தான செய்வாங்க?

நீ தான என்னை பிடிக்கலைன்னு சொன்ன? நான் செய்ததை சாப்பிட வந்துருக்க? ரசிகா கேட்க, மெல்லினா பொறுமியவாறு வெளியே வந்து அமர்ந்தான்.

எனக்கு தேனீராவது எடுத்துட்டு வாங்க என்றாள். பிரபாகரன் புன்னகையுடன் தன் மகள் அருகே வந்து அமர்ந்தாள். மெல்லினா தன் அப்பாவை முறைத்து விட்டு நகர்ந்து அமர்ந்தாள்.

தன் அண்ணா வாழ்க்கை கெட, அப்பாவும் சின்ன அண்ணனும் தான் காரணமென்று கோபமாக இருக்கிறாள். ஆதி தான் திருமணம் முடிந்த பின் எல்லாரிடமும் பேச்சை குறைத்து விட்டான்.

ஆதிரேயன் எப்பொழுதும் எழுந்தவுடன் கீழுள்ள போனிற்கு வாய்ஸ் கொடுப்பான். அது ஆட்டோமெட்டிக்காக ஆன் ஆகும் போன். ஆதலால் அழைப்பு வந்தவுடன் தேனீரை எடுத்துக் கொண்டு சீதா சென்று விடுவார். மற்ற ஆட்கள் சமையல் வேலையை கவனித்து கொள்வர். அவன் ஆபிஸிற்கு தயாராகி தான் கீழே வருவான்.

இப்பொழுது வேலையை முடித்து விட்டு, ட்ரேயில் ரசிகா செய்ததை அடுக்கினாள். ஒரு தம்ளரில் வெதுவெதுவென பால், ரெட் ஜெல்லி, பால் கொழுக்கட்டை, ஸ்ட்ராபெரி கேக், அதன் பின் சுண்டல், பயறு வகைகளையும் அடுக்கி வைத்திருந்தாள். அவளது அறையின் முன் வைத்து விட்டு, ஒரு தட்டில் அனைத்தையும் கொஞ்ச கொஞ்சமாக எடுத்துக் கொண்டு குட்டிப்பசங்க அறைக்கதவை திறந்து உள்ளே சென்றாள்.

வெளிய போ..வெளிய போ..என்று தலையணை தூக்கி அடித்தனர் நம் குட்டி ஏஞ்சல்கள் லிதியாவும் நிதியாவும்.

கொண்டு வந்த உணவை பத்திரப்படுத்தி ஓரமாக வைத்து விட்டு, அடிக்கும் குழந்தைகளை நெருங்கினாள் ரசிகா. அதற்குள் குதித்து ஓடிய லிது, இந்தா நிது “மேல போடு” என்று ஓர் பாக்கெட்டை தூக்கி போட்டாள்.

பாக்கெட்டை கடித்து இழுத்த நிதுவை தூக்கினாள் ரசிகா. நிதுவும் பாக்கெட்டில் இருந்த மைதாவை ரசிகா தலை, முகம் என மொத்தமாக கொட்டினாள்.

ஓ..உங்களுக்கு விளையாடணுமா? என்று நிதுவை கையை வைத்தவாறு வாயில் சென்ற மாவை ஊதி வெளியே தள்ளி விட்டு தலையை உலுக்கினாள். அது நிது மேலே பட, அவள் அழ ஆரம்பித்தாள்.

அச்சோ, பாப்பா மேல பட்டிருச்சே என்று நிது மேல் இருந்த மாவை தட்டி விட்டாள் ரசிகா. விளையாட்டு பொருளை லிது தூக்கி எறிய ரசிகாவிற்கு அடிபட்ட தலையிலே பட்டது. பட்ட இடத்திலே படவும் நிதுவை இறக்கி விட்டு தலையை பிடித்தாள் ரசிகா. பசங்க மேலும் பொருட்களை தூக்கி எறிந்தனர். கட்டிலிருந்து இரத்தம் வந்தது.

ஆனாலும் அவர்கள் போடும் பொருட்களிடமிருந்து தப்பித்து அவர்களை பிடித்து பாலை கொடுக்க, நிது ரசிகா முகத்திலே சட்டென ஊற்றி விட்டாள். அப்பொழுதும் பொறுமையாக பால் வேண்டாமா? என்று அவளிடம் பால் கொழுக்கட்டையை கொடுக்க, அதை லிது வாங்கினாள்.

ஹை..குட் பாப்பா என்று ரசிகா கை தட்ட, குட்டீஸ் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அவள் மீது ஊற்ற, அவள் நகர்ந்தாள். அனைத்தும் கீழே கொட்டியது. கீழே கிடந்த கொழுக்கட்டைகளை எடுத்து இருவரும் ரசிகா மீது தூக்கி எறிய, அவள் அவர்களிடம் தப்பித்துக் கொண்டே பின்னே வந்து ஆபிஸிக்கு தயாராகி வந்த ஆதிரேயன் மீது இடித்தாள். பின் பதட்டமாக அவள் நகர, பசங்க தூக்கி போட்டது ஆதி மீது அவனது ஒயிட் ஆடையில் பட்டது.

“மை காட்! என்ன செய்றீங்க?” என்று சத்தமிட்டுக் கொண்டு ரசிகாவை பார்த்து, “ஏய் பிளட் வருது” என்று அவளிடம் ஆதிரேயன் வர,  சத்தம் கேட்டு மேலே நின்று கொண்டிருந்த இருவரையும் கீழிருந்தவர்கள் பார்த்தனர்.

பிரபாகரன் எழுந்து மேலே வர, சார் வேண்டாம். எனக்கு ஒன்றுமில்லை என்றாள் ரசிகா. ஆதிரேயன் கோபமாக பசங்க அறைக்குள் சென்று சத்தமிட, லிதுவும் நிதுவும் ஆதிரேயன் சத்தத்தில் பயந்து போர்வைக்குள் ஒளிந்து கொண்டனர்.

அவன் கோபமாக போர்வையை உருவி தூக்கி எறிந்தான். இருவரும் அவனை பயத்துடன் பார்க்க, உங்கள பார்த்துக்க ஆள் வச்சா அவங்கள இப்படி தான் கஷ்டப்படுத்துவீங்களா? என்று சத்தமிட்டான்.

ரசிகா அவன் முன் வந்து, சார் என்ன பண்றீங்க? சின்னப் பசங்ககிட்ட இப்படி பேசாதீங்க என்று அவளும் சத்தமிட்டாள்.

ஏய், உனக்காக தான பேசுறேன். இதுவரை மத்த வேலையெல்லாம் செய்து தான் எல்லாரையும் விரட்டினாங்க. இப்ப இரத்தம் வர வைக்கும் அளவுக்கு அப்படி என்ன இந்த வயசுல என்று ஆதிரேயன் பேச, கோபமாக போதும் நிறுத்துங்க என்று கத்தினாள் ரசிகா.

பிரபாகரன் அறைக்குள் வர, இரத்தம் எனக்கு தான வருது. பரவாயில்லை. உங்க பசங்க விளையாடும் போது கீழ விழுந்தால் அடிபடுமே அதுபோல் நான் எடுத்துக்கிறேன். சும்மா பசங்கள திட்டாதீங்க. உங்களுக்கென்ன? உங்க ஆடையில் பட்டது தானே கோபம்? அதை கழற்றி கொடுங்க. நான் வாஷ் பண்ணி தாரேன் என்று அவன் பிள்ளைகளுக்காக ரசிகா பேச, அவன் அவளை பார்த்துக் கொண்டே நின்றான்.

லிதுவும் நிதுவும் அழுது கொண்டே மீண்டும் படுத்துக் கொண்டனர்.

“அம்மா, நீ வாம்மா. மருந்து போட்டுக்கலாம்” பிரபாகரன் ரசிகாவை அழைத்தார்.

“சார், பசங்க பொறுப்பு நான் தானே? எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். நீங்க எல்லாரும் கிளம்புங்க” என்று இருவரிடமும் சத்தமிட்டாள்.

ஆதிரேயன் கோபமாக அவனறைக்குள் செல்ல, பிரபாகரனும் அவன் பின் சென்றார். அவர்கள் சென்ற பின் ரசிகா பசங்க அருகே வந்து அமர்ந்தாள். அவர்கள் அழுகையை நிறுத்தாமல் இருக்க, மெல்லினாவும் சீதாம்மாவும் மனம் கேட்காமல் வந்தனர்.

அச்சோ, அப்பாவை பார்த்து பயத்துட்டீங்களா? இது ஒரு கேம் தெரியுமா? நானும் என் வீட்டில் ஆரவ், யோகிதா பாப்பாவுடன் விளையாடுவேன். இப்ப அப்பா கூட விளையாடினேன். உங்க அப்பாவும் தான் விளையாடினார். அவர் கோபமெல்லாம் நடிப்பு தெரியுமா? நான் வேண்டுமானால் ப்ரூஃப் பண்ணவா? என்று கேட்டுக் கொண்டே மெல்லினாவை பார்த்து கண்ணை காட்டி ஆதிரேயனிடம் சொல்ல சொன்னாள். மெல்லினாவும் ஆதிரேயன் அறைக்கு சென்று அவள் கூறியதை சொன்னாள்.

“இந்த பொண்ணு வித்தியாசமா இருக்கால்லப்பா?” என்று ஆதிரேயன் கேட்க, ஆமாப்பா. அப்படி தான் தெரியுது. அதுக்காக முழுதாக நம்பவும் முடியாது என்றார் பிரபாகரன்.

நிஜமா அப்பா எங்களுடன் விளையாடினாங்களா? என்று கண்ணீருடன் லிது கேட்டாள்.

ஆமா லிது, அப்பாவுக்கு இத்தனை நாள் விளையாடவே தெரியாம இருந்திருக்காங்க. இனி கண்டிப்பா விளையாடுவாங்க பாரேன்.

நீ யாரு? நிது கேட்க, நான் ரசி. ரசிகா.

நீ எதுக்கு வந்திருக்க?

நான்..என்று யோசிப்பது போல் பாவனை செய்து கொண்டே, நான் இந்த அரண்மனையில் இருக்கும் குட்டி இளவரசிகளை பார்த்துக் கொள்ளும் வேலையாள்.

இளவரசியா?

ம்ம்..என்று எழுந்த ரசிகா, எஸ் பிரின்சஸ் லிதியா, பிரின்சஸ் நிதியா..

நாங்க பிரின்சஸ்ஸா?

ஆமாம் இளவரசியே என்று தலையை குனிந்து நிமிர்ந்து, “உங்களுக்கான சாப்பாடு தயாராக உள்ளது” என்று அவள் சொல்ல, அவளது தலையிலிருந்து இரத்தம் சொட்டி பிள்ளைகள் முன் விழுந்தது.

எல்லாரும் நாங்க செய்வதை பார்த்து திட்டுவாங்க, அடிப்பாங்க. உனக்கு எங்க மேல கோபம் வரலையா? லிது கேட்க, எங்க பிரின்சஸ் விளையாடுறாங்கன்னு மத்தவங்களுக்கு தெரியல. ஆனால் உங்களது விளையாட்டு எனக்கு தெரிஞ்சது. நான் கண்டுபிடிச்சுட்டேனே? என்று ரசிகா சிரித்தாள்.

இப்ப நாங்க அடிச்சாலும் நீ மீண்டும் வர தான் செய்வாயா? நிது கேட்க, நிது, ஷ்..என்று லிது எழுந்து படுக்கை மீது ஏறிக் கொண்டு, அப்படின்னா நீ தினமும் எங்களுடன் விளையாடுவாயா?

அதுக்கு தான வந்துருக்கேன். இப்ப கூட விளையாண்டோமே? கொழுக்கட்டையை பந்தாக்கி தூக்கி எறிந்து?

ஆமா, சோட்டா பீம் விளையாடுவான்ல்ல.

ஹே, எனக்கும் அவனை பிடிக்கும். உங்களுக்கு சுட்கி பிடிக்குமா? என்று கேட்டுக் கொண்டே படுக்கையில் அமர்ந்து லிதுவை அவள் மடியில் அமர்த்தி, பசங்க கார்டூனில் அவளும் ஒன்றினாள். நிதுவும் அவளாக எழுந்து ரசிகா மடியில் அமர்ந்து கொண்டு டோரா புஜ்ஜிக்கும் சென்றனர்.

நாம சாப்பிட்டுக் கொண்டே பேசலாமா? நான் உங்களுக்காக செய்தேன். சாப்பிடலாமா? ரசிகா கேட்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, ரசி ஊட்டி விடுவியா? என்று கேட்டனர். அவள் மகிழ்ச்சியுடன் குழந்தைகளை அணைத்துக் கொண்டாள். அனைவரும் இதை பார்த்து மகிழ்ந்தனர்.

“அது தானே என்னோட வேலை” என்றாள்.

“நீங்க என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க. நான் ரசிகாவிற்கு மருந்து போட்டு விடுறேன்” என்று சீதா உள்ளே வந்தார்.

“அம்மா, நானே போட்டுக்கிறேன். இன்னும் யாரும் சாப்பிடலை. நீங்க சென்று எல்லாரையும் கவனிங்க” என்று ரசிகா சொல்ல, நீயா எப்படி போடுவ? “இதுக்கு முன் எனக்கு அடிபட்டால் நான் தான் போட்டுப்பேன்” என்றாள்.

என்னம்மா சொன்ன? உன்னோட அக்கா, அண்ணன் செய்யமாட்டாங்களா? அவர் கேட்க, தடுமாறியவாறு அப்படி இல்லை. எனக்கு போட தெரியும். எல்லாரும்  ஆபிஸ் கிளம்பணும் என்றாள்.

ஆதிரேயன் உள்ளே வந்தான். ரசிகா எழுந்து நகர்ந்து நின்றாள். ஆனால் லிதுவும் நிதுவும் அவளிடம் வந்தனர்.

லிது, நிது அப்பாகிட்ட போங்க.

இல்ல. அப்பா திட்டுவாங்க என்றாள் நிது.

ரசிகா இருவரையும் ஆதிரேயனிடம் அழைத்து வந்தாள். லிது, நிதுவை தூக்கிய ஆதியும், ரசிகா சொன்னதை வைத்து, நம்ம விளையாட்டு நல்லா இல்லையா? அப்பா கோபப்படுவது போல் நடித்தேன். சும்மா விளையாட்டும்மா என்றான் அவன்.

அப்படின்னா, எங்களுடன் தினமும் விளையாட வருவீங்களா? என்று கேட்டாள் நிது.

நானும் வரலாமா? மெல்லினா வர, பிரபாகரனும் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார். ஆதிரேயனின் பின்னே நின்ற ரசிகா தம்செட் காட்ட, ஆதிரேயன் பின்னே திரும்பி அவளை பார்த்தான். ஒன்றும் தெரியாதது போல் அப்பாவியாக நிற்பது போல் அவன் முன் இருந்தாள். ஆதிரேயன் புன்னகையுடன் திரும்பி, தன் மகள்களுக்கு முத்தத்தை கொடுத்து விட்டு, அப்பா ஆபிஸ் போயிட்டு வாரேன் என்று அவர்களை இறக்கி விட்டான். அவர்கள் ரசிகாவிடம் வந்து நின்றனர்.

ரசி, நீ குளிச்சிட்டு வந்து எங்களுக்கு ஊட்டி விடு என்று லிது சொல்ல, “உத்தரவு லிது, நிது இளவரசியே” என்று அவள் சிரித்தாள். ஆதிரேயனுக்கு மனதில் குடி கொண்ட ஓர் பாரம் இறங்கியது போல் இருந்தது. அவனுக்கு மட்டுமல்ல அனைவர் முகத்திலும் புன்னகை. மெல்லினா கூட ரசிகாவை பாராட்டினாள்.

ஆதி சார், ஒரு நிமிசம் உங்க அம்மாவை பார்த்துட்டு போங்க என்றாள் ரசிகா சத்தமாக. அவள் சொல்ல வருவதை புரிந்து புன்னகையுடன் அவன் அம்மா அறைக்கு சென்று பேசினான் ஆதிரேயன்.

ரசிகா பற்றியும், தன் குழந்தைகளை வெகுநாட்கள் கழித்து அள்ளிக் கொஞ்சியதை மகிழ்வுடன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டே மீண்டும் கம்பெனியில் இன்று அவனுக்குள்ள சவால்களையும் பகிர்ந்து விட்டு புன்னகையுடன் சென்றான். அவன் பின் வந்த பிரபாகரன், மெல்லினாவும் அவ்வாறே செய்தனர். மெல்லினாவிற்கு ரசிகாவை பிடித்து விட்டது. ஆனால் வெளியே காட்டிக் கொள்ள விருப்பமில்லாமல் இருந்தாள்.

ரசிகா குளித்து, மருந்திட்டு அவள் செய்த எல்லாவற்றிலும் கொஞ்ச கொஞ்சமாக பேசிக் கொண்டே ஊட்டி விட்டாள். குட்டீஸ்ஸிற்கு அவளை பிடிக்க ஆரம்பித்தது.

இரவில் வீட்டினுள் நுழைந்த ஆதிரேயன், பிரபாகரனுக்கு நம் வீடு தானா? என நின்று விட்டனர். லிது, நிது, மெல்லினா, ரசிகா, வேலையாட்கள் அனைவரும் விளையாண்டு கொண்டிருந்தனர்.

ஆதிரேயனை பார்த்த நிது, அப்பா என்று அவனிடம் ஓடி வந்தாள். அவன் கண்ணில் கண்ணீர் பெருகியது. அவன் கண்ணீருடன் மண்டியிட்டு அமர்ந்தான். நிது முதலில் அணைக்க லிதுவும் ஓடி வந்து அணைத்துக் கொண்டாள். மெல்லினா தயங்கிக் கொண்டே அவனிடம் வந்தாள். ஆதிரேயன் கண்ணசைக்க, அண்ணா என்று அவனை கட்டிக் கொண்டாள் மெல்லினா. எல்லாரும் அவர்களை மகிழ்வுடன் பார்க்க, ரசிகா புன்னகையுடன் அவர்களை பார்த்துக் கொண்டே அறைக்கு சென்றாள். ஆதிரேயனும் பிரபாகரனும் அவளை பார்த்தனர்.

பிரபாகரன் அவள் பின்னே சென்றார். ஆனால் அவளோ அறையை பூட்டிக் கொண்டு தன் பர்ஸ்ஸை எடுத்து தன் குடும்பத்தை பார்த்து அழுதாள். அவள் அழுவது பிரபாகரனுக்கு தெரியலை.

“ரொம்ப நன்றிம்மா” என்று அவர் அழுது கொண்டே சொல்ல, அழுகையை விழுங்கிய ரசிகா, சார் என்னோட வேலையை தான் செய்தேன் என்றாள். அவருக்கு அவள் குரலில் இருந்த நடுக்கம் தெரிந்தது.

ஏதும் பிரச்சனையாம்மா? அவர் கேட்க, நான் உங்க வீட்ல இருக்கும் வரை பாதுகாப்பாக இருப்பேன் என்று சொன்னாள்.  ரசிகா அவள் குடும்பம், கணவன் பற்றி சொன்னதை சிந்தித்துக் கொண்டே அவர் முகம் வாட்டமுடன் வந்து அமர்ந்தார்.

என்னாச்சுப்பா? ஆதிரேயன் கேட்க, தன் பேத்திகள் தன் மகன் மடியில் இருப்பதை பார்த்துக் கொண்டு “ஒன்றுமில்லைப்பா” என்று தன் பேத்திகளை அவர் அழைக்க, அவர்களும் சென்றனர். ஆனால் சற்று நேரத்திலே ரசிகாவை தேடினர் இருவரும்.

ரசிகா, என்னப்பா செய்றா? என்று ஆதிரேயன் சாதாரணமாக கேட்க, அங்கிருந்த எல்லாரும் அவனை பார்த்தனர்.

ஏதும் தப்பா கேட்டுட்டேனா? அவன் கேட்க, இல்லப்பா என்ற பிரபாகரன் சீதாம்மா ரசிகாவை கூட்டிட்டு வாங்க. புள்ளைங்க தேடுறாங்க என்றார் அவர். சீதா ஆதிரேயனை பார்த்துக் கொண்டே சென்றார்.

ரசிகா அனைவரையும் பார்த்துக் கொண்டே வந்தாள். பிரபாகரன் அவளை ஆராய்ந்தார். அவள் எல்லாரிடமும் முன் போல் பேசினாள். சாப்பிட்டு அனைவரும் லிது, நிதுவுடன் விளையாடி விட்டு தூங்க சென்றனர். ஆதிரேயன் தன் குழந்தைகளுடன் அவர்கள் அறைக்கு செல்ல, அவர்கள் ரசிகாவையும் அழைத்தனர்.

அவள் யோசனையுடன் நிற்க, “சரி அவங்கள கூட்டிட்டு போங்க” என்றான் அவன்.

அப்பா, நீங்களும் வர மாட்டீங்களா? நிது கேட்க, சரி சார், “நீங்க பசங்களோட போங்க” என்றாள் அவள்.

ரசி, நீ எங்க போற?” நீயும் அப்பாவும் நாங்க தூங்கிய பின் போங்க” என்றாள் லிது.

“இல்லம்மா, நீங்க உங்க அப்பாவுடன் இருங்க” என்று ரசிகா கையை விட, நிது அழுதாள்.

ரசிகா, நீங்களும் வாங்க என்று அவன் பிள்ளைகளுடன் உள்ளே சென்றான். ரசிகாவும் உள்ளே வந்தாள்.

ரசி, “ஃபேர்ரி டேல் கதை” சொல்றியா? லிது கேட்க, ம்ம்..என்று சொல்ல தயங்கினாள். “நான் கிளம்புகிறேன்” என்று அவன் எழ, லிது அவன் கையை பிடித்து ஆதிரேயனை பார்த்தாள். அவன் ரசிகாவை பார்த்தான்.

“உட்காருங்க சார்” என்று படுக்கையில் அவள் ஏறி குழந்தைகளை இருபக்கமும் அணைத்துக் கொண்டு “சின்ட்ரெல்லா கதை”யை சொன்னாள். பாதியிலே இருவரும் தூங்கி விட்டனர். அவள் நகர்ந்து பசங்களை நேராக படுக்க வைத்து விட்டு ஆதிரேயனை பார்த்தாள். அவனும் சின்னக்குழந்தை போல் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கதையை கேட்டுக் கொண்டே தூங்கி விட்டான்.

சார் என்று ரசிகா, அவனை தட்டி எழுப்பினாள்.

ம்ம்..சாரி என்று எழுந்து அவனறைக்கு சென்றான். அவளும் பசங்க அறைக்கதவை சாத்தி விட்டு அவளறைக்கு செல்ல, மீண்டும் வெளியே எட்டிப் பார்த்த ஆதிரேயன் அவள் உள்ளே செல்லவும் இவனும் படுக்கையில் படுத்து தூங்கினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!