Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 9 2

 

“நீயும் பாப்பாவும் பஞ்சு மிட்டாய் வச்சுட்டு ஒரு ஃபோட்டோல இருந்தீங்க … அப்பவே உனக்கு ஒரு பேரை வைச்சுட்டேன். நீயும் அது போலவே ரொம்ப சாஃப்ட்டா இருக்க அப்ப அப்படி தானேக் கூப்பிட முடியும்… அப்படிக் கூப்பிடுறது பிடிக்கலனா … இப்படிக் கூப்பிடுறேன் …” என அவள் விழி பார்க்க , அவளும் ஆவலுடன் பார்க்க ,

 

“காட்டன் கேண்டி … கேண்டி ….” எனப் புருவம் உயர்த்தி உதட்டினுள் அடக்கிய சிரிப்பில் சொல்ல , அவனது கன்னக்குழிப் பார்த்தவள் மறுபடி நிலம் பார்க்க ஆரம்பித்து விட்டாள்.



Advertisement

 

“என்னையப் பிடிச்சிருக்குனு காட்ட தான இந்த டிரஸ் ல வந்த அப்ப ஏன் பாப்பா பின்னாடி மறைஞ்சு மறைஞ்சு வந்த … ”

 

Advertisement

“பாப்பா ” என யோசித்தவள் சட்டென ஞாபகம் வந்தவளாக , “ஐயோ வருவ மறந்தே போய்ட்டேன்…. நான் வாறேன்..” எனக் கிளம்பப் போனவளைத் தடுத்து ,

Advertisement

 

” நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டுப் போ கேண்டி ..”

 

Advertisement

“அது … அது … வருவுக்கு இப்ப போட்டுருக்க டிரஸ் நீங்கதான் வாங்கி தந்தீங்க சொன்னா … ” என இழுத்த வித்யாவிடம் ,

 

“ஏன் அந்த டிரஸ் அழகா இருக்குல்ல , உனக்கும் வாங்கித் தரட்டுமா…” என ஆவலாகக் கேட்க ,

 

முறைத்த வித்யா , “டிரஸ் அழகா தான் இருக்கு … ஆனா அந்த மாடல யாராவது தங்கச்சிக்கு வாங்குவாங்களா….” இப்போது புரியாது விழித்தவன் ,

 

“ஏன் … என்னாச்சு , ஷிவானிய செலக்ட் பண்ணித் தரச் சொன்னேன் .. கலர் மட்டும் தான் நான் சொன்னேன்….”

 

[the_ad id=”6605″]

 

“ஷிவானி …. யாருங்க அது … ” என விழித்த அனுவிடம் ,

 

“அவ என் ஃபிரண்ட் … ” எனவும் , முகம் சுருங்கிய வித்யாவைப் பார்த்தவன் ,

 

“ஹேய் கேண்டி… அவ என் காலேஜ் மேட் , இப்ப அவளுக்கு கல்யாணமாகி மூணு மாச பேபிக்கூட இருக்கு … இப்ப அதை விடு , நீ இப்ப எதுக்கு டிரஸ் பத்தி சொன்ன … அதைச் சொல்லு எனவும் ,

 

தயங்கித் தயங்கி, தான் அவள் பின்னாலயே சென்றதற்கான காரணம் சொல்லவும் , அரவிந்த் அந்த வைக்கோல் போரில் சாய்ந்து கீழே அமர்ந்து விட்டான்.

 

முதல் பரிசைப் பெற்று மேடையை விட்டுக் கீழே இறங்கிய வருவும் கூட்டத்தில் தோழிகளைத் தேடிக் கொண்டே வர , அவளருகில் வந்த விக்ரம் ,

 

“ஏய் பம்கின் விது அந்த மரத்துக்கடியில இருக்கிறா வா…” என அவளை முன்னால் விட்டு நடக்க ,

 

“விக்ஸ் டப்பா…”

 

“சொல்லு பம்கின்..”

 

“என் பேரைச் சொல்லிக் கூப்பிடு … ”

 

” பேர் தெரிஞ்சா தானேக் கூப்பிட முடியும் …. ”

 

” என்ன என் பேர் தெரியாதா உனக்கு …..” எனப் பேசிக் கொண்டே  சென்றவள் , அங்கு யாருமில்லாததைக் கண்டு   பயந்து திரும்பி ,

 

” இங்க யாருமே இல்ல இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த … ” எனப் பயந்தபடி அவனைத் தாண்டிப் போனவளைக் கைப் பிடித்து நிறுத்த , அவன் கையில் நறுக்கென்று கடித்து விட்டாள்.

 

“ஏய் லூசு…” எனக் கையை உதறியவனிடம் இருந்து விடுபட முயன்றவளை மறுபடி அவள் கடிக்காதபடி முன்புறம் கைகளை ஒரு கையால் இறுக்கிபிடித்துக் கொண்டவன் ,

 

ஆற்றங்கரையோர அரசமரத்தடி பிள்ளையார் கோவில் அருகே அழைத்துச் சென்றான் என்பதை விட இழுத்துச் சென்றான் என்றே சொல்ல வேண்டும்.

 

“உன்கிட்ட எத்தனை தடவைச் சொல்றேன் … இப்படி உடம்பு தெரியற மாதிரி டிரஸ் போடாதனு” என்றவாறே அவள் முதுகில் கை வைத்து அங்கு ஒட்டப்பட்டிருந்த ஒரு பெரிய சவ்வு மிட்டாய் துண்டை அவள் உடலிலிருந்து பிய்த்து எடுத்தான்.

 

அதுவரை அவனிடம் கோபமாக திமிறிக் கொண்டிருந்தவள் , அது எடுக்கப்பட்டதில் வலியோடு அதிர்ச்சியும் தாக்க , அவனிடமிருந்து பின்னால் நகர்ந்துக் கொண்டாள்.

 

அதிர்ச்சியில் நின்றவள் அருகில் சென்றவன் , சில இளைஞர்கள் பேசிக் கொண்டதையும் அவர்களுக்குள் போட்டி வைத்து ஒருவன் அவள் முதுகில் ஒட்டியதையும் தெரிவித்தவன் ,

 

“நான் தடுக்கிறதுக்குள்ள அவன் ஒட்டிட்டான் , நீயும் மேடை ஏறிட்ட … ஆனா அவன் பல்லையும் மூக்கையும் பேத்துட்டுத்தான் வாறேன் . ” எனக் கை முஷ்டியை இறுக்கி காண்பித்தான்.

 

அவன் சொன்ன செய்தியில் கோபமும் வர , மிகவும் அவமானமாக உணர்ந்தவள், மரத்தடி திண்டில் அமராது திண்டின் மீது சாய்ந்து தரையில் அமர்ந்து விட்டாள். கண்ணீரும் வர , அவனையும் பார்க்கத் தயங்கி , முழங்காலிட்டு முகத்தை மறைத்துக் கொண்டாள்.

 

[the_ad id=”6605″]

 

விக்ரமுக்கும் அவளின் நிலை சங்கடத்தை தர,

 

“பம்கின்… நடந்தது நடந்திருச்சு… இதுக்கெல்லாம் வொரி பண்ணாத… அது தான் ஊருக்கு தகுந்த டிரஸ் போடுனு சொன்னேன் … என் தங்கச்சிகளப் பார்த்தல்ல அவங்களும் மாடர்ன் டிரஸ் போடுறவங்க தான். ஆனா இங்க வாறோம்னு தெரிஞ்சா அதுக்கு தகுந்த டிரஸ்ஸ அம்மா போட்டுக்க சொல்லுவாங்க , உங்க அம்மா சொல்லலயா , இல்ல அவங்க சொல்லியும் நீ கேட்கலயா ….” இப்போது கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அவன் முகம் பார்த்தவள் ,

 

“விக்கி அம்மா இருந்தா இதெல்லாம் சொல்லிக் கொடுத்துருப்பாங்களோ…. எனக்கு தான் அம்மா இல்லையே…..”

 

கேட்ட விக்ரமுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை , அவனிடம் வாயாடி ,கோபமாகப் பேசி இப்படியாகப் பார்த்தவளை … இது போல் அழுது பார்க்கச் சங்கடமாக இருந்தது.

 

அதே வேளையில் அங்கு வைக்கோல் போர் மீது சாய்ந்து அமர்ந்தவனைக் கண்ட வித்யா பதற்றமடைந்து அவனருகே சென்று அமர்ந்து,

 

“வருண் …. அத்தான் என்ன ஆச்சு…. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க…. நான் பின்னாலயே போனேன்,நீங்க இழுக்காம இருந்தா அப்படியே வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிருப்பேன். அது…. அவளுக்கு எங்க டிரஸ் எதுவும் செட் ஆகாது ….” என வித்யா விளக்கமளித்துக் கொண்டே செல்ல ….வித்யாவின் கையைப் பிடித்துக் கொண்ட அரவிந்த் , கரகரத்தக் குரலில் ,

 

“பாப்பா சொல்லி சொல்லி உன்னைய ரொம்ப பிடிச்சது கேண்டி… இப்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு , உன்னையப் பார்த்து என் மனச உனக்குப் புரிய வச்சிட்டுப் போகலாம்னு மட்டும் தான் நான் நினைச்சேன். ஆனா இப்ப ….”

 

“எங்க அம்மா இந்த உலகத்தை விட்டுப் போகும் போது என் பாப்பாவுக்கு பத்து வயசு … எனக்கு பதினேழுதான்… பிளஸ் டூ எக்ஸாம் முடிச்சு காலேஜ் போற நேரம் … அப்பாவக் கூடத் தேடல … என்னைய தான் தேடுவா …அப்ப இருந்து அவளுக்கு நான் அம்மாவ மாறிட்டேன். இப்ப அதே போல அவளுக்கு பார்த்து பார்த்து செய்றது நீ தான் …. எனக்கு என்ன சொல்றதுனேத் தெரியல … ஐ லவ் யூ கேண்டி … ஐ லவ் யூ ….” என அவள் கைகளில் முகம் புதைத்துக் கொண்டான்.

 

வருவின் முன் சென்று முட்டிப் போட்டு அமர்ந்தவனிடம் , “ஏன் விக்கி … ஏன் நான் அப்படி என்ன வல்கரா டிரஸ் பண்ணியிருக்கேன் … இங்கப் பார்  கால் தெரியுதுனு கிண்டல் பண்ணின … இப்ப இதுல எங்க என் கால் தெரியுது…. எங்க அண்ணா ஆசையா வாங்கி தந்தது … அவங்களுக்கு அசிங்கமா தெரியாத இந்த டிரஸ் ஏன் உங்க கண்ணுக்கெல்லாம் அசிங்கமாத் தெரியுது… நீ சொன்னது போல சிட்டில வளர்ந்ததுல எனக்கு இதெல்லாம் தெரியல தான் ….. ஊருக்கு தகுந்த மாதிரி நடந்துக்கணும் தான்.” என்றவள் வித்யா செய்து விட்டது போல் , கூந்தலை விரித்துப் போட்டுக் கொண்டு அழுகையை துடைத்துக் கொண்டே எழுந்தாள்.

 

“சாரி … நீ சொன்னது எல்லாமே சரிதான்… நம்ம நாட்டில பொண்ணுங்க இப்படித்தான் டிரஸ் பண்ணனும்னு ஒரு பிம்பம் உருவாக்கி வச்சிட்டாங்க … அதுக்கு மாறா தெரியும் போது இப்படிலாம் சந்திக்க வேண்டியிருக்கு ….”

 

” என்ன பிம்பம்…. என்ன சந்திக்க வேண்டியிருக்கு , நான் இங்க வந்ததிலிருந்து இங்க (அங்கிருந்த படித்துறையைக் காண்பித்து)நிறைய லேடீஸ் ஒரு பாவாடைய மட்டும் கட்டிட்டு குளிக்கிறாங்க , உடம்புல பாதி தெரியுது … அதை சாதாரணமா எடுத்துக்கிற இந்த ஊரு நான் எனக்கு வசதியா டிரஸ் பண்றத தப்பா பார்ப்பாங்களா … உன் பார்வை சரியில்ல விக்கி …. உன்..ங்கிறதுல எல்லா ஆம்பிளைங்களையும் தான் சொல்றேன் …பொண்ணுங்களுக்கு ஆயிரம் ரூல்ஸ் போடுறவங்க , பையன்களுக்கும் போட வேண்டியது தான… பொண்ணுங்கள அப்படி டிரஸ் பண்ணாத… இப்படி டிரஸ் பண்ணாதனு சொல்றத விட்டுட்டு … பொண்ணுங்கள எப்படி பார்க்கணும்னு பையன்களுக்கு சொல்லிக் கொடுக்க சொல்லு…..” என்ற வரு ,

 

முதுகு தெரியாத வண்ணம் முடியை இழுத்துவிட , அது எங்கு மறைய…. அவள் முயற்சியைக் கண்ட விக்ரமுக்கு சிரிப்பு வர ,

 

“உன் முதுகு முழுசும் மறையணும்னா அதுக்கு இன்னும் முடி வளர்க்கணும் பம்கின்… சரி வா நேரமாகுது தேடப் போறாங்க … ”

அவன் சொல்வதும் உண்மை தான் என்பதால் , வாங்கிய பரிசு மண்ணில் கிடந்ததுக் கூட தெரியாமல் நடக்க ஆரம்பித்தாள்.

 

 

[the_ad id=”6605″]

 

அதை வாங்கும் போது அவள் முகத்தின் மலர்ச்சி என்ன , இப்போது அவள் முகம் இருப்பது என்ன .. என நினைத்தவன் , அதை எடுத்து மண்ணைத் தட்டிக் கொண்டே ,

 

” உன் பரிச விட்டுட்டுப் போற … இப்ப நடந்ததையே நினைக்காத … அப்புறம் வீட்லயும் யாருகிட்டயும் சொல்லி புலம்பாத… இப்போதைய சூழல்ல அவங்கள நாம மாத்த முடியாது…. நாம தான் மாறிக்கணும்….ஆனாலும் உன்னைய விளையாட்டுப் பிள்ளைனு நினைச்சேன் , நீயும் நல்லா விவரமா தான் பேசுற … ” எனச் சிரித்துக் கொண்டே அதை வருவிடம் கொடுக்க … முறைத்துக் கொண்டே வாங்கியவள் , ஞாபகம் வந்தவளாக ..

 

“விக்கி , அதை என் மேல ஒட்டுனவனக் காட்டேன்…”

 

“ஏன்… அது சரி நீ என்ன என்னை மரியாதை இல்லாம என் பேரைச் சொல்லிக் கூப்பிடுற … முறை சொல்லிக் கூப்பிடு … ”

 

“நீ மட்டும் என்னை பம்கின்னுக் கூப்பிடுற … அப்புறம் அவனக் காட்டினா … நீ எத்தனை பல்லை உடைச்சனு பார்த்துட்டு மீதி பல்லையும் உடைக்கத் தான் … ” என்றுக் கோபமாகச் சொன்னவளைப் பார்த்து

 

விக்ரம் வாய் விட்டுச் சிரிக்க .. அவனைப் பார்த்து முறைக்க முயன்றவளுக்கும் புன்னகைதான் தோன்றியது .

 

“பம்கின் … இப்ப சொன்ன பாரு அதுக் கரெக்ட் … அவனப் பார்த்து பயந்து ஓடாம அவனுக்குப் பதில் கொடுக்க நினைக்கிறது …. குட் … அதை விட்டுட்டு அழுதுட்டுருக்கியேனு நினைச்சேன். இதை அப்படியே விட்டுரு … நான் தான் பதில் கொடுத்துட்டேன்ல ….”

 

“ஏன்…. ஏன்….நீ கொடுத்தா…” எனப் பேசுவதற்குள் அவனது தாத்தாவையும் அப்பா சித்தப்பாவையும்  தூரத்தில் கண்டவன் பேச்சை நிறுத்துமாறு ‘ஷ், ‘என்று விட்டு ,

 

“போய் வித்யாவோட நில்லு … ” என்றவன் ,வேறு புறமாக சென்று விட்டான்.

 

தூவும்…..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!