Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 9 1

மழைத்துளி 9

கோவில் முன்பு போடப்பட்டிருந்த மிகப் பெரிய தென்னை ஓலை கீற்று பந்தலின் அடியில் வந்து வைக்கப்பட்ட முளைப்பாரியை வைத்து பூஜித்து சுமந்து வந்தப் பெண்கள் அனைவரும் சுற்றி கும்மியடிக்க ஆரம்பித்தனர். ஊரில் வயதான அம்மா ஒருவர் முளைப்பாரி பாடலை மைக்கில் பாட ,மேளம் இசைக்க என நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. (chl.ca)

 

சங்கீதாவும் வித்யாவும் வருடம் தவறாமல் ஊருக்கு வந்து இப்படி நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டதால் அவர்கள் சாதாரணமாக பெரியவர்கள் சொன்னதைக் கேட்டுச் செய்துக் கொண்டிருந்தனர். ஆனால் வருவுக்கோ எல்லாமே புது அனுபவம் அவள் ஒவ்வொன்றையும் ரசித்து அனுபவித்துச் செய்துக் கொண்டிருந்தாள்.



Advertisement

 

கும்மி நடனம் பார்த்தவர்களுக்கு தெரியும் சிறிது முன்னும் பின்னுமாகச் சென்று பாடல் பாடிக் கொண்டே கையைத் தட்டிச் சுற்றி வருவார்கள். வருவிற்கு அதுவே உற்சாகத்தை தர அவளது சட்டையின் பின்புறம் தொங்கிக் கொண்டிருந்த கயிற்று மணிகளும் , பாவாடையில் தொங்கிக் கொண்டிருந்த கயிற்று மணிகளும் அழகாக சத்தம் எழுப்ப ,முளைப்பாரியைச் சுற்றி வட்டமாக  நின்றவர்களோடு தானும் கும்மியடித்துக் கொண்டிருந்தாள்.

 

Advertisement

ஊரேக் குழுமி கும்மியடிக்கும் பெண்களைப் பார்த்துக் கொண்டிருக்க, விக்ரம் குடும்பத்து பெரியவர்கள் எல்லாம் ஓரமாகப் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் இருக்கைகளில் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்தனர். கும்மியடித்து முடித்தப் பெண்கள் ஒதுங்கி நின்று வில்லுப்பாட்டு  நிகழ்ச்சியை ரசிக்க ஆரம்பித்தனர் .

Advertisement

 

 

லதா ,பரணி, ராணி எனப் பெண்கள் அனைவரும் மறுநாள் வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

Advertisement

அடுத்தடுத்து கலைநிகழ்ச்சிகள் , பரிசளிப்பு விழா என ஆரம்பிக்க ,விக்ரமை அழைத்த செல்வா , பெரியவர்களை அழைத்துக் கொண்டு செல்வதாகவும் தங்கைகளை விழா முடிந்ததும் அழைத்துக் கொண்டு வருமாறு சொல்லி , பொறுப்பை அவனிடமும் தந்து விட்டுச் சென்றார்.

 

அவனருகில் நின்றிருந்த திலீப் , “மச்சான் யுஎஸ் லருந்து கொலீக் ஒருத்தன் கூப்பிடுறான் பேசிட்டு வாறேன் ” என்றவன் பதிலைக் கூட எதிர்பார்க்காது வேகமாக கூட்டத்தில் கலந்து விட்டான்.

 

அதே நேரம் பாட்டுக் கச்சேரி முடிந்து பரிசளிப்பு விழா நடக்க இருப்பதால் , விருப்பமுள்ளவர்கள் மேடையில் வந்துப் பாடலாம் என்ற அறிவிப்புக் கேட்கவும் , முதலில் ஒருவர் பாடிக் கொண்டிருக்கவும் , விக்ரம் அருகில் நின்றிருந்த அரவிந்திடம் வந்த அம்மு ,

 

“அண்ணா நீங்க நல்லாப் பாடுவீங்க நீங்க போங்க ” என்று அவனை கைப் பிடித்து இழுக்க , சங்கடப்பட்டு நின்றுக் கொண்டிருந்தவனிடம் விக்ரம் ,

 

” அது தான் உன் தங்கச்சி சொல்றால்ல… போ மாப்ள பாடு…. இங்கயிருந்து நாமக் கிளம்பினதும் நம்ம வேலைகள் நம்மள இழுத்துக்கும் …. நீ உன் வேலையப் பார்க்கப் போய்ருவ.. நான் என் வேலையப் பார்க்க போய்ருவேன் …..இப்படி என்ஜாய் பண்ணாதான் உண்டு….” என அரவிந்தை உற்சாகப்படுத்த,

 

விக்ரமைப் பார்த்த அரவிந்த் , மனதினுள் “மச்சான் உன் தங்கச்சி மனச தெரிஞ்சுக்கிறதுக்காகவே நான் மேடையேறி தான் ஆகணும்” என நினைத்தவன் விக்ரமிடம் புன்னகை புரிந்து பெரு விரலை உயர்த்திக் காட்டிவிட்டு மேடையேறினான்.

 

அண்ணனை மேடையில் கண்ட வருவுக்கு உற்சாகம் இன்னும் அதிகமானது. அரவிந்த் அங்கிருந்த இசைக் கலைஞர் ஒருவரிடமிருந்து  கிதாரை வாங்கவும் உற்சாக மிகுதியில் குதிக்க ஆரம்பித்தாள் வரு .அவள் பின் நின்று அருகிலிருந்த சாருவிடம் பேசிக் கொண்டிருந்த வித்யா ,

 

” இவ ஏன் இப்படி குதிக்கிறா , நான் மறைச்சிட்டு நிக்கிறதே வேஸ்ட் போலவே ….” என வித்யா எண்ணிக் கொண்டிருக்கும் போதே அரவிந்த் பாட ஆரம்பித்து விட்டான். பாடலைக் கேட்ட வித்யா வருவை மட்டுமல்ல தன்னையே மறந்து நின்று விட்டாள்.

 

ஆம் ..வந்ததிலிருந்து பாடிய பாடலைத் தான் இப்போதும் பாடினான். பார்க்கவா.. வேண்டாமா .. என்றுக் குழம்பி நின்றவளுக்கு , அவன் குரலும் … அந்தக் குரலின் ஏக்கங்களும் தாக்க , மெல்ல வருவின் பின் நின்றவள் , சிறிது நகர்ந்து தலையை உயர்த்திப் பார்க்க ,

 

அரவிந்த் முகத்திலோ அப்படியொரு மலர்ந்த புன்னகை , அவன் சிரிக்கும் போது அந்தக் கன்னக் குழியைப் பார்த்த வித்யாவுக்கும் புன்னகை பூத்தது.

 

மேடையிலிருந்து அவளையேப் பார்த்துப் பாட , பார்ப்பவர்களுக்கு அவன் தங்கையைப் பார்ப்பது தான் தெரியும்.

 

‘தூக்கங்களை தூக்கிச் சென்றாள்

தூக்கி சென்றாள்..

ஏக்கங்களை தூவிச் சென்றாள்

உன்னை தாண்டி போகும் போது

போகும் போது..

வீசும் காற்றின் வீச்சு வேறு

நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே

நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே

காதல் எனை கேட்கவில்லை

கேட்டால் அது காதல் இல்லை…..

 

பலத்தக் கரகோஷத்தோடு அவன் பாடி முடித்து இறங்கும் போது தான் வித்யாவும் சுற்றம் உணர, வருவோ ,

 

 

“பார்த்தியா எங்கண்ணன  , அவர் ஆளு மட்டும் ஸ்மார்ட் இல்ல … எல்லாத்திலயும் ஸ்மார்ட் தான் …” எனத் தோழியிடம் புன்னகையுடன் அவன் அருமை பெருமைகளைக் கூற ,

 

வித்யாவும்”வரு …உங்கண்ணாவுக்கும் உன்னைப்போல தான் கன்னக்குழி விழுகுதா… ” என நினைத்தவாறு அவளைப் பார்த்துக் கொண்டே அரவிந்தை நினைத்துக் கொண்டு இருந்தாள்.

 

பரிசளிப்பு  விழாவுக்கான ஏற்பாடுகள் மேடையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் தனியாகப் பிரிக்கப்படுவோம் என்பதை அறியாமல் வரு , சங்கீதா, வித்யா மூவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஏதோ ஒரு பிரிவில் பரிசு வாங்க சங்கீதா மேடைக்குச் சென்று விட்டு கூட்டத்தில் வர ,

 

முதலில் இழுபட்டது அவள் தான் . பயந்து போய் யார் எனப் பார்த்தவள் , கைப் பிடித்து இழுத்தவன் இன்னும் ஒரு மாதத்தில் தன்னை மணக்க இருக்கும் அத்தை மகன் தான் … என்பதில் நிம்மதியடைந்தவள் , அவன் இழுத்துச் சென்று ஒரு பெரிய ஆலமரத்தின் மறைவில் நிற்பாட்டவும் ,கையை உருவிக் கொண்டே ,

 

“அத்தான்…. யாராவது பார்த்துரப் போறாங்க… நான் அங்கப் போறேன்…”

 

அவளருகில் நெருங்கிக் கொண்டே , ” பார்த்தா என்ன , நான் கட்டிக்கப் போற பொண்ணுதானே.. ”

அவன் நெருங்க நெருங்க பின்னால் சென்றவள் மரத்தில் மோதி அப்படியே நிற்க ,

 

“சங்கி….. ”

“ம்… அத்தான் அப்படிக் கூப்பிடாதீங்க…” என்றுச் சிணுங்க…

” இப்படிச் சிணுங்கினா எப்படி … ” என்றவன் மரத்தின் பின்புறமாக பார்த்து விட்டு , இப்போது மிக நெருக்கமாக வந்து மரத்தில் இரு கைகளையும் ஊன்றி அவளைச் சிறைப்பிடிக்க , அவன் விழிகளை காண இயலாது நாணம் பொங்க , விழி தாழ்த்திக் கொண்டே ,

” எல்லாரும் தேடுவாங்க … நான் போகணும்”

 

“அங்கப் பார் உங்கண்ணன் கூட தான் நின்னேன் , தங்கச்சியக் காணோமே எங்கப் போனான்னுப் பார்த்தானா … திருவிழாவுக்கு வந்தப் பொண்ணுங்கள அப்படி சைட் அடிச்சிட்டுருக்கான்… மத்த எல்லாருமே திருவிழா மூட்ல தான் இருக்காங்க … சோ:…” என்றவன் , அவள் காதருகில் குனிந்து,

 

” இந்த டிரஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்கு …” என்றவன் பட்டென்று காதினில் இதழொற்றிவிட….”

 

உடல் நடுங்க , கண்கள் கலங்க அவனைப் பார்த்தவள் , “நீங்க ரொம்ப மோசம் , கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தப்பு … ”

 

“ஒரு முத்தம் தானக் கொடுத்தேன். அதுவும் இங்க லைட்டா… இங்கயா கொடுத்தேன் …” என அவள் உதட்டைக் காட்ட ,

 

“ஆஹா கொடுப்பீங்க … கொடுப்பீங்க….” என முகம் சிவந்தவளிடம் ,

 

” கொடுப்பேன் … கொடுப்பேன் .. ” என திலீபன் அவளை நெருங்க….இப்படி தங்களை மறந்து அவர்களிருவரும் காதல் மொழிப் பேசிக் கொண்டிருக்க,

 

அங்கு கோலப் போட்டிக்கான அறிவிப்பில் வருவுக்குத்தான் முதல் பரிசு என்ற அறிவிப்பு வர , மிகுந்த மகிழ்ச்சியில் தரையில் புரண்ட லெஹங்காவை இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு வரு அழகாக செல்ல ,

 

தோழிக்கு காவலாக அவள் பின்னாலயேச் சென்றுக் கொண்டிருந்த வித்யாவும் அந்தக் கூட்டத்தினுள் கைப் பிடித்து பின்னால் இழுக்கப்பட்டாள்.

 

முதலில் பயத்தில் அலறப் போனாலும் ,  கைப் பிடித்திருந்தவனைப் பார்த்து சமாதானம் அடைந்தாலும் அழுகை வந்துவிட்டது. அரவிந்தோ அவளை மறைவாக அழைத்துச் செல்வதிலேயேக் கவனம் வைத்திருந்ததால் அழுகையைக் கவனிக்கவில்லை.

 

கோவிலிலிருந்து சற்றுத் தள்ளி மறைவாக இருந்த வைக்கோல் போர் மறைவில் வந்து நிறுத்தியதும் தான் வித்யாவைப் பார்க்க , வரும் வழியெல்லாம் அழுததால் கண்ணீர் வழிந்தோட , கண்ணெல்லாம் சிவந்து நின்றுக் கொண்டிருந்தாள். பார்த்ததும் பதறியவன் ,

 

 

” எ …. என்ன இப்படி அழுகுற … “அமைதியாக கண்களைத் துடைத்தவளிடம் , விரக்தியுடன் இடுப்பில் கை வைத்து , “அப்ப பிடிக்கலயா … ” எனவும் ,

 

“ஆம்” என்பதாக தலையாட்டியவளிடம் ,

 

“அப்ப ஏன் இந்த கலர் டிரஸ்ல வந்த … நான் அது தான் ….” எனத் தலையில் கை வைத்து ,

 

“ஐ… ம் …சாரி… வா போகலாம் … ” எனத் திரும்பி நடக்க எத்தனிக்க , இப்போது அவன் கையை வித்யா பிடித்திருந்தாள்.

 

“நான் … நான் … பிடிக்கல சொன்னது இப்படித் தனியா வந்தத … தப்பில்லயா… வீட்டுக்குத் தெரிஞ்சா … ” என்றுப் பயப் பார்வை பார்த்துக் கொண்டேக் கேட்க , பிடித்தக் கையின் மேல் மறு கையை வைத்துக் கொண்டே முறுவலித்தவன் ,

 

“அப்ப என்னைப் பிடிச்சிருக்கு … நான் இன்னும் ஒரு மாசம் இங்க இருக்கலாம் … அப்படித்தானே… “கையை உருவ முயற்சித்துக் கொண்டே அமைதியாக நிலம் பார்த்தவளை இயல்புக்குக் கொண்டு வர ,

 

“ஆமா நான் உன்னை பிங்க் கலர் போட்டுட்டு வரச் சொன்னேன் … ஆனா நீ … ” என இழுத்து கைகட்டி நிற்கவும் ,

 

தன்னைக் குனிந்துப் பார்த்தவள் கிளிப் பச்சை நிறப் பட்டுப் பாவாடையில் பிங்க் நிற சரிகையில் அதே நிற தாவணியிலும் இருக்க , ” இது பிங்க் தானே … ” என அவனை ஏறிட , இப்போது குறும்புடன் , தூரத்தில் பஞ்சு மிட்டாய் விற்றுக் கொண்டிருந்தவரைக் காட்டி ,

 

“பஞ்சு மிட்டாய் கலர்ல வந்துருக்க….” என ,

 

“ம் .. நீங்க சொன்னீங்கனு திருநெல்வேலிக்கு சித்திக் கூடப் போய் மதியம் எடுத்துட்டு வந்தேன்.. நீங்க கிண்டல் பண்றீங்க…. நான் போறேன்…. ” எனத் திரும்பியவளை ,

 

“ஹேய் பஞ்சு மிட்டாய் நில்லு ….”

 

“அப்படிக் கூப்பிட்டா எப்படி… நான் போறேன்” என்று சிணுங்கியவளை இழுத்து வைக்கோல் போரில் சாய்க்க, இப்போது அரவிந்த் மிக அருகில் நின்றிருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!