Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தூக்றோம் – 1

Note: This is a short story only with maximum of 8 chapters…

வயலூர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். பெயருக்கு ஏற்றார் போல் வயலும் தோப்பும் நிறைந்த கிராமம் என்று கூற அங்கிருக்கும் மக்களுக்கும் ஆசை தான். ஆனால்  அந்த நிலைமை மாறி ஆண்டுகள் ஆகிற்று. ஆங்காங்கே ஊரின் பெயருக்கு ஏற்றார் போல் வயலும் ஒரு சிலர் மட்டுமே தோட்டம் துறவுடன் இருந்தனர்.

கிராமத்தில் மொத்தத்தில் ஆயிரம் ஜனத்தொகை மட்டுமே இருப்பர் அதில் ஓரிரண்டு குடும்பம் உச்சத்தில். மற்றவர்கள் அவர்களுக்கு வேலை ஆட்கள். அந்த ஓரிரு குடும்பங்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் நெடுஞ்சேரன், தமிழகத்தின் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்.

அடிமட்டத்திலிருந்து உழைப்பால் மட்டுமே உயர்ந்த இடத்திற்கு வந்தவர் என்று அந்த ஊர் மக்கள் நினைப்பிற்குச் சற்றும் தகுதி இல்லாதவன். அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல் என்று ஒரு ரௌடியின் அணைத்து வேலைகளையும் தவறாமல் செய்யும் அரசு சேவகர். அதாங்க கவெர்மென்ட் சேர்வண்ட்.



Advertisement

செய்திராத மொள்ளமாரி தனம் இல்ல. ஆனாலும் ஊருக்குள் அவருக்குத் தனி மரியாதை. பணமோ… பதவியோ அது அவரவர் பார்வை பொறுத்தே. இதோ இன்று அந்த சிறு ஊரே விழாக்கோலம் போட்டிருப்பதன் காரணமும் அவர் தான். அவருடைய மகளுக்கு நாளை திருமணம். இன்னும் சற்று நேரத்தில் நெடுஞ்சேரனுடைய தொழில் முறை நண்பரின் மகனுடன் நிச்சயம் செய்யவிருக்கிறார்கள்.

நெடுஞ்சேரனுடைய குடும்பத்தைப் பற்றிய ஒரு சிறு சுருக்கம்…

நெடுஞ்சேரனுடைய மனைவி பாண்டியம்மாள். மனைவி மீது அதிகம் பாசம் வைத்தவர் ஆனால் அவரோ சீக்காளி. நான்கு வருடத்திற்கு முன்னர் தான் பூவுலகை விட்டுப் பிரிந்தார். இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள். முதல் மகன் அன்பு, பெயருக்கு ஏற்றார் போல் குடும்பத்தின் மீது அதீத பாசம் உள்ளவன். இரண்டாவது வெற்றி, பெயரில் இருக்கும் வெற்றியை அவனும் அடைய நினைக்கிறான் ஆனால் அது அவன் அருகில் வர மறுக்கிறது. கடைகுட்டி, அந்த வீட்டின் செல்ல ராணி யமுனா, அதிகம் செல்லம், பிடிவாதம் ஆனால் குணத்தில் சொக்கத் தங்கம்.

Advertisement

நெடுஞ்சேரனுடைய வீடு அந்த காலத்து அரண்மனையை ஒத்து மகளின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் பார்த்துப் பார்த்துக் கட்டியது. இரவின் குளுமையும் வீட்டைச் சுற்றி இருக்கும் தென்னை மரத்தின் காற்றும் மனதைக் கொள்ளை அடித்தது ஒரு புறமென்றால் அந்த வீட்டின் விளக்கு அலங்காரம் கண்களைக் கட்டிப் போடும் அவ்வளவு அழகு. வீட்டை விட இரண்டு மடங்கு இருக்கும் தோட்டத்தில் ஒரு பகுதியில் மேடை அமைத்து அதற்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பூக்களுடன் அலங்காரம், வண்ண விளக்குகள் ஒளிக்கத்தயாராகிக் கொண்டிருந்தது. மற்றொரு பகுதி பந்தலுக்கு அடியில் உணவைப் பரிமாற தயாராகிக் கொண்டிருந்தது.

Advertisement

“என்ன சேரா கல்யாணத்த சென்னைல வப்பன்னு நெனச்சேன் இங்க வச்சிட்ட” கையில் ஆவி பறக்க ஒரு கோப்பை காபி கப்புடன் வந்தது நெடுஞ்சேரனுடைய அக்கா கணவர், ராகவேந்தர். அங்கிருந்த பலர் மனதிலிருந்த கேள்வியை அவர் கேட்டு விட்டார்.

“என்ன தான் சென்னைல வச்சாலும் என் பாட்டன், முப்பாட்டானோட ஆசீர்வாதம் முழுசா இருக்குற இடத்துல வைக்குற  மாதிரி வருமா மச்சான்?” அவர் முகத்திலிருந்த சந்தோசத்தைத் தாண்டி ஏதோ ஒரு தயக்கம் அவரிடம்.

அதை எளிதில் பற்றிய அவரின் மச்சான், “என்ன மாப்பிள்ளை எதாவது பிரச்சனையா?” குரல் சற்று ரகசியமாக பேசுவது போல வந்தது.

Advertisement

“ச்ச ச்ச அதெல்லாம் ஒன்னுமில்ல மச்சான் கல்யாண வேலை தலைக்கு மேல இருக்குதுல, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வேற வந்துட்டு இருக்காங்க எந்த பிரச்சனையும் வந்துட கூடாதுங்கிற பயம் தான்”

நெடுஞ்சேரனுடைய பேச்சை நம்புது போல் பாவனை செய்து விட்டார்.

வார்தரதைகள் பொதுப்படையாக வளர அங்குத் தொலைவில் நடந்து கொண்டிருந்த வெற்றியைப் பார்த்தவர், “டேய் வெற்றி மாப்பிள்ளை வீட்டுல இருந்து ஃபோன் எதுவும் வந்துச்சா?”

“ப்பா இன்னும் பத்து நிமிசத்துல இருபங்களாம். நீங்க போய் டிரஸ் மாத்திட்டு வாங்க சரியா இருக்கும்” என்ற வெற்றி அவர் அருகில் நின்றிருந்த அவன் மாமாவை பார்த்து முகம் முழுவதும் பல்லாய்,

“வாங்க மாமா. எப்ப வந்தீங்க ரூம் எல்லாம் சௌரியமா இருக்கா இல்ல வேற ரூம் தரவா?” அவன் வாய்க்கு வந்த நூலை எல்லாம் விட்டு பார்த்தான். பின்ன மாமா மகள் என்றால் கொள்ளை பிரியமாயிற்றே அதுவும் ஒன்றுக்கு இரண்டு மகள்கள்.

“ம்ம்ம் வர்றேன் மாப்பிள்ளை. எல்லாமே நல்லா தான் மாப்பிள்ளை இருக்கு நீ கல்யாண வேலைய பாரு கல்யாணாம் முடிஞ்சதும் பொறுமையா மாமாவை என்ன, மாமா குடும்பத்தையே கவனி” என அவன் நோக்கம் அறிந்து சிரித்தார்.

“மாமா…” சந்தோஷத்தில் ஆர்பரித்தவன் யோசிக்காமல் கையில் இருந்த சாம்பார் வாலியை அப்டியே வைத்து அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்துவிட்டான்.

“என் தெய்வம் மாமா நீங்க. அப்பா, அத்தை மாதிரி நீங்களும் இருந்துருவீங்களோனு நெனச்சு பயந்துட்டேன்”

“அடேய் மாப்பிள்ளை எந்திரிடா” சிரித்துக்கொண்டே அவனை தூக்கி விட்டவர், “நீ என்ன தான் எனக்கு காக்கா புடிக்க நெனச்சாலும் உன் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணிட்டு தான் உனக்கு. மொத உன் அண்ணன் ரூட்ட க்கிளியர் பண்ணி விடு. அவன் சரின்னு சொன்னா ஒரே மேடைல கூட ரெண்டு கல்யாணம் தான்” சகோதரி மற்றும் தமயனை சுட்டிக்காட்டி கூறினார்.

“ஏன் மூணா வைக்க மாட்டிங்களா?” அப்பொழுதிலும் தன்னை கழட்டி விடும் மாமனை முறைத்து, சண்டைக்கு செல்வது போல் வேஷ்டியை எடுத்து மடித்து கட்டியவன், “எங்களுக்கும் வயசு 25 ஆச்சு” என்று நினைவூட்டினான்.

“டேய் 25 எல்லாம் ஒரு வயசுன்னு அப்பன வச்சிட்டே நீயா பொண்ணு கேக்குறியா” நெடுஞ்சேரன் அவனை அடக்க நினைக்க,

“ம்ம்ம் இவரு மட்டும் பதினெட்டுலயே டூயட் பாடிருவாரு நமக்கு 25-ல வந்து முட்டு கட்ட போடுறது. அப்றம் நாங்களா பொண்ணு கேக்காம, செத்து போன இவரு பொண்டாட்டியா வரும்?” சலித்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்றான்.

“டேய் என் பொண்டாட்…” அவர் பேச்சை இடைமறித்து நிறுத்தியது அங்கு வேலை செய்யும் பணியாளின் “அய்யோ ஐயா…” என்ற பதட்டக் குரல்…

ஐந்து நாட்கள் முன்

கோவையில் உள்ள பிரபலமான மதுக்கூடம் அது… அடர் பழுப்பு நிற இரும்பு பலகையில் வட்ட வடிவில் ‘தி லாஸ்ட் ட்ராப்’ என்னும் பெயர் காரிருளிலும் தங்க நிற பெயிண்ட்டால் பளபளக்க, அந்த வட்டத்தின் நடுவில் தூக்குக் கயிற்றை போல் இருந்த வடிவம் மதுபானத்தை வீரியத்தை பறைசாற்றியது. அதனை பொருட்படுத்தாது வார இறுதியின் தாக்கத்தால் இரவு பதினொன்றைத் தாண்டியும் சற்றும் கூட்டம் குறையாமல் மேலை நாட்டின் பாடல் அந்த இடத்தை அமர்களமாகிக் கொண்டிருந்தது.

ஆர்ப்பரிக்கும் இளமையின் குளுமையான இரவில்,

Do you recall, not long ago
We would walk on the sidewalk?
Innocent, remember?
All we did was care for each other
But the night was warm
We were bold and young
All around the wind blows
We would only hold on to let go
Blow a kiss, fire a gun
We need someone to lean on
Blow a kiss, fire a gun
All we need is somebody to lean on…

என்றப் பின்னணிப் பாடலை முணுமுணுத்துக் கொண்டே கூட்டத்தில் நுழைந்து பார் கவுண்டரில் சொல்லும்போதே, “நட்பு இருக்கு மத்ததெல்லாம் எதுக்கு ..” யுவனின் இசையில் தாறுமாறாய் அலறிய மொபைலில் பிரேம் – எனும் காலர் ஐடியை கண்டு , நொடி தவறாது சட்டென்று அட்டென்ட் செய்தான் கார்த்திக்.

“டேய்ய்ய்ய் அறிவுகெட்டவனே… நா எப்போ கால் பண்ணேன் நீ எப்போ அட்டன் பண்ற. போன தூக்கி குப்பைல போடு .என்னடா பண்றீங்க ரெண்டு பேரும்.. இங்க ஒருத்தன் போதை மண்டைக்கு மேல ஏறி கண்டமேனிக்கு கத்திட்டு இருக்கான். என்னாலலா சமாளிக்க முடியாதுப்பா. ஹேய் நா பேசிட்டே இருக்கேன் பதில் சொல்லுடா பரதேசி .. டேய்ய்ய் நாயே… செத்து போய்டியா”

ஹைப்பிட்சில் கதறிக் கொண்டிருந்தாலும் ஓரக் கண்ணால் பக்கவாட்டில் தன்னை பார்த்துக் கொண்டிருந்த ரெட் டிரஸ் பெண்ணை நோக்கி அந்த ரணகளத்திலும் ,

“ஹாய்…. திஸ் இஸ் கார்த்திக் பேசிக்கல்லி ஐ அம் எ மெக்கானிக் என்ஜினீயர்” என தலை சாய்த்து பளிச் என்று டூத் பேஸ்ட் விளம்பரம் போல பல்லைக்காட்டி வெளிப்படையாய் ரூட் விட முயற்சிக்கும் பொழுது மறுபக்கம்,

“ஏது மெக்கானிக் என்ஜினீயரா டேய் நீ இன்னும் நாலு அரியர் வச்சிருக்க டிகிரி சர்டிபிகேட் இன்னும் உனக்கு வரல இந்த வருசமும் அத க்ளினர் பண்ணல டிகிரி கேன்சல் தான்” மறுபக்கத்திலிருந்து ப்ரேமின் குரல் அமைதியாய் அதே சமயம் நக்கலுடன் வந்தது…

அலைபேசியில் வாங்கிய அர்ச்சனையை வேலையில் காட்டாமல் மாறாத புன்னகையுடன் அந்த பெண்ணை பார்த்தவன் ப்ரேமிடம், “கேட்ட கேள்விக்கு மூடிட்டு பதில் சொல்லுடா பேமானி”

அடக்கிய ஆத்திரத்துடன் “ஓஓ… இருக்கியா.. செத்துட்ட-னு நெனெச்சு உன் பொணத்துக்கு மாலை ஆர்டர் குடுக்கலாம்-னு இருந்தேன்” என்றவன் மேலும், “பார்க்கிங் லாட்ல இருக்கோம் வந்த்தர்றோம்” – ப்ரேம்

டிங் ..டிங்.. டிங்..

அவ்வளவு தான், மெல்லிய ஒலி கேட்டதும் “ப்ச்ச் .. கட் பண்ணிட்டான் பரதேசி…” என பல்லைக்கடித்து, “ஒரு இன்ஜினீயர்கு இந்த உலகத்துல மரியாதையே இல்லங்க”

முணுமுணுத்தவன் இன்னும் தன்னையே நோட்டம் விட்டு கொண்டிருக்கும் அந்த பெண்ணை மீண்டும் அணுகும் நோக்கத்துடன், “பொண்ணுங்க சைட் அடிச்சாலே அழகு. அதுலயும் இப்டி வச்ச கண்ணு வாங்காம பாத்தா பசங்க நாங்கலாம் என்னா பண்றது மேடம் நீங்களே சொல்லுங்க” போனில் மெசேஜ் செய்துக்கொண்டே கண்ணெடுக்காமல் வினவினான்.

கன்னத்திற்கு வலது கையை முட்டுக்கொடுத்து வாகாய் சாய்ந்து இருந்த அந்த ரெட் டிரஸ் அவன் எதிர்பாராத இந்த கேள்வியால் விழி விரித்து சட்டென்று இரு கைகளையும் கட்டிக்கொண்டு நேராய் நின்றாள்.

“அதுலயும் இப்டி முட்ட கண்ணை விரிச்சு விரிச்சு பாத்தா ரொம்ப ரொம்ப அழகு” அதே தோரணையில் தன் பக்கம் கண் நகர்த்தாமல் சென்ற கார்த்திக்கை பார்த்து புருவத்தை சுருக்கி எதையோ சொல்ல வாயை திறந்தவள் பின்பு எதையும் சொல்லாமல் அவனை நோக்கி புசு புசு வென மூச்சுகாற்றை வெளியிட்டு ஒரு முறை முறைத்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

“அதுலயும் இப்டி முகத்தை திருப்..” முதுகில் ‘டொம்’ என்று விழுந்தது அந்த அடி.

திடீரென தோன்றிய சுருக்கென்ற வலியில் சொல்ல வந்ததை மறந்து, கால் தடுமாறி பக்கத்தில் இருந்த சேரை பிடித்து தன்னை நிலை படுத்தி ஆத்திரத்துடன் பின்னால் திரும்பியவன் அடித்தவனின் காலருடன் கொத்தாக கழுத்தை பிடித்தான்.

அடித்தவனோ பதிலுக்கு பிடிக்க இருவரும் ஒருவருக்கு ஒருவரின் காலரை பிடித்து மல்லுக்கு நிற்பதை பார்த்து சுற்றிலும் சிறிய கூட்டமே கூடியது.

“இன்னக்கி சரக்கு வாங்குறது மட்டும் உன் டர்ன் இல்லாம இருந்துசுன்னா…” – இழுத்தான் கார்த்திக்.

“சொல்லுடா மச்சான்…” பின்னாலிருந்து உற்சாகமாக பாதி போதையில் வந்தது ஹரியின் துள்ளலான குரல்… நம் கதையின் நாயகன்…

“இருந்துசுன்னா…..” மீண்டும் இழுத்தான் என்ன கூறுவதென்று தெரியாமல்…

“சொல்லுடா மச்சான்…” அதே உற்சாகத்துடன் முகத்தை குறும்பாய் வைத்து சிரித்தான் ஹரி… ஆனால் பாவம் கார்திக்கிக்ற்கு தான் என்ன சொல்வதென்று தெரியவில்லை…

“டிரௌசரை கழட்டி ஓட விட்ருப்பேன்” ஒரு வழியாக ப்ரேமின் அரைக்கால் சட்டையை பார்த்து கூறிவிட்டான்…

“மச்சி இப்ப கூட ஒன்னும் இல்ல கழட்டி விடுறியா? பிரீயா ஒரு குத்தாட்டம் போட்ப்பேன் ” என்று கைகளை விரித்து காத்திருந்தான் ப்ரேம்.

“வாடா வா ஜட்டியையும் சேத்து கழட்டி விடுறேன்” கார்த்திக்கின் கோவம் சற்றும் குறையாமல் ஒலித்தது.

“இந்த வாயெல்லாம் உன் டி .எல் கிட்ட செருப்படி வாங்கும்போது எங்க போகும்”- ப்ரேம்.

கார்த்திக்கின் தோளில் ஒரு விரல் கொண்டு சொரிந்த ஹரி, “மாப்பிள்ளை எனக்கு ஜிப்பை மட்டும் கழட்டி விடேன்”

“ச்சை இவன் ஒருத்தன்” மீண்டும் ப்ரேமை பார்த்து, “நீ பேசுவடா பேசுவ நீ திட்டு வாங்க கூடாதுங்கிற ஒரே காரணத்துக்காக மட்டும் தான் அந்த ஆள் கிட்ட போய் பேசுனேன் பாரு என் புத்திய…” என்று கீழே தேட ஆரமித்தான்.

அவனது செய்கையின் அர்த்தம் அறிந்த ஹரி தன்னுடைய ஷூவை காண்பித்து, “மச்சி இத வச்சு அடிச்சுக்கோ இப்ப தான் கக்கூஸ் கூட போய்ட்டு வந்தேன்”

அதில் சத்தமாக ப்ரேம் சிரிக்க, “இவனுக்கு ஒரு கேடு வர மாட்டிகித்தே” என்று உச் கொட்டினான் கார்த்திக்.

“ச்சை இது ஸ்ட்ரிப்பர் கிளப் இல்ல மூடிட்டு மூணு பேரும் நல்ல சரக்க ஆர்டர் பண்ணுங்க… சாவடிக்கிறானுக” தலையில் அடித்த சிவா, ஹரியிடம், “என்னடா போதை தலைக்கு மேல ஏறிடுச்சு போல போய் ஒரு ஓரமா ஒக்காரு”

“உன் இஷ்ட மயிருக்கு எல்லாம் என்னால இருக்க முடியாது… சரி வா போய் ஒரு ஆட்டம் போட்டுட்டு வரலாம் டி.ஜே-வ கரெக்ட் பண்ணிட்டேன் இப்ப பாரு தரமா பாட்டு வந்து இறங்கும்” என்று அந்த ஆடம்பரமான கிளப்பின் மேல் தளத்திலிருந்து பாட்டு மாற்றுவதிலேயே மும்முரமாய் இருந்த டி.ஜேவை நோக்கி கத்தினான்.

அந்த அலறும் சாதத்தில் ஒருவழியாக அவன் காதில் விழுந்தது, “டேய் டி.ஜே பாட்ட மாத்துடா” சரியாக டி.ஜேவின் அறிவிப்பு வந்தது, “ச்சியர் அப் பட்டீஸ்… லேட்ஸ் ஸ்டார்ட் தி ஒரிஜினல் பார்ட்டி நொவ் (Cheer up buddies… let’s start the original party now)” என்று…

“மச்சி பாட்டு போட போறாண்டா வாங்க டா போகலாம்… உள்ள கலர் கலரா பொண்ணுங்க இருக்குதுங்க…”

“இதல்ல நீ மொத சொல்லிருக்கணும்” தங்களுக்குள் நடந்த சிறு வாக்கு வாதத்தை சுத்தமாக மறந்து கார்த்திக் மற்றும் ப்ரேம் ஹரிக்கு முன்னே சென்றனர்… திரும்பி சிவாவை பார்த்து புருவத்தை உயர்த்தி, ‘எப்புடி’ என்று நமட்டு சிரிப்புடன் பார்த்தான் ஹரி.

“திருந்த மாடீங்கடா நீங்க… நா பார் டேப்ள்க்கு போறேன்” தப்பித்தோம் பிழைத்தோமென்று அவர்களிடமிருந்து தப்பித்து ஒரு ஓரமாகச் சென்று அமர்ந்தான் சிவா.

“ஆமா இவரு அப்புடியே ராமர் பேரன் போடா போடா புன்னாக்கு… இன்னைக்கு இந்த கூட்டத்துல ஒரு பொண்ண கரெக்ட் பண்ணி உனக்கு தங்கச்சியா ஆக்கல உனக்கு கோவா-ல மொட்டை போடுறேண்டா ” எப்பொழுதோ சென்றிருந்த சிவாவிடம் கூறி அந்த யுவன், யுவதிகள் கூட்டத்தில் இரண்டற கலந்தான்.

சரோஜா சாமானிக்காலோ

மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு
மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு
ஊட்டி ராணி உள்ளாற வா நீ
எல்லாரும் ஒன்னாகலாம்
 ஹோ ஹோ
பூரிமா நீ பூக்காத பூ நீ
ஏதாச்சும் செஞ்சாகலாம்

ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு
ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு

மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு
மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு

காதை கிழித்த யுவனின் தரை லோக்கல் பாடலில் சுற்றி இருந்த எந்த பெண்களையும் கண்டு கொள்ளாமல் தாங்கள் மூவராகவே கால்கள் வலிக்க வலிக்க ஆடினர்… தனது கௌரவமோ, சுற்றமோ எதுவும் அவர்கள் முன்னே இல்லை… சட்டையை கழட்டாத குறையாக ஆடினார்…

பட்டு பட்டு சேத்துபட்டு
ஐயோ சிரிக்குதடா நம்ம சீனி சிட்டு
தொட்டு புட்டு நீ ஒரங்கட்டு
அது பசிகலென்னா எடம் மாத்தி கட்டு

நெலமை முழுவதும் தெரியாது புரியாது
தேச்சி பாக்காம தீக்குச்சி எரியாது
அதுக்கு நேரம் ஒதுக்கு
என்ன ஆனாலும் போனாலும் நமக்கெதுக்கு

ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு
ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு

அதுவரை மதுவின் வீரியத்தில் ஆடிக்கொண்டிருந்த கூட்டம் இப்பொழுது பாட்டின் துள்ளல் இசையில் மதி மயங்கி ஆட துவங்கினர்… அங்கு ஆண், பெண் பேதம் இல்லை… மதுவில் ஆனந்த குளியலிட்டு இசையில் திளைத்திருந்தனர்… இயந்திரமான வாழக்கையிலிருந்து சிறிது ஓய்வெடுக்கவே இருந்த இடம் இப்பொழுது வழக்கின் ஒரு அங்கமாக மாறியது…

ஒரு கட்டத்தில் உற்சாகம் தலைக்கு ஏறி சட்டையை கழட்டி தலைக்கு மேல் சுத்தி ஆட ஆரமித்தான் ப்ரேம். அவனை பார்த்த நண்பர்களும் அவனுடன் இணைத்தனர்… இதை மதுபானத்தை அருந்தியபடியே பார்த்துக் கொண்டிருந்த சிவா தலையில் அடித்து திரும்பி கொண்டான்…

இது தான் இந்த கதையின் முக்கிய நான்கு தெண்டங்கள் ஹீஹீ ச்சாரி… (கதாபாத்திரங்கள்).

ஹரி, நம் நாயகன். மாநிறம், ஆறடி உயரம், ஒரு மாதம் உடற்பயிற்சி செய்து மறு மாதம் குப்புறப் படுத்து உறங்கியதால் கட்டுக்கோப்பான உடற்கட்டுடன் இல்லை என்றாலும் பார்ப்பதற்குக் கம்பீரமான தோற்றம், அடர்ந்த அலை அலையான கேசம், தமிழ் ஆண்மகன்களுக்கே உண்டான தோரணையுடன் இருப்பான்… குறும்புத் தனம் அதிகம் ஆனால், தனக்கு நெருங்கியவர்களிடம் மட்டுமே. ஒருவர் தன்னிடம் ஏதாவது ஒன்று கேட்டால் மறுக்க இயலாது உடனே செய்து விடுவான்… பசிக்கு வாயருகே உணவைக் கொண்டு சென்றாலும் ஒருவர் அதைக் கேட்டால் யோசிக்காமல் அதையும் குடுத்துவிடுவான்… அமைதியாக இருந்து அனைத்தையும் செய்துமுடிக்கும் வல்லமை அவனிடம் அதிகம்… அவனது யோசனை, ஆலோசனை என்றும் ஒரு படி மேலே இருக்கும் அதனால் தான் என்னவோ இவர்கள் மூவரையும் விட மேல் நிலையில் இருக்கிறான் ப்ராஜெக்ட் ஹெட்டாக. ஆனால் அவன் செய்யும் சேட்டைகளைத் தான் யாராலும் ஜீரணிக்க இயலாது அவ்வளவு துருதுருப்பாகச்சுற்றித் திரிவான்…

அவனுக்குத் துணையாய் கார்த்தி இடத்தை இரண்டாகித் தான் மறு வேலை… ஹரி குறும்பு என்றால் கார்த்தி குரங்கின் சகோதரன், பெண்களிடம் தன்னால் இயன்ற அளவிற்கு வண்டி வண்டியாய் ஜொள்ளை விடுவதில் வல்லவன். அவன் நேரமும் அழகும் பெண்களை வெகுவாய் சிரமமே இல்லாமல் அவனின்பால் ஈர்த்தது… வட இந்தியனை போலே நல்ல நிறம், வசீகரிக்கும் முகம் எனப் பெண்களின் கனவு நாயகன் அவன் தான் என்னும் அளவிற்கு அவன் தோற்றமும் பேச்சும் இருக்கும்.

ப்ரேம், புத்தகப் புழு எந்த நேரமும் கையில் ஒரு புத்தகத்துடன் அறிவினை தேடி அலைபவன். அதே நேரம் வாழ்வின் நிதர்சனத்தை அறிந்து தெளிவான முடிவினை எடுப்பவன் ஆனால் அனுதினமும் வாழ்வினை அனுபவித்து வாழக் கற்றுக்கொண்டது கார்த்தியிடமும் ஹரியிடமும் இருந்து தான். ஹரி, கார்த்தியைப் போல் இல்லை என்றாலும் அவனும் பழகுவதற்கு இனிமையானவன் தான். தினமும் நாள் தவறாமல் ஜிம் சென்றாலும் தேறாத மெலிதான உடல், கோதுமை நிற தோல், ஆண் அழகன் இல்லை ஆனாலும் அவனை ஒரு காலத்தில் பெண்கள் கூட்டம் அவனுடைய அடக்கத்திற்காக மொய்த்தது உண்மையே. ஆனால் அந்த கூட்டத்தின் அவைப் புலவன். செவிகள் கிழியக் கிழிய அறிவுரை வழங்குவான். அதையும் படம் பார்ப்பது போல் கையில் பாப்கார்ன் பொட்டலத்துடன் அமர்ந்து மூவரும் கேட்பர்… அவர்கள் சிந்தனை அறிந்தும் தனது பாடத்தை கை விடாமல் மீண்டும் முதலிருந்து ஆரமிப்பான்.

இறுதியாக சிவா, மற்ற மூவரைக் காட்டிலும் சற்று வித்தியாசமானவன். அதிகம் பேசாதவன், வேலையில் பெரிய உயரத்தை அடைய வேண்டும் என்ற ஒரு குறிக்கோளுடன் அயராது உழைப்பவன். ஆனால் எந்த காரியம் செய்தாலும் அதில் ஒரு சிறு யோசனையுடன் செய்வதாலோ என்னமோ அதில் தடுமாற்றமும் பயமும் அவனது உயர் பதவியைத் தட்டிக்கழித்தது. வெளி ஆட்களிடம் அதிகம் பேசாதவன் நண்பர்களிடமும் அதிகம் பேச மாட்டான்

சப்பா… இந்த நாலு வெட்டி முண்டம் வீணா போன தெண்டங்கள் வாழக்கைல நடந்த ஒரு சின்ன பார்ட் தான் இந்த கதை. அழுகாச்சி இருக்காது, எமோஷனல்சீன்ஸ் இருக்காது ஒரே கலாட்டாவும் நகைச்சுவையும் தான் கதை… ம்ம்ம்ஹ்ம்ம்ம்… சிறு கதை.

“மச்சி இன்னொரு ரவுண்டு போகலாமா?” அந்த குளிரூட்டும் அறையிலும் ஆடிய ஆட்டத்தால் வியர்வை வழிய அணிந்திருந்த சட்டையை கொண்டே துடைத்த ஹரி, ப்ரேமிடம் கேட்க அவன் தனது டீ-ஷிர்ட்டை அணிந்தவாறே, “மச்சி கிடக்கிற ரெண்டு நாள் லீவுல பத்து நாளைக்கு ஆடுற மாதிரி ஆடிட்டோம்டா வா போய் கொஞ்ச நேரம் சரக்கடிக்கலாம்… அதுவும் இல்லாம மூன் வாக்ன்னு பேர்ல ரெண்டு குடிகார கபோதிக என் கால அப்ப இருந்து மிதிச்சிட்டே இருந்துச்சுக” ஜாடை மாடையாக ஹரியையும், கார்த்தியையும் குற்றம் சாட்டினான் ப்ரேம்.

“டேய் அவன் தான் ஆல்ரெடி மூணு ரவுண்டு போட்டுட்டு தான் கூப்புடுறான்… நா இன்னும் அக்கௌன்ட் ஸ்டார்ட் பண்ணவே இல்ல இந்த நாயி எக்கேடு கெட்டு போனா நமக்கென வா நாம போய் குழு குளுன்னு ரெண்டு கிளாஸ் உள்ள இறக்கலாம்” கார்த்தி ப்ரேமை அழைத்து சிவா இருந்த இடத்திற்கு சென்றான்…

அவர்கள் செல்வதையே உதடு பிதுக்கி பாவமாய் பார்த்து நின்ற ஹரி கண்கள் அந்த நடன தளத்தை ஏகம்மாய் பார்த்து நண்பர்களுடன் சென்றான்.

“மூஞ்சிய மட்டும் இப்டி ஜிஞ்ஜர் ஈட்டிங் கொரில்லா மாதிரி வைக்காத கேவலமா இருக்கு… இந்தா இன்னொரு ரவுண்டு குடி” தனக்காக ஊற்றிய மதுவை ஹரியிடம் கொடுக்க அவன் அதை மறுத்து, “இப்புடியே வீட்டுக்கு போனா மை மம்மி தோசை கரண்டியை வச்சே அடிக்கும். சோ போதும். ஒரு கோக் மட்டும் சொல்லுடா கார்த்தி” என்று தனக்கு எதிரில் இருந்த நாற்காலியை வேறு புறம் திருப்பி அதில் சாயுமிடத்தில் கைகளை கட்டி தலையை அதில் வைத்தான்.

“ஐயோ எலிசபெத் மஹாராணி புருஷரே உங்களுக்கு வாங்கிட்டு வர ஒரு ஆளா… போடா பூல்… யு கோ மேன் why மீ?” வடிவேல் பாணியில் பேசி தப்பிக்க பார்த்தான்.

“மச்சி நாமெல்லாம் அப்டியா பழகிருக்கோம்… எனக்காக நீ இது கூட செய்ய மாட்டியா?” தன்னுடைய நடிப்பு திறமையை முழுவதையும் முகத்தில் கொட்டி பால் வடியும் குழந்தை ரேஞ்சிற்க்கு வைத்தான்.

“முடியாதுடா உனக்கு எதுக்கு நா செய்யணும்… யார் நீ? Who are you man?” சோம்பேறி தனத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருந்தான் கார்த்திக்.

பெரிதாய் அதிர்ச்சி அடைந்தவன் தன் இரு கைகளையும் கார்த்தியின் தோள் மீது வைத்து, “ஹரினா என்னனு தெரியுமா? நட்புன்னா என்னனு தெரியுமா?”

அவன் கையை உதறி விட்ட கார்த்தி, “கைய எடுடா அயோக்கிய ராஸ்கல்… இன்னுமா இந்த டயலாக் எல்லாம் நமத்து போகல. போடா போய் எடுத்துக்கோ”

“டான்ஸ் ஆடி ஆடி கால் எல்லாம் வலிச்சுச்சுடா அது தான் கேட்டேன் சரி பரவால்ல ப்ரியா கால் பண்ண சொல்லிருந்தா கோக் வாங்கிட்டு அப்டியே பேசிட்டு வந்துர்றேன்” என்று எழ போனவனை வேகமாக இழுத்து மீண்டும் அமர்த்தினான் கார்த்தி, “உனக்கு கால் வலிக்கல?”

தோளைக் குலுக்கிய ஹரி, “இல்லையே” என்றான் மறைக்கப் பட்ட சிரிப்புடன். பிரியா அவர்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண். கார்த்திக்கு அவள் மீது ஒரு அலாதி பிரியம். அவனை நோக்கி வெட்கத்துடன் சிரிக்கும் பெண்கள் மத்தியில் அவள் மட்டும் அவனை அவள் பின்னால் அலைய வைப்பாள். அவளது அலைபேசி எண்ணை வாங்கக் கடந்த ஆறு மாதங்களைப் பாடு படுபவனுக்கு வெற்றி கிட்டிய பாடு இல்லை.

“வயசுப்புள்ள ரொம்ப நடக்க கூடாது ஹரி… நீ இரு நா போய் உனக்கு ஒன்னு என்ன பத்து கோக் வாங்கிட்டு வர்றேன்” என்று நடந்தவன் சிறிது தூரம் சென்று மீண்டும் ஹரியிடம் வந்து, “நெஜமாவே நம்பர் வச்சிருக்கல டா?” என்றான் நம்ப முடியாத சந்தேக பார்வையுடன்.

“இரு” என்று தனது அலைபேசியை எடுத்து அதில் திவ்யா என்று இருந்த அவள் எண்ணை எடுத்து காண்பித்தான், “அவ என்னோட டீம் மெம்பெர் என்கிட்டே நம்பர் இல்லாம எப்படி இருக்கும். உனக்கு நம்பர் வாங்க தெரியல்னு சொல்லு… ஊருக்கே பருப்பா இருந்தாலும் வீட்டுக்கு செருப்பு தான மச்சி நீ?”

“டேய் போதும்டா வாங்கிட்டு வா” என்று ப்ரேம் அவனை அடித்து துரத்தி விட ஆனந்தமாய் கார்த்தி பாதியிலேயே குடித்து வைத்திருந்த மது குவளையில் இருந்த ரம்முடன், ப்ரேம் கையில் இருந்த விஸ்கியை வாங்கி சிறிது, சிவா அருந்திக்கொண்டிருந்த லெமன் ஜூஸ், அவனுக்காக சிவா கூறியிருந்த பீர் மற்றும் அங்கிருந்த பார்டெண்டரிடம் சிறிது தேன் என அனைத்தையும் அதில் ஊற்றி கலக்க ஆரமித்தான்…

“என்னடா பண்ற?” என்ற ப்ரேமின் சிரிப்பு நிறைந்த குரலில் புன்னைகை சிந்தியவன், “நம்பர் என்ன அவ்ளோ ஈஸியா குடுத்துற முடியுமா என்ன? ஒரு வாய் குடிச்சு பாக்கறியா?” என்று அவன் முன் நீட்ட கை எடுத்து கும்பிட்டான் ப்ரேம்.

“நீடா மச்சான்?” என்று சிவாவிடம் நீட்ட… ஹரியை பார்த்து ஒரு சிறு சிரிப்புடன் வேண்டாமென்று தலை ஆட்டி பார்டெண்டரிடம், “ஒரு புள் பீர் குடுங்க” என்றான்.

சரியாக அந்த நேரத்தில் கார்த்தி ஒரு கோக், ஒரு ஆப்பிள் ஜூஸ் என்று முகம் முழுதும் புன்னகையுடன் வந்தவன் ஹரியிடம் அதை குடுக்க ஒரு நமட்டு சிரிப்புடன் வாங்கி ப்ரேமிடம், ‘எப்படி’ என்றான் புருவங்களை உயர்த்தி.

“பேஷ் பேஷ்… ரொம்ப நன்னா இருக்கு” என்று சிறிது கார்த்தியின் மேல் ஒரு பாவமான பார்வை பார்த்து வைத்தான்.

“குடி ராசா… குடிச்சிட்டு நம்பர் தந்துரு பாப்போம்” – கார்த்திக்

“நாளைக்கு மார்னிங் கண்டிப்பா தர்றேண்டா” என்றவன் ஜூஸை ஆனந்தமாக குடிக்க கார்த்தியும் அலுத்துக்கொண்டே தான் பாதியிலே விட்டு சென்ற பானத்தை கையில் எடுக்க அது இருந்த அளவை பார்த்து, “என்னடா அதிசயமா சரக்கு அதிகமா ஊத்தி குடுத்துருக்காய்ங்க?”

“இல்லடா நா தான் உனக்கு புடிக்குமேன்னு கூட கொஞ்சம் வாங்கி வச்சிருக்கேன்” – ஹரி

“நண்பேன்டா” என்ற கார்த்தி இருட்டில் அதன் மாறி இருந்த நிறத்தை கவனிக்காமல் பானத்தை வாயில் வைத்து வழக்கம் போல் ஒரு பெரிய மிடறு குடித்தவன், குடித்த வேகத்திலேயே தனக்கு முன்னிருந்த சிவா மீது துப்பி விட்டான்.

அதற்காகவே காத்திருந்த ஹரி சத்தமாக சிரிக்க அவனை தொடர்ந்து ப்ரேமும் சிரிக்க ஆரமித்துவிட்டான். அவர்களை பார்த்து முறைத்த சிவா வழக்கம் போல் ஒரே ஒரு கேட்ட வார்த்தை போட்டு திட்ட கார்த்தி அவனை என்னை செய்வதென்று யோசித்து கொண்டிருந்தான். எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல், “மச்சி நா கொஞ்சம் மட்டும் தா எச்சி துப்புனேன் அதுக்குள்ள. நல்லா இருக்கா???” அதை கேட்டது தான் தாமதம் மீண்டும் அவனுக்கு குமட்டி கொண்டு வந்தது.

ப்ரேம் மேலும் சத்தமாக சிரிக்க இப்பொழுது சிவாவும் இவர்களுடன் சேர்ந்து கொண்டான். அதில் மேலும் கடுப்படிக்க ப்ரேமின் கழுத்தில் கை போட்டு அவன் வாயில் அதை ஊற்றினான்… சிரிப்பிலும் அதன் சுவையிலும் பானத்தை உள்ளே தள்ள இயலாது வெளியில் துப்ப இந்த முறை தன்னை விட்டதை பார்த்து புடித்திருந்த கார்த்தியின் மீது துப்பினான்…

ஆக மொத்தம் அணைத்து வேலைகளையும் செய்து மகிழ்வாய் இருந்தது ஹரி தான்… இதுவே இவர்கள் வாழ்க்கை… ஆனந்தம், ஆனந்தம் மட்டுமே…

ஒருவாறு நால்வரும் ஒரு குட்டி கலாட்டாவுடன் தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டிருக்க வழக்கம் போலே சிவா அவர்களுடன் ஒன்றாமல் தனியாய் அமைதியாய் இருந்தான். அதில் இன்று சற்று மாறுபட்டு மதுவை அவர்கள் மூவர் நிறுத்தியும் இவன் அருந்திக்கொண்டே இருந்தான். அதை விசித்திரமாக பார்த்த மற்ற மூவரும், “என்ன மச்சி ஆச்சு இவனுக்கு ஓசில அடிக்கிரோம்ன்னு ரொம்ப அடிச்சிட்டு போய்கிட்டேடட… இருக்கான்…. என்னடா இந்த தடவையும் ப்ரமோஷன் போச்சா?” அவனை ஆராய்ந்தவாறே கேட்டான் ப்ரேம்.

“மச்சி நான் சொல்றேன் நான் சொல்றேன்…” என்று முன் வந்த ஹரி, “உன் தம்பி நீ உன் கல்யாணத்துக்காக சேத்து வச்சிருந்த காச தூக்கிட்டு ஓடி போய்ட்டான் அதுனால எங்ககிட்ட காசு எப்படி கேக்குறதுன்னு நீ யோசிச்சிட்டு இருக்க. கரெக்ட்டா?”

“இல்ல தப்பு. உன் தங்கச்சி யவனையோ கூட்டிட்டு ஓடி போயிருச்சு அதுனால உங்க குடும்பமே கூனி குறுகி போய் வெக்கபட்டு, துக்கப்பட்டு, வேதனைப்பட்டு, துயரப்பட்டு, வருத்தப…”

தன் குடும்ப மானத்தை கூவி கூவி வித்துக் கொண்டிருந்த கார்த்தியை அவன் கழுத்தை நெருக்கி நிறுத்தினான் சிவா, “முண்டம் உங்கள நம்பி என் குடும்பத்தை பத்தி சொன்னதுக்கு உங்களால என்ன முடியுமோ அத பண்ணிட்டீங்க. போதும்டா விட்ருங்க”

“அய்யய்யோ கொலை கொலை…” சிவாவின் கை அவன் கழுத்தில் இப்பொழுது இல்லை என்பதை கூட கவனிக்காமல் கத்தியவனை ப்ரேம் ஒரு எத்து எத்த சற்று தூரம் தள்ளி விழுந்தான்.

“ஹா ஹா அவன் கிடக்குறான் லூசு. நீ சொல்லுடா உனக்கு என்ன பிரச்னை இப்ப?” என்று சிரித்த முகத்துடன் கேட்ட ப்ரேமிடம், “ஒன்னுமில்ல” என்றான் சிவா.

“மச்சி எதுவா இருந்தாலும் சொல்லு செஞ்சுறலாம்” என்று மீண்டும் அரை போதையில் இருந்த ஹரி கூறினான். என்ன நினைத்தானோ சிவா கண்கள் எல்லாம் கலங்க ஆரமித்தது. சிறு விசும்பல் கூட அவன் அடித் தொண்டையிலிருந்து வந்தது.

அதைப் பார்த்து பதறிய ஹரி, “மச்சி நீ பில்டப் குடுக்குறத பாத்தா உனக்கு என்னமோ கல்யாணம் ஆகி அத நீ எங்ககிட்ட இருந்து மறச்சு இப்ப உன் பொண்டாட்டி ‘நா செத்தாலும் சாவேனே தவற உன்கூட வாழ மாட்டேன்’ அப்டினு சொல்லிருப்பா போல”

எங்கிருந்து தான் வந்தானோ, “அய்யய்யோ மச்சி என்ன சொல்ற உன்ன ஒரு பொண்ணு வேணாம்னு சொல்லிருச்சா? ஏண்டா கல்யாணம் ஆனா பொண்டாட்டிய விட்டுட்டு நீ எங்க கூட தங்கி இருக்க? சரி விடு பேசி தீத்துக்கலாம் அந்த பொண்ணு அட்ரஸ் சொல்லு. டேய் ஹரி நோட் இட் டவுன்” என்று கார்த்தி ஹரியை திரும்பி பார்க்க, தனக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு கிடைத்துவிட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டெழுந்தவன் தன்னுடைய கைபேசியை எடுத்து முகவரியை குறிப்பெடுக்க தயாராகி சிவாவை பார்த்தான்.

“ச்சி என் குடும்பத்தை என்னமா நாறடிக்கிறானுக” என்று தலையில் அடித்துக்கொண்டு, “ரொம்ப சந்தோச படாதிங்கடா அப்டிலாம் ஒன்னுமில்ல. யமுனாக்கு கல்யாணமாம்”

செவிகளுக்கு முழுதாய் செய்தி எட்டும் முன் மூவரும் தரையில் புரளாத குறையாக சிரித்தனர். “எது ஸ்கூல் படிக்கிறப்ப உன் சட்டைக்குள்ள தவளையை விட்டாளே அவளா?”

கார்த்தியின் கேள்வியில் எரிச்சலுற்றவன், “அதுக்கு அப்றம் நாங்க லவ் பண்ணோம் மறந்து போச்சா…”

“டேய் அவ கூட தான் நீ சண்டை போட்டுட்டல பிரேக் அப் ஆச்சுன்னு தான டா சொன்ன?” திசை மாறி செல்லும் பேச்சு வார்த்தையை நிறுத்த நினைத்த ப்ரேம் கேட்டான்.

“டேய் என்னால மறக்க முடியலடா” என்னேரமும் அழுதுவிடும் நிலையில் இருந்தது அவன் கண்களும் இதயமும்.

“மச்சி இன்னொரு ரவுண்டு போ சரி ஆகிடும்… அந்த பொண்ணு இன்னேரம் உன்னையே மறந்து போயிருப்பாடா. நா வீட்டுக்கு கிளம்புறேன். டேய் கார்த்தி இவன் இப்புடியே பொலம்பிட்டு இருந்தா பி.ஸ்.ஜி பிரிட்ஜ்ல இருந்து தள்ளி விட்ருங்க சாவட்டும்” சிவாவிடம் தொடங்கி கார்த்தியிடம் முடித்தவன் அந்த கிளப் ஹௌசை விட்டு வெளியேறினான் ஹரி.

பூனைபோல் பதுங்கியே வீட்டினுள் சென்றவன் தன் தாயின் கண்ணில் படாமல் ஒருவாறு தப்பித்தோம் பிழைத்தோமென்று தன் அறைக்குள் சென்று மெத்தையில் நிம்மதியாக விழுந்து கனவுலகில் இருக்கும் தன்னுடைய கனவுக்கன்னி ஷர்தா கபூருடன் டூயட் ஆட சென்றான்.

எவ்வளவு நேரம் ஆடினானோ அவனுக்கே தெரியாமல் நேரம் செல்ல ஷர்தாவை டேடுக்கு அழைத்து அவளும் ஒரு சிறு புன்னகையுடன் தலையை அசைத்து அவன் கையுடன் தன் கையை கோர்க்கும் நேரத்தில் எங்கிருந்து தான் வந்ததோ அந்த இலவெடுத்த அலைபேசி. விடாமல் அவன் முதுகைச் சொறிய அதைத் தட்டிவிட்டு மீண்டும் தன்னுடைய ஷர்தா முன் கை நீட்டி நின்ற பொழுது அந்த பெண்ணே இம்முறை அவன் கைகளில் தன் கையை வைக்காமல் தான் வைத்திருந்த பழச்சாறு குவளையை அவன் தலையிலே கொட்டினாள்.

அதில் அதிர்ந்து கண்களில் வழிந்த நீரைத் துடைத்தவன் மீண்டும் கண்களைத் திறக்கும் பொழுது  புலப்பட்டது அவன் செல்ல மாத்தாவை தான். அவனை அர்சித்துக் கொண்டே அவனுடைய குப்பை டிப்போவை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார் அதாங்க ஹரியோட ரூம்.

“வச்சிருக்கான் பாரு ரூம ச்சை தெனம் தெனம் இத சுத்தம் பண்ணுனாலும் ஒரே மணி நேரத்துல குப்பையாக்கி வச்சிருக்கான். இவன எல்லாம் மொட்டை மாடில தான் படுக்க வைக்கணும். கல்யாணம் பண்ணிக்க போறவ பாவம்” என்று ஹரியை முறைத்துக்கொண்டே கூற அவரது பேச்சில் குற்றாலம் நீர்வீழ்ச்சியை அவன் மீது பாய்ந்தது போன்றிருந்தது.

“என்ன செல்லக்குட்டி மாத்தா ஜி எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறிங்களா? அருமை அருமை நல்ல காலை பொழுது ஷர்தா மாறி ஒரு பொண்ண பாருங்க”

“ஏண்டா நா பேசுனதுல உனக்கு இது மட்டும் தான் காதுல கேட்டுச்சா? ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுக்க நா விரும்பல ராசா”

அவரை முறைப்பு அழுகையும் சேர்ந்து பார்த்துக்கொண்டிருந்த ஹரியின் எண்ணத்தை கலைக்க அவன் அலைபேசி சினுங்க அதை கேட்டு தலையில் அடித்துக்கொண்டவர், “இந்த கார்த்திய என்னைக்கு நீ தல முழுகுறியோ அன்னைக்கு தான் நீ உறுப்புடுவ. காலைலயே கால் பண்ணி சிவா செத்துபோய்ட்டான்னு அழுகுறான். என்னடா சொல்ற-னு நானும் பதறி கேட்டா, ஐயோ அம்மா நீங்களா ஒன்னுமில்ல மா சும்மா ஏப்ரல் பூல்-னு சொல்லிட்டு கட் பன்னிட்டான். நீ தான் ஒன்னத்துக்கும் ஆகமாட்டன்னு நெனச்சா உனக்கு வந்து வாச்சிருக்கது வெங்காயம் மாதிரி உரிக்க உரிக்க உள்ளுக்குள்ள ஒன்னுமே இருக்க மாட்டிக்கிது” என்று மகனின் சேர்க்கையை தாளித்து தள்ளியவர் ஒருவாறு வெளியில் சென்றதும் தான் மூச்சே வந்தது அவனுக்கு.

விருப்பமே இல்லாமல் அலைபேசியை எடுத்து காதில் வைத்தவன், “கோத்தா எவன் போன் பேசுறேன்னு தெரியாமையடா பேசுவ…”

கார்த்தியிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே மீண்டும் ஹரியின் அறைக்கு வந்த அவன் தாய், “ஒழுங்கா ரூம கிளீன் பண்ணிட்டு வா இல்லனா சோத்துல கை வக்கிரப்ப கைய வெட்டி போற்றுவேன்”

மினி காளிஆத்தாவாக காட்சி தந்தவர் எச்சரிக்கையுடன் கீழே செல்ல போக, “மம்மி யு ஆர் எ டேஞ்ஜரஸ் டிராகன்” என்று அசட்டு சிரிப்புடன் சமாளித்துவைத்தான்.

அவரது பேச்சு கார்த்தியை எட்ட வயிற்றை பிடித்து சிரிக்க ஆரமித்தான், “இன்னும் ஒரு ரெண்டு நிமிசத்துக்கு முன்னாடி கேட்ருந்தா செத்துருப்பா. நாயி போன் பண்ண விசயத்த சொல்லு சோறு திங்க போகணும்…”

சிரிப்பை சற்றும் குறைக்காமல் தொடர்த்தவன், “மச்சி யோசிச்சு பாரேன் உங்க அம்மா உன்ன வெட்டுறதுக்கு பதில அறுத்தா எப்படி இருக்கும்… ஹா ஹா ஹா ஹா ஹா ஹா சொல்ல வந்த விசயத்த சொல்ல மறந்துட்டேன் பாரு நம்ம சிவா இருக்கான்ல ஹா ஹா ஹா அவன் சூசைட் அட்டெம்ப்ட் பன்னிட்டான்டா ஹா ஹா ஹா” சிரிப்பிலே துயர சம்பவத்தை எளிதாக கூறி முடிக்க.

“என்னடா சொல்ற செத்துட்டானா?” அதிர்ச்சியுடன் கேட்டான் ஹரி.

“ஏண்டா உனக்கு காது நெஜமாவே கேக்காதா இல்ல illusion லேயே இருப்பியா?” இந்த முறை ப்ரேமின் குரல் எதிர் புறமிருந்து வந்தது, “அவன் இன்னும் சாகல ஏதோ பிளானோட தான் இருப்பான். கவர்மன்ட் ஹாஸ்பிடல்க்கு வா” என்று அணைப்பை துண்டித்திருந்தான்.

‘ஒரு ஞாயிற்று கிழமையாச்சும் மனுசனை நிம்மதியா கறி சோறு திங்க விடுறானுகளா பாரு?’ மீண்டும் தன் தாயிடம் அர்ச்சனை வாங்கியே நண்பனை காண சென்றான்.

தூக்றோம்

– Bookeluthaporen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!