Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Varam Vaangi Vanthaval

Varam Vaangi Vanthaval Naan 11 1

வரம் வாங்கி வந்தவள் நான்

 

                            அத்தியாயம்   11

 



Advertisement

சுந்தர் தன் தாடையை பிடித்து கெஞ்சி கொண்டிருக்கும் மனைவியை பார்த்து மனம் கலங்கினாலும் அவள் மனதை மாற்றும் பொருட்டு, அதுக்கென்ன ரெண்டுபேரும் சேர்ந்து நின்னு ஒரு போட்டோ எடுத்து அதை சென்டர்ல போட்டுருவோம்.. எப்படி கட்டிப்பிடிச்சபடி போடுவோமா..? இல்ல முத்தம் கொடுத்தபடியா..??”

 

பிச்சு பிச்சு.. என்ன மேன் ரொம்ப பேசுற..?”

Advertisement

 

Advertisement

நீதான சொன்ன உங்க அம்மா அப்பா அத பார்த்து ரொம்ப சந்தோசப்படுவாங்கன்னு..!!”

 

போய்யா போ…போ..!!!”

Advertisement

 

என்னடா சோனமுத்தாஆஆஆ நீ எந்த பால போட்டாலும் அந்த பொண்ணு அவுட்டாக்குது..’

 

அதானே உனக்கு மட்டும் கரெக்டா மூக்குல வேர்த்துருமே.. என் வொய்ப்கிட்ட நான் கிஸ் வாங்குறேன் வாங்க முடியலைனா கொடுத்துட்டு போறேன்.. என் மனைவி என் உரிமை.. அதப்பார்த்து பொறாமைபடாம இப்ப ஓடு உள்ள..!!’ அந்த ஆல்பத்தை வாங்கி நன்றாக பார்த்தவன்,

 

 இப்பதான் தெரியது நீ எப்படி இவ்வளவு கலர்ன்னு.. உங்க வீட்ல எல்லாருமே நல்ல கலரா இருக்காங்களே.. அதிலயும் உன்னோட தம்பி உன்னவிட நல்ல கலரா இருக்கான்.

 

போங்க போங்க அவன மாதிரி பொய் சொல்லாதிங்க.. நான்தான் அவனவிட கலர்..

 

அப்படியா சொல்ற.. எனக்கென்னமோ அவன்தான் கலர்ன்னு தோனுது.. ஆனா இந்த போட்டோவுக்கு சென்டர்ல என்னோட போட்டோவ செட் பண்ணினா நான் ரொம்ப பிளாக்கா தெரிய மாட்டேன்…. தன் கையை அவள் கையோடு வைத்து பார்க்க … இங்க பாரு.. நான் ரொம்ப பிளாக்கா இருக்கேன்..

 

ச்சே ச்சே அவ்வளவு ஒன்னும் பிளாக் இல்ல..

 

அப்ப இந்த கலரு உனக்கு ஓகேவா..?”

 

எங்க டாடியெல்லாம் கலர பார்த்து யார்கிட்டயும் பேசமாட்டாங்க.. அவங்க நல்லவங்களான்னு மட்டும்தான் பார்ப்பாங்க.. எனக்கும் அப்படித்தான்..யாரையும் அவங்க உருவத்தை வைச்சோ கலரை வைச்சோ ஒரு முடிவுக்கு வரக்கூடாதுன்னு எப்பவும் சொல்வாங்க.. அவங்க எல்லாரும் இப்ப இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்ல..?” பேசிக் கொண்டிருக்கும்போதே கண்ணீர் வழிந்தபடி இருக்க..

 

பத்தியா ஹாப்பி மொமென்ட்ஸ் பேசும்போது சின்ன பிள்ள மாதிரி அழற..நான் மத்த போட்டோவெல்லாம் பார்த்து அதப்பத்தி கேட்கலாம்ன்னு நினைச்சேன்.. உனக்கு அழுகை வந்தா நான் தூங்குறேன்.. அவன் படுக்க ஆயத்தமாக ,

 

கண்களை வேகமாக துடைத்தவள் நோ.. நோ பாருங்க எனக்கு அழுகையெல்லாம் வரல.. நாம பேசலாம்..

 

[the_ad id=”6605″]

 

 

அழுகையால் பிதுங்கிய உதட்டோடு கண்களை புறங்கையால் துடைக்கும் மனைவியின் சிறுபிள்ளைத்தனமான அழகில் அவனுக்கு முத்தமிட மனம் துடிக்க அவள் அருகில் அமர்ந்தான்.. ம்ம் இப்போ சொல்லு.. என்னை உங்க வீட்டு ஆளுங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்குமா.. ??”நைட்பேண்ட், டீசர்ட் போட்டிருந்தவன் பேண்ட்டை இருபுறமும் பிடித்தபடி எழுந்து நின்று தன்னை சுற்றிக் காட்ட,

 

தர்ஷினிக்கு சிரிப்பு தாங்கவில்லை..கண்களில் கண்ணீர் துளிகள் வைரமாய் மின்ன இதழில் சிரிப்பு.. என்ன மேன் இப்படி சுத்துற..? எங்க டாடி எனக்கு இந்த பக்கம்தான் மாப்பிள்ளை பார்க்கிறேன்னு சொன்னாங்க.. அப்ப நீ செலக்டட்தான்.. நல்லா படிச்சிருக்க.. பார்க்க கொஞ்சமே கொஞ்சம் நல்ல குணமாத்தான் தெரியுற..

 

அப்புறம் அவன் அருகில் சென்று அவன் தோளோடு ஒட்டி நின்றவள் கொஞ்சம் ஹைட் அதிகமோ.. ப்பா செம ஸ்ட்ரக்சர் உனக்கு.. இந்த ஹேர் ஸ்டெயில் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. எங்க டாடிக்கும் தர்ஷனுக்கும் நான்தான் ஹேர்ஸ்டெயில் சூஸ் பண்ணுவேன்.. அவன் முகத்தையே அங்குலம் அங்குலமாக தடவி பார்த்தவள் இந்த மீசை உனக்கு ப்ளஸ் பாயிண்ட்தான்..  

 

தன்னை ஒவ்வொரு இடமாக தொட்டு பேசும் மனைவியை என்னன்னமோ செய்திட மனம் நினைத்தாலும் என்ன மேடம் ஏதோ பார்டர்க்கு கீழயாச்சும் பாஸ் பண்ணுவேனா..??”

 

பண்ண மாட்ட.. இருந்தாலும் நான் போனா போதுன்னு ஒன் டூ மார்க் போட்டு பாஸாக்குறேன்..

 

அடிங் உன்னை..??”அதற்கு மேல் தாங்கமாட்டாமல் அவளை அப்படியே தன் கைகளில் அள்ளிக் கொள்ள…

 

நோ மேன் நோ வயலன்ட்… பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்..?”

 

சரி நோ வயலன்ட்னா எனக்கு ஒரு கிஸ் கொடு..

 

கிஸ்ஸா… போய்யா… போ..

 

என்னடா பேபி உங்க நாட்டுல கட்டிப்பிடிக்கிறது, கன்னத்தில கிஸ்பண்றது எல்லாம் சாதாரணம்தானே அதுமாதிரி நினைச்சிக்கோ..

 

அவன் கைகளில் இருந்தபடியே கிளுக்கி சிரித்தவள்.. எங்களோட அந்த கிரான்மா பத்தி உனக்கு தெரியாது மேன்.. அப்படியெல்லாம் செய்யவே கூடாதுன்னு ஸ்டிக்டா ஆர்டர் போட்டிருந்தாங்க.. அவங்களுக்கு அதெல்லாம் பிடிக்காது.. நான் பிரண்ட்ஸ்களோடு ஜாலியா பேசலாம்..

 

ஆனா எப்பவாவது பார்ட்டிக்கு போனாலோ இல்ல எங்க வீட்ல நடந்தாலோ தன் இருகைகளையும் கூப்பி வணக்கம் இப்படித்தான் சொல்லனும்னு சொல்வாங்க.. என் பிரண்ட்ஸ் எல்லாம் கேலி பண்ணுவாங்களா.. அதான் நான் எந்த பார்ட்டிக்கும் போகவே மாட்டேன்.. வீட்லயே கிரான்மாவோட இருந்துக்குவேன்… ஹேய் நீ ஏன் இப்ப பேச்சை மாத்துற..?? ஆல்பத்தை பத்திதான பேசிட்டு இருந்தோம்..” அவன் கைகளில் இருந்து இறங்கியவள் கட்டிலில் அமர.. அதுவரை மனைவியின் ஸ்பரிசத்திலும் அவள் மேலிருந்து வந்த வாசனையிலும் தன்னை மறந்து பித்தாகி இருந்தவனை தொபீர் என தரையில் தள்ளியதை போலிருந்தது..

 

சட்டென மனைவியை பார்க்க அவளோ ஆல்பத்தை பிரித்து எங்கே எப்போது எடுத்தது என துல்லியமாக விபரங்கள் சொல்லிக் கொண்டிருந்தாள்.. கண்களை உருட்டியபடி  உதட்டில் பொங்கிய சிரிப்போடு ஒவ்வொன்றையும் விவரிக்க சுந்தருக்கு கடவுள் மேல் கோபமே வந்தது.. ஏன் இப்படி பூ போல இருக்க இந்த சின்ன பொண்ணுக்கு இவ்வளவு கஷ்டத்தை கொடுத்தாய் என்று.. அதில் இருந்த படங்களில் அதிக படங்கள் அக்காவும் தம்பியும்தான் ஆக்ரமித்திருந்தனர்.. அவற்றை பார்க்கும்போதே தெரிந்தது இருவரும் எப்படி ஒற்றுமையாக இருந்திருப்பார்கள் என, சுந்தருக்கு கண்கள் கலங்கினாலும் அவள் பேசும் அழகையே பார்த்தபடி இருந்தான்..

 

எல்லோருடைய முகத்திலும் ஒரு சாந்தமே தெரிந்தது.. ஒவ்வொரு படத்தையும் பார்த்தவன் ஆல்பத்தின் கடைசியில் ஒரு படத்தில் அவர்களோடு வேறு இருவர் நிற்க.. இவங்க யாருடா லட்டுமா..??”

 

 போட்டோவை பார்க்கும் சுவாரஸ்யத்தில் தர்ஷினி அவன் மடிக்கு வந்திருக்க அவனோ ஒரு கையை அவள் வெற்றிடையில் வைத்து அழுத்தியபடி மறுகையால் அந்த போட்டோவை திருப்பியபடி முகத்தை அவள் தோள்பட்டையில் வைத்திருந்தான்..

 

இவங்கதான் எங்க டாடியோட பார்ட்னர் வரதராஜன் அங்கிள்.. இவங்க அவங்க வொய்ப்..

 

அவர்கள் முகத்தையே பார்க்க அதில் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை..

 

இவங்க கேரக்டர் எப்படி… உங்க எல்லார்கிட்டயும் நல்லா பழகுவாங்களா..?”

 

ஓஓஓ சூப்பர் டைப் ரெண்டு பேரும் … அதிலயும் நானும் தர்ஷனும் ஆன்ட்டியோட செல்லம்ஸ்… எங்கமேல ரொம்ப பாசமா இருப்பாங்க.. நாங்க குட்டியா இருக்கும் போதிருந்து இவங்கள நல்லாத் தெரியும்..

 

ம்ம்ம் இப்ப நீங்க வளர்ந்திட்டிங்களாக்கும்..!!”

 

பின்ன பாருங்க நான் எவ்ளோ ஹைட்…??” கையை உயரத்திற்கு தூக்கிக் காட்ட அந்த சிறிய அறையில் வெட்கை தாங்காமல் காற்றும் பத்தாமல் முகமெல்லாம் வியர்வை துளிகள்.. அவ்வப்போது பேச்சு சுவாரஸ்யத்தில் தன் முந்தானையாலே வியர்வையை துடைத்துக் கொள்ள பேனை நிமிர்ந்து பார்த்தவன் அது ஏதோ பேருக்கு சுற்றிக் கொண்டிருந்தது..

 

அப்படியே திரும்பியவன் அந்த அலமாரியில் இருந்த தென்னங்கீற்று விசிறியை எடுத்து அவளுக்கு வீச ஆரம்பித்தான்.. அந்த சில்லென காற்றின் சுகத்தில் அவன் மடியிலேயே படுத்துக் கொள்ள தர்ஷினியை தங்கம் போல பார்த்துக் கொள்ள அவனுள் வெறியே வந்திருந்தது.. சின்ன முகச்சுழிப்புகூட இல்லாமல் இருப்பவளை பார்த்தவனுக்கு கடவுள் தனக்கு நல்லதொரு துணையையே கொடுத்திருக்கிறான் தானும் நல்ல கணவனாக இருக்க வேண்டும் என தோன்றியது..

 

[the_ad id=”6605″]

 

 

இந்த போட்டோ ஆல்பத்திலேயே அவர்கள் வீட்டை பார்த்திருந்தவனுக்கு அதில் ஒரு சதவீதம் கூட இங்கில்லை என்பதை கண்கூடாக கண்டான்.. இருந்தாலும் எதையும் வெளியில் காட்டாமல் சாதாரணமாக இருக்கும் தர்ஷினியை நினைத்து பெருமைதான். தந்தை சொன்னது போல இவளை கண்ணுக்குள் வைத்து காத்துக் கொள்ள வேண்டும்.. என்ற எண்ணம் விஸ்வரூபம் எடுக்க அதற்காக என்னன்ன செய்ய வேண்டும் என பட்டியலிட ஆரம்பித்தான்..

 

ஒருகையால் விசிறியபடி மறுகையை அவள் கன்னத்தில் கோலமிட்டவன் உனக்கு எங்க வீட்டை பிடிச்சிருக்கா..?”

 

கண்ணை மூடியிருந்தவள் வீட்டன்னா எத சொல்றிங்க.. இந்த ஹவுசையா இல்ல இதில இருக்க மெம்பர்ஸையா..??”

 

ரெண்டையும்தான்னு வைச்சுக்கோயேன்..

 

எல்லாரையும் எனக்கு பிடிச்சிருக்கு.. உங்க சிஸ்டர் ரெண்டுபேரும் ரொம்ப கியூட்டா இருக்காங்க.. ஒரு சிஸ்டர்க்கு இன்னும் ஒன்மத்ல பேபி பிறக்க போகுதாமே… ஸோ லவ்லி.. உங்க கடைசி சிஸ்டர் ரொம்ப மூடி டைப்பா..??”

 

ஏன்டா கேட்கிற..?”

 

இல்ல ரெண்டு மூனுதரம் பேச டிரை பண்ணினேன்.. அவங்க பேசவே இல்ல..

 

புதுசா பார்க்கிறால்ல.. அதான் கொஞ்சம் தயங்கியிருப்பா.. இனி நல்லா பேசுவா பாரேன்..

 

ஏய் இதுக்கு ஏன் வாய்ஸ் உள்ள போகுது… எனக்கு இங்க பிடிச்சிருக்கு.. அவள் கட்டிலை விட்டு இறங்கி சேலையை சரிசெய்ய

 

என்னடா..??”

 

இல்ல எனக்கு பாத்ரூம் போகனும்..

 

வா.. அவளுக்கு துணைக்கு வந்தவன் அவள் வரும்வரை அங்கேயே நின்றிருந்தான்..

 

[the_ad id=”6605″]

 

அங்கு ஊரின் மறுமூலையில் ஒரு வீட்டிலோ பாலாவும் வேலுவும் கொதித்துபோய் இருந்தார்கள்.. பாலா டேய் எப்படிப்பட்ட சான்ஸ மிஸ்பண்ணிட்டோம்.. ஒரு செகன்ட்ல எல்லாம் மாறிருச்சே.. இப்படி ஒரே நாள்ல தர்ஷினி நம்ம கையை விட்டு போவான்னு நினைச்சே பார்க்க முடியல.. இன்னேரம் உன் தம்பிக்கும் அவளுக்கும் பர்ஸ்ட் நைட்டே முடிஞ்சிருக்கும்ல..?”

 

தம்பியா..ச்சே அவன போய் தம்பின்னு சொல்லாத.. யார் உன் அத்தை பொண்ண கட்டியிருந்தாலும் என் மனசு ஆறியிருக்கும்.. ஆனா இவன் போய் கட்டியிருக்கானே.. அவன…?? பல்லை கடித்தவன் உங்க வீட்டு கிழவி மட்டும் அன்னைக்கே ஓகே சொல்லியிருந்தா இன்னைக்கு என்னோட பொண்டாட்டியா இருந்திருப்பா..

 

போங்கடா இந்த கல்யாணம் நடக்க நீங்களும்தான் ஒரு காரணம் சும்மா இருந்தவன் மேல அவன் ஆஸ்திரேலியாவுல ஒரு பொண்ணை வைச்சிருக்கான்னு கதைகட்டி விட்டிங்க.. இப்ப அதுவே உண்மையா போய் சும்மா தேவதை கணக்கா இருந்தவள தூக்கிட்டான்.. நாம இப்படியே பெருமூச்சு விட்டுட்டு இருக்க வேண்டியதுதானா..??” கோபத்தில் நிதானம் இல்லாமல் குடித்துக் கொண்டே இருந்தார்கள்..

 

தர்ஷினியை சுந்தர் தொடுவதை போல நினைத்துப் பார்த்தவர்களுக்கு மனது ஆறவே இல்லை.. இப்போதே போய் தர்ஷினியை இழுத்துவர வெறி தோன்ற அதிக போதையில் தடுமாறியபடி இருவரும் அந்த தோப்புவீட்டை விட்டு வெளியில் வர.. வெளியில் லேசான கொலுசொலி.. பாவாடை தாவனி போட்ட பெண் அந்த இருட்டுநேரத்தில் அவர்கள் வீட்டை கடந்து செல்ல அந்த பெண்ணை பார்த்தவர்களுக்கோ அதிக  போதையில் தர்ஷினி பின்னுக்கு போய் இந்த பெண்ணின் பின்னழகு மட்டும் தெரிய சத்தமில்லாமல் சென்று வேலு அந்த பெண்ணின் வாயை அடைக்க, பதறி அவனை தள்ளிவிடப்பார்த்த அந்த பெண்ணை பாலா தூக்கிவர தோப்புவீட்டை அடைத்திருந்தார்கள்..

 

ரூமிற்கு வந்த தர்ஷினி ஏதோ யோசனையில் இருக்க என்னடா லட்டு ரொம்ப யோசிக்கிற..?”

 

இல்ல சுந்தர்.. ஸாரி.. சட்டு சட்டுன்னு பேர் வந்திருது.. கிரான்மா சொன்னாங்க மாமான்னு கூப்பிடுச் சொல்லி கொஞ்சம் டைம் எடுத்து பழகிக்கிறேன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!